மோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னணி ஆளுமைகளில் ஒருவர்;  ஆழி சூழ் உலகு, கொற்கை ஆகிய நாவல்களின் ஆசிரியர் ஜோ டி குரூஸ். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தமிழகத்தின் கடலோர மீனவர்களின் உரிமைகளுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். இந்திய தேசியத்தின் மீது ஆழ்ந்த பற்றும், தனது தாய் மண்ணின் கலாசாரம் மீது உறுதியான பிடிப்பும் கொண்டவர்.

நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து தனது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியைக் கீழே தருகிறோம்.

(தமிழில்: ஜடாயு)

நான் ஏன் திரு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறேன்?

modi05இந்த உன்னத தேசத்தின் புதல்வன் என்ற வகையில், எனது பாரத அன்னை உலக நாடுகளுக்கிடையில் வலிமையுடனும் வளத்துடனும் திகழ வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன். யாரால் அதை நிறைவேற்ற முடியும்?

உங்களையும் என்னையும் போன்ற கோடிக்கணக்கான சாதாரண மனிதர்களின் பிரசினைகளை உணர்ந்து கொண்ட ஒருவரால் தான் முடியும்.

உங்களையும் என்னையும் போலவே, மிக எளிமையான சூழலில் ஒரு தேநீர்க் கடைக்காரரின் மகனாக அவர் பிறந்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலும் ரயில்வே பிளாட்பாரத்தில் வேலை செய்தார். நேர்மையின், மன உறுதியின், தேசபக்தியின் சின்னமாக அவர் மிளிர்கிறார். அதனால் தான், இன்றைய இந்தியாவின் இதயங்களையும் நம்பிக்கைகளையும் அவர் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். பிரமிட்டின் அடித்தளத்திலிருந்து எழுந்து வந்து இமயமாக ஆகி நிற்கும் ஒரு தலைவர் அவர்.

வளர்ச்சி மீது தணியாத தாகம் கொண்ட ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி அவர். தனது செயல்களுக்குப் பொறுப்பேற்கிறவர். உண்மையான ஈடுபாடுள்ள ஒரு தேச சேவகர் நரேந்திர மோடி.

செயல்திறன் கொண்ட ஆட்சியையும், உறுதியான நிர்வாகத்தையும் அவர் வழங்கியிருக்கிறார். நமது நாட்டின் மனித வளத்தையும் அதன் ஆற்றலையும் மதித்துச் செயல்படும் ஒரு தேர்ந்த ஆட்சியாளர் அவர். நமது பண்பாட்டை மதிப்பவர். நமது நாட்டின் உள்ளார்ந்த சக்தியை நன்கு உணர்ந்ததால் தான் இந்தியாவில் மாற்றம் கொண்டு வரும் ஐந்து ‘டீ’க்களை அவர் முன்மொழிந்திருக்கிறார் – திறமை (Talent), பண்பாடு (Tradition), தொழில் நுட்பம் (Technology), சுற்றுலா மேம்பாடு (Tourism), வர்த்தக வளர்ச்சி (Trade).

நரேந்திர மோடி ஒரு புரட்சியாளர். தொலைநோக்குப் பார்வை கொன்டவர். அடுத்த தேர்தலைக் குறித்து அல்லாமல், அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பவர்.  அவரால் உருவாக்கப் பட்ட நர்மதை நதி மீதான சூரிய சக்தி அமைப்பு, அந்த வகையில் உலகிலேயே முதன்முறையாக செய்யப் பட்ட புரட்சி. மேலும், பெண் குழந்தைகளின் கல்வி மீது அவர் காட்டும் தீவிரமான அக்கறை.. இவையெல்லாம் அடுத்த தேர்தலுக்கான திட்டங்கள் அல்ல, அடுத்த தலைமுறையின் நன்மைக்காக, என்னுடய மற்றும் உங்களுடைய குழந்தைகளுக்காக செயல்படுத்தப் படும் திட்டங்கள்.

joe1
ஜோ டி குரூஸ்

அரசியலுக்கு அப்பாற்பட்டு தேச நலனை சிந்திப்பவர் நரேந்திர மோடி. அவரே இந்தியாவின் இன்றைய தேவை. பல உலகத் தலைவர்களும் பார்த்துப் பொறாமைப் படும் அளவுக்கு சாதனைகள் புரிந்துள்ள அவர் பிரதமராகும் முன்பே, அதற்கான சாத்தியக் கூறுகள் தெரிகின்றன என்ற மாத்திரத்திலேயே, உலக நாடுகள் இந்தியாவை அதற்கு உரித்தான வகையில் மதிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இதோ ஒரு தலைவர் – சொற்களால் மட்டுமல்ல, தனது செயல்களாலும் பேசியவர். இதோ ஒரு தலைவர் – தனது வியர்வையாலும் தியாகத்தாலும் இந்தியாவை மீண்டும் ஓர் உன்னத தேசமாக ஆக்கும் சக்தி வாய்ந்தவர். இதோ ஒரு தலைவர் – இந்தியக் கடற்கரைகளின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டவர்.

நமது நாட்டை இதுவரை காணாத அளவில் அவர் முன்னேற்றிச் செல்வார், நமது கடந்த காலத்தை விடவும் பெரிதான புகழையும் பெருமிதத்தையும் நமது தேசத்திற்குத் தருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது சரியான தேர்வை எண்ணி நமது குழந்தைகள் பெருமைப் பட வேண்டும். மிகச் சிறந்த பிரதமரை அளித்தோம் என்று வரும் தலைமுறைகள் நன்றி கூறும் வகையில் நமது தேர்வு இருக்க வேண்டும். அதற்காகத் தான், நான் திரு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறேன்.

நாம் மாறுபட்டு சிந்திப்போம். இந்த மாபெரும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கர்மவீரர் ஆட்சிக்கு வருவதற்காக ஒன்று சேர்ந்து நமது ஆதரவை அளிப்போம்.

17 Replies to “மோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்”

 1. நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் இது இப்போது இந்திய மக்களின் 90% பேர்களின் விருப்பம் இப்படி இருக்க சில சுய நல வாதிகளின் மோடிக்கு எதிரான கருத்துக்கள் எடுபட வாய்ப்பே இல்லை அவர்தான் அடுத்த பிரதமர் இது உறுதி மோடி ஒரு தைரியமிக்க துணிச்சலான நிர்வாக் முடிவெடுப்பவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம் தற்சமயம் இந்தியாவை ஆள இந்த தலைமை தான் அவசியம்

 2. 1.can any possible for ganga and kaveri river jion
  2.all people will get govt job
  3. without molprcties
  4.control rise all price
  etc…………….

 3. இது மற்ற மாநிலங்களின் மொழிகளில் துரிதமாக மக்கள் அடையும்படி செயல்படவேண்டும்.

 4. இங்கு உண்மை பேசப்பட்டு இருக்கிறது .குருஸ் மீது மதச்சாயம் பூசப்படும் .எனினும் உண்மை உண்மையே .இனி இவர் பிற்போக்கு வாதியா கிவிடுவார்.போலி மத சார்பின்மை பேசும் அறிவு ஜீவிகள் இவரை குதரிஎடுக்க ஆரம்பிப்பார்கள் இலக்கிய உலகில் இவர் ஒதுக்கி வைக்கப்படுவார் .எழுத்தும் தெய்வம்; எழுதுகோல் தெய்வம் என எழுதி விட்டார் . அரசை வடிவேல் .

 5. நம்மை ஆன்ண்ட பிரிட்டிஷ் அக்பர் பாபர் திப்பு இவர்கள்ளுக்கும் காங்கிரஸ் காரனுக்கும் ஒரு வ்தயசமும் இல்லை ஏன் என்றால் இவர்கள் அமெரிக்க என்ன சொல்த்தோ அதை மட்டும் செய்வார்கள் ஏன் காங்கிரஸ் காரன் கோடி கணக்கான பணம் அணங்கை உள்ளது .. இவர்கள் ஏழை நாட்டை பற்றி கவலை இல்லை

 6. க்றைஸ்தவத்தை தனது மத ஒழுக்கமாகக் கொண்டாலும் காலத்தால் அழியா பாரதப் பண்பாட்டைப் போற்றும் ஸ்ரீமான்.ஜோ.டி.குரூஸ் அவர்கள் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்களது திறமைகளை விதந்தோதி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மிகவும் ச்லாகிக்கத் தக்கது.

  ஸ்ரீமான் அயாஸ்ரஸூல் நஸ்கி மற்றும் அவர் தம் தகப்பனாரான ஸ்ரீமான் மீர் குலாம்ரஸூல் நஸ்கி சாஹேப் போன்று பாரதப்பண்பாடு போற்றும் இஸ்லாமிய சஹோதரர்களான மஹானுபாவர்கள் மற்றும் கர்நாடக சங்கீத மற்றும் ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீத உலகில் ஹிந்துக்களோடு தோளொடு தோள் கொடுத்து நமது காலத்தால் அழியா பாரதப்பண்பாட்டைக் காக்கும் இஸ்லாமிய சஹோதரர்களான மஹானுபாவர்கள் எண்ணிறன்கவர்கள்.

  க்றைஸ்தவ சமுதாயத்தில் ஒரு ஸ்ரீமான் ஜேசுதாஸ் அவர்களுக்குப் பிறகு இப்படியொரு போற்றத்தகு செயல்பாடுடைய பரிச்சயத்தைக் கொடுக்கும் ஸ்ரீமான் ஜோ.டி.குரூஸ் போல பண்பாடு போற்றும் மற்ற பல மஹனீயர்களுடைய பரிச்சயங்களும் நமது தளத்தில் பகிரப்பட வேண்டும் என்று விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  ராஷ்ட்ரீய முஸ்லீம் மஞ்ச் என்ற ஸ்தாபனம் போல தேசப்பண்பாடு போற்றும் ஹிந்துக்களொடு தோளொடு தோள் கொடுத்து தேசப்பணியில் ஈடுபட விழையும் க்றைஸ்தவ சஹோதரர்களை ஒன்றிணைக்கும் சங்க பரிவார ஸ்தாபனம் உள்ளதா என்று அறிய விழைகிறேன்.

  மட்டற்ற ஊழலில் திளைத்து நாறிவரும் காங்க்ரஸ் கட்சியினை அறவே ஒதுக்கும்படிக்கு பரிந்துரை செய்துள்ளார் இஸ்லாமிய ஷியா சமுதாயத்தின் தர்ம குருவான மௌலானா கல்பே ஜவ்வாத் சாஹேப் அவர்கள். இஸ்லாமியர்களை அடிமைகள் போலக் கருதும் காங்க்ரஸுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்றும் காங்க்ரஸுக்கு ஓட்டுப்போடுதல் இஸ்லாத்திற்கு எதிரான செயல் என்றும் கருத்துப் பகிர்ந்துள்ளார்கள்.

  300க்கும் அதிகமான சீட்களைப் பெற்று ஸ்ரீ நரேந்த்ர பாய் மோடி அவர்கள் தேசத்தில் மீண்டும் ராம ராஜ்யத்தை ஸ்தாபிக்க இறையருள் கூடுவதாக.

 7. திரு குரூஸ் அவர்களுக்கு இறைஅருள் பெருகட்டும்.உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும், ஜனநாயக விரும்பிகளும் நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமர் ஆகவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டுள்ளனர்.

  ஆனால் நம்மூரில் ஒரு தொண்ணூற்று ஒரு வயதில் இருக்கும் மஞ்சள் பெரியவர் , நரேந்திர மோடி பிரதமரானால், பாபர் கட்டிடத்துக்கு ஏற்பட்ட அதே கதி தான் இந்தியா முழுவதும் உள்ள இதர மசூதிகளுக்கும் ஏற்படும் என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். இவரை போன்ற பொய்யர்கள் எத்தனை வயதானாலும் திருந்த மாட்டார்கள். என்ன செய்வது ? ” விநாசகாலே விபரீத புத்தி “- என்பார்கள் பெரியோர். தன்னுடைய சொந்த மகளையே , தன்னுடைய மகள் இல்லை என்று நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்த சான்றோர் ஆயிற்றே.

  குஜராத்தில் மோடி தலைமையிலான அரசு கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் அமைதியாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். பாஜகவுக்கு வாக்களித்து , இஸ்லாமியப் பெரும்பான்மை இருக்கும் பகுதிகளிலும் , பாஜக தான் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்பது யாரும் மறைக்க முடியாத உண்மை.

  திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இவர் குடும்ப வாரிசுகளின் சண்டையாலும், டூ ஜீயைப் போல, இன்னும் புதிய , மற்றும் பெரிய ஊழல்களை செய்து, நாட்டை மேலும் நாசமாக்குவார். இந்த தீய சக்தியை இந்த தேர்தலில் ஒழித்துக்கட்டுவார்கள். இவர் மகன்களுக்கும், இவருக்கும் விரைவில் மீண்டும் கண்கள் பனிக்கும். ஆனால் இனி எப்போதும் இவர் நெஞ்சம் இனிக்காது. ஏனெனில் , இவர் கண்களை மூடி இருப்பது வகுப்புவாத விஷம். அந்த விஷம் எப்போதும் அகலாது. ஏனெனில் காலம் கடந்துவிட்டது.

  ஐயோ பாவம். தமிழ் நாட்டின் இளைஞர் சமுதாயத்தை , குடி என்ற பெருநெருப்பில் , 1-9-1972 முதல் தள்ளிய இந்த தீய சக்தியை , மக்கள் இம்முறை மரண அடி கொடுத்து அனுப்புவார்கள். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ? இவரை பற்றி நன்கு புரிந்து கொண்ட திமுக தொண்டர்கள் வேகமாக வெளியேறி பிற இயக்கங்களை நாடி சென்று வருகிறார்கள். திகார் சிறை கதவுகள் இனி மீண்டும் இவர்களுக்காக திறக்கும்.

 8. திரு நரேந்திர மோடி அவர்கள் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை மூடி மறைக்கவில்லை. இதற்கு முந்தைய தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட விண்ணப்பங்களில் குடும்ப விவரம் தெரிவிப்பது கட்டாயம் அல்ல. ஆனால் இந்த 2014- தேர்தலில் அவை தேர்தல் கமிஷனால் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மோடி ஏதோ தன் திருமணத்தை மூடி மறைத்ததைப் போல, மஞ்சளார் மீண்டும் ஒரு முறை உளறி உள்ளார். திமுகவினருக்கு உளறல் என்பது எப்போதும் குலவழிச்சொத்து. பொது மேடைகளில் பேசும்போது , தெரியாத விவரத்தைப் பேசக்கூடாது. கலைஞர் திருந்துவார் என்ற நம்பிக்கை மக்களிடம் இல்லை.

 9. மிகவும் அருமையான கருத்து. பதிவு செய்யப்பட விதமும் மிக நேர்த்தி. இன்றைய காலகட்டத்தில் அதுவும் நமது நாடு இருக்கும் சூழ்நிலையில் திருவாளர் மோடியை போன்ற ஒரு தன்னலமில்லாத, செயல்திறம் மிக்க தலைவர் தேவையை உள்ளது. வாக்காளர்களாகிய நாமும் இந்த நாட்டுக்குடிமகன் என்ற முறையில் நமக்குள்ள பொறுப்பை உணர்ந்து நாட்டு நலம் கருதி திருவாளர் மோடி அவர்களை பிரதமராக்கும் முயற்சியுடன் பாரதிய ஜனதா கட்சிக்கும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டும்.

 10. ஹிந்துக்களொடு தோளொடு தோள் கொடுத்து சஹோதரர்களாக தேச வளர்ச்சிக்குப் பாடுபடும் ……………

  நான் மதிக்கும் எனது க்றைஸ்தவ சஹோதரர்களும் அவர்களது உகக்கத்தக்க செயல்பாடுகளில் சில……..

  க்றைஸ்தவ இறையியலாளர் பெருமை மிகு எழுத்தாளர் ஸ்ரீமான். ஜோ. தமிழ்ச்செல்வன்.

  சிறார்களுடன் பாலியில் கொடுமைகளில் ஈடுபடும் க்றைஸ்தவ பாதிரிமார்களுடைய செயல்பாடுகளுக்காக பரங்கிய வாடிகன் கிரிஜாக்ருஹத்தின் அத்யக்ஷகராகிய போப்பாண்டவர் மன்னிப்புக்கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்ரீமான் தமிழ்ச்செல்வன் அவர்கள் போப்பாண்டவருக்கு எழுதிய கடிதத்தின் சாரம் அன்னாரது முகநூலில் பகிரப்பட்டுள்ளது.

  https://www.facebook.com/mukkuvar

  க்றைஸ்தவ கிரிஜாக்ருஹங்களின் மத அரசியல் பற்றி ஸ்ரீமான் தமிழ்ச்செல்வன் அவர்கள் அளித்துள்ள பேட்டி

  https://www.youtube.com/watch?v=ByuduklNSdc&feature=share

  ஸ்ரீமான் ஜோ தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய நூற்களில் சில :-

  இறைவசனஙகளைப் போதிப்பதற்கு தகுதியற்றவர் இயேசு கிறிஸ்து

  இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா

  விரட்டியடிக்கப்பட்ட இறைவன்

  நூற்கள் பற்றிய மேல் விபரங்கள்

  தெற்கு எழுத்தாளர் இயக்கம் 9487187193.

  ஸ்ரீமான் ஜோ.டி.குரூஸ் அவர்கள் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததை எதிர்த்து அவருக்கு மிரட்டல் உருட்டல்கள் வந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ஸ்ரீமான் தமிழ்ச்செல்வன் மட்டுமின்றி நெய்தல் மீனவ சஹோதரர்களுக்காக பாடுபட்டு வரும் இன்னொரு அன்பரான ஸ்ரீமான் ஜஸ்டின் திவாகர்.

  இவ்விஷயம் சம்பந்தமாக ஸ்ரீமான் திவாகர் அவர்களது சம்வாதம் யூ ட்யூப் காணொலியில்

  https://www.youtube.com/watch?v=425VdLCNVQs&feature=youtu.be

  ஹிந்துக்களொடு இணக்கத்துடன் தேச வளர்ச்சியில் பயணிக்க விழையும் செயல்பாடுகளையுடைய எண்ணிறந்த பல க்றைஸ்தவ சஹோதரர்களைப் பற்றியும் அவர்கள் செயல்பாடுகள் பற்றியும் விரிவானதொரு வ்யாசமாகப்

  படைக்கவல்லவர் என்று நான் கருதும் அன்பர் பஹுகாலமாக

  தமிழ் ஹிந்து தளத்தில் மௌன வ்ரதம் அனுஷ்டித்து வரும் ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள்.

  அன்னாருடைய மௌன வ்ரதம் உடையக்கடவதாக என செந்திலாதிபனிடம் இறைஞ்சுகிறேன்.

  அரிதிரு மருககடம்பத் தொங்கற்றிருமார்பா
  அலைகுமுகுமுவென வெம்பக் கண்டித்தெறிவேலா

  குமுகுமுவென செந்திலாதிபன் திருவடிகளை அலைகள் வந்து அடைதல் போன்று தமிழ் ஹிந்து தளத்தில் அன்பின் அ.நீ அவர்களது வ்யாசாதிகள் முன் போல் தொடர்ந்து வருவதாக.

  ம்………முருகப்பெருமான் உலகமுழுதும் இருந்தாலும் பழனியாண்டவனை இறைஞ்சுதல் தான் என் மரபு. என்னதான் இருந்தாலும் அ.நீ அவர்களுக்கு அன்னாரது தெற்குச்சீமை பற்றி ஆகப்பெரிய உகப்பு என்பது எனக்குத்தெரியும். அதனால் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி வைத்துள்ளேன். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரத்தானே வேணும்.

  வெற்றிவேல் வீரவேல்

 11. ஹிந்து அறிவியக்கம் என்பது பல்கிப்பெருகி வருகிறது.

  அதே சமயம் இடதுசாரிகளின் ஏகாதிபத்யம் அசைக்க முடியாது அசுரத்தனமாக காட்சி கொடுக்கிறது. ஜிஹாதி மற்றும் பரங்கிப் பணத்தில் கொழிக்கும் இடதுசாரிகளின் ஏகாதிபத்யக்கோட்டை வலுவான பரங்கிய அஸ்திவாரங்களால் கட்டப்பட்டது. இக்கோட்டையை வலதுசாரிகள் உடைத்து நொறுக்கினாலொழிய வலதுசாரிகளின் குரல் அம்பலம் ஏறவொண்ணாது.

  காலத்தால் அழியா புதினங்களைப் படைத்த எழுத்தாளரான ஸ்ரீமான் ஜோ.டி.குரூஸ் அவர்களது நூலை ஆங்க்ல பாஷையில் பதிப்பிக்க முனைகையில் மோடிக்கு ஸ்ரீமான் ஜோ அவர்கள் ஆதரவு அளித்ததற்கு கொதித்துள்ளது இடதுசாரி உக்ரவாத கும்பல். மொழிபெயர்ப்பாளர்கள் மிரட்டல் கொடுத்து மொழிபெயர்ப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.

  ஸ்வதந்த்ர ஹிந்துஸ்தானத்தில் இன்றைய திகதியில் பரங்கிப் பிச்சைக்காசில் கூத்தடிக்கும் இடதுசாரிப் பயங்கரவாத கும்பல் பதிப்பிக்க முனையவில்லை எனில் என்ன…………… ஆங்க்லம் மட்டும் என்ன. கடற்கரையோரம் பேசப்படும் தெலுகு, கன்னடம், பாங்க்ளா, குஜராத்தி,மலயாளம் போன்ற பல பாஷைகளில் — தமிழகக் கடற்கரையோர ஹிந்துஸ்தானத்து மீனவர் பண்பாடு பேசும் ஸ்ரீமான் ஜோ அவர்களது நூல் (நூற்கள்) மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

  இது நிகழ்த்தப்பட்டால் இடதுசாரிக்கோட்டையின் அஸ்திவாரம் அசைக்கப்படுகிறது எனக்கொள்ளலாம்.

  மாகாண சர்க்காரை ஒருமுறைக்கு மேல் தேர்தலில் பிடிக்க முடியும். ஒரு மாகாணத்தில் மட்டுமல்ல. குஜராத், மத்யப்ரதேசம், சத்தீஸ்கர் என மூன்று மாகாணங்களில் மூன்று முறை — மக்களுக்கும் தேசத்துக்கும் ஆற்றிய நற்பணிகள் மூலம் — சர்க்காரை தக்க வைத்துக்கொள்ள முடியும் என வலதுசாரிகள் தங்களை நிரூபித்தமை தொடரட்டும்.

  வலதுசாரி இயக்கங்களின் முன்னேற்றத்துக்கு மிக அவசியமான விஷயம் வலதுசாரிகளின் ஊடகங்கள் மீதான ஆதிக்கம்.

  இதன் பக்கமும் வலதுசாரி இயக்கங்களின் பார்வை குவியட்டும்.

  தேசம் வலுப்பெறட்டும்.

 12. தந்தை பெரியார் அவர்கள் கருத்துக்கள் பெரியார் ஈ வே ரா சிந்தனைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில மேற்கோள்கள்:-

  பார்ப்பானுக்குப் பயந்து , முஸ்லீம்களுக்கு அதிக இடம் கொடுத்துவந்தோம்,அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதிக்க அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது.

  மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும், உரிமையும் ” துரோகம், பச்சைத்துரோகம் ” என்னும் குழந்தைகளைத்தான் ஈனும்; ஈன்று வருகிறது. இது இயற்கையான பண்பு ( அல்லது விதி). அதனாலேயே , நம்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக்கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக்கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத்துரோகிகளுக்கு பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள்.

  இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் , மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் , அவர்களது தனிச்சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் நாட்டுக்கு, நாட்டுப் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்கு கேடு என்பதை விளக்கவேயாகும்.

  நாட்டு இலட்சணப் படி , எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும் (பக்கம் 46 & 47.)

  இறை நம்பிக்கை என்பது புனிதமானது. இறை நம்பிக்கை இன்மை அதனைவிடப் புனிதமானது. ஆனால், எல்லோரும் தன்னுடைய கருத்தை ஏற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி, கொலை, கொள்ளை, மதமாற்றத்தில் ஈடுபடும் ஆபிரகாமியப்போக்கும், இறை நம்பிக்கையை இழிவு செய்யும் பொய் நாத்திகமும் யாருக்கும் ஏற்புடையதல்ல.

  பிறருக்கு புத்தி சொல்லும் தகுதி யாருக்கும் கிடையாது.

 13. மகாராஷ்டிரமாநிலத்தில் அதன் துணை முதல்வரும், சரத் பாவரின் உறவினர் மற்றும் அவர் கட்சியை சேர்ந்த திரு அஜித் பாவர் , காங்கிரசுக்கு ஓட்டுப்போடாமல் எதிர்க்கட்சிக்கு ஓட்டுப்போட்டால், அந்த கிராமத்துக்கு குடிதண்ணீரை வழங்காமல் நிறுத்திவிடுவேன் என்று மிரட்டிய வீடியோ , செல்போன் மூலம் எடுக்கப்பட்டு , மீடியாவில் உலா வருகிறது. ‘வினாச காலே விபரீத புத்தி ‘ – என்பர் பெரியோர். காங்கிரசும் , அதன் கூட்டணிக் கட்சிகளும், மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் இந்த வேளையில் மக்களை மிரட்டத்துவங்கி விட்டனர். இந்த அஜித் பாவர் போன்றவர்களை உடனே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். இவரெல்லாம் ஜனநாயகத்துக்கு ஒரு இழுக்கு. மக்களுக்கு சாபம் இடும் அரசியல் வாதிகளும், மக்களை மிரட்டும் அரசியல்வாதிகளும் இந்த தேர்தலில் சமாதி கட்டப்படுவார்கள்.

 14. இன்று வெளியாகி உள்ள 23.4.2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பில் , யார் பிரதமர் என்ற கேள்விக்கு ,வாக்காளர்கள் மத்தியில் ஆதரவு விவரம் வருமாறு:-

  1. மோடி 50.68 %

  2. ஜெயலலிதா 25.71 %

  3. இராகுல் 21.37 %

  4. கருத்து சொல்ல-
  விரும்பாதவர்கள் 2.24 %

  உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கும், வாக்காளர் ஆதரவு நிலை வருமாறு:

  1. பாஜக கூட்டணி 28.75 %

  2. அதிமுக கூட்டணி 26.40 %

  3. திமுக கூட்டணி 17.51 %

  4. காங்கிரஸ் கூட்டணி 9.26 %

  5. நோட்டா ( NONE OF –
  THE ABOVE ) 8.05 %

  6. ஆம் ஆத்மி 3.99 %

  7. கம்யூனிஸ்டுகள் 3.05 %

  8. மற்றவர்கள் 3.00 %

  இந்த கருத்துக்கணிப்பு எவ்வளவு தூரம் சரியாக வரும் என்பது பற்றி இப்போது ஆராய்வோம்.

  1. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்ததால், இளைய தலைமுறையினர் மத்தியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு பெருகியுள்ளது என்பது உண்மை தான்.

  2. தமிழகத்தில் வாக்காளரில் ஒரு இருபது சதவீதம் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினால், தங்களுக்கு ஏதேனும் தொந்தரவு வரும் என்ற அச்சம் 1969- ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கப்பட்டது. அதாவது , ஆளுங்கட்சியை எதிர்த்து பேசும் எழுதும் பத்திரிகை அலுவலகங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டன. உதாரணமாக திமுக ஆட்சியில் தாக்கப்பட்ட வேலூர் நாராயணின் அலையோசை , எஸ் ஏ பியின் குமுதம், மற்றும் பறிமுதல் செய்யப்பட துக்ளக் ஆகியவை இதற்கு உதாரணம்.

  3. பத்திரிக்கைகளுக்கே கருணா ஆட்சியில் இந்த கதி என்னும் போது, சாதாரண குடிமகன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த தயங்குவது எதிர்பார்க்கக் கூடியதே.
  உயர்நீதிமன்ற வழக்கறிஞரை ஆட்டோவில் வந்து ஒரு கழக ஆதரவாளர்கள் தாக்கி அவரை உடல் ஊனமுற்றவராக ஆக்கி, சாதனை புரிந்தனர் என்பது ஒரு வரலாறு.

  4. எனவே, நோட்டாவுக்கு ஆதரவு என்று சொல்லியுள்ள 8 சதவீதமும், காங்கிரசுக்கு ஆதரவு என்று சொல்லியுள்ள 9 விழுக்காடு, கம்யூனிஸ்ட், மற்றவர் மற்றும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ள சுமார்3+3+4= 10 சதவீதத்தினர், மற்றும் கருத்து தெரிவிக்க தயங்கிய 2 விழுக்காடு ஆக மொத்தம் 29 % வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு எந்த தொகுதியிலும் ஜாமீன் தொகை கிடைக்காது என்ற உண்மை உணர்ந்த காங்கிரஸ் ஆதரவு மனநிலையில் உள்ள வாக்காளர்கள் , நிச்சயம் தேசீயக் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவுக்கு 2% கூடுதல் ஆதரவை வழங்குவார்கள். அதே சமயம் பாஜக எதிர்ப்பு மனநிலையில் உள்ள காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்கள், பாஜகவுக்கு வாக்களிக்காமல், அதிமுக ஆதரவு நிலையை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

  . மேலும் ஆம் ஆத்மி மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவு வாக்காளர்கள் அக்கட்சிகள் போட்டியிடாத தொகுதிகளில், அதிமுக ஆதரவு நிலையை எடுக்க வாய்ப்பு உள்ளது. எப்படி இருந்தாலும், இந்த பாராளுமன்ற தேர்தல் ஒரு புதிய பாதையை தமிழக மக்களுக்கு காட்டிவிட்டது. எம் ஜி ஆர் கட்சி versus கருணா குடும்பம் என்று இருந்த நிலை போய், எம் ஜி ஆர் கட்சி versus பாஜக கூட்டணி என்ற நிலை தோன்றியுள்ளது. குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை மக்கள் இனி ஒதுக்கி, ஓரங்கட்டி வைப்பார்கள் என்பது புரிய ஆரம்பித்துள்ளது.

  இதுவரை முடிவு எடுக்காதவர்களும் எம் ஜி ஆர் கட்சிக்கோ, அல்லது பாஜக கூட்டணிக்கோ தான் கடைசி நேர ஆதரவு தெரிவிக்க உள்ளனர். எனவே, பாஜக 10, அதிமுக 30 என்று தேர்தல் முடிவுகள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 15. இன்றைய ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பில் , காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 9 சதவீத ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அது உண்மை என்றால், தமிழகத்தில் கண் பார்வை அற்றோர் எண்ணிக்கை அதிகரித்திருக்குமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.

  காங்கிரசின் கூஜாக்கள் /சொம்புகள்/ஜால்ராக்களான வீரமணி, மற்றும் சுபவீ ஆகியோர் கூட, காங்கிரஸ் இனி உபயோகப்படாது என்று தூக்கி வீசி விட்டபின்னர், காங்கிரசுக்கு 9 சதவீத ஆதரவு இருக்க முடியாது. இந்த கணிப்பு தவறு என்பதை தேர்தல் முடிவுகள் , 16-5-2014 அன்று மத்தியானம் அதாவது பிற்பகல் 5-00 மணியளவில் தெரியவரும்.

  மதிப்பிற்குரியவரும் , நாகரீகமானவரும் ஆன பெரியவர் ஞானதேசிகன் தலைவராக தற்போது உள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக , விலைவாசி, ஊழல், ஆகியவற்றை ஒதுக்கி விட்டு, காங்கிரசுக்கு நம் மக்கள் யாரும் ஓட்டளிக்க மாட்டார்கள். தமிழகத்தில் ஏமாந்தவர்கள் எண்ணிக்கை ஒரு மூன்று விழுக்காடு வேண்டுமானால் இருக்கலாம்.

  இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு பொய்த்துவிடும் என்றே நினைக்கிறேன். ஏனெனில் தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களில் அதிக ஓட்டு வாங்கக்கூடியவர்கள் திருநாவுக்கரசர் ( இராமநாதபுரம்) மற்றும் வசந்த குமார் (கன்யாகுமரி) ஆகிய இருவரே ஆவார்கள். அவர்களே ஜாமீன் தொகையை இழந்துவிடுவார்களோ என்ற அச்சம் காங்கிரசார் மத்தியில் நிலவுகிறது. எனவே, காங்கிரஸ் ஆதரவு 9% என்பதில் ஏதோ பெருந்தவறு நிகழ்ந்துள்ளது என்பதே என் கணிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *