தேர்தல் ஆணையத்தின் அராஜகம்

இந்தியாவின் தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல்களை நடத்தி வருகிறது. உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாட்டின் மிகப் பெரும் தேர்தல். இந்தியாவில் தேர்தல் நடத்துவது உலகின் மிகச் சிக்கலான சவாலான ஒரு பணி. அதை இந்தத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆனால் திறமையாக நடத்தி வருகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டி வருகிறது. ஒரே வேலையை மீண்டும் மீண்டும் ஒரு அமைப்பு செய்யும் பொழுது அதை முந்தைய பொழுது செய்ததை விட திறமையாகவும் வேகமாகவும் சிறப்பாகவும் செய்ய வேண்டும். அப்படி செய்யப் படும் பட்சத்திலேயே அது திறனுள்ள ஒரு அமைப்பாக கருதப் படும். ஆனால் இந்திய தேர்தல் ஆணையமோ ஒவ்வொரு முறையும் மேலும் பல தவறுகளையும் மேலும் திறனற்ற வகையிலுமே செயல் பட்டு வருகிறது.

ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக இந்தியா முழுவதுமான பாராளுமன்றத் தேர்தல்கள் ஒரு சில தினங்களில் நடத்தி முடிக்கப் பட்டு உடனே முடிவுகள் அறிவிக்கப் பட்டன. ஆனால் இணையத் தொடர்புகளும், பரவலான நவீனமான தொலைத் தொடர்பு வசதிகளும் தேர்தல் இயந்திரங்களும் இருக்கும் இன்றைய சூழலிலும் கூட தேர்தல் நடத்த 2 மாதங்கள் எடுத்துக் கொள்வது கண்டிக்கப் பட வேண்டிய ஒரு மோசமான திறனற்ற செயல்பாடாகவே கருதப் படும். அதிகாரிகள் பாதுகாப்புக் காரணங்களையும் பாதுகாப்புப் படையினரை இந்தியா முழுவதுமாக அனுப்ப வேண்டியதில் உள்ள சிரமங்களை இந்த தாமதத்திற்குக் காரணமாகச் சொல்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் அல்ல. மனது வைத்தால் நிச்சயமாக அதிக பட்சமாக 2 வாரங்களுக்குள்ளாகவே மொத்த தேர்தலையும் நடத்தி முடிக்க முடியும். ஆனால் வேண்டுமென்றே தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரை திருப்தி படுத்துவதற்காகவும் ஊழல்களை ஊக்குவிப்பதற்காகவும் இந்த தாமதத்தை திட்டமிட்டே நடத்துகிறார்களோ என்று சந்தேகப் பட வேண்டியுள்ளது. சமீப காலத்திய தேர்தல் ஆணையர்களின் செயல்பாடுகளும் அதை ஊர்ஜிதப் படுத்தும் வகையில் ஒரு தலைப் பட்சமானதாகவும் காங்கிரஸ் ஆதரவானதாகவுமே அமைந்துள்ளன.

இவ்வளவு வசதிகளும் டெக்னாலஜியும் கை வசம் இருந்தும் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை இந்த தேர்தல் ஆணையம் என்னும் பொறுப்பற்ற அமைப்பு தவற விட்டிருக்கிறது. எப்படி அவர்களை சேர்க்காமல் விட்டார்கள்? வேண்டும் என்றே இந்து வாக்காளர்களின் பெயர்கள் மட்டும் நீக்கப் பட்டிருப்பதாகச் சொல்லப் படும் புகாருக்கு தேர்தல் ஆணையர் சம்பத் பதில் அளிப்பாரா? இந்தப் பொறுப்பற்ற தனத்துக்கு யார் தண்டனை அளிப்பது? இது கிரிமினல் குற்றமா அல்லது மோடி படம் எடுத்து போட்டது குற்றமா?

narendra-modi-selfie

அடுத்ததாக உடல் ஊனமுற்றோர்களுக்கான அடிப்படைத் தேவைகளைக் கூட இந்தத் தேர்தல் ஆணையம் திமிருடனும் ஆணவத்துடனும் செய்து தர மறுத்து வருகிறது. எளியவர்களின் மீது கருணையும் அக்கறையும் இல்லாமல் அதிகார வர்க்கத்தின் திமிருடன் நடந்து வருகிறது.

இன்னும் பல பழங்காலச் சட்டங்களை கட்டிக் கொண்டு அவற்றை திருத்த எந்தவித முயற்சியும் எடுக்காமல் அதன் பின்னால் ஒளிந்து கொண்டு வேண்டாத கட்சியினரை மிரட்ட அவற்றை பயன் படுத்தி வருகிறது.

தேர்தலை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க வக்கில்லாத இந்தத் தேர்தல் ஆணையம் பல காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை மட்டுமெ அதிகாரத் திமிருடன் ஒரு தலை பட்சமாக பயன் படுத்தி வருகிறது. தேர்தல் நடக்கும் இடத்திற்குள் கட்சி சின்னத்துடன் நுழையக் கூடாது என்பது ஒரு கேனத்தனமான மூளையற்ற சட்டம். கை சின்னம் காரன் கையை வெட்டிக் கொண்டா உள்ளே போகிறான்? தேர்தல் பூத்துக்குள் விளக்கு மாறுகளை ஒளித்து வைக்கிறார்களா? ஒருவன் சின்னத்துடன் உள்ளே வருவதைப் பார்த்துத்தானா வாக்காளர்கள் அவனுக்கு ஓட்டுப் போடப் போகிறார்கள்? என்னவிதமான பித்துக்குளித் தனமான சட்டம் இதெல்லாம்? இதையெல்லாம் மாற்ற ஏன் எவரும் முயற்சி கூட எடுப்பதில்லை?

தேர்தல் நாளைக்கு முன்பாக பிரசாரத்தை நிறுத்துமாறு சொல்வது மற்றுமொறு காலத்துக்கு ஒவ்வாத ஒரு கூறு கெட்ட சட்டம். டி வி, சோஷியல் மீடீயா எல்லாம் ஊடுருவி விட்ட இந்தக் காலத்தில் இத்தனை மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்று சொல்வதும் அதை வைத்துக் கொண்டு வேண்டாத கட்சிகளை மிரட்டுவதும் அராஜகமான மூளையற்ற விதிகள். இவை போன்ற காலத்துக்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத நியதிகளைக் கட்டிக் கொண்டு சென்ற நூற்றாண்டில் செயல் பட்டு வருகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்

தமிழ் நாட்டில் தேர்தலுக்காக இரண்டு தீராவிடக் கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பொழுது அக்கட்சிகளை இந்த துப்பு கெட்ட தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. எவரையும் கைதும் செய்யவில்லை. மத்திய அமைச்சர் கபில் சிபல் ஓட்டுப் போட டெல்லியில் பணம் கொடுத்த பொழுது அவர் மீது எந்தவிதமான குறைந்த பட்ச நடவடிக்கைகளைக் கூட இந்த வெட்கம் கெட்ட தேர்தல் ஆணையம் எடுக்கத் துணியவில்லை. சோனியா டெல்லி இமாமைப் பார்த்து வெளிப்படையாக மதவெறியைத் தூண்டி ஓட்டு கேட்ட பொழுது கண்ணையும் காதுகளையும் மூளையையும் மூடிக் கொண்டது இந்த மூளை கெட்ட தேர்தல் ஆணையம். முலயம் சிங்கும், ராகுலும், திக் விஜய் சிங்கும் மீண்டும் மீண்டும் மத வெறியைத் தூண்டிய பொழுதும் நவதுவாரங்களையும் அடைத்துக் கொண்டு அமைதி காத்தனர் மிஸ்டர். சம்பத்தும் அவரது கீழ் இயங்கும் அதிகாரி வர்க்க கும்பலும்.

election-commissionஆனால் மோடி தனது ஃபோட்டோவை எடுத்துப் போடும் பொழுது சின்னத்துடன் போட்டு விட்டார் எனவும் அவரை பேட்டி கண்ட பத்திரிகையாளர்களிடம் பேசி விட்டார் எனவும் அவர் மீது எஃப் ஐ ஆர் பதிய உத்தரவிட்டுள்ளார் தேர்தல் ஆணையர் சம்பத். மறைந்த ஆந்திர முதல்வர் ராபர்ட் ராஜசேகர ரெட்டியின் சிபாரிசினால் இந்தப் பதவியைப் பிடித்தவர் இவர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். ஒரு தேர்தலை வேகமாக நடத்த வக்கில்லாத, தவறு செய்பவர்களையும் பணம் பட்டுவாடா செய்பவர்களையும் கைது செய்ய துப்பில்லாத, அதிகார பீடத்துக்கு அடி பணிந்து நடக்கும் சம்பத் ஒரு மோடி தனது படத்தைப் போட்டவுடன் அதை உலக மகா குற்றமாகக் கண்டு பிடித்து அவரைக் கைது செய்யத் துடிக்கிறார் !

இந்தியாவின் தேர்தல் ஆணையம் முற்றிலுமாகக் கலைக்கப் பட்டு புதிய திறமையான நேர்மையான ஒரு ஆணையம் அமைக்கப் பட வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆளும் காங்கிரஸ் கட்சியினரின் அடிமைகளைக் கொண்டு முற்றிலும் திறமையற்ற விதத்தில் மிகக் கேவலமாகவும் மிக மோசமான திறமையற்ற முறையிலும் நடத்தப் படும் இந்த ஆணையம் உடனடியாக சீர்திருத்தப் பட்டு காலாவதியான சட்டங்கள் களையப் பட்டு வளர்ந்த ஜனநாயக நாடுகளில் கடை பிடிக்கப் படும் சிறப்பான முறைகள் பின்பற்றப் பட்டு சீரமைக்கப் பட வேண்டும்.

1. ராணுவத்தினரும், போலீஸ்காரர்களும், வெளிநாடு வாழ் இந்தியக் குடிமக்களும், வாக்குச் சாவடிக்கு வர முடியாத நிலையில் உள்ள பிற சேவைகளில் இருப்பவர்களும் தடையற்ற முறையில் எளிதாக ஓட்டுப் போடும் விதமாக ஆன்லைன் வோட்டிங் முறை அமுல் படுத்தப் பட வேண்டும்

2. காலத்துக்கு ஒவ்வாத காலாவதியான குப்பை சட்டங்கள் நீக்கப் பட்டு விதிகள் மாற்றப் பட வேண்டும்

3. உடல் ஊனமுற்றோர் எளிய வகையில் ஓட்டுப் போடும் இடங்களும் வகைகளும் உருவாக்கப் பட வேண்டும்

4. தேவைப் படும் இடங்களிலும் செயல் படுத்தக் கூடிய இடங்களிலும் தபால் ஓட்டுக்கள் அனுமதிக்கப் பட வேண்டும்

5. ஓட்டுப் போடும் இடங்கள் அதிகரிக்கப் பட்டு அதற்கான கால அவகாசமும் விரிவாக்கப் பட வேண்டும்

4. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களில் கட்டாயமாக ரசீது ப்ரிண்ட் செய்யப் பட்டு அவை சார்ட்டிங் மெஷின்கள் மூலமாக உரிய ஸ்லாட்களில் விழ வைக்கப் பட்டு ஓட்டு முடியும் பொழுதே எண்ணிக்கை தெரியும் வண்ணம் ஏற்பாடு செய்யப் பட வேண்டும்.

இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் தொழில் நுட்பரீதியான “எளிமை” இருமுனைக் கத்தி போன்றது. ஒரு வகையில் சொல்வதானால், மோசடி செய்வதற்கு வாசல்களே இல்லை. இன்னொரு வகையில் சொல்வதானால், இந்த இயந்திரத்தைத் தயாரிக்கும் நிறுவனங்கள், பயன்படுத்துவதில் உள்ள manual procedures சார்ந்த நடைமுறைகள் போன்றவை சில வாசல்களை உருவாக்குகின்றன. இது குறித்து தமிழ்ஹிந்துவில் முன்பு வெளியான ஒரு முக்கியமான கட்டுரை:

மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்

5. மனு சமர்ப்பிப்பதிலும் பிரசார விதிகளிலும் பெரும் அளவு மாற்றங்கள் கொணரப் பட வேண்டும்.

6. தேர்தல் முடிந்த அன்றே முடிவுகள் அறிவுக்கும் முறை கொணரப் பட வேண்டும்.

7. எதிர்கட்சியினரை மிரட்டும் ஆணவமும் திமிரும் தேர்தல் கமிஷனுக்கு இல்லாமல் நடுநிலையுடன் செயல் படும் மாறு அந்த அமைப்பும் அதன் தலைமையும் மாற்றப் பட வேண்டும்

இதையெல்லாம் முதலில் செய்து விட்டு மிஸ்டர் சம்பத்தும் அவரது ஆணையமும் மோடி மீது கை வைக்கட்டும். மோடி மீது தேர்தல் ஆணையம் ஒரு தலை பட்சமாக நடவடிக்கை எடுத்து மோடியை ஒழிக்க நினைத்தால் அது இந்தியாவின் ஜனநாயகத்துக்கான சாவு மணியாக அமைந்து விடும்.

10 Replies to “தேர்தல் ஆணையத்தின் அராஜகம்”

 1. தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் சில பகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு குறைகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

  1. வாடகை வீட்டில் குடியிருப்போர் பலர் , வீடுமாற்றி புதிய வீட்டுக்கு சென்றபின்னரும் , புதிய வீட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த பின்னரும், பழைய வீட்டு முகவரியில் பல குடும்பங்களுக்கு இன்னமும் வாக்கு இருக்கிறது.

  2. வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் மற்றும் வெளிமாநிலக் கல்லூரிகளில் படிக்கும் பல மாணவர்கள் சொந்த ஊருக்கு / மாநிலத்துக்கு போய் வாக்களிக்க பல இடையூறுகள் உள்ளன. அவர்கள் ஆன்லைனில் அல்லது, வேலை பார்க்கும் ஊரிலேயே வாக்களிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.பெங்களூரில் வேலை பார்க்கும் என் மகனின் நண்பர்கள் பலர் , சென்னை வந்து வாக்களிக்க இயலவில்லை.

  3.உடல் நலமில்லாத பெரியோர் , அதாவது வீட்டை விட்டு வெளியே வரமுடியாத மற்றும் மருத்துவமனைகளில் உள்நோயாளியாக உள்ள பலர் மருத்துவமனையிலேயே நேரில் சென்று , அவர்கள் வாக்கினை பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தவேண்டும்.

  4. தேர்தல் நாளன்று திருமணம், வளைகாப்பு, சீமந்தம், புனித நீராட்டுவிழா , காதுகுத்து, போன்ற சுபகாரியங்களுக்காகவோ, அல்லது வேறு குடும்ப உறவுகளின் சுப காரியங்களுக்கோ வெளியூர் செல்வோர் , அந்த வெளியூரிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  5.தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ்,( election duty certificate) , தபால் ஓட்டு ( postal ballot ) மூலம் கட்டாயமாக வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  மேலே கூறிய ஐந்து விஷயங்களை செயல்படுத்த தக்க வசதி செய்தால், வாக்குப்பதிவு நூறு சதவீதம் எட்டிவிடும். அதனை செய்யாவிட்டால், நாம் பேசுவது வெட்டிப் பேச்சு என்று ஆகிவிடும்.

 2. வாக்காளர் அடையாள அட்டை உண்டு ஆனால் வாக்கு கிடையாது. இதற்கு எதற்கு ஒரு ஆணையம்?

 3. அமெரிக்கா போன்ற சில நாடுகளில் தேர்தல் நாளுக்கு ஒரு பத்து பதினைந்து நாள் முன்பே, தேர்தல் கமிஷனின் அலுவலகம் சென்று வாக்களிக்கும் முறை உள்ளது. அதாவது தேர்தல் நாளில் உள்ளூரில் இல்லாது அவசர சொந்த வேலைக்காக வெளியூர் செல்லும் நிர்ப்பந்தத்தில் உள்ளோர் , இதுபோல ஒரு பத்துநாள் முன்பே வாக்கு அளிக்கும் வசதியும் உள்ளது. இந்த வசதியையும் ஏற்படுத்தினால், வாக்கு பதிவு 99% ஆகிவிடும். ஆனால், இறந்துபோனவர்களின் பெயரை நீக்காமல் எப்படியும் ஒரு சதவீதம் பட்டியலில் உள்ளது. எங்கள் எதிர்வீட்டு பெண்மணி காலமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவர் பெயர் இன்றுவரை நீக்கப்படவில்லை. பட்டியலில் இது போல சரிசெய்யப்படாமல் இருப்பதால், வாக்குபதிவு சதவீதம் குறையாதா ?

 4. I fear that EC colluding and cooking-up with presently ruling Sonia & Co are plotting to thwart ABKI BAR MODI SARKAR. People are taking 20th May 2014 in a Normal / usual manner as patent Truth. It can never be so with Edwige Antania Albino Maino (So called Sonia). These diabolical creatures with the active assistance of Times Now (Arnab Goswami) Headlines today (Rahul Nawal), IBN, CNN etc.,(Rajdeep Sardesai, Sagarika Ghose) may have plans towards this end. If that be so there will boloodshed of 1947.

  Under two nation theory of Muhammad Ali Jinnah, 100% Muslims gave consent to create Pakistan but 85% remained in India to create Mughalistan to unite with Pakistan, Afghanistan – Upaganastan (of course Kashyapapura i.e. Kashmir). MODI SARKAR IS THE ONLY THE RAY OF HOPE FOR INDIAN MINDED PERSONS. (you know what I mean)

 5. The views of the author are highly emotional though he is correct in the basic issue – Election commission’s overall inefficiency. நான் கூற விரும்புவது : எல்லா அரசு அதிகாரிகளும் [முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்டோர்] தாங்கள் ஆட்சியாளர்களிடம் வேலை செய்வதாக நினைக்கிறார்கள். தங்கள் கடமை இந்த சமுதாயத்திற்கும் அதன் நலன் மட்டுமே என்பதை உணரும் வரை அவர்கள் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும். இந்த நிலைமையை மாற்ற திரு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சில drastic changes செய்ய வேண்டியிருக்கும். அவற்றில் சில அவருடைய கட்சிக்கு எதிராகவும் திரும்பும். அதை அவர் கடந்து வந்து விட்டால் நிச்சயம் நாட்டில் நல்லாட்சி மலரும்.

 6. உயர்திரு வெள்ளைவாரணன் அவர்களின் தெரிவிப்புக்கு நன்றி.

  அமெரிக்காவில் “இராதவர் வாக்கு” (absentee ballot) என்று ஒன்று இருக்கிறது. ஓட்டுச் சாவடிக்குச் செல்ல இயலாதவர், அல்லது மனமில்லாதவர்கள் அதற்கான மனுவைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பினால், வாக்குச் சீட்டு வீட்டுக்கே வந்து சேரும். வாக்கைப் பதிவு செய்து, தபால் செலவு எதுவும் இல்லாமல் அனுப்பி விடலாம்.

  இந்தியாவில் அப்படி இருந்தால் நல்லதுதான். ஆனால், இப்பொழுதே பணம் கொடுத்து வாக்கு வாங்குபவர்கள் “இராதவர் வாக்கும்” இருந்துவிட்டால், வாக்கு அறுவடை செய்துவிட மாட்டார்களா? சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

 7. Since the arrival of Shri. T.N Seshan, EC was doing a fine job. Something seems to have gone wrong with this EC this time. Mr. Sampath does not inspire the confidence that S/Shri Seshan, Gopalaswamy, TS Krishnamurti instilled on the public about the CEC post. Well Sampth has lost a golden opportunity to write a good name of himself in the annals of Indian electoral history.

 8. I totally agree with the article.This gypsy cloth doggie meal arrangemrnts of conducting elections is only to enable congress to intimidate and indulge in malpractices.EC could have organized the elections zonewisw.NE (assam Manipur etc.)Eastern zone (Bengal Bihar Orissa etc.)SOUTH west West North and MIddle or UP MP Rajasthan etc. and Kashmir.Lt would have minimized the movement of security forces avoiding enormous expenditure as this would have enabled movement of police from neoghbouring states and other agencies……………secondly Priyanka vadras unparliamentary speeches havwe been ignored by the EC while it acts in double quick time on complaints madeby congress..Some ony by an RTI application find out the way the complaints handled and the officer who acted in partisan manner should be impeached in the Parliament.Thirdly appointment to all the constitutina posts should be made through a committee of Parliament and not by the present system loaded in favour of the ruling party,Thiruvengadam

 9. True Mr.Govindakrishnan; if you send this letter to The Hindu, it will go to the dustbin. Should initiate our brethren to view this site for useful information and above all to know the truth.

 10. இந்தமுறை ஏனோ தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா சிறப்பாக நடந்தது ஊரறிந்தரகசியம் ஆனால் ஆணையத்துக்கு இந்த ரகசியம் இன்னும் பிடிபடவில்லை. அரசியல்வாதிகளை விட்டுவிட்டு சாதாரண பொதுமக்களையும் வியாபாரிகளையும் இவர்கள்படுத்தியபாடு சொல்லிமாளாது.

  “படித்தவன் பாவம் செய்தால்
  போவான்
  போவான்
  ஐயோவெனப்
  போவான்”
  -புரட்சிக்கவி பாரதி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *