புதிய பாரதம் மலர்கிறது

னநாயகம் வென்றது.  மக்கள் சக்தி வென்றது.

நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க 284 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சி அமைக்கும் வகையில் வரலாறு காணாத வெற்றி அடைந்துள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 338 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 44 இடங்களைப் பெற்று அதன் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. தேசிய நாயகர் நரேந்திர மோதியை இந்திய மக்களில் மிகப் பெரும்பான்மையினர் தங்கள் பிரதமராக அங்கீகரித்து தேர்வு செய்திருக்கிறார்கள். வதோதரா தொகுதியில் 5 லட்சத்துக்கும் அதிகமாகவும், வாராணசியில் 3 லட்சத்துக்கும் அதிகமாகவும் வாக்குகள் பெற்று மோதி பெரும் வெற்றியடைந்திருப்பது மக்கள் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட நம்பிக்கையையும் அன்பையும் பறைசாற்றுகிறது.

வடக்கே லடாக்கிலும், மேற்கே கட்சிலும், கிழக்கே அருணாசல பிரதேசத்திலும், தெற்கே கன்னியாகுமரியிலும் என்று  நான்கு எல்லைப் புறத் தொகுதிகளிலும் பாஜக வென்றிருக்கிறது. மகா சக்தியான பாரத அன்னையின் பரிபூரண ஆசியே மக்களின் வாக்குகளாக மோதி அரசுக்கு உரம் சேர்க்கும் வகையில் அமைந்து விட்டிருக்கிறது. சில குறிப்பிட்ட சமுதாய மக்கள் முழுவதுமாக மோதிக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று ஹேஷ்யம் கூறிய அரசியல் பண்டிதர்களின் கருத்துகளைத் தவிடு பொடியாக்கி, முஸ்லிம்கள், தலித்கள், வனவாசிகள், நகர்ப்புற மக்கள், கிராமவாசிகள் என வெவ்வேறு தரப்பினரும் அதிகமாக வாழும் எல்லாவிதமான தொகுதிகளையும் தழுவியதாக பாஜகவின் வெற்றி அமைந்திருக்கிறது.

Namo_thank_you

தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு பரிசோதனை முயற்சியாக அமைந்தது. கணிசமான வாக்குகளைப் பெற்ற போதும், இடங்களை வெல்லும் அளவுக்கு இந்தக் கூட்டணி உந்து சக்தியை அடையவில்லை என்பது வருத்தமே. அதற்கு நடுவிலும் கன்னியாகுமரியில் தமிழக பாஜக தலைவர் பொன்.ஆர் அவர்களின் சிறப்பான வெற்றியும், தருமபுரியில் பாமக வெற்றியும் சிறு சந்தோஷங்கள். அதிமுகவின் 37 தொகுதி வெற்றி, “தேசிய” காங்கிரசுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய கட்சியாக அதிமுகவை முன்னணியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தியத் தேர்தல்கள் அளிக்கும் ஆச்சரியங்கள் நம்மால் கற்பனையே செய்ய முடியாதவை !

மோதியின் சீரிய தலைமையையும், அவரது சாதனைகளையும் முன்வைத்து வளர்ச்சியையும் நல்லாட்சியையுமே மையமாக முன் நிறுத்தி  பாஜக செய்த பிரசாரங்கள் பெரும்பயன் அளித்துள்ளன. இந்தத் தேர்தலை ஒரு மாபெரும் சவாலாக, வேள்வியாக, தவமாக எடுத்துக் கொண்டு பாஜக தலைவர்கள், கட்சிப் பணியாளர்கள், தொண்டர்கள், ஆர் எஸ் எஸ் சகோதர இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள், இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்று பற்பல தரப்பினர் பணியாற்றினர். அவர்கள் அனைவருக்கும் இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ஹிந்து  நாட்டு மக்களின் இந்தப் பெருமகிழ்ச்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறது.

நரேந்திர மோதியின் வெற்றி என்பது ஒரு அரசியல் தலைவரின், அரசியல் கட்சியின் வெற்றி மட்டுமல்ல. ஒரு மகத்தான இந்தியக் கனவின் வெற்றி. மிக எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையிலும் கடும் உழைப்பிலும் வளர்ந்து, தனது தாய் தந்தையரின் தியாகங்களையும் அபேட்சைகளையும் சுமந்து, மலினமான அரசியல் சூழலுக்கு நடுவிலும் வீரம், தேசபக்தி, நேர்மை, தன்னலமின்மை, எளிமை, தியாகம், மன உறுதி ஆகிய உன்னதப் பண்புகளைக் கைவிடாமல் அல்லும் பகலும் அயராது உழைத்து, படிப்படியாக உயர்ந்து நாட்டின் தலைமைப் பதவியை எட்டியிருக்கும் ஒரு மாமனிதரின் சரித்திரம் எழுதப் படும் தருணம் இது.

நேற்று மதியம் தேர்தல் முடிவுகள் பாஜகவின் வெற்றிப் பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், மோதி தனது அன்னை ஹீராபென் அவர்களை காந்தி நகரில் அவர் வாழும் எளிய இல்லத்தில் சந்தித்தார். எல்லா தொலைக் காட்சிகளும் அதைக் காட்டின. மெலிந்த கைகளால், அந்தத் தாய் தனது திருமகனின் தலைமீது கைவைத்து ஆசியளித்து, நெற்றியில் திலகமிட்டு, வாயில் இனிப்பை ஊட்டி அவர் தோள்களையும் கைகளையும் வருடினார். அதைப் பார்த்த எத்தனையோ லட்சோப லட்சம் இதயங்கள் நெகிழ்ந்திருக்கக் கூடும். இந்தப் பழம்பெரும் தேசத்தின் மூதன்னையரின் ஆசிகள் அனைத்தும் அந்தத் தாயின் கரங்களில் இறங்கி நரேந்திர மோதியை வாழ்த்திய தருணம் அது. ஒரு இந்தியத் தருணம். A moment for India.

modi_takes_blessings_from_mother

பத்தாண்டுகளுக்குப் பிறகு தேச நலனிலும், வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட ஆட்சி மத்தியில் அமையப் போகிறது. இதற்கு முந்தைய வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை விடவும் பல மடங்கு ஆற்றலும், செயல்திறனும், தெளிவான தொலைநோக்குப் பார்வையும் கொண்டதாக நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சி இருக்கும். இனி வரும் 15 வருடங்கள் இந்திய சமூகத்தின், அதன் இளைஞர் சக்தியின் முடக்கி வைக்கப் பட்டிருந்த ஆற்றல்கள் அனைத்தையும் வெளிக் கொணர்வதாக இருக்கும். நமது நாட்டை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும், மகோன்னதத்திற்கும் எடுத்துச் செல்வதாக இருக்கும்.  “Ab ki bar Modi Sarkar” என்று  யூ ட்யூப் வீடியோக்களில் மழலை மொழியில் பேசிய 5 வயதுக் குழந்தைகள், தாங்கள் வாக்களிக்கும் வயது வரும்போது, அதே வாசகத்தை இன்னும் அழுத்தமாக வீதிகளில் முழங்குவார்கள்.

வாராது வந்த மாமணியாக, நம் தவப்பயனாக வந்து வாய்த்திருக்கிறார் நரேந்திர மோதி. தேர்தல் முடிந்து விட்டது. இனி அரசியல் பூசல்கள் ஓய்ந்து, அனைவரும் ஒட்டுமொத்தமாக இணைந்து புதிய பிரதமரின், புதிய அரசின் கரங்களை வலுப்படுத்துவோம். புதிய பாரதம் பிறக்கட்டும் !

55 Replies to “புதிய பாரதம் மலர்கிறது”

 1. காஷ்மீரின் ஸ்பெஷல் அந்தஸ்தை ரத்து செய்து, அதை இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு சம அந்தஸ்து உள்ளதாக மோடி செய்வார் என்று எதிர்பார்ப்போமாக! எந்த மாநிலத்தைச் சேர்ந்த இந்துவும் காஷ்மீரில் நிலமோ, வீடோ வாங்கி வாழும் தகுதி பெருவோனாக!

 2. And this man, in his victory rally in Delhi today, remembers the martyrs from Kerala who have laid down their lives in growing the party there ! despite the fact that Kerala has not given a single seat to him.

 3. ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.

  இவர் (மோதி) இதயம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது.

 4. இரண்டு ஆண்டுகள் முன்பு

  “மோதி மோதி என்று ஏன் இப்படி மோதிக் கொள்கிறீர்கள்? இது வெறும் பகற் கனவு. இந்துத்துவர்களாகிய நீங்கள் உண்மை உலகத்துக்கு வாருங்கள்.”

  என்று எண்ணியிருந்தேன்.

  சிறப்பாகத் தமிழ் ஹிந்து தளத்திற்கும் ஆசிரியர் குழுவிற்கும் கோடானு கோடி வந்தனங்கள். கன்னியாக்குமரியில் ப.ஜ.க வெற்றி பெற்றது இரண்டு விதத்தில் நல்ல சகுனமாக அமைந்திருக்கிறது:

  1) கன்னியாக்குமரி கிறிஸ்தவ மிஷ நரிகளால் ஊடுருவப்பட்டு வரும் மாவட்டம். அம்மாவட்டம் கூட இப்பொழுது இந்துத்துவத்திற்கு ஆதரவு தருவது.

  2) இமயம் முதல் குமரி வரை ப.ஜ.க. வெற்றி பெற்றமை. (ஆ சேது ஹிமாசலம் என்று தான் சொல்ல முடியவில்லை… இராமநாதபுரம் மாவட்டமும் கைக்கு வந்திருக்கலாம்).

  தமிழ் ஹிந்துக்களுக்கும் வடவெங்கடத்திற்கு அப்பால் உள்ள அனைத்து இந்துக்களுக்கும், அன்னிய தேசத்து மதத் தலைவர்களுக்கு ஆதரவு தராத தேசப்பற்றுள்ள இந்துக்கள் அல்லாத இந்தியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  1200 ஆண்டுகள் கழித்து இப்போது தான் இனி இந்தியா இந்தியர்களால் இந்தியர்களுக்காக ஆளப்படும்.

 5. உயர் மதிப்புக்குரிய நரேந்திர மோதியின் வெற்றியால் பூரிப்படைகிறேன்.

 6. PLEASE SEE BELOW A MAIL ABOUT THE FEARS OF THE CHRISTIANS WHO WISH TO CONVERET THE HINDUS FREELY WITHOUT ANY RESTRICTIONS.THEY ARE QUOTING ORISSA AND KANDHAMAL.ARE THEY BEING FAIR?ARE THEIR FEARS JUSTIFIED? DO THEY HAVE UNLIMITED RIGHTS AND FREEDOMS TO CONVERT ALL HINDUS AS CHRISTIANS IN INDIA.PLEASE CONSIDER AND RESPOND.

  International Christian Concern via auth.ccsend.com

  International Christian Concern
  2020 Pennsylvania Ave. NW #241, Washington, D.C. 20006
  http://www.persecution.org | E-mail: icc@persecution.org

  Media Contact:
  William Stark, Regional Manager for Africa
  RM-AfricaAsia@persecution.org
  FOR IMMEDIATE RELEASE
  Christians in India Fear for the Future of Religious Freedom

  National Elections End in Victory for Hindu Nationalists
  5/16/2014 Washington D.C. (International Christian Concern) – International Christian Concern (ICC) has learned that the National Democratic Alliance (NDA), a political coalition led by the Hindu nationalist Bharathiya Janatha Party (BJP), will lead the next government of India. Winning a clear majority, the NDA pushed the ruling Indian National Congress (INC) into a distant second place. Christians and other religious minorities are concerned by the NDA’s landslide victory. While accepting the results of the elections, Christians across India have expressed fear for their future and security living under a government led by Hindu nationalists.

  Narendra Modi, currently the Chief Minister of Gujarat and figurehead of BJP, will likely become India’s next Prime Minister. Christian leaders in India fear Modi’s rise to power because of his Hindu nationalist past and his actions, or lack thereof, during the 2002 Gujarat riots which resulted in the deaths of over 1,800 people, mostly Muslims.

  Christian leaders expressed their dismay over Modi’s recent remarks which they believe reveal his “ignorance” of attacks on Christians and churches. In a television interview, Modi responded to a question regarding the protection of Christians and their place of worship from attack by saying, “I have never heard of such incidents (attacks) taking place.”

  “Modi is feigning ignorance, it does not work for him,” Dr. John Dayal, Secretary General, All India Christian Council (AICC), and a member of National Integration Council (NIC), Government of India, said in an interview with ICC. “It was in Gujarat region that more than two dozen Churches were destroyed in the Christmas season of 1998. Surely he [Modi] knows what happened in Kandhamal, Orissa and Mangalore, Karnataka and other places in 2007 and 2008 when more than 300 churches and more than 6,000 Christian homes were destroyed by the Hindu radical-led mobs. More than 120 Christian tribal and Dalits were killed.”

  “We respect democracy and the voice of the people,” Dr. Dayal continued. “We will have to find out how we can tell the new government [about] our problems and fears, our expectations of a strong secular government, and hold it accountable for its misdeeds whenever it falters in giving [Christians] security and the freedom of faith,” he told ICC.

  Other Christian leader are less optimistic about the future of Christianity in India. “Today is a black day in the history of India for Christian minorities,” Mr. C. A. Daniel, President of the National Congress of Indian Christians, told ICC. “Christians are not safe under BJP rule. There will be stringent rules and legislation restricting Christians and the exercise of the freedom of faith.”

  “The persecution of Christians will increase under the BJP led government,” Rev. Ronald John told ICC. “Christians already are gripped with fear and concern over the election results. Hindu nationalist groups will take advantage of the situation and use it to attack churches and members of the Christian community.”

  ICC’s Regional Manager, William Stark, said, “The victory of the BJP led NDA has many Christians afraid for the future of the freedom of religion in India. Christians across India already face restrictions on exercising their faith freely. Forced conversion laws manipulated to attack Christian pastors and a climate of impunity for perpetrators of violence against Christians has been a hallmark of BJP rule at the state level. This must not be allowed to take hold in India’s national government. Positive action must be taken to ensure the rights of all of India’s citizens, including Christians, are respected and enforced.”
  For interviews, contact William Stark, Regional Manager for Africa:
  RM-AfricaAsia@persecution.org

  # # #
  You are free to disseminate this news story. We request that you reference ICC (International Christian Concern) and include our web address, http://www.persecution.org. ICC is a Washington-DC based human rights organization that exists to help persecuted Christians worldwide. ICC provides Awareness, Advocacy, and Assistance to the worldwide persecuted Church. For additional information or for an interview, contact ICC at 800-422-5441.
  Forward this email

 7. இந்திய அரசியல் வரலாற்றில் மோதியை போல் தூற்றப்பட்டவர் எவருமில்லை. ஊடகங்கள், அவற்றில் ஊளையிட்ட அறிவு ஜீவிகள் , “போலி மதச்சார்பின்மை” வியாதியஸ்தர்கள் கோத்ரா கலவரத்தை அதன் எலும்புகூடை உயிர்த்தெழச் செய்யும் முயற்ச்சியில் இடுபட்ட தன்னார்வத் தொண்டு (?) நிறுவனங்கள் கூட்டணியில் மோதியைப் போல் தூற்றப்பட்டவரை தேடினாலும் கிடைக்கமாட்டார். அத்தனையும் எதிர்கொண்டு ஸ்தித ப்ரஞராய் கீதை வழியில் இலக்கை அடைந்தவர். காங்கரஸின் அழிவுப்பாதையில் இருந்து நாட்டை மீட்கும் பெரும் பொறுப்பை பாரத அன்னை தனது அருமை மைந்தனுக்கு அளித்துள்ளாள். பாரதீயர்களின் கடமை மோதிக்கு துணை நின்று பாரத தேசத்தை பாருக்கு தலைமை தாங்கச் செய்வதே. ஜெய ஜெய பாரதம். வந்தே மாதரம்.

 8. வந்தது நல்லதொரு தீர்ப்பு
  நற்றலமையிலும் வளர்ச்சியிலும்
  மக்கள் கொண்ட ஈர்ப்பு
  மரணத்தின் வியாபாரி என்றார்
  இத்தருணத்தில் வாய்மூடி தன்வீடு சென்றார்
  மேல்நாட்டு
  பட்டங்கள் பல கொண்ட மேதைகள்
  நட்டத்தில் இந்நாடு நலியவே விட்டார்
  விட்டத்தை பார்தமர்ந்த படியே
  இக்கடிற்கு நாங்கள் பொறுப்பில்லை என்றார்
  எட்டயபுரதார் எழுத்தும்
  உயிர்பெற்றதை போல எழுச்சிகண்டது இந்நாடு
  வளமான குஜராத்தை கண்டார் – அவர்
  ஒரு பட்டதிலும் கூட பலகோடி செய்தார்
  ஹீராபென் ஈன்றிட்ட மகவு
  தீராத சிக்கலுக்கு தேசம் கண்ட தீர்வு
  கங்கையை வணங்கிய சான்றோன்
  அவன் கையில் தேசம் ஆகட்டும் வளமாய்!

 9. இது மோடி அலை. cnn ibn தன்னுடைய கருத்து கணிப்பிடையே ஒரு கேள்வியை முன்வைத்து வாக்காளர்களிடம் கேட்டது. நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக இல்லாதிருந்தால் நீங்கள் பாஜகவுக்கு ஓட்டளிதிருப்பீர்களா ? என்ற கேள்வி. மிகுதியான மக்கள் illai endru sonnarkal. இந்த வெற்றி முழுக்க முழுக்க நரேந்திர மோடி அவர்களின் வெற்றி. தமிழகத்தில் பாஜக தனியாக நின்றிருந்தால் இந்த அலை வீசியிருக்க கூடும். நாங்களெல்லாம் அதனால் தான் தேமுதிக வுக்கு ஒட்டு போடவில்லை. ஈனர்களுடன் சேர்ந்து விட்டீர்கள். தவறு. நல்ல வாய்ப்பு போய்விட்டது.

 10. சிவன் ஆவனை சிந்தையில் நிறுத்தி அனைத்து இன மத மாக்்களுக்கும் நல்வழியில் நன்மை மட்டும்செய்து இரண்டாம் விடுதலை தருவாய் என மலை அலவு நம்பகின்றோம்

 11. இந்தியாவை மிக உயரத்துக்கு கொண்டு சென்று விடுவார் என்று நினைத்து சாமான்ய இந்தியன் மோடிக்கு பரவலாக வாக்களித்துள்ளான். அவனது அபிலாஷைகளை நிறைவேற்ற மோடி பாடுபட வேண்டும்.

  அதனை விடுத்து இந்து முஸ்லிம் கலவரத்தை ஊக்கப்படுத்துவது, ராமர் கோவில், பசுவதை, பொது சிவில் சட்டம் என்று இறங்குவாரேயானால் இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு சென்ற மிக மோசமான பிரதமர் என்ற பெயரை வாழ்நாள் முழுக்க சுமக்க வேண்டி வரும். அடுத்த ஐந்து வருடத்தில் பாஜக இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

  பொறுத்திருந்து பார்ப்போம்.

 12. Apropos of the Modi wave, there was a Rahul wave too. The people of India waved him “Good Bye”.

 13. சுவனப்பிரியனின் குரலில் விரக்தி ஒலிக்கின்றதே.

 14. \\\ அதனை விடுத்து இந்து முஸ்லிம் கலவரத்தை ஊக்கப்படுத்துவது, ராமர் கோவில், பசுவதை, பொது சிவில் சட்டம் என்று இறங்குவாரேயானால் இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு சென்ற மிக மோசமான பிரதமர் என்ற பெயரை வாழ்நாள் முழுக்க சுமக்க வேண்டி வரும். அடுத்த ஐந்து வருடத்தில் பாஜக இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.\\

  பலப்பல பொய்ப்ரசாரங்களை இந்த தேர்தல் சந்தித்து அதற்கு வெகுவாக பதிலடியும் கொடுத்துள்ளது.

  ஹிந்துஸ்தானத்தில் ஹிந்து முஸ்லீம் கலஹத்தை ஊக்கப்படுத்தும் சக்திகள் இரண்டு மட்டிலும் — ஒன்று அராபியப்பணத்தில் ஆட்டம் போடும் ஜிஹாதி மதவெறி சக்திகள். ஓட்டு வங்கிக்காக இஸ்லாமிய சஹோதரர்களிடம் ஹிந்துக்களைப் பற்றிய பயம் உண்டு பண்ணும் …. மதசார்பின்மை என்ற பசுத்தோல் போர்த்திய ஆப்ரஹாமிய மதவெறி நரிகளான ………….. தேச விரோதத்தை மையமாகக் கொண்ட செக்யுலர் சக்திகள்.

  நரேந்த்ரபாய் அவர்களின் ஆட்சியிலும் பாஜக ஆட்சி செய்யும் எந்த மாகாணத்திலும் ஹிந்து முஸல்மான் சஹோதரர்களிடையே பிணக்குகள் இருந்ததில்லை. மாறாக செக்யூலர் என்ற போர்வையில் ஆட்டம் போடும் …… மதவெறி மிக்க ……. குடும்ப ஆட்சிக்கு தேர்தலை பலியாக்கிய முலாயம் சர்காரில் தான்……… ஓட்டு அறுவடைக்காக வேண்டி ஆப்ரஹாமிய மதவெறி சக்திகள் நிகழ்த்திய மதக்கலஹம் நடந்தேறியது.

  ஆப்ரஹாமிய மதவெறி நரிகளான செக்யூலர் சக்திகளுக்கு ஹிந்துஸ்தான மக்கள் செம்மையாக உதை கொடுத்துள்ளனர்.

  அராபியப்பணத்தில் இஸ்லாமிய மதவெறியுடன் செயல்படும் வஹாபிய ஸலாஃபிய ஜிஹாதி சக்திகள் இன்னமும் தேசத்தின் இறையாண்மைக்கும் ஹிந்து முஸ்லீம் நல்லிணக்கத்துக்கும் பெரும் சவால். இதை ஹிந்துஸ்தானம் முழுதும் கேந்த்ர மற்றும் மாகாண சர்க்கார்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

  \\ பசுவதை, பொதுசிவில் சட்டம் \\

  ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் ஹிந்துஸ்தானத்துக்கு வெளியே அரேபியாவில் இருக்கலாம். அதற்காக ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனத்தை இழிவு செய்வதற்கும் அரசியல் சாஸனத்தை வடிவமைத்த ததாகத பாபா சாஹேப் அம்பேத்கர் மற்றும் அரசியல் சாஸனத்தை ஏற்று நமக்களித்த பெரியோர்களை இழிவு செய்வதற்கும் அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

  பசுவதைத் தடை மற்றும் பொதுசிவில் சட்டம் அரசியல் சாஸனத்தை வடிவமைத்த பெரியோர்களால் அதில் பரிந்துரை செய்யப்பட்ட ஆதர்சமான விஷயங்கள்.

  தேச விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்த பெரியோர்களால் பரிந்துரை செய்யப்பட்ட அரசியல் சாஸன ஷரத்துக்களை அமல் படுத்துவது தேசத்தை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லும் என்பது அரசியல் சாஸனத்தையும் அதைப்பரிந்துரை செய்த பெரியோர்களையும் இழிவு செய்வதாகும். நிர்தாக்ஷண்யமாக மிகக் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது இப்படிப் பெரியோர்களை இழிவு செய்யும் போக்கு.

  பொது சிவில் சட்டத்தையும் அரசியல் சாஸனம் பரிந்துரைக்கிறது. ஹிந்துஸ்தானத்துக்கு ஸ்வதந்த்ரம் கிடைத்து 60 வருஷங்களுக்கு மேலும் ஆகி இன்னமும் பொது சிவில் சட்டம் வராததற்குக் காரணம் ஆப்ரஹாமிய மதவெறியைத் தவிர வேறொன்றும் இருக்கவியலாது.

  அதே போல காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுக்கும் ஷரத்து 370 ம் தாத்காலிகமான ஷரத்தாக குள்ளநரித்தனத்துடன் அரசியல் சாஸனத்தில் பண்டித நேருவால் நுழைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாஸனம் மிகத் தெளிவாக இந்த ஷரத்து தாத்காலிக ஷரத்து என்று பறை சாற்றுகிறது. 60 வருஷத்துக்கு மேலாகி இன்னமும் ஒரு தாத்காலிக ஷரத்து கிட்டத்தட்ட ஒரு நிரந்தர ஷரத்து ஆக்கப்பட்டதற்கும் காரணம் ……. இந்த தேசத்தில் இதுகாறும் ஆப்ரஹாமிய மதவெறி தழைத்ததும் …….அதற்கு தூபம் போட்டு குளிர் காய்ந்து தேசத்தை அழிவுப்பாதையில் இட்டுச்சென்ற செக்யூலர் பிரிவினை வாத சக்திகளும்.

  தேச வளர்ச்சி என்பது தான் ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களது மிக முக்யமான குறிக்கோள். ஆயினும் தேசத்தை நிர்மாணம் செய்த பெரியோர்கள் அரசியல் சாஸனத்தில் பரிந்துரை செய்த ஷரத்துகளை காலாகாலத்தில் அமல் செய்வதும் மக்களின் அபிலாஷையாகும்.

  ஹிந்து முஸ்லீம் க்றைஸ்தவ சஹோதரர்களிடையே நல்லிணக்கம் ஓங்குக. அதை ஒட்டி அரசியல் சாஸனத்தில் பரிந்துரை செய்யப்பட்ட முற்போக்கான நற்கருத்துக்கள் மக்களிடையே ஓங்குக.

 15. சுவனப்ரியன் அவர்களுக்கு பொது சிவில் சட்டம் வந்தால் என்ன நஷ்டம்.? கொள்ளு என்றால் வாயை திறக்கும் குதிரை கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்கிறதே ?கிரிமினல் சட்டத்துக்குப் பதில்(இபிகோ) ஷரியத் சட்டம் அமல் படுத்தலாமா? கேரளத்திலோ கர்நாடகத்திலோ வேறு மாநிலத்தினர் இடம் வாங்கியதால் அந்த மாநில கலாச்சாரம் அழிந்துவிடவில்லை. அதே போல் 370 ஷரத்தை நீக்கி காஷ்மீரை தேசிய நீரோட்டத்தில் கலந்து விட வேண்டும். இந்தியாவின் அமைதிக்கும் இஸ்லாமிய தீவிர வாதத்தை வேரறுக்கவும் 370 அவசியம் தேவை.

 16. \\\ அதனை விடுத்து இந்து முஸ்லிம் கலவரத்தை ஊக்கப்படுத்துவது, ராமர் கோவில், பசுவதை, பொது சிவில் சட்டம் என்று இறங்குவாரேயானால் இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு சென்ற மிக மோசமான பிரதமர் என்ற பெயரை வாழ்நாள் முழுக்க சுமக்க வேண்டி வரும். அடுத்த ஐந்து வருடத்தில் பாஜக இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.\\

  நரசிங்கப்பிரான் தூணிலிருந்து வெளிவருவதைப் பார்த்த அளவில் மட்டுமெ ஹிரண்யகசிபுவுக்குப் பாதி உயிர் போன மாதிரி ஒரு பயம் வந்ததாம்… இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கும், தேசவிரோத ஜிஹாதி கருத்துக்களை பாரதத்துக்கு இறக்குமதி செய்வதில் பயனடையும் சுவனப்பிரியனுக்கும் அதே நிலை இன்று. இருப்பினும் ஹிரண்யகசிபு போல இன்னும் வீராப்புக் காட்டுகிறார். இருப்பினும், எழுதும் தொனியிலேயே ஒரு நடுக்கம் தெரிகிறது.

  சுவனப்பிரியன் போன்ற இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு free run கொடுத்த அயோக்கியர்களில் ஒன்று விடாமல் எல்லாரும் இந்தத் தேர்தலில் பாரத மக்களால் சேர்த்து ஏவப்பட்ட சுதர்சன சக்கரத்தின் பற்களிலிருந்து தப்பமுடியாமல் ஒருவர் விடாமல் அரைக்கப்பட்டனர்: (1) காங்கிரஸ், (2) BSP, (3) RJD, (4) சமாஜ்வாதி பார்ட்டி, (5) தி மு க, (6) அரவிந்த் கேஜ்ரிவால் …

  இந்நாட்டில் என்றைக்குமே அந்நிய மதத்தை அமைதியாகப் பின்பற்றுவதிலும் பிரச்சாரம் செய்வதிலும் தடை இருந்ததில்லை. மோதி ஆட்சியிலும் அதுவே நிலைக்கும். ஆனால் அந்நிய மதத்தோடு சேர்த்து இந்துவிரோத-தேசவிரோத உணர்வை இறக்குமதி செய்யும் சுவனப்பிரியன் போன்றவர்களின் கரங்களும் கால்களும் நாவும் இனி துண்டிக்கப்படும்.

 17. இப்போது வந்துவிட்டார் பாரதத்தை வழிநடத்திச் செல்ல உண்மையான தகுதியுடைய ஒரு தலைவர்! என்ன அபாரம்…

  உலகமே கண்டு தெளியும் முற்ரையில் சங்கோஜப் படாமல் பெருமையுடன் நெற்றியில் விபூதி போல பட்டையாகச் சந்தனம் இட்டுக்கொண்டு காசியில் பவனியும் வெற்றி உறையும்… கங்கைக்கு ஹாரத்தியும்!

 18. //சுவனப்பிரியனின் குரலில் விரக்தி ஒலிக்கின்றதே.//

  எனது தாய் நாடு அழிவின் பாதைக்கு சென்று விடக் கூடாதே என்ற ஆதங்கம்தான் விரக்தியாக வெளிப்படுகிறது. மற்றபடி இன்னும் எத்தனை மோடிகள் வந்தாலும் இஸ்லாமியனின் நம்பிக்கையை எக்காலத்திலும் தகர்க்க முடியாது. அதில் எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு. மேலும் தனக்கு குஜராத்தில் முன்பு கிடைத்த கெட்ட பெயரை துடைத்துக் கொள்ள பிரதமர் பதவியை பயன்படுத்திக் கொள்வார் என்றே நினைக்கிறேன். நல்லது நடந்தால் அனைவர்க்கும் நலமே!

 19. பாரதத்தின் தலைமகனாம் மோடி அவர்களுக்கு அமெரிக்கா செல்ல விசா வழங்கக் கூடாது என்று இங்கே சில நண்பர்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கு கையெழுத்து போட்டு மனுக் கொடுத்தனர். இந்த செய்தி வெளியே தெரிந்துவிட்டது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் , அந்த மனுவில் இருப்பது எங்கள் கை எழுத்து அல்ல என்று ஒரு பல்டி அடித்தது எல்லா மீடியாவிலும் செய்திகளாக வந்தது ஞாபகம் இருக்கிறது. நமது அன்புத்தம்பி திருமா அவர்கள் கூட அதில் கை எழுத்துப் போட்டிருந்தார் என்று ஞாபகம். இந்த கோமாளித்தனத்தை செய்தவர்கள் அடிப்படை அறிவு இல்லாத ஒரு செயல் இது என்பதை உணரவில்லை. என்னமோ அமெரிக்காக்காரன் இந்த மனுதாரர்கள் பாக்கெட்டில் இருப்பது போலவும் , இவர்கள் மனுவைகண்டு பயந்து , நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்படும் என்பதுபோலவும் இவர்கள் பொய்களை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தனர். அமெரிக்க அதிபரும், இங்கிலாந்து பிரதமரும் , இன்னமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உலகநாடுகளின் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து , தங்கள் நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். மோடி நிச்சயம் அமெரிக்கா, இரஷ்யா,சீனா ஆகிய எல்லா நாடுகளுக்கும் விஜயம் செய்வார். விசா கொடுக்காதே என்று மனுப்போட்டவர்கள் பாவம். என்ன திருப்பதி கோயிலுக்குப் போய் மொட்டை போட்டுக்கொள்ளப் போகிறார்கள் என்று கேள்வி. யாராவது அவர்களுக்கு திருப்பதி போக வழிகாட்டி உதவுங்கள்.

 20. // ஆனால் அந்நிய மதத்தோடு சேர்த்து இந்துவிரோத-தேசவிரோத உணர்வை இறக்குமதி செய்யும் சுவனப்பிரியன் போன்றவர்களின் கரங்களும் கால்களும் நாவும் இனி துண்டிக்கப்படும்.//

  எப்பா.. தாலிபான்களை காட்டிலும் அதிக கொலை வெறி தெரிகிறது.. ஐயா, இந்து சமயம் இவ்வளவு காலம் தழைத்து நிற்பதற்கு காரணம் அதனுடைய சாத்வீக தன்மையால் தான். இது போன்ற பேச்சுகளால் சனாதனத்திற்கு யாதொரு பயனுமில்லை.. சுவனப்பிரியன் இது நாள் வரை கண்ணியமாக தன்னுடைய மறுமொழியை பதிவு செய்து கொண்டு வருகிறார். அவருக்கு பொறுமையாக பதிலிறுப்பது நம்முடைய கடமையாகும்.

  காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுக்கும் ஷரத்து 370ஐ பொறுத்த வரையில் அதை நீக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியது அம்மாநில மக்கள் தான். ஜனநாயக முறை படி அம்மாநில மக்களின் கருத்தை கேட்டறிந்து அதன் படி தான் முடிவெடுக்க வேண்டுமே ஒழிய அராஜகமாக எதையும் நீக்கவோ அல்லது அம்மாநில மக்களின் மீது திணிக்கவோ இந்திய அரசிற்கு எந்த உரிமையும் கிடையாது.

 21. // அமெரிக்க அதிபரும், இங்கிலாந்து பிரதமரும் , இன்னமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உலகநாடுகளின் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து , தங்கள் நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர் //

  அதற்குக்காரணம் மோடி மீது ஊற்றெடுத்த பாசமும் பிரியமுமல்ல. இந்தியாவில் அவர்களது வியாபாரம் நல்லபடியாக நடக்கவும் மேலும் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ளவும் மோடியின் தயவு வேண்டுமே. இதுவே காங்கிரஸ் வென்றிருந்தால் மோடிக்கான அமெரிக்க விசா மறுப்பு அப்படியேதான் இருந்திருக்கும்.

  ஒரு ஜனநாயக தேசத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்றவருக்கு மற்ற நாடுகள் வாழ்த்து தெரிவிப்பதும், நேச நாடுகள் அழைப்பு விடுப்பதும் வெறும் சம்பிரதாயமே.

 22. // எப்பா.. தாலிபான்களை காட்டிலும் அதிக கொலை வெறி தெரிகிறது.. ஐயா, இந்து சமயம் இவ்வளவு காலம் தழைத்து நிற்பதற்கு காரணம் அதனுடைய சாத்வீக தன்மையால் தான். இது போன்ற பேச்சுகளால் சனாதனத்திற்கு யாதொரு பயனுமில்லை.. //

  ஐயா தாயுமானவரே, “ஸ ஜிஹ்வயா புஜம் க்ருந்தந்தி ஏவ” (அதாவது, நாவுடன் சேர்ந்து கையையும் அறுப்பார்கள்) என்னும் வடமொழிச் சொற்றொடர் நமது மரபிலே பல நூல்களில் காணப்படும். பல சாத்வீகர்களும் இத்தகைய சொல்லாட்சியைத் தம் நூல்களில் பயன்படுத்தியுள்ளனர். இதன் பொருளாவது, “எதிரிகளுடைய அபவாதமும் துஷ்பிரச்சாரமும் ஆணித்தரமான ஆதாரமெனும் வாளால் முறியடிக்கப்படும்” என்பது.

  // சுவனப்பிரியன் இது நாள் வரை கண்ணியமாக தன்னுடைய மறுமொழியை பதிவு செய்து கொண்டு வருகிறார். //

  நீங்கள் ஏதோ ஒரு மாயையில் இருக்கிறீர்கள்.

  // காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுக்கும் ஷரத்து 370ஐ பொறுத்த வரையில் அதை நீக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியது அம்மாநில மக்கள் தான். ஜனநாயக முறை படி அம்மாநில மக்களின் கருத்தை கேட்டறிந்து அதன் படி தான் முடிவெடுக்க வேண்டுமே ஒழிய அராஜகமாக எதையும் நீக்கவோ அல்லது அம்மாநில மக்களின் மீது திணிக்கவோ இந்திய அரசிற்கு எந்த உரிமையும் கிடையாது. //

  ஒருவரை அடித்து உதைத்து அவரது குடும்பத்துடன் சேர்த்து வீட்டை வெளியேற்றி கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு நாடு கடத்தி விடலாம். அதற்குப் பிறகு அந்த அடியாட்களை அந்த வீட்டில் தங்க வைக்கலாம். அந்த அடியாட்கள் ஜனப்பெருக்கம் செய்துகொண்ட பிறகு, கோர்ட்டில் “இந்த வீடு யாருடையது” என்பதைத் தீர்மானிக்க “வீட்டில் இப்போது யார் குடியிருக்கிறார்களோ, அவர்கள் ஜனநாயக முறைப்படி வீடு யாருடையது என்பதை நிர்ணயிக்கட்டும்” என்று தீர்ப்பு வழங்கலாம்.

  தாயுமானவன் கூறும் காஷ்மீருக்கான தீர்வு இப்படித் தான் இருக்கிறது.

 23. // அதற்குக்காரணம் மோடி மீது ஊற்றெடுத்த பாசமும் பிரியமுமல்ல. இந்தியாவில் அவர்களது வியாபாரம் நல்லபடியாக நடக்கவும் மேலும் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ளவும் மோடியின் தயவு வேண்டுமே. //

  உண்மை தான். ஆனால் இதையே சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்களையும் நம் தாளத்துக்கு ஏற்ற மாதிரி ஆட வைத்து வேடிக்கை பார்க்கலாமே… உலகத்தில் இந்தியா மீதுள்ள பயம் கலந்த மதிப்பு இன்னமும் பெருகும்.

 24. அன்புள்ள கந்தர்வன்,

  தங்கள் கட்டுரைகளிலும் மறுமொழிகளிலும் காணப்படும் தீர்க்கதரிசனம் ஏனிப்படி கோபம் கொப்பளிக்கும் அளவுக்கு மாறியது என்று புரியவில்லை. சுவனப்பிரியன் போன்ற நண்பர்கள் சொல்லும் கருத்துக்கு மாற்றுக்கருத்தை , எழுத்தை எழுத்தால் , சொல்லை சொல்லால், மட்டுமே பதிலடி கொடுக்க வேண்டும். சுவனப்பிரியன் போன்றோர் பொய்யான போதனைகளை கேட்டு மனத்திரிபு பெற்றவர்கள். கை கால் நாவை துண்டிப்பது இஸ்லாமிய ஷரியத் சட்டம். இந்துக்களின் சட்டம் அல்ல. தங்களின் கடிதத்தின் கடைசி வரியை தாங்களே மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

  2)அன்புள்ள தாயுமானவன் அவர்களே,

  தங்கள் கருத்தில் திரு கந்தர்வன் அவர்களின் கடைசி வரிகளை கண்டித்தது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்திய அரசியல் அமைப்பினைப் பற்றி தாங்கள் வெளியிட்டுள்ள கருத்து அபாயகரமானது. அரசியல் அமைப்பில் உள்ள எந்த ஷரத்தினையும் மாற்றுவதற்கு நமது பார்லிமெண்டுக்கு மட்டுமே உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநில அரசுக்கு அரசியல் சட்டத்தினை திருத்தும் மற்றும் மறு பரிசீலனை செய்யும் உரிமை கிடையாது.அம்பேத்கார் உருவாக்கிய இந்த சட்டத்தினை அடிப்படையிலேயே கைவைக்கும் எந்த முயற்சியையும் முறியடிப்போம்.

  அது சரி இவ்வளவு தவறாக வழி நடத்தும் தங்களுக்கு ஒரு கேள்வி- ஆந்திர மாநிலத்தை இரண்டாகப்பிரித்த காங்கிரசுக்காடையர்கள் அந்த மாநில மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியா இரண்டாகப் பிரித்தார்கள்? அய்யா, தங்களைப் போன்றோர் காங்கிரசின் அந்த அடாவடியை எதிர்த்து என்ன செய்தீர்கள். அப்போது வாக்கெடுப்பு நடத்த சொல்லி குரல் கொடுத்தீர்களா அய்யா ? நமது அரசியல் அமைப்பின் படி பார்லிமெண்டுக்கு மட்டுமே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 370- ஆம் பிரிவு என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று அரசியல் அமைப்புக் குழு தெளிவாக தெரிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்பினைப் பற்றிய திரு ஹெச் எம் சீர்வாய் அவர்கள் விரிவுரையை எடுத்து , கண்ணுற வேண்டுகிறேன்.

  ஒரு அதிகாரத்தை யார் வழங்குகிறார்களோ அவர்கள் மட்டுமே அந்த அதிகாரத்தை திரும்பப் பெறமுடியும். அதிகாரத்தை கொடுக்க முடியாதவர்கள், எந்த அதிகாரத்தையும் திரும்பப் பெறமுடியாது. காங்கிரசுக் காடையர்கள் நம் நாட்டில் இந்திய அரசியல் அமைப்புக்கு எதிராக பல பொய்களை கடந்த 67- .ஆண்டுகளாக உலவ விட்டு வந்தனர். அதன் விளைவாகவே நாட்டில் இந்த அளவு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

  நமது நாட்டின் முன்னை நாள் பிரதமராக இருந்த திரு இராஜீவ் காந்தி அவர்களை படுகொலை செய்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் யாரும் ஆதரிக்கவில்லை. ஈழத்தமிழர் தலைவர் மேதகு அமிர்தலிங்கம் உட்பட எத்தனையோ அமைதிவழி தலைவர்களை படுகொலை செய்தவர் பிரபாகரன்.. இந்தியாவில் உள்ள தேசவிரோத இயக்கங்களான வீரமணி சுபவீ போன்றோர் மட்டுமே பிரபாகரனுக்கு தங்கள் அரசியல் மேடைகளில் வாழ்வு அளித்து வந்தனர். பிரபாகரன் செய்த குற்றங்களுக்காக , பழிவாங்கும் உணர்வுடன் , எய்தவன் இருக்க அம்பை நோவது போல ஒரு வித தொடர்பும் இல்லாமல் அப்பாவி இலங்கை தமிழர் தலையில் கொத்து எறிகுண்டுகளை வீசி, சுமார் 5 லட்சம் பொதுமக்களை படுகொலை செய்த சோனியாவையும் ,அவருக்கு சொக்கத்தங்கம் சான்றிதழ் வழங்கிய மஞ்சளாரையும், உலக நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தி , இராஜபக்சேவுடன் சேர்த்து, மரணதண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். எதுவானாலும் சட்டபூர்வமான அமைப்புக்களுடன் சேர்ந்து மட்டுமே தண்டனைகள் வழங்கப்படவேண்டும். வன்முறையை தானே கையில் எடுப்பவர்கள் காலத்திற்கும் மன்னிக்கப்படமாட்டார்கள். அதனால் தான் தமிழக வாக்காளப் பெருமக்கள் , இந்த பாராளுமன்ற தேர்தலில் கொலைகார சோனியாவையும், அவருக்கு ஒன்பது வருடம் சொம்புதூக்கிய கருணா அவர்களையும் வங்கக்கடலில் ஆழ்த்திவிட்டனர். இனி இவர்கள் கதை அவ்வளவுதான்.

  வன்முறையை போதிப்போரையும் , வன்முறையில் ஈடுபடுவோரையும் என்றும் எப்போதும் உலகமே புறக்கணித்து ஒதுக்கிவிடும். இந்து சமயம் ‘ சர்வே ஜனா சுகினோ பவந்து- லோகாஸ் சமஸ்தாஸ் சுகினோ பவந்து -‘ அனைத்து ஜீவராசிகளும் ( மனிதன் உட்பட ) சுகமாக இருக்க அருள்புரிவாயாக என்று எங்கும் நிறைந்தானை இறைஞ்சுகிறது. நம்மை எவன் தாக்கினாலும் தக்க பதிலடி கொடுப்போம். ஆனால் நாம் என்றும் வன்முறையை துவக்க மாட்டோம். வன்முறை ஆஅபிரகாமிய காடையர்களின் ஆயுதம்.

 25. “காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுக்கும் ஷரத்து 370ஐ பொறுத்த வரையில் அதை நீக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியது அம்மாநில மக்கள் தான்”
  Totally disagree. Kashmir is part and parcel of India, hence no special status. The cabinet can change section 370 and send it to the president for approval. Simple as that.
  Mr SP
  We are going to bring common law for everyone and we are going to build Ram temple in Ayodya. If you do not like it, then tough luck. You can pack your bag and leave for Pakistan straightaway. Precisely the reason it was created, for people like you.
  I recall Aussie PM’s words here. ” If you do not like our laws and want Sharia laws, then you should immediately leave Australia for those countries that have those laws. We will even help you to get there”
  Same applies for you and your fellow Islamists.

 26. இந்தியா முழுவதிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பல தொதிகளில், முஸ்லிம் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தொகுதி வாரியாக, வாக்குச்சாவடி வாரியாக விழுந்துள்ள வாக்கு எண்ணிக்கை விவரங்களைப் பார்க்கையில் தெரிய வருகிறது. குறிப்பாக, உத்திரப் பிரதேசத்தில் ஷியா, சுன்னி என்ற இரு பிரிவினருமே பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். சுவனப் பிரியன் போன்றவர்கள் தங்களுக்கு செய்யப் பட்ட மூளைச்சலவையிலிருந்தும், மூடிய குறுகலான கண்ணோட்டங்களிலும் இருந்து வெளியே வந்து கண்ணைத் திறந்து பார்க்கட்டும். உங்கள் பம்மாத்து வேலைகளையும் பூச்சாண்டி காட்டுதலையும் விட்டு விட்டு, உருப்படியாக ஒன்றிணைந்து தேசத்தை முன்னெடுத்துச் செல்வதில் கைகொடுங்கள்.

  Poll data shows large number of Muslims voted for Modi

  // The BJP has won more than half the 87 Lok Sabha seats across the country with a high percentage of Muslim voters, with most of the gains concentrated in the politically crucial states of Uttar Pradesh and Maharashtra.

  The BJP won 45 of the 87 Lok Sabha seats identified by the Centre for the Study of Developing Societies (CSDS) as having a high concentration of Muslim voters. In Uttar Pradesh alone, the party won all but one of the 27 seats with a sizeable Muslim electorate.

  Prominent among the winners in Uttar Pradesh was BJP president Rajnath Singh, who bagged the Lucknow seat that has some four lakh Muslim voters, including numerous Shias.

  Significantly, the BJP bagged three seats in Assam with a large number of Muslim voters – Gauhati, Mangaldoi and Kaliabor. It also won the Chandni Chowk and North-East Delhi constituencies in the national Capital, both of which have a large Muslim electorate.

  Of the 102 constituencies where at least one in five voters is a Muslim, the BJP won 47 seats. //

  https://indiatoday.intoday.in/story/delhi-muslims-muslim-voters-bjp-narendra-modi-delhi-lok-sabha-constituencies-harsh-vardhan-parvesh-singh-verma-ec-aap/1/362351.html

 27. திரு ஜடாயு!

  //இந்தியா முழுவதிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பல தொதிகளில், முஸ்லிம் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தொகுதி வாரியாக, வாக்குச்சாவடி வாரியாக விழுந்துள்ள வாக்கு எண்ணிக்கை விவரங்களைப் பார்க்கையில் தெரிய வருகிறது.//

  முஸ்லிம்களின் ஆதரவை மோடி பெற்றிருந்தால் அது பற்றி எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. தன்னை நம்பி ஓட்டளித்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது ஒரு பிரதமரின் கடமை. அதனை சரி வர செய்ய வேண்டும் என்பதே என் போன்றோரின் எதிர்பார்ப்பு.

  //மூளைச்சலவையிலிருந்தும், மூடிய குறுகலான கண்ணோட்டங்களிலும் இருந்து வெளியே வந்து கண்ணைத் திறந்து பார்க்கட்டும். உங்கள் பம்மாத்து வேலைகளையும் பூச்சாண்டி காட்டுதலையும் விட்டு விட்டு, உருப்படியாக ஒன்றிணைந்து தேசத்தை முன்னெடுத்துச் செல்வதில் கைகொடுங்கள்.//

  எந்த ஒரு மனிதனும் தனது நாடு வன்முறையை நோக்கி செல்வதை விரும்ப மாட்டான். எல்லா மக்களும் எல்லா இன்பமும் பெற்று சுகமாக வாழ வேண்டும் என்பதே என் போன்றோரின் ஆசை. பம்மாத்து வேலைகளுக்கோ, பூச்சாண்டி காட்டுதலுக்கோ எந்த ஒரு அவசியமும் என்னைப் பொன்றவர்களுக்கு எந்நாளும் ஏற்படப் போவதில்லை. எனது மார்க்கம் எனக்கு அதனை போதிக்கவும் இல்லை.

 28. கந்தர்வன்!

  //இந்துவிரோத-தேசவிரோத உணர்வை இறக்குமதி செய்யும் சுவனப்பிரியன் போன்றவர்களின் கரங்களும் கால்களும் நாவும் இனி துண்டிக்கப்படும்.//

  நான் என்றுமே எனது தாய் நாட்டுக்கு துரோகமாக செயல்பட மாட்டேன். என் இறைவன் மீது ஆணை. ஒருகால் என் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு நீங்கள் சொல்வது போல் எனது கையையும் காலையும், நாவையும் துண்டிக்க எவனாவது வருவானாகில் என் உயிர் போவதற்கு முன்னால் என் மீது அபாண்டமாக பழி சுமத்திய அந்த கும்பலின் இரண்டு மூன்று தலைகளை கீழே சாய்த்து விட்டுத்தான் எனது தலை சாயும். அத்தகைய வீரத்தையும் விவேகத்தையும் இஸ்லாம் எனக்கு நிரம்பவே தந்திருக்கிறது.

  ‘நிறை குடம் தளும்பாது’ என்றும் சொல்லி வைக்கிறேன்.

 29. பெண்ணடிமை , பெண்களுக்கு கொடுமை செய்யும் மார்க்கம் எதுவாயினும் அது உலகில் உள்ள 350 கோடி பெண்களாலும் வெறுத்து ஒதுக்கப்படும். எந்த மார்க்கம் ஆனாலும் வன்முறையை போதித்து, பிற மதத்தவரை மதம் மாற்றவும், பிற மதத்தவர் மதம் மாற மறுத்தால் அவர்களை கொன்றுவிடு, என்று கட்டளை பிறப்பிக்கும் மார்க்கங்கள் உலகில் தானே அழியும்.

 30. // ஐயா தாயுமானவரே, “ஸ ஜிஹ்வயா புஜம் க்ருந்தந்தி ஏவ” (அதாவது, நாவுடன் சேர்ந்து கையையும் அறுப்பார்கள்) என்னும் வடமொழிச் சொற்றொடர் நமது மரபிலே பல நூல்களில் காணப்படும். பல சாத்வீகர்களும் இத்தகைய சொல்லாட்சியைத் தம் நூல்களில் பயன்படுத்தியுள்ளனர். இதன் பொருளாவது, “எதிரிகளுடைய அபவாதமும் துஷ்பிரச்சாரமும் ஆணித்தரமான ஆதாரமெனும் வாளால் முறியடிக்கப்படும்” என்பது. //

  இருக்கலாம், ஆனால் அனைவருக்கும் இது தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்கவியலாது அல்லவா ? நீங்கள் குறியீட்டுரீதியாகத்தான் இவ்வாறு கூறுகிறீர்கள் என்பதை என்னைப்போன்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படியாக அடைப்புக்குறிக்குள் மேற்கண்ட விளக்கத்தை சுருக்கமாக குறிப்பிட்டிருக்கலாம்.

  வெறுமனே ’கரங்களும் கால்களும் நாவும் இனி துண்டிக்கப்படும்’ என்று படிக்கும்போது அதிர்ச்சியைத்தான் அளிக்கிறது.

 31. // உண்மை தான். ஆனால் இதையே சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்களையும் நம் தாளத்துக்கு ஏற்ற மாதிரி ஆட வைத்து வேடிக்கை பார்க்கலாமே… உலகத்தில் இந்தியா மீதுள்ள பயம் கலந்த மதிப்பு இன்னமும் பெருகும். //

  அவர்களை நமது தாளத்துக்கேற்ப ஆடவைக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். அந்த அளவுக்கு நாம் தன்னிறைவும் (ஓரளவுக்காவது) வலிமையும் பெறவேண்டும். மிக முக்கியமாக நமது ராணுவபலத்தை சொந்த முயற்சியிலேயே அடையும் அளவுக்கு – அதன்மூலம் ஆயுத இறக்குமதிக்கு ஆகும் பெரும் தொகையை மிச்சம் செய்யக்கூடிய அளவுக்கு – அரசு மற்றும் தனியாரது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவும் உற்பத்தித்துறையும் விஸ்வரூபமெடுக்கவேண்டும். (எழுத்தாளர் ஞாநி ஒருமுறை, சீனா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை தயாரித்தபின்னர்தான் அமெரிக்கா அதற்கு MFN அந்தஸ்தை வழங்கியது என்று குறிப்பிட்டிருந்தார்)

  மோடி இதை சாதிக்கவேண்டும் என்பது எனது பெருவிருப்பங்களுள் ஒன்று.

 32. மதிப்பிற்கு உரிய ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

  முதலில் உங்கள் தாய்நாட்டுப் பற்றுக்குச் சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு, என் கருத்தைச் சொல்ல முற்படுகிறேன்.

  ஏசு கிறிஸ்து, “Give unto Romans what is due unto them!” என்றுதான் சொல்லி இருப்பதாக விவிலிய நூல் கூறுகிறது. மேலும் நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியதாக்கவும்தான் நான் படித்திருக்கிறேன்.

  இறைதூதரான முகம்மது நபி அவர்களும் ஏசு கிருஸ்துவை ஒரு இறைதூதராக (Prophet) ஏற்றுக் கொண்டிருக்கிறார். எனவேதான் நான் ஏசு கிருஸ்துவிடமிருந்து உதாரணத்தைக் கொடுத்துள்ளேன்.

  எந்த நாடாக இருந்தாலும், அந்த நாட்டில் இருக்கும் குடிமக்கள் அனைவரும் ஒரே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்களாக இருந்தால்தான், அரசு அவர்களை ஒரே கண்ணோட்டத்துடன் நோக்குகிறது என்று ஒப்புக்கொள்ள இயலும். அதுபோன்றே, ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரித்தான் நடத்தப்பட வேண்டும். அப்பொழுதான் எல்லா மாநிலத்து மாந்தர்களும் அந்நாட்டின் குடிமக்களாகச் செயல்படுவார்கள். அதனால்தான் எல்லா குடியரசு நாடுகளிலும் (இந்திய தவிர) மக்கள் அனைவருக்கும் ஒரே சட்டதிட்டம்தான் இருக்கிறது.

  UN Resolutionஐப் பற்றி நீங்கள் சொல்லக்கூடாது. இந்தியக் குடிமகனான தங்களுக்கு, இந்தியாவுக்காக உயிரையும் கொடுக்கத்துணிந்த தங்களுக்கு இந்தியாவின் மேன்மைதான், அதன் நில உரிமைதான் முக்கியமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் //பொது சிவில் சட்டம் என்று இறங்குவாரேயானால் இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு சென்ற மிக மோசமான பிரதமர் என்ற பெயரை வாழ்நாள் முழுக்க சுமக்க வேண்டி வரும்.// என்று எழுதத் துணிந்திருக்க மாட்டீர்கள்.

  ஆயினும், ஒவ்வொரு சமயத்தவரும் அவர்களது சமய வழிபாட்டைத் தடையின்றி நடத்தி வர வென்றும் என்பதால், அரசு வழிபாட்டுத்தலங்களைச் தன்னிச்சியாகச் செயல் பட விடுகின்றன, அவை நாட்டுக்கு விரோதமாகச் செயல் படாதவரை. இந்தியா மட்டுமே இவ்விஷயத்தில் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுன்னாம்புமாகச் செயல் பட்டு வருகிறது. இந்துக் கோவில்களை அரசு எடுத்து நடத்துவதும், கோவில் சொத்துகள் மற்ற விஷயங்களுக்குச் செலவிடப் படுவதும் தாங்கள் அறியாததல்ல.

  எனவே, இந்திய மக்கள் அனைவரும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டும் என்றால், தங்கள் மன அடித்தளத்தில் இருந்துவரும் “முஸ்லிம்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்” என்ற எண்ணம் நீங்க வென்றும் என்றால், அனைத்து இந்தியர்களும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டும், இந்தியாவுக்கு ஒரே அரசியல் சட்டம்தான் இருக்கவேண்டும். அனைத்து இந்திய மாநிலங்களும் ஒரே ஆளுகைக்கு உட்படவேண்டும்.

  பசுவதையைப்பற்றித் தங்கள் கருத்தையும் அறிந்துகொண்டேன்.

  நாங்கள் பரமக்குடியில் வசித்து வந்தபோது, என் அம்மா கர்ப்பமாக இருந்த சமயம் அது. எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி ஒரு இஸ்லாமியக் குடும்பம் வசித்து வந்தார்கள். புலால் வாடை என் அம்மாவுக்கு தலை சுற்றலை வரவழைக்கிறது என்பதை அறிந்த அந்த இஸ்லாமியக் குடும்பம் நாங்கள் குடி இருந்தவரை புலால் சமைப்பதையே நிறுத்தி வைத்தார்கள். இன்றளவும் அவர்களின் கரிசனமும், கண்ணியமும் என் நினவில் இருந்து வருகிறது. ஒருவருக்காக மற்றொருவர் விட்டுக்கொடுப்பதில் இருக்கும் சுகம் விட்டுக்கொடுத்தால்தான் தெரியும். அந்த இஸ்லாமியக் குடும்பத்தின் பரிவுதான் என்னை ஒரு மதக் கலவரத்தின்போது, ஒரு இஸ்லாமிய தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வைத்தது.

  நீங்களாகவே பசுவதை வேண்டாம் என்று சொல்லிப் பாருங்கள், ஒவ்வொரு இந்துவும் உங்களை உயர்வாகப் போற்றுவான்.

  இங்கு ஜனாப் சுவனப்பிரியனுக்குப் பதில் எழுதுவோருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

  தமிழ் இந்து தளத்தைத் தொடர்ந்து படித்து, கருத்து தெரிவித்து வரும் அவரைப்பற்றி நல்லமுறையில் எதிர்க்கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவரது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்கள் தெரிவிக்கத்தான் நமது எழுத்து சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். நமது கருத்துக்களில் வன்முறையும், பழிச் சொற்களும் இருக்கக்கூடாது என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

  நமது “தமிழ் இந்து” இணையதளத்தின் தரத்தை நமது தேவையற்ற எழுத்துகளால் மாசுபடுத்தவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  வணக்கம்!

 33. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

  காஷ்மீரில் ஸ்ரீநகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டதைக் கண்டித்தோ, பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்தும், இந்துக் கோவில்கள் தகர்க்கப்படுவதைக் கண்டனம் செய்தும், இந்துப் பெண்களைக் கடத்தி, வலுக்கட்டாயமாக முஸ்லிம்களுக்குத் திருமணம் செய்துவைத்து மதமாற்றம் செய்வது தவறென்றும் எப்பொழுதாவது நீங்கள் கருத்துத் தெரிவித்திருந்தால் அதை அறிய நான் விரும்புறேன்.

 34. // நான் என்றுமே எனது தாய் நாட்டுக்கு துரோகமாக செயல்பட மாட்டேன். என் இறைவன் மீது ஆணை.//

  எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், ‘ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தனர்’ என்றும், ‘ஆதி தமிழர்களின் மதம் இந்து மதம் அல்ல’ என்றும் வலைப்பூக்களில் வலிந்து எழுதுவது நாட்டுக்குச் செய்யும் துரோகமே.

  //… எனது கையையும் காலையும், நாவையும் துண்டிக்க எவனாவது வருவானாகில் …//

  என்ன ஓவரா react பண்ணறீங்க? நான் சொன்னதற்கு அர்த்தம், “தேச விரோதக் கருத்துக்கள் இனி ஊடகங்களில் ஆணித்தரமான ஆதாரத்துடன் முறியடிக்கப்படும்.” என்பது.

  உங்களைப் போல “ஹிந்து மதம் தீயது, பக்தி மார்க்கம் தீயது, வைதிகச் சடங்குகள் மூடத்தனத்தை வளர்க்கும், ” என்று இப்போது பேசும் தேச விரோதிகள் வாய் திறக்க முடியாதபடி வாதம் செய்வோம், கையால் எழுதி மறுக்கவும் இயலாத வஜ்ராயுதத்தைப் போன்ற ஆதாரங்களை முன்வைப்போம், மேடையில் நின்று பேசினால் ஊடகங்களில் சுட்டிக் காட்டி கேலி செய்வோம். இதைத் தான் சொல்ல வருகிறேன்.

  அபவாதத்தை வாதத்தால் வெல்வோம். ஹிந்து மதத்தின் மேன்மையைக் காட்டுவோம். அத்துடன் எங்கள் தெய்வ உருவங்களைப் பொது மேடைகளில் கேலி செய்தால், பண்பாடான முறையில், அளவான சொற்களால் அப்பிரச்சாரத்திலுள்ள பொய்களைச் சுட்டிக் காட்டி, அத்துடன் ஆபிரகாமிய மதங்களையும் அம்மதங்கள் காட்டும் மனநிலை பற்றிய உண்மைகளையும் பொதுஜனங்களுக்கு மத்தியில் அம்பலப்படுத்துவோம்.

  “இந்து மதத்திலிருந்து இஸ்லாம்/கிறித்துவத்திற்கு மதம் மாற நினைக்கும் நண்பர்களுக்கு மறுபரிசீலனை செய்யும்படி ஒரு விண்ணப்பம்” என்ற தலைப்பில் பண்பாடான முறையில் சிந்திக்கவைக்கும் பல புத்தகங்களையும் எழுதி இலவசமாகப் பரப்புவோம்.

 35. அத்விகா, // தங்களின் கடிதத்தின் கடைசி வரியை தாங்களே மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். //

  பொன். முத்துக்குமார்

  //
  இருக்கலாம், ஆனால் அனைவருக்கும் இது தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்கவியலாது அல்லவா ? நீங்கள் குறியீட்டுரீதியாகத்தான் இவ்வாறு கூறுகிறீர்கள் என்பதை என்னைப்போன்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படியாக அடைப்புக்குறிக்குள் மேற்கண்ட விளக்கத்தை சுருக்கமாக குறிப்பிட்டிருக்கலாம்.

  வெறுமனே ’கரங்களும் கால்களும் நாவும் இனி துண்டிக்கப்படும்’ என்று படிக்கும்போது அதிர்ச்சியைத்தான் அளிக்கிறது.
  //

  இருவருக்கும்… சரி… ஒ.கே. இனிமேல் தெளிவாக எழுதுகிறேன். நான் எழுதியதைக் கண்டு இந்துக்களோ முஸ்லீம் நண்பர்களோ மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

  வன்முறையைத் தான் வன்முறையால் எதிர்க்க வேண்டும். எழுத்தையோ பேச்சையோ (எவ்வளவு புண்படும்படி அநாகரீகமாக இருந்தாலும்) வன்முறை அதற்கு பதில் அல்ல. முன்பே என் நிலை அப்படித் தான். தெளிவுபடுத்துகிறேன்.

 36. // வன்முறையைத் தான் வன்முறையால் எதிர்க்க வேண்டும். //

  இதுவும் சட்டரீதியில் (சட்டத்தைக் கையில் மக்கள் எடுக்கக் கூடாது) என்று மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.

 37. \\ இருவருக்கும்… சரி… ஒ.கே. இனிமேல் தெளிவாக எழுதுகிறேன். நான் எழுதியதைக் கண்டு இந்துக்களோ முஸ்லீம் நண்பர்களோ மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன். \\ இதுவும் சட்டரீதியில் (சட்டத்தைக் கையில் மக்கள் எடுக்கக் கூடாது) என்று மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். \\

  அன்பின் கந்தர்வன், விதிவிலக்காக நாம் சொல்ல வரும் கருத்துக்களை நமது எழுத்துக்கள் முறையாக ப்ரதிபலிக்காது பிறழ்வது சாத்யமே. அது சுட்டப்பட்ட பின்னர் வருத்தம் தெரிவிப்பது கண்யத்திற்கு அழகு. Hats Off!!!!

 38. \\ என் மீது அபாண்டமாக பழி சுமத்திய அந்த கும்பலின் இரண்டு மூன்று தலைகளை கீழே சாய்த்து விட்டுத்தான் எனது தலை சாயும். அத்தகைய வீரத்தையும் விவேகத்தையும் இஸ்லாம் எனக்கு நிரம்பவே தந்திருக்கிறது. ‘நிறை குடம் தளும்பாது’ என்றும் சொல்லி வைக்கிறேன். \\

  ஜெனாப் சுவனப்ரியன், கண்யமாகக் கருத்துப் பகிர்வதில் ஆதர்சமானவர்களுள் ஒருவராக நான் கருதுவது தங்களை. ஸ்ரீமான் கந்தர்வன் தன்னுடைய சொற்றொடருக்கு விளக்கம் அளித்தபின்னரா அல்லது முன்னரா தங்களது விளக்கங்கள் தெரியவில்லை. மேற்கண்ட தங்களது கருத்துக்கள் தங்களது பொதுவில் பகிரப்படும் கருத்துக்களிலிருந்து விதிவிலக்காக வன்முறை சார்ந்தது என்று புரிந்து கொள்கிறேன்.

  கருத்து வேறுபாடுடையவர்களின் கருத்துக்களினூடே கருத்தொற்றுமைகளும் அவ்வப்போது காணக்கிட்டுவது பண்பான சம்வாதங்களின் பயன்.

  சித்தாந்த ரீதியாக ஆப்ரஹாமியம் எனக்கும் என்னைப்போன்ற பல ஹிந்து சஹோதர சஹோதரியருக்கும் ஏற்புடையதல்ல. அரசியல் சாஸனத்தை வடிவமைத்த சான்றோர்களின் பரிந்துரைகளை அமல் செய்வதை தேசத்துக்குக் கேடு என்று இழித்துரைப்பதும் எங்களுக்கு ஏற்புடையதல்ல.

  கருத்து வேற்றுமைகளை மூடி மறைக்காது கண்யத்துடன் அவற்றைப் பகிர்ந்து கருத்தொற்றுமைகளின் மூலம் கரம் கோர்த்து தேசத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம். தொடர்ந்து ஒத்த மற்றும் மாறுபட்ட கருத்துக்களை பகிருவோமாக.

  குதா ஹாஃபீஸ்

 39. திருவாளர் சுவனப்பிரியன் ஒன்றை கவனிக்க வேண்டும். இங்கு,

  // சுவனப்பிரியன் போன்றவர்களின் கரங்களும் கால்களும் நாவும் இனி துண்டிக்கப்படும்.//

  என்று கர்மணி பிரயோகத்தில் (passive வாய்ஸ் – இல்) தான் எழுதியிருந்தேன். எதற்கென்றால் வன்முறையை ஆதரிப்பவனல்ல, இது ஒரு சுருக்கமான குறியீடுதான் என்று புரிந்துக் கொள்வதற்காக. (அதுவும் சரிவரவில்லை என்று புரிந்துக் கொண்டேன்).

  “ஹிந்து நண்பர்கள் அவர்களின் அங்கங்களை வெட்டி விடுவார்கள்” என்றோ, “ஹிந்துக்கள் அவர்களின் அங்கங்களை வெட்டட்டும்” என்றோ, “நாங்கள் வந்து வெட்டுவோம்” என்றோ (நீங்கள் எழுதியது போல) எழுதவும் என் கை கூசும்.

  இப்படி இருக்கையில், நான்கு ஹிந்து நண்பர்கள் என் வார்த்தையை அதற்குள் கண்டித்து விட்டனர். எதுவும் செய்யவில்லை. எழுதினேன். அதுவும் passive voice-இல், குறியீடாக.

  இப்படி நீங்களும் உங்களுடைய இஸ்லாமிய நண்பர்களும் ஒன்று சேர்ந்து என்றைக்காவது வஞ்சொற்களைப் பேசும் இஸ்லாமியரையோ, ஏன், நேரே வன்முறை செய்யும் இஸ்லாமிய தீவிரவாதிகளையோ கண்டித்ததுண்டா?

  இந்த ஒரு நிகழ்ச்சி போதுமே. இந்தியாவில் வன்முறையும் மதக்கலவரமும் வந்தால் யார் காரணமாக இருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள.

 40. நமது அரசியல் சட்டத்தின் ‘ டைரெக்டிவ் ப்ரின்சிபில்ஸ் ஆப் ஸ்டேட் பாலிசி ‘- அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டி நெறிகள் மிக நீண்ட விவாதத்துக்குப் பின்னரே நமது அரசியல் அமைப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்டவை. அதில் சொல்லப்பட்டுள்ளவற்றுக்கு எதிர்ப்புதெரிவிப்போர் ஒன்று புரியாத மனிதர்கள் அல்லது வக்கிரம் பிடித்த கேடர்கள். மனித இனம் உலகெங்கும் ஒன்றே. ஒரு இனம் உயர்ந்தது மற்ற இனங்கள் தாழ்ந்தவை என்று போதிக்கும் எந்த மதமும் இந்த பூமியில் இருக்க முடியாது. அவனவன் வழி அவனவனுக்கு . தனது வழியில் உள்ள குறைகளை கவனித்து செப்பனிடும் ஆற்றல் எல்லோருக்கும் உண்டு. பிறரைப் பற்றி விமரிசிக்க யாருக்கும் அருகதை கிடையாது.

  ஆனால் ஆபிரகாமியக் காடையர்களைப் பற்றி உலகெங்கும் மிக கடுமையான விமரிசனங்கள் வருவதற்கு காரணம் அவர்களின் கொலைவெறியும், பெண்களுக்கு போடும் முகத்திரையும், பெண்களை ஆணுக்கு அடிமையாக கருதும் போக்கும் ஆகும்.மதமாற்றப் பைத்தியக்காரத் தனங்களை விட்டொழித்து, ஆணுக்கு பெண் சமம் என்று அறிவித்தால், அவர்கள் பூமியில் எங்கும் வாழலாம். இல்லை என்றால் இந்த பூமியில் அவர்களுக்கு இடம் இல்லை. திரு சுவனப்பிரியன் அவர்கள் கூட ஷியாக்களைப் பற்றி மிகவும் அவதூறாக சொல்லி பல மறுமொழிகளை வெளியிட்டுள்ளார். சன்னிகளும், ஷியாக்களும் ஒருவர் யோக்கியதையைப் பற்றி மற்றவர் செய்யும் கடுமையான விமரிசனங்களை யூ டியூபில் ஏராளம் காணலாம். இந்த இன்டர்நெட் யுகத்தில் , இனிமேலும் எங்கள் மத நூலில் அப்படி சொல்லியிருக்கு, இப்படி சொல்லியிருக்கு என்று பொய் பித்தலாட்டங்களை யாரும் அவிழ்த்துவிடமுடியாது. ஆபிரகாமியத்தின் உண்மைகளை அறிய அனைவரும் இறையில்லாஇஸ்லாம், செங்கொடி, பைத் ப்ரீடம் இன்டர்நேஷனல்,pagadhu .blogspot – tamil .alisina .org. ஆகிய தளங்களைப் படித்து தெளிவு பெறலாம். கடவுள் பெயரால் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வோரை , இந்த உலகின் எந்தமூலையில் இருந்தாலும் அனைவரும் சேர்ந்து கண்டிப்போம்.

 41. திரு.அத்விகா

  //ஆனால் இந்திய அரசியல் அமைப்பினைப் பற்றி தாங்கள் வெளியிட்டுள்ள கருத்து அபாயகரமானது. அரசியல் அமைப்பில் உள்ள எந்த ஷரத்தினையும் மாற்றுவதற்கு நமது பார்லிமெண்டுக்கு மட்டுமே உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.//

  மன்னிக்கவும், நான் எந்த அபாயகரமான கருத்தையும் வெளியிடவில்லை. எந்த முடிவு எடுத்தாலும் அது ஜனநாயக பூர்வமானதாக இருக்க வேண்டும். அது தான் அறம் சார்ந்த அரசியல் நெறி. இந்தியா என்பது ஒற்றை மொழி, கலாச்சாரத்தால் பின்னப்பட்ட நாடல்ல, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு. ஒரு இனமானது தனக்கான உரிமைகளை நிர்ணயித்து கொள்ள அந்தந்த தேசிய இனம் தான் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும். அதுதான் நியாயாம்.

  //அது சரி இவ்வளவு தவறாக வழி நடத்தும் தங்களுக்கு ஒரு கேள்வி- ஆந்திர மாநிலத்தை இரண்டாகப்பிரித்த காங்கிரசுக்காடையர்கள் அந்த மாநில மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியா இரண்டாகப் பிரித்தார்கள்? //

  நீங்கள் கேட்பது ஈழ தமிழ் மக்களுக்கு தனி ஈழம் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா என்று சிங்களர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுவது போன்று இருக்கிறது. காங்கிரஸ் அரசு தெலுங்கான மாநிலத்தை சும்மா ஒன்றும் தூக்கி கொடுத்து விடவில்லை.தனி தெலுங்கான என்பது தெலுங்கான மக்களின் நீண்ட கால வீரம் செறிந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

  தங்கள் பகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் ஒரு முன்னேற்றமும் செய்து தராமல் காலம் காலமாக அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தெலுங்கான பகுதியில் உள்ள இயற்க்கை கனிம வளங்களை சுரண்டி கொழுத்து கொண்டிருந்த ஆந்திரா ரெட்டி,நாயடுகளிடம் இருந்து தங்கள் மண்ணை மீட்ட ஒரு மாபெரும் போராட்டம் தனி தெலுங்கானா போராட்டம். யாரிடம் இருந்து பிரிந்து போக விரும்புகிறார்களோ அவர்களிடமே போய் வாக்கெடுப்பு நடத்து என்று தாங்கள் கூறுவது நகைப்புக்கு இடமாக இருக்கிறது. காங்கிரஸ் அரசு தெலுங்கான மாநிலத்தை சும்மா ஒன்றும் தூக்கி கொடுத்து விடவில்லை.

  //ஒரு அதிகாரத்தை யார் வழங்குகிறார்களோ அவர்கள் மட்டுமே அந்த அதிகாரத்தை திரும்பப் பெறமுடியும். அதிகாரத்தை கொடுக்க முடியாதவர்கள், எந்த அதிகாரத்தையும் திரும்பப் பெறமுடியாது. //

  முதலில் தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து அதிகாரங்களை குவிப்பதில் தான் இந்திய அரசு தன்முனைப்பாக இருக்கிறது. அந்தந்த மாநிலங்களின், தேசிய இனங்களின் சுயஉரிமையை, பண்பாட்டை அங்கிகரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிற்க்கு என்று சொந்தமாக ஐ.நாவால் அங்கீகரிக்க பட்ட தனி வெளியுறவு அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். அனைத்து உலக தமிழர் பிரச்சனைகளுக்கும் இந்தியவின் காலில் சென்று விழுந்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் உலகின் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்வதால் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தமிழ்நாட்டிற்கான தனி வெளியுறவு கொள்கை நிச்சயம் இது உறுதுணையாக இருக்கும்.

  ஒரு மனசாட்சியுள்ள இந்துவாக ஜனநாயக பூர்வமான முறையில் என்னுடைய மேற்படி கருத்தை நான் பதிவு செய்கிறேன்…

 42. திரு கந்தர்வன் அவர்களின் அன்பான் கவனத்திற்கு: பொதுவாக இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதைத்தான் கேட்டு இருக்கிறோம். அந்த நிலை இப்போது மாறி வருகிறது. ஆர். சீமா ஜபீன் என்ற முஸ்லிம் சகோதரி (திருமுடிவாக்கம்- சென்னை) என்பவர் இந்துவாக மாறி திருமதி சீமா குமார் என்று தன பெயரை மாற்றி கொண்டார்.(ஆதாரம்:- இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 11-5-2014) அவருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த trend தொடர வேண்டும் உங்களுக்கும் திரு சுவனபிரியனுக்கும் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்த subject ::- Common Civil Code மற்றும் Article 370.

  Article 370 (Chapter XXI ) என்பது ஒரு temporary provisions ஆகும். 23-11-1963 அன்று பாராளுமன்றத்தில் “தற்காலிகமான இது விரைவில் நீக்கப்படும்” என்று நேரு பெருமகனார் கூறினார். 60 ஆண்டுகள் ஆகியும் அது நீக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் vote Bank அரசியலை நடத்தும் sickularists (NOT Secularists) என்று தம்மை கூறிகொள்ளும் காங்கிரஸ் கயவாளிகல்தான். அந்த கயவாளிகள் இப்படி ஒரு கேவலமான தோல்வியை சந்தித்த பின்னர் ” இந்த படுதோல்விக்கு காரணம் பிஜேபி யின் பிரித்திடும் பிரச்சாரமே (=polarising campaign ) ஆகும் என்று கூறுகின்றனர். அது உண்மைதான். பிஜேபி காங்கிரஸ் கட்சியை மக்களிடமிருந்து பிரிக்கும் பிரச்சாரத்தை செய்தனர். அதைத்தான் அவர்கள் சொல்கின்றனர்.

  அடுத்து பொது சிவில் சட்டத்திற்கு வருவோம். அரசியலமுப்பு சட்டத்தின் Article 44 “இந்தியா முழுவதும் குடிமக்களுக்கு ஒரு சீரான சிவில் சட்டம் கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும்” என்று கூறுகிறது இப்போதும் கோவா மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமுலில் உள்ளது. துனிசியா மற்றும் துருக்கி ஆகிய 2 நாடுகளில் Polygamy ஒழிக்கப்பட்டுள்ளது. 1961 ல் பாகிஸ்தானிலும் 1970 களில் ஈரான், தெற்கு ஏமன் ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் பெர்சனல் law திருத்தப்பட்டன.

  இந்த கேடுகெட்ட போலி மதவாதிகள் ஒழிந்தால்தான் இந்த நாடு செழிப்புறும் இந்த category யில் கருணாநிதி வருகிறார். இவர் ரம்ஜான் நேரத்தில் குல்லாய் போட்டுகொண்டு கஞ்சி குடிப்பார். முஸ்லிம்களுக்கு வாழ்த்தும் சொல்வார். ஆனால் கோவிலுக்கு சென்றால் திருநீறு கொடுத்தால் அதை கீழே கொட்டிவிடுவார். தீவாளி வந்தால் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லமாட்டார். விளக்கம் கேட்டால் அது தமிழர் பண்டிகை இல்லை என்பார்.அப்படியானால் பக்ரித் பண்டிகை தமிழர் பண்டிகையா? தொல்காபியர் காலத்திலிருந்தே அதை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனரா? இன்னு விளக்கம் கேட்டால் தீபாவளி ஒரு மூடநம்பிக்கைகள் கொண்ட பண்டிகை என்று சொல்வார். அப்படியானால் பக்ரித் பண்டிகை எத்தன அடிப்படையில் கொண்டாடபடுகிறது. அல்லாவின் கட்டளைக்கிணங்க ஒரு மலைக்கு அழைத்து சென்று தன மகனை வெட்டபோனபோது அந்த இடத்தில் ஒரு ஆடு (=பக்ரி) வெட்டப்பட்டு இருக்கிறது. மகன் வேறு ஒரு இடத்தில் நிற்கிறான். இது என்ன மந்திரவாதி மாயாஜால வேலை? இதை பகுத்தறிவு உள்ள கருணாநிதி ஏற்றுகொள்கிறாரா? இல்லை என்றால் அவர் எதற்கு பக்ரித் அன்று “தியாக திருநாள்” என்று கூறி வாழ்த்துகிறார்?

 43. திரு அரிசோனன்!

  //நீங்களாகவே பசுவதை வேண்டாம் என்று சொல்லிப் பாருங்கள், ஒவ்வொரு இந்துவும் உங்களை உயர்வாகப் போற்றுவான்.//

  எங்கள் வீடுகளில் பசு மாமிசம் சாப்பிடுவதில்லை. ஆடு, கோழி, மீன் போன்றவைகளே சமைக்கப்படுகின்றன. மாட்டுக் கறியை சமைப்பதை பலரும் தவிர்த்தே வந்துள்ளனர். எங்கள் வீடுகளில் ‘மாட்டுக் கறி’ என்று சொல்வதற்கு பதில் ‘பெரிய ஆட்டுக் கறி’ என்று அதனை மறைமுகமாக சொல்வார்கள். இந்துக்கள் மனம் புண்படக் கூடாது என்பதனால்தான் இந்த சொற்பிரயோகம். எங்கள் ஊரில் கறி மார்க்கெட்டில் ஆட்டுக் கறி மட்டுமே கிடைக்கும். மாட்டுக் கறி வேண்டுமென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமத்தை யொட்டிய மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். ஏனெனில் மாட்டுக் கறியை அவர்கள் தான் விரும்பி சாப்பிடுகின்றனர். விலையும் மலிவு.

  அடுத்து மாடு பாலும் தரவில்லை. இனி கன்றும் ஈனாது. கிழடாகி விட்டது. இந்த நேரத்தில் அதனை பராமரிக்கும் ஒரு ஏழை என்ன செய்வான். அது தானாக இறக்கும் வரை அதற்கு தீனி போட ஒரு ஏழை விவசாயியால் முடியுமா? எனவே அதனை கசாப்பு காரனிடம் விற்று விட்டு மேற்கொண்டு பணம் போட்டு புதிய மாட்டை வாங்குகிறான். இதைத் தவிர வேறு வழியும் அவனுக்கு இல்லை இவ்வாறு விற்பதை தடை செய்ய வேண்டு மென்றால் அந்த அடி மாடுகளுக்கான தீர்வை சொல்லுங்கள்.

  //ஏசு கிறிஸ்து, “Give unto Romans what is due unto them!” என்றுதான் சொல்லி இருப்பதாக விவிலிய நூல் கூறுகிறது. மேலும் நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியதாக்கவும்தான் நான் படித்திருக்கிறேன்.//

  ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
  ஆதாரநூல்: அஹ்மத்

  இந்த நபி மொழியானது இனத்தின் பெயரால், குலத்தின் பெயரால், நாட்டின் பெயரால் தான் சார்ந்திருக்கும் நாட்டையும் சமூகத்தையும் நேசிக்கச் சொல்கிறது. அநீதிக்கு துணை போனால் அதுதான் இனவெறி என்பதை விளங்குகிறோம். எனவே எந்த முஸ்லிமாவது தனது தாய் நாட்டுக்கு துரோகம் இழைத்தால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனாகிறான்.

  “இறைவனை பயந்து கொள்ளுங்கள்! உங்களுடைய தலைவருக்கு கட்டுப்படுங்கள்! அவர் அபிஷீனிய அடிமையாக இருப்பினும் சரியே!”
  அறிவிப்பவர் இர்பால் (ரலி) அவர்கள். ஆதார நூல்: ஸூனன் அபீதாவூத் – 4490 – ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).

  ஆப்ரிக்க அடிமை உங்களின் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவரின் கட்டளைக்கு கீழ்படியுங்கள் என்பது முகமது நபியின் அறிவுரை. இதன்படி ஆட்சித் தலைவராக மோடி இருந்தாலும், ஜெயலலிதா இருந்தாலும் அந்த தலைமைக்கு கட்டுப்பட வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. ஒரு ஆட்சியாளன் தனது கடமையிலிருந்து தவறினால்தான் அதனை எதிர்க்க இஸ்லாம் சொல்கிறது. எனவே ஒரு உண்மையான முஸ்லிம் தாய் நாட்டையும், இந்த மக்களையும், ஆட்சியாளர்களையும் மதிக்கவே செய்வான்.

 44. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

  \\\ நீங்கள் கேட்பது ஈழ தமிழ் மக்களுக்கு தனி ஈழம் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா என்று சிங்களர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுவது போன்று இருக்கிறது. \\\\

  பிரிவினை வாதம் என்ற தேச த்ரோஹச் சொல்லுக்கு இடதுசாரிகளின் கவர்ச்சிகரமான உடையான தேசிய இனம் என்பதை அணிவிப்பதால் அதன் அவலமும் அசிங்கமும் மிகைப்படத் தெரியுமே அல்லாது அசிங்கங்கள் அறம் ஆகாது. ஆகவே ஆகாது

  \\ தெலுங்கான பகுதியில் உள்ள இயற்க்கை கனிம வளங்களை சுரண்டி கொழுத்து கொண்டிருந்த ஆந்திரா ரெட்டி,நாயடுகளிடம் இருந்து தங்கள் மண்ணை மீட்ட ஒரு மாபெரும் போராட்டம் தனி தெலுங்கானா போராட்டம். \\

  ரெட்டி, நாயுடுக்கள் தனி தேசிய இனம். அந்த இனம் கம்மவார் இத்யாதி தேசிய இனங்களை நசுக்கியதால் கம்மவார் இனத்தினர் போராடி தெலுங்கானா என்ற தனி மாகாணம் அமைத்துள்ளனர் என்பது தங்களது தேசிய இனம் பற்றிய புரிதல். சபாஷ்.

  தமிழகத்தில் த்ராவிட மடத்தின் அதிபதியான கருணாநிதித் தம்பிரானும் அவர் தம் அடிப்பொடிகளும் இதே போன்று தமிழகத்தில் பற்பல தேசிய இனங்களைச் சுரண்டி வருவதால், ஏற்கனவே வன்னிய நாடு அன்னியருக்கில்லை என்ற பழைய கோஷத்தை உடைய வன்னிய தேசிய இனத்தினர் தமிழகத்தை சிதைத்து அதில் இருந்து வன்னிய நாடு என்று ஒன்று உருவாக்கினால் நீங்கள் சந்தோஷப்படுவீர்களா? அபத்தத்திற்கும் ஒரு எல்லை உண்டு.

  இது போன்ற அபத்தப்பிரிவினை வாதங்கள் தேசத்தை துண்டு துண்டாக்க விழையும் ஆப்ரஹாமிய பயங்கரவாத சக்திகளின் செயல்முறை. அவ்வளவே. நாயுடு, ரெட்டி, கம்மவார் போன்ற உங்களது கந்தறகோள தேசிய இன உதாரணமே — இது தேசத்தைப் பிளக்கும் ஒரு செயல்முறையின் நரித்தனமான அடிப்படையற்ற கோட்பாடு என்பதை பறைசாற்றுகிறது என்றால் மிகையாகாது.

  தெலுங்கானா மாகாணத்தை ஆந்திரத்திலிருந்து பிரித்ததை பாஜக கட்சியே ஆதரித்திருந்தாலும் தேசிய வாதத்தில் நாட்டம் உள்ள பிரிவினை வாதத்தில் அருவருப்பு உள்ள எனக்கு உடன்பாடு இல்லை.

  காஷ்மீரம் என்ற பகுதியில் உள்ள ப்ரச்சினை பல பரிமாணங்களை அடக்கியது. அதைப்பற்றிய முழு புரிதல் இல்லாமல் தேசிய இனம் என்ற பிரிவினை வாதப் பதத்தை வைத்து சொற்சிலம்பம் ஆடி ஹிந்துஸ்தானத்தை பிளக்க முனைபவர்களுக்கு தூபம் போடுவது ஜனநாயகம் இல்லை. அறம் இல்லை. பச்சை தேச த்ரோஹம். பிரிவினை வாதம்.

  உங்களது வாதம் :-

  \\ நீங்கள் கேட்பது ஈழ தமிழ் மக்களுக்கு தனி ஈழம் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா என்று சிங்களர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுவது போன்று இருக்கிறது. \\

  காஷ்மீர ப்ரச்சினையில் பல பரிமாணங்கள் இருந்தாலும் உங்களுக்கும் தெரிந்த ஒரே ஒரு பரிமாணத்தை முன் வைக்கிறேன்.

  காஷ்மீரத்தில் இருந்த ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாமிய மதவெறியாளர்கள் மதவெறியாலும் வன்முறையாலும் காஷ்மீரை விட்டு விரட்டியது சரித்ரம்.

  ஈழத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இதே இஸ்லாமிய மதவெறியர்கள் பலர் சிங்கள பௌத்த மதவெறியர்களுடன் கரம் கோத்து ஈழத்துச் சிவாலயங்களை தகர்த்து நொறுக்கியது இந்த தளத்தில் ராஜ் ஆனந்தன் அவர்களால் பதியப்பட்டுள்ளது.

  இஸ்லாமிய மதவெறியர்கள் ஈழத்துச் சிவாலயங்களை சிதைத்து நொறுக்கியதை ஈழத்து இஸ்லாமிய மதவெறியர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதால் — நீங்கள் குதூஹலித்து மகிழ்கிறீர்களா?

  இப்படிச் சைவத் தமிழர்களை வெளியேற்றி விட்டு தமிழ் பேசும் ஈழத்து இஸ்லாமிய பயங்கரவாதிகளும் சிங்கள பௌத்தர்களும் ஜனநாயக முறைப்படி அங்கு தேர்தல் நடத்தி தமிழர்களை அடக்கி ஒடுக்குவதை — ஜனநாயகம் என்று நீங்கள் மகிழலாம். சைவத்தில் பற்றுள்ள தமிழில் பற்றுள்ளவர்கள் மகிழ முடியாது.

  ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் என்ற பெயரின் பின்னே நடந்த பயங்கரங்களை மனதில் வைத்து நான் மகிழ மாட்டேன்.

  மாறாக நிலைமையை சரி செய்ய அந்தப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களின் சிவாலயங்களை புனருத்தாரணம் செய்ய தமிழ் பேசும் ஹிந்து மக்களை அங்கு மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அதே தான் காஷ்மீரத்தின் நிலைமையும். அங்கு வாழ்ந்த அனைத்து ஹிந்துக்களையும் விரட்டி விட்டு அவர்களுடைய சொத்துக்களை மற்றும் நிலம் நீச்சுகளை பிடுங்கிக் கொண்ட இஸ்லாமிய பிரிவினைவாதிகள் — இன்று தனி நாடு கேழ்ப்பார்களாம். அவர்கள் தேசிய இனமாம். இந்த பிரிவினை வாதிகளின் பேச்சைக் கேட்டு ஹிந்துஸ்தானத்தைப் பிளப்பது அறமாம்.

  ஈழமாகட்டும், காஷ்மீரமாகட்டும் அல்லது குஜராத் ஆகட்டும். அறம் என்பது அப்பாவி மக்களை — அவர் எந்த மொழி பேசுபவர்களானாலும் எந்த மதத்தைச் சார்ந்தவர்களானாலும் — ஹிம்சிப்பதை முனைந்து எதிர்ப்பது. தீமையை ஒழித்து நன்மையை நிலை நாட்டுவது.

  பச்சையான பிரிவினை வாதத்தை பச்சையான தேச த்ரோஹத்தை — உள்ளீடற்ற — அடிப்படையற்ற – பொருளற்ற — *தேசிய இனம்* என்ற கவர்ச்சியான சொல்லில் அடக்கி அதை அறம் என்று சாதிக்கும் அவலக் கருத்தாக்கங்களை அவுணரை அழித்த எங்கள் வெற்றிவேல் பெருமான் கருவருக்கட்டும்.

  சொலற்கறிய திருப்புகழை உரைத்தவரை
  அடுத்த பகை அறுத்தெறிய உருக்கியெழும்
  அறத்தை நிலை காணும்.

  வேலும் மயிலும் சேவலும் துணை.

 45. திரு அரிசோனன்!

  //அல்லாவின் கட்டளைக்கிணங்க ஒரு மலைக்கு அழைத்து சென்று தன மகனை வெட்டபோனபோது அந்த இடத்தில் ஒரு ஆடு (=பக்ரி) வெட்டப்பட்டு இருக்கிறது. மகன் வேறு ஒரு இடத்தில் நிற்கிறான். இது என்ன மந்திரவாதி மாயாஜால வேலை? இதை பகுத்தறிவு உள்ள கருணாநிதி ஏற்றுகொள்கிறாரா? இல்லை என்றால் அவர் எதற்கு பக்ரித் அன்று “தியாக திருநாள்” என்று கூறி வாழ்த்துகிறார்?//

  தவறாக வரலாற்றை பதிவு செய்கிறீர்கள். அந்த காலத்திய மக்களிடம் மனிதர்களை இறைவனுக்கு பலியிடும் தவறான வழக்கம் இருந்து வந்தது. (, ஆப்ரிக்க நாடுகளில் இன்றும் இந்த பழக்கம் மறைமுகமாக நடைபெறுகிறது). இதனை ஒழித்துக் கட்ட நினைத்த இறைவன் இறைத் தூதரான ஆப்ரஹாமுக்கு மகனை அறுத்துப் பலியிடுமாறு கனவில் கட்டளையிடுகிறான். தனது மகனிடம் தான் கண்ட கனவை கூறுகிறார் ஆப்ரஹாம். அதற்கு மகன் இஸ்மாயீல் ‘தந்தையே! உங்களுக்கு கட்டளையிடப்பட்டதை செய்து முடியுங்கள். இறைவன் நாடினால் என்னை பொறுமையாளனாகக் காண்பீர்கள்’ என்றார். (குர்ஆன் 37:103) தனது பெற்ற ஒரே மகனை அழைத்துக் கொண்டு பலியிடும் இடத்திற்குச் செல்கிறார் இறைத் தூதர். மகனை பலியிடுவதற்கும் தயாராகிறார். அப்போது இறைவன் ‘உமது கீழ்படிதலை மெச்சினோம். நல்லோர்களை இவ்வாறே சோதிப்போம். உமது மகனுக்கு பதில் அதோ ஒரு ஆடு வருகிறது. அதனை அறுத்து பலியிடுவீராக’ என்று இறைவன் கூறுகிறான். அதன்படி ஆட்டை அறுத்துப் பலியிடுகிறார். அதனை ஒரு கட்டாயக் கடமையாகவும் இஸ்லாத்தில் ஆக்கி அது இன்று வரை தொடர்கிறது. அன்று முதல் மனிதர்களை பலியிடும் பழக்கம் ஒழிந்து போனது. பலியிடப்படும் அந்த இறைச்சிகளும் ஏழைகளுக்கு பங்கு வைத்து கொடுக்கப்படுகின்றன. அன்று ஆப்ரஹாம் தனது இறைக் கட்டளையை எந்த மறுப்பும் சொல்லாமல் நிறைவேற்றியதை நினைவு கூறும் முகமாகவே ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் மிருகங்களை அறுத்து பலியிடுகிறார்கள். இதிலும் நன்மையடைவது ஏழைகளே! இந்த சரித்திர இடங்கள் இன்றும் மெக்காவில் உள்ளது.

 46. அறம் வளர்க்கும் அன்பார்ந்த கிருஷ்ண குமார் அவர்களுக்கு…

  //பிரிவினை வாதம் என்ற தேச த்ரோஹச் சொல்லுக்கு இடதுசாரிகளின் கவர்ச்சிகரமான உடையான தேசிய இனம் என்பதை அணிவிப்பதால் அதன் அவலமும் அசிங்கமும் மிகைப்படத் தெரியுமே அல்லாது அசிங்கங்கள் அறம் ஆகாது. ஆகவே ஆகாது//

  தனி ஈழம் என்கிற பிரிவினை வாதத்தில் தங்களுக்கு என்ன அசிங்கம் தெரிகிறது என்று கூறவும். “தேசிய இனம்” என்கிற வரையறை எந்த வகையில் ஏற்புடையதல்ல என்பதையும் கூறவும். மேலும்,நான் காஷ்மீர் தனி நாடாக பிரிந்து போக உரிமை அளிக்க வேண்டும் என்று எங்கும் கூறவில்லை. 370 வது பிரிவை நீக்கவோ மேற்கொண்டு நடைமுறை படுத்தவோ அம்மாநில மக்களின் ஒப்புதல் பெற்றே தான் செய்ய வேண்டும். அதில் மாற்று கருத்திற்கு இடமில்லை.

  //ரெட்டி, நாயுடுக்கள் தனி தேசிய இனம். அந்த இனம் கம்மவார் இத்யாதி தேசிய இனங்களை நசுக்கியதால் கம்மவார் இனத்தினர் போராடி தெலுங்கானா என்ற தனி மாகாணம் அமைத்துள்ளனர் என்பது தங்களது தேசிய இனம் பற்றிய புரிதல். சபாஷ்.//

  தெலுங்கான போராட்டத்தை நான் தேசிய இன பிரச்சனையாக கூறவில்லையே.. அது இரு வேறு வர்க்கங்களுக்கு இடையில் நடக்கும் மாநில பிரச்சனை. நீங்களாக ஒன்றை புரிந்து கொண்டால் அதற்க்கு நான் என்ன செய்ய முடியும்.

  //தமிழகத்தில் த்ராவிட மடத்தின் அதிபதியான கருணாநிதித் தம்பிரானும் அவர் தம் அடிப்பொடிகளும் இதே போன்று தமிழகத்தில் பற்பல தேசிய இனங்களைச் சுரண்டி வருவதால்…//

  தமிழ்நாட்டில் தேசிய இனமா? ஒ.. நீங்கள் சாதிகளை சொல்கிறீர்களா. வன்னியர்,வேளாளர், பார்பனர்,முக்குலத்தோர் போன்றவர்கள் உங்கள் பார்வையில் தேசிய இனங்களா. சத்தியமா சிரிப்பு தாங்க முடியவில்லை. இதற்க்கு தங்களின் மணிப்ரவாள நடையே தேவலாம்.

  //காஷ்மீரத்தில் இருந்த ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாமிய மதவெறியாளர்கள் மதவெறியாலும் வன்முறையாலும் காஷ்மீரை விட்டு விரட்டியது சரித்ரம்.//

  இந்துக்களை விரட்டியது குற்றம் தான். அதற்க்கான காரணங்களை கண்டறிந்து காஷ்மீரி இஸ்லாமியர்களை சமாதான படுத்தி அவர்களின் இடத்தில் அவர்களை மீண்டும் குடியமர்த்த வழி செய்ய வேண்டும்.. இதனோடு ஈழ பிரச்னையை முடிச்சு போட வேண்டாம். காஷ்மீர் வாழ் இசுலாமிய மக்களுடன் இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களை ஒப்பிட வேண்டாம். காஷ்மீர் மக்கள் ஈழ போராட்டத்தை வெகுவாக ஆதரிக்கிறார்கள்.

  //பச்சையான பிரிவினை வாதத்தை பச்சையான தேச த்ரோஹத்தை — உள்ளீடற்ற — அடிப்படையற்ற – பொருளற்ற — *தேசிய இனம்* என்ற கவர்ச்சியான சொல்லில் அடக்கி அதை அறம் என்று சாதிக்கும் அவலக் கருத்தாக்கங்களை அவுணரை அழித்த எங்கள் வெற்றிவேல் பெருமான் கருவருக்கட்டும்.//

  தேசிய இனம் என்றால் உங்கள் அகராதியில் தேச துரோகம் என்று பொருளா. சபாஷ். நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இந்தியா என்பது பல்வறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பது தான் மறுக்க முடியாத உண்மை. உண்மையில் இந்தியாவை திரு.வைகோ கூறியது போல் “United States of India” அல்லது “Indian Union” என்று அழைப்பது தான் சால பொருத்தமான ஒன்று. இதை விட்டு “ஒரே பாரதம், ஒரே கலாசாரம்” என்று கூறுவதெல்லாம் மோசடியான ஒன்றே. இதற்க்கு முருக பெருமானையும் கொடுந்தமிழ் இலக்கியமாம் அருணகிரியாரின் பாடல்களையும் துணைக்கு அழைப்பது ஏனோ?.

 47. அன்பின் திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,
  தாங்கள் திரு தாயுமானவன் அவர்களுக்குக் தொடுத்த விளக்கம் மிகவும் அருமை. இன்னுமொன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
  தென் பாரதத்தின் நான்கு மாநிலங்களில் தன் நிறைவு கொண்டிருந்த மாநிலம் ஆந்திரா ஒன்றுதான் (தண்ணீர், உணவு, மின்சாரம்).
  தற்போழுது அதையும் துண்டாடி விட்டார்கள். இப்பொழுது தெலுங்கானாவும், சீமாந்திராவும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போல தண்ணீருக்கும், உணவுக்கும் (அரிசி) அடித்துக்கொள்ளும். இது தேவைதானா?
  இது அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டமான செயலே அன்றி வேறு எதுவும் இல்லை.

 48. வளர்ச்சியை மாநிலம் முழுமைக்கும் பரவலாக்காமல் ஆந்திரா என்றால் அது ஹைதராபாத் மட்டுமே என்பதுபோல உலகத்துக்கு படம் காட்டினால் சந்திரபாபு மாதிரி மூக்குடைபட்டுப்போக வேண்டியதுதான்.

  அதேபோல ஹைதராபாத் எட்டிய வளர்ச்சியை எட்டாத பிறபகுதி மக்கள் போராடுவார்கள்தான்.

  சும்மாவாவது துரோகம் துரோகம் என்று எல்லாவற்றுக்கும் அதே வார்த்தையை போடும் முன்னர் அவர்கள் ஏன் தனி மாநில கோரிக்கை வைக்கிறார்கள் என்று பிரச்சினையின் மூல காரணத்தை யோசித்தோமா ? தனி ஈழ கோரிக்கையை ஏற்பதில் எனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும் இதே கேள்வியை அங்கும் கேட்கலாம்.

  ஒரு உதாரணம் :

  ‘இந்தியா ஒளிர்கிறது’-க்கு ஒப்பாக படம் காட்டிய நாயுடுகாரு, கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளை கண்டுகொள்ளவே இல்லை என்பதால்தான் அவரை விரட்டியடித்தனர் (இங்கே அமெரிக்க வானொலியில், பி.சாய்நாத் ஒருமுறை சொன்னார், ’சுனாமியில் இறந்ததைவிட அதிகமான எண்ணிக்கையில் ஆந்திர விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், ஆனால் அது சுனாமி அளவுக்கு பொது ஊடகங்களில் வெளிவரவே இல்லை’)

  ஆனால் இதை ஏதோ தேச துரோகம் என்ற அளவுக்கு சித்தரிக்கும் கிருஷ்ணகுமார் அவர்களது மனப்போக்குதான் புரியவில்லை. அவர்கள் என்ன இந்தியாவிலிருந்தே பிரிந்துபோகவேண்டும் என்றா கேட்டார்கள் ? தனி மாநிலமாக பிரிந்து வளரத்தானே போராடினார்கள் ? அதையும் இந்தியாவிலிருந்தே பிரிந்துபோக வேண்டி தனி திராவிட நாடு கேட்ட ”தீரா”விட இயக்கத்தாரையும் ஏன் ஒப்பீடு செய்கிறீர்கள் ?

  விட்டால் ஒரு மாநிலத்துக்குள் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டத்தை பிரித்து புது மாவட்டம் உருவாக்குவதைக்கூட தேசத்துரோகம் என்பீர்கள் போல.

 49. ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்தது சரியா என்று விவாதம் நடக்கிறது. ஆந்திரம் கிழக்கு மேற்காக 15 நிமிடத்துக்கும் மேலாக நேர வித்தியாசம் உள்ள மாநிலம்.நிர்வாக வசதிக்காக அதனை இரண்டாகப் பிரிப்பது தவறு அல்ல. ஆனால் அதனை ஆந்திரா கிழக்கு ஆந்திரா மேற்கு என்று தான் பிரிக்க வேண்டும். இப்போது பிரித்திருப்பது ஆந்திரா தெற்கு ஆந்திரா வடக்கு என்று பிரித்துள்ளார்கள். ஆந்திரா வடக்கு என்பது தெலுங்கான எனவும் ஆந்திரா தெற்கு என்பது சீமாந்திரா எனவும் பெயர்கொடுத்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் 2004-தேர்தலில் ஆந்திராவை பிரித்து தெலுங்கானா என்ற மாநிலத்தை உருவாக்கி தருவதாக சொல்லி தங்கள் தேர்தல் அறிக்கையிலேயே வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் அதனை 10 வருடம் தாமதம் செய்ததால் தான் ஆந்திர மக்கள் காங்கிரஸ் அரசியல் விளையாட்டு விளையாடுகிறது என்பதை புரிந்து கொண்டு எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். இந்த தேர்தலில் தெலுங்கானா மக்களும் காங்கிரசுக்கு ஓட்டுப் போடாமல் டி ஆர் எஸ் கட்சிக்கு ஓட்டுப் போட்டுவிட்டனர்.

  திரு பொன் முத்துக்குமார் எழுப்பியுள்ள கேள்விக்கு நம் பதில் இதுதான். தமிழ் நாட்டில் பெரும் தொழில்சாலைகள் எல்லாமே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே உருவாகின்றன. எனவே சென்னையையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் மட்டும் தனி மாநிலம் ஆக்கிவிட்டு , எஞ்சிய பகுதிகளை தனி மாநிலமாக ஆக்கவேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ? வளர்ச்சி அடையாத பகுதிகளுக்கு வளர்ச்சிக்கு தேவையான முதலீடு தேவைப்படுகிறது அவ்வளவு தான். தனி மாநிலம் தேவை இல்லை. உங்களுக்கு அடுத்த கேள்வி – சந்திரபாபு நாயுடு காலத்தில் ஐதராபாத் அதிக வளர்ச்சி பெற்றதால் தெலுங்கானா தனிமாநிலம் என்று பிரிப்பதை நியாயப்படுத்துகிறீர்களே, வளர்ச்சி பெற்ற ஐதராபாத்தை ஏனுங்க வளராத தெலுங்கானாவில் சேர்க்கிறீர்கள் ? வளர்ச்சி அடையாத பகுதிகளை மட்டும் ஒன்று சேர்த்து அல்லவா தனி மாநிலம் அமைக்க வேண்டும். தாங்கள் சொல்வது முன்னுக்கு பின் முரணாக இல்லையா ? இந்தியாவில் வாஜ்பாய் அரசு 179- எம் பிக்களை தேர்ந்தெடுக்கும் உ பி ,பீகார், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 பெரிய மாநிலங்களை அந்த மாநில சட்டசபைகளில் தீர்மானம் இயற்றி விவாதித்து மாநில சட்ட சபைகளின் ஆதரவுடன் அமைதியாக பிரித்தது. ஆனால் 42- எம்பிக்கள் உள்ள ஆந்திர மாநிலத்தை 2004-லேயே பிரித்து தருவதாக போக்கு காட்டிவிட்டு பத்து வருடத்துக்கும் மேலாக தாமதம் செய்த இந்திரா காங்கிரஸ் என்ற தேசவிரோதக் கட்சியே இந்த குழப்பங்களுக்கு காரணம். இதனை ஆந்திரம் மற்றும் தெலுங்கானா ஆகிய இருமாநில மக்களும் நன்றாக புரிந்துகொண்டு விட்டனர். எனவே தான் இனி இந்த மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை.

 50. அன்பின் ஸ்ரீ தாயுமானவன், ஸ்ரீ பொன் முத்துக்குமார்

  பொன் முத்துக்குமார் சொல்லும் சில காரணங்களை ஒப்புக்கொள்கிறேன். உணர்வு பூர்வமாக அன்றி அறிவு பூர்வமான வாதங்கள்.

  கீழ்க்கண்ட சொல்லப்படாத காரணங்களையும் புறக்கணிக்கலாகாதே.

  இத்தாலிய ராஜமாதாவின் ஓட்டு வேட்கைக்காக துண்டாடப்பட்டது ஆந்த்ர ப்ரதேசம். சீமாந்த்ரா பகுதியில் துளிர்த்து தழைத்து வரும் மதமாற்ற வ்யாபாரத்தை செழிக்க வைப்பதற்காக துண்டாடப்பட்டது ஆந்த்ரா.

  ஜிஎம் விதைகள் தெலுங்கானா பகுதியில் ஆடிய வெறியாட்டத்தையும் கூட சேர்த்துக்கொள்ள வேண்டும். (+ அதில் லாபம் பார்க்க விழைந்த அரசியல் வ்யாதிகளையும்

  இந்தப் பிளவுடனேயே உடன்படாத எனக்கு தமிழகம் பிளக்கப்படும் என்று நினைக்கக்கூட அறுவருப்பாகவும் அச்சமாகவும் இருக்கிறது.

  ஆந்திரப்பிளவை ஆதரிக்கும் அருமை சஹோதரர்காள் இதே போன்றோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தமிழகம் இரு மாகாணங்களாகப் பிளக்கப்படுமானால் அதை ஏற்பீர்களா?

  குழப்பம் தரும் தேசிய இனம் எனும் பதப்ரயோகம் சம்பந்தமான விஷயங்களை எழுதினேன். மிக நீண்டு சென்றது. தனி வ்யாசமாகவே நாளைக்கே அனுப்பி வைக்கிறேன்.

 51. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

  உங்களது தணியாத தமிழ்ப்பற்றுக்கும் சைவப்பணிக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  \\ இதற்க்கு முருக பெருமானையும் கொடுந்தமிழ் இலக்கியமாம் அருணகிரியாரின் பாடல்களையும் துணைக்கு அழைப்பது ஏனோ?. \\

  சம்பந்தப்பெருமானைப்போல அமிர்த கவித் தொடைபாட அடிமையெனக்கருள்வாயே என்று எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் இறைஞ்சுகிறார்.

  சிவனடியார்களையும் திருமாலடியார்களையும் போற்றச் சொல்லிக்கொடுத்திருக்கிறார் எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான். ப்ருத்யஸ்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய என்று குலசேகர மன்னன் சொல்வது போலும் அடியார்க்கடியார்க்கடியேன் என்று திருத்தொண்டர் தொகையில் சொல்வது போலும் ………

  அடியவர்க்கடியவராக இருக்கவே எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் சொல்லிக்கொடித்திருக்கிறார். மேலும் ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை இகழ்வோர்கள் பாழ்நரகுழல்வார் என்றும் எச்சரித்துள்ளார்.

  ஐயன்மீர், அடியார் தம் திருப்பாதங்கள் எம் சிரமீதிருப்பதை பெருமையாகவே கருதுகிறேன். அப்பாதங்கள் வழியே சில திவிலைகள் தேவாரமும் திவ்யப்ரபந்தகளும் கேழ்க்கும் பாக்யம் கிடைக்கப்பெறுவது கிடைத்தற்கறியது. அடிமைகளுக்கு விருப்பமிருக்கலாம். தகுதியும் வேண்டுமல்லவா? அதே பாதங்கள் அதன் கீழ் இருக்கும் சிரத்தை எற்றினாலும் கூட எற்றியது சிவனடியார் பாதம் அல்லது திருமாலடியார் பாதம் என்று உகப்பதே பெருமை.

  திருப்புகழை இகழ்பவர்கள் விஷயமாக எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் திருப்புகழமுதத்தில் முன்னமேயே சொன்ன விஷயத்தை திரும்ப எழுதுவது தேவையில்லாதது.

  திருப்புகழ்ப் பெருமையை சபையறிய முன்வைப்பதே அதனை இழிவு செய்வதைத் தகர்க்கும் அருமருந்தாகும். நான் வாசித்த பாயிரங்களைத் தொகுத்து அடியார்கள் தம் திருப்பார்வைக்கு முன்வைப்பதே சரியான பணி. உங்கள் கருத்துக்கள் நான் இரண்டு வ்யாசங்கள் எழுத ஹேதுவானது. திருப்புகழ் பற்றிய வ்யாசமும் நாளைக்கே அனுப்பப்படும்.

  வேலும் மயிலும் சேவலும் துணை.

 52. // எனவே சென்னையையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் மட்டும் தனி மாநிலம் ஆக்கிவிட்டு , எஞ்சிய பகுதிகளை தனி மாநிலமாக ஆக்கவேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ? //

  தெரியாது, ஆனால் அதில் ஆச்சரியப்படவில்லை. வளர்ச்சி ஒரு இடத்தில் மட்டும் குவிக்கப்பட்டால் – தமிழகம் என்றாலே சென்னைதான் என்பதுபோன்ற ஒரு தோற்றம் உருவானால், இப்படித்தான் ஆகும்.

  // வளர்ச்சி அடையாத பகுதிகளுக்கு வளர்ச்சிக்கு தேவையான முதலீடு தேவைப்படுகிறது அவ்வளவு தான். //

  மிக சுலபமாக சொல்லப்பட்ட இந்த ”அவ்வளவுதான்’-ஐ ஏன் இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை என்பதுதான் கேள்வி. வளர்ச்சியை பரவலாக்குவதில் என்ன தடை ? முன்பாவது, உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு தரைவழி, நீர்வழி மற்றும் வான்வழிப்போக்குவரத்துக்கு வசதியான இடம் என்பதால் சென்னை-யை ஒப்புக்கொள்ளலாம். இன்றும் அப்படித்தான் என்றால் எப்படி ஒப்புக்கொள்வது ?

  // சந்திரபாபு நாயுடு காலத்தில் ஐதராபாத் அதிக வளர்ச்சி பெற்றதால் தெலுங்கானா தனிமாநிலம் என்று பிரிப்பதை நியாயப்படுத்துகிறீர்களே, //

  நான் நியாயப்படுத்தவோ அ நியாயப்படுத்தவோ இல்லை. அவர்கள் போராடுவதை மிக உடனடியாக ‘தேசத்துரோகம்’ என்று மட்டையடியாக முத்திரை குத்தாமல் புரிந்துகொள்ள முயல்கிறேன்.

  // வளர்ச்சி பெற்ற ஐதராபாத்தை ஏனுங்க வளராத தெலுங்கானாவில் சேர்க்கிறீர்கள் ? வளர்ச்சி அடையாத பகுதிகளை மட்டும் ஒன்று சேர்த்து அல்லவா தனி மாநிலம் அமைக்க வேண்டும். தாங்கள் சொல்வது முன்னுக்கு பின் முரணாக இல்லையா ? //

  இல்லை. வளர்ச்சியே அடையாத பகுதிகளை வைத்துக்கொண்டு எப்படி நிதியாதாரத்தை பெருக்குவது ? அதனால்தான் வருவாய் தரும் ஒரு பகுதியாவது வேண்டும் என்று கேட்பது.

  நான் சொல்வது எல்லாம், பிரச்சினை என்று வரும்போது அதற்கு புனுகு போடாமல் அதன் மூலகாரணம் என்ன என்று கண்டுபிடித்து அதை சரிசெய்யாமல் இருக்கிறோமே என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

 53. புதிய பாரதம் மலர்கிறது. புதிய தமிழகமும் மலர்ந்தால் நன்றாக இருக்கும். எல்லோரும் மீடியாவில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று ஏதோபுதியதாக கண்டு பிடித்து விட்டது போல பேசுகின்றனர். கள்ளு சாராய கடையை 1-9-1972 முதல் , முத்தமிழ் வித்தகர் மஞ்சள் அவர்கள் ஆரம்ப விழா நடத்திய போது,இதே வைகோ போன்றோர் திமுகவில் மட்டுமே இருந்தனர். அதனைக் கண்டித்து யாரும் பேசவில்லை. தமிழருவி மணியன் அவர்கள் வைகோவை முதல்வராக்க ஆசைப் படுகிறார். வைகோ முல்லைப்பெரியாறு விஷயத்தில் நன்கு போராடியவர் என்பது உண்மை. தமிழன் குடிக்கு தீவிர அடிமையாகி விட்டபின்னர், இப்போது டாஸ்மாக்குக்கு பூட்டு போடுவேன் என்று சொல்லும் இராமதாஸ் அவர்களை அவர் கட்சிக்காரர்களே ஏற்கமாட்டார்கள். மதுவிலக்கினை ஒழித்த கலைஞரை தலைவர் என்று சொல்லி திரிந்த இந்த கும்பலில் யார் யார் இருந்தார்கள் என்பதனை நாடு அறியும். மூடி மறைக்க முடியாது. தமிழினத்தை ஒழிக்க சதி செய்து தான் கலைஞர் கள்ளுக்கடையை திறந்தார் என்பதே உண்மை. இப்போது மது வியாதி முற்றிப் போன பின்னர் இவர்கள் உளறுவதை கேட்டு நாடே சிரிக்கிறது.

  மீடியாவில் நடக்கும் விவாதங்களில் , பார்லிமெண்டு தேர்தலில் தோற்றகட்சிகள் யாராவது சிலர் தலையில் பழிபோட்டு , உண்மையை மூடி மறைக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பகுஜன் சமாஜ் , சமாஜ்வாதி ஆகிய கட்சிகளில் தோல்விக்கு பொறுப்பாக பலரை இராஜினாமா செய்ய வைத்தோ, அல்லது நீக்கியோ நடவடிக்கை எடுத்துள்ளனர். திமுகவிலோ தேர்தல் தோல்விக்கு யார் மீது நடவடிக்கை எடுத்தாலும் அந்த கட்சி இனி தேறாது . ஏனெனில் தோல்விக்கு காரணமே கலைஞரின் உளறல்கள் தான். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தேவைப்பட்டால் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கத்தயார் – என்ற கலைஞரின் வசனமே ஒட்டுமொத்த திமுகவுக்கும் மரணப் படுகுழியை வெட்டியது. காங்கிரஸ் வேண்டாம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசி காங்கிரசை அழித்துவிட்டது. இந்த சமயத்தில் கலைஞர் காங்கிரஸ் ஆதரவு பேச்சினைப் பேசியதால், திமுகவின் கட்சி உறுப்பினர்களிலேயே பலர் குடும்பம்குடும்பமாக இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டு , திமுக- காங்கிரஸ் எதிர்கால கூட்டணி கூடாது என்று, அதற்கு வாய்ப்பே கொடுக்க கூடாது என்று திமுகவை சுத்தமாக ஓரங்கட்டி விட்டனர். ஒன்பது வருடம் கூட்டணி வைத்து சுரண்டிய பின்னர், விலகி வந்துவிட்டு மீண்டும் சொக்கத்தங்கம் காலில் விழுந்து , சிறிய மகளுக்கு இராஜ்ய சபை உறுப்பினர் பதவியை பெற்றார். அப்போதே திமுக தொண்டன் உஷாராகி விட்டான். மாறனும், இராசாவும் பதவி விலகவைக்கப்பட்ட பின்னர், அந்த இரு அமைச்சர் பதவியை திமுகவை சேர்ந்த இரு எம் பிக்களுக்கு கேட்டு வாங்கி வழங்கியிருக்கலாம். கலைஞரின் சுயநலம் அதற்கு இடம் கொடுக்காததால், எல்லா திமுக எம் பிக்களுமே கருணாநிதிமீது கடும் அதிருப்தியில் தான் இருந்தனர். எல்லாக் குழப்பங்களுக்கும் கருணாவே வித்தாக மாறினார்.

  இப்போது மேலும் அழிவுப் பாதையிலேயே செல்கிறார்.பத்திரிக்கைகளும் மீடியாவும் ஜெயாவின் சொத்துக் குவிப்பில் முழு செய்தி கொடுக்காமல் சிறிய செய்தியாக போடுவதாகவும் , டூ ஜீயை மட்டும் பெரிய செய்தியாகப் போட்டு திமுகவுக்கு கெட்ட பெயரை உருவாக்கி விட்டதாகவும் புலம்புகிறார் மற்றும் மிரட்டுகிறார். டூ ஜி அகில இந்திய ஊழல்; நாட்டையே 176000 கோடி இழப்பு ஏற்படுத்திய ஊழல். எனவே இந்தியா முழுவதுமே எல்லாப் பத்திரிக்கைகளுமே எழுதிவருகின்றன. ஆனால் ஜெயாவின் சொத்துக் குவிப்போ வெறும் 66 கோடிதான். அந்த 66-கோடியிலும் , சசிகலா குடும்பத்தினர் பங்கே ஏராளம் என்று விரிவாக பத்திரிகைகளில் வந்துள்ளது. வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தாக்கப் பட்டதை மட்டும் சொல்லும், கருணா அவர்கள் , இவர் ஆட்சியில்

  1.நாத்திகம்,
  2.நவசக்தி,
  3.துக்ளக்,
  4.குமுதம்,
  5.அலை ஓசை,
  6.தினமலர்,
  7.மக்கள் குரல்,
  8.தினபூமி
  9. மாலைமுரசு

  ஆகிய பத்திரிகைகளை மிரட்டி மீடியா எமெர்ஜென்சியை அமல் படுத்திய பெருந்தகை இவர்.

  மவுண்ட் ரோடு ஆங்கிலப்பத்திரிக்கையை தனக்கு வேண்டியபோது, இந்துவே சொல்லிவிட்டது என்பார், தனக்கு வேண்டாதபோது மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்பார். இராசாசியையும் வேண்டியபோது மூதறிஞர், வேண்டாதபோது குல்லுக பட்டர் என்பார். திமுக கலைஞருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, புதிய தலைவரை தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவேண்டும். இந்தி எதிர்ப்பு, போன்ற செல்லுபடியாகாத விஷயங்கள் இன்று கட்சிக்கு எதிராகவே திரும்பிவிட்டன என்பதை உணரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *