நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்

அருண் ஷோரி
அருண் ஷோரி

மூலம்: அருண் ஷோரி – இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதிய கட்டுரை
தமிழில்: ராஜசங்கர்

கற்றலின் சுரங்கமான, மதிப்பிற்குரிய நாலந்தா என்று தான் 16 – 17 ஆம் நூற்றாண்டுகளில் வாழந்த திபெத்திய வரலாற்று ஆய்வாளர் தராநாத், நாலந்தா பல்கலைகழகத்தை பற்றி குறிப்பிடும் பொழுது சொல்கிறார். நாலந்தா பல்கலைகழகத்திற்கு ஐ-திசிங் வந்த பொழுது அங்கு 3,700 பவுத்த துறவிகள் இருந்தார்கள். அந்த மொத்த வளாகத்தில் சுமாராக 10,000 பேர் தங்கியிருந்தார்கள். அங்கே சொல்லித்தரப்படும் மிக அருமையான விரிவாக கல்வியை போலவே அந்த வளாகத்தில் இருந்த கட்டிடங்களும் இருந்தன. அங்கே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொழுது அங்கிருந்த பெரிய குவியல் 1400 அடி நீளமும் 400 அடி அகலமும் கொண்டிருந்தது. ஹூன் தாசேங் அங்கு ஏழு பவுத்த தங்குமிடங்களும் எட்டு மையங்களும் இருந்ததை குறிப்பிடுகிறார். அந்த தங்குமிடங்கள் பல அடுக்கு மாடி அமைப்புகளாகவும் அங்கிருந்த நூலகம் மூன்று கட்டிடங்களையும் அவற்றில் ஒன்று ஒன்பது மாடிகளை கொண்டதாகவும் இருப்பதை குறிப்பிடுகிறார்.

முஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். அவர்கள் உடைத்த சிலைகள் எல்லாம் புத்தரை போல் செய்யப்பட்டவை. ஆனால் நாலந்தா கொஞ்ச நாட்களில் அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே கொலைகார்கள் வந்து அதை அழிக்க தொடங்கினார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் விவரிக்கப்படுகிறது.

மின்ஹாஜ்-உத்-தின் இன் கொள்ளைகளும் திருட்டு வழிப்பறிகளும் வெகுவான பொருட்களையும் பணத்தையும் கொண்டுவந்தன, எவ்வளவு என்றால் தனியாகவே கொள்ளைக்கூட்ட தலைவனாகும் அளவுக்கு இருந்தன, இதனால் அப்போதைய ஆட்சியாளர்களான குதுப்-உத்-தின் அபாக் போன்றவர்களிடம் மின்ஹாஜ்-உத்-தின் மதிப்பு உயர்ந்தது. ”மின்ஹாஜ்-உத்-தின் செயல்கள் சுல்தான்(மாலிக்) குதுப்-உத்-தின் ஐ அடைந்த பொழுது சுல்தான் மதிப்புமிக்க உடையயும் அந்தஸ்தையும் பரிசாக அனுப்பினார் என வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார். உயரமான சுவர்களும் பெரிய கட்டிடங்களும் கொண்ட நாலந்தா நல்ல பாதுகாப்பு கொண்டகோட்டையாக இக்தியார்-உத்-தின் இன்னுக்கும் அவனுடைய படைகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அவன் இருநூறு குதிரைகள் கொண்ட படையும் வந்து தீடீரென தாக்கியதாக எழுதுகிறார்.

அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள், மேலும் அங்கிருந்த அனைத்து பிராமணர்களில் எல்லோருமே தலையை மொட்டையடித்து இருந்தார்கள், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அங்கே அதிகளவிலான புத்தகங்கள் இருந்தன. அந்த புத்தகங்கள் முஸ்லீம்களின் கவனத்திற்கு வந்த பொழுது முஸ்லீம்களுக்கு அதை பற்றி தகவல்களை தருவதற்காக இந்துக்கள் அழைத்து வரப்பட்டனர். அந்த இந்துக்களும் முழுமையாக கொல்லப்பட்டனர். புத்தகங்களை பற்றிய தகவல்களை அறிந்த பொழுது அந்த மொத்த வளாகமும் ஒரு கல்லூரி எனவும் இந்துக்களின் மொழியில் அதை பிகார் (விகாரை) என அழைத்தார்கள் என எழுதுகிறார்.

இஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம் (நாளந்தா பல்கலைக்கழகம்)
இஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம் (நாளந்தா பல்கலைக்கழகம்)

வெற்றியடைந்த பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை மின்ஹாஜ் உத் தின் எழுதும் போது , முகமது இ பகட்யார் பெரும் கொள்ளை செல்வத்துடன் திரும்பினான், சுல்தானான குதுப்-உத்-தின் இபாக் முன்பு வந்த பொழுது உயரிய மரியாதையும் செல்வாக்கையும் பெற்றான். அது எவ்வளவு என்றால் அங்கிருந்த அரசவையின் மற்றவர்கள் பொறாமை கொள்ளுமளவுக்கு இருந்தது. இவ்வளவும் பொது வருடம் 1197 இல் நடந்தது.

இப்போது மார்க்சிய பதிவில் இந்த வரலாறு எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என பார்ப்போம். 2004 இல் டி. என் ஜா என்பவர் இந்திய வரலாற்று கான்கிரஸின் தலைவராக இருந்தார். டி. என். ஜாவின் தலைமை உரையை பார்ப்பது இந்த மார்க்சிய அறிவுஜீவித்தனம் எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கும். அந்த உரையில் அவர் பவுத்த விகாரைகளின் அழிப்பு பற்றி பொதுவாகவும் நாலந்தா பற்றி குறிப்பாகவும் சொல்கிறார்

ஒரு திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி அரசன் கர்ணா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த வழிபாட்டிடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் எனவும் திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நாலந்தா நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுகிறது.

இந்து குண்டர்கள்? இந்த சொற்றொடர் வித்தியாமாக இருக்கிறதல்லவா? 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திபெத்திய நூலில் சமகாலத்திய சொற்றொடரான இந்து குண்டர்கள் என்பது எப்படி இருக்கமுடியும்? மேலும் டி என் ஜாவின் கருத்தே இந்துமதம் என்பதே 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயன் உருவாக்கியது என்பதல்லவா? எனவே இந்த திபெத்திய நூல் எது? அது என்ன சொல்கிறது? அதை டி என் ஜா படித்திருக்கிறாரா?

பாக் சாம் ஜான் ஜங் எனும் நூல் சுமபா கன் போ யேஸ் பால் ஜார் என்பவரால் எழுதப்பட்டது. அவர் வாழ்ந்த காலம் 1704-88 அதாவது நாலந்தாவின் அழிப்பிற்கு 500 வருடங்களுக்கு பின்பு.

இது தான் முதல் தவறாக படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இடிப்பு நடந்த காலத்து எழுதப்பட்ட தபாக்ட் இ நசாரி எனும் நூலை விட்டுவிட்டு ஏன் 500 வருடம் கழித்து எழுதப்பட்ட நூலை ஏற்கவேண்டும்? அப்படியே இருப்பினும் டி என் ஜா அந்த நூலை படித்திருக்கிறாரா? ஒரு சுயமரியாதையுள்ள மார்க்சிஸ்ட் அதிலே எழுதப்பட்டிருக்கும் சங்கதிகளை நம்பமுடியுமா?

பாக் சாம் ஜான் ஜங் நூலை பதிப்பதித்தவரும் மொழிபெயர்த்தவருமான சரத் சந்திர தாஸ் நாலந்தா அழிவு பற்றி அதிலே என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தருகிறார்:

நாலந்தாவில் மகத அரசின் அமைச்சரான காகுத சிதா அமைத்த கோவிலில் ஒரு சமய சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது சில இளம் புத்த பிக்குகள் கைகழுவிய அழுக்கு நீரை இரண்டு தீர்திக பிச்சைக்காரர்கள் மீது வீசினர். கோபம் கொண்ட பிச்சைக்காரர்கள் தர்ம கனஞ்சா எனப்படும் நாலந்தாவின் பவுத்த பல்கலைகழகத்தில் இருந்த மூன்று புனித இடங்களை எரித்தனர். அவை ரத்ன சாகரம், ரதன் ராஜாகா, ஒன்பது மாடி கட்டிடமான ரத்னாதாதி எனப்படும் புனித நூல்களை கொண்ட நூலகம. (பக் 92)

இரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா?

மேற்சொன்ன வரிகள் சரத் சந்திர தாஸ் அவருடைய நூலில் அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் வரிகள் ஆகும் அவை முழுமையான சித்திரம் அல்ல. அது வெறும் அட்டவணையில் இருக்கும் சுருக்கப்பட்ட கருத்து தான் அப்படியானால் முழுமையான நிகழ்வுகள் இன்னும் பெரியதாக இருக்கும் அல்லவா? அப்படியானால் அந்த விளக்கம் இந்த நூலகம் எரிக்கப்பட்டதை பற்றி என்ன சொல்கிறது?

நூலின் ஆசிரியர் பவுத்த தர்மம் எப்படி மூன்று நடத்தப்பட்ட அழிவுகளில் இருந்து காப்பாற்றபட்டது என்பதை விளக்குகிறார். முதல் முறை நடந்தது , கவுகுனிமாமஸ்தா எனும் தாகிஸ்க் (துர்க்கிஸ்தான்) நாட்டு அரசனுக்கும் தர்ம சந்தரா எனும் நியு யோக் எனும் நாட்டு அரசனுக்கும் நடந்த பிரச்சினைகளால் ஆகும். தர்ம சந்திரா தன்னுடைய பரிசாக கவுகுமாமஸ்தாவுக்கு அனுப்பியவற்றை கெட்ட மந்திரம் என சொல்லி கவுகுனிமாஸ்தா, துருகா வின் மீது படையெடுத்து மகதத்தின் மூன்று அடிப்படைகளான பௌத்த தங்குமிடங்கள், நூல்கள், ஸ்தூபிகளை அழித்தான். கவுகுனிமாஸ்தா பவுத்த துறவிகளை துரத்தியடித்தான். தர்மசந்திராவின் சிற்றப்பா சீனாவிற்கு அதிக பவுத்த துறவிகளை அங்கு அறிவை பரப்ப அனுப்பினார். அதற்கு பதிலாக தங்கம் அனுப்பட்டபட்டது. அதைக்கொண்டு சிறிய அரசுகளை விலைக்கு வாங்கி கவுகுனிமாஸ்தாவின் மீது படையெடுத்து வெற்றி கண்டார். பின்பு மூன்று அடிப்படைகளையும் திரும்ப கட்டினார். இடிக்கப்பட்ட எல்லா புனித தலங்களும் கட்டப்பட்டதுடன் புதிதாக 84 தலங்களும் கட்டப்பட்டன. எனவே தர்மம் வாழ்ந்தது.

அடுத்த முறையில் பவுத்த நூலான பரஞ்சனபரமிதா வை 20 ஆண்டுகள் கற்பித்து வந்த ஆசிரியர் துராகவில் இருந்த திருடர்களால் கொல்லப்பட்டார். அவருடைய குருதி பாலாக மாறியது, அவருடைய உடலில் இருந்து பல பூக்கள் எழுந்தன. அவர் வானத்திற்கு பறந்து போனார்.

இப்போது நாம் டி என் ஜா சொல்லிய பகுதிக்கு வருகிறோம். இங்கே கேஷே டோர்ஜி டாம்டுல் எழுதிய மொழிபெயர்ப்பு முழுமையாக தரப்படுகிறது

மறுபடியும் அந்த நேரத்தில் முட்டிட பாதாரா எனும் அறிவாளர் இருந்தார் அவர் ஸ்தூபிகளை புதுப்பிப்பதையும் புதிதாக கட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இப்படியாக இருக்கும் பொழுது அவருக்கு போதிசத்துவ சமாந்தபாதார வின் தோற்றம் கிட்டியது. போதிசத்துவ சமாந்தபாராவின் துணியை கொண்டு அவர் லில்யூல்க்கு பறந்து சென்றார். அங்கு அவர் உயிர்களுக்கு நன்மையளிப்பதும் தர்மத்தை வளர்ப்பதுமான பல விஷயங்களை செய்தார். தர்மத்தை வளர்த்ததால் மத்திய நிலங்களில் (மகதம்?) தர்மம் 40 வருடங்களுக்கு வளர்ந்தது. அந்த நேரத்தில் நாலாந்தாவில் அரசனிடம் அமைச்சராக இருந்த காகுஸ்திதா கட்டிய கோவிலில் ஒரு கொண்டாட்டம் நடந்தது. அப்போது குறும்பான இளம் துறவிகள் பாத்திரம் கழுவிய நீரை அங்கிருந்த இரண்டு பவுத்தர் அல்லாத பிச்சைக்காரர்களில் மேல் தெளித்தார்கள், கூடவே அவர்கள் இருவரையும் கதவு இடுக்கில் வைத்து அழுத்தினார்கள். இதிலே ஒருவருக்கு உதவியாளனாக செயல்பட்ட பிச்சைக்காரன், ஆழமான குழியில் சூரியனின் சக்தியை பெறும் தவத்தை 12 வருடங்களுக்கு செய்தான். சூரியனின் சக்தி கிடைத்தபின்பு, யாகத்தில் எடுக்கப்பட்ட சாம்பலை நாலந்தாவில் இருந்த 84 பவுத்த தலங்களின் மீது தூவினான். அவைகள் எரிந்து சாம்பலாயின. குறிப்பாக நாலந்தாவின் மூன்று தர்ம காஞ்சா ஆன புனித நூல்களை கொண்டிருந்த கட்டிடங்கள் எரிந்தன. அவைகள் எரியும் பொழுது ரத்னதாடி இன் 9 ஆம் மாடியில் இருந்த குஹ்யசாமஜா மற்றும் பிரஞ்சபராமிதா எனும் புனித நூல்களில் இருந்து நீர் ஆறாக பெருகி ஓடியது அதனால் பல நூல்கள் காப்பாற்றப்பட்டன. அரச தண்டனைக்கு பயந்து இரண்டு பிச்சைக்காரர்களும் ஹசமா எனும் இடத்திற்கு ஓடிப்போனார்கள். அங்கு இருவரும் தானாக எரிந்து சாம்பலாயினர்.

எந்த ஒரு சுயமரியாதையுள்ள மார்க்சிஸ்டும் இதிலே சொல்லப்பட்டிருக்கும் ஒரு அதிசியத்தைக்கூட ஒப்புக்கொள்ளமாட்டான் ஆனால் இங்கே இரண்டு இருக்கிறது ஒன்று சித்திகளை பெற்று அதன் மூலம் கட்டிடங்கள் மேல் தீ வீசுவது இரண்டு புனித நூல்களில் இருந்து நீர் ஆறாக ஓடியது.

ஜிகாதிற்கு பலியான பௌத்தம் (நாளந்தா)
ஜிகாதிற்கு பலியான பௌத்தம் (நாளந்தா)

ஆனால் நாம் அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை. டி என் ஜாவின் உரையிலேயே இதற்காக குறிப்பு இருக்கிறது. அவர் திபெத்திய உரையை மேற்கோள் கட்டவில்லை. அவர் எல்லா மார்க்சிஸ்டுகளும் செய்வதை செய்கிறார். அது திபெத்திய நூலை மேற்கோள் காட்டும் இன்னோர் மார்க்சிஸ்டின் நூலை மேற்கோள் காட்டுவது. டி என் ஜா என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள அவருடைய வரிகளை கவனமாக பார்க்க வேண்டும். இது தான் டி என் ஜா சொல்வது

ஒரு திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி அரசன் கர்ணா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த வழிபாட்டிடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் எனவும் திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நாலந்தா நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுகிறது.

டி என் ஜா தன்னுடைய மேற்கோளாக பி. என். எஸ் யாதவா எழுதிய 12 ஆம் நூற்றாண்டு வட இந்தியாவில் சமூகமும் பண்பாடும் எனும் நூலை மேற்கோள் காட்டுகிறார். அதிலே யாதவா என்ன எழுதியிருக்கிறார்? : திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி கர்னா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த புனித இடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் என.

ஜா இதை அப்படியே எடுத்தாள்கிறார். ஆனால் அடுத்த வரியை விட்டுவிட்டார். அது ‘ இந்த கூற்று எவ்வளவு தூரம் உண்மை என சொல்வது மிகவும் கடினம் ‘ . இந்த வரிகளை டி என் ஜா கவனமாக விட்டுவிட்டார்.

மேலும் யாதவா எழுதுகிறார், ‘ ஆனால் நமக்கு கொடூரங்களை பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன ‘ . அவர் இரண்டு கல்வெட்டுகளையும் ஒரு புராண தொடர்பையும் தருகிறார். பின்பு அவர் இந்த திபெத்திய நூலுக்கு வருகிறார். இந்த இடத்தில் டி என் ஜா சொல்லியது என்ன? ‘ திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நலாந்தாவில் இருந்த நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டது பற்றி பேசுகிறது என்பது

இப்போது நாம் யாதாவா எழுதிய பாப்போம். ‘ இந்த திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங் என்பது (இங்கு ஒரு வார்த்தை விடுபட்டுள்ளது) நம்பிக்கையான நாலந்தா பல்கலைக்கழகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டது எனப்து.

அப்படியே எழுத்துக்கு எழுத்து காப்படியடிக்கப்பட்டுள்ளதல்லவா? பொறுங்கள், இங்கே பார்க்கவேண்டியது இரண்டு இந்து பிச்சைக்காரர்கள் சொல்லப்படும் போது இந்து குண்டர்களாக மாற்றப்பட்டனர். இரண்டு இந்து குண்டர்கள் என டி என் ஜா சொல்வது ஏதோ அந்த திபெத்திய நூலின் ஆசிரியர் சொல்வது போல் சொல்லியது உண்மையிலேயே இன்னோர் மார்க்சிஸ்டான யாதாவா எழுதியது. இப்போது நாம் யாதாவா எழுதிய முழு வாக்கியத்தையும் பார்ப்போம் : திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங் என்பது சந்தேகத்திற்கு உரிய நம்பிக்கையான நாலந்தாவின் நூலகத்தை சில இந்து குண்டர்கள் எரித்தார்கள் என சொல்கிறது .

டி என் ஜா இந்த வாக்கியத்தை, – இது எவ்வளவு தூரம் உண்மை என சொல்வது கடினம் – என்பதை விட்டுவிட்டது போல -சந்தேகத்திற்கு உரிய – என்ற வாக்கியத்தையும் விட்டுவிடுகிறார். இவ்வளவும் இந்திய வரலாற்று காங்கிரஸுன் தலைமை உரையில் இருக்கிறது.

தொகுத்து பார்த்தால், நாலந்தா இடிப்புக்கு பிறகு 500 வருடங்கள் கழித்து ஒரு திபெத்திய நூல் எழுதப்படுகிறது. சரத் சந்திர தாஸ் அதைப்பற்றி எழுதும் போது தொகுப்பில் முழுமையான பக்கத்தை விட்டுவிடுகிறார்.

யாதாவா அந்த தொகுப்பை மட்டும் படித்துவிட்டு பவுத்தர் அல்லாத பிச்சைக்காரர்களை இந்து குண்டர்கள் என மாற்றி எழுதுகிறார்.

யாதாவா அதிலே சந்தேகத்திற்கு உரிய என வார்த்தையை உபயோகிக்கிறார்.

டி என் ஜா அதிலே இருக்கும் சந்தேகத்திற்கு உரிய எனும் வார்த்தையை விட்டுவிடுகிறார்.

இதை இந்திய வரலாற்று காங்கிரஸில் தலைமை உரையாக படிக்கிறார்.

நாம் பலமுறை பார்த்தது போல் மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை முழுவதுமாக திரிப்பதும் முடிந்தால் உண்மையை பொய்யாக்குவதும் நடைமுறையில் இருப்பது என்பதால் இது எந்த விதமான ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் யாருமே மூலத்தையோ அல்லது மேற்கோள் காட்டப்பட்ட நூலையோ சரிபார்க்கவில்லை என்பது தான்.

யாதாவா எழுதிய நூலில் கடைசி முடிவாக இப்படி சொல்கிறார்:

பவுத்தத்திற்கு மிகப்பெரிய அடி துருக்கிய படையெடுப்பினாலேயே தரப்பட்டது. துருக்கியர்கள் வங்காளத்திலும் மகதத்திலும் இருந்த பவுத்ததின் கொண்டாடப்பட்ட புனித தலங்களை அழித்து ஒழித்தார்கள். பெரும்பலான பவுத்தர்கள் திபெத்திற்கும் நேப்பாளத்திற்கும் தப்பி ஓடினார்கள்.

“அல்லாஹோ அக்பர்” என்று கத்திக் கொண்டே வந்த சம்சுத்தீன் என்ற அந்தப் படைவீரனின் கூரிய வாள் பிரதம ஆச்சாரியர் சீலபத்திரரின் நெஞ்சில் இறங்கியது. தன்னைச் சுற்றியிருந்த ஸ்தூபங்களின் உச்சிகள் எல்லாம் ஒளிமழுங்கிப் பேரிருள் சூழ்வது போலத் தோன்றியது. தான் தவழ்ந்து, விளையாடிக் கற்று வளர்ந்த அறிவுத் திருக் கோயில் அரக்கர்களால் சூறையாடப் பட்டுக் கொண்டிருந்ததைக் காணச் சகியாமல் அவர் கண்கள் மூடின…

இலங்கையிலிருந்தும், சீனத்திலிருந்தும், காந்தாரத்திலிருந்தும், கலிங்கத்திலிருந்தும், வங்கத்திலிருந்தும், காம்போஜத்திலிருந்தும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் ! போன வாரம் கூட த்ராவிட தேசத்தின் காஞ்சி நகரிலிருந்து 100 வித்யார்த்திகள் வந்தார்களே.. ஐயோ, அவர்களுக்கு என்ன ஆயிற்றோ?…

வெற்றி பெற்றவர்களுக்குப் பெரும் கொள்ளைகள் காத்திருந்தன. அந்த இடத்தில் இருந்த பெரும்பாலானாவர்கள் தலையை முழுக்க மொட்டையடித்த பிராமணர்கள் (பிட்சுக்கள்). அவர்கள் உடனடியாகக் கொல்லப் பட்டார்கள். பெரும் எண்ணிக்கையில் அங்கே புத்தகங்கள் இருந்தன. அவைகளைப் பார்த்த முகமதியர்கள் அவற்றில் என்ன இருக்கிறது என்று சில ஆட்களைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் எல்லாருமே கொல்லப்பட்டு விட்டார்கள்…

– ஜடாயு எழுதிய நாலந்தாவின் மரணம் கட்டுரையிலிருந்து

9 Replies to “நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்”

 1. Mathiya arasu yaezhai hindu maanavargalluku kalvi uthavi kidaika aavana seithal vendum

 2. இந்தியாவில் வரலாற்றிலும் மதச்சார்பற்ற என்ற போர்வையில் பொய்யர்கள் புகுந்து விட்டனர். எனவே உண்மை வரலாறு மூடி மறைக்கப்பட்டு விட்டது. பொய்யர்களின் முகமூடியை கிழித்த ஆசிரியருக்கு நன்றி.

 3. i want to know why marxists did this? why they support islam and why they hate hindu?

 4. நாலந்தா ஹிந்து மதம் உச்ச நிலையில் இருந்த பத்து – பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கூட இயல்பாகச் செயல்பட்டு வந்தது. இதேபோல் அலெக்ஸ்சான்றிய நூலகத்தைக் கொளுத்தும்போது இவர்கள் சொன்னது – இங்கு உள்ள புத்தங்கள் எங்கள் புனித நூலில் இல்லாததைக் கூறினால் கொளுத்தப் படவேண்டியது. இருப்பதையே கூறினால் தேவையில்லை. ஆகவே எப்படியும் கொளுத்தவேண்டியதுதான்.

 5. பிற மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பது தொன்று தொட்டு இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஒரு வழக்கமே. இந்தக் கொள்கையைக் கண்டு பிடித்தவர்கள் வஹாபியர் தான் என்பதும் பொய்யே. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மத் அப்தல் வஹாபின் காலத்துக்கு முன்னர் கிடைக்கும் சில உதாரணங்களைப் பார்ப்போம் –

  கிறித்தவ சர்ச்களை அழித்து மசூதியாக்கப்பட்ட தலங்கள் –
  புனித ஜான் சர்ச், டமாஸ்கஸ், சிரியா – 634 AD
  காசா பள்ளிவாசல் (The great Mosque of Gaza)- 638
  கார்டோபா, ஸ்பெயின் – 784
  பாலேர்மோ, ஸிஸிலி – 831
  தெஸ்ஸலோனிக்கி, கிரேக்கம் – 1387
  ஹகியா சோபியா, இஸ்தான்புல் துருக்கி – 1543
  இன்னும் பலப்பல.

  இந்தியாவில் இஸ்லாமியர்களால், 8ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த முகம்மது பின் காசிம் முதல் 17ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ஒளரங்கசீப் வரை, அழிக்கப்பட்ட இந்து, புத்த மற்றும் ஜெயின் கோயில்கள் குறைந்தபட்சம் 10,000 தைத்தாண்டும் என்பது சரித்திர ஆய்வாளர்களின் கூற்று.

  இவை தவிர வரலாற்றில் பதிவு ஆகாதவை ஏராளம். நம்மில் பலரும் ஏதோ வஹாபியர்கள் இப்போது தாலிபான் தலைமையில் ஆப்கானிஸ்தானில் பாமியான் புத்தர் சிலைகளை வெடிவைத்து தகர்த்தது தான் அவர்கள் நிகழ்த்திய முதல் அழிவு வேலை என்பது போல நினைக்கிறார்கள். கொடுங்கோலன் அவுரங்கசீபுக்கு பின்னரும் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போதும், அதன் பின்னரும், இன்றுவரையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளிலும் இந்து புத்த ஆலயங்கள் தரைமட்டம் ஆகி உள்ளன. அயோத்தியில் 1992-லே நடந்த சம்பவத்துக்கு முன்னர் , நமது லோக்சபாவில் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் சுமார் 30 இந்துக் கோயில்கள் காஷ்மீரில் உள்ள தீவிரவாத இஸ்லாமியர்களால் இடிக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது மீடியாக்கள் இத்தகைய செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றன. சுபி ஞானியர் அடக்க ஸ்தலங்களான தர்காக்களை இந்த வஹாபி வெறியர்கள் பல நாடுகளிலும் இடித்து தரை மட்டம் ஆக்கிவருகின்றனர். இவர்களுக்கு கடவுள் நல்ல கூலி கொடுப்பார்.

  வஹாபியர்களால் இஸ்லாம் பெரிய ஆபத்தை சந்திக்க உள்ளது. உலக அமைதிக்கு கடவுள் அருள்க.

 6. @ மாசிப்பெரியசாமி,

  //பிற மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பது தொன்று தொட்டு இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஒரு வழக்கமே. இந்தக் கொள்கையைக் கண்டு பிடித்தவர்கள் வஹாபியர் தான் என்பதும் பொய்யே.//

  பிற மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பது என்பது முஹம்மது உருவாக்கிய இஸ்லாமிய கொள்கை. அதைத்தான் முஸ்லிம்கள் காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர்.

  //வஹாபியர்களால் இஸ்லாம் பெரிய ஆபத்தை சந்திக்க உள்ளது. உலக அமைதிக்கு கடவுள் அருள்க.//

  வஹாபிகள் தூய இஸ்லாத்தை பின்பற்ற விரும்புகிறார்கள். இஸ்லாம்தான் பயங்கரவாதத்திற்கு ஊற்றுக்கண். இஸ்லாம் இருக்கும்வரை அதன் அடிப்படை கொள்கையான பயங்கரவாதம் இருக்கும். இஸ்லாத்தை அழிக்காமல் பயங்கரவாதம் ஒழியாது. எனவே உலகத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் இஸ்லாம் முற்றிலுமாக உலகிலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டும். இது வன்முறையற்ற வழிமுறையில் செய்யப்பட வேண்டும்.

 7. மேதாவி அண்ணாதுரை கூட ஒரு புத்தகத்தில் – நாளந்தா – இந்துமத-மற்றும் பிராமணர்களால் அழிக்கப்பட்டதாக எழுதி இருக்கிறார் ! communisam அழிந்துபோன இயக்கம் . இந்த இஸ்லாமிய மத வெறி கும்பல்களை – யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம் .அவர்களே ஷியா -சன்னி என்று ஒழிந்து விடுவார்கள் ! புத்த மதம் விழ்ந்தது – இந்த காட்டு மிராண்டி கும்பல்கள் நடத்திய வெறியாட்டத்தில் தான் . அப்போது வடக்கே சந்திர குப்தர் -அசோகர் – சமுத்திர குப்தர் போன்ற மன்னர்கள் இருந்து இருந்தால் இவர்களை அடியோடு ஒழித்து கட்டி இருப்பார்கள் . இந்தியாவில் ஆங்கிலயேர் வந்ததில் ஒரு நல்ல விஷயம் – ஒரே நாடாக இந்தியாவை ஒன்று படுத்தி -இந்த கும்பல்களை அடக்கி வைத்தது தான் !

 8. அறிவுத்திருக்கோவிலான நாலந்தா பற்றிய இத்தகு ஆய்வுக்கட்டுரைகளை படிக்காமல் இருந்திருந்தால் நானும் திரிபுகளையே நம்ப வேண்டியவனாயிருந்திருப்பேன்… சனாதனிகளுக்கும் பௌத்தத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு நாலந்தாவின் அழிவில் பங்களிப்புச் செலுத்தியிருக்குமா..? என்றே நானும் நினைத்ததுண்டு… ஆனால், 12ஆம் நூற்றாண்டு வரை அது சிறப்புற்றிருந்தமையை இக்கட்டுரை மூலமாகவே அறிந்து கொண்டேன்…

 9. ஒரு சின்ன திருத்தம்
  ” குதுப்-உத்-தின் இபாக் ” டெல்லி -ஐ ஆண்டது 1206 முதல் 1210 வரை … இங்கு 1197 என்று கூறப்பட்டுள்ளது …

  https://en.wikipedia.org/wiki/Qutb-ud-din_Aibak

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *