முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.
Having lifted Islam to the head, You have engulfed Hindustan in dread….Such cruelties have they inflicted, and yet Your mercy remains unmoved…Should the strong attack the strong, the heart does not burn. But when the strong crush the helpless, surely the One who was to protect them has to be called to account….O’ Lord, these dogs have destroyed this diamond-like Hindustan, (So great is their terror that) no one asks after those who have been killed and yet You do not pay heed…
– Guru Nanak (from Granth Sahib)
கல்வியிலும், கணிதத்திலும், அறிவியலிலும், வான சாஸ்திரத்திலும் உலகிற்கே ஒளியூட்டிக் கொண்டிருந்த இந்தியா இஸ்லாமிய காலனியாதிக்கத்தின் விளைவாக மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. கல்வியறிவே இல்லாத மூடர்களான இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவிற்கே உரித்தான, அற்புதமான கல்விமுறையைச் சிதைத்து அழித்தார்கள்.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முந்தைய இந்தியாவில் கலைகளும், மருத்துவமும், இலக்கியமும் செழித்து விளங்கியது என்பதினை எவரும் மறுக்கவியலாது. முன்பே கூறியபடி மாபெரும் பல்கலைக் கழகங்கள் நாளந்தா (427-1197), தக்ஷீலா, காஞ்சி, விக்ரமஷீலா, ஜகதாலா, ஓடாந்தபுரா போன்ற இடங்களில் அமைந்திருந்தன. பண்டைய பீகார் பவுத்த மதக் கோட்பாடுகளையும், கல்வியையும் புகட்டும் மாபெரும் கேந்திரமாக இருந்தது. அங்கு அமைந்திருந்த நாளந்தா பல்கலைக்கழகம் உலகில் முதல் முதலாக மாணவர்கள் தங்கிப் படிக்கும் (Dormitories) ஏற்பாடுகளை உடையதாக இருந்தது.
நாளந்தா புகழுடன் இருந்த நாட்களில் ஏறக்குறைய 10,000 மாணவர்களும், 2000 ஆசிரியர்களும் அங்கு இருந்தார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பதெற்கன ஒன்பது மாடிகள் கொண்ட ஒரு மிகப்பெரும் நூலகம் அமைந்திருந்தது. பல அபூர்வமான நூல்களின் பிரதிகள் அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. நாளந்தா ஒரு உலகப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது. உள் நாட்டு மாணவர்கள் மட்டுமன்றி கொரிய, ஜப்பானிய, இந்தோனேஷிய, பாரசீக, துருக்கி நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு பயின்று வந்தார்கள்.
ஏற்கனவே கூறியபடி, 1197-ஆம் வருடம் மூடனான பக்தியார் கில்ஜி நாளந்தா பல்கலைக் கழகத்தை அழித்ததுடன், அங்கிருந்த பவுத்த பிட்சுகளான ஆசிரியர்களையும், மாணவர்களையும் படுகொலை செய்ததுடன், விலை மதிக்க முடியாத புத்தகங்களையும் தீக்கிரையாக்கினான்.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முன்னால் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய தக்ஷீலாவிற்கு (தக்ஷஷீலம், Taxila in today’s Pakistan) பாக்தாதிலிருந்து வந்த மாணவர்கள் அங்கு தங்கி மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார்கள். இவை போன்ற அற்புதமான பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதன் மதிப்பினை உணராத தற்குறிகளான இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்து ஒழித்தார்கள். அதன் பின்னர் அமைந்த இஸ்லாமிய ஆட்சியில் இது போன்ற கல்வி நிறுவனங்கள் மீண்டும் தலையெடுக்க இயலவில்லை. அறிவியலும், கல்வியும் இஸ்லாமிய இந்துஸ்தானத்தை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று விட்டது என எழுதுகிறார் அல்-புரூனி.
மதச் சகிப்புத்தன்மை கொண்டவரான அக்பரின் காலத்தில் இந்துக்கள் மீண்டும் ஆயிரக்கணக்கான ஆலயங்களை கட்டியெழுப்பினார்கள். அந்த ஆலயங்கள் இந்துக்கள் கல்வி கற்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன. பின்னர் ஆட்சிக்கு வந்த அவுரங்கசீப், அது போன்ற இந்துக் கோவில்களில் முஸ்லிம் மாணவர்களும் படிப்பதை அறிந்து, அந்தக் கோவில்களை இடித்துத் தள்ள உத்தரவிட்டான். பாமினி சுல்தானான் அகமத்-ஷா-பாமானி “சிலை வழிபாடு செய்யும் கோவில்களை இடித்து, பிராமணர்களின் பள்ளிகளை” அழித்தான்.
இப்படியாக இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் குடிமக்களுக்கு பள்ளிகளைக் கட்டி, அங்கே மதச் சார்பற்ற கல்வியைப் போதிப்பதினை விடுத்து, அந்தப் பணியைச் செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள் அல்லாத காஃபிர்களின் பள்ளிகளை இடித்துத் தள்ளுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகம், காலிஃபா ஓமாரால் 641-ஆம் வருடம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
பாரசீகத்திலிருக்கும் டெஸிஃபோனில் (Ctesiphon) அமைந்திருந்த ஜொராஸ்ட்ரிய அரச நூலகம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் எரித்துச் சாம்பலாக்கப் பட்டது. டமாஸ்கசிலும், ஸ்பெயினிலும் இருந்த இது போன்ற பெரும் நூலகங்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. 1171-ஆம் வருடம் சுல்தான் சலாஹூதின், எகிப்தின் கெய்ரோவில் அமைந்திருந்த மற்றொரு பெரிய நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினான். இந்தியாவின் நூலகங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் நிகழ்ந்த கதியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இஸ்லாமியப் பள்ளிகளை மட்டுமே கட்டினார்கள். முக்தாப் மற்றும் மதரசா என்று அழைக்கப்பட்ட இப்பள்ளிகள் பெரும்பாலும் மசூதிகளுடன் இணைந்தே இருந்தன. அங்கே படிக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு மத போதனையும், ராணுவ மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டன. இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்படியான கல்வியே அவர்களுக்கு போதிக்கப்பட்டது. அரபி படிப்பதும், குரானை மனப்பாடம் செய்வதும், “இறைதூதரின்” வாழ்க்கைமுறையும், இஸ்லாமிய ஷரியா சட்டங்களும் மட்டுமே அங்கு பிரதானமான கல்வியாக இருந்தது.
இஸ்லாமிய அரசாங்கத்தை நடத்துவதற்குத் தேவையான விவசாய, கணித, வான சாஸ்திர, வரலாறு, புவியியல் போன்ற பாடங்கள் மிகக் குறைவான அளவிலேயே மதரசா மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது.
இது போன்ற மதரசாக்களைக் குறித்து எழுதும் இஸ்லாமிய வரலாற்றாசிரியர் மற்றும் கவிஞரன அல்லம் ஷிலிபி (1914), மதரசா மாணவர்களுக்கு உணவும், உறைவிடமும், மெத்தையும், எண்ணெயும், எழுதுகோலும், பழங்களும், இனிப்பும் வழங்கப்பட்டதாக எழுதுகிறார். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்த மொராக்கோ நாட்டு இப்ன்-பதூதா, தான் இதுபோன்ற மதரசாக்களில் தங்கியதைப் பற்றி எழுதியிருக்கிறார். அவர் கண்ட ஒரு மதரசா 300 அறைகள் கொண்டதாக இருந்ததாகவும், மாணவர்களுக்கு குரான் பயிற்றுவிப்பதைப் பார்த்ததாகவும், அவர்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவும், உடைகளும், பிறவும் வழங்கப்பட்டதைக் கண்டதாகவும் சொல்கிறார் பதூதா. அவர் 16 நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்த இன்னொரு மதரசாவில் மாணவர்களுக்கு அற்புதமான கோழி இறைச்சியும், புலாவும், குர்மாவும், தட்டு நிறைய இனிப்புகளும் வழங்கப்பட்டதனைக் கண்டதாகவும் குறிப்புகள் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்.
இந்தப் பள்ளிகள் அனைத்திலும் இஸ்லாமிய மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்துக்கள் எவருக்கும் அங்கு சேர அனுமதியில்லை. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் தினப்படி நிர்வாகத்தில் முஸ்லிம்களுடன் மட்டுமே தொடர்பு கொண்டிருந்தனர். இதனால் இந்துக்களுக்கு கல்வியளிப்பது ஒரு தேவையற்ற விஷயமாகவே கருதினார்கள். அதையும் விட சுத்தமற்ற காஃபிர்களை தங்களின் மசூதிகளுக்கும், மதரஸாக்களுக்கும் நுழைய அனுமதிக்கக் கூடாது என்னும் எண்ணமும் ஒரு காரணம். இது போன்ற செயல்கள் இன்றைக்கும் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.
இதில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் அவை மிகக் குறைந்த காலத்திற்கே செயல்பட்டது. உதாரணமாக, எல்லா மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் எண்ணமுடையவரான அக்பர், தனது ஆட்சிக்காலத்தில் எல்லாத் துறைகளிலும் அனைத்து மதத்தினரும் பங்கெடுப்பதற்கான கதவுகளைத் திறந்துவிட்டார். முஸ்லிம்கள் அல்லாத மாணவர்கள் கூட மதரஸாக்களுக்குச் சென்று கல்வி பயில அனுமதியளித்ததுடன், முஸ்லிம் மாணவர்கள் இந்து சமயப் புத்தகங்களையும், வேதங்களையும், உபநிஷத்களையும் பயில வழி வகைகளும் செய்தார். ஆச்சரியப்படும் வகையில், அக்பர், அரபி மொழியை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க முயற்சியும் செய்திருக்கிறார். ஆனால் அது வெற்றியடையவில்லை.
*****
630-650-ஆம் வருட காலத்தில் இந்தியாவின் பல பாகங்களுக்கும் பயணம் செய்த சீன யாத்ரிகரான ஹியுன் செங் (யுவான்-சுவாங் அல்லது Hiuen Tsang), நாளந்தா பல்கலைக்கழகத்திற்கும் சென்றடைகிறார். இந்தியக் கல்வி முறை மிக ஒழுங்குடனும், பக்தியுடனும் நடத்தப்படுவதாகச் சொல்லும் யுவான்-சுவாங், ஏழு வயது முடிந்த ஆண்-பெண் இருபாலரும் ஐந்து சாஸ்திரங்களையும் – இலக்கணம், அறிவியல் கலைகள், மருத்துவம், தர்க்கம், தத்துவம் – கற்கத் துவங்குவதைக் காணுகிறார்.
இதுவே இந்தியர்களின், இந்தியக் கலாச்சாரத்தின் ஆணிவேராக அமைந்தது. இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அல்-புரூனி மற்றும் அல்-அண்டாலுசி போன்றவர்கள் இதனையே ஆச்சரியத்துடன் பதிந்து வைத்துச் சென்றிருக்கிறார்கள். அலெக்ஸாண்டரின் வருகையும் இந்தியா கிரேக்கத்துடன் தொடர்பு கொண்டு தன்னை மேலும் பண்படுத்திக் கொண்டது. இஸ்லாம் பிறப்பதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்களின் கல்வித்திறன் உலகெங்கும் பரவியிருந்தது.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களைத் தூக்கிப் பிடிப்பதையே தனது பிழைப்பாக நடத்திய ஜவஹர்லால் நேருவே கூட, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அவர்கள் ஆண்ட எட்டு நூற்றாண்டுகளில் ஒரே ஒரு நல்ல பல்கலைக்கழகத்தைக் கட்டவில்லை என்று புகார் கூறுகிறார்.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் மதச் சார்பற்ற கல்வி குறித்து எந்தவிதமான அக்கறையும் அற்றவர்களாகவே இருந்தார்கள். குறிப்பாக அறிவியலில். அக்பரைப் போன்ற மதச் சார்பற்ற ஆட்சியாளர்களே கூட. கல்வியறிவற்ற அக்பர், தனது சொந்த மதமான தீன்-இலாஹியை நிறுவ எண்ணம் கொண்டவராக இருந்தாரேயன்றி கல்வியின் பொருட்டு வேறெந்த உருப்படியான முடிவுகளையும் எடுக்க முடியாதவராகவே அறியப்படுகிறார். மதரசாக்களில் இந்து இலக்கியங்களை படிக்க வசதி செய்து கொடுத்தது போன்ற சில சிறிய முன்னேற்றங்களை மட்டுமே அவரால் செய்ய முடிந்தது.
(தொடரும்)
திரு ரூபன் அவர்களே,
பாரதத்தின், பண்டைய கல்வி எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை நன்றாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.
இதுபோன்றே மிஞ்சி இருந்த இந்துத் கல்வியையும், அழிப்பதில் ஆங்கிலேயர்கள் வெற்றி கண்டார்கள். அதற்கு மெக்காலே பிரபு ஒரு முக்கியமான காரணம். இந்துக் கலாசாரம் அழிந்து, இந்துக்கள் கிரித்தவ சமயத்தை தழுவ வேண்டும் எனில், இந்துக்கள் அடக்கி ஆளப் பட வேண்டும் எனில், இந்துக்கள் தங்களுக்கே உரித்ததான வேத அறிவு பெறக்கூடாது, வேதக் கல்வி நின்று போகவேண்டும் என்று, வேதம் கற்பவர்களுக்கு பணத்தாசை காட்டி, ஆங்கில அறிவு புகட்டி, வேதக் கல்வி நின்று போக வழி வகுத்தார்கள், ஆங்கிலேயர்கள். ஆங்கிலம் கற்றால் பணம் எளிதில் ஈட்டலாம் என்ற நிலை வந்ததும், நமது கல்வியைத் தானாகவே துறக்க மக்கள் முடிவு செய்தனர். ஆயுர் வேதம், சித்த மருந்து சிகிச்சை முறைகளும் பின் தள்ளப் பட்டன. நமது வழிமுறைகளுக்கு மூடப் பழக்கம் என்ற முத்திரை குத்தப் பட்டது. மாக்ஸ் முல்லர், வேதங்களைக் கற்றது, அதன் மேன்மையை உலகுக்குப் புகட்ட அல்ல. வேதங்கள் விவிளியத்திற்குக் கீழானவையே என்று காட்டத்தான். ஆனால், அவர் செய்தது, அவர் நினைத்ததற்கு மாறாக் வேத அறிவு உலகெங்கும் வளர வித்திட்டது.
இதை அறியாமல், குமாரில பட்டரும், ஆதி சங்கரரும் புத்த மதத்தையும், புத்த விகாரங்களையும் அழித்து ஒழித்தார்கள் என்று போலிப் பகுத்தறிவாளர்களும், இந்துமத எதிர்ப்பாளர்களும் எழுதி வருகிறார்கள். உங்களது முயற்சி அந்தப் போய்ப் பிரச்சாரத் திரையைக் கிழிக்கிறது.
உங்களது சீரிய பணி தொடரட்டும்!
ிரு ூபன்,
சீதாராம் கோயல் எழுதி உள்ள “Hindu Temples what happened to them? என்ற புத்தகத்தில் உள்ள இடிக்கப்பட்ட கோவில்களின் பட்டியலை இங்கே கொடுக்கவும்.
திரு அரிசோனான்,
அமெரிக்காவில் கிறிஸ்தவ மதம் அழிந்து வருகிறதா? Wafa sultan என்ற அமெரிக்காவில் உள்ள சிரியா நாட்டுப் பெண்மணி இஸ்லாமை எதிர்த்து பேசிவருகிறாரே; அதனால் தாக்கம் எதாவது உள்ளதா? You Tube ல் அவரது விவாதங்களைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
It is said that Nalanda Library burned for nearly a year..so much was the treasure of books in that library. Even the conservative reports say that it burned for 3 months. So anywhere between 3-12 months..this should give a glimpse of how many lakhs and crores of books were lost.
And when someone talk about the glorious past we had and provide reference in our ancient texts, some fools comment that “why we had to wait for foreigners to find this when we already had it..whats use in bragging about what we had in the past when we don’t have anything now”…kind of argument. They don’t realize that we had so much and lost so much in the past 1000 years that we should go back to our roots and rekindle the knowledge we had. Everything is a cycle and our glory will come up one day. Satyam eva jayathe.
“மதச் சகிப்புத்தன்மை கொண்டவரான அக்பரின்”
I have problem with the above statement.I have read elsewhere about Akbar’s intolerance to Hinduism.We Hindus have been taken for a ride by Pseudo secular historians and we still consider this rascal as ” Great”. Hindus not only have tolerance for the intolerable but they also lack critical analysis of their own history. The only thing one can say about Akbar is that he was MARGINALLY BETTER than other Islamic kings.
Indian history needs to be rewritten based on primary sources.
https://www.hindupedia.com/en/Akbar
https://www.hinduwisdom.info/Islamic_Onslaught3.htm
PLZ WRITE ABOUT 13CENTURY, MALICK KAPOOR ATTACK IN MADURAI,THAT TIME 20 THOUSAND SOLIDERS WAS THERE IN PANDIAN TEAM. SUDDENLY THEY CHANGED IN MALICK KAPOOR SIDE.
கஜினி முகமதுகளும், ஔரங்கசீப் களும், பாபர்களும் இன்றைய தினம், கருனாநிதிகளாகவும், முலாயம் சிங் மற்றும் திக்விஜய சிங் வடிவமாக வலம் வருகின்றனர்.
கண்ணனின் கருத்து மிகவும் சரியே.
சுவாமி விவேகானந்தர் சொன்னது போல் நம் வரலாற்றை நாமே எழுத வேண்டும்.
திரு முத்துக்குமார் அவர்களே,
அமெரிக்காவில் பேச்சுரிமை, எழுத்துரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனால், நாட்டு ஒற்றுமைக்கே கேடு வராதவரையும், வன்முறையைத் தூண்டாதவரையும், எதை வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம்.
எனவே, கிறித்தவ சமயத்தைப் பற்றி குறை கூறியும் பேசப் படுகிறது. அதே மாதிரி வபா சுல்தான் இஸ்லாமைப் பற்றிப் பேசவும் எழுதவும் முடியும். அமெரிக்காவில் அவர் இருக்கும் வரை அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதனால் இஸ்லாமுக்கு எந்தவித தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவரது விவாதங்களை இதுவரை பார்த்ததில்லை, கேட்டதும் இல்லை. தெரிந்து கொண்டபின் என் கருத்தைத் தெரிவிக்கிறேன்.
ஆப்பிரிக்க இளைஞர்கள் கிறித்தவ சமயத்திலிருந்து இஸ்லாமுக்குத் தானாகவே மாறுவதாலு,ம் கிறித்தவர்களாக இருந்து நாத்திகர்கள் ஆனவர்களும் சமயத்தைக் குறிப்பிடாததாலும் , கிறித்தவ சமயத்தின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. கத்தோலிக்கர்களின் விழுக்காடு அப்படியே இருந்தாலும், மற்ற கிறித்தவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு (%) குறைந்திருக்கிறது என்றும், அமெரிக்க முஸ்லிம்களின் எண்ணிக்கை 0.3% லிருந்து 0.6% ஆக, அதாவது இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது என்றும் தெரிகிறது.
மேலும், குடியேறுபவர்கள் (கிரீன் கார்டு பெற்றவர்கள், அமெரிக்கக் குடி உரிமை பெற்றவர்கள்) வேறு சமயத்தாராக இருந்தாலும், கிறித்தவ சமயத்தின் எண்ணிக்கை குறையலாம் அல்லவா? கீழ்க்கண்ட வலையத்திற்குச் சென்றால் மேலும் அறிந்து கொள்ளலாம்.
https://www.cnn.com/2009/LIVING/wayoflife/03/09/us.religion.less.christian/
அமெரிக்காவில் 15லிருந்து 24 லட்சம் இந்துக்கள் (0.5 %) இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. உலகத்திலேயே இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாட்டில் அமெரிக்க 10ம் இடத்தை வகிக்கிறது.
https://www.ask.com/wiki/Hinduism_in_the_United_States
என்ற வலையம் பயனுள்ள தகவல்களைக் கொடுக்கிறது.
What kannan and vivek told is right.
In our history books, we were taught a different version as, Aurangaseeb earned his livelyhood, through copying of khuran and making caps! How ridiculous!
After this internet and google came into our life, we happen to know so many hidden things.
There was no tolerant muslim kings. It is just calling a hot ice. Why our history was not written properly.
திரு முத்துக்குமார் அவர்களே,
திருமதி வபா சுல்தான் ஷேக் ஓமர் பக்ரியுடன் நிகழ்த்திய வாதத்தை வலையத்தில் பார்த்தேன். இஸ்லாமைப் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் ஓமர் பக்ரி பேசி இருக்கிறார். அதற்குத் தகுந்த மறுமொழியை வபா சுல்தான் கொடுத்திருக்கிறார். ஓமர் பக்ரி சொல்வதைத்தான் திரு M.A. கான் அவர்களும் எழுதி இஸ்லாமிய ஜிஹாத் வரலாற்றின் கொடுமைகளைப் பற்றி எழுதி உள்ளார். அதைத்தான் திரு ரூபன் நமக்குக் கொடுத்து வருகிறார்.
திரு கான் அவர்களைப்போல, திருமதி வபா சுல்தான் அவர்களும் இஸ்லாமை விட்டு நீங்கி அதன் உண்மை உருவத்தை உலகுக்குக் காட்ட முயல்கிறார்கள். இதெல்லாம் அமெரிக்கர்கள் அறிந்ததே.
பாத்ஷா அக்பர் அவர்கள் மதச்சகிப்புத்தன்மையுடையவர் என்று இங்கு கருத்துப் பகிரப்பட்டுள்ளது.
பெருமளவு உண்மையும் கூட.
பின்னிட்டும் ஹனாஃபி ஸுன்னி முஸல்மானான அவர் ஆரம்ப நாட்களில் ஷியா மற்றும் ஜிக்ரி / மஹ்தவி முஸல்மான்களுக்கு இழைத்த கொடுமைகள் பல.
பின்னாட்களில் அக்பர் தன்னுடைய நிலைப்பாடுகளை பெருமளவு மாற்றிக்கொண்டது காணக்கிட்டுகிறது.
மியா தான்ஸேனுடன் பாத்ஷா அக்பர் ஸ்வாமி ஹரிதாஸ் அவர்களை ப்ருந்தாவனத்தில் தரிசனம் செய்ய விழைவதும் அதன் மூலம் அவர் பெரும் பாடமும் நெகிழ்வளிக்கச் செய்பவை.