மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்
‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.
சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.
அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.
முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.
தொடர்ச்சி..
இஸ்லாமிய மதத்தில் உயர்சாதியென்றோ அல்லது தாழ்ந்த சாதியென்றோ எவரும் இல்லையென்றும், அமைதி மார்க்கத்தில் அனைவரும் சமமென்றும், இஸ்லாமிய மதமாற்றங்கள் இந்தியர்களிடையே சமூக சமத்துவத்தை (egalitarianism) ஏற்படுத்தியதாகவும் அடிக்கடி சொல்லப்பட்டு வருவதினை கவனித்திருக்கிறோம். ஆனால் உண்மையில் அப்படியான சமூக மாற்றத்தை இஸ்லாமிய மதமாற்றங்கள் கொண்டு வந்ததா என்றால் அதற்கு “இல்லை”யென்ற பதிலே சரியான ஒன்றாக இருக்கும்.
மதம் மாறினால் ஒருவனுக்கு உண்மையான சுதந்திரமும், சமுதாயாத்தில் சம அந்தஸ்தும் கிட்டும் எனக் கூறும் முஸ்லிம்களின் பிரச்சாரத்தை உண்மையென நம்பிய பல இந்திய தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பெரு விருப்புடன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள். அது ஓரளவிற்கு இந்து மதச் சாதியக் கட்டுப்பாடுகளிலிருந்து அவர்களுக்கு விடுதலை அளித்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக இஸ்லாமிய மதத்திலும் அவர்களின் சமூக அந்தஸ்து எந்த விதத்திலும் மாறிவிடவில்லை என்பதுவே உண்மையான நிலைமையாகும்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சுய விருப்புடன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள் என்று முதன்முதலில் சொன்னவர்கள் ஐரோப்பியர்களே. அவர்களைத் தொடர்ந்து முஸ்லிம்களும் அதனையே செல்ல ஆரம்பித்தார்கள். இதனை நிரூபிக்கப் புறப்பட்ட ஃபாஸ்லி ராப்பி (Fazl-i Rabbi) என்னும் முஸ்லிம் ஆராய்ச்சியாளர், மதமாற்றம் தாழ்த்தப்பட்டவர்களின் சமூக அந்தஸ்திலோ அல்லது குடும்ப அந்தஸ்திலோ எந்தவிதமான மாற்றத்தையும் அளிக்கவில்லை என்று கண்டடைகிறார். இவ்வாறு மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்களும், இந்துமதத்தில் அவர்களுக்கு இருந்த அதே சமூக அந்தஸ்துடன் மட்டுமே அவர்களை நடத்துவதனையும் அவதானிக்கிறார். ஆக மதமாற்றத்தால் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமையில் எந்த முன்னேற்றமுமில்லை.
தாழ்த்தப்பட்ட இந்துக்கள், உயர்சாதி இந்துக்களுக்கு நிகராக பெற வேண்டுமானால் “சம உரிமையும், சகோதரத்துவமும்” உடைய இஸ்லாமின் கதவுகள் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்காகத் திறந்துவிடப்பட வேண்டும் என்ற எண்ணமுடைய இன்னொரு இஸ்லாமிய ஆராய்ச்சியாளரான அஸ்ரஃப், அதனைக் குறித்து மேலும் ஆராய முயல்கிறார். அதில் அவருக்குப் பெரும் ஏமாற்றமே கிட்டுகிறது. “மதம் மாறியதால் மட்டுமே ஒரு சாதாரண இஸ்லாமியனின் நிலைமை மாறிவிடவில்லை. அவனது மதமாற்றத்திற்கு முந்தைய சாதியும், அவனுக்கு அங்கு இருந்த அதே சமூகச் சூழ்நிலையும் மதம் மாறிய பிறகும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.” எனக் கண்டடைகிறார்.
1850-ஆம் வருடத்தில் முஸ்லிம்களாக மதம்மாறிய வங்காளத்தின் தாழ்த்தப்பட்ட மக்களான பெடியாக்களைக் (Bediya) குறித்து ஆரயும் ஆங்கிலேயரான வைஸ், “பெடியாக்கள் இஸ்லாமிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தாலும் அவர்கள் மசூதிகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அது போலவே முஸ்லிம்களுக்குப் பொதுவான மயானங்களிலும் அவர்கள் புதைக்கப்பட அனுமதியில்லை. சமூதாய அளவிலும் அவர்களுக்கு முன்பிருந்த நிலையே தொடர்ந்ததினைக் கண்டேன். அவர்களுடன் வேறெந்த முஸ்லிம்களும் சேர்ந்து உண்பதினையோ அல்லது தொடர்பு வைத்துக் கொள்வதினையோ நான் காணவில்லை. இந்து சூத்திரர்கள் சந்தால் சாதியினரை நடத்துவதை விடவும் மோசமான முறையில் இஸ்லாமிய உயர்சாதியினர் பெடியாக்களை நடத்துவதினைக் கண்டேன்.” எனக் கூறுகிறார்.
மதம் மாறிய தாழ்த்தப்பட்ட இந்துக்கள் இஸ்லாமியர்களாக மாறியதால் அவர்களுக்கு சமுதாயத்தில் எந்தவிதமான புதிய அங்கீகாரமோ அல்லது அந்தஸ்தோ கிட்டவில்லை என்பதுவே உண்மையான நிலை. இதே நிலை இன்றைக்கும் இஸ்லாமிய சமுதாயத்தில் நடைமுறையில் உள்ளது. இந்துக்கள் தாழ்த்தப்படவர்களை நடத்தியதினை விடவும் மோசமான முறையிலேயே இஸ்லாமியர்களாலும் நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பதுவே பெரும்பாலான ஆராய்ச்சிகளின் முடிவு. தாழ்த்தப்பட்டவர்களைப் போலவே மதம் மாறிய அல்லது மாற்றப் பட்ட பிற இந்து உயர்சாதியினருக்கும் அந்த மத மாற்றம் எந்தவிதமான முன்னேற்றத்தை அளிக்காதது மட்டுமன்றி, பிற இந்திய முஸ்லிம்களைப் போலவே கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளியது. அதனையும் விட அவர்களின் தனி மனித சுதந்திரம் பறிக்கப்பட்டு, பெண்ணடிமைத்தனமும், கவுரவக் கொலைகளும் (honor killing) நிரம்பியவர்களாக இன்றைக்கு மாறியிருக்கிறார்கள்.
உண்மையில் இஸ்லாம் இந்தியாவின் சாதிய அமைப்பை மேலும் இறுக்கியது. கொடுமையான சாதிய அடக்குமுறை இஸ்லாம் இந்தியாவில் பரவுவதற்கு முன்னர் பரவலாக நிலவியது என்பது பொதுவாக நிலவும் ஒரு கருத்து. ஆனால் பழங்கால சாதிய அமைப்பைக் குறித்து விளக்கும் கவுடில்யரின் அர்ததசாஸ்திரம், நிதிசாரா போன்றவை இந்திய சாதிய அமைப்பு கடுமையான ஒன்றாக இருக்கவில்லை என்று தெரிவிக்கின்றன.
பழங்கால இந்திய சாதிய அமைப்பை விளக்கப் புகும் ஜவஹர்லால் நேரு, “நிதிசாரா சொல்வது போல திறமைக்கும், பலத்திற்கும் ஏற்றவாறு சாதிகள் மேலும், கீழும் செல்வது பொதுவான நடைமுறையாக இருந்திருக்கலாம்….தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் உயர் நிலையை அடைவதும் அவ்வப்போது நிகழ்ந்திருக்கிறது….சூத்திரர்கள் அரசர்களாகக் கூட இருந்திருக்கிறார்கள். அவ்வாறு உயரும் ஒரு சாதியினைச் சார்ந்த அத்தனை உப-சாதிகளும் அதனுடன் உயர்ந்தன…தாழ்த்தப்பட்ட மற்றும் உயர்சாதியினரிடையே அதிகாரப் போட்டிகளும் நடந்ததுடன், பல சமயங்களில் அவ்விரு சாதியினரும் இணைந்து ஆட்சியமைத்ததுடன், ஒருவருக்கொருவர் அனுசரணையாகவும் இருந்திருக்கிறார்கள்” எனக் கூறுவதுடன், “இந்திய சாதியமைப்பின் மேல் மட்டத்திலிருக்கும் பிராமண, ஷத்ரியர்களின் ஆளுமையின் கீழ் பிற சாதியினர் வாழ வேண்டியிருந்தது. ஆனால் பொதுவில் இந்திய சாதிய அமைப்பு மிகவும் இளகும் தன்மையுடைய ஒன்றாகவே இருந்துவந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்தியாவிற்குள் நுழைந்த இஸ்லாம் இந்த இளகும் தன்மையை நீக்கி, சாதிய அமைப்பை இறுக்கியதுடன் அதனை நிரந்தரமாக்கவும் செய்தது….” என்கிறார்.
*********
இஸ்லாமிய ஆக்கிரமிப்பினால் இறுகிய சாதியக் கட்டமைப்பு பல உயர்சாதி இந்துக்களை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியது. இஸ்லாமிய ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை மற்றும் வரி வசூலிப்பு முறைகளினால் பெரும் துயருற்ற பல இந்துக்கள் காடுகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். அவர்களால் பல புரட்சிகளும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக நடத்தப்பட்டன என்பதினை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களே எழுதி வைத்திருக்கிறார்கள்.
கியாசுதீன் பால்பனின் (aka உலுக் கான் பால்பன்) ஆட்சிக்காலத்தில் (1265-85) பல இலட்சக்கணக்கான இந்துக்களின் (உயர் மற்றும் தாழ்ந்த சாதியினர்) செல்வம் சூறையாடப்பட்டு, கொடூரமான முறையில் அவர்களின் குடும்பங்கள் அழிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் காடுகளில் ஒளிந்து கொண்டு இரவு நேரக் கொள்ளைக்காரரகளாக மாறினார்கள். அவர்களை ஒழிக்கப் புறப்பட்ட சுல்தான் கியாசுதீன் முதலில் டெல்லியைச் சுற்றியிருந்த பகுதியிலிருந்த காடுகள், மற்றும் மலைகளைச் சூழ்ந்து கொண்டு, “அங்கு ஒளிந்திருக்கும் அத்தனை ஆண்களையும் கொன்றுவிட்டு, அவர்களின் பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்து வரும்படி” அவனது தளபதிகளுக்கு உத்தரவிடுகிறான் எனப் பதிவிடுகிறார் வராற்றாசிரியர் பரானி.
கொள்ளையர்களைப் பிடிக்க நடந்த டெல்லியின் காடுகளுக்குள் நடந்த சண்டையில், “ஏறக்குறைய ஒரு இலட்சம் அரசாங்க படைவீரர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களையும் விட அதிகமான கொள்ளையர்களும் கொல்லப்பட்டார்கள்”. அதனைத் தொடர்ந்து டெல்லியின் அருகாமைப் பகுதிகளான காம்பில் மற்றும் பாடியாலி மிது படையெடுக்கும் சுல்தான், அங்கு ஏறக்குறைய ஆறு மாதங்கள் வரை இந்தக் கொள்ளையர்களை ஒழிக்கும் பணியில் ஈடுபடுகிறான். அதன் பின்னர் கடேஹாருக்குச் செல்லும் கியாசுதீன், அந்தப் பகுதியிலிருக்கும் பதாவுன் மற்று அம்ரோஹாவில் ஏராளமானவர்களைக் கொல்கிறான். “கொல்லப்பட்டவர்களின் உடலிலிருந்து வழிந்த இரத்தம் ஓடையைப் போல ஓடியது. கொல்லப்பட்ட பிணக்குவியல் ஒவ்வொரு கிராமத்திலும், காடுகளிலும் நிரம்பி வழிந்தன. அதிலிருந்து கிளம்பிய துர்நாற்றம் தூரத்திலிருக்கும் கங்கை வரை வீசியது” என்கிறார் பரானி.
1320-லிருந்து 25 வரை ஆண்ட சுல்தான் கியாசுதீன் துக்ளக்கின் காலத்தில் விதிக்கப்பட்ட கடுமையான வரிச்சுமை காரணமாக விவசாயிகள் மோசமான பாதிப்பிற்குள்ளானார்கள். அவனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முகமது துக்ளக் (1325-51) அந்த வரியை மேலும் ஐந்து முதல் பத்து சதவீதம் வரை உயர்த்தினான். இதன் காரணமாக வறுமையில் தள்ளப்பட்ட விவசாயிகள் காடுகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். இதன் காரணமாக போதுமான அளவு விவசாயம் செய்யப்படாமல் உணவு தானிய உற்பத்தி மிகவும் குறைந்தது. இதான் உண்டான பஞ்சத்தின் காரணமாக “இலட்சக் கணக்கானவர்கள் உணவின்றிப் பட்டினியால் செத்து மடிந்தார்கள்” எனப் பதிகிறார் பரானி.
கராஜல் மலைக்கருகில் ஒளிந்து கொண்டிருக்கும் புரட்சிக்காரர்களை (பெரும்பாலோனோர் முன்னாள் விவசாயிகள்) அனுப்பி வைக்கிறான் துக்ளக். காடுகளுக்குள் புகுந்த படையினர் பின் வாங்கித் தப்பும் வழிகளை அடைத்த புரட்சியாளர்கள், “அங்கு சிக்கிக் கொண்ட அத்தனை படையினரையும் வெட்டிக் கொன்றார்கள். குதிரையில் அமர்ந்திருந்த பத்து படைவீரர்கள் மட்டுமே டெல்லிக்குத் தப்பிச் செல்ல முடிந்தது”. டெல்லிக்கருகில் இருக்கும் டோவாப் பகுதி கடுமையான வரி விதிப்பு காரணமாகவும், இஸ்லாமியப்படைகள் நடத்திய வெறியாட்டங்கள் காரணமாகவும் முற்றிலும் அழிந்தது. அங்கிருந்து தப்ப முடிந்த இந்துக்கள் காடுகளுக்கு ஓடித் தப்பினார்கள். அங்கும் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கோபமடைந்த சுல்தான் ஒரு பெரும் படையணியை அனுப்பி அங்கிருந்த இந்துக்களைப் பிடித்துவர உத்தரவிடுகிறான். “சுல்தானின் படையினரால் அந்தப் பகுதி கடுமையாக அழிக்கப்பட்டது; அங்கிருந்து பிடிக்கப்பட்ட இந்துக்கள் அருகிலிருக்கும் பரான் (Baran) கோட்டைக்குக் கொண்டு வரப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள்” என்கிறது பரானியின் குறிப்பு.
ஜஹாங்கீரின் காலத்தில் இந்தியாவிற்குச் சென்ற (1611) பிரிட்டிஷ் நீலச் சாய (Indigo) விற்பனையாளரான வில்லியம் ஃபின்ச், ஜஹாங்கீரின் வேட்டையாடும் முறைகளைக் குறித்து எழுதி வைத்த குறிப்புகளின் படி, ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான படையினருடன் செல்லும் ஜஹாங்கீர் ஏறக்குறைய ஐந்து மாதங்கள் வேட்டையில் செலவிட்டதாகக் கூறுகிறார். வேட்டையின் போது ஒரு பெரும் காட்டுப்பகுதியோ அல்லது பாலைவனப்பகுதியோ அரசருக்கு உரியதாக குறிக்கப்படும் என்றும், அந்தப் பகுதிகளுக்குள் சிக்கும் வன விலங்குகளோ அல்லது மனிதர்களோ, ஜஹாங்கீரால் மன்னிக்கப்பட்டாலன்றி, உடனடியாக கொல்லப்படுவார்கள் எனக் கூறும் ஃபின்ச், அங்கு கொல்லப்படும் காட்டு மிருகங்களின் இறைச்சி விற்கப்பட்டோ அல்லது ஏழைகளுக்கு பகர்ந்தளிக்கப்படவோ செய்யப்படும் என்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஏராளமான இந்துக்களும் இந்த வேட்டையில் கொல்லப்படுவார்கள் அல்லது அகப்படுவார்கள் என்பதுதான். 1619-20 ஆம் ஆண்டில் இவ்வாறு கொல்லப்பட்டவர்களைத் தவிர்த்து பிடிக்கப்பட்ட இரண்டு இலட்சம் (2,00,000) இந்துக்களை ஜஹாங்கீர் இரானுக்கு அடிமைகளாக விற்றுவிட்டான்.
மதச் சகிப்புத்தன்மை உடையவரென அறியப்படுகிற அக்பரின் காலத்திலேயே கூட பல இலட்சக்கணக்கான இந்துக்கள் காடுகளில் ஒளிந்து வாழ்ந்தார்கள். அக்பரின் இருபத்து ஏழாவது வருட ஆட்சியின் போது தனது படைத்தளவர்களை அழைத்த அக்பர், “மலைக் கோட்டைகளிலும், காடுகளிலும் ஒளிந்திருக்கும் இந்துக்களை உடனடியாகக் கொன்று அவர்கள் சார்ந்திருக்கும் பகுதிகளை அழிக்கும்படி” உத்தரவிட்டதாகக் அக்பர்-நாமா கூறுகிறது.
இது போன்ற செய்திகளே ஏராளமான, பல இலட்சக்கணக்கான, இந்துக்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கொடுமைகளுக்கு அஞ்சிக் காடுகளில் ஒளிந்து வாழ்ந்ததற்கு ஆதாரமாக விளங்குகிறது. அவ்வாறு காடுகளிள் வாழ்ந்தவர்களில் எல்லா சாதியைச் சார்ந்தவர்களும் கலந்து வாழ்ந்ததுடன், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கலகங்களிலும் பங்கெடுத்திருக்கிறார்கள். காட்டுக் கனிகளையும், இலை தழைகளையும், தானியங்களையும், விலங்குகளையும் உண்டு வாழ்ந்த அவர்கள் புதியதொரு சாதியினராக மாறிப்போனார்கள். அவர்களால் மீண்டும் நாட்டிற்குள் சென்று சாதாரண வாழ்க்கை வாழ இயலாது. அவர்களை ஒருவரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.
காட்டு விலங்குகளை அவர்கள் உண்டு வாழ்ந்த காரணமானது, கிராமங்களில் வாழ்பவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமலிருந்திருக்கலாம். அன்றைய இந்திய வழக்கப்படி ஒரு முறை இறைச்சி உண்டவர்கள் மீண்டும் அவர்களின் சாதிகளுக்குள் செல்வது, முக்கியமாக உயர்சாதிகளுக்குள், ஏறக்குறைய இயலாத காரியம். அது பசியினால் உண்டதாக இருந்தாலும் கூட. எனவே இது போன்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்களானார்கள். கொடூரமான இஸ்லாமிய ஆட்சி இது போன்ற தாழ்த்தப்பட்டவர்கள் பெருக உதவியது.
சுருங்கச் சொல்வதானால், இஸ்லாமிய ஆட்சியானது காடுகளுக்குள் ஒளிந்து வாழ்ந்த பல இந்துக்களை அவர்களின் சொந்த சாதியிலிருந்து விலகி இருக்கக் காரணமாகியதுடன், அவர்கள் ஒரு வேறொரு புதிய சாதியினரான, தாழ்த்தப்பட்ட ஒரு சாதியினராக ஆக்கியது. இஸ்லாமிய ஆட்சியினால் இறுகிய சாதி அமைப்பிற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.
(தொடரும்)
“வன்முறையே வரலாறாய்” என்ற கட்டுரை வரும்போதெல்லாம் “ஒரு நபர்” மறுப்பு சொல்லவும் அதற்கு ஒத்து ஊதி தாளம் போட இந்துக்களாக தவறி பிறந்துவிட்ட சில ஜந்துக்கள் இங்கே வருவார்களே! அவர்களை இன்னும் ஏன் காணோம்?
1. Nasir al -Fahd (= சௌதி ஜிஹாதி cleric ) என்பவன் கூறும் வார்த்தைகளை செவிமடுத்து கேளுங்கள்::- If Muslims cannot defeat the KAFIR in a different way, it is PERMISSIBLE to use weapons of mass destruction. குர் ஆனில் உள்ள WORDS களால் யாரும் முஸ்லிம்களாக மாறவில்லை ஆனால் முஸ்லிம்களின் SWORDS களுக்கு பயந்துதான் மாறினார்கள் என்பது இதன் மூலம் தெரியவில்லையா?
உலகத்தில் முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் ஒரே புத்தி கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆமாம். பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவ tunnel அமைத்தார்கள்.என்று நமக்கு தெரியும். அதேபோல பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ tunnel அமைத்துள்ளதாக இப்போது செய்தி வந்துள்ளது.மேலும் 27-8-2014 தேதிய Indian Express ல் வந்துள்ள செய்திபடி சீனாவிலும் முஸ்லிம்கள் tunnel அமைத்துள்ளனராம். ஆனால் பாருங்கள் சௌதி அரேபியாவில் ஒரு முஸ்லிம் திருடினால் அவனது கையை வெட்டுகிறார்கள் (அப்படித்தான் வெட்ட வேண்டும் என்று அல்லாவே தனது agent முகமது மூலம் கூறியுள்ளார் அது குர்ஆனில் உள்ளது) 24-8-2014 அன்று Thirupanandal Kasi Mutt க்குள் அமைந்துள்ள கோவிலின் கலசத்தை திருட ஒருவன் முயன்று இருக்கிறான் அவன் யார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அவன் பெயர் Syed Ibrahim (24) இவன் தஞ்சாவூரிலுள்ள சக்தி நகரை சேர்ந்தவன். பொதுமக்கள் அவனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அல்லாவின் அருளுரைபடி இவனது கையை வெட்டமுடியுமா? முடியாது. அப்படியானால் குரான் படி சௌதி அரேபியாவில் நடப்பார்கலாம. ஆனால் இந்தியாவில் முஸ்லிம்கள் நடக்க மாட்டார்களாம். ஏன்? ஏன்? ஏன்?ஏன்? ஏன்?
3 அ) 29-8-2014 தேதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதாளில் பாருங்கள் அசாமிலுள்ள கெளஹாத்தியில் முஸ்லிம்கள் சிலர் மெக்காவிற்கு புறப்படும் முன்பு ஒரு பேருந்தில் தொழுகை நடத்துகிறார்கள். அதன் போட்டோ அந்த ஆங்கில நாளிதழில் வந்துள்ளது. அதில் ஒரு முஸ்லிம் ஒரு திசை நோக்கி தொழுகிறார். இன்னொரு முஸ்லிம் அவருக்கு எதிரான திசையில் தொழுகிறார். அப்படியானால் மெக்காவிலுள்ள காபாவின் திசை நோக்கி தொழுகிறார்கள் என்பது எல்லாம் டுபாக்கூரா? சிவாஜி நடித்த ஒரு திரைப்படத்தில் “”திசை தொழும் துருக்கர் எம் தோழர்” என்று ஒரு வரி வருவதேன்?
3. கடந்த மே மாதத்தில் ISIS என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 13 வயது முதல் 14 வயது வரை உள்ள 153 பள்ளி மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர். எப்போது தெரியுமா? அவர்கள் முழு ஆண்டு பரீட்சை எழுதி முடித்துவிட்டு திரும்புகையில்தான் இது நடந்தது
4. ISIS தீவிரவாதிகள் புகை படிக்கும் (smoking ) நபர்களுக்கு கசையடி கொடுக்கிறார்கள். தொழுகை நேரத்தில் வியாபாரம் செய்யகூடாதாம் அப்படி தவறி செய்தால் கசையடிதான். நோன்பு இருக்க தவறினாலும் அதே கதைதான். ஒருவனின் மனைவி வெளியே செல்லும்போது அவள் தனது முகத்தை மூடவில்லை என்றால் அவனுடன் செல்லும் அவளது கணவனுக்கு கசையடி விழும்.
எனது கேள்விகள்:—–((1)) புகை பிடிப்பது குற்றம் என்றால் புலித்தலை பீடி, இன்யாயதுல்லா பீடி, சமது பீடி போன்ற பீடி கம்பனிகளை நடத்துபவர்கள் யார்? அவர்களை கசையால் அடிக்கலாமா? அல்லது கிழிந்த செருப்பால் அடிக்கலாமா?((2)) முகத்தை மறைக்காமல் போவது தவறு என்றால் முகத்தை மட்டுமில்லாமல் இடுப்பையும் சேர்த்து காட்டி நடித்ததற்கு நஸ்ரியாவை என்ன செய்யலாம்? குஸ்புவை, முமைத்கானை, நதியாவை என்ன செய்யலாம்?
5. ISIS ன் கட்டுபாட்டிலுள்ள சிரியா பகுதியில் பொது இடங்களில் சிறு குழந்தைகள் உட்பட பொது மக்கள் முன்னிலையில் வெள்ளிகிழமைகளில் தூக்கு தண்டனை (அதாவது கழுத்தை சீவுதல்) நடத்துகின்றனர். இவர்கள்தான் அமைதி மதத்தினராம் நம்பி தொலையுங்கள் நண்பர்களே!
NGO for Human Rights claimed that 300 YAZIDI women kidnapped by IS jihadists in Iraq have been taken to Sriya, forced for CONVERT and sold into marriage to militants. 27 yazidi women have been sold for around $ 1,000 each to IS jihadists. Women are being treated as though they are objects to buy and sell. (Source:— Indian Express dated 31-8-2014)
இதை படித்துவிட்டு வெளிநாட்டில் பணிபுரிவதாக கூறிகொள்ளும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட “அந்த நபர்” இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாத நிலையில் இது பற்றி எதுவும் கூற இயலாது என்று பதிலளிப்பார். அந்த காலத்தில் அந்த முகமது எப்படி காட்டுமிரண்டிதனமாக (பெண்கள் விஷயத்தில்) நடந்து கொண்டாரோ அதே மாதிரி இப்போதும் அவரது தொண்டரடி பொடிகள் நடந்து கொள்கின்றனர். இது தெரியாமால் ஒரு நடிகை (அழகி படத்தில் நடித்தவர்) மதம் மாறி இருக்கிறார். கெட்டு சீரழியவேண்டும் என்று அவர்கள் தலையில் எழுதி இருந்தால் இப்படித்தான் மாறுவார்கள்.
NAMASTHA,
After compeletion of this serial by Mr,A,Ruban, I wish to have it in book form
so that it can be saved as a historical document to be passed on to the NEXT
GENERATION
REGARDS
V.NARAYANAN.
தமிழில் இதை புத்தகமாக வெளியிட வேண்டியது மிக அவசியம்.அவசியம்.அவசியம்………………..அவசியம்.அவசியம்.அவசியம்………….அவசியம்.அவசியம்.அவசியம்………….அவசியம்.அவசியம்.அவசியம்………….அவசியம்.அவசியம்.அவசியம்………….