இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்

சில தினங்களாக இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையின் வெளிப்பாடு இக் கட்டுரை.  ஆங்கில இந்து நாளிதழில் வெளியான தலையங்கத்தில் ” பாலஸ்தீன விடுதலைக்காக ஒரு காலத்தில் உரக்க்க் குரல் கொடுத்த இந்தியா நடுநிலைமையிலிருந்தும் அணி சாராத தன்மையிலிருந்தும் விலகுவது நியாயமில்லை.  உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக்க் குரல் கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாக களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும் கூட ” என எழுதியிருப்பது வியப்புக்குறியது.  மேலும் இந்தியாவில் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டையே நாடு முழுவதும் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி எல்லாவற்றிலும் நிரம்பியிருப்பது இஸ்ரேல் எதிர்ப்பும், பாலஸ்தீன ஆதரவும் என்பது வெட்ட வெளிச்சமாகும். இந் நிலை ஏற்படக் காரணம் என்ன என்பதையும் ஆராய வேண்டும்.

தற்போது நடைபெறும் போரில் 400க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.  காஸா பகுதியில் தொடர்ந்து குண்டு வெடிப்பும், தரைப்படை தாக்குதல்களும் தொடர்கின்றன.  இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகள், இஸ்ரேலை கண்டித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறார்கள்.  இந்திய திருநாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டம் மற்றும் தர்னா நடத்துகிறார்கள்.

ஆனால் இப் பிரச்சினையின் ஆழத்தை ஆய்வு செய்தால் பல்வேறு உண்மை கூறுகள் வெளி வருகின்றன.  தற்போது ஏற்பட்டுள்ள் பிரச்சினையின் மூலம், காஸா பகுதியுடனான எல்லையை இஸ்ரேலும். எகிப்தும் மூடியுள்ளதால், அப்பகுதிக்குள் சரக்குகள் எதுவும் கொண்டு செல்ல முடியவில்லை.  இதனால் காஸா பகுதியில் ஒரு சிறு துண்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கதினர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.  காசா பகுதியை  மீட்க வேண்டும் என்பதற்காக காஸா பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பிற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும்  இடையே நடக்கும் போராகும். இம் மாதிரியாக கடந்த 60 ஆண்டுகாலமாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அடிக்கடி போர் நடைபெறுகிறது.

massacre-israelஐ.நா.சபையின் முடிவின்படி பாலஸ்தீனரகளுக்கு சுதந்திரமான ஒரு நாடும், இஸ்ரேலியர்களுக்கு ஒரு நாடும், ஜெருசலம் தனி நகரமாகவும் பிரிக்கப்படும் என அறிவித்த்து.  இந்த தீர்வுக்கு இஸ்ரேலியர்கள் ஒப்புக் கொண்டார்கள், பாலஸ்தீனர்கள் சார்பாக அரபு லீக் இந்த முடிவை ஆதரிக்கவில்லை.  இதற்கு மாறாக யுதர்களை தாக்க 1947-ம் வருடம் டிசம்பர் மாதம் அறைகூவல் விடுத்து, ஏராளமான யுதர்கள் தாக்கப்பட்டார்கள்.  இதனிடையில் 14.5.1948ந் தேதி டேவிட் பென் குரிஜயன் ஐ.நா. கொடுத்த எல்லைக்கோடுகளோடு சுதந்திரமான இஸ்ரேல் நாட்டை பிரகடனம் செய்தார்.

1948லிருந்தே இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி போர் நிகழ்வதுண்டு.  இஸ்ரேலுக்கும், அருகாமையிலிருந்து அரபு நாடுகளுக்கும் இடையே ஜோர்டான் ஆற்றின் நீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதில் முதல் சிக்கல் ஏற்பட்டது.  சிரியா ஜோர்டான ஆகிய இரு நாடுகளும், இஸ்ரேலுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தார்க்ள.  ஆனால் இஸ்ரேலே எங்களுக்கும் பங்குண்டு என வாதிட்டது.  இந்நிலையில் எகிப்து அதிபர் நாசர் இஸ்ரேல் என்ற ஒரு நாடே கிடையாது, அவ்வாறு இருந்தால் அது அழிக்கப்பட வேண்டும், இதன் காரணமாக இஸ்ரேலை சுற்றியிருந்த அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை.  செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்கள் வரக் கூடாது என எகிப்திய படைகள் தடுத்தன.

இந்நிலையில் 1966-ல் இஸ்ரேலிய படைகளுக்கும்,  எகிப்து படைகளுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்தன.  இந்த மோதல்கள் ஒரு வருடம் வரை தொடர்ந்து நடைபெற்றது.  1967 மே மாதம் அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக தங்களது படைகளை ஒருங்கிணைக்க துவங்கினார்கள்.  இதனை கண்ட இஸ்ரேல் அரபு நாடுகள் தாக்குவதற்கு முன்பகவே 1967-ம் வருடம் ஜீன் மாதம் 5ந்தேதி, சிரியா, எகிப்து, ஈராக், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது தாக்குதல்களை தொடுத்தார்கள். இந்த தாக்குதல் ஆறு நாட்கள் நீடித்தன.  இதில் இஸ்ரேல் நான்கு நாடுகளை தோற்கடித்து, சினாய் தீபகற்பம், மேற்குக் கரை, காஸா, கோலன் உச்சிகள் ஆகியவற்றை கைப்பற்றியது.
இஸ்ரேல் பிரச்சினையில் தற்போது மையம் கொண்டது காஸா பகுதியில் நடக்கும் இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் போராகும்.  உண்மையில் ஹமாஸ் ஒரு ஜனநாயக அமைப்பாக என்பதை பார்க்க வேண்டும்.  ஆய்வில் கிடைக்கும் தகவல் ஹமாஸ்  இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாகும்.  பின்லேடானில்  அல்கயிதா  அமைப்பை விட பல மடங்கு ஆபத்தானது.   2003-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 19ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் உலகிற்கு ஹமாஸ் எப்படி பட்ட பயங்கரவாத அமைப்பு என்பது தெரியவந்தது.  ஜெருசலேமிலிருந்து புறப்பட்ட பேருந்தில் மனித வெடி குண்டு ஒன்று வெடித்து சிதறியதில் 30 பேர்கள் பலியானார்கள், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.  இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பு ஏற்பதாக ஹமாஸ் தெரிவித்தது.

காஸா பகுதி இஸ்ரேல் வசம் வந்த வரலாறு ஒரு விசித்திரமானது.  இஸ்ரேலுக்கு அருகாமையில் உள்ள அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. ஜோர்டான் ஆற்றின் நீரை எவ்வாறு மற்ற நாடுகள் பகிர்ந்து கொள்வது என்பது முதல் பிரச்சினையாக உருவானது.  ஒரு சொட்டு தண்ணீர் கூட இஸ்ரேலுக்கு போக கூடாது என்பது சிரியா, ஜோர்டான் ஆகிய இரு நாடுகளும் விடாப்பிடியாக இருந்தார்கள்.  அரபு தேசிய வாதியாக தன்னை சித்தரித்திக் கொண்டா நாசர், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்க கூடாது என்ற கொள்கையில் இருக்கும் போது, தண்ணீர் கொடுக்க கூடாது என்று கூறியதுடன், செங்கடலில் இஸ்ரேல் நாட்டு கப்பல்கள் வரக்கூடாது என எகிப்திய படைகள் தடுத்தன.  இதன் காரணமாக எல்லையில் எகிப்து படைகளும், இஸ்ரேல் படைகளும் 1967லிருந்து அடிக்கடி மோதல் போக்கு நிகழ்ந்தது.   1967 மே மாத்ம், அரபு நாடுகளின் படைகள் ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்க திட்டமிட்ட போது, முன்னதாக 5.6.1967ந் தேதி இஸ்ரேல் எகிப்து, ஈராக், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை ஒரே நேரத்தில் தாக்க துவங்கியது.  ஆறு நாட்கள் நடந்த போரில் இஸ்ரேல், சினாய் தீபகற்பம், மேற்குக் கரை, காஸா , கோலன் உச்சிகள் முதலிய பகுதிகளை கைப்பற்றியது.  நடந்த ஆறு நாட் போரில் எகிப்து, ஈராக், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகள் படு தோல்வியை சந்தித்தன.  இவ்வாறு காஸா பகுதியை இஸ்ரேல் தன் வசம் வைத்துக் கொண்டது.

1978-ல் பி.எல்.ஓ. பயங்கரவாதிகள் இஸ்லாமிய குடிமக்கள் 47 பேரைக் கொன்றார்கள், இதற்கு பதிலடியாக தெற்கு லெபனாலில் இருந்த பி.எல்.ஓக்களின் முகாம்களை அழிக்க தெற்கு லெபனானை இஸ்ரேல்  கைப்பற்றியது.  இதற்கு பின்னர் ஒரு நிரந்திர தீர்வு கான்பதற்கு, நார்வே தலைநகர் ஓஸ்லோவில் 1992-ல்  ஒரு ஓப்பந்தம் கையெழுத்தாகியது.  இதன்படி மேற்கு கரை, காஸா இரண்டையும் சுய ஆதிக்கம் கொண்ட பகுதியாக அறிவித்து, இதை பி.எல்.ஓவிடம் கொடுப்பதாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.  அதற்கு கைமாறாக யாசர் அரபத்தின் பி.எல்.ஓ. இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்க ஒப்புதல் கொடுத்த்து.  சிரியாவிடம் நிரந்திர அமைதி ஏற்படுத்த கோலன் உச்சிகளை கொடுக்க முன் வருவதாக இஸ்ரேல் தெரிவித்த்து.  இதையடுத்து ஜோர்டான் இஸ்ரேலை அங்கீகரித்த்து.  ஆனால் இவ்வளவு முயற்சிகள் எடுத்தும், பாலஸ்தீனர்களில் ஒருபிரிவினர் இந்த ஒப்பந்த்த்திற்கு தங்களது எதிர்ப்புகளை காட்டியது மட்டுமில்லாமல், பி.எல்.ஓ இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்த தொடங்கினார்கள். ஒஸ்லோ உடன்பாடு தோல்வியை சந்தித்தற்கு முக்கிய காரணியாக இருந்த்து ஹமாஸ் அமைப்பினர், அவர்கள் தெளிவாக தங்களது அறிக்கையில்  பாலஸ்தீன விடுதலையைப் பொருத்த வரை பேச்சுவார்த்தைகளிலும் சமாதானத் தீர்வுகளிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த உண்மையை மறைத்து விட்டு இந்தியாவில் உள்ள இடது சாரிகள் சத்தம் போடுவது ஏன் என்பது தான் தெரியவில்ல.  பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் எப்படிப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஹமாஸ்

ஒரு புறம் மேற்கித்திய நாடுகளில் பார்வையில் ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கமாகவே காட்சியளிக்கிறது.  ஆனால் உலக இஸ்லாமியர்கள் மத்தியில் அல் கயிதாவிற்கு என்ன மரியாதை கொடுத்தார்களோ அதே மரியாதையை ஹமாஸூக்கு கொடுக்க முன்வந்தார்கள்.  பாலஸ்தீன அரபியர்களுக்கு ரட்சகனாக தெரிந்தது.  ஹமாஸ் பற்றி ஒரு பத்திரிக்கையாளர் கொடுத்த விளக்கம் கவனிக்கதக்கது, செயல்களில் வெளிப்படுத்தும் கச்சிதம்,  எப்படி இயங்குவார்கள் என்பதை கணிக்க இயலாத நிலை, தங்கள் திட்டங்கள் என்ன என்பதை வெளிச்சத்திற்கு தெரியப்படுத்தாமல் இருப்பது, பயங்கரவாத தாக்குதல்களை யார் செய்வார், எப்போது செய்வார்கள், எப்படி செய்வார்கள் என்பதை கூட உளவுத் துறையினரால் கண்டு கொள்ள இயலாத நிலை என விவரித்தார்.  பல ஆண்டுகளாகவே ஹமாஸ் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் யார் என்பதை கூட தெரிவிக்கவில்லை.

ஹமாஸ் என்பதின் விரிவாக்கம் ” ஹரக்கத் அல் முக்காவாமா அல் இஸ்லாமியா ( Harakat –al-Muqawamah al- islamiyah) என்பதின் சுருக்கம்.  அல் கயிதா போல் உலகெங்கும் குண்டு வைக்கின்ற இயக்கமல்ல, மாறாக இஸ்ரேலை ஒழித்து கட்டுவது தான் முதன்மையான நோக்கமாகும், ஆகவே இஸ்ரேல்  நகரில் பஸ்ஸல் குண்டு வைப்பது, அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கார் நிறுத்துமிடங்களிலும், ரயில்களில், ஹோட்டல்களில், A+த தேவாலங்களில், இஸ்ரேலியர்கள் படிக்கும் பள்ளி வளாகங்கள், பல்கலைக்கழக கட்டிட்ங்கள், ரிசர்வேஷன் பகுதிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், அரசு விழா நடக்கும பகுதிகள், முக்கிய தினங்களில் அரசு நடத்தும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் என இஸ்ரேலியர்கள் அதிக அளவில் கூடுமிடங்களில் குண்டு வைத்து தாக்குவது ஹமாஸின் தினசரி நடவடிக்கையாகும்.  உலகிலேயே முதன் முதலில் தற்கொலை தாக்குதல் என்ற உத்தியை கையான்டவர்கள் ஹமாஸ் அமைப்பினர்.  இது ஹமாஸின் பொறுப்பாளராக இருந்த ஷேக் அகமது யாசின் என்பவனின் சிந்தனையில் உதித்த்து.

hamas-vidஇஸ்ரேலிய இலக்குகள் எது எப்போது கண்ணில் பட்டாலும், உடனடியாகத் தாக்கப்படும், தகர்க்கப்படும்.   இஸ்ரேலிய கருவுலங்கள், மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்கள் என்று எதையும் விட்டு வைக்க மாட்டார்கள், தாக்குவதோடு இல்லாமல், அதை தரைமட்டமாக அழித்த பின்னர்தான் ஹமாஸ் இயக்கத்தினர் அமைதியடைவார்கள்.  கை வெடிகுண்டு, கார்வெடிகுண்டு, சூட்கேஸ் வெடிகுண்டு போன்ற யுத்திகளை  கண்டு பிடித்தவர்கள் ஹமாஸ் இயக்கத்தினர் என்றால் அது மிகையாகாது.

ஹமாஸின்  செயல்பாடு பற்றி ஒரு பத்திரிக்கையாளர் கூறிய கருத்து முக்கியமானது, ” எங்களுக்கு இஸ்ரேலியப் பொது மக்கள், இஸ்ரேலிய ராணுவம் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.”  இஸ்ரேலிய அரசு ஒவ்வொரு இஸ்ரேலிய குடிமகனும் ஒரு வருடம் கட்டாயமாக ராணுவ பயிற்சி பெற வேண்டும் என சட்டம் இருக்கும் போது, சிவிலியன் என்பதே தவறு, அனைத்து இஸ்ரேலியர்களும் ராணுவத்தினர் என்பதை மறந்து விடக் கூடாது.

1994-ல் கொள்கைக்காக உயிர்த் தியாகம் செய்வது, மத்த்திற்காக உயிர் கொடுப்பது, நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காக உயிர் கொடுப்பது, என்ற பழைய சித்தாந்திற்கு ஒரு புதிய நெறிமுறைகளை உருவாக்கியதால் ஏற்பட்டது தற்கொலை படை.  இது கூட உடனடியாக சிந்திக்வில்லை, ஹெப்ரான் என்கிற் இடத்தில் இப்ராஹிம் மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்த போது, இஸ்ரேலிய பரூஷ் கோல்ட்ஸ்டெயின் என்பவரால், 29 அரபியர்கள் தொழுகையின் போது சுட்டு கொன்ற சம்பவத்தினால் ஏற்பட்ட சிந்தனையே தற்கொலை படையாகும்.

ஹாமஸ் துவங்கப்பட்ட போது, அதன் நோக்கம் தெளிவாக சொல்லப்பட்டது. (1) மேற்குக் கரை, காஸா உட்பட இஸ்ரேலின் வசம் இருக்கும் பாலஸ்தீனிய நிலப்பரப்பு முழுவதையும் வென்றெடுப்பது, இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல்  அழித்தொழிப்பது. (2)  தப்பித்தவறி பாலஸ்தீன் என்றாவது ஒரு நாள் மதச்சார்பற்ற தனியொரு தேசமாக அறியப்பட வேண்டி வருமானால், அதை எதிர்த்தும் போராடுவது, பாலஸ்தீனை ஒரு முழுமையான இஸ்லாமிய தேசமாக மாற்றுவது. .  இந்த இரண்டு நோக்கங்களின் மூலம் ஹமாஸ் வெளி உலகிற்கு சொல்ல வேண்டியதை தெளிவாக தெரிவித்துள்ளது.  அதாவது பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வருவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வோம் என சூழுரைத்தார்கள்.

பாலஸ்தீனயர்களுக்கு ஆதரவாகவே இஸ்லாமிய நாடுகள் இருப்பதாக கூறுவதும் தவறான தகவலாகும்.  இஸ்ரேலுடன் சுமூக உறவு கொண்ட முஸ்லீம் நாடுகள் உள்ளன.  ஜோர்டன் பகிரங்கமாகவே இஸ்ரேலை ஆதரித்த்து.  மறைமுகமாக சௌதி அரேபிய இஸ்ரோலுடன் இருந்த்து.  சௌதி மன்னர் அப்துல்லாவின் மைத்துனர் துருக்கி நாட்டின் புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாக இருப்பவர்.  அவர் பெல்ஜியம் நாட்டிற்கு சென்ற போது, இஸ்ரேலிய ஜெனரல் ஆமோஸ் யால்டின (Amos Yadin ) என்பவரை சந்தித்து பேசியுள்ளார்.  இவர்களின் பேச்சில் ஹமாஸ் இயக்கத்தை ஒழித்து கட்டுவது சம்பந்தாக விவாதிக்கப்பட்டது.

ஹமாஸ், பாலஸ்தீனயர்களுக்கு பாதுகாவலராக மாறிய கதை தனிக் கதை.  யாசர் அரபாத் பாலஸ்தீனத்தின் பாது காப்பாளராக கோலேச்சிய போது எங்கே ஹமாஸ் முளைத்த்து என்பதும் புரியாத புதிராகவே இன்று வரை இருக்கிறது.  ஆனால் உண்மையில் யாசர் அரபாத் இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுத்தவர்கள் ஹமாஸ் இயக்கத்தினர் .

முரன்பாடான கருத்து ஒன்று உள்ளது,  பாலஸ்தீனயர்களுக்கு உதவி புரிவதும் ஹமாஸ் இயக்கத்தினர், மனிதாபிமான முறையில் உதவி புரியும் ஹமாஸ் இயக்கதினர், இஸ்ரேலியர்களை கொல்லுவதும் தங்களது ஜிகாத் என கூறுவது புரியாத புதிராகும்.  பாலஸ்தீன அதிபர் யாசர் அரஃபத் இறந்த பின்னர், ஹமாஸ் இயக்கத்தினர் தனது ஆயுதப் போராட்டத்தை முன்னைக் காட்டிலும் பன்மடங்கு தீவிரப்படுத்த முடிவு  செய்தார்கள்.

1860-ம் வருட ஐ.நா. சபை ஒப்பந்தப்படியும், ஆஸ்லே உடன்படிக்கையின் படி காஸா பாலஸ்தீனத்தின் பகுதியாக அறிவிக்கப்பட்டது.  சன்னி முஸ்லீம்கள் அதிக அளவில் வாழும் பகுதி காஸா ஸ்டிரிப் என்பதாகும்.  பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட காஸா ஸ்டிரப் பகுதி எகிப்தின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த்து, பின்னர் ஐக்கிய அரபு குடியரசுடன் இணைக்கப்பட்டது.  1967-ல் நடந்த ஆறு நாள் யுத்த்தித்தின் காரணமாக காஸா ஸ்டிரப் பகுதி இஸ்ரேல் வசம் மாறிவிட்டது.  2005-ல் ஏற்பட்ட உடன்பாட்டின் படி மீன்டும் காஸா பகுதி பாலஸதீனத்திற்கு வழங்கப்பட்டது.  2006 மற்றும் 2007-ல் பாலஸ்தீனத்தில் நடநத் சட்ட மன்ற தேர்தலின் காரணமாக ஹமாஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று காஸா ஸ்டிரப் பகுதியில்  ஆட்சி செய்தார்கள்.

ஹமாஸ் அமைப்பில் உள்ள ராணுவத்தின் பெயர் அல்காஸம் படை என்பதாகும்.  இதற்கும் முக்கிய காரணம் உண்டு.  ஹமாஸ் ஏற்படுத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பகவே பாலஸ்தீனயர்களுக்குப் போர் பயிற்சியளித்த ஷேக் இஜ் அல் தின் அல்காஸம் என்பவரின் நினைவாகவே , ஹமாஸ் தனது ராணுவத்திற்கு பெயர் சூட்டியது.  ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு என்பதற்கு அவர்களின் அமைப்பே உதராணமாகும்.  ஹமாஸின் சில பிரிவுகள் வன்முறைப் பிரிவு, தாக்குதல் பிரிவு இந்த இரண்டு பிரிவுகளும் வன்முறையை தூண்டி, அதன் மூலமாக இஸ்ரேலியர்களை தாக்குவது என்று முறைப்படுத்தப்பட்ட பிரிவு.

ஹமாஸூக்கு நிதி கிடைக்கும் வழி

ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு நிதி அதிக அளவில் தேவைபடுகிறது.   துப்பாக்கி தூக்குவதற்கும்,  கார் வெடி குண்டுகள், சொந்த ராக்கெட் என அதிநவீனத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது.  மற்ற பாலஸ்தீன இயக்கங்களுடன் ஒப்பிடும் போது, ஹமாஸ் பணவிஷயத்தில் எப்போதுமே பலமாகவே இருந்து வருகிறது.   உள்நாடுகளில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஹமாஸ் இயக்கத்தின் செயல்பாடுகளுக்காக நன்கொடை திரட்டுவதை ஆரம்ப காலம் முதலே அதிக கவனம் செலுத்தப்பட்டது.  குறிப்பாக அரபு நாடுகள் அதிக அளவில் நன்கொடைகள் வழங்குகிறார்கள்.  உலக முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்களும் ஹமாஸூக்கு நிதி வழங்குகிறது.

பதினொரு வழிகளில் ஹமாஸூக்கு தேவையான நிதி ஆதராங்கள் கிடைத்துக் கொண்டிருப்பதாக பல்வேறு நாடுகளில் உள்ள உளவுத் துறையினர் தெரிவிக்கிறார்கள். சிரியா ஆதரவ,  மத்தியக் கிழக்கு நாடுகளில் செயல்பாடுகள், ஹமாஸின் நிதி உதவி அமைப்புகள், தாவா- தீவிரவாதம், பாலஸ்தீனியர்களிடமிருந்து திரட்டும் உதவிகள், மேற்கத்திய நாடுகள் வழங்கும் நன்கொடைகள், பிரிட்டன் ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள பாலஸதீனர்கள் வழங்கும் நிதி, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் உள்ள இஸ்லாமிய  அமைப்புகள், வெளிநாடுகளிலிருந்து ஆள் சேர்ப்பது, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பின் முழு ஆதரவு குறிப்பாக கூற வேண்டுமானால், அல் கயிதா அமைப்பினர் ஹமாஸூக்கு நிதி கொடுக்க தயங்குவது கிடையாது.

ஹமாஸின் நிதியானது பெரும்பகுதி வளைகுட நாடுகளில் உள்ள பல்வேறு தொண்டு அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் மூலமாகவே வருவதாக கூறப்படுகிறது.  வருடந்தோறும் ஹமாஸ் திரட்டும் நிதியின் அளவு பல மில்லியன் டாலர்கள்.  ஆண்டுக்கு 200 மில்லியன் டாலராக இருக்கலாம் என்கிறார்கள்.  இதில் பெரும் பகுதி சௌதி அரேபியாவிலிருந்து வருகிறது.  சௌதி அரேபியாவிலிருந்து கிடைக்கும் நிதியின் அளவு ஆண்டு ஒன்றுக்கு 12 மில்லிய்ன் டாலருக்கு  மேல் இருக்கலாம் என்கிறார்கள். அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஹமாஸ் இயக்கத்திற்கு நன்கொடை வசூலிக்கும்  பாலஸ்தீனர்களின் தலைமையில் இயங்கும் அமைப்புகள் பொது மக்களிடம் நிதி வசூலிப்பது தங்களின் கடமை என கருதி செயல்படுகிறார்கள்.  அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் பெயர்  The Holyland Foundation),  பிரிட்டனில் உள்ள தொண்டு அமைப்பின் பெயர்,   இன்டர்பால்(Interpal ) பாலஸ்தீன மீட்பு, வளர்ச்சி நிதி நிறுவனம் ( The Palestine Relief and Development ), என்றும், அல் அக்ஸா ( ) அறக்கட்டனை இந்த அமைப்பிற்கு இப் பெயர் வரக் காரணம், ஜெருசலேம் நகரில் புகழ் பெற்ற குன்றுக் கோபுரத்துடன் இணைநத மசூதியின் பெயர்.  இந்த மசூதியின் பெயரில் இயங்கும் அறக்கட்டளை.  இந்த அறக்கட்டளை  ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம், ஹாலந்து போன்ற நாடுகளில் உள்ளது. .

ஆகவே, இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கம் முனைப்புடன் இருப்பதால், பிரச்சினைக்கு தீர்வு கான இயலாத நிலையில் இரு நாடுகளும் இருக்கின்றன.  இந்தியாவில் இந்திய முஸ்லீம்களும், இந்திய முஸ்லீம்களுக்கு தலைமை தாங்கும் தலைவர்களும், முஸ்லீம்களின் ஓட்டுக்களை பெற துடிக்கும் கட்சிகளும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும், இஸ்ரேலுக்கு எதிராக பெரிய கூக்குரல் எழுப்புகிறார்கள்.  ஆனால் இவ்வாறு கூச்சல் போடும் இஸ்லாமியர்கள், முஸ்லீம்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் இதுவரை, சிரியாவில் 1,50,000 சன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டது இவர்கள் கண்களில் படவில்லை.  டார்பரில் கருப்பின முஸ்லீம்கள் அரபு முஸ்லீம்களால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டது, இந்திய அரசியல்வாதிகள், இடது சாரிகளின் கண்களில் தென்படவில்லை.  அல் கயிதா பயங்கரவாத இயக்கம், ஷியா பிரிவினர் மீது நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலைகளை இவர்கள் கண்டு கொள்ளவில்லை. நைஜீரியாவில் போகோ ஹாரம் என்ற பயங்கராத அமைப்பு, ஆயிரக்கணக்கான கிறிஸ்துவரகளை கொல்வதும், பள்ளிச் சிறுமிகளை கடத்திச் சென்று பாலுறவு அடிமைகளாக்க முனைவதும் இவர்களில் எவர் கண்ணிலும் படவில்லை.

6 Replies to “இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்”

 1. ” கூச்சல் போடும் இஸ்லாமியர்கள், முஸ்லீம்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் இதுவரை, சிரியாவில் 1,50,000 சன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டது இவர்கள் கண்களில் படவில்லை.

  2. டார்பரில் கருப்பின முஸ்லீம்கள் அரபு முஸ்லீம்களால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டது, இந்திய அரசியல்வாதிகள், இடது சாரிகளின் கண்களில் தென்படவில்லை.

  3.அல் கயிதா பயங்கரவாத இயக்கம், ஷியா பிரிவினர் மீது நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலைகளை இவர்கள் கண்டு கொள்ளவில்லை.

  4. நைஜீரியாவில் போகோ ஹாரம் என்ற பயங்கராத அமைப்பு, ஆயிரக்கணக்கான கிறிஸ்துவரகளை கொல்வதும், பள்ளிச் சிறுமிகளை கடத்திச் சென்று பாலுறவு அடிமைகளாக்க முனைவதும் இவர்களில் எவர் கண்ணிலும் படவில்லை. ” –

  நன்றி. ஈரோடு சரவணன் அவர்களே. காங்கிரஸ் மற்றும் அதன் சொம்புகள் கடந்த 67 வருடங்களாக தொடர்ந்து செய்துவரும் மோசடி தான் இது. காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற மோசடிகளை புறக்கணிப்போம்.

 2. நல்ல கட்டுரை. ஆனால் ஒரு சின்ன திருத்தம். 1948 ல் பாலஸ்தீனம் என்று அறியப்பட்ட நிலத்தை ஐ.நா. இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று இரண்டு நாடுகளாக பிரிக்கவில்லை. மாறாக யூதர்களுக்கு இஸ்ரேல், அரபியர்களுக்கு ஜோர்டான் என்று இரண்டு நாடுகளாக பிரித்து கொடுத்தது. இன்று பாலஸ்தீனர்கள் என்று பொய்யாக சொல்லிக் கொள்பவர்கள் உண்மையில் பாலஸ்தீனர்கள் அல்ல. அவர்கள் ஜோர்டான் நாட்டுக்காரர்கள்தான். ஜோர்டான் என்று ஒரு நாடு கொடுத்த பின்பும் பாலஸ்தீன் என்று இன்னொரு நாடு வேண்டும் என்று அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை செய்துகொண்டு இருக்கிறார்கள். ஹமாசின் வளர்ச்சிக்கு முன்புவரை பாலஸ்தீன விடுதலை இயக்கம்(PLO) இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை செய்துகொண்டு இருந்தது. அதன் தலைவர் யாசர் அராபத் ஒரு பயங்கரவாதி. இஸ்ரேலுடன் அவர் பேச்சுவார்த்தைக்கு வந்தபிறகு சமாதான புறாவாக சித்தரிக்கப்பட்டார். அவர் செய்த பயங்கரவாத செயல்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுவிட்டது காலக்கொடுமை. அவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்ப்புகூட நம் அரசியல்வாதிகள் கொடுத்தனர். முஸ்லிம்களை தாஜா செய்ய நம் அரசியல்வாதிகள் எதையும் செய்வார்கள் என்பதை எவரும் அறிவர்.

 3. இஸ்ரேல் பற்றி உண்மையான விஷயங்கள் ஓரளவு அறிந்தேன். ஆனால், கி.மு.1500 முதல், ஆமாம், கி.மு. முதல் உள்ள விஷயங்கள், மற்றும் இஸ்ரேல் நமது இந்திய-பாகிஸ்தான் இடையே கார்கில் போரில், நமக்கு, உதவியது குறித்தும் ஒரு தொடர் எழுத கேட்டுக் கொள்கிறேன். ஏதேனும் புத்தகம் உண்மையாக எழுதி இருப்பினும் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
  N. Paramasivam

 4. இந்தியா மற்றும் உலக நாடுகளில் முஸ்லிம்கள் என்ன தீவிரவாதச் செயலில் ஈடுபட்டாலும் இந்திய இடது சாரிகள் அவர்களுக்கு ஆதரவாகவே குரல் கொடுப்பர். ஆனால் சீனாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களை எந்த வித நீதி மன்ற விசாரணையின்றிச் சமீபத்தில் சுட்டுத்தள்ளியது. அது குறித்து இந்திய இடதுகள் வாயைத்திறக்கவில்லை. கம்யூனிசச் சீனாவுக்கு ஒரு அணுகுமுறை, மற்ற ஜனநாயக நாடுகளுக்கு ஒரு அணுகுமுறை இதுதான் இடதுகள் மற்றும் இந்திய ஊடகம் கடைப்பிடிக்கும் வழிமுறையாக உள்ளது.

 5. இந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம் says:

  https://www.facebook.com/profile.php?id=100004556358582
  Please visit the above face book page, place likes, add as friend, make your comments and make this page a force to recon with. Let the Hindu haters know our real strength.

  தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவரும் இந்து மதத்துக்கு விரோதமான போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். முஸ்லிம்களின்/ கிறித்துவர்களின் ஒவ்வொரு விழாவுக்கும் முழ நீளத்துக்கு அந்த நிகழ்ச்சிகளின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு “அப்பெருமக்களை” வாழ்த்தி அறிக்கை விடும் அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான திரு. கருணாநிதி அவர்கள், இந்துக்களின் விழாக்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். நான்கு நாட்களுக்கு முன், வினாயகர் சதுர்த்திக்குப் பட்டும் படாமலும், இந்துக்களுக்கு என்று குறிப்பிடாமலும் ஒரு வாழ்த்தை அதன் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான திரு. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். அது கண்டு பொறுக்காத சில தி,கவினரும், மாற்று மதத்தினரும் திமுக தலைவரை என்ன சொன்னார்களோ தெரியவில்லை, அவர் தம் பெயரிலும் இல்லாமல், தனது மகன் பெயரிலும் இல்லாமல், ஏன் எந்த ஒரு திமுக அலுவலரின் பெயரிலும் இல்லாமல் மொட்டைக் கடிதம் போலக் கோழைத் தனமாகத் தலைமைக் கழகத்திலிருந்து என்று கூறி ஒரு மறுப்பை வெளியிட்டிருக்கிறார். இது இந்துக்களின் மனதை வெகுவாக நோகடிக்கிறது.

  திரு கருணாநிதியோ, திரு ஸ்டாலினோ வெறும் தனி மனிதர்கள் அல்லர். முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர்; அவர்களே அடிக்கடிச் சொல்லிக் கொள்ளும் “பொது வாழ்வில்” இருப்பவர்கள். அவர்கள் எல்லா மதத்தவருக்கும் பொதுவாக நடந்து கொள்ளாமல், மிகப் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களுக்கு விரோதமான போக்கைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

  இனியும் தொடர்ந்து இந்து மதத்தினரை இப்படி நான்காம் தரக் குடிமக்களாக நடத்தினால், தீண்டத்தகாதவர்களாக நடத்தினால் பொது வாழ்வில் அவர்கள் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கும் வகையில் இந்து மக்களை ஒன்று திரட்டி ஜன நாயக அமைதி வழியில் ஆனால் வாக்குப் பெட்டி மூலம் போராடுவோம் என்பதை இதனால் அறிவிக்கிறோம். தமிழ் நாட்டில் இந்து-முஸ்லிம்- கிறித்துவர் என்று வாக்களிக்கும்போது “Polarisation” வரும், வந்தால் யார் வெல்வார் என்பதைத் திரு. கருணாநிதி உணரவேண்டும். அப்படி ஒரு “Polarisation” வரும்போது அதற்கான முழுப் பொறுப்பும் திரு கருணாநிதி அவர்களுக்கே சாரும்.

  இந்துப் பெருமக்கள் பெருமளவில் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டு, அன்னிய மதத்தவரின் அடிவருடிகளுக்குத் தக்க பாடம் புகட்டக் கோருகிறோம்.

 6. //இந்தியா மற்றும் உலக நாடுகளில் முஸ்லிம்கள் என்ன தீவிரவாதச் செயலில் ஈடுபட்டாலும் இந்திய இடது சாரிகள் அவர்களுக்கு ஆதரவாகவே குரல் கொடுப்பர். ஆனால் சீனாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களை எந்த வித நீதி மன்ற விசாரணையின்றிச் சமீபத்தில் சுட்டுத்தள்ளியது//

  திருநெல்வேலியில் உள்ள பொட்டக்காடு மணல், அமெரிக்காகாரன் விடும் சரடு என்று போராடும் நல்லக்கன்னு, ராஜா போன்றவர்கள் , சீனாக்காரன் பாட்டாசு நமக்கு நேரடி வியாபார ஆபத்து என்று தெரிந்தும் போராடாத லட்சணம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *