விநாயகர் நினைவுகள்

pbaag305_dancing_ganeshaகொங்கதேச ஆவணங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடத்தில் காணலாம். அண்ணமார்சாமி கதையில் பிள்ளை வரம் நிறைவேற குளம் வெட்டி விநாயகர் பிரதிஷ்டை செய்தார் கோளாத்தாக் கவுண்டர். அது மட்டுமின்றி அண்ணமார் கதை முழுக்கவே விநாயகர் வழிபாடு இருப்பதை காண முடியும்.

தீரன் சின்னமலை காரையூர் மேலப்பாளையத்தில் ஐந்தடி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வித்தார். வெள்ளோட்டில் சாத்தந்தை கூட்டத்தில் பிறந்து வீரபாண்டியன் அமைச்சராகி பின்னர் ஊத்துக்குளியில் நாடமைத்துப்போன காளிங்கராயர் வாய்க்கால் வெட்டியபின், அது துவங்கும் இடத்தில் நெளிந்த வாய்க்கால் அமைப்புக்கு யோசனை வர காரணமான நாகருக்கு கோயில் வைத்தார். அதே கோயிலில் விநாயகரும் உண்டு. காளிங்கராயர் பிற்கால பாண்டியர் காலத்தவர் என்பதால் விநாயகரும் அவர் பிரதிஷ்டை செய்ததே என்று நம்பலாம்.

கொங்கதேசவரலாற்றில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு தலையநாடு கன்னிவாடி கன்னகூட்ட மன்றாடியார்களுடையது. அவர்கள் கன்னிவாடியில் இருந்து மோரூர் இடம்பெயர்ந்த போது அவர்கள் பூர்வீகத்தில் இருந்த வெள்ளைவிநாயகரை மோரூர் நாட்டிலும் பிரதிஷ்டை செய்தனர். இவர்கள் குலகுரு ஒருமுறை சஞ்சாரம் வந்தபோது கோயில் பண்டாரம் அவமரியாதை செய்யவே கோயில் வெள்ளைவிநாயகரிடம் வேண்டி பாடவும் குபேர மூலையை பார்த்திருந்த விநாயகர் விக்ரகம் எம மூலை பக்கம் திரும்பிவிட்டது. பயந்து போன மக்கள் பட்டக்காரரிடம் சொல்லவே அவர் குலகுருவிடம் உண்மையை விளக்கி மன்றாடவே திரும்பவும் வெள்ளைவிநாயகரை வேண்டிப்பாட சிலை பழைய நிலைக்கு திரும்பியது.

மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் தேசத்தை பார்த்த நிலையில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். அவை இன்றும் சேர விநாயகர், சோழ விநாயகர், பாண்டிய விநாயகர் என்று அழைக்கபடுகிறது.

கீழ்க்கரை பூந்துறை நாடு திருசெங்கோட்டு மலையில் வரடிக்கல்லில் இருக்கும் உச்சிப்பிள்ளையார் பிரசித்தி பெற்றவர். ஒருவருடம் பவுர்ணமி தோறும் மலைக்கு வந்து வரடிக்கல் பிள்ளையாரை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் உண்டு என்பது ஐதீகம். திருசெங்கோட்டு மலையில் உள்ள தீர்த்தங்களில் முதல் தீர்த்தமே கணபதி தீர்த்தம்தான். அதை கணபதியே உமையம்மையின் பூஜை தேவைகளுக்காண நீருக்காக உருவாக்கினார் என்பது புராண வரலாற்றுச் செய்தி.

home-ganesh-pujaஅதே கீழ்க்கரை பூந்துறை நாட்டில் மொளசி சமஸ்தானதிற்குட்பட்ட பட்லூர் காணியின் நட்டாத்தீஸ்வரர் கோயிலில் கிழக்கு பார்த்த விநாயகர் விக்ரகம் இருந்தது (தற்போது ‘திருப்பணி’ என்னும் பேரில் தெற்கு பார்த்து திருப்பட்டுள்ளது; கொங்கதேசத்தில் தெற்கு பார்த்து எந்த விநாயகரும் இல்லை என்பது பயப்பட வேண்டிய விஷயம்). ஒருமுறை காவிரியில் வெள்ளம் வந்தபோது கோயில் குருக்களின் வேண்டுதலுக்கிறங்கி வெள்ளம தணிந்ததை கொங்குமண்டலச் சதகம் சொல்கிறது.

சுந்தரருக்கு பொன் கொடுக்க சிவபெருமான் பிள்ளையாரை ஆய்மகளிடம் அடகு வைத்த நிகழ்வு வெஞ்சமாங்கூடலூரில் நடந்தது. திருமுருகன்பூண்டியிலே சுந்தரரின் களவுபோன பொருட்களை மீட்க விநாயகப்பெருமான் கூப்பிட்டு வழிகாட்டியதால் கூப்பிடு பிள்ளையாரானார். பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கென கொண்டுவந்த பிள்ளையார் வண்டி அச்சாணி முறியவே இறக்கி வைத்த இடத்தில் ஸ்தாபிதமாகிவிட்டார். அந்த க்ஷேத்ரமே இன்றைய புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் ஆகும்.

கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கல்யாணத்திற்கு பெண் பார்க்க துவங்குவதில் தொடங்கி, தாலிக்கு பொன் எடுத்து கொடுக்கும்போதும் (மங்கிளியத்துக்கு கொடுத்தல்), முஹுர்த்தக்கால் போடையிலும், மாப்பிள்ளை அழைப்பு வேளை என பல முறை கணபதி வழிபடப்படுவார். கல்யாணம் துவங்கும்போதும், முடிந்த பின்னரும், முடிந்தபின் வீடு புகுமுன் மணமகன்/மணமகள் ஊர் விநாயகர் கோயிலிலும், வீட்டிற்கு வந்து முதல் காரியமாகவும், தாலி நூல் மாற்றும்போதும் (தாலி வில்லையை விட மஞ்சள் கயிரே முக்கியத்துவம் வாய்ந்தது என்பது வழக்கம்) விநாயகர் வழிபாடு நடக்கும். பெண் வீட்டில் கல்யாணம் செய்வதே முறை என்றாலும், தற்போது முறைகெட்டு மண்டபங்களில் பலர் கல்யாணம் செய்வதால் அந்த கல்யாண சத்திரங்களிலேயே விநாயகர் சன்னதி கட்டிவைத்துவிட்டனர். கொங்கதேசத்தின் சிறப்பு வாய்ந்த கல்யாணப் பாடலான மங்கள வாழ்த்தே கணபதியை தொழுதுதான் துவங்குகிறது.

ganapati_pillaiyarகொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். அதுமட்டுமின்றி கிராமத்தின் கன்னிமூலையில் விநாயகர் இருப்பது பொதுவான விதி. கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன.

நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட கொங்கதேசப்பகுதிகளான தர்மபுரி மற்றும் அரூர் பகுதிகளில் உள்ள கொங்கூர் மற்றும் கொங்கவேம்பு கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது. கொங்கதேசத்தில் பட்டிப்பொங்கல் என்று சொல்லப்படும் மாட்டுப்பொங்கலிலும் கணபதி வழிபாடு உண்டு.

பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். சிறுவர்களின் விளையாட்டு பாடல் முதல், இலக்கியப்பாடல்கள், வேத மந்திரங்கள், நவீன தமிழ் கவிகள், கிராமிய பாடல்கள் என தொடர்ந்து களத்துமேட்டு பாடல்கள் வரை எல்லா தரப்பு மக்களாலும் அணுகப்படுபவர். அந்த பாடல்கள் போற்றுதல் முதல் கேலி கிண்டலாகப் பாடும் அளவு மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார். அருகம்புற்களை பிடுங்கிப் போட்டால் போதும்; மாலைகள் ஆபரணங்கள் கேட்கமாட்டார். மரத்தடி, குளக்கரை என்று எளிமையாக இருப்பார். இவையனைத்துமே விநாயகரின் எளிமையை மட்டுமல்ல அனைவராலும் அனுகப்படுபவர் என்பதற்கு உதாரணங்களாகும்.

கணபதியை வணங்காவிட்டால காரியங்கள் கெடுத்துவிடுவார். உருப்படவிடமாட்டார் என்று அச்சுறுத்தி தாதாவுக்கு மாமூல் கொடுப்பதுபோல, சிலர் சொல்வார்கள். அது அப்படியல்ல, அவர் புத்தியின் அடையாளம். காரியங்கள் துவங்கும் முன்னர், செக்குமாடு மாதிரி ஒரே கோணத்தில் போகாதே சிந்தித்து, விழிப்போடு சாதுர்யமாகச் செய் என தூண்டுவதே அதன் சாராம்சம். நாம் சொல்வதைவிட வெள்ளைக்காரன் வந்து தோப்புக் காரணத்தை சூப்பர் பிரைன் யோகா என்பர் சொன்னால்தான் நமக்கு அதன் மகத்துவம் புரிகிறது.

lords-vinayaka-shankara-parvatiசில கம்யூனிச, திராவிட, தமிழ்தேசியவாதிகள் விநாயகர் தமிழ் கடவுள் அல்ல என்று பிழைப்புவாத மொழியரசியல் துவங்குவார்கள்; சரி யாரெல்லாம் தமிழ்கடவுள், யாரெல்லாம் வேத கடவுளர்கள், நிலத்திணை தெய்வங்கள் எவை எவை என்று கேட்டால் விடை இருக்காது. ஒருவர் விநாயகர் ஆரியக் கடவுள், ஏழாம் நூற்றாண்டுக்கப்புரம்தான் இங்கே வந்தார் என்றார். “ஆரியமாவது சோளமாவது; அதுதான் ஆரிய திராவிட கட்டுக்கதைகளை எப்பவோ பொய்னு நிரூபிச்சாச்சே! முதல்ல, நீங்க சொல்றமாதிரி ஏழாம் நூற்றாண்டுதான் வந்தார்னே வச்சிக்குவோம், ஆனா அதுக்கப்புறம் இங்க வந்து செட்டில் ஆனவன்லாம் பூர்வகுடிங்கறான் மண்ணின் மைந்தன்ங்கறான், அப்படி பார்த்தா விநாயகர் இம்மண்ணின் மரபுகளோடும் கலாசாரத்தோடும் கலந்த தெய்வந்தா. ரெண்டாவது, ஏழாம் நூற்றாண்டுங்கரது பொய்னு ஏராளமான ஆதாரங்கள் நிரூபிச்சுருக்கு. சிந்தாமணியில் காவிரி உருவானதற்கு காக்கை அகத்தியரின் கமண்டலம் தட்டிவிட்டதையும், பிள்ளையார்பட்டி கோயிலின் காலம் 5ம் நூற்றாண்டு என்ற தொல்லியல் தகவலும், உத்திரமேரூர் மற்றும் வேளச்சேரி புடைப்புச் சிற்பங்களின் தொன்மையும், மேலும் திருமூலர், அப்பர் போன்றவர்களின் பாடல்களும் கணபதியின் தொன்மையை விளங்கச் செய்யும்னு” என்று பதிலளிக்கப்பட்டது..

இன்னொரு திராவிடர், “விநாயகரை விட நாய் உசத்தி, விநாயகர் தண்ணில போட்டா முழுகி போறாரு, நாய் நீந்தி வந்துரும்; செலைய தூக்கி எறிஞ்சிட்டு ஒரு நாய வளத்துங்க” னு கிண்டலா அறிவ காட்டுனாரு. “தங்கத்தை விட சொரப்புருடை உசத்தி தெரியுமா..? தங்கம் தண்ணில முழுகிரும், சொரப்புருடை மெதந்துகிட்டு வந்திடும்; என்கிட்டே சொரப்புருடை நெறைய இருக்கு, சீக்கிரம் உங்கூட்ல இருக்கற தங்கத்த எடுத்தாங்க” னு நண்பன் மூக்கறுத்துவிட்டான்.

பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து சங்கத்தமிழ் மூன்றையும் பிள்ளையாரிடம் வேண்டிக் கேட்ட ஔவையாருக்கு அறிவு குறைவு போலும்.

இத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில்.

(ந.சசிகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

14 Replies to “விநாயகர் நினைவுகள்”

 1. இத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில்.

 2. அருமையான பதிவு சசி.. சில வருடங்களுக்கு முன் ஈரோடு அருகில் ஒரு சிவாச்சாரியரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் பகிர்ந்த ஒரு செய்தி. பெரியாரியம் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் ஊரில் இருந்த ஒருவர் பிள்ளையாரை வெறும் கல் என்று காலால் எட்டி உதைத்தாராம். அவர் பிற்காலத்தில் கை கால் விளங்காமல், பார்ப்பதற்கு கூட ஆள் இன்று பரிதாபகரமாக செத்து போனாராம்..

  திராவிட கழகவாசிகள் பல பேர் வெளியில் வீராவேசமாக நாத்திகம் பேசினாலும், ரகசியமாக எல்லா தெய்வங்களையும் கும்பிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

  எனது பங்காளி ஒருத்தர் கம்யுனிசவாதி. ஆனால் எங்கள் குல தெய்வ கோயில் விஷேசங்களுக்கு வந்துவிடுவார். “நீங்க இந்த இடத்துக்கெல்லாம் வரக்கூடாது” என்று கிண்டலடிப்பேன். அவர் சிரித்துக் கொண்டே, “என்னப்பா பண்றது.. வீட்டுக்காரி சொல்ல கேக்கனுமே” என்று சப்பை கட்டு கட்டுவார்..

  அதே போல எனது கல்லூரி நண்பனுக்கும் எனக்கும் பல வருட வாக்குவாதம் இருந்தது.. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதுதான்.. ஆனால் அவன் கல்யாணம் முடிந்தவுடன் முதலில் சென்றது அவனது குல தெய்வ கோயிலுக்குத்தான். அவனுடைய மாமனார் மிகுந்த பக்திமான். ஒரு பெரிய கோயில் லிஸ்ட் என் நண்பனிடம் கொடுத்து, மனைவியை கூட்டிக்கொண்டு போய் விட்டு வரச்சொன்னார்.. அவனும் போய் வந்தான்.. இதை பற்றி கேட்ட பொழுது, “என்னுடைய நம்பிக்கையை என் மனைவி மேல் திணிக்க மாட்டேன் ” என்று சப்பைக்கட்டு..

  நமது ஆன்மிக பாரம்பரியங்களின் வலிமையை எண்ணி வியந்து கொண்டேன். நாத்திக வாதிகள் தோற்றுக்கொண்டே இருப்பார்கள்.. காரணம் நாத்திகத்தில் பாசிட்டிவாக ஒன்றும் இல்லை. இன்னொன்று இல்லை என்ற சித்தாத்தத்தை நம்பிய நொடியிலேயே அவர்கள் தோற்றுவிட்டார்கள்..

 3. பிள்ளையாரின் பெருமை பிரமாதமாக விளக்கி உள்ளீர்கள். பிள்ளையார் பட்டியும், மற்றும் தேவார திருவாசகங்களும் பிள்ளையார் நம்மவர். வாதாபியிலிருந்து எல்லாம் வந்ததாக புரளி பாடுபவர்கள் தான் வந்தேறிகள் என அறிந்து கொண்டேன். கொங்கு தேச ஈரோடிலிருந்து ஒருவர் பிள்ளையாரை இகழ்ந்தார் எனில் அதற்கு மேல் அதே கொங்கு தேசத்திலிருந்து திரு சசி குமார் எல்லா பொய் உரைகளையும் தகர்த்து எறிந்துள்ளார்.

 4. அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் பல.

 5. நாட்டாமை ….. தலைப்பை மாத்து !

  விநாயகர் சிந்தனைகள் என்பதே முறையானது. இறைவனைச் சிந்திப்பதுதான் சரி.

  நினைவு என்பது நீத்தாருக்கானது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.

 6. ///மரத்தடி, குளக்கரை என்று எளிமையாக இருப்பார். இவையனைத்துமே விநாயகரின் எளிமையை மட்டுமல்ல அனைவராலும் அனுகப்படுபவர் என்பதற்கு உதாரணங்களாகும்.////

  ஆலயப் பிரவேசப் போராட்டம் அவசியப்படாத திருக்கோயிகள் வினாயகருடையவை. அங்கே தீண்டாமைக்கு முகாந்திரமே இல்லை.

 7. இந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம் says:

  இது விநாயகர் துவக்கி வைத்த இயக்கம் …
  விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லி, பொட்டைத் தனமாக மொட்டைக் கடிதம் மூலம் திருப்பிப் பெற்ற கருணாநிதியின் இந்து விரோதப் போக்கை எதிர்த்துத் துவங்கப்பட்டது. முக நூலில் அவரது பக்கத்தில் பல எதிர்ப்புக் கருத்துக்களை இந்து மதத்துக்கே உரிய அடிப்படை நாகரிகத்துடன் பதித்திருக்கிறோம். அவர் திருந்த மாட்டார், ஆனாலும் எதிர்ப்பு இருப்பதை உணர்ந்தால் போதும்.

  ஒத்த கருத்துடைய இந்து நண்பர்களை, “இந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம்” முக நூல் பக்கத்துடன் இணையும் படி நீங்கள் உங்கள் முக நூல் மூலமோ, தனிப்பட்ட முறையிலோ கூறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

  கருணாநிதியின் இரண்டு லட்சம் likes ஐ நாம் நமது “இந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம்” முக நூல் பக்கத்தின் நண்பர்கள் எண்ணிக்கையில் வென்றோம் என்றால், அவர் நிச்சயம் தனது தோல்வியைப் பொதுத் தேர்தல் வரும் முன்னரே உணர்ந்து விடுவார்.

  அதன் பின் “எவனும் இந்தத் தமிழ்நாட்டில் வாயைத் திறந்து இந்துக்களைத் தரக் குறைவாகப் பேசமாட்டான்” (திருவிளையாடல் படத்தில் பாலையா வ்சனம் சொல்வது போல இதைக் கற்பனை செய்து பார்க்கவும்!)

  நன்றி!, ஜெய் ஹிந்த்!

 8. இந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம் says:

  முகநூலில் கருணாநிதியின் பக்கத்திலும் ஸ்டாலினின் பக்கத்திலும் நாம் வெளியிட்ட முதல் எதிர்ப்புக் குரல் இதோ:

  தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவரும் இந்து மதத்துக்கு விரோதமான போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். முஸ்லிம்களின்/ கிறித்துவர்களின் ஒவ்வொரு விழாவுக்கும் முழ நீளத்துக்கு அந்த நிகழ்ச்சிகளின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு “அப்பெருமக்களை” வாழ்த்தி அறிக்கை விடும் அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான திரு. கருணாநிதி அவர்கள், இந்துக்களின் விழாக்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். நான்கு நாட்களுக்கு முன், வினாயகர் சதுர்த்திக்குப் பட்டும் படாமலும், இந்துக்களுக்கு என்று குறிப்பிடாமலும் ஒரு வாழ்த்தை அதன் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான திரு. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். அது கண்டு பொறுக்காத சில தி,கவினரும், மாற்று மதத்தினரும் திமுக தலைவரை என்ன சொன்னார்களோ தெரியவில்லை, அவர் தம் பெயரிலும் இல்லாமல், தனது மகன் பெயரிலும் இல்லாமல், ஏன் எந்த ஒரு திமுக அலுவலரின் பெயரிலும் இல்லாமல் மொட்டைக் கடிதம் போலக் கோழைத் தனமாகத் தலைமைக் கழகத்திலிருந்து என்று கூறி ஒரு மறுப்பை வெளியிட்டிருக்கிறார். இது இந்துக்களின் மனதை வெகுவாக நோகடிக்கிறது.

  திரு கருணாநிதியோ, திரு ஸ்டாலினோ வெறும் தனி மனிதர்கள் அல்லர். முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர்; அவர்களே அடிக்கடிச் சொல்லிக் கொள்ளும் “பொது வாழ்வில்” இருப்பவர்கள். அவர்கள் எல்லா மதத்தவருக்கும் பொதுவாக நடந்து கொள்ளாமல், மிகப் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களுக்கு விரோதமான போக்கைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

  இனியும் தொடர்ந்து இந்து மதத்தினரை இப்படி நான்காம் தரக் குடிமக்களாக நடத்தினால், தீண்டத்தகாதவர்களாக நடத்தினால் பொது வாழ்வில் அவர்கள் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கும் வகையில் இந்து மக்களை ஒன்று திரட்டி ஜன நாயக அமைதி வழியில் ஆனால் வாக்குப் பெட்டி மூலம் போராடுவோம் என்பதை இதனால் அறிவிக்கிறோம். தமிழ் நாட்டில் இந்து-முஸ்லிம்- கிறித்துவர் என்று வாக்களிக்கும்போது “Polarisation” வரும், வந்தால் யார் வெல்வார் என்பதைத் திரு. கருணாநிதி உணரவேண்டும். அப்படி ஒரு “Polarisation” வரும்போது அதற்கான முழுப் பொறுப்பும் திரு கருணாநிதி அவர்களுக்கே சாரும்.

  இந்துப் பெருமக்கள் பெருமளவில் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டு, அன்னிய மதத்தவரின் அடிவருடிகளுக்குத் தக்க பாடம் புகட்டக் கோருகிறோம்.

 9. இந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம் says:

  வாழ்த்தை ஸ்டாலின் வெளியிட்டது தனது முகநூல் பக்கத்தில். அப்படியானால் அதை வாபஸ் வாங்க வேண்டியது அந்தப்பக்கத்தில்தானே? அது என்ன தலைமைக் கழகத்தின் அறிக்கை? அதுவும் கருணாநிதி பெயரிலோ, ஸ்டாலின் பெயரிலோ இல்லாமல், ஏன் எந்த ஒருவர் பெயரிலும் இல்லாமல் மொட்டையாக?

  மொட்டை மறுப்பு வெளியிடும் பொட்டைத்தனம் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இந்தத் தொண்ணூறு வயதிலுமா இருக்கிறது?

  பொட்டைத் தனமாகக் கள்ள மவுனம் காக்கும் – மேயராகவும், துணை முதல்வராகவும், அமைச்சராகவும் இருந்த ஸ்டாலினை அவரது கட்சியினர் இனியும் தளபதி என்று அழைப்பது வெட்கக் கேடு.

 10. இந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம் says:

  யார் வெளியிட்டது என்று பெயர் இல்லாமல், ஒரு கையெழுத்து இல்லாமல் …..

  1949 இலிருந்து இருக்கும் அரசியல் கட்சி
  ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி
  ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கட்சி
  1996 இலிருந்து 2013 வரை (1998 நீங்கலாக) தொடர்ந்து ஜனதா தளம்
  பா.ஜ.க, காங்கிரஸ் என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடிக் கூட்டணி வைத்து மத்திய அரசில் அங்கம் வகித்த ஒரு கட்சி

  தன்மானமுள்ள கட்சி என்று மார் தட்டிக் கொள்ளும் தி.மு.க் …

  ஒரு மறுப்பை இப்படி வெளியிடுவது கயமைத் தனம்.

  இந்து மக்களை நேருக்கு நேர் சந்திக்கத் துணிவில்லாத வடி கட்டிய கோழைத்தனம்.

  இந்தக் கட்சியில் இருக்கும் ஆண்கள் தத்தம் மீசையை மழித்து விடலாம்.

 11. இந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம் says:

  மேற்கூறிய அனைத்துக் கருத்துக்கள் மட்டும் அல்ல, அண்மைய திருவோணம் வரைத் தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் அவர்களது பக்கங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவை தொடரும்.

 12. What the writer says about Lord Vinayaka is correct. we can see more Vinayaka temples in Tamilnadu than any other, as he reaches to all in simple form.

 13. பிள்ளையார் தமிழர்களின் கடவுள். பிள்ளையார் கோயில் இல்லாத ஊரே இலங்கையில் கிடையாது. சிங்களப்பகுதிகளில் கூட பிள்ளையாருக்குக் கோயில் உண்டு அவையெல்லாம் தமிழர்கள் அக்காலத்தில் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன..

  ///ஏழாம் நூற்றாண்டுதான் வந்தார்னே வச்சிக்குவோம், ஆனா அதுக்கப்புறம் இங்க வந்து செட்டில் ஆனவன்லாம் பூர்வகுடிங்கறான் மண்ணின் மைந்தன்ங்கறான்.///

  இந்தக் கட்டுரையில் எனக்குப் பிடித்த வரிகள் இவைதான். நேற்றுத் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் கூட, தமிழ் பேசினால் தமிழர்களே என வாதாடுகிறவர்களும், தமிழரல்லாத திராவிட வாரிசுகளும், தமிழர்களின் வரலாற்றுடன் இரண்டறக் கலந்து விட்ட பிள்ளையார் வழிபாட்டுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பில்லை என வாதாடுவது தான் வாடிக்கை. 🙂

  -தமிழரின் அழிக்கப்பட்டநெறி ஆசீவகத்தில் பிள்ளையார் வழிபாடு!-
  https://viyaasan.blogspot.ca/2014/09/blog-post.html

 14. K TV started on Vinayaka Chathurthi day only. Every year, they announce they are celebrating their anniversary on “Vidumurai dhinam”.

  In Srirangam, you can see DK volunteers shouting anti (hindu) gods slogans in the mornings. In the afternnon, they would be the first in the queue in the 2.30 pm darshan of Lord Ranganatha.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *