பக்தி, யோக சாதனை ஆகிய இரண்டு பாதைகளும் எல்லை கிழித்து பிரித்துவிட முடியாதவை. என்ற போதிலும் திருமந்திரத்தில் யோக-தந்திர சாதனைகளில் உள்ள முக்கியத்துவமும் இதர திருமுறைகளில் பக்திக்கு உள்ள முக்கியத்துவமும் அவை இரண்டு முழுக்க வெவ்வேறான பாதைகள் என்பது போல காட்சி மயக்கமொன்றை ஏற்படுத்துகின்றன. விநாயகர் அகவல் இந்த மயக்கத்தை இல்லாமலாக்குவதுடன் இரண்டையும் ஆற்றலுடனும் அழகுடனும் இனிமையுடனும் இணைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. பின்னர் அருணகிரிநாதர், தாயுமானவர், பாரதி வரை ஏற்பட்ட இணைவு இனிமைக்கு பிள்ளையார் சுழியாகவும் அமைந்துள்ளது…
View More விநாயகர் அகவல்: அனைவருக்குமான ஆன்மீகம்Tag: விநாயகர் அகவல்
திருப்பூர் அறம் அறக்கட்டளையின் 2026 ஏகாதசி உரைகள்
வந்தேமாதரத்துடன் நிகழ்ச்சி தொடங்கிற்று. ஜே.சி.குமரப்பாவின் நீடித்த பொருளாதாரம் குறித்து அறம் அறக்கட்டளையின் சிவக்குமார் பேசினார். அவரது உரை இதயத்திலிருந்து எழுந்த உரையாக இருந்தது.. அதன் பின்னர் விநாயகர் அகவல் குறித்து நான் பேசினேன். முந்தைய நாள் பள்ளி மாணவர்களுடனும், பின்னர் ஞாயிறு காலையில் சில ஜென் z இளைஞர்களுடனும் கலந்துரையாடல் செய்தோம். மாணவர்களில் ’முருகன் முப்பாட்டன்’ போன்ற கருத்தாக்கங்களின் செல்வாக்கை பார்க்க முடிந்தது, அதனை உரையாடலின் முடிவில் அவர்கள் மாற்றிக்கொண்ட போதிலும்.. கடவுள் நம்பிக்கை குறித்து பேச்சு வந்த போது…
View More திருப்பூர் அறம் அறக்கட்டளையின் 2026 ஏகாதசி உரைகள்தமிழகத்தின் சனாதன பாட்டி ஔவையார்
வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சங்ககாலத்திலிருந்து பல ஔவையார்கள் வாழ்ந்ததாக கருதுகிறார்கள். ஆனால் தமிழரின் சனாதன தர்ம மனமானது, கல்வியும் அனுபவமும் இறைஞானமும் கொண்ட ஒற்றைப் பெண்மணியாக ஔவையை உருவகித்தது. ஔவைப் பாட்டி ஒரு ஆன்மிக பண்பாட்டு archetype. அப்படிப்பட்ட பெண்ஞானியை உருவாக்கும் கல்வி முறை இந்த மண்ணில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாட்டி ஏதோ ஒரு கட்டத்தில் அவள் பேரக்குழந்தைகளுக்கு ஔவை பாட்டியின் வடிவமாக வேண்டும்…
View More தமிழகத்தின் சனாதன பாட்டி ஔவையார்விநாயகர் நினைவுகள்
கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன. நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட பல கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது… பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார்… பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து சங்கத்தமிழ் மூன்றையும் பிள்ளையாரிடம் வேண்டிக் கேட்ட ஔவையாருக்கு அறிவு குறைவு போலும். இத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில்….
View More விநாயகர் நினைவுகள்விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்
விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது… விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார்.
View More விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்