வன்முறையே வரலாறாய்…34

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி…

இஸ்லாமிய வரலாற்றாசிரியரான இப்ன்-வராக் காஃபிர் அடிமைகளைப் பற்றிக் கூறுகையில்,

“இஸ்லாமிய சட்டப்படி கைப்பற்றப்பட்ட அடிமைகளுக்குச் சட்ட ரீதியாக எந்த உரிமைகளும் இல்லை. அவர்கள் வெறும் வியாபாரப் பொருட்கள் மட்டுமே. அவர்களை அடிமைப்படுத்திய முஸ்லிம் அந்த அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அடிமைச் சந்தையில் விற்கலாம். அவர்களுடன் உடலுறவு கொள்ளலாம். அதுமட்டுமல்ல அந்த அடிமைகள் வேலை செய்து சம்பாதிக்கும் பணம் அனைத்தும் அவர்களின் உரிமையாளனான முஸ்லிமுக்கே சொந்தம். எந்த அடிமையும் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல அனுமதியில்லை. அந்த அடிமை முஸ்லிமாக மதம் மாறினாலும் அவனது நிலைமையில் முன்னேற்றமோ அல்லது அவன் விடுதலை செய்யப்படுவதோ நடக்கும் என்று சொல்வதற்கில்லை. அவன் மதம் மாறிய காரணத்தால் அவனை விடுதலை செய்ய அவனது உரிமையாளனான முஸ்லிமுக்கு கட்டாயமில்லை.”

islam-jihad-slavery-arabSlaveMarket

அடிமையை விலைக்கு வாங்கிய உரிமையாளன் அந்த அடிமையின் உடலின் ஏதேனும் குறைபாடுகளைக் கண்டுபிடித்தால் அவனை அடிக்கவும், வெளிக் காயம் தெரியாத வகையில் துன்புறுத்தவும் இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது. ஃபாத்வா-இ-ஆலம்கிரியில் எழுதியுள்ளபடி, அவ்வாறு உடல் குறைபாடுள்ள அடிமையை வாங்கியவனுக்கு, அந்த அடிமையை அடித்துத் துன்புறுத்தியதால் உண்டான காயம் வெளியில் தெரியும்படியாக இல்லாதிருக்கும் பட்சத்தில், விற்றவன் முழுப் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பனிரெண்டாம் நூற்றாண்டின் கடுமையான இஸ்லாமிய சட்டமான ஹெடாயா என்றறியப்படும் ஹனாஃபி சட்டம், “திருட்டு செய்யும் ஒரு அடிமையின் கையையோ அல்லது காலையோ வெட்டுவது இஸ்லாமிய சட்டத்தின்படி தவறில்லை” என்று கூறுகிறது.

பொதுவாக இஸ்லாமிய சட்டம் அடிமைகளை நல்ல முறையில் நடத்தவேண்டும் என்று கூறினாலும், ஒரு உரிமையாளன் தனக்குச் சொந்தமான ஒரு அடிமையை அடித்துக் கொன்றாலும் அது சாதாரண மரணமாக கருதப்படவேண்டும் என்றே கூறுகிறது.

இவ்வாறு அடிமைகள் விலங்குகளைப் போல நடத்தப்படுவதால் அவர்களுக்கு உண்டாகுm மன வேதனையும், உளைச்சலும், சுய மரியாதையை இழந்து நிற்கும் அந்த அடிமையைப் பெரிதும் பாதிக்கவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை. காஃபிர்களை அடிமைகளாகப் பிடிக்கும் இஸ்லாமியர்கள் அவர்களை சந்தைகளிலும், நாற்சந்திகளிலும் நடக்க விட்டுக் கேவலப்படுத்து சாதாரணமாகக் காணக்கிடைத்த ஒன்று. ஒரு அரசனோ அல்லது உயர் பதவியில் இருந்த ஒருவரோ அவ்வாறு நடத்தப்படுகையில் உண்டாகும் துயரம் வார்த்தையில் அடங்காதது.

உதாரணமாக, சுல்தான் முகமது காபூலை ஆண்ட இந்து அரசனான ஜெய்பாலைக் கைது செய்து அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் கஜினியை நோக்கி நடத்திச் சென்றான். அவ்வாறு செல்கையில் அவருக்கு சுல்தான் முகமது தொடர்ந்து அவமரியாதைகள் செய்தான். கஜினியின் அடிமைச் சந்தையில் அரசர் ஜெய்பால் ஒரு சாதாரண அடிமையைப் போல விற்பனை செய்யப்பட்டார். அவரது மனைவியர், மகன்கள் மற்றும் உறவினர் முன்பு இவ்வாறு அடிமையைப் போல நடத்தப்பட்ட ஜெய்பால் வேதனையுடன் மனமுடைந்து போனார். இறுதியில் உயிர் பிழைத்து அடிமையாக வாழ்வதனை விடவும் மரணமே மேல் என்று தீயில் குதித்து இறந்து போனார்.

இந்தியாவில் மட்டுமல்லாது இஸ்லாமிய ஆட்சி நிலவிய மற்ற நாடுகளிலும் இதுவே நிகழ்ந்தது. மொராக்கோ நாட்டு சுல்தான் மவுலே இஸ்மாயில் (1727) காலத்தில், கடலில் நடத்தியதொரு தாக்குதலில் பிடிக்கப்பட்ட வெள்ளை இனத்து அடிமைகள் ஏதோவொரு மொராக்கோ நாட்டுக் கடற்கரை நகரத்துக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களுடன் வந்த வெள்ளையரான் கேப்டன் ஜார்ஜ் எலியட் (George Elliot), அவருடைய சக வெள்ளை நிறத்தவருடன் கடற்கரையை அடைந்தவுடன் ஏராளமான குண்டர்கள் காட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு அவர்களைச் சூழ்ந்து கொண்டதாகவும், பின்னர் அவர்களை ஆடு, மாடுகளை நடத்திச் செல்வது போல அந்தக் கடற்கரை நகரத்தின் பல தெருக்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று எழுதுகிறார்.

அடிமைகளின் மனவேதனையை விட பசியாலும், தாகத்தாலும், நோயாலும் அடையும் துன்பமே பெரிதானது. கைப்பற்ற உடன் துவங்கும் இந்தத் துன்பம் அவர்கள் வந்தடைய வேண்டிய அடிமைச் சந்தை வரைக்கும் தொடர்ந்து வரும். அவ்வாறு அவர்கள் சென்றடைய வேண்டிய நகரமோ அல்லது அடிமைச் சந்தையோ ஆயிரம் மைல்களுக்கும் அப்பால், அவர்களுக்கு அறிமுகமே இல்லாததொரு தேசத்தில் இருக்கும். காடுகளிலும், மலைகளிலும், பனியிலும், குளிரிலும், வெயிலிலும் அவர்கள் நடத்தி அழைத்துச் செல்லப்படுவார்கள். அத்துடன் கைப்பற்றப்பட்ட அடிமைகள் அனைவரும் விற்பனை செய்து முடிக்கப்படும் வரையிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பார்கள். சில சமயங்களில் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் அந்த அடிமைகளை வாங்கி விற்கப்பட்டிருப்பார்கள். மதத்தின் பெயரால் சக மனிதர்களுக்குச் செய்யும் இந்தச் செயல் கற்பனை செய்து பார்ப்பதற்கே அச்சமூட்டுவது என்பதில் சந்தேகமில்லை.

இந்த அடிமைகள் எவ்வாறு நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக மீண்டும் காபூல் அரசர் ஜெய்பாலைக் குறித்துப் பார்க்கலாம். சுல்தான் முகமதின் வரலாற்றாசிரியரான அல்-உத்பி, “அரசன் ஜெய்பாலும், அவனது மகன்கள், பேரக் குழந்தைகள், உறவினர்கள், ராஜாங்க உயரதிகாரிகள் என்று பலரும் சுல்தான் முகமதினால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் உறுதியான கயிற்றால் கட்டப்பட்டு சுல்தானால் இழுத்துச் செல்லப்பட்டார்கள்…..சிலரின் கைகள் வலுக்கட்டாயமாக பின்னால் கட்டப்பட்டிருந்தன..மற்றும் சிலரின் கழுத்தைச் சுற்றிக் கயிறு கட்டப்பட்டிருந்தது…இன்னும் பலரின் கழுத்தில் தொடர்ந்து அடிக்கப்பட்டு நடத்திச் செல்லப்பட்டார்கள்….”

muslim_slave_system_in_india_ks_lalஇதில் ஒரு விஷயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். சுல்தான் முகமது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் படையெடுத்துச் சென்று மாதக் கணக்கில் முற்றுகையில் ஈடுபட்டு வந்தவன். அந்தப் போர்களில் அடைந்த வெற்றிகள் காரணமாகப் பல இலட்சக்கணக்கான அடிமைகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டார்கள். அவ்வாறு பிடிக்கப்பட்ட அடிமைகள் கயிற்றால் பிணைக்கப்பட்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த கஜினியை நோக்கி நடத்திச் செல்லப்பட்டார்கள். இவ்வாறு நடத்திச் செல்லப்பட்ட அடிமைகளில் பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளும் என்பதினையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். கால்களுக்குச் செருப்பில்லாமல் காடுகளிலும், மலைகளிலும் நடத்திச் செல்லப்பட்ட அந்தப் பெண்களும், குழந்தைகளும் சில சமயம் மாதக் கணக்கில் பயணம் செய்ய நேரிடும். எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கும் செயல் இது.

இவ்வாறு பல்லாயிரக் கணக்கானவர்கள் நடந்து செல்லும் வழியில் அவர்களுக்கு உணவோ, தண்ணீரோ கிடைக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அத்துடன் செல்லும் வழியில் நோயுற்றவர்களுக்கு எந்தவிதமான மருத்துவ வசதியும் கிடைத்திருக்கும் வாய்ப்பே இல்லை. நடக்க இயலாதவர்கள், நோயாளிகள் போன்றவர்கள் கைவிடப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். எண்ணிப் பாருங்கள். அறிமுகமில்லாத ஒரு நாட்டில், மலையில் அல்லது காட்டில் தனது உற்றார், உறவினரை இழந்து, உணவும், நீரும் கிடைக்காமல் கைவிடப்பட்டு இறக்க நேரிடுவதைப் போன்றதொரு கொடூரம் வேறொன்றுமில்லை. அத்தனையும் மதத்தின் பெயரால் மனிதன் சக மனிதனுக்குச் செய்தான். அதையும் விட அது அல்லாவால் அளிக்கப்பட்ட ஆணை என்றும் கூறி எவ்விதமான குற்றவுணர்வும் இன்றி இவ்வன்செயல்கள் நடந்தேறின. நடந்து கொண்டிருக்கின்றன.

ராஜஸ்தானின் ஜாலூர் நாட்டை ஆண்ட இந்து அரசன் கன்ஹர்தேவாவின் மீது உலுக்-கான் பால்பனின் தாக்குதலைக் குறித்தும், அந்தப் போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் துயரம் குறித்தும் அதனை நேரில் கண்ட பிரபந்தா இவ்வாறு கூறுகிறார்,

“பகல் நேரங்களில் பாலைவனத்து வெயில் மண்டையப் பிளந்தது. இரவு நேரங்களிலோ திறந்து கிடந்த பாலைவனத்தின் குளிர் வாட்டி வதைத்தது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட, தங்களின் தாயின் முலைகளிலிருந்து பிடுங்கப்பட்ட குழந்தைகளின் அழுகைச் சத்தம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அடிமையின் துன்பமும் மற்றவனை விடவும் அதிகமாகவிருந்தது. பசியிலும், தாகத்திலும் அந்த மனிதக்கூட்டம் துடித்துக் கொண்டிருந்தது….அதற்கும் மேலாக பல நோயுற்றவர் உட்காரவியலாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். காலில் அணிந்து கொள்ளப் பலருக்குச் செருப்புகள் இல்லை. மற்ற சிலருக்கோ அணிந்து கொள்ளக்கூட ஆடைகளில்லை….”

தொடரும் பிரபந்தா,

“பலரின் கால்கள் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தன. இன்னும் சிலரோ தோல் பட்டைகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்தார்கள். பிள்ளைகள் தங்களின் அன்னையரிடமிருந்து பிரிந்து திரிந்தார்கள். மனைவிகள் கணவன்களிடமிருந்து….சிறிதும் ஈவிரக்கமற்ற இந்தத் தாக்குதல்களின் காரணமாக. முதியவர்கள், இளைஞர்கள் என்ற பேதமில்லாமல் அனைவரும் வலியாலும், பசியாலும் துடித்துக் கொண்டிருந்தார்கள்….ஏதாவதொரு அதிசயம் நிகழ்ந்துத் தங்களை இந்த இன்னல்களிலிருந்து காப்பாற்றி விடாதா என்னும் நப்பாசையுடன் பலர் கண்ணீர் சிந்திப் புலம்பியவண்ணமிருந்தார்கள்….”

கவனியுங்கள். இந்தத் துன்பமெல்லாம் கைப்பற்றப்பட்ட சிறிது நாட்களில் நடந்தவை. நாட்கள் செல்லச் செல்ல அந்த அடிமைகளின் துயரங்கள் அதிகமுறுமேயன்றி குறைவதற்கான எந்த வழியுமில்லை. இன்னும் பல ஆயிரக்கணக்கான மைல்கள் அவர்கள் நடந்து செல்ல வேண்டும். மாதக் கணக்கில் அந்தப் பயணம் இருக்கும். எண்ணிப் பார்க்கவே குலை நடுங்கும் பயங்கரமது.

இஸ்லாமிய அடிமை வியாபாரம்
இஸ்லாமிய அடிமை வியாபாரம்

இந்தியர்களுக்கும் மட்டும் நடந்த துயரமல்ல இது. ஆப்பிரிக்காவில் பிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கறுப்பர்கள் இவ்வாறு நடத்தி வரப்பட்டார்கள். மத்திய ஆசிய நாடுகளிலும் ஏன் இந்தியாவிலும் கூட இந்தக் கறுப்பர்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். வெள்ளையர்களும் இதில் பாதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் ஆச்சரியம்.

1687-ஆம் வருடம், மொராக்கோ சுல்தான் மவுலே இஸ்மாயில் பிரஞ்சு நகரமான ட்ரவுடெண்டடைத் (Taroudant) தாக்கி அங்கிருந்த பலரையும் கொலை செய்தான். பின்னர் 120 பிரஞ்சுக்காரர்களை அடிமைகளாகப் பிடித்தான். அவ்வாறு பிடிக்கப்பட்ட வெள்ளைக்காரர்கள் குண்டாயிருப்பதாகக் கூறி ஏறக்குறைய ஒரு வாரம் வரைக்கும் அவர்களுக்கு உணவளிக்கப்படவில்லை. உணவு கேட்டு அழுது புலம்பிய அவர்களை உடனடியாக தனது தலைநகரான மெக்னஸுக்கு நடத்திச் செல்ல உத்தரவிட்டான் சுல்தான். அவ்வாறு 300 மைல்களுக்கும் மேலாக நடத்திச் செல்லப்பட்டவர்களைப் பற்றி பிரஞ்சு அடிமையான ஜான் லாடிர் (Jean Ladire) குறிப்புகள் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். அதன்படி, பிரஞ்சு அடிமைகள் சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டு ஆட்டு மந்தைகளைப் போல ஓட்டிச் செல்லப்பட்டார்கள். நோயும், பசியும் அவர்களை வாட்டி வதைத்தன. பலர் இறந்து விழுந்தார்கள். சந்தேகப் பிராணியான தங்களின் சுல்தான், அவனுக்குத் தெரியாமல் தாங்கள் அந்த அடிமைகளை விற்று விட்டதாக சந்தேகித்து தண்டனை அளித்துவிடுவான் என்று அஞ்சிய காவலர்கள், அவ்வாறு இறந்தவர்களின் தலையை வாளினால் துண்டித்து, உயிர் பிழைத்தவர்களிடம் கொடுத்து, அதனைச் சுமந்து செல்லும்படி வலியுறுத்தினார்கள்.

ஆப்பிரிக்காவை நோக்கி நடத்திச் செல்லப்பட்ட அவர்கள் தரைக்கடியில் அமைக்கப்பட்டிருந்த மட்டமோர் (matamore) என்னும் சிறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள். காற்றுப் புகாத அந்த அறையில் அடைக்கப்பட்ட் அடிமைகளுக்குச் சிறிதளவு ரொட்டியும், நீரும் மட்டுமே வழங்கப்பட்டது. ஒவ்வொரு அடிமைச் சந்தை நாளின் போதும் உள்ளிறக்கப்படும் கயிற்று ஏணியின் உதவி கொண்டு வெளி வரும் அந்த அடிமைகள் பின்னர் விற்பனை செய்யப்பட்டார்கள். அவர்கள் அடைந்த துன்பங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் அடிமையான ராபர்ட் ஆடம்ஸ் என்பவரும் இதனைக் குறித்து விளக்கமாகவே குறிப்புகள் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். அத்தனையையும் எழுதிட இங்கு இயலாத காரணத்தால் இதனை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

(தொடரும்)

29 Replies to “வன்முறையே வரலாறாய்…34”

 1. SP will be proud of all these things. people like him want to repeat the same today!.
  I was not shocked when he claimed that his god and book give permission to do these things.

 2. அரேபிய வல்லாதிக்க காடையா்களின் ஈனச்செயலை விளக்கும் கட்டுரைகளை தொடா்ந்து எழுதுங்கள். நிறைய மக்களை அது சென்றடைய வேண்டும். தங்களால் இயன்ற கூடுதல் தகவல்களை எழுதுங்கள்.

 3. பொதுவாக இஸ்லாமிய சட்டம் அடிமைகளை நல்ல முறையில் நடத்தவேண்டும் என்று கூறினாலும்,

  தனக்கே தெரியாமல் கட்டுரையாளரின் வாக்குமூலம் மேலே உள்ளது.

 4. கட்டுரையாளர் பொதுவாக இஸ்லாம் மீது சேற்றை வாரி இறைக்காமல் சில விஷயங்களை நடுநிலையாக தெளிவு படுத்த வேண்டும்.

  1. இஸ்லாம் தோன்றும் முன் உலகில் அடிமைகள் இல்லையா? அல்லது மிகவும் மரியாதையாக நடத்த பட்டார்களா?

  2. இஸ்லாம் அறிமுகமாகாத உலகின் மற்ற பகுதிகளில் அடிமை முறை அறவே இருந்தது இல்லையா?

  3. எப்படி போரில் முஸ்லிம் அல்லாதவர்கள் ;அடிமைகள் ஆக்கப்பட்டார்களோ, அதே போல் முஸ்லிம்களும் எதிரிகளால் அடிமைகளாக பிடிக்கப்பட்டார்கள் அல்லவா ?

  பதில் அளிப்பார் என எதிபார்க்கிறேன்.

 5. பதிலளிக்காமல் ஓடிவிட மாட்டேன் மஜீத் பாய். இதற்குத்தானே காத்துக் கொண்டிருக்கிறேன்.

  1. இஸ்லாம் தோன்றுவதற்கு முன் அடிமை முறை இருந்தது. அடிமைகள் இருந்தார்கள்.

  2. இஸ்லாம் அறிமுகமாகத மற்ற பகுதிகளிலும் அடிமை இருந்தது.

  3. முஸ்லிம்கள் அடிமைகளாகப் பிடிக்கப்படவில்லை மஜீத் பாய். கைதிகளாக பிடிக்கப்பட்டார்கள். மரியாதையுடன் நடத்தப்பட்டார்கள். விடுதலை செய்யப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான இந்துக்களை படுகொலை செய்த முகமது கோரியைப் போரில் பிடித்த ப்ருதிவிராஜன் அவனை மரியாதையுடன் நடத்தி விடுதலையல்லவா செய்தான். அந்தச் தவறால் அவன் அழிந்தல்லவா போனான்? அதுதான் வித்தியாசம்.

  இன்றைக்கு இஸ்லாமைத் தவிர எந்த மதமும் அடிமைகளைப் பிடிக்கவோ அல்லது அவர்களின் மத நம்பிக்கைக்காகவோ கொல்லவோ சொல்வதில்லை. செய்வதில்லை. அந்த மாதிரியான செயல்கலையெல்லாம் வேறு எந்த மதத்துக்காரனாவது நடத்துகிறானா? சென்ற காலங்களில் அது நடந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைக்கு நடக்கிறதா என்பதுதான் கேள்வியே.

  இஸ்லாம் அடிமை முறையை ஒரு நிறுவனமாக்கி உலகெங்கிலும் நடத்தியதல்லவா வரலாறு? அதையெல்லாம் படித்ததுண்டா மஜீத் பாய்? இப்போது கூட இராக்கில் “அமைதிமார்க்க” ஐ.எஸ்.ஐ.எஸ். அடிமைகளை எப்படி நடத்துகிறது நீங்கள் பார்த்ததுண்டா? இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுக்கு உகந்ததா உங்களின் “அமைதி மார்க்கம்”?

  குரானின் ஒவ்வொரு பக்கமும் காஃபிர்களை எப்படிக் கொல்லவேண்டும், அவர்களின் மனைவி, குழந்தைகளை சிறைபிடித்து அடிமைகளாக்க வேண்டும் என்று பக்கத்துக்குப் பக்கம் சொல்கிறதே. கொலைகாரக் கையேடல்லவா குரான்? குரானின் அர்த்தம் புரிந்து நீங்கள் படித்ததுண்டா மஜீத் பாய்?

  உங்களின் அடுத்த கேள்விக்குக் காத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் எழுதவும்.

 6. ரூபன் அவர்களே, இப்படி பொத்தாம் பொதுவாக பதில் சொன்னால் எப்படி? கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் மரியாதையாக நடத்தப்பட்டார்கள் என்பது மிக பெரிய பொய். இன்றும் கூட உலகின் பல நாடுகளில் கைதிகள் மரியாதையாக நடத்தப்படுவதில்லை. ஆதலால் அடிமைகள் விஷயத்தில் இஸ்லாத்தை கொச்சை படுத்த வேண்டாம்.

  அடிமைகள் உரிமை குறித்த இஸ்லாத்தின் கோட்பாடு மிக உயர்ந்த நோக்கம் கொண்டது, அதை உங்கள் கட்டுரையில் நீங்களே குறிப்பிட்டு உள்ளீர்கள். சில முஸ்லிம் கொடுங்கோல் மன்னர்கள் செய்த வெறியாட்டத்திற்கு இஸ்லாத்தை பொறுப்பாக்க வேண்டாம். அவர்கள் முஸ்லிமாக இல்லாவிடினும் அவ்வாறே நடந்து கொண்டு இருப்பார்கள் என்பது நிச்சயம்.

  21 ஆம் நூற்றாண்டு அல்ல, உலகம் அழியும் வரையும் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, பாம்பையும்,பள்ளியையும், கழுதையையும்,குதிரையையும், மண்ணையும்,மரத்தையும் கடவுளாக வணங்கிய மனிதனை பண்படுத்தியது இஸ்லாம் மட்டுமே.

  ISIS பற்றி பேசுவதாக இருந்தால், அவர்களை வளர்த்து விட்டவர்களையும் பற்றியும் பேச வேண்டும், செய்வீர்களா?

 7. மஜீத் பாய்

  //கட்டுரையாளர் பொதுவாக இஸ்லாம் மீது சேற்றை வாரி இறைக்காமல்//

  இஸ்லாம் ஒரு சாக்கடை அதில் சேற்றை வாரி இறைத்தால் அது சுத்தப்படும்,

  பாத்தீங்களா ரூபன். நீங்கள் இன்னும் இஸ்லாமை பற்றி நிறைய நல்ல நல்ல வார்த்தைகளில் எழுதவேணும் என்கிறார் மஜீத் பாய்.

  அடிமைகளாக பிட்டிப்பவர்களை நாங்கள் கற்பழிக்கும் போது ஜாக்கரதையா இருக்கனுமா இல்லாங்காட்டி அவர்கள் கர்பமானால் பரவா இல்லையா என்று ஒரு விசாரத்தை புனித தூதரின் தலைமையில் நடத்தி அதற்கு ஆயிரத்து ஐநூறு வருஷத்துக்கு முன்பே முடிவு கண்ட ஒரே விஞான மதம் இஸ்லாம் தான். கர்பமானால் அவர்களை குறைந்த விலைக்கே விற்க முறியும் என்று விசனப்பட்டார்கள்.

  புருஷனை கண் அவள் முன்னே கொன்று அன்றிரவே அந்த அடிமை பெண்ணுடன் தனியாக ஒரு டெண்டு போட்டு குடும்பம் நடத்தி பின் அவளை தன பெண்டாட்டிகளுள் ஒன்றாக சேர்த்துக் கொண்டவரை தலைவராக கொண்ட அசிங்கமில்லாத ஒரே மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் தான்.

  இன்றைக்கு ஐஎஸ் ஐஎஸ் காசு கொடுத்து அடிமைகளை வாங்கி அவர்களை கழுத்தறுத்து கொன்று அதை வீடியோ பிடித்து அப்லோடு செய்யும் ஒரே அமைதி மார்க்கம் இஸ்லாம் தான்.

 8. அப்படியா? அடிமைகள் உரிமை இஸ்லாமில் உயர்ந்த நோக்கம் கொண்டதா? எனக்குப் புரியவில்லையே. அப்படியானால் இஸ்லாம் சொல்கிறபடி காஃபிர் அடிமைகளைப் பிடிக்கலாம். விற்கலாம். ஒருவன் அடிமையான பிறகு அவனுக்கு என்ன உரிமை இருக்கப் போகிறது? அதையும் விட அடிமைக்கு என்ன “உயர்வான” கோட்பாட்டை இஸ்லாம் அளிக்கப் போகிறது? அடிமைகளைப் பிடிப்பது தவறு என்கிற எண்ணமே உங்களுக்கு வரவில்லையே. பரிதாபம்தான்.

  காஃபிர் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்து அவர்களுக்கு ஹார்மோன் ஊசி போட்டு சந்தையில் மாடுகளைப் போல ஐ.எஸ்.ஐ.எஸ். மூடர்கள் விற்றுக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அவர்களுக்கு ஏன் “உயர்வான” கோட்பாட்டை நீங்கள் கொடுக்கக்கூடாது? இஸ்லாம் என்னும் மதம் மனித குலத்திற்கு விரோதமானது.

  பாம்பும், பல்லியும், குதிரையும், மண்ணும், மரமும், கல்லும் கடவுளால் படைக்கப்பட்டவை. அவற்றை வணங்கும் போது அதன் பின்னிருக்கும் படைத்தவனை வணங்குகிறோம் என்னும் உயரிய தத்துவம் உடைய இந்துமதம் பற்றி உங்களுக்கென்னய்யா தெரியும்? தனது கடவுளை வணங்காதவனைக் கொல்லவும் அவனது மனைவி, குழந்தைகளை அடிமைகளாகப் பிடிக்கவும் இந்து மதம் எங்கும் போதிப்பதில்லை. அவ்வாறு எங்கேனும் போதிக்கப்பட்டிருந்தால் அந்த “புனித” நூலை ….ண்டி துடைக்க மட்டுமே இந்துக்கள் பயன்படுத்துவார்கள் மஜீத் பாய்.

  ISIS பற்றியும், அவர்களை வளர்த்து விட்டவர்களையும் பற்றியும் பேசுங்களேன். கேட்போம்.

 9. மஜீத் பாய்

  //
  பாம்பையும்,பள்ளியையும், கழுதையையும்,குதிரையையும், மண்ணையும்,மரத்தையும் கடவுளாக வணங்கிய மனிதனை பண்படுத்தியது இஸ்லாம் மட்டுமே.
  //

  பாருங்கள் இந்த மனிதர்கள் எல்லா உயிர்களிலும் கடவுளை பார்த்தார்கள், அந்த விலங்குகளை கூட பண்பாடோடு நடத்தினார்கள்.

  நீங்களோ சக மனிதனை காபீராக்கி காபீரை நாயை விட கேவலமாக நடத்துகிறீர்கள்.
  இஸ்லாம் வளர்ந்த கதையும் ISIS கதையும் ஒன்று தான். ரெண்டுக்குமே ஒரே காரணம் காட்டு மிராண்டி தனம் தான்.

  அடிமைகளை வெறும் பெயர் தாங்கி முஸ்லீம்கள் மட்டும் கொடூரமாக நடத்தவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தானே வழிகாட்டி உள்ளார். புருஷனை கண் முன்னே கொன்று அடிமையாக பிடிக்கப்பட்ட பெண்ணை எப்படி அன்றிரவே கற்பழிப்பது. பாத்தீங்களா சல்லாவர்கள் எவ்வளவு நல்லவர் சபியாவை அவரு கண்ணாலம் கட்டிகிட்டாரு. வேற யாராவது இப்படி செய்வார்களா என்று மணாமுள்ள முசுலீமுகள் இதற்கு சப்பை கட்டு கட்டுவார்கள்.

  ஒரு பொண்டாட்டியை பொய் சொல்லி அப்பா வீட்டுக்கு அனிப்பி விட்டு தன மனைவியின் வேலைக்காரி அடிமை மரியாவுடன் சரசமாடும் போது மாட்டிகொண்டது மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தானே. இது பெரிய பிரச்சனையாக வெடிக்க அதை அல்லா தானே சல்லுக்கு வஹி வர வெச்சு காப்பாத்தினது.

  இஸ்லாம் மண்ணுக்கேற்ற மார்க்கம் இல்லேண்ணே மண்ணு மார்க்கம்

  இஸ்லாம் திருடாதே என்கிறது. ஆனால் கோலை அடித்து அதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் போடுகிறது. இதே அழகில் தான் அடிமைகளை நன்றாக நடத்த வேண்டும் என்ற வசனமும்.

  நீங்கள் விருப்பட்டால் நபி அவர்களின் திரு திரு விளையாடல்களை நீட்டி எழுதுகிறேன்

  சப்பை கட்டு கட்டுவதை நிறுத்தவும். தயவு செய்து எங்களை கேணயர்களாக என்ன வேண்டாம்

 10. //அந்த “புனித” நூலை ….ண்டி துடைக்க மட்டுமே இந்துக்கள் பயன்படுத்துவார்கள்.//

  தாங்களும் இவ்வளவு உணரச்சி வசப்பட்டு பதில் எழுதுவதை முதன்முதலாகப் பார்க்கிறேன், உயர்திரு ரூபன்! படிக்கும் எங்களுக்கே உணர்ச்சி பொங்கும்போது, மொழிபெயர்க்கும் தங்கள் மனநிலையை என்னால் அறியமுடிகிறது.

 11. ”புனித குரான்”” எனபடும் புருடா நூலில் இரண்டு விஷயத்தில் போலியான பெருமை கொள்கின்றனர். அவை யாவன? 1) சுவனபிரியன் சொல்படி (“ராகவேந்திரர்” பற்றிய ”தமிழ் இந்துவில்”வந்துள்ள ஒரு கட்டுரையின் மறுமொழியில் கூறியுள்ளது போல) குர்ஆனில் மனித கரங்கள் விளயாடவில்லையாம். 2) திருக்குறளில் கூட முரண்பாடு உள்ளன. ஆனால் திருகுரானில் முரண்பாடே கிடையாது என்று பெரும்பாலான முஸ்லிம் முரடர்களின் கருத்து. இவை இரண்டிற்கும் நான் கீழே பதிலளிக்கிறேன்.

  1. பல சந்தர்பங்களில் நபியின் ஒப்புதலோடு குரான் வசனங்களின் வார்த்தைளை A SCRIBE (=Abdollah Abi Sarh ) உதாரணத்திற்கு:— நபி ஒருமுறை “God is mighty and wise ” என்று சொன்னபோது அந்த Scribe அதற்கு பதிலாக “Knowing and wising ” என்று எழுதினால் நன்றாக இருக்குமே என்று suggestion சொன்னபோது நபி “சரி அப்படியே எழுது” என்றாராம்! இதுபோல பல மாற்றங்களை அந்த scribe நபியின் ஒப்புதலோடு செய்திருக்கின்றார் அப்போது அவருக்கு இவை (=வசனம்) அல்லா சொன்னதா அல்லது முகமது தன மனதில் தோன்றியபடி சொன்னதா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அல்லா சொல்லியிருந்தால் அதை இவர் இஷ்டப்படி மாற்ற இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதனால் அவர் இஸ்லாமை துறந்து மீண்டும் மெக்கா சென்று Qorayshites உடன் இணைந்தார். முகமதுவும் அவரது தொண்டரடிகளும் ஒரு முறை Qorayshites போரிட நேரும்போது முகமது தானே Abdullah (scribe )வை கொன்றார். அவர் இவரது குரான் உளறல் ரகசியத்தை அறிந்தவரல்லவா! சுவனத்தில் 72 ஜில் ஜில் ராணிகள் கிடைப்பார்கள் என்று நபியின் (பொய்யான) வார்த்தையை நம்பி தன பெயரை கூட ”சுவனபிரியன்” என்று மாற்றிகொண்டார். இந்த லட்சணத்தில் அல்லாவின் மொழியே குரான் என்று கூறுகின்றனர்.

  2. அத்தியாயம் 69 ல் வசனம் 25-37 ல் இடதுகரத்தில் ”செயலேடு” கொடுக்கப்படும் என்று கூரியாவர் அத்தியாயம் 84 ல் வசனம் 1-15 ல் வினைபட்டியல் முதுகு பின்னால் கொடுக்கப்படும் என்று கூறுகிறார். முதுகுபுரமும் இடதுகரமும் ஒன்றா? அதேபோல 69: 25-37 ல் சீழ்நீரை தவிர அவனுக்கு (காபிருக்கு) எந்த உணவும் இங்கு (நரகம்) இல்லை என்று கூறுகிறார். ஆனால் 88:1-16ல் காய்ந்துபோன புர்பூண்டுகளைத் தவிர எந்த உணவும் இங்கு இல்லை என்று கூறுகிறார். இப்படி மாற்றி மாற்றி பேசும் இந்த ஆசாமி(நபி) ஒரு குடிகாரரா அல்லது அரைகிருக்கனா?

  இப்போது மஜீத் பாய் என்று ஒருவர் வந்துள்ளார். வணக்கம் நண்பரே! அல்லாதான் எல்லோரையும் படைக்கிறார் என்று கூறும் நீங்கள் அப்புறம் ஆண்டான் அடிமை என்ற பாகுபாடு எங்கே இருந்தது வந்தது?
  1. எகிப்து நாட்டை ஆண்டுவந்த Byzantine என்பவன் அடிமை பெண் Marriaal Qibitiyaa என்பவரை பரிசு பொருளாக (!!!!???) முகமது நபிக்கு அனுப்பிவைத்தாராம். அந்த பெரிய மனிதன் நபி அவளை கூத்தியாராக வைத்துகொண்டு (11 மனைவிகள் போதவில்லை போலும்) அதன் மூலம் இப்ராகிம் என்ற குழந்தையை பெற்றாராம். ஆனால் அந்த குழந்தை இறந்துவிட்டது. அப்போது நபி குலுங்கி குலுங்கி அழுதாராம்.
  ஆனால் போரில் சிலர் (இவரது ஆட்களே) இறந்தது கண்டு அவர்களது மனைவிமார்கள் அழுதபோது அவர்களின் வாயில் மண்ணை அள்ளி போடுங்கள் என்றாராம். ஆஹா! என்ன அருமையான மனிதர்! அற்புத புனிதர்!

  2. 627 ல் நடந்த Battle of Trench ல் Jewish Tribe ஆனா Banu Qurayza ஆட்கள் நபியிடம் சரணடைந்தனர். ஆனால் 900 பேரின் தலைகளை சீவி (சீப்பினால் அல்ல வாளால்) ஒரு பெருங்குழியில் போட்டு நம்ம நபி புதைத்தான். ஆனால் அவர்களின் மனைவி குழந்தைகளை தனது அடிமைகளாக ஆக்கினான். இவர் முகமது நபியா அல்லது மகா பாவியா?

 12. இந்த வெட்டி ஒட்டுவது , எங்கிருந்தாவது ஒன்றிரண்டு வசனங்களை எடுத்துப் போட்டு, “குரான்” அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று சொல்வதையெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது.

  இஸ்லாமை யாரும் கேவலப்படுத்தவில்லை மஜீத் பாய். “இஸ்லாமே கேவலமாக இருக்கிறது”. அதைத்தான் உலகம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது. நீங்கள் புரியாத மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

 13. கடவுள் ஒருவன் இருந்தால் இப்படிப்பட்ட கொடுமைகளை எப்படி அனுமதிப்பான்? நாம் வணங்கும் கடவுள்கள் எல்லாமே பொய்யா? கண்ணனும் சிவனும் காளியும் வெறும் கற்பனைப் படைப்பா? ஏனெனில், கொடுமை மிஞ்சும் போது இறைவன் மண்ணுக்கு வருவான் என்பது உண்மையானால் உலகில் இந்தக் காட்டுமிராண்டி மதத்தவரால் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளை இந்நேரம் பிறந்து வந்து தடுத்திருக்க வேண்டுமே…

 14. குரான் ‘அவமதிப்பு’ என்ற பெயரில் சமீபத்தில் பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவர்களைக் கொளுத்திவிட்டனர்.

  திரு ரூபன் – இந்த தொடருக்கு ‘வன்முறையே வரலாறாய்’ என்பதற்கு பதிலாக ‘வன்முறையே தொடர்கதையாய்” என்று தலைப்பு வைக்கலாம்.

 15. //அந்த “புனித” நூலை …. துடைக்க மட்டுமே இந்துக்கள் பயன்படுத்துவார்கள்.//

  பிறமதத்தவர்களின் புனித நூல்களை சிறுமைப்படுத்தி அவர்களின் மன‌ங்களைக் காயப்படுத்துவது இந்துக்கள் பழக்கமல்ல. அவர்கள் செய்ய மாட்டார்கள். எல்லாமதங்களையும் மதிப்பதே இந்துக்களின் பண்பாடு. உலகமே என் குடும்பம் எனபவனே இந்து. யாதும் ஊரே யாவரும் கேளிர்! அது மட்டுமன்றி, பிறமதத்தவர்கள் இடையூறுகளில் சிக்கிக்கொள்ளும்போது காப்பாற்றுவதும் இந்துக்கள் பண்பாகும் என்பதற்கு போனவாரம் தில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

  தில்லி திருலோகப்புரியில் இந்து- இசுலாமியர் கலவரத்தை சில விஷமிகள் தூண்டி விட்டார்கள்; பன்னாட்கள் கலவரம். தற்போது ஓய்ந்துவருகிறது. இதற்கிடையில் மொஹரம் பண்டிகை வந்தது. அரசு மொஹரம் ஊரவலம் கூடாதென்றது. இந்துக்களின் சீற்றத்துக்கு ஆளாக வரலாமென்றது.
  உடனே மொஹரம் அன்று திருலோகபுரியில் இந்துக்கள் இசுலாமியரோடு சேர்ந்து அவ்வூர்வலத்தை நடத்தினார்கள்.
  இப்படிப்பட்டவர்கள் எப்படி இசுலாமியரின் புனிதநூலை அசிங்கப்படுத்துவார்கள் ?

 16. பிற மதத்தவர்களின் புனித நூல்களை சிறுமைப்படுத்துகிறேனாம். முதலில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று புரிந்து கொள்ளவே சக்தியில்லாதவர்களிடமிருந்து இப்படித்தானே எதிர்வினை வரும்? “இந்து” மத “புனித” புத்தகம் எதுவும் தனது மதத்தை சாராதவனைக் கொல்லச் சொன்னால் அதனை “இந்துக்கள்” …ண்டி துடைக்கத்தான் பயன் படுத்துவார்கள் என்றல்லவா நான் எழுதியிருக்கிறேன்!

 17. குறையில்லா மதமொன்று கிடையவே கிடையாது. மதங்கள் மனித மனங்களின் படைப்புக்கள். குறைகள் இருக்கத்தான் செய்யும். ஓர் மதத்தில் குறைகள் அதிகமிருக்கலாம் மற்றவர் பார்வையில் அவ்வளவுதான். புனித நூல் என்பதிலுள்ள புனிதம் அவர்களுக்கு. உங்களுக்கன்று; அப்படியிருக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்சினை? நிர்ப்பந்தம் என்று வரும்போது அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு எதிர்க்கலாம். ஆனால், சொற்போர் என்று மட்டும் வரும்போது, நீங்கள் எழுதியது அவை நாகரிகமில்லை. கீழ்த்தரமான மககளிடையே புழங்கும் சொற்களை இங்கு எழுதாதீர்கள். நன்றி.

 18. பால சுந்தரம் கான்,

  புல்லரிக்கிறதைய்யா. 🙂

 19. பாலா ஆரம்பிச்சாச்சா அட்வைசுகள

  என்னை கேட்டால் ரூபன் ரொம்ப டீஜெண்டா எழுதுராருன்னுதான் சொல்வேன். இவர்கள் செய்த கொடூரங்களை திட்ட வார்த்தைகள் போததுங்கன்னே.

  அது சரி இஸ்லாமில் அடுத்தவனை திட்டுவது என்றே ஒரு சடங்கு உண்டு தெரியுமா. நபிகள் கூட இதை கையாண்டிருக்கிறார்.

  புனித நூல் அவர்களுக்கு உமக்கென்ன என்று அறிவிளியாட்டம் கேட்ட என்ன செய்வது. நான் கூட ஒரு புனித நூல் எழுதி என்னை நானே எல்லாமாகவும் அறிவித்து கொள்ளலாம் (நபிகள் மாதிரி). ஆனால் அதை பாலா ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் அல்லது பாலாவை தலையை சீவிக் கொல்லுவேன். ரோட்ல போற வரவனை எல்லாம் அடிப்பேன், கொல்லுவேன், கற்பழிப்பேன் என்றால் அந்த பிசாசு நூலை திட்டத்தான் செய்யணும், இது கூடவா உங்களுக்கு புரியல.

 20. ////மன‌ங்களைக் காயப்படுத்துவது இந்துக்கள் பழக்கமல்ல./////

  கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடன் என்று கிறிஸ்தவர்கள் நடத்தும் convent களில் நமது இந்து குழந்தைகளுக்கு போதிக்கிறார்களே! அது மனத்தை காயபடுத்துவது ஆகாதா? ராமன் ஒரு குடிகாரன் என்று கருணாநிதி சொன்னது மனத்தை காயபடுத்துவது ஆகாதா? பாரத மாதா ஒரு தேவிடியா என்று டெல்லி இமாம் கூறியது தேச பக்தர்களின் மனத்தை காயபடுத்துவது ஆகாதா?

 21. //நான் கூட ஒரு புனித நூல் எழுதி என்னை நானே எல்லாமாகவும் அறிவித்து கொள்ளலாம் (நபிகள் மாதிரி). ஆனால் அதை பாலா ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் அல்லது பாலாவை தலையை சீவிக் கொல்லுவேன். ரோட்ல போற வரவனை எல்லாம் அடிப்பேன், கொல்லுவேன், கற்பழிப்பேன் என்றால் அந்த பிசாசு நூலை திட்டத்தான் செய்யணும், இது கூடவா உங்களுக்கு புரியல.//

  நான் எழுதியதைச் சரியாப் படிக்கலையோ:

  //நிர்ப்பந்தம் என்று வரும்போது அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு எதிர்க்கலாம். //

 22. பாலா இவ்வளவு அசடா நீங்கள்

  உண்மையா சொன்னால் அது காயப் படுத்துவதா. அஜ்மல் கசாப் ஒரு காட்டுமிராண்டி பயங்கரவாதி என்று சொனால் பாகிஸ்தானியர்கள் கவலை படுவார்கள் என்று காங்கிரஸ் கிறுக்கர்கள் வேண்டுமென்றால் அவனை கசாப் ஜி என்று அழைப்பார்கள், எல்லோரும் அழைக்க வேண்டுமா என்ன

 23. பால சுந்தரம் கிருஷ்ணா ,

  “நிர்ப்பந்தம் என்று வரும்போது அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு எதிர்க்கலாம்”.
  என்கிறீர்கள்.எப்போது அது வரும்?
  இந்துக்கள் அனைவருக்கும் சுன்னத் செய்யப்பட்ட பின்பா?
  நீங்கள் ISIS காட்டுமிராண்டிகளிடம் மாட்டிகொண்டால் அப்போது இந்தக் கட்டுரைகளின் அவசியத்தை உணர்வீர்கள்.

  சுவனப்பிரியன் இந்தப் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை..குர்ரானில் அறிவியல் அது இது என்று நல்ல காமெடிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
  விரைவில் மஜீத் பாயும் காணாமல் போய் விடுவார்.

 24. அதற்கு முன்பேயே எதிர்க்கலாம். ஆனால், எந்தவிடத்தில் எவரிடம் செய்கிறோமென பார்த்துதான் அமைய வேண்டும். கற்றவர்களும் பெண்டிரும் இருக்குமிடத்தில் உடல் உறுப்புக்களைக் குறிப்பிட்டுப் பேசக்கூடாது.

 25. //சுவனப்பிரியன் இந்தப் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை..குர்ரானில் அறிவியல் அது இது என்று நல்ல காமெடிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.//

  எங்கும் ஓடி விடவில்லை. வருட கடைசி. அலுவலக வேலை முடிந்து அட்டகாசமாக மறு பிரவேசம். 🙂

 26. தி ஹிந்து வில் ஆச்சர்யமாக இந்த கட்டுரை வந்து இருக்கிறது. எழுதியவர் ஓர் இஸ்லாமியர்.

  சவூதி அரேபியா எப்படி தீவிரவாதத்தை ஆரம்பித்தது என்பது பற்றிய கட்டுரை.

  சுட்டி கீழே.

  https://www.thehindu.com/opinion/op-ed/radical-face-of-saudi-wahhabism/article6612018.ece?homepage=true

 27. Sp
  Welcome back.
  Waiting for your views on recent be headings of British and Americans along with about eighteen Syrians. ISIS recite Koran while they cut their enemies head off and shout Allah Oh Akbar. This is a fact. Usual scenario. Seen this nauseating, stomach churning violent acts numerous times .Please, don’t do Taqqya and declare that it is not in Koran or Koran is taken out of context and misunderstood. Or say that ISIS does not represent Islam. If you oppose these violent acts, then you should go out in the street in LARGE NUMBERS and say so openly. A challenge to you.
  A declaration from the Grand Imam of Saudi against ISIS will not make any difference to the issue here. ISIS is the product of your beloved Saudis.

 28. Islam is not a religion. It is a cult group started by evil minded person. His blabberings are written in a idiotic book. quran says only two things – there is only one god allah – kill those who worship other gods.
  Muslims are waging a war against the world – first by population then form a ghetto then social disturbance then riot and finally genocide and slavery.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *