வன்முறையே வரலாறாய்…- 33

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி…

காஃபிர்களைக் கொன்று அவர்களின் மனைவியரையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிப்பதனைக் குறித்து “அமைதி மார்க்க” கையேடான குரான் மிகத் தெளிவாகவே விளக்குகிறது. அடிமைகளை எப்படி நடத்துவது என்பதிலிருந்து, எந்த அடிமைக்கு எவ்வளவு பரிசு வழங்குவது வரையிலும் கூறும் குரான், அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் நடைமுறைகளையும் ஈமானிகளுக்கு எடுத்தியம்புகிறது.

irmageanmovinonsதங்களின் மனைவிமார்களுடன் உடலுறவு கொள்வதைப் போலவே ஈமானி உரிமையாளன் தன்னிடமுள்ள அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட பெண்களுடன் உடலுறவு கொள்வதற்கும் அல்லா ஆசிர்வதிக்கிறான். இதன் காரணமாக இஸ்லாமிய உலகில் அடிமைகள், மற்றும் பாலியல் அடிமைகளை வைத்துக் கொள்ளும் போக்கு தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் நடைமுறையில் இருந்தது. குரானிய ஷரியா சட்டத்தின்படி ஒரு முஸ்லிம் ஒரே சமயத்தில் நான்கு மனைவிகளை மட்டுமே மணந்திருக்க அனுமதிக்கப்படுகிறான். அதேசமயம், அவன் எத்தனை அடிமைப் பெண்களுடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை.

ஒரு முஸ்லிம் அவனால் கைப்பற்றப்பட்ட எந்தவொரு காஃபிர் அடிமைப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளலாம். அவள் திருமணமானவளாக இருந்தாலும் கூட. ஆனால் அந்தப் பெண் ஒரு திருமணமான முஸ்லிமாக இருந்தால் அவன் அவளுடன் உடலுறவு கொள்ள குரான் தடை விதிக்கிறது. நம்பிக்கையாளன் அடிமைகளைப் பிடிக்கவும், அவர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ளவும் அல்லா அவனுக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்குகிறான் என்பதறிக.

இதனையே குரான் மீண்டும், மீண்டும் நம்பிக்கையாளனுக்கு வலியுறுத்துகிறது. அதற்கும் மேலாக முகமது நபி தன்னால் கைப்பற்றப்பட்ட காஃபிர் அடிமைகளை எவ்வாறு நடத்தினார் என்பதினைக் கண்டுணர்ந்து அதன்படியே நம்பிக்கையாளன் நடந்து கொள்ளவேண்டும் எனவும் கூறுகிறது. ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

627-ஆம் வருடம் (627 C.E) நிகழ்ந்த அகழிச் சண்டையில் (battle of trench) பானு குரைஸா யூதர்கள் முகமது நபிக்கு எதிரான, மக்காவைச் சேர்ந்த குரைஷ்களுக்கு உதவி செய்தார்கள் என அல்லா குற்றம் சாட்டினான் (அதாவது முகமது நபிக்கு வஹி வந்தது!). எனவே கடும் கோபம் கொண்ட அல்லா, அங்கிருந்த எல்லா யூதர்களைக் கொல்லவும், அவர்களின் பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடிக்கவும் ஆணையிடுகிறான். முகமது நபி அல்லாவால் வழங்கப்பட்ட ஆணைக்கு அடிபணிந்து அதனைச் செய்து முடிக்கிறார்.

அந்தப் போரில் பிடிக்கப்பட்ட பெண்களையும், குழந்தைகளையும் தனது நம்பிக்கையாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முகமது, தனக்கென ஐந்தில் ஒரு பகுதியை வைத்துக் கொள்கிறார். இளவயதுடைய, அழகான இளம்பெண்கள் பாலியல் அடிமைகளாக்கப் பட்டார்கள். இறைதூதர் முகமது நபி தனக்கென ரைஹானா என்னும் இளம் பெண்ணை எடுத்துக் கொள்கிறார். அந்தப் பெண்ணின் கணவனும், குடும்பத்தினரும் அன்றுதான் முகமதின் கூட்டத்தினரால் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். முகமது நபி அன்றிரவே அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்டார்.

இதுபோலவே, கைபாரில் நிகழ்ந்த போரில் வென்ற முகமது அங்கிருந்து ஏராளமான பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகக் கொண்டு சென்றார். எனவே, முகமதின் இந்த நடவடிக்கைகளான எதிரிகளைக் கொன்று, அவர்களின் மனைவிகளையும், குழந்தைகளையும் அடிமையாக்கிய செயல்கள் முஸ்லிகளுக்கு மீண்டும், மீண்டும் உதாரணமாகக் காட்டப்பட்டு அதனைப் போலவே செய்யத் தூண்டப்பட்டார்கள். மேலும் அவ்வாறு பிடிக்கப்பட்ட அடிமைகளை விற்பதின் மூலம் வருமானமும் நம்பிக்கையாளர்கள் பெற இயன்றது.

இதன் காரணமாக இஸ்லாம் சென்றடைந்த நாடுகளில் அடிமை வியாபாரம் செழித்து வளர ஆரம்பித்தது. முகமதின் மரணத்திற்குப் பிறகு இஸ்லாமை உலகமெங்கும் பரப்பப் புறப்பட்ட நம்பிக்கையாளர்களால் கைப்பற்றப்பட்ட கணக்கிலடங்காத அடிமைகளின் காரணமாக பெரும் பொருளீட்டினார்கள்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட இந்தியா இதற்கான பெரும் விலையைக் கொடுத்தது. ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

பின்-காசிம் சிந்த் பகுதியை வென்று இஸ்லாமிய ஆட்சியை நிறுவிப் பல இலட்சக்கணக்கான அடிமைகளைப் பிடித்துச் mahmud-of-ghazni-armyசென்றான் என்பதினை முன்பே பார்த்தோம். அவனுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு  இந்தியாவின் மீது பதினேழு முறை படையெடுத்து இறுதியில் வென்ற சுல்தான் முகமது என்னும் கஜினி முகமது பெருமளவிளான ஆலயங்களை இடித்தத் தகர்த்ததுடன் மட்டுமல்லாமல் ஏராளமான அடிமைகளைப் பிடித்துச் சென்ற தகவல்கள் அவனது வரலாற்றாசிரியர்களாலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. காபூலை ஆண்ட இந்து அரசரான ஜெய்பாலின் மீதான தாக்குதலைக் (1001-01) குறித்து எழுதும் அல்-உத்பி, “சுல்தான் முகமதிற்குக் கடவுள் கணக்கில்லாத செல்வத்தை அள்ளிக் கொடுத்தான். ஆண்கள், பெண்கள் என்று ஏறக்குறைய ஐந்து இலட்சம் அடிமைகக் சுல்தானால் கைப்பற்றப்பட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார். அவ்வாறு பிடிக்கப்பட்ட அடிமைகளில் அரசர் ஜெய்பாலும், அவரது குழந்தைகள்,  பேரக்குழந்தைகள், உறவினர்கள், முக்கிய அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் எனப் பலரும் இருந்தார்கள். அவ்வாறு பிடிக்கப்பட்ட அடிமைகள் கஜினையை நோக்கி நடத்திச் செல்லப்பட்டுப் பின்னர் அடிமைச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டார்கள்.

1014-ஆம் ஆண்டு நிண்டுனா (பஞ்சாப்) பகுதியில் நிகழ்ந்த தாக்குதலைக் குறித்து எழுதும் அல்-உத்பி, “ஏராளமான அடிமைகள் கைப்பற்றப்பட்டதன் காரணாமாக அடிமைச் சந்தையில் அவர்களின் விலை பெருமளவு வீழ்ச்சியடைந்தது. தாங்கள் வாழ்ந்த பகுதியில் மிகவும் உயரிய பதவியில் இருந்த அல்லது செல்வந்தர்கள் அனைவரும் கஜினியில் வாழ்ந்த சாதாரண கடை உரிமையாளர்களின் அடிமைகளாகும் நிலையை அடைந்தார்கள்.”

தானேசாரில் (ஹரியானா) பிடிக்கப்பட்ட அடிமைகள் காரணமாகப் பிடிக்கப்பட்ட இரண்டு இலட்சம் அடிமைகள் கஜினிக்குக் கொண்டு வரப்பட்டதால் அந்தப் பகுதியே இந்திய நகரம் போலக் காட்சியளித்தது. சுல்தானின் படையிலிருந்த ஒவ்வொரு சிப்பாயும் பல அடிமைகளுக்குச் சொந்தக்காரனாக இருந்தான். அவர்களில் இளம் பெண்களும் அடக்கம்” என்கிறார் வரலாற்றாசிரியர் ஃபரிஷ்டா.

சுல்தான் முகமதின் பதினேழு படையெடுப்புகளின் காரணமாக ஏறக்குறைய ஏழு இலட்சத்து ஐம்பதினாயிரம் இந்தியர்கள் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டதாக தாரிக்-இ-அல்ஃபி குறிப்பிடுகிறது. கஜினியின் மகனான சுல்தான் மசூத், “காஷ்மீரின் சுர்சுட் கோட்டையின் மீது நடத்திய தாக்குதலில் போது அங்கிருந்த அத்தனை ஆண்களும் கொல்லப்பட்டு, பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடித்துச் சென்றான். ஹன்சி கோட்டையின் மீது படையெடுத்துச் சென்ற மசூத் அங்கிருந்த பிராமணர்களையும் பிற உயர் அதிகாரிகளையும் கொலை செய்துவிட்டுப் பல ஆயிரக்கணக்கான பெண்களையும், குழந்தைகளையும் பிடித்துச் சென்றதாக வரலாற்றாசிரியர் அபுல்-ஃபாசில்-பைகாக்கி கூறுகிறார்.

ghazni21070-ஆம் வருடம் பஞ்சாபின் மீது படையெடுத்த இன்னொரு கஜ்னாவி சுல்தானான இப்ராஹிம், காஃபிர்களின் மீது நடத்திய பெரும் தாக்குதல்கள் காரணமாக ஏராளமான செல்வங்களைக் கொள்ளையிட்டதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளைப் பிடித்து அவர்களை கஜினிக்குக் கொண்டு சென்றான் என தாரிக்-இ-அல்ஃபி மற்றும் தபாகத்-இ-அக்பாரி புகழ்ந்துரைக்கிறது.

கஜினிகளைத் தொடந்து இந்தியாவில் ஒரு இஸ்லாமிய ஆட்சியை அமைக்கும் நோக்குடன் படையெடுத்த சுல்தான் முகமது கோரி, 1194-ஆம் வருடம் பனாரசை (வாரணாசி) தாக்கியதன் காரணமாக நடந்த படுகொலைகளைக் கூறும் இப்ன்-அசிர், “அந்தத் தாக்குதல்களில் பனாரசிலிருந்த ஒரு காஃபிர் ஆணைக் கூட சுல்தான் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளும், பெண்களும் மட்டுமே உயிர் பிழைக்க அனுமதிக்கப்பட்டுப் பின்னர் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்” எனக் கூறுகிறார்.

இவனைப் போலவே 1195-ஆம் வருடம் குத்புதீன் ஐபக் குஜாரத்தைச் சேர்ந்த ராஜா பீமின் மீது படையெடுத்து அங்கிருந்து இருபதினாயிரம் அடிமைகளைப் பிடித்துச் சென்றான். மேலும் காலிஞ்சார் பகுதியில் நடந்த தாக்குதலைக் குறிக்கும் ஹசான் நிஜாமி, காலிஞ்சாரில் மட்டும் ஐம்பதினாயிரம் காஃபிரி இந்துக்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள் என்கிறார். மூல்தான் பகுதியில் தனக்குப் பெரும் தலைவலியாக இருந்த கோகார்களை அடக்கப் புறப்பட்ட முகமது கோரி, அந்தப் பகுதியிலிருந்த எந்தவொரு காஃபிரையும் விட்டு வைக்காமல் கொலை செய்ததுடன், ஏராளமான ஆயுதங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தான். அதனைச் சுற்றிலும் பிற பகுதியிலிருந்த ஏறக்க்குறைய நான்கு இலட்சம் காஃபிரி கோகார்கள் வாள்முனையில் மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார் ஃபரிஷ்டா.

சுல்தான் முகமது கோரி மற்றும் குத்புதின் ஐபக் போன்றவர்களின் இதுபோன்ற மனிதத்தனமற்ற அடிமைகள் பிடிக்கும் போக்கை விவரிக்கும் ஃபக்ர்-இ-முதாபிர், “ஒவ்வொரு ஏழை முஸ்லிமும் பல நூற்றுக்கணக்கான அடிமைகளுக்குச் சொந்தக்காரர்களானதாக” குறிப்பிடுகிறது. 1206-ஆம் வருடம் இந்தியாவின் முதல் இஸ்லாமிய சுல்தானாக மாறிய குத்புதின் ஐபக் அவனது ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக ஹான்சி, தில்லி, ரன்தம்பூர் மற்றும் கோல் பகுதிளின் மீது தாக்குதல்கள் நடத்தியதன் பயனாக தில்லியிலிருந்து குஜராத் வரையிலும், லக்னொவுட்டியிலிருந்து லாஹூர் வரையிலும் பெரும் பகுதியை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். ஒவ்வொரு வெற்றியும் பல இலட்சக் கணக்கான அடிமைகளை குத்புதீன் ஐபக்கிற்கு அளித்தது. ஆனால் துல்லியமான கணக்குகள் எதுவும் குறிக்கப்படவில்லை.

இவனைப் போலவே இன்னொரு பெரும் மூடனான பக்தியார் கில்ஜி வங்காளம், பிஹார் போன்ற இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களின் போது பெரும் படுகொலைகளும், அடிமைகளைப் பிடிப்பதுவும் இடையறாது நடந்தது. கில்ஜியைத் தொடர்ந்து வந்த கியாசுதீன் பால்பன் நடத்திய படுகொலைகளுக்கும், பிடித்துச் சென்ற அடிமைகளுக்கும் கணக்கில்லை.

இவர்களையெல்லாம் விடவும் சுல்தான் அலாவுதீன் கில்ஜி நிகழ்த்திய வெறியாட்டங்கள் படுபயங்கரமானவை. அடிமைகளைப் பிடிப்பதிலும், இந்து காஃபிர்களைக் கொன்று குவிப்பதிலும் அலாவுதீன் கில்ஜியின் சாதனைகள் அச்சமூட்டுபவை. அத்தனையையும் இங்கு குறிப்பிடுவது சாத்தியமில்லை. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கீழ் இந்துக்கள் அடைந்த துன்பங்கள் சொல்லவொன்னாதவை. கில்ஜியின் தாக்குதல்களைக் குறித்துக் கூறும் பரானி, “கைப்பற்றப் பட்ட காஃபிர் அடிமைகள் தினந்தோறும் தொடர்ந்து தில்லியின் அடிமைச் சந்தைக்கு வந்து கொண்டே இருந்தார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.

துக்ளக் ஆட்சியாளர்களின் வழி வந்த முகமது ஷா துக்ளக்கின் ஹிந்து காஃபிர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அல்லாவுதீன் கில்ஜியையே தூக்கிச் சாப்பிடுபவை. இதனைக் குறித்து எழுதும் சிகாபுதீன் அகமத் அப்பாஸ், “சுல்தான் காஃபிர்களுக்கு எதிராக போர் புரிவதில் மிகுந்த முனைப்புடையவனாக இருந்தான்…அவன் பிடித்த அடிமைகளின் பெரும் எண்ணிக்கை காரணமாக ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான காபிர் அடிமைகள் அடிமைச் சந்தையில் மிகக் குறைந்த விலைக்கே விற்கப்பட்டார்கள்…” சுல்தானிடம் எண்ணற்ற பெண் அடிமைகள் இருந்தார்கள். துக்ளக்கின் காலத்தில் இந்தியாவில் பயணம் செய்த மொராக்கோ நாட்டுப் பயணியான இப்ன்-பதூதாவின் சொந்த உபயோகத்திற்கென பத்து காஃபிர் பெண் அடிமைகளை சுல்தான் அனுப்பி வைத்தான்.

இப்ன்-பதூதா தலைமையில் சீனாவிற்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைத்த முகமது ஷா துக்ளக், பல வண்டிகளில் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களுடன், நூறு வெள்ளை இன அடிமைகளையும் மற்றும் நூற்றுக் கணக்கான இந்து நாட்டியப் பெண்களையும் அனுப்பி வைத்தான். வெளி நாடுகளைச் சேர்ந்த காலிஃபாக்களுக்கும், முஸ்லிம் அரசர்களுக்கும் அடிமைகளை அனுப்பி வைக்கும் வழக்கம் சுல்தான் ஃபிரோஸ் துக்ளக் காலத்தில் சர்வ சாதாரணமாயிருந்தது. இப்ன்-பதூதா, சுல்தான் வருடம் தோறும் பல அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்வதினை வழக்கமாகக் கொண்டிருந்தான் என்கிறார். ஏறக்குறைய ஒரு இலட்சத்தி எண்பதினாயிரம்  அடிமைச் சிறுவர்கள் சுல்தான் ஃபிரோஸ் ஷா துக்ளக்கிற்கு இருந்தார்கள் எனக்கூறும் வரலாற்றாசிரியர் அஃபிப், எண்ணிலடங்காத ஏராளமான அடிமைகளின் காரணமாக இந்தியாவில் அடிமை வியாபாரம் ஒரு நிறுவனமாகவே மாறியிருந்தது என விளக்குகிறார்.

காஃபிர் இந்தியாவைத் தாக்கி காஜியாகும் எண்ணத்துடன் படையெடுத்த தைமூர் (1398-99) தில்லியை அடைவதற்கு முன் ஏறக்குறைய ஒரு இலட்சம் காஃபிர் அடிமைகளைப் பிடித்து தன்னுடன் வைத்துக் கொண்டிருந்தான். தில்லியின் மீதான தாக்குதலின் போது அந்த ஒரு இலட்சம் பேர்களும் கொலை செய்யப்பட்டனர். தில்லியை விட்டுத் திரும்பிய வழியில் தைமூர் கல் மனதையும் கரைக்கச் செய்யும் படுகொலைகளையும், பெரு நாசங்களையும், கொள்ளைகளையும், அடிமைப்படுத்துதல்களையும் செய்து சென்றான். தைமூரின் வாழ்க்கை வரலாறான மல்ஃபுஸத்-இ-தைமூரி இந்தக் கொடுமைகளைப் புகழ்ந்துரைக்கிறது.

“டிசம்பர் 16, 1398-ஆம் வருடம் தில்லியின் மீது துவங்கிய தாக்குதல்களில் 15,000 துருக்கியப் படையினர் கொலைகளிலும், கொள்ளைகளிலும், நாசகாரச் செயல்களிலும் ஈடுபட்டனர்….அங்கு கைப்பற்றப்பட்ட செல்வத்தின் அளவு கணக்கிலடங்காதது…ஒவ்வொரு படைவீரனும் தனக்கென ஐம்பதிலிருந்து, நூறுவரையிலான ஆண், பெண், குழந்தை அடிமைகளைப் பிடித்து வைத்திருந்தான்….இருபது அடிமைகளுக்குக் குறைவாக வைத்திருந்த ஒரு படைவீரனும் அங்கில்லை…” இந்தக் கணக்கின்படி, ஒவொவொரு சிப்பாயும் தனக்கென தோராயமாக 60 அடிமைகளைப் பிடித்து வைத்திருந்தால் மொத்த அடிமைகளின் கணக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) என்பதினைக் காண வேண்டும் இங்கே.

தில்லியிலிருந்து மத்திய ஆசியாவிலிருந்த தனது தலைநகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த தைமூர் அவனது படைத் தளபதிகளிடம். “…வழியில் தென்படும் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரின் மீது தாக்குதல் நடத்தி அங்கு கண்ணில் தென்படும் அத்தனை காஃபிர்களையும் கொல்ல உத்தரவிட்டான்”. இதன்படி படுகொலகள் நடத்திய தைமூரின் தளபதிகள் குறித்துக் கூறும் தைமூர், “எனது படைத் தலைவர்கள் பல காஃபிர்களை விரட்டிக் கொன்றதுடன், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தார்கள்…”

IslamicJihadகுடிலா என்னும் பகுதியை வந்தடைந்த தைமூரின் படைகள் அங்கிருந்த காஃபிர்கள் மீது தாக்குதல்களைத் துவங்கின….சிறிதளவு எதிர் தாக்குதல்கள் நடத்திய காஃபிர்கள் இறுதியில் வாளுக்கு இரையானார்கள். ஏராளமான காஃபிர் பெண்களும், குழந்தைகளும் சிறை பிடிக்கப்பட்டர்கள்….அதனைத் தொடந்து கங்கைக் கரையை வந்தடைந்த தைமூரின் படைகள் அங்கு நடந்த கும்பமேளாவில் பங்கேற்றுக் கொண்டிருந்த ஏராளமான காஃபிர்களைக் கொன்றார்கள்…பல காஃபிர்கள் மலைகளுக்கு ஓடி ஒளிந்து கொண்டார்கள்…ஏராளமான செல்வமும், அடிமைகளும் தைமூரின் படைகளுக்கு உரிமையாகின.

சிவாலிக் என்ற பகுதியை அடைந்த தைமூர், “எனது படைவீரர்களைக் கண்டு பல காஃபிர்கள் அஞ்சி ஓடினார்கள்….அவர்களை விரட்டிச் சென்று எனது படை வீரர்கள் கொலை செய்தபின் அவர்களின் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக்கினார்கள்” எனப் பூரிக்கிறான். கங்கையின் மறுபுறம் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ராஜா ரத்தன் சென், தைமூரின் படைகளைக் குறித்துக் கேள்வியுற்று அவனை எதிர்க்க ஒரு பெரும் படையைத் திரட்டி வைத்திருந்தார். அங்கு நடந்த போரைக் குறித்துக் கூறும் தைமூர், “எனது படைகளின் தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாத இந்துக்கள் தோல்வியுற்று பின்வாங்கி ஓடினார்கள்…பின்னர் அங்கு நடந்த கொள்ளையில் கணக்கற்ற செல்வம் கொள்ளையடிக்கப்பட்டதுடன், ஏறக்குறைய இரண்டு இலட்சத்திலிருந்து மூன்று இலட்சம் வரையிலான அடிமைகள் பிடிக்கப்பட்டார்கள்”

இதுவே சிவாலிக் பள்ளத்தாக்கின் இன்னொரு புறமிருந்த நாகர்கோட் ராஜ்ஜியத்திலும் நிகழ்ந்தது. தைமூரின் படைகள் கொலை வெறியாட்டமிட்டன அங்கே. மொத்தத்தில் இந்தியாவின் மீதான படையெடுப்பின் காரணமாக தைமூர் ஏறக்குறைய இரண்டிலிருந்து இரண்டரை மில்லியன் (25 இலட்சம்) வரையிலான இந்து அடிமைப் பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து மத்திய ஆசியாவிற்குக் கொண்டு சென்றான்.

இதே நிலைமை பின்னர் இந்தியாவை ஆண்ட சையத் மற்றும் லோதிக்களின் காலத்திலும், முகலாயர்களின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. ஆனால் எந்தவொரு முஸ்லிம் ஆக்கிரமிப்பாளனும் மனிதத்தன்மையற்ற இந்தக் கொடுஞ்செயல்கலைத் தவறாக எண்ணவில்லை. ஏனென்றால் அதனைச் செய்ய “அமைதி மார்க்க” கையேட்டில் (குரான்) அல்லா அவர்களுக்கு அனுமதியளித்திருக்கிறான் அல்லவா?

(தொடரும்)

 

 

 

 

7 Replies to “வன்முறையே வரலாறாய்…- 33”

  1. An excellent piece of series of tgecreal truth articles and motivated me to go through all the previous articles one by one…greate job…well done by the the without.
    without that too in Tamil and may be translated into English also…..I have forwarded these articles to many of my friends…..
    Hates offffffffff to the authere for the truth and reality and violence perpetuated by the so called Islam thought the history….
    From kanyakumati to kashmir even now our temples and agraaharams are now being purchased by Muslims and many agro farms in tamilnadu is being purchased by them…..?is history is going to repeats in the very near future? We are afraid!

  2. அல்லா எல்லா இழிவான வேலை செய்வதற்கும் அனுமதி செய்து இருக்கிறான் !இப்படி பட்ட கேவலமான மதம் எங்கேயும் இல்லை !

    (edited and published)

  3. While its disheartening to know the atrocities committed to Hindus by Muslim invaders, which none of our ‘secularists’ will acknowledge, I always had a doubt..when the count of slaves are so high, why didn’t they fight back..its better to die fighting than being a slave, right? Why couldn’t none of the hindu kings win over the muslim invaders? Shame on them who were indulged in infighting.

    One reason that can be attributed is, post Buddha, India was reduced to a land of cowards in the name of ‘Ahimsa’. From around 500BC till 1000AD, Buddhism had prominence in India and it advocated non-violence which to some extent made our people dormant. But still cant imagine so many lakhs of people being enslaved.

    Atleast now, we should take lessons from History and unite instead of fighting amoung ourselves in the name of caste and other subdivisions.

  4. அல்லா பெயரில்தான் உலகமெங்கும் இன்றும் கூட அனைத்து வன்முறையும் நடக்கின்றபோளுது நமது அரசியல்வாதிகள் இத்தகையோருக்கு வெண்சாமரம் வீசுவது கொடுமின் உச்சகட்டம்.

  5. You are doing a great job. Please add a footnote with the source info on where you find all these information. Website links, books anything. That will add more validity to your content.

  6. இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை விளக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *