கத்தி – திரைப்பார்வை

ar_murugadossஅன்பான இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கு,

வணக்கம். நான் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த ஒரு சாமானிய இந்தியன். நல்ல சினிமா ரசிகன். தரமான திரைப்படங்களை நேசிப்பவன், போற்றுபவன். ஒரு திரைப்படம் என்பது சாமானிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை உடையவன். ஒரு திரைப்படம் என்பது வெறும் ஒரு வெற்று கேளிக்கை பொருளாக இல்லாமல் அது ஒரு கேளிக்கை கலந்த கருத்துப் பெட்டகமாக அமைய வேண்டும் என்பேன் நான்.

தான், ஒரு கிறிஸ்தவன் என்று சொல்ல தைரியம் இல்லாத, உண்மையில் கிறிஸ்தவனாகவும் ஆனால் திரைப்படங்களில் ஹிந்து தெய்வங்களை ஏற்றிப் போற்றவும் செய்கிற வெளிச்சத்தில் ஹிந்துவாகவும், இருட்டில் கிறிஸ்தவனாகவும் வாழும் ஜோசப் விஜயின் படத்தை முதல்நாளே திரையரங்கில் சென்று பார்க்கும் அளவிற்கு முட்டாளல்ல நான்.

ஆனால் கத்தி திரைப்படத்தை முதல்நாளே திரையரங்கிற்கு சென்று பார்த்தேன். காரணம் படத்தின் இயக்குநர் முருகதாஸ் என்பது மட்டும் தான்..ஆம்.. நான் தங்களின் திரைப்படங்களின் மிகப்பெரும் ரசிகன். தங்களின் முதல் திரைப்படமான ‘தீனா’வைத் தவிர்த்து மற்ற எல்லா படங்களிலும் ஒரு சமூகப்பிரச்சனையை நயமுடன் கையாண்டிருப்பீர்கள். சமூகத்தை சீரழிக்கும் ஊழலை சொல்லும் ‘ரமணா’ ஆகட்டும், தமிழனின் பாரம்பரியத்தையும், நமது முன்னோர்களின் பெருமையைப் பேசும் ‘ஏழாம் அறிவு’ ஆகட்டும், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் பலரும் பேசத் தயங்கிய ஸ்லீப்பர் செல் பற்றியும் சொல்லும் ‘துப்பாக்கி’ ஆகட்டும் அத்தனை படங்களும் சமூக பிரச்சனைகளைப் பேசியது, சமூகத் தேவைகளை அலசியது.

ஆனால் தங்களின் இந்த ‘கத்தி’ திரைப்படம் திசைமாறி செய்யப்பட்டிருக்கிறதோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு. நீங்கள் இப்படத்தில் விவசாய பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறீர்கள். கார்ப்பிரேட் பற்றி சாடியிருக்கிறீர்கள். கார்ப்பிரேட் கம்பெனிகளால் நம் விவசாய நிலங்களும் நம் நீர் ஆதாரங்களும் சுரண்டப்படுவதை சொல்லி ஆதங்கப்படுகிறீர்கள்.

நல்லது தான் தங்களின் உணர்வுகளையும், கோப தாபங்களையும் முழமையாக மதிக்கிறேன். நீங்கள் யாருக்காக பேசுகிறீர்களோ அதே இனத்தை சார்ந்தவன் தான் நானும். ஆம்… நானும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன் தான்.

சில நாட்களிலேயே ‘கத்தி’ குறித்த பலதரப்பட்ட விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் காண்கிறேன்.

பலர் தங்களையும் தங்களின் படைப்பையும் பாராட்டி இருக்கிறார்கள். அதே வேளையில் தங்களை வெகு பலர் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார்கள். குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கோலா விளம்பரத்தில் நடித்து கோலாவின் வியாபாரத்தை பெருக்க வகை செய்த விஜய் எப்படி இப்போது கோலாவை எதிர்த்து வசனம் பேசலாம். அவருக்கு அதற்கான தார்மீக உரிமை இருக்கிறதா?

போகட்டும் … எல்லாம் தெரிந்த முருகதாஸ் எப்படி இந்த படத்தில் விஜயை நடிக்க வைக்கலாம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

அவர்கள் கேள்வியிலும் நிச்சயம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உங்கள் சார்பாக நான் இவர்களுக்குப் பதில் சொல்கிறேன்.

“சூழ்ச்சி அதன் நோக்கம் தர்மமாக இருப்பின் அந்த சூழ்ச்சி தர்மமாகவே கருதப்படும்” என்கிறது மகாபாரதம். அந்த கருத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது கருத்தை யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. சொல்லப்பட்ட கருத்துதான் முக்கியம். உங்கள் மனதின் எண்ண ஓட்டங்களை பெரும்பான்மையான மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று நீங்கள் விஜய் போன்ற பெரிய நடிகரை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். இதில் விஜய் அல்ல முக்கியம். அவர் வாயிலாக முருகதாஸ் சொல்லும் விஷயம்தான் முக்கியம்.

இதுபோன்ற அர்த்தமற்ற சினிமாத்தனமான விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய விமர்சனம் ஆழமானது.

படம் பார்க்கையில் எனக்கு முதலில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்த முதல் விஷயம் முருகதாஸ் புதிதாக கம்யூனிஸம் பேசுகிறார்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ‘ஏழாம் அறிவில்’ ஸ்ருதி ஹாசன் பேசும் வசனம், ‘இந்த நாடு முன்னேறாமல் போனதற்கு காரணம் பழமையை மறந்தது தான். இடஒதுக்கீடு, மதமாற்றம்” – இப்படி அழகாக தேசியம் பேசிய முருகதாஸா இன்று கம்யூனிஸம் பேசுவது? அதுவும் இடஒதுக்கீடு, மதமாற்றம். இவற்றை ஆதரிக்கும் கருணாநிதியின் பேரன் தயாரித்த படத்தில் இவற்றை எதிர்த்து வசனம் வைக்கும் அளவிற்கு தைரியம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்குமா? என நினைத்து நான் வியந்திருக்கிறேன்.

kaththi-film-poster

போலி மதசார்பின்மை பேசிக் கொண்டு இந்த தேச வளர்ச்சிக்கு எதிராக நிற்பவர்களே இந்த கம்யூனிஸ்டுகள் தானே.. நம் தேசத்தின் பழம்பெரும் பாரம்பரியத்தை அழித்தொழிக்க வேண்டும் என துடிப்பவர்களே இந்த கம்யூனிஸ்டுகள் தானே.. சீனாவை விட இந்தியா எந்த விதத்திலும் முன்னேறி விடக்கூடாது என்பது தான் கம்யூனிஸ்டுகளின் எண்ணம். சீனா நம் தேசத்திற்கு எதிராக செய்யும் தில்லுமுல்லு வேலைகளை ஏழாம் அறிவில் தெளிவாகச் சொன்ன இது உங்களுக்குப் புரியாமல் போனது ஏனோ?

அதிலும் கம்யூனிஸம் பற்றி ஒற்றை வரியில் விஜய் சொல்லும் விளக்கம் கொடுமை…. கொடுமையிலும் கொடுமை…. கம்யூனிஸ்டுகள் என்றால் யார் என்பதற்கு ஒற்றை வரியில் நான் சொல்கிறேன் விளக்கம் கேளுங்கள். “ஒரு இட்லி கூட சாப்பிட வசதி இல்லாத ஏழையின் தட்டில் இருந்து இன்னொரு இட்லி பிடுங்கி சாப்பிடுகிறவன் தான் கம்யூனிஸ்ட்”.

விவசாய பிரச்சினைக்கு வருவோம். நும் விவசாய நிலங்கள் காக்கப்பட வேண்டும். விவசாய தற்கொலை தடுக்கப்பட வேண்டும். நம் நீர்நிலை காக்கப்பட வேண்டும். இதில் இருவெறு கருத்திற்கு இடமில்லை. அதே வேளையில் ஒன்றை கவனிக்கத் தவறிவிடக் கூடாது.

நம் நாடு உணவு தானிய உற்பத்தியில் இப்போது தன்னிறைவாகத் தான் இருக்கிறது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி மட்டும் தேவையை விட சற்று குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதுவும் பெரிய பிரச்சினை எல்லாம் இல்லை.

ஆனால் நம் நாட்டில் பல இலட்சம் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எப்படி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது? அத்தனை இளைஞர்களுக்கும் விவசாயம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருமா என்றால் பதில் ‘இல்லை’ என்பது தான். உங்கள் படத்தில் வருவதுபோல் படித்த இளைஞர்கள் யாரும் விவசாயத்திற்கு வர விரும்புவதில்லை. அது சரியா தவறா என்பது வேறு விஷயம். ஆனால் இன்றைய யதார்த்தம் அது தான். இதற்கான தீர்வு குறைந்த இடத்தில் அதிக விளைச்சலை பெற வேண்டும். இதற்கு நம் பிரதமர் சொல்வது போல விவசாயிகள் விஞ்ஞானத்தையும் வயலுக்கு எடுத்து செல்ல வேண்டும். இது காலத்தின் கட்டாயம். ஊதாரணமாக ஜப்பான் இன்று கப்பலின் மேல் விவசாயம் செய்கிறது. இதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றால் நாம் அங்கேயே தான் நிற்போம், மற்றவர்கள் நம்மை ஏறி மிதித்துவிட்டு சென்று விடுவார்கள்.

ஆனால் ஒன்று எப்போதும் நம்முடைய எந்த வளர்ச்சியும் பழமையை மறைத்து விடுவதாக இருந்துவிடக் கூடாது. பழமையில் நவீனத்தை புகுத்தி வெற்றி நடை போடவேண்டும். சரி! நான் ஒன்று கேட்கிறேன். நம்முடைய பழமையான விவசாயம் அழிவதற்கு முதல் காரணமே விவசாயத்திற்கு மூலதனமாக இருக்கும் மாடுகள் அழிக்கப்படுவதுதானே. பசு வதையை எதிர்த்து ஒரு படத்தில் சொல்லிப் பாருங்கள். அத்தனை போலி மதசார்பின்மைவாதிகளும் உங்களுக்கு எதிராக எப்படி பொங்குகிறார்கள் என காணலாம். அந்த தைரியம் உங்களுக்கு உண்டா?

நம் நாட்டில் பல படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அரசாங்கத்தால் வேலை வழங்கி விட முடியாது. அதற்காக நாம் கார்ப்பரேட்டுகளை நம்பித்தான் ஆக வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகள் நிச்சயம் பெரும் லாபத்தை எதிர்பார்த்துதான் இங்கே வருவார்கள். இதில் தொழில் துறைக்கு மட்டுமல்ல எல்லா துறைக்கும் பொருந்தும்.

திரைத்துறையில் கூட ஒரு படம் உருவாவதற்காக பலர் உழைக்கிறார்கள். தினக்கூலிக்கு வேலை செய்யும் பல சினிமா கலைஞர்கள் தினமும் ரூ. 300 க்கும் குறைவான சம்பளமே பெறுகிறார்கள். கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்களும், இயக்குநர்களும் அவர்களைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. இங்கே இயக்குநரின் முதலீடு அவரின் சிந்தனை, நடிகரின் முதலீடு அவரின் பிரபலத்துவம். அதேபோல் கார்ப்பரேட் முதலாளிகளைப் பெரும் பணத்தை முதலீடு செய்துதான் இங்கே தொழில் துவங்க வருகிறார்கள். எல்லா துறையிலும் முதலீட்டாளர்கள் பெரும் இலாபத்தை எதிர்பார்ப்பது இயற்கைதான்.

ஆக எதற்கெடுத்தாலும் முதலாளிகளை குறைசொல்லாமல் அவற்றால் நமக்கு வரும் இலாபத்தை எண்ணிப் பார்ப்போம். மக்கள் போராட்டங்களை பெரிதுபடுத்தி அதை ஊக்கப்படுத்தாமல் அரசாங்கத்திற்கு துணை நிற்போம். இறுதியில் சென்னைக்கு செல்லும் ஏரி தண்ணீரை முடக்கும் காட்சி தவறான முன்னுதாரணமாக ஆகிவிடுமோ! என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால் நாம் பெரிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை சில பல கோமாளி போராளிக்கு இந்த காட்சி ஏற்படுத்தி தந்துவிடாதா?

இயக்குநராகிய நீங்கள் தான் இதற்கு பதில் தர வேண்டும். மக்கள் எப்படி இன்னல்பட்டாலும் கவலை இல்லை. நாங்கள் எங்கள் குறுகிய இலக்கிற்காக போராடுவோம். எங்கள் சுயநலத்திற்காக போராடுவோம் என்ற சிந்தை உங்களுக்குள் வர காரணம் நீங்கள் கம்யூனிஸம் பேச ஆரம்பித்ததால் தானோ என்னவோ?

படத்தில் ஒரு வசனம் “எங்களுக்கு கம்பெனிகளே வேண்டாம் என சொல்லவில்லை, பழங்களிலிருந்து செய்யப்படும் கிரீம் வேண்டாம்” என்று வருகிறது. இதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ரூ. 100 டிக்கெட் எடுத்து பார்க்கும் யாரும் இதை பயன்படுத்துவதில்லை. அதை பயன்படுத்துவதெல்லாம் விஜயும், சமந்தாவும், நீங்களும் தான். நீங்கள் அங்கேதான் நிற்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்த நாட்டில் நிலவும் எந்த பிரச்சனையின் அடிஆழத்தை சென்று பார்த்தாலும் அதற்கு மூலகாரணமாக போலி மதசார்பின்மைதான் இருக்கும். உங்கள் படத்தின் வசனத்தையே மேற்கோள் காட்டி கூறுகிறேன், “போலி மதச்சார்பின்மை என்பது மிகப்பெரும் சிலந்தி வலை”. அதில் சிக்கிய சிறுபூச்சியாக நீங்கள் மாறிவிடாதீர்கள்.

தீவிரவாதியிடம் கேட்டால் கூட அவன் செய்வதில் நியாயம் இருக்கிறது என்று கூறுவான். அவன் நினைப்பும் அப்படித்தான் இருக்கும். அதுபோல் உங்கள் கருத்து சரியானது என்ற பார்வை உங்களுக்கு இருக்கலாம். அந்த பார்வையை நான் முழமையாக மதிக்கிறேன். ஆனால் என்னிடம் ஒற்றைக் கேள்வி எஞ்சி நிற்கிறது.

“இத்தனை நியாயம் பேசுகிறாரே முருகதாஸ்! அவர் விவசாய பிரச்சனையை பணம் சம்பாதிப்பதற்காக கையில் எடுத்தது அல்லாமல் உருப்படியாக சமுதாயத்திற்கு செய்த நல்லதுதான் என்ன?” பதில தருகிறீர்களா?

அன்புடன்,

நமோ பினு

18 Replies to “கத்தி – திரைப்பார்வை”

 1. அன்பு நமோ பினு அவர்களுக்கு, நமது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இந்த கட்டுரை வெறும் திரைப்பட விமர்சனம் மட்டுமல்ல. ஒவ்வொரு வாக்கியங்களும் உள்ளார்ந்த தேச பக்த கருத்து பொதிந்தது. இதனை படிக்கும் தேசபக்த சகோதரர்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள். என்னை மிக தொட்ட வரிகள், பசு இனம் அழிக்கப்படுவது சம்பந்தமான கருத்து. அதாவது, “நம்முடைய பழமையான விவசாயம் அழிவதற்கு முதல் காரணமே விவசாயத்திற்கு மூலதனமாக இருக்கும் மாடுகள் அழிக்கப்படுவதுதானே. பசு வதையை எதிர்த்து ஒரு படத்தில் சொல்லிப் பாருங்கள். அத்தனை போலி மதசார்பின்மைவாதிகளும் உங்களுக்கு எதிராக எப்படி பொங்குகிறார்கள் என காணலாம். அந்த தைரியம் உங்களுக்கு உண்டா?”. என்பது.

 2. கம்யூனிஸ்டாக இருக்கும் ஜீவானந்தம் நல்லவன்தான் என்பதை அந்த ஒற்றை வரியில் விளக்கிவிட்டு, கம்யூனிசத்தால் {ஜீவானந்தத்தால்} ஒன்றும் முடியாது; “கத்தியால் {கதிரேசனால்} முடிந்ததைக் கூட கம்யூனிசத்தால் சாதிக்க முடியாது” என்று கம்யூனிசத்தின் தலையில் ஓங்கிக் குட்டியிருக்கிறார் முருகதாஸ் என்றே நான் நினைக்கிறேன். அப்படி இல்லையென்றால் இந்தப் படத்திற்கு இரு வேடங்கள் அவசியமில்லாமல் போகிறது.

  //ஆனால் ஒன்று எப்போதும் நம்முடைய எந்த வளர்ச்சியும் பழமையை மறைத்து விடுவதாக இருந்துவிடக் கூடாது. பழமையில் நவீனத்தை புகுத்தி வெற்றி நடை போடவேண்டும். // அருமை.

 3. ஏரி தண்ணீரை முடக்கும் காட்சி : TECHNICALLY IT IS AN ABSURD.
  IT SHOWS CLEARLY THAT MURUGADOSS DOES NOT KNOW ANYTHING ABOUT CHARGING ONE BIG PIPE LINE. THE PIPE LINE NEVER BECOMES EMPTY AND NOBODY CAN GO INSIDE JUST LIKE THAT. I WISH MURUGADOSS AND JOSEPH VIJAY SHOULD SPEND ONE DAY IN A BIG PIPE LINE WHICH IS FULL OF WATER.

 4. இட்லி பொது உடமை பேசிய நடிகர் பலகோடி ரூபாய்க்கு ரோல் ரோயிஸ் car, வாங்கியதாக கேள்வி , .(உண்மையானால் ) இட்லிக்கு மட்டும்தான் பொது உடமைக் கோட்பாடா?
  பிறேமதாசன் திருமேனி .

 5. நமோ பினு கத்தி படத்தினை சுத்தியல் கொண்டு தாக்கியிருக்கிறார். ஆனால் விவசாய நிலங்களை கார்பொரேட் நிறுவனங்களுக்கு அரசே தாரைவாய்ப்பதை மறைமுகமாக ஆதரித்திருக்கிறார் கட்டுரையாளர். கார்பொரேட் நிறுவனங்கள் கோடிகோடி லாபம் சம்பாதிக்க விவசாய நிலங்களை குறைந்தவிலையில் அரசு கையகப்படுத்தி அவர்களுக்குத்தாரைவார்ப்பது நியாயமில்லை. அவர்களே விலை பேசி நிலத்தினை வாங்கிக்கொள்ளட்டும். அரசாங்கமும் சந்தைவிலையில் விற்கவிரும்புகிறவர்களிடம் ஒப்புக்கொள்கிறவிலைக்கு வாங்க அவர்களை அனுமதிக்கவேண்டும். விற்கவிரும்பவில்லை என்றால் காலந்தோரும் புதுப்பிக்கத்தக்கவகையில் குத்தகைக்கு எடுக்கட்டும். அரசு அரசுக்காக மட்டுமே அதுவும் சந்தைவிலையில் விவசாயிகளிடம் கையகப்படுத்தவேண்டும் நிலங்களை. நிலம் பலகோடி மக்களுக்கு வாழ்வாதாரம். அதனை கார்பொரேட்டுகளின் வேட்டைக்காடாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கவேண்டியதில்லை. படித்த இளைஞர்கள் கூலிகளாக கார்பொரேட்டுகளிடம் அடிமைத்தொழில் செய்வதைக்காட்டிலும் விவசாயம் செய்யப்போகலாம்.

 6. பினு ‘உங்கள் படத்தில் வருவதுபோல் படித்த இளைஞர்கள் யாரும் விவசாயத்திற்கு வர விரும்புவதில்லை. அது சரியா தவறா என்பது வேறு விஷயம். ஆனால் இன்றைய யதார்த்தம் அது தான். இதற்கான தீர்வு குறைந்த இடத்தில் அதிக விளைச்சலை பெற வேண்டும். இதற்கு நம் பிரதமர் சொல்வது போல விவசாயிகள் விஞ்ஞானத்தையும் வயலுக்கு எடுத்து செல்ல வேண்டும்”.
  விவசாயத்தின் மீதான இளைஞர்களின் பார்வை மாறிவருகிறது. கார்பொரேட்டுகளிடம் பணிபுரியும் இளைஞர்களிடம் கூட வேளாண்மைக்குத்திரும்பும் ஆர்வம் அதிகரித்துவருகிறது. அப்படித்திரும்பிய ஒரு சிலரும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டனர்.
  விஞ்ஞானத்தினை வயல்வெளிக்கு எடுத்து செல்லும் பசுமைப்புரட்சி என்னும் முயற்சி விவசாயிகளை கடனாளியாக்கி லக்ஷக்கணக்கில் தற்கொலைக்குக்காரணமாகிவிட்டது. விவசாயிகளை விஞ்ஞானியாக்கும் முயற்சி தேவை. நாட்டுப்பசு எருமை, ஆடு கோழி வாத்து போன்றவற்றை ஆதாரமாகக்கொண்ட பாரம்பரியவேளாண்மையை மீட்டெடுப்பதே நாட்டின் உழவின் மீட்சிக்கு ஒரே வழி. இயற்கை வேளாண்மையைப்பொற்றுதலே வழி. விஞ்ஞானிகள் பேசுவது பிளவுண்ட அறிவியல்( நன்றி சங்கீதா ஸ்ரீ ராம்). முழுமையானது அன்று. நம்முடைய பாரம்பரிய வேளாண்மை முழுமையானது. அதன் வழியே புரட்சி சாத்தியமே. பாரத நாட்டின் எழுச்சியும் சாத்தியமே.

 7. அருமையான விமரிசனம். தங்களுடன் முழுதும் உடன்படுகிறேன்.

 8. ஸ்லீப்பர் செல்,ஆப்கானிஸ்தான் ஆராய்ச்சி,விவசாய பிரச்சனை ,போன்றவற்றை நேர்மையாக ஆராய ,அவைகளை (டாகுமெண்டரி வடிவிலே கையாள வேண்டும் ..சினிமா என்றென்றைக்கும் ஆயுள் உள்ள கதைகளையே மட்டும் பேசினாலே ,அதன் கலை நிலை காப்பற்றப்படும் .கற்பனை இன்றி களர் நிலமாகி ,எழுத்தாளர்களை அலட்சியபடுத்தி ,குற்ற விசாரணை ,ஊழல் ,நாளிதழ் சமாசாரங்களை ,அதே வரிகளை பயன்படுத்தி ,இடையிடையே ,காமடி ,பாடல்களை சேர்த்து ‘சினிமா காட்டிவிடும் ‘வித்தையில் அனைவரும் மூழ்கிவிட்டனர் .இவை ரெண்டும் கெட்டான்களாக ,அக்கப்போர்களையே கிளப்புகின்றன .கலை அழிவிலாத அனுபவங்களை கொடுக்கும் ;பிரச்சனைகளின் சுவாரஸ்யம் ,கிளுகிளுப்பு ,புல்லரிப்புகள் அற்பாயுள் கொண்டவை .

 9. திரு பினு அவர்களே வாழ்த்துக்கள்.தங்களின் விமரிசனம் என்பதை விட ஆதங்கம் என்பதே மிகச் சரியானதாகக் கொள்ளலாம்.உங்களின் இந்த ஆதங்கத்தில் நானும் இணைந்து கொள்கிறேன்.கம்யூனிசம் பேசவும் கேட்கவும் வேண்டுமானால் ஒரு பொழுது போக்குக்கு உதவலாம்.ஆனால் , அதன் பின்னால் செல்லும் படித்தவர்களின் செயல்பாடுகளை பாருங்கள் ….அதானால் நமது தேசத்துக்கு இதுவரை எவ்வளவு இழப்பு ?ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பது நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்துள்ள எச்சரிக்கை.ஆமை என்பது சோம்பேறித்தனத்தை குறித்தானதாகவே நான் காண்கிறேன்.இந்த வகையில் தொழிலாளர் விரோத முதலாளி இருக்கும் தொழிலகமும் கம்யூனிசம் பேசும் தொழிலாளிகள் இருக்கும் தொழிலகமும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.முதலாளியும் தொழிலாளியும் ஒருவரை ஒருவர் புரிந்தும் மதித்தும் நடக்கும் நிறுவனம் எக்காலத்தும் சிறப்புடன் இயங்கும்.காலத்துக்கேற்ற மாற்றங்களை முதலாளி கொண்டு வரவேண்டும் அது அங்கு உண்மையான தொழிலாளியை எவ்வகையிலும் பாதிக்காத வகையில் நடைமுறைப் படுத்த வேண்டும்.ஒரு முதலாளி இருந்தால்தான் பல தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.அதே போல தொழிலாளி உண்மையாக உழைத்தால்தான் அந்நிறுவனம் தொடர்ந்து செயல்படும் முன்னேறும்.ஆனால் நம்மூரு கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்களே அவர்கள் தங்களது கட்சியில் இயக்கத்தில் இருக்கும் தோழர்களுக்கு கற்றுக் கொடுப்பதே முதலாளி முதலில் ஒழிய வேண்டும்.தொழிலாளி தீக்கதிர் விற்கும் விற்பனை ஏஜண்டாக வேண்டும்.இவர்கள் இருக்கும் எந்த அலுவலகத்திலுமே வேலை நடப்பது என்பது இல்லை.இவர்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் சலுகைகளைக் கேட்டுப் போராடுவதை மட்டுமே வேலையாக்கக் கொண்டு இருப்பதைக் காணலாம்.இவர்களால் தமிழகத்தின் எண்ணற்ற மில்களும் தொழில் சாலைகளும் மூடப்பட்டு தொழிலாளிகள் தெருவிற்கு வந்து விட்டனர்.இவர்களுக்கு தேசப் பற்று என்பது கொஞ்சமும் கிடையாது.இந்த தேசத்தையே ஒரு அவமானமாகக் கருதும் எண்ணம் இவர்களின் மனத்தில் விதைக்கப் பட்டுள்ளது.இவர்கள் எங்கெல்லாம் செல்வாக்குடன் இருக்கிறார்களோ அங்கெல்லாம் மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது.இவர்கள் நடத்தும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் பார்த்தால் அதில் நாட்டின் நன்மையோ பொதுமக்களின் உணர்வுகளோ மதிக்கப் படுவதாக இருக்காது.நமது நாட்டிற்கு மிகவும் கெடுதல் செய்பவர்கள் யாரென்று பார்த்தால் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் இந்த தேசவிரோத காம்ரேட்டுக்களும்தான்.இவர்களுக்கு எப்படி திரு முருகதாஸ் வக்காலத்து வாங்குகிறார் என்பதுதான் என்னைப் போன்ற முருகதாஸ் ரசிகர்களின் ஆதங்கம் கலந்த ஆச்சரியம்.
  ஈஸ்வரன்,பழனி.

 10. கத்தி திரைப்படத்தைப் பற்றி விமர்சிக்க புகுந்த கட்டுரையாளர், அந்த படத்தின் மையப் பொருளான கார்ப்பரேட் நிறுவனங்களின் அட்டுழியங்களையும், பெருவாரியான உழைக்கும் மக்களின் மீது சிறிதும் அக்கறையின்றி மேற்படி நிறுவனங்களுக்கு சாமரம் வீசும் அரசமைப்பையும் ஏதும் கூறமால் கம்யுனிச கோட்ப்பாட்டை மட்டுமே மையமாகக் கொண்டு பொரிந்து தள்ளி சுய இன்பம் கண்டிருக்கிறார். பொதுவுடமைக்கு எதிராக மேற்ப்படி கட்டுரையாளர் அவிழ்த்து விட்டிருக்கும் மோசடியான வாதங்களை பற்றி பிறகு பார்க்கலாம். அதற்க்கு முன்பு கம்யுனிசம் என்றால் என்னென்பதை பார்ப்போம்.

  “உலகில் எங்கெல்லாம் வர்க்க ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் அதை எதிர்த்த வர்க்கப் போராட்டம் முடிவுறாமல் நடந்து கொண்டே இருக்கும் என்ற எதார்த்த உண்மையை மார்க்சியம் உரைக்கிறது. ”

  இதனை உணர்ந்து கொள்ள மெத்தப் படித்த மேதாவியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சாதாரண ஏழை விவசாயிக்கோ அல்லது தொழிலாளிக்கோ புரியக் கூடிய எளிய உண்மை தான் இது. ஆனால் இந்த உண்மை கட்டுரையாளருக்கு புரியவில்லை என்றால் அறியாமையும், அடிமைத்தனமும் எங்கு இருக்கிறது என்பதை யாரும் எளிதாக அவதானிக்கலாம்.

  சோசலிச ஆட்சி முறையை எதிர்க்கும் மனித குல விரோதிகளின் கவனத்திற்கு…

  முன்னாள் சோஷலிச நாடுகளில், “மக்களை வருத்திய, கம்யூனிச சர்வாதிகார ஆட்சியின் கொடுங்கோன்மைகள்” இவை:

  ஆரம்ப பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை, அனைவருக்கும் இலவச கல்வி.

  தொழிலாளர்கள், விவசாயிகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் தொழிற்கல்வி.
  சாதாரண காய்ச்சல் முதல் சத்திர சிகிச்சை வரையில், அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.

  வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான இலவச பராமரிப்பு நிலையங்கள்.

  மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்குவரத்து வசதி. ஒரு ரூபாயில் ஒரு நகரத்தை சுற்றி வரலாம்.

  ஆலைத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும், சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை. அரசு செலவில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுற்றுலாப் பயணம்.
  ஊழியர்களின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது. வேறெந்த மறைமுகமான வரிகளும் அறவிடப் பட மாட்டாது.

  அனைவருக்கும் இலவச வீட்டு வசதி அல்லது வீட்டு வாடகை மிக மிகக் குறைவு. மின்சார, எரிவாயு செலவினங்களும் மிக மிகக் குறைவு. அதனால், மாத முடிவில் சம்பளத்தில் பெருந்தொகை பணம் மிச்சம் பிடிக்கலாம்.

  சொந்த வீடு வாங்க விரும்புவோர், அதற்காக பெருந்தொகைப் பணம் கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்டி அவதிப் படத் தேவையில்லை. அரசாங்கமே செலவை பொறுப்பேற்கும்.

  இதைப் பற்றி கேள்விப் பட்ட பிறகும், ஒருவர் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறார் என்றால், நிச்சயமாக அவர் ஒரு சமூக விரோதியாகத் தான் இருப்பார்.

  ஒரு சந்தேகம். மக்கள் வரிப்பணம் இருந்தால்தான் அரசை இயக்க முடியும். அது இல்லாமல் எப்படி மேல் கூறியவற்றை இலவசமாக வழங்க. முடியும் அரசுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கும்?

  ஒரு முதலாளித்துவ நாட்டில், உற்பத்தி சாதனங்கள் யாவும் முதலாளிகளுக்கு சொந்தமாக இருக்கும். பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்பது அவர்களது கொள்கை. முதலாளிகள் இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படுவார்கள். மக்களுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள். அதனால், முதலாளித்துவ பொருளாதாரம் நிலவும் எல்லா நாடுகளிலும், அரசு வரி விதிக்கின்றது. அனைத்துப் குடிமக்களிடமும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வரி எடுக்கிறது.

  ஆனால், சோஷலிச நாடுகளின் பொருளாதாரம் வேறு விதமாக இயங்குகின்றது. அங்கே முதலாளிகளின் ஆதிக்கம் கிடையாது. சோஷலிச நாட்டில் பெரும்பான்மை பொருளாதார உற்பத்தி, அரசுடமையாக இருக்கும். அதை விட கூட்டுறவு அமைப்பு பொருளாதாரமும் இருக்கும். அரசு நிறுவனமாக இருந்தாலும், கூட்டுறவு நிறுவனமாக இருந்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஒரு சராசரி நிறுவனம், தனது உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்திய பின்னர் கிடைக்கும் இலாபத்தை பொதுவாக இரண்டாகப் பிரிக்கும். ஒரு பகுதி அரசு செலவினங்களுக்காக கொடுக்கப் படும். மறு பகுதி மீள முதலீடு செய்வதற்கு அல்லது தொழிலாளர் நலத் திட்டங்களுக்கு செலவிடப் படும்.

  உதாரணத்திற்கு, தொழிலாளர்களின் கல்வி, குழந்தைகள் பராமரிப்பு, ஓய்வூதியம், விடுமுறையில் சுற்றுலா தலங்களில் தங்குவதற்கான செலவுகள் போன்றவற்றை சம்பந்தப் பட்ட நிறுவனம் பொறுப்பெடுக்கும். நாட்டில் உள்ள அனைத்துப் குடிமக்களும் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து, பொது மருத்துவம், பொதுக் கல்வி போன்ற செலவுகள் அரசின் பொறுப்பு. முதலாளித்துவ நாடுகளில் ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபத்தின் பெரும் பகுதி முதலாளிகளின் சுகபோக வாழ்வுக்கு செலவிடப் படுகின்றது. ஆனால், சோஷலிச நாடுகளில், அந்தப் பணம் மக்களின் நன்மைக்காக செலவிடப் படுகின்றது.

  ஆக சோசலிச அமைப்பு முறை என்பது மேற்ப்படி தான் இயங்கும். ஒரு தனி மனிதனின் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வது என்பது ஒரு திட்ட மிட்ட பொருளாதாரம் ( planned economy) என்பது சோசலிச சமுகத்தில் மட்டுமே சாத்தியமே தவிர, இப்போது இருக்கும் நுகர்வு வெறியும் சுரண்டலையும் அடித்தளமாக கொண்ட சமூகத்தினால் அல்லவே அல்ல.

  கட்டுரையாளர் முழுமையான வேலை வாய்ப்பை அரசாங்கத்தால் அல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டுமே வழங்க முடியும் என கூறும் பித்தலாட்டமான வாதத்தை இனி அடுத்துப் பார்க்கலாம்.

 11. ///////கம்யுனிசம் என்றால் என்னென்பதை பார்ப்போம்.///////

  Communism is the another name for the Communalism
  .
  /////போராட்டம் முடிவுறாமல் நடந்து கொண்டே இருக்கும் என்ற எதார்த்த உண்மையை மார்க்சியம் உரைக்கிறது./////
  ஆமாம் இதற்கு முடிவே கிடையாது. முடிவு ஏற்பட்டுவிட்டால் ”உண்டி” குலுக்குவதற்கு வேலை இல்லாமல் போய்விடுமே. அப்புறம் இவர்களின் (கம்யூனிஸ்ட் காரனின்) ”உண்டி” (சாப்பாடு) க்கு எங்கே போவது?

  ///////ஆரம்ப பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை, அனைவருக்கும் இலவச கல்வி/////.

  மேற்கு வங்காளத்தில் 34 வருடங்கள் இவர்கள் ஆண்டார்கள். ஆனால் 4 ஆம் வகுப்பு வரைதான் இலவச கல்வி அளித்தார்கள். சும்மா பட்டியல் போட்டு ஆகா ஓஹோ என்று எழுதுவதில் பயனில்லை. கேட்பதற்கும் படிப்பதற்கும் நல்லாத்தான் இருக்கிறது. யதார்த்தம் என்ன என்பதுதான் முக்கியம். இவர் தரும் பட்டியலை பார்த்தால் எனக்கே மலைப்பாக இருக்கிறது. சரி எனக்கொரு சந்தேகம். இவ்வளவு நன்மைகளை செய்யும் கம்முநிசம் எப்படி ரஷியாவில் செத்துபோச்சி? சீனாவில் இப்போது எந்தவித மாற்றமும் இல்லாமல்தான் அப்படியே அச்சுபிசகாமல் கம்முநிசம் பின்பற்றபடுகிறதா? சும்மா கம்முநிசம் கம்முநிசம் என்று தலை விரித்து ஆடாதிங்கப்பா.

 12. தாய்மானவன் தெரிவித்த கருத்துக்களினால் – ஆஹா ! – கம்யுனிச சோஷியலிசத்தை பற்றி நன்கு அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.

  அப்போ பெர்லின் சுவர் தாண்டி மேற்கு ஜெர்மனிக்கு ஓடியவர்கள் எல்லாம் “மனித குல சமூக விரோதிகளா”?. அடடா ! இது தெரியாம போச்சே !!

  ரொம்ப நல்லா கட்டி வெச்ச சுவரைப் போய் இடிக்க வச்சுட்டாங்களே !!!

  அப்புறம் இந்த கம்போடியாவில் பல உயிர்கள் செத்து மடிந்தனரே – அவர்களும் இதே மாதிரி விரோதிகள்தான் என்று சொல்லிவிடுங்களேன்.

 13. மார்க்சியம் என்பது

  1. ஒரு உடோபியன் சிந்தனை./ அதாவது வெட்டிக் கற்பனை கோட்டை.

  2. மலடி பெற்றபிள்ளை.

  3. அனைவரையும் பிச்சைக்காரனாக்கும் அற்புத தந்திரம்.

  4. மன்னர் பாலூற்ற சொன்னபோது, அனைவரும் தண்ணி ஊற்றிய கதை.

  5. மனிதனை விலங்காக பார்க்கும் ஒரு மனித தன்மை இல்லாத குழப்பம்.

  6. சர்வாதிகாரம், அடிமைப்பண்ணைகளை உருவாக்கும் சமுதாய அமைப்பு.

  7. உற்பத்திக்கு எப்படியெல்லாம் தடைபோடலாம் என்று யோசிக்கும் ஒரு வக்கிரம்.

  8. சென்ட்ரல் கண்ட்ரோல் அதாவது மத்திய கட்டுப்பாடு என்ற பெயரில் , மனிதனின் பண்பாட்டுக் கூறுகளை ஒழிக்க முயலும் ஒரு அவலம்.

  9. கருத்து சுதந்திரத்துக்கு வாய்ப்பூட்டு போடும் கூமட்டை.

  10. மனித இயல்புக்கு எதிரான விஷம்.

  11. சீனாவில் சுமார் 12 கோடிப் பேரையும் , இரஷ்யாவில் 5 கோடிப் பேரையும், வர்க்கப்புரட்சி, கலாசாரப்புரட்சி என்ற பெயர்களாலும், கொடுங்கோலன் போல்பாட் போன்ற எச்சிக்கலைகள் மூலம் சுமார் ஒரு கோடி அப்பாவி பொதுமக்களையும் படுகொலை செய்த கொலைகாரர்களின் சதித்திட்டம் தான் மார்க்சிசம் என்பது.

  12.ஒரு உண்மை என்ன என்றால் கம்யூனிசத்தில் பிச்சை எடுக்கவும் முடியாது ஏனெனில் பிச்சை போடுவதற்கு கூட , ஒன்றுமே இருக்காது, எனவே யாரும் பிறருக்கு பிச்சை போடமாட்டார்கள். இருந்தால் தானே பிச்சை போட முடியும்.?

  13. கம்யூனிசத்தின் உண்மையான மார்க்சிய யோக்கியதையை பற்றி அறிய, இந்த வெத்துவேட்டுக்கள் நண்பர் பாலாஜி இதே தளத்தில் எழுதிய ஏராளம் தொடர் கட்டுரைகள் இருக்கின்றன படித்து சிறிதாவது தெரிந்து கொள்வது நல்லது.

  14. குருடன், செவிடனாக இருப்பவன் கூட கம்யூனிசத்தை ஏற்கவும் மாட்டான், ஆதரிக்கவும் மாட்டான். மனநிலை பிறழ்ந்தவன் தான் மார்க்சியம் பற்றி பேசுவான்.

 14. இந்த படம் வெளியானபோது நான் இட்ட பதிவு…..

  கத்தியும் கார்ப்பரேட்டுகளும்……

  லைக்கா என்னும் கார்ப்பரேட் நிறுவனம் தயாரித்து , டம்ளர் கும்பலுக்கு எலும்புத்துண்டு வீசியதால் கிடைத்த விளம்பரத்தால் கோடிகளை குவித்துக்கொண்டிருக்கும் கத்தி என்னும் திரைக்காவியத்தை , நம் நண்பர்கள் சிலரும் சிலாகித்திருப்பதை கவனிக்க முடிந்தது……

  இதுபோன்ற புரட்சிகரமான கதையில் [ தமிழர்களால் கேவலப்படுத்தப்பட்ட நல்ல சில வார்த்தைகளில் புரட்சியும் ஒன்று ] நடிக்கும் தைரியம் விஜய்க்கு மட்டுமே வருமாம்….ஏ.ஆர். முருகதாசின் சமூகப்பொறுப்புணர்வு பாராட்டத்தக்கதாம்…
  அதிலும் , கார்ப்பரேட் நிறுவங்களின் உண்மையான முகம் தோலுரித்துக்கட்டப்பட்டுள்ளதாம்….விஜய் , பொங்கும் அந்த காட்சியின் போது தியேட்டரில் விசில் பறக்கிறதாம்….

  விசிலடித்தே வீணாய்ப்போன கூட்டம்தானே நாம்?

  நான் கத்தி படம் பார்க்கச்சென்று , பார்க்காமல் திரும்பிய கதையை நேற்று முன் தினம் பதிவிட்டிருந்தேன்….
  அது சாதாரண தியேட்டர்…ஏ.சி கிடையாது…. நல்ல சவுண்ட் சிஸ்டமும் கிடையாது …அந்த பாடாவதி தியேட்டரிலேயே பாக்ஸ் 120 ரூபாய்…. பால்கனி 100 ரூபாய்…. டிக்கட் எவ்வளவு என்ற விபரம் எங்கும் எழுதப்படவில்லை…ஏன்..டிக்கெட்டில்கூட எவ்வளவு தொகை என அச்சடிக்கப்படவில்லை…..இத்தனைக்கும் இந்தப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு வேறு அளித்துள்ளது…..

  இந்தகொள்ளையர்களெல்லாம் தான் கார்ப்பரேட்டுகளை கொள்ளைக்காரர்கள் என்கிறார்கள்…. நாமும் வெட்கமே இல்லாமல் கைதட்டிக்கொண்டிருக்கிறோம்…
  கார்ப்பரேட் நிறுவனத்தில் , அல்லது அந்த நிறுவனங்களின் வெண்டர்களிடம் வேலை செய்து சம்பாதிப்போம்….. அவனையே காறியும் துப்புவோம்…

  பைக் , கார் தொடங்கி செல்ஃபோன், கம்ப்யூட்டர் , இன்ட்டர் நெட் , ஃபேஸ் புக் , ட்விட்டர், வாட்ஸப் , எல்லாமே கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்புகள் தான்… கார்ப்பரேட்டுகளை அவ்வளவு வெறுப்பவர்கள் எல்லாவற்றையும்தூக்கிப்போட்டுவிட்டு , விவசாயம் செய்ய போக வேண்டியது தானே?

  கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் இல்லாத , அல்லது மிகக்குறைவாக இருந்த , 1991க்கு முந்தைய [ நரசிம்மராவ் – மன்மோகன் சிங் ஆகியோரால் தாராளமயமாக்கல் பாதைக்கு திருப்பப்படும் முன்பு ] சோஷியலிச இந்தியாவில் , பாலும் , தேனும் ஓடியதா என்ன?

  எழுபதுகளுக்கு முன்பு பிறந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்….
  வேலையில்லாத்திண்டாட்டம் தலைவிரித்து ஆடிய காலகட்டம் அது….. அரசு வேலை கிடைக்கவில்லை என்றால் , வெட்டியாக சுற்றவேண்டும்…. அல்லது குடும்பத்தொழிலை செய்யவேண்டும்….
  மாதத்தின் ஒரு சில நாட்களில் மட்டுமே ரேஷனில் பொருட்கள் கிடைக்கும்… எதுவும்வாயில்வைக்க விளங்காது… அதற்கும் கூட்டம் அலைமோதும்…..
  பணமே இருந்தாலும் , எந்த வசதியும் உடனே கிடைக்காது…… டெலிஃபோன் வசதி நகரங்களில் மட்டுமே கிடைக்கும்…[ செலக்ஷன் க்ரேடு பஞ்சாயத்தான எங்கள் ஊருக்கு 1998 ல்தான் ஃபோன் வசதிகிடைத்தது…. அதற்கு முன்பாக தபால் ஆபீசில் மட்டும்தான் ஃபோன் இருக்கும் ] புக் செய்து வைத்தால் இணைப்பு கிடைக்க வருடக்கணக்காகும்…..

  கேஸ் இணைப்பு கிடைக்க எம்.பி சிபாரிசு வேண்டும்… பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் கட்டி வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும்…. ஸ்கூட்டரோ, காரோ . எதுவும் நமக்கு கிடைப்பதுதான் .. நம் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்ய முடியாது…..

  ஒரு வேளை , இன்றுவரை இந்தியாவில் தாராளமயமாக்கம் அறிமுகம் செய்யப்படாமல் இருந்திருந்தால், செல்ஃபோன் கனெக்ஷனுக்கு பி.எஸ்.என்.எல்லைத்தான் நம்பியிருக்க வேண்டும்…செங்கல் சைஸ் செல் ஃபோன் கையில் கிடைக்க நாயலைச்சல் அலைய வேண்டியிருக்கும்….

  இன்று நாம் அனுபவிக்கும் பெரும்பாலான வசதிகள் கார்ப்பரேடுகளின் உபயம்தான்…..
  அவர்களிடம் லாப நோக்கம் இருக்கும்…. சமூக பொறுப்புணர்வு குறைவாக இருக்கும்…. ஒத்துக்கொள்கிறேன்…. அதற்கான தீர்வு அவர்களை ஒழிப்பதல்ல…. நேர்மையான நிர்வாகத்தின் மூலம் அவர்களை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்…

  அதெல்லாம் முடியாது… நான் கார்ப்பரேட்டுகளை ஏற்கவே மாட்டேன் என்பவர்கள் சந்தைப்பொருளாதாரத்தை பின்பற்றும் இந்தியாவை விட்டு வெளியேறி சோஷியலிச பொன்னுலகங்களில் குடியேறலாம்…

  நம் ஊராவது சுத்தமாகும்…..

 15. பெண்களில் ஒரு பிரிவினரையும் , மாற்றுத் திறனாளிகளையும் இழிவு படுத்த வேண்டாம்.

 16. “இந்த நாடு முன்னேறாமல் போனதற்கு காரணம் பழமையை மறந்தது தான். இடஒதுக்கீடு, மதமாற்றம்” – இப்படி அழகாக தேசியம் பேசிய ” — Typical TamBrahm article.

  Its because of the arrogance and anti reservation policies of tambrahm, Hinduism is hated by Dravidian parties and Dalit parties.

 17. AAR,

  U are off the mark. Even Ambedkar did not advocate reservation beyond the 1st generation. This has been extended by politicians for the sake of the dalit vote bank.

  It is bcos of the reservation policies that we have seen a dilution of quality. Instead, the dalits should be provided free education & then allowed to compete. This will improve their self esteem & also it would not be grudged by other communities.

  Do you know, every year in the IITs, how many seats reserved for dalits do not get filled & go waste?

  Talking of conversion, even after converting to islam/Christianity, their plight has not improved. In fact, it has got worse. The muslims & christians do not respect the converts. The dailts are not allowed to participate in prayer meetings & even have separate burial grounds,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *