அங்காடித் தெரு – திரைப்பார்வை

சென்னை வந்து பல அடுக்கு மாடி கட்டட கடைகளில் கொத்தடிமைகளாக வேலை பார்க்கும் கிராமத்து சிறுவர்-சிறுமிகளின் அவல சூழலில், வழக்கமான காதல் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் இயக்குநர் என்று நினைக்கலாம்.  ஆனால் இப்படித்தில் மையமாக வேறு சில விஷயங்களும் உள்ளன.

angadi-theru-posterகவலையற்ற கிராமத்து மாணவன் ஒருவனது வாழ்க்கை திடீரென ஆளற்ற லெவல்கிராஸிங் விபத்தொன்றில் நிலைகுலைய சென்னைப் பட்டணத்துக்கு வேலை கிடைத்து வருகிறான்- தன் நண்பனுடன். செந்தில் முருகன் ஸ்டோர் எனும் அந்த பெரிய கடையில் பணியாளர்கள் வாழும் வாழ்க்கையின் இருண்ட பரிமாணங்களை முகத்திலடித்தது போல உரித்து காட்டுகிறது படம். ‘அண்ணாச்சி’ முருக பக்தர் என்றாலும், அவருக்கு வேலுக்கும் சேவல் கொடிக்கும் நடுவில் இருப்பது முருகன் அல்ல, லாபம் மட்டும்தான். சுபம் அல்லாத லாபம்.

கங்காணி வக்கிரமும் வன்கொடுமையும் சர்வாதிகாரங்களுக்கே உரிய கசக்கி பிழியும் குணமும் கொண்டவன். மிக மோசமான மெஸ் (தொடக்கத்தில் அத்தனை அதிர்ச்சியுடன் முகத்திலறையும் அந்த மெஸ் காட்சி திரைப்படம் போக போக ஏதோ ஹாஸ்டல் மெஸ் போல சாதாரணத்தன்மை கொண்டதாகிவிடுகிறது.) விலங்குகளை அடைத்து வைப்பது போல தங்குமிடம். பிழைப்பு தேடி தஞ்சமடையும் கிராமத்து சிறார்களிடமிருந்து வாலிபம் வாழ்க்கை மகிழ்ச்சி என அனைத்தையும் உறிஞ்சி விட்டு சக்கையாக வெளியே நோயுடன் துப்பும் வியாபார ஸ்தாபனம். வித்தியாசமான கதைக்களம். எல்லோருக்கும் தெரிந்த, தெரிந்து மரத்துப் போன மானுட மீறல்கள்தான் – திரையில் சித்திரங்களாக நம் மரத்துப் போன மானுடத்தைத் தட்டி எழுப்ப முயற்சிக்கிறது.

கடையில் பணி செய்யும் பெண் தன் காதலன் தன் காதலை நிராகரித்த உடன் செய்யும் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை, அதனைத் தொடர்ந்து வாழும் சக்தி இழந்து அணு அணுவாக அழியும் காதலன், எதையும் அலட்டிக்கொள்ளாமல் புது ஜன்னல் கண்ணாடியையும் கோலத்தையும் மாற்றும் நிர்வாகம்  –  பார்வையாளர்களை உறையச் செய்கிறது. ஏற்கனவே இத்தகைய நிகழ்வுகள் குறித்த செய்திகள் நிஜ உலகில் வெளிவந்து பின்னர் வதந்திகளாக புகையாகிப் போனது உள்ளிருந்து எட்டிப் பார்த்து உறுத்துகிறது. இது வெறும் சினிமாட்டிக் தற்கொலை அல்ல என்பதை நினைவூட்டி நம் சௌகரிய இருப்பை நெளிய செய்கிறது.

காட்சிகள் அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் காட்சிகள் அழகாக சொல்வதை கர்ணகடூரமாக லவுட்ஸ்பீக்கர் கட்டி ஊதுகிறது இசை என்கிற பெயரில் பின்னணியில் ஒன்று. திருஷ்டிப்பொட்டில் வசந்த பாலனுக்கு ஏன் இந்த அளவு நம்பிக்கை?

ஜெயமோகனின் வசனம் திருநெல்வேலி வட்டார வழக்கை தித்திக்க வழங்குகிறது. “நான் கடவுள்” போலவே “அங்காடித் தெரு”விலும் வசனம் ஒரு தனி ஆளுமையாக திரைப்படத்தில் பங்காற்றுகிறது அதே நேரத்தில் துருத்திக்கொண்டு தெரியவுமில்லை. “வியாபாரம் செய்ய தெரிஞ்சவன் வாழத் தெரிஞ்சவன்” என்கிற தஞ்சாவூர் பக்கமிருந்து வந்த கண் பார்வையற்ற நடைபாதை வியாபாரி பார்வையாளர்களிடம் கைதட்டுக்களைப் பெறுகிறார். கவிஞர் விக்கிரமாதித்தன் நான் கடவுளில் போலவே ஒரு கையாலாகாத அவலப் பாத்திரமாக வந்து தான் கடவுளால் கைவிடப்பட்ட ஜன்மம் தான் என சொல்லிவிட்டு போகிறார்.

கதாநாயகின் உச்சரிப்பில்தான் அவ்வப்போது சென்னை தமிழ்பாதுகாப்பு குடும்ப தொலைக்காட்சி அறிவிப்பாளினிகள் தனமான தமிழ் தலை காட்டுகிறது. அதுவும் அவ்வப்போதுதான்.
வழக்கமான டூயட் ஒரு பாடலில் இருக்கிறது. வழக்கமான தற்செயல் நிகழ்வுகள் சில இருக்கின்றன.

வழக்கமான ஒரு வேறுபட்ட சூழலில், குறிப்பாக விளிம்புநிலை சூழலில், ஒரு சாதாரண தமிழ் சினிமா காதல் மட்டும்தானா?

இல்லை என நினைக்கிறேன்.

angadi-theru-movie-photo-gallery-2ஜுராஸிக் பார்க்கில் மிக அருமையாக கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட உயர் தொழில் நுட்ப டைனோசார்களை, இனப்பெருக்கம் செய்ய முடியாத விதத்தில் மரபணு மாற்றம் செய்து உலாவவிடுவார் டாக்டர் ஹமாண்ட் என்கிற செல்வந்தர். இந்த உயர் தொழில்நுட்ப பொழுது போக்கு பூங்காவின் பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்க வருவார் ஒரு கணித நிபுணர்.  அங்குள்ள மரபணுவியலாளர் இத்தகைய விலங்குகள் இனப்பெருக்கம் செய்ய முடியுமா என கேட்கும் போது அந்த கணித  நிபுணர் இயான் ஸ்டூவார்ட் சொல்லுவார் – “நான் சொல்லுவதெல்லாம்,  உயிர்… அஹ்  …  தனக்கென ஒரு வழியை கண்டுபிடிக்கும்”

செந்தில்முருகன் ஸ்டோ ர்ஸும் ஒரு கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட மனிதர்கள் அடைக்கப்பட்ட கூண்டு. எல்லாவிதத்திலும் மானுடம் மறுக்கப்பட்டு, இரக்கமின்றி கண்காணிக்கப்பட்டு வதைத்தே விலங்குகளாக வைக்கப்படும் அந்த இடத்திலும்,  அனைத்து இயந்திரத்தனமான மானுடம் மறந்த மனிதர்களின் சிறைகளை உடைத்துக் கொண்டு, உயிர்த் துடிப்பு  தன்னை, தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

நடைபாதை விபத்தால் குற்றுயிரும் குலையுயிருமாக வந்து மனிதர்கள் நிரம்பிய அந்த மானுட பலவீனத்திலும் சோகத்திலும் வேரூன்றி வளர முயலும் மதப் பிரச்சாரம் போகிற போக்கில் சில நொடிகளில் காட்டிச் செல்லப் படுகிறது. அதே நேரத்தில், எப்படி சடங்கு சம்பிரதாயங்கள் உறைந்து தேங்கிய நிலையில் மனிதத்தை மதம் மறக்கடிக்க முடியும் என்பதை அழுத்தமாகவே காட்டுகிறார் மாமி பாத்திரம். ஆனால் வாழ்த்துடிக்கும் மானுடத்துக்கு இந்த மண்ணின் அன்னை தெய்வங்கள் அடைக்கலம் கொடுப்பதையும், இயல்பான உட்கணக்குகளும் ஆன்மவியாபார நோக்கமும் இல்லாத, இம்மண்ணின் ஆன்மிக மரபில்  இரண்டறக் கலந்த மானுட நேயத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் இயக்குநர். மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்துவதை கிண்டலாகவே அசட்டு நகைச்சுவை நடிகர்களால் கேட்டு பழக்கப்பட்டு போன தமிழ் ரசிக மகா ஜனங்களுக்கு இது ஒரு நல்ல மனவியல் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.

வில்லனுடன் சண்டை போட்டாலும், டூயட் பாடினாலும், கால்களை இழந்த மனைவியுடன் சொந்தமாக நடைபாதையில் தொழில்செய்யும் கதாநாயகன், அருணாச்சலம் ரஜினி போல சவால் விட்டு மூன்று மணிநேரத்தில் செந்தில் முருகன் ஸ்டோ ர்ஸுக்கு எதிராக மற்றொரு பிரம்மாண்ட மாளிகையை எழுப்பி விடவில்லை. மாறாக, அம்மன் கோவில் திருமணச்சேலையுடன், மனைவி தள்ளுவண்டியிலும், தான் நடுத்தெருவிலுமாக பிளாஸ்டிக் பொருட்களை கூவி கூவி விற்பனை செய்கிறான்.

தமிழுக்கு ஒரு நல்ல திரைப்படம்.

25 Replies to “அங்காடித் தெரு – திரைப்பார்வை”

  1. // தமிழுக்கு ஒரு நல்ல திரைப்படம் //

    உண்மை.

    இருள் வாழ்க்கையின் கொடுமைகளை தத்ரூபமாக சித்தரிக்கும் காட்சிகளுக்கு நடுவில், அந்த கிராமத்து சிறார்களின் இனிய இளமைக்கால நினைவுகளையும் இழைய விட்டிருக்கிறார் இயக்குனர். படத்தின் flow சீராக இருக்கிறது. கூர்மையான, மனதில் அறையும் வசனங்களுக்கு நடுநடுவில் ஜெயமோகனின் இயல்பான நகைச்சுவை உணர்வும் பளீரிடுகிறது.

    பின்னணி இசை நீங்கள் சொன்னது போலவே சகிக்கவில்லை.

  2. எடிட்டர் மற்றும் எனது ஹிந்து சகோதரர்களுக்கு,

    நல்ல வேல,இதுகெல்ல காரணம் இஸ்லாமிய பயங்கரவாதம்னொ,இல்ல,முஸ்லிம்களுக்கு இட ஒதுகீடு கொடுத்ததுதா காரணம்னொ,சொல்லாம விட்டீங்களே..அது வர சந்தோசம்…

    முஸ்லிம்கள சாடுரத தவிர இதெல்ல செய்வீங்கன்னு இபோதா தெரியுது,,,,

    நா இத இந்த எடத்ல ஏன் சொல்ரேன்னா?ஹிந்துக்களுக்கு ஒரு பிரச்சன,ஒடனே,முஸ்லிம்கள்தான் பலிகடா..எத தொட்டாலும்,”இஸ்லாமிய” இல்லாம சொல்ரதே இல்ல.அத சொல்லும் பொதெல்லா..அதெ இஸ்லாத்ல இருக்கிர நானும் சாடப்படுகிறேன்.ஏன் நான் நல்லவனா தான இருக்கெ,அவனோட சேத்து,என் ஹிந்து சகோதரர்கள் மத்தியில் நானும் குற்றவாளியாக்கப்படுரேனே,ஏன்?

    ஏன் இவ்ளோ வெருப்ப எங்க மேல உமிழ்ரீங்க…நா ரொம்ப நாளா இந்த தளத்தில் வாசிப்பாளனா இருக்கேன்.ஆனா,வந்துட்டு வருத்ததோடதா போவேன்.என்ன காரணத்துக்காக நான் சார்ந்துள்ள மார்க்கத்தின் மீது இங்கு சாணியடிக்கப் படுகிறது.நான் கண்ட வரை அப்படி ஒன்னும் சொல்லவில்லையே.எவனொ ஒருவன்,ஏதொ ஒரு காரணத்துக்காக எனது மார்க்கத்தை முன்னிருத்துகிறானென்றால்,அதை இங்கு இவ்வளவும் படித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா?என வருத்தப்படுவேன்….

    இஸ்லாமிய பயங்கரவாதம் என மதத்தை முன்னிருத்தும் போது,எனது ஹிந்து சகோதரன் இயற்கையாகவே..நீங்கள்லந்தானடா?..அப்டீன்னு என்ன நோக்கி பாக்க வெக்கிரீங்களே,ஏன்…

    நான் ஒன்னும் தப்பு பண்ணலியே.என் மதமும்,நல்லததானே போதிக்குது.அப்ரோ ஏன் என் முகத்திலும் சாணி அடிக்கப் படுகிறேன்…

    எனக்கு புரியவே இல்லங்க….

    பல நேரங்கள்ல கொவப்படுவேன்…என்னடா நம்ம சார்ந்துள்ள மதத்த இவ்ளோ பயங்கரவாதமுள்ளதா,சித்தரிக்கிராங்களே.அப்டீன்னு…

    முடிஞ்ச வரைக்கும் புரிய வைக்க முயற்சி பண்ணிருக்கேன்..அவ்ளோதான என்னால செய்ய முடியும்.

    இதுக்கு இங்க பல பேர் பதில் சொல்ல,இல்ல எதிர்ப்பு தெரிவிக்க வரலாம்.ஆனால்,என்னொட ஆதங்கம்.அவ்ளோதா…

    மற்ற்படி
    நல்ல விமர்சனம்.

    எடிட்டர் அவர்களே,இது என்னோட ஆதங்கம்,தயவு செய்துவெளியிடுங்கள்
    நன்றி

    அன்புடன்
    ரஜின்.

    (edited and published)

  3. இஸ்லாமிய வணிகர்களின் போட்டியை வெற்றிகரமாக முறியடித்து வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்து நாடார் சமூகத்தவரின் வணிக நிறுவனங்களைக் கொடூரமானதாகச் சித்திரிக்கும் போக்கு வசந்த பாலன் குழுவினரால் உள்நோக்கத்துடனோ அல்லது உள்நோக்கமின்றியோ வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்து நாடார்களின் வணிக நிறுவனங்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் குண்டு வைத்துத் தகர்க்கும் பட்சத்தில், அதை நியாயப்படுத்த இஸ்லாமிஸ்டுகளுக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் இடதுசாரிகளும் இது போன்ற படங்கள் உதவும் என்பதையும் அ.நீ. குறிப்பிட்டிருக்கலாம்.

  4. Pingback: pligg.com
  5. பா. ரெங்கதுரை ,அவர்களே! நல்ல பாம்பு விஷம் போல் எழதி இருகிறிர்கள்.

  6. //எல்லோருக்கும் தெரிந்த, தெரிந்து மரத்துப் போன மானுட மீறல்கள்தான் – திரையில் சித்திரங்களாக நம் மரத்துப் போன மானுடத்தைத் தட்டி எழுப்ப முயற்சிக்கிறது//// இது வெறும் சினிமாட்டிக் தற்கொலை அல்ல என்பதை நினைவூட்டி நம் சௌகரிய இருப்பை நெளிய செய்கிறது//

    அருமையான வரிகள் ..திரு .அரவிந்தன் அவர்களின் விமர்சனத்தில் எல்லோருக்கும் தங்களை தானே புரிந்துகொள்ள உதவும் வைர வரிகள் ..வெறும் திரை பட விமர்சனம் என்ற பார்வையை தாண்டி யாதார்த்தத்தை நாம் உணரக்கூடிய அளவு தெளிவாக எழுதப்பட்ட விமர்சனம் ,,தமிழ் சினிமாவில் சேரன் தான் ரொம்ப நாட்களாக மறக்கப்பட்ட இயபான உணர்வுகளையும் ,கிராமத்து வாழ்கையும் மீட்டு தந்தவர் ..பின்னர் சேர்ந்து கொண்டனர் தங்கர்பச்சான் ,பாலா ,அமீர் போன்றோர் ..வசந்தபாலனும் வசந்தமான வரவே..
    // இம்மண்ணின் ஆன்மிக மரபில் இரண்டறக் கலந்த மானுட நேயத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் இயக்குநர்//அவருக்கு வேலுக்கும் சேவல் கொடிக்கும் நடுவில் இருப்பது முருகன் அல்ல, லாபம் மட்டும்தான். சுபம் அல்லாத லாபம்.//
    அதனால் தான் நம் முன்னோர்கள் சடங்குகளை,சம்பிரதாயங்களை உருவாக்கினர்..இந்த மண்ணின் பெருமை அது ..தர்மத்தை நாம் மறந்துவிட்டாலும் இந்த சடங்குகள் நியாபகபடுத்தும் …இந்த நவ நாகரிக உலகில் பழைய சம்பிரதாயங்களின் நடைமுறை ரீதியிலான அம்சங்களை ,கேலி பண்ணிகொண்டும்,தான் என்னமோ பெரிய மேதாவி மாதிரி தலைக்கனத்தோடு விவாதிப்போரோடும் விளக்கங்களை எத்தனை எடுத்து சொன்னாலும் அவர்கள் மண்டையில் ஏறாது ..விவாதிப்பது வீண் ..தனக்காகவோ ,தர்மத்திர்காகவோ ,அடுத்த தலைமுரையினற்க்காகவோ வாழ்பவர்கள் அல்ல ….அவர்கள் சுயநலவாதிகள் ,தான்தோன்றித்தனமாக,சமுக கட்டமைப்பில் வராமல் மிருகத்தனமாக வாழ முட்டாள்கள் இயற்றிய “சட்டத்தை ” பின்பற்றுபவர்களிடம் மனிதத்தையோ ,நல்ல உணர்வுகளையோ எதிர்பார்க்க முடியாது,வெறும் பணத்திற்காக வாழும் யந்திரங்கள் …. இந்து மதம் மனிதர்களை தாண்டி விலங்குகளிடமும் அன்பை பொழிய கற்றுகொடுத்துள்ளது..நாம் இன்னும் வெளிப்படையாகவும் ,வெறித்தனமாகவும் நம்முடைய இந்து மத அடையாளங்களை பின்பற்ற வேண்டும் ..பண்பாடு இல்லாத மேல்நாட்டு “நாகரிகத்தில் ” வளரும் தலைமுறையினர்க்கு இது உதவும்…
    “தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹா”

  7. பொதுவாகத் தமிழ்த் திரைப்படங்களைக் காணும் வழக்கமில்லை. காரணம் எதை நம்பி, கைக் காசைச் செலவழித்து, நேரத்தை விரையம் செய்து எரிச்ச்லையும் சம்பாதித்துத் திரும்புவது?
    ஆகையால் படம் பற்றியோ அதன் விமர்சனம் பற்றியோ எதுவும் சொல்ல இயலாது. நான் எழுதத் துணிந்தது திரு பா. ரெஙதுரை அவர்களின் பளிச் சென்ற கருத்த்திற்கு ஆதரவாகத்தான்.

    இன்று சென்னையில் மட்டுமின்றி, தமிழ் நாடு முழுவதுமே பாரம்பரியமான செட்டியார்களிடமிருந்தும், சில தலைமுறைகளாக அனுபவம் பெற்ற நாடார் பெருமக்கள் வசமிருந்தும் வியாபாரமும் தொழில்களும் இஸ்லமியர் களிடம் கை மாறிப் போய்விட்டது. கோயில்களுக்கு வெளியே கூட இஸ்லாமியர் கடைகள்தான் பக்தர்களின் அர்ச்சனைத் தேவைகளை நிறைவு செய்கின்றன. இந்தச் சுரண்டல் மத நல்லிணக்கம் என்று வேறு பாராட்டப்படுகிறது!

    மேற்படித் திரைப்படத்தில் இந்தப் பிரச்சினை ஜாடை மாடையாகவேனும் காட்டப்பட்டிருந்தால் பாராட்டலாம். சில நாட்களுக்குமுன் லோக்சபா தொலைக் காட்சியில் வந்த அஸ்ஸாமியப் படத்தில் அஸ்ஸாமில் எப்படி பங்களாதேஷ் இஸ்லாமியர் உள் நுழைந்து முதலில் கைவண்டி வியாபாரி யாக ஆரம்பித்து விரைவில் டீக் கடை முதலாளியாக முடிகிறது என்று ஜாடையாகக் காண்பிக்கப்பட்டதோ, அப்படி! ஆனால் ஜெய மோஹன் போன்ற பிராபல்யத்திற்கு பிரதானம் அளிப்பவர்களிடம் அம்மாதிரியான துணிவை எதிர்பார்க்க முடியாது. இந்துத்துவர் என்று ஏளனம் ததும்ப எழுதுவதும், மார்க்சிஸ்டுகளிடம் நான் சி ஐ டி யூ வில் இருப்பவன் என்று சொல்வதுமாகப் பன்முகம் காட்டுவோர்தான் நம்மிடம் உள்ளனரேயன்றி மறைமுகமாகவேனும் நமது பிரச்சினையை பொதுவில் அறிவுறுத்துவோர் இல்லையே!

  8. Pa.Rengadurai and Sathyabama

    Both you have touched a right point that was missed by many of our critics. We all are overwhelmed by the enormity of the abuse showered on those unorganized labor force of those stores run by Naadar merchants. I hope Vasantha Balan would not have done with any agenda or at the instigation of any islamic business mafia. He would have done it unintentionally and still the movie could be played wrongly at the hands of such a mafia and as well as leftists. Except for some of the sharp readers of TH like you nobody else would have thought in that angle. We should always think from such angles too. I am wondering how this point of view even escaped from otherwise the watchful alert mind of Aravindan Neelakantan. Let our Hindu shop owners take this movie as a introspection and self review and correct their inhuman business practices. We still can not let them down. We need to tell them to correct their ways as we always exhort our fellow hindus to shun untouchability, as we always plead to our Saints to be truthful to Hindu sanyasa dharma. Thanks a lot for bringing up this sensitive point

    Regards
    Viswamitra

  9. திரு விஸ்வாமித்ர அவர்களுக்கு நன்றி.
    திரு ரஜின் அவகளுக்கு எனது வேண்டுகோள். தயவு செய்து எந்தச் சார்பும் இன்றி சுய பரிசோதனை செய்துகொள்ளவும். ஹிந்துக்களின் தேசமான இங்கு, ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள இங்கு, சிறுபான்மை யினர் என்ற தகுதியில் உங்களுக்கு உள்ள, ஹிந்துக்களுக்கு இல்லாத உரிமைகளை எண்ணிப் பாருங்கள். வேறு எந்த நாட்டிலாவது பெரும்பான் மையினர் இந்த அளவுக்கு சிறுபான்மையினரை நடத்துகின்றனரா? ஹிந்துக்கள் தங்கள் மத சம்பந்தமான ஊர்வலம் செல்லக் கூட ஆயிரம் தடங்கல் செய்கிறீர்கள். மீறிச் சென்றால் பெருங் கலவரத்தில் இறங்கிவிடுகிறீர்கள் (ஹைதராபாத் சமீப உதாரணம்). உங்கள் ஊர்வலம் இவ்வாறு ஹிந்துக்களால் பாதிக்கப்படுவதுண்டா? ஏன் சிறிதளவு சகிப்புத்தன்மையும் இல்லாமல் இருக்கிறீர்கள்?
    ஜமாத் என்று நீங்களாக ஒன்று கூடிக்கொண்டு போட்டி ராஜாங்கமே நடத்துகிறீர்கள். சிவில் சட்டத்திற்கு ஷரியாவை வற்புறுத்திக் கடைப்பிடிக்கும் நீங்கள், அதன் கிரிமினல் பிரிவை மட்டும் வெகு சாமர்த்தியமாக மறந்துவிடுகிறீர்கள். நாங்கள் இஸ்லாமியர் எனவே கிரிமினல் குற்றங்களுக்கு ஷரியாவின் படியே எங்களை நடத்துங்கள் என்று ஏன் கோருவதில்லை? அன்பு கூர்ந்து குரானை முழுமையாகப் படியுங்கள். உங்கள் மனச்சாட்சியை சுத்ந்திரமாகப் பேச விடுங்கள். குரானில் வரிக்கு வரி உங்கள் மனச் சாட்சிக்கு உடன்பாடானதாகத்தான் உள்ளதா, காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் பிற சமயங்கள், கலாசாரங்கள் மீது துவேஷத்தினை வளர்ப்பவையாகவும் சில உள்ளனவா இல்லையா என்று தீர்ப்பளிக்கும் உரிமையை உங்கள் மனச் சாட்சியிடம் விடுங்கள். அதன் பின் உங்கள் மீது மற்றவர்கள் கண்ணோட்டம் அமைவதன் நியாய அநியாங்களை மதிப்பீடு செய்யுங்கள். நீங்கள் அனுசரிக்கும் மதம்தான் அரேபியாவிலிருந்து வந்தது, உங்க்ள் கலாசாரம் இங்குள்ளதுதான். ஆனால் அதை மறப்பதும் மறுப்பதும் ஏன் என்று யோசியுங்கள். சில இஸ்லாமியர் இதனை உணர்ந்து அதனை வெளிப்படுத்தும்போது அவர்களை என்ன பாடு படுத்துகிறீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள். சிறிதளவாவது சகிப்புத்த்ன்மையுடன் இருக்க நீங்கள் பழகினால் போதும். மேல் விஷாரம் (வேலூர் அருகில் உள்ளது) போன்ற ஊர்களுக்குச் சென்று அங்கு ஹிந்துக் களின் நிலை என்னவென்பதை நேரில் கண்டறியுங்கள். அதன்பின் ஒரு முடிவுக்கு வாருங்கள். வந்தபின் அன்புகூர்ந்து மீண்டும் த்மிழ்ஹிந்துவில் உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

  10. திரு விஸ்வாமித்ர அவர்களே, மும்பை திரையுலகம் இஸ்லாமிய நிழல் உலக தாதாக்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது நீங்கள் அறியாத தாக இருக்க முடியாது. ஆனால் மும்பைத் திரையுலகினர் இத்னை ஒப்புக்கொள்ளத் துணிந்ததில்லை. துணிந்தவர்கள் (டீ சீரீஸ்) கதி என்ன வானது என்பதையும் அறிந்திருப்பீர்கள். மும்பை தொடர் குண்டு வெடிப்பை நடத்திய தாவூத் இப்ராஹிமுடனேயே துபாயில் கும்மாளம் அடித்த கூட்டம்தானே மும்பைத் திரை உலகம்? இது அறிந்தும் கைகட்டி நின்றதுதானே நம் மத்திய அரசு? ஏன் அவர்க்ளை விசாரிக்கவில்லை? பி ஜே பி தலைமையில் இருந்த என் டி ஏ அரசுகூட ஏதும் செய்யவில்லையே! இன்று தமிழ்த் திரையுலகின் நிலை என்னவோ யார் அறிவார்?

  11. ஏழாம் உலகம் கதையில் மதம்மாற்றி கிறித்துவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று விசாரிக்கும் கட்டம் போல ஒரு காட்சி இந்தப்படத்திலும் உள்ளது என்றார் ஒரு நண்பர். படத்தில் அது ஒரு ந்யுட்ரல் காட்சியாகவே வருகிறது. கிறித்துவ ஆள்பிடிப்பு வேலையெல்லாம் காட்டப்படவேயில்லை.

    இது அடிப்படையில் ஒரு உழைப்புச்சுரண்டலைப்பற்றிய படம். அரசு நிர்வாகம் ஊழலில் திளைக்க அனாதரவான ஒரு இளைஞர் சமுதாயம் எதிர்காலத்தை நிச்சயமின்மையிலும் ஏழ்மைப்போராட்டத்திலும் தொலைப்பதைக் காட்டும் திரைப்படம். குறிப்பாக இது போலி பக்தியாளன் குறித்த படமல்ல. ஆனால் அண்ணாச்சியின் பக்தியும் வெளிப்படையான இந்துத்தனமும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் காமிராவின் எள்ளலுக்குள்ளாக்கப்படுகிறது, போகிற போக்கில் காட்டப்படுவதில்லை, மாறாக கிறித்துவர்களையும் பர்தாக்களையும் அதே காமிரா கண்ணிமைக்கும் நொடியில் காட்டி மறைத்து விடுகின்றது. வில்லன் முருக பக்தன், வெளிப்படையாய் பக்திப்பழமாய் இருப்பவன். வாழ்க வளமுடன் சொல்லும் காவித்துறவி சகிதம் பிறந்தநாள் கொண்டாடுபவன். ரிங் டோனில் கந்தர் ஷஷ்டி கவசம். கடை வாசலில் பெரிய பிள்ளையார் சிலை. ஆபீஸில் லாபம் என்று எழுதப்பட்ட சுவரில் முருகன் படம். அய்யா, இப்படித்தான் அண்ணாச்சி இருந்தார் என்பதைக் காட்ட வேண்டுமென்றாலும், இத்தனை ஃப்ரேம்களில் இவை குதூகலத்துடன் அழுத்தம் தரப்பட வேண்டுமா என்ன?! எளிய நல்ல இஸ்லாமியப் பெரியவர் , பிறருக்காக ப்ரே செய்யும் கிறித்துவர், இந்து வில்லன்- எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம் இந்த ஃபார்முலாவை. இதைத்தானே பாவ மன்னிப்பில் எம் ஆர் ராதாவை வைத்து பீம்சிங் செய்தார். அன்பே சிவமில் நாசரை வைத்து கமல் செய்தார்.

    அந்த பெண் தெய்வ கோவில் காட்சி மட்டும் இல்லையென்றால் இந்தப்படம் இன்னொரு ”நல்ல செக்யுலர்” படமாக மிளிர்ந்திருக்கும். இந்து அண்ணாச்சி தன் மதத்தின் பெயரால் அக்கிரமங்களைச்செய்வதில்லை. தன் நம்பிக்கையை தன்னுடன், தன் கடையுடன் வைத்துக்கொள்கிறார். லாபப்பேராசை மட்டுமே அவரை மனிதத்தன்மையை இழக்க வைக்கிறது. ஆனால் நிஜத்தில்
    கிறித்துவ முஸ்லீம் அக்கிரமங்களோ மதத்தை, மதப்பிணக்கத்தை, மதமாற்றத்தை முன்வைத்தே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் லாபவெறி அண்ணாச்சியின் இந்துத்தனம் முகத்திலறைந்தாற்போல் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் காட்டப்படுவதுபோல ஒரு தமிழ்ப் படத்திலும் கிறித்துவ அக்கிரமங்கள் தோலுரிக்கப்படுவதில்லை.

    இவர்களின் மதமாற்ற மூர்க்கத்தை, கலாசார அழிப்பின் அக்கிரமங்களை தெளிவாய் சினிமாவில் வெளிக்காட்டும் நேர்மையும் துணிவும் இல்லாதவரை இந்துத்தனத்தை -அது என்னதான் உள்ளுறை நல்லம்சங்களுடன் குழைத்து காட்டப்பட்டாலும்- சாதாரணனின் எளிய பார்வையில் மிஞ்சுவது அப்பழுக்கற்ற தொண்டுள்ள கிறித்துவம் plus அழுக்கும் பேராசையும் நல்லதும் சேர்ந்த இந்துத்தனம் என்பதாகத்தான் இருக்கும். இந்த கோணத்தில் முடிவில் கிறித்துவம்தான் உயர்ந்து தெரியும்.

  12. அருணகிரி அவர்களே அருமையாக சொன்னீர்கள். கடைசி para அங்கலாய்ப்பு எல்லோருக்கும் உள்ளதுதான். ஆனால் என்ன செய்வது? நீங்களே சொன்ன மாதிரி இது ‘secular’ வியாதி பிடித்த நாடு. மேற்கத்திய கிறிஸ்துவ நாட்டில் படமாக்கப்பட்டு அங்கு problem இல்லாமல் வெற்றிகரமாக ஓடிய Davinci Code இங்கு தடை செய்யப் பட்டதிலிருந்தே தெரியவில்லையா கிறிஸ்துவ அநியாயங்களை காட்டும் படம் இங்கு எடுக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று!?

  13. அருணகிரி அவர்களுக்கு நன்றி.
    அஸ்ஸாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் தலையாய பிரச்சினை பங்களா தேஷிலிருந்து கள்ளத்தனமாக உள்ளே புகுந்து வேலை வாய்ப்பு, சிறு வியாபாரம், புறம்போக்கில் குடிசைகள் என எல்லா வருவாய், வசதி முனைகளையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் முஸ்லிம்களின் துணிகரம். இதனால் பாதிக்கப்படுவோர் அடித்தள மக்களும் லோயர் மிடில் க்ளாஸ் எனப்படும் அடிநிலை மத்தியமரும் மட்டுமல்ல. சிறுகச் சிறுக மேல்நிலை வர்த்தகங்களும்தான். ஏனெனில் இந்த பங்களாதேஷ் முஸ்லிம்கள் கள்ளக் கடத்தல் கள்ளப் பணப் புழக்கம் போன்ற சட்ட விரோதச் செயலகளிலும் ஈடுபடுகிறார்கள். முன்பு நான் குறிப்பிட்ட அஸ்ஸாமியப் படம் (பெயர் மறந்துவிட்டது). வேலையில்லாப் பட்டதாரி இளஞர்கள் அதன் காரணமாக ஆள் கடத்திப் பிணைத் தொகை பறிக்கும் செயலில் ஈடுபடுவது பற்றியது தான். ஆனாலும் இயக்குநர் மிகவும் புத்திசாலித்தனமாக வேலையில்லாத இளைஞர்கள் ஒரு டீக் கடையில் அமர்ந்திருப்பது போலவும், டீக் கடை முதலாளியைப் பேச்சுக்கு இழுத்து அவனது முந்தைய நிலையையும் இன்றைய நிலையையும் அவன் வாயிலிருந்தே வரவழைப்பது போலவும் ஒரு காட்சியை வைத்திருப்பார். ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போலத் தான் அது அமைந்திருக்கும். இவ்வாறான புத்திசாலித்தனம் நமது திரைக் கதாசிரியர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இல்லை போலும். ஆனால் வில்லன்களையும் அயோக்கியர்களையும் தீவிர ஹிந்து மத பகதர்களாகக் காட்டுவதிலும், சைவ வைணவச் சச்சரவுகளை பெரிது படுத்திக் காட்டுவதிலும் மட்டும் இவர்களின் கற்பனைகளுக்குப் பஞ்சமேயில்லை. நமது பொறுமைக்கும் ஒரு எல்லை இல்லையா?

  14. Dear All,

    It seems this film is a different type. we saw many such films which down play Hindu practices and sentiments, as rightly pointed by few of our writers, this also one among that.

    The need of the hour is unity, if we are united any industry including film industry will think twice and avoid any down play on us. Because this is Hinduzthan, Mr. Rajin writing takes place, it is not possible in any of the country has Green Flag, Hope Mr Rajin heart accept this hard truth, no need to express this Mr. Rajin, you will be targeted by your own people.

    It is necessary to have Tamil Hindu Chapter in every City and Village, there are many issues we have to discuss and have a forum to express.

    United we live, or …..
    regards

    G.Murugan
    Madurai

  15. //ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போலத் தான் அது அமைந்திருக்கும். இவ்வாறான புத்திசாலித்தனம் நமது திரைக் கதாசிரியர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இல்லை போலும். ஆனால் வில்லன்களையும் அயோக்கியர்களையும் தீவிர ஹிந்து மத பகதர்களாகக் காட்டுவதிலும்//

    நன்றாகச் சொன்னீர்கள் சத்திய பாமா. ஆனால் தீவிர பக்தர்கள் சிலர் இப்படித்தான் கொடூர இருப்பார்கள், திராவிட பக்தர்கள் அல்லது பச்சைத் தமிழர்கள் போல. மிதமாய் உள்ளவர்கள்தான் சமூகத்துக்கு நன்று. திராவிட, தீவிர பார்ட்டிகள் தங்கள் முன்னேற்றத்துக்கு திராவிடத்தையும், தீவிரத்தையும், தமிழையும் உபயோகப்படுத்திக் கொள்ளும்.

  16. திரு கார்கில் ஜெய், நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதைத் தெளிவாகவே சொன்னால் புரிந்துகொள்ள எளளிதாக இருக்குமே. சித்த்ர் மொழியைப் பிளந்து பொருள் கொள்ளும் அளவுக்கு எனது அறிவு விருத்தி யடையவில்லை. எனக்கு நீங்கள் தெரிவிப்பது பாராட்டா, கிண்டலா தெரியவில்லையே! பொதுவாகவே பெண்கள் ஏதேனும் கருத்துச் சொல்ல வந்தால் மட்டம் தட்டப்படுவதை எங்கும் சாதரணமாகப் பார்க்கிறோம்.

  17. We are suckers for emotionality in its different flavors. Looks like this is another pseudo-proletarian movie showing all the rich people are cruel beings. The review of this movie by Charlatan Charu Nivedita is acceptable.

    However, Jeyamohan is a great writer in Tamil nadu (may be one of the greatest) and so his pen has played well as per the direction of the director. So, he need not be blamed for making the movie more sulking.

    But, Jeyamohan must understand that the tamil movie world works and believes in brand and cliches. Looks like that industry is expecting Jeyamohan to continue writing only for films on cruelties of human beings. I wish that Jeyamohan is not made another brand for depicting human repugnance in the tamil movie industry. Let he be wary of wrong successes. We do not want another Sujatha in the tamil movie industry.

    The positive portrayal of the downtrodden in “naan kadavuL” seems to be completely missing in this movie. And looks like the money is bet on emotional appeal. And the director clearly knows “வியாபாரம் செய்ய தெரிஞ்சவன் வாழத் தெரிஞ்சவன்”.

    Personally, when a produce depicts that human beings are cruel, i tend to analyze the impact of abrahamic mindset behind that movie. And when a movie depicts that human beings are good despite their failure due to the fear of survival and pleasure needs, I tend to analyze the hindutva values in it.

    It is never the face value, but the subtext that matters.

    There are a lot of other more important movies that Tamil Hindu needs to introduce to the Tamil world.

  18. அருணகிரி ஐயா
    மிக நல்ல பதிவு செய்துள்ளீர்கள். உங்களுக்கு முன்னால் எழுதி இருந்தால் நானும் இதையே எழுதியிருப்பேன். ஜெயமோகன் ஒரு ‘மத சார்பற்ற’ எழத்தாளர். அதனால் அவர் அவ்வபோது ஹிந்து மத்தத்தை இழிவு செய்வார். சிவாஜி பற்றி எழுதுகையில் திருவிளையாடல் படத்தைக் குறிப்பிட்டு ‘நெற்றிக்கண் திறந்து சிவ பெருமான் நெருப்பைக் கக்கி எரிக்கும் பொது, ராக்கெட் போறா மாதிரி பறந்து பின்னோக்கி போகலையே’ என்று மத சார்பற்ற முறையில் இழிவு படுத்தினார். ( அதற்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹிந்துக்கள் அல்ல).

    சத்திய பாமா அம்மா,
    நான் ஏதும் பொடி வைத்தெல்லாம் பேசவில்லை. நீங்கள் சொன்னது நியாயமாகவே எனக்குப பட்டது. ஆனாலும் சற்று தீவிர பக்தர்களாக இருப்பவர்களைவிட மிதமாக இருப்பவர்கள் சமுதாய சிந்தனை மற்றும் கனிவுடன் நடந்துகொள்கிறார்கள் என்று சொன்னேன்.

    களிமிகு கணபதி ஐயா,
    நாம் பல தலைமுறைகளாக ‘மசொசிஸ்ட்’ மன நிலையில் வளர்க்கப் ப்பட்டவர்கள். எப்படி மும்பயில் கணபதி கோவிலுக்கு அந்துலே என்ற முகமதிய வெறியரை தலைவராக்கி பெருமை பட்டார்களோ அது போல.
    என் சாமி சிலைய உடைச்சு கூட எனக்கு கோவம் வரல பாரு, என்று பெருமைப் படுகிறார்களோ அதுபோல. அது போல சாதாரணமாகப் படம் எடுப்பதை விட, ஹிந்து மதத்தை இழிவு செய்தால் சந்தோஷமாகப் பார்ப்பார்கள் ஹிந்துக்கள். தங்கள் சகிப்புத்தன்மையை எண்ணிப் பெருமிதம் கொள்வார்கள். காந்தி, பாகிஸ்தான் பிரிவினையின் பொது முஸ்லிம்கள் கொன்றலோ, கற்பழித்தாலோ ஹிந்துக்கள் சகித்துக் கொண்டு அன்பு காண்பிக்கவேண்டும் என்று சொன்னது இதனால்தான். என் ஹிந்து நண்பர்கள் பலர் ‘அன்பே சிவம்’ பெஸ்ட் பிலிம் என்று சொல்லக்கேட்டு வயிறேரிந்தேன்.

  19. புகழ், வருமானம், வாய்ப்பு, பிராபல்யம் ஆகியவற்றையெல்லாம் கணக்கிட்டு, ஆதாயம் பார்த்து சட்டையை மாற்றிக்கொள்கிற கலைஞர்களும் படைப் பாளிகளும் ஹிந்துக்களிடையே அதிகம். இந்தப் பட்டியலில் இடம் பெறுகிறவர்கள்தான் கமல்ஹாசன் போன்றவர்கள்.

    ஹிந்து சமூகம் போர்க்குணத்துடன் எதிர்வினை காட்டாதவரை இப்படிப்பட்டவர்கள் நம் மத்தியில் கழுத்தில் மாலையுடனும் கையில் பாராட்டுப் பத்திரங்களுடனும் தலை நிமிர்ந்து பவனி வந்து கொண்டுதான் இருப்பார்கள். ஹிந்துக்களின் நலனுக்காக எவ்விதப் பிரதி பலனையும் எதிர்பாராமல் எழுத்தின் மூலமாகவும், மேடைப் பேச்சுகளாலும் இடைவிடாமல் குரல் கொடுப்பவர் களோ, அனைவராலும் உதாசீனம் செய்யப்பட்டு கவனிப்பாரின்றி காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவாரகள். வீர சாவர்கர் அவர்களின் இறுதிக் காலத்தைக் கண்ணெதிரே கண்டதுமல்லாமல், அதன் பின்னரும் அந்தமான் சிறைச் சாலையில் அவர் இருந்த கொட்டடியிலிருந்து அவரது பெயரை நீக்கிய அயோக்கியத்னத்தையும் பார்த்துக்கொண்டு வாளாவிருந்தவர்கள்தானே நாம்? திரு கார்கில் ஜெய் பாகிஸ்தான் பிரிவினையையும் காந்திஜியையும் நினைவூட்டி வேதனையைக் கிளப்பிவிட்டார். பாகிஸ்தான் பகுதியிலிருந்து விரட்டப்பட்ட ஹிந்து அகதிகள் தில்லியில் ஒதுங்க இடமின்றிப் பாழடைந்து கிடந்த இஸ்லாமியர் கல்லறைகளிலும் மண்டபங்களிலும் தங்கியபோது, அவை இஸ்லாமியரின் வக்பு போர்டு சொத்து எனவும் ஹிந்துக்கள் உடனடியாக அவற்றைக் காலிசெய்துவிடுமாறும் வற்புறுத்தியவர், காந்திஜி என்று படித்துள்ளேன். இவ்வளவுக்கும் அவை வக்பு போர்டால் பராமரிக்க முடியாமல் கைவிடப் பட்டவைதானாம்.

    (edited and published)

  20. எனது மறுமொழியில் ஜெயமோகனைப் பற்றி நான் தெரிவித்த கருத்துகளை நீக்கியதிலிருந்து, அவரை ஆராதிப்பவர்கள் தமிழ் ஹிந்துவில் இருப்பதாகத் தெரிகிறது. நல்லது, வெகு விரைவிலேயே அவர் தமிழ் ஹிந்துவை ஏளனம் செய்து எழுதவோ பேசவோ செய்யும்போது உங்களை நீங்களே நொந்து கொள்ள நெரிடும்.

    இப்படித்தான் மதுரை ஆதீனத்தை இந்து முன்னணி தலை மீது வைத்துக் கொண்டாடியது. அவர் அதன் பலனை நன்கு அனுபவித்தபின் தனது திராவிட சொரூபத்தைக் காட்டினார். வருகிற வருஷம் கருணாநிதி தனது பெருந்தன்மையைக் காண்பித்துக் கொள்வதற்காக ஜெயமோகனுக்கு ஒரு விருது கொடுக்க முன்வந்தால் அப்போது தெரியும் சேதி. ஜெயகாந்தன் வழியில் அவரும் செல்வதைப் பார்க்கலாம்.

  21. அங்காடி தெரு….

    கனத்த காவியம்….

    நன்றி..

  22. ஆட்கள் இல்லாது கடைகள் நடக்காது. லாபம் தேடும் முதலாளிகளின் ஊக்கம் இந்த மாதிரி சில்லறை கோடம்பாக்க விமர்சனங்களில் முனை மழுங்காது.
    நகசலைட்டுகளின் துப்பாக்கி வேண்டுமானால் அவர்களைக் கடைகளை மூட வைக்கும். அழாத மலை போன்றவர்களின் அட்டகாசங்கள் ஓரளவு தயங்க வைக்கும். சென்னை ரௌடிகளாலேயே இந்த கடைகளை ஏதும் செய்ய முடியவில்லை. திராவிட இயக்கங்களின் சுரண்டலைக் கூட இவர்கள் தாங்கித்தான் மேலே வளர்ந்திருக்கிறார்கள்.

    இவர்கள் ஏதோ மிக நாணயமானவர்கள், மனிதாபிமானம் உள்ளவர்கள், மக்கள்
    நன்மைக்காகப் பாடுபடுபவர்கள் என்றெல்லாம் வெள்ளையடிக்க முடியாது
    யாராலும். அதே நேரம் இவர்களைக் கொடுங்கோலர்கள், நச்சரவஙக்ள் என்றும்
    தாரடிக்க முடியாது. இவர்கள் பெரும்பாலான மத்திய வர்க்கத்தினரை விட்க்
    கூடுதலான குரூரம் உள்ளவர்கள், குறைவான அறம் உள்ளவர்கள் என்று சொல்ல
    வாய்ப்பு இருக்கிறது. அப்போது கூட எத்தனையோ நடு ரகக் கடைகள் தம்
    ஊழியரிடம் தம் வசதிக்கேற்ப தரும சிந்தனையோடும், மனிதாபிமானத்தோடும்
    நடந்து கொண்டு இருக்க வேண்டும், அல்லது 20, 30 வருடங்கள் ஊழியர்கள் அங்கு தாக்குப் பிடித்து நின்றிருக்க மாட்டார்கள்.

    அதே ரங்கநாதன் தெருவில் பல வருடங்கள் குடி இருந்த அனுபவம் உள்ள எனக்கு, அது இப்படி ஒரு ராட்சச அமைப்பாக ஆகத் துவங்கிய வருடம் அங்கிருந்து போன எனக்கு, அதற்கு முந்தைய பெருங்கடைகள் பலவற்றையும், அவற்றில் பல பத்தாண்டுகள் பணியாற்றிய ஊழியர்களையும் பார்த்த அனுபவம் உண்டு. அந்த முதலாளிகளுக்கு கடை வாடிக்கைக் காரகளை நன்கு தெரியும்,
    ஊழியருக்கும்தான். இத்தனைக்கும் அவை கூட்டம் மிகுந்த கடைகளே. அந்தப்
    பேட்டையில் இருந்த பல மளிகைக் கடைகள், காபித்தூள் கடைகள், துணிக்கடைகள், பலபொருள் கடைகள் என்று பலவும் சிறிதும் பெரிதுமாக இருந்த இடத்தில் இன்று ராட்ச்சக் கடைகள்.

    சிறுமுதலாளியம், பெருமுதலாளியமாக ஆகும்போது அதை வழிநடத்தி நல்லவிதத்தில் வளர ஊக்குவிக்க ஒரு கறாரான, அதே நேரம் ஊக்கத்தைக் கருக்காத அள்வுக்கு விட்டுப் பிடிக்கும் புத்திசாலித்தனமும் உள்ள அரசு இருக்க வேண்டும். இது சரித்திரத்தில் எந்த நாட்டிலும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. இடைவெட்டுக் காலத்தில் குரூரங்களும் தர்மப் பிறழ்வும், வன்முறையும் தோன்றவே செய்யும், அதைத் தாண்டி மறுபடி மனிதத் தன்மையை மீட்டெடுக்கவாவது நல்ல தலைமை, நல்ல அரசாட்சி அமைய வேண்டும். அதுவும் இந்தியாவில் அமைய இப்போதைக்கு வாய்ப்பில்லை.

    உலகில் சில நாடுகளில் இந்த மீட்டெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. அவையுமே சுத்தமான மீட்புகள் அல்ல. ஸ்காண்டிநேவிய ஜனநாயகங்களும் உள்புறத்தில் நிறைய கறைபடிந்த வரலாறுகளும், நிறைய வன்முறையும் இருந்தன. ஸ்வீடனின் நாஜிகள் பற்றி நேற்று முன் தினம்தான் ஒரு படம் பார்த்தேன். அந்த நாவலை இன்று படித்துக் கொண்டிருக்கிறேன்.

    முதலியம் மட்டுமல்ல, எல்லா ஆட்சி முறைகளிலும் ஏதோ அநீதி நேர்ந்து
    கொண்டேதான் இருக்கும். பல நேரம் எது நீதி எது தார்மிக வழி என்று காண்பது
    கடினம். இதைத்தான் விக்கிரமாதித்தன் கதைகளே அடிக்கடி சுட்டுகின்றன.
    இருப்பினும் தொடர்ந்த முயற்சியில்தான் ஏதோ ஒரு நல்வழியைக் காணவும் அதைச் சிரம்ப்பட்டு நூல்பிடித்தாற்போல ஒழுகிக் காட்டுக்குள் இருந்து,
    நாகரீகத்துக்கு நம்மால் நகர முடியும். நாகரீகமும் வன்முறைகளை நுட்பமாக
    நடத்துவதுதான். நேரடித் தாக்குதல் இப்போது விதிகளுக்குட்பட்ட
    தாக்குதலாகவோ, சொற்களின் தாக்குதலாகவோ மாறும். இதை அடுத்த கட்டத்தில் தேர்வுகளில் எது அவசியத் தேர்வு, எது ஆடம்பரத் தேர்வு, எது தற்காலிக நஷ்டத்துக்கும் தொலைநாள் மேம்படுத்தலுக்கும் ஆன தேர்வு, அதில் ஒரே கூட்டம் நஷ்டத்தையும் லாபத்தையும் அடைகிறதா, அல்லது அவை வெவ்வேறு கூட்டங்களுக்குப் போகின்றனவா என்பனவற்றை கணக்கிடும் கட்டத்துக்கு வருவோம், பிறகு மொத்த சமுதாயங்களாகத் தொலை நோக்குக்கு இத்தனை காலம், தற்காலிக வளங்களுக்கு இத்தனை காலம் முயற்சிகளின் முதலீடு என்று தீர்மானிக்கத் துவங்குவோம் என நினைக்கிறேன்.

    இந்தக் கட்டங்களுக்கு நாம் நகர பல நூறாண்டுகள் கூட ஆகும், ஏனெனில் அறிதிறனும் உடல்திறனும், அறிவுச் சுடர்விடுதலும், உடல் விகாசிப்பும் இன்னும் பல நூறாண்டுகளுக்கு நம்முள் முன்னிலைக்குப் போராடிக் கொண்டுதான் இருக்கும். இன்று குழுக்களிடையே நடக்கும் இழுபறியிலும் இந்த உரசல், மோதலை நாம் அடிக்கடி காண்கிறோம்.

    Truth to power என்பது ஃபூகோ உருவாக்கிய கோஷங்களில் ஒன்று. அவரால் அதை ஏதும் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதை ஒருபக்கம் ஒதுக்குவோம். அவருடைய சிஷ்யகோடிகளில் அனேகமாக எந்தக் கூட்டமும் இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இன்னமுமே சரிவர அறிந்ததாகவும் நமக்குத் தகவல் இல்லை.

    ஆனால் அந்தக் கருத்து ஏதோ புத்தம் புதிய உருவாக்கம் இல்லை.
    தருமபுத்திரன் விருந்தில் புரண்டெழுந்த கீரிப்பிள்ளை சொல்லிப் போன
    கருத்துதான் அது. மேற்கில் இதையே ஒரு சிறுமி அரசன் நிர்வாணமாக அன்றோ
    நடக்கிறான் என்று சொன்னதாக அடிக்கடிப் பயன்படுத்தும் கதையும் அதுவே.
    கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா என்பது இதன் இன்னொரு வகை அறிவுறுத்தல்.
    இவை எல்லாமே எல்லா உரசல்கள், முரண்கள், இழுபறிகளுக்கும் தெளிவான விடை
    உண்டு என்பதான ஒரு உறைநிலையைத் தம் உள்ளே கொண்டவை. ஏனெனில்
    முடிவெடுக்காமல் முன்னெடுப்பு இல்லை, நடவடிக்கை இல்லை, அஃதில்லாது
    வாழ்வில்லை, எனவே சரியோ தவறோ ஒரு முடிவு என்றாவது தர்மசங்கடத்தில்
    இருந்து மீளத்தான் மனிதர் முயல்வார் என்பதால், அப்படி ஒரு தெளி-பாதை
    உண்டு என்று அவை சுட்டுகின்றன என நான் நினைக்கிறேன்.

    இந்த அதிகாரத்தின் முன் உண்மையைப் பேசுவது என்பதை அங்காடித்தெரு
    சிறிதாவது செய்திருந்தால் நல்லதே. திரள் கூட்டத்துக்கு ரசனையை
    முன்னிட்டுச் சிலவற்றைக் கேவலப்படுத்துவதும், சிலதை உருப்பெருக்கி
    நாயக்த் தன்மை உள்ளதாகக்காட்டுவதும், சிலவற்றை சூரபன்மனாக்குவதும் எல்லா சமூகங்களிலும் நடப்பன. அவற்றை எத்தனைக்குக் குறைத்து எவை உண்மையில் எதிரும் புதிரும், எவை சங்கடங்கள், எவை முழு இருட்டு என்று காட்டும் திறன் வெகு சில படைப்பாளிகளுக்கே கிட்டும். அதைக் கேட்பது நம் உரிமை, கடமை. ஆனால் அது கிட்டுவது அதிர்ஷடம், அல்லது வரலாற்று நிகழ்வு.

  23. சத்யபாமா,
    உங்கள் கருத்தையும், உத்வேகத்தையும் முழுமையாக வரவேற்கிறேன். மற்றபடி, நம் கருத்துக்கள் நம்மைத் தவிர ஆசிரியர் குழுவை அதிகம் பாதிப்பதால், சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கிறது. சிலவற்றை நாம் அனுசரித்துப் போதலே நல்லது.

  24. தமிழ்நாடு அரசின் சின்னமாக ஏன் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைய கூடாது?
    இந்தியா மதசார்பற்ற நாடு. குறிப்பாக தமிழகம் சமயசார்பற்ற, அமைதி பூத்துக் குலுங்கும் சமதர்மபூமி. பெரியார், அண்ணா, காயிதே மில்லத் போன்ற பெருந்தகைகளால் பக்குவப் படுத்தப்பட்ட மண் இது.
    ஆனால் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது. அது எந்த ஊர் கோவில் என்பதே பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அந்த கோபுரம் உண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர கோவில் கோபுரமாகும். தமிழகத்தில் ஸ்ரீவில்லிப் புத்தூரில் மட்டும்தான் கோவில் உள்ளதா?

    1000 ஆண்டுகால பழமை கொண்ட தஞ்சாவூர் பெரிய கோவில், கட்டிடக்கலையில் சிறப்பிடம் பெற்ற மதுரைக்கோவில், ஸ்ரீரங்கம் கோவில் போன்றவைகள் இடம்பெறாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம் இடம்பெற்றதற்காக நாம் காரணங்கள் தேடி அலைய வேண்டியதில்லை. ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த குமாரசாமி ராஜா தமிழக முதலமைச்சராக இருந்துபோது தனது ஊரின் கோவிலை அரசு சின்னமாக அறிவித்து விட்டார். அவ்வளவுதான். ஆனால் தமிழக, அரசின் முக்கிய ஆவணங்களில், கோப்புகளில் கோபுரம் இடம்பெறுவது நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நெருடலையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியிருப்பது உண்மை.

    தமிழக அரசின் சின்னம் மதசார் பின்மைக்கு எதிரானது என்ற கருத்தினை கோடிட்டுக் காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சட்டமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். ஒரு மதத்தின் வழிபாட்டுத்தலத்தை அனைத்து மக்களுக்கும் உரிமையான அரசாங்கத்தின் சின்னமாக எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும் என்றும் அவர் கேள்வி விடுத்திருக்கிறார்.

    கூர்ந்து நோக்க வேண்டிய அதி முக்கியமான விஷயத்தை திராவிட கட்சிகள் இதுவரை எப்படி கோட்டை விட்டார்கள்?

    திராவிட இயக்கத்தின் பிதாமகர்களாக கருதப்படும் பெரியார், அண்ணா என அரசியலில் கோலோச்சியவர்கள், இப்போது முதல்வராக வீற்றிருக்கும் கலைஞர் உள்ளிட்டோர் எவ்வாறு கோட்டை விட்டார்கள்?

    அதிர்ச்சியளிக்கக் கூடிய ஆச்சரிய மல்லவா? மதசார்பின்மையை பேணு வதில், சமூக நல்லிணக்கணத்தை கட்டிக்காப்பதில் அலட்சியம் காட்டி யதால் தான் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம், இன்றுவரை இடம் பெற்றிருக்கிறது என குற்றம் சாட்டமாட்டோம்.
    ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? எப்படியோ கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். போகட்டும் இருப்பினும் இன்னமும் காலம் கடந்து விடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *