சீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்

இந்த வருடம் அக்டோபர் 31 அன்று இந்தியா முழுவதும் இந்த தேசம் ஒன்றாக இருக்க பாடுபட்ட சர்தார் வல்லபாய் படேலின் நினைவுகளில் மூழ்கி இந்திய ஒருமைப்பாடு பற்றி உறுதி மொழி எடுத்துக்கொண்ட கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் ஒரு உறுத்தல் . இதே நாளில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் இன ஒழிப்பு முனைப்போடு காங்கிரஸின் கயவர்களால் தேடி தேடி கொன்று குவிக்கப்பட்ட சீக்கிய இன சகோதர சகோதரிகளின் பிணத்திற்கும், மானத்திற்கும் இன்னும் நீதி வழங்காத நிலையை வருத்தமான உறுத்தலோடு எண்ணிப்பார்க்கிறார்கள்.

பாரம்பரியம்மிக்க பாரத பண்பாட்டின் நீதி நெறியின் மீது அழியாத களங்கங்களை ஏற்படுத்தி கேவலப்படுத்திய காங்கிரஸ் கொலைகார இயக்கத்தின் துரோகத்தை மக்கள் இன்னும் மனத்தில் வைத்து மறுகுகிறார்கள். நம் சீக்கிய சகோதர சகோதரிகளின் காயத்திற்கு மருந்திடுவது 120 கோடி பாரதீயர்களின் கடமை. அவர்களுக்கு நீதி கிடைக்க நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.

மதச்சார்பின்மையின் பெயரால் மத பிரிவினையை தூண்டியும், பெரும்பான்மை சமூகமான அப்பாவி இந்து சமூகத்தின் மீது சிறுபான்மை சமூகங்களை வைத்து வன்முறையை தூண்டி அந்த பயத்தை பயன்படுத்தியும் மதசார்பின்மையின் பெயரில் ஒளிந்து கொண்டு ஓட்டு வேட்டையாடி தேசத்தை சுரண்டி தின்று வயிறு வளர்த்து கொள்வதை பழக்கமாக்கி கொண்டுள்ள காங்கிரஸ் கும்பலின் தந்திரம் தான் சீக்கியர்கள் மீதான இன ஒழிப்பிற்கு மூல காரணமாக இருந்தது.

anti sikh riots 1984

கொஞ்சம் வரலாறு:

சீக்கிய சகோதரர்களிடம் தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்து கொள்வதற்காக 1970-71 ல் அப்போதைய காங்கிரஸ் தலைவி இந்திரா காந்தி சில சதிகளை செய்தார். பஞ்சாப் மாகாணத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த அகாலி தளத்தில் பிளவை உண்டாக்கவும், அங்கு தேச விரோத காங்கிரஸின் செல்வாக்கை வளர்க்கவும் ஒருவரை ஊடுருவசெய்து குழப்பத்தை ஏற்படுத்தினார். அவர் தான் சாந்த் ஜர்னைல் சிங் பிந்த்ரன் வாலே. அவருக்கு அபரிமிதமான நிதியையும் ஆயுதங்களையும் வழங்கியது காங்கிரஸ் கட்சி .அவர் மூலம் காங்கிரஸ் தனது பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்தி பிரிவினைவாதத்தையும், பிளவையும் ஊக்குவித்து தன் செல்வாக்கை வளர்க்க முயற்சி செய்தது. ஆனால் பிந்த்ரன் வாலேவின் செயல்கள் பின்னால் மாறியது ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டி அதன் விளைவாக நம் தேச ராணுவ வீரர்கள் பலரை பலி கொடுத்தும் சீக்கிய இன சகோதரர்களுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திய ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டாரை இந்திரா காந்தி செயல்படுத்தி தன் கொலைக்கு தானே தளம் அமைத்து கொடுத்தார் (ஆதாரம்: Life of  Indira Nehru Gandhi : Catherine Frank )

இந்திரா கந்தியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் படி இறந்தது குண்டடிப்பட்டு மிகப்பெரிய அளவில் இரத்த சேதம் ஏற்பட்டதாலும் முதலுதவி மற்றும் தேவையான சிகிச்சை தாமதத்தாலும் தான். குண்டடி பட்டவுடன் இந்திராவிற்கு முதலுதவி செய்யப்படவில்லை. அருகில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படுவதற்கு பதிலாக அவரின் இத்தாலிய மருமகளான ஆண்ட்டனியோ மெய்னோ வின் அறிவுறுத்தல் படி தூரமாக இருந்த ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். மெதுவாக அதன் பின் உரிய சிகிச்சை இன்றி இறந்தார் இந்திரா.

அதை தொடர்ந்து 1984ல் ராஜிவ் காந்தி தன் அதிகாரத்தை நிலை நாட்டவும் காங்கிரஸில் தன் இடத்தை உறுதி படுத்தவும் தன் அடியாள்களான கனிகான் செளத்ரி, சஜ்ஜன் குமார், ஜெகதீஷ் டைட்டலர், ஹெச் கே. எல் பகத், லலித் மக்கான், கமல் நாத்  மூலம் டெல்லி முழுக்க சீக்கிய இன சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டார். இப்போது நீங்கள் செய்யும் கலவரத்தை கண்டு இனி யாரும் காங்கிரஸை எதிர்க்க துணிய கூடாது . நம்மை ஆதரிக்காத சீக்கிய இனத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் . சீக்கிய சகோதரிகளை வயது வித்யாசமில்லாமல் கற்பழியுங்கள். அவர்களின் சொத்துக்களை தீ வைத்து கொளுத்துங்கள். சீக்கிய ஆண்களை கண்டந்துண்டமாக வெட்டிக்கொல்லுங்கள். சீக்கிய இனம் எழுச்சி பெற இன்னும் 100 ஆண்டுகள் ஆக வேண்டும். இது தொடர்பாக எந்த விசாரணையும் இன்றி நாம் பாதுகாக்கிறேன். அதோடு அதிக கொலை செய்பவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் தருகிறேன். அதிக கற்பழிப்பு தீவைப்புகளை செய்பவர்களுக்கு அரச பதவிகளும், அவர்களின் பரம்பரையே உக்கார்ந்து தின்னும் அளவுக்கு ஊழல் செய்ய வாய்ப்பும் தருவேன் என்று வாக்குறுதியோடு காங்கிரஸ் குண்டர்களை களத்தில் இறக்கி விட்டார் ராஜிவ் காந்தி. அதை இன்று வரை காப்பாற்றியும் வருகிறது இந்த தேசவிரோத காங்கிரஸ் கட்சி.

டெல்லியில் காவல்துறையும் நீதித்துறையும் அப்போது நேரடியாக மத்திய காங்கிரஸ் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அப்போது காங்கிரஸ் கொலைகார கும்பல் தெருவில் இறங்கி சீக்கிய சகோதரிகளை வயது வித்யாசமின்றி கற்பழித்தும், அவர்களின் வீடு, கடை உள்ளிட்ட சொத்துக்களுக்கு தீ வைத்தும் அவர்களின் குழந்தைகளை வெட்டி அதே தீயில் போட்டும் , ஆண்களை வாளால் வெட்டியும் தங்கள் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தி காட்டினார்கள். தெருக்களில் கற்பழிக்கப்பட்ட சீக்கிய சகோதரிகளின் வலி மிகுந்த ஓலங்களும், குத்தி குடல் அறுக்கப்பட்ட சீக்கிய சகோதரர்களின் குருதி வாசனையும், தீயில் உயிருடன் பிடித்து போடப்பட்ட சீக்கிய குழந்தைகளின் வேதனையும், வலியும் மிகுந்த கதறல்களுமாக டெல்லி முழுக்க போர்க்களமாகியது. இஸ்லாமிய சூறையாடல்கள் அளவுக்கு குரூரமான இந்த கொலை வெறித்தாக்குதலை ஒரு கொலை நயத்தோடும், வக்கிரத்தோடும் ரசித்து கொண்டிருந்தார் ராஜிவ் காந்தி.

anti-1984-sikh-riots-protest

ஊடகங்கள் அனைத்தும் வாய் மூடி மெளனியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன. அப்போதெல்லாம் தனியார் காட்சி ஊடகங்கள் இல்லை. பிபிசி, சிஎனென் ஆகியவை வந்து காட்சி படுத்திய சில குலை நடுங்க வைக்கும் கலவரக்காட்சிகள் தான் காணக்கிடைக்கிறது. அரசு பிரச்சார இயந்திரமான தூர்தர்ஷன் கலவரத்தை தூண்டும் விதமாக செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிட்டது. அந்த காட்சி பதிவுகளையும் பின்னாளில் அழித்து விட்டது தூர்தர்ஷன். மற்றபடி எந்த ஆதாரமும் இல்லை. காவல் துறை ராஜிவின் ஆணைக்கு கட்டு பட்டு கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. அப்போதைய உள்துறை அமைச்சரான பிவி  நரசிம்ம ராவிடம் கண்ணீரோடும் கையறு நிலையிலும் தேச பக்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும், பாஜக மற்றும் சீக்கிய சமூக பிரதிநிதிகள் கெஞ்சி கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் சில பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் உடனடியாக ராஜிவ் காந்தி  நரசிம்ம ராவை மிக கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை ஆர் எஸ் எஸ்ன் கைக்கூலி என்றும் விமர்சித்தார்.

இதன் பின்னர் நரசிம்ம ராவ் தன் ஆணையை திரும்பப் பெற்றுக்கொண்டதாக அப்போதைய காவல் துறை ஆணையர் டாண்டன் சாட்சியமளித்துள்ளார். ராஜிவிற்கு நெருக்கமான அமைச்சரான அருண் நேருவிடமும், ராஜிவிடமும் நேரடியாக சில பத்திரிக்கையாளர்களும் அரசு அதிகாரிகளும் முறையிட்டு கலவரத்தை தடுக்க கோரிய போது மரத்து போன மனநிலையில் ராஜிவ் அதற்கு மறுத்துவிட்டார். அத்தோடு மேலும் சீக்கிரமாக கலவரத்தை முடிக்க அவசரப்படுத்தினார். இதன் பின்னர் அப்போதைய தொழிற்சங்க தலைவரான லலித் மக்கானும் சஜ்ஜன் குமாரும் எய்ம்ஸ் மருத்துவமனை வாசலில் காங்கிரஸ் குண்டர்களுக்கு வெளிப்படையாக ஆயுதங்களையும், பணத்தையும், சாராயத்தையும் வினியோகித்தனர்.

சீக்கியர்களை கண்ட இடங்களில் கொலை செய்யுங்கள். அவர்களின் சொத்துக்களும் பெண்களும் உங்களுக்கு இலவசம். ஒவ்வொரு தலைக்கும் என்னிடம் நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொக்கரித்தனர் இந்த காங்கிரஸ் தலைவர்கள். கலவரக்காரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் நிதி ஆதாரம் மற்றும் சாராயம் ஆகியவை காங்கிரஸ் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டது. மேலும் சீக்கியர்கள் பதுங்கி இருக்கும் வீடுகளை காட்டவும், எங்கே அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்பதையும் சொல்ல அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காவல் துறையினரின் உதவி நாடப்பட்டு செய்யப்பட்டது. நவம்பர் 1ம் தேதி காலை முதல் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு ரத்தத்திற்கு ரத்தம் எனும் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டது. உதாரணமாக கிரண் காலனியில் ஊர்வலம் நடத்தப்பட்ட போது இரும்பு கம்பிகளை வழங்கி கண்ணில் தென்பட்ட சீக்கிய குடும்பங்களை அடித்து நொறுக்க சஜ்ஜன் குமார் ஆணையிடுகிறார். அதன் பின் எரிஉற்சவம் நடத்தப்பட்டு அங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அழிக்கப்படுகிறது.

தீ வைத்து கொளுத்துவதற்கு உதவியாக ரேஷன் கடைகளில் இருந்த மண்ணெண்ய் பேரல்கள் அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு கையளிக்கப்பட்டது. இவை அனைத்தும் மிஸ்ரா கமிஷனில் சாட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையோ இவை அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது. எந்த காங்கிரஸ் கொலைகாரர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டது மட்டுமல்லாமல் சீக்கிய ஆண்கள் மீது ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், கலவரத்தில் ஈடுபட முயன்றதாகவும், சட்ட விரோதமாக கூடி இருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் பிடித்து கலவரக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அதன் பிறகு அவர்கள் துள்ள துடிக்க கொலை செய்யப்பட்டனர். கொலை கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்கள் எதுபற்றிய புகாரையும் காவல் துறை ஏற்ககூடது என அறிவுறுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் தன்னுடைய தொகுதியில் தான் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர், அதனால் தனக்கு தான் முக்கிய பதவி கொடுக்கப்பட வேண்டும் என வாதிட்டனர். அவர்களின் கணக்குப்படி 30,000 பேர்களை கொன்று ஒழித்ததாக சொன்னார்கள். ஆனால் ராஜிவ் காந்தி அவ்வளவு பேர் சாகவில்லை என்று அதிருபதி அடைந்ததாகவும் அதற்கு காங்கிரஸ்காரர்கள் இன்று இரவுக்குள் இலக்கை நிச்சயம் அடைந்து விடுவோம் என்று உறுதி அளித்து விட்டு கொலை தாண்டவம் ஆடினார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sikh_man_surrounded_1984_pogromsகாவல் துறையில் இருந்த சீக்கிய காவலர்களும் அதிகாரிகளும் வன்முறை கும்பல்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்து விடுவார்களோ என்று பயந்து அவர்கள் பணியிலிருந்து அவசரம் அவசரமாக விடுவிக்கப்பட்டனர். காவல் துறை தற்காப்புக்காகவும் அவர்களின் மத நம்பிக்கைப்படி ஆயுதங்கள் வைத்திருந்த சீக்கியர்கள் அனைவரையும் கைது செய்து ஆயுதங்களை களைந்து அவர்களை கலவரக்காரர்களிடம் கையளித்தனர். இதில் நம் சீக்கிய ராணௌவ அதிகாரிகள் என்று கூட பாராமல் அவர்கள் மீதும் அடக்கு முறையை பிரயோகித்தனர். இதையும் மீறி சில நேர்மையான காவல் துறை அதிகாரிகள் பணியாற்ற முனைந்த போது அவர்கள் கண்டிக்கப்பட்டனர், அல்லது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தன் சொந்த மக்கள் மீது அரசே கட்டவிழ்த்து விட்ட குரூரமான முதல் சம்பவமாக இது நிலை பெற்றது. காங்கிரஸ் கயவர்கள் இறந்த சீக்கியர்களுக்கு எந்த மரியாதையும் அளிக்க மறுத்து விட்டனர். கொத்து கொத்தாக அவர்களின் பிணங்களை அவமதித்தும் நடந்து கொண்டனர்.

பலிவாங்கும் வன்முறையின் காரணகர்த்தாவான காங்கிரஸ் சீக்கிய இன சுத்திகரிப்பை டெல்லியில் மட்டுமின்றி உபி, ஹரியாணா,என்று 40க்கும் மேற்பட்ட இடங்களில் விரிவு படுத்தி அழித்தது. குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யாமல் இருந்த காவல் துறையினருக்கு வீர பதக்கங்களை வழங்கி மகிழ்ந்தார் ராஜிவ் காந்தி. கலவரத்தில் அதிக கொலை புரிந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி கொலைகளுக்கு சட்ட பாதுகாப்பு அளித்தார். இந்த திட்டமிட்ட இன சுத்திகரிப்பை பற்றி ராஜிவிடம் சில பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது ”பெரிய ஆலமரம் விழும் போது பூமி அதிரத்தானே செய்யும்” என்று திமிரோடு இன சுத்திகரிப்பை நியாயப்படுத்தினார். அபரிமிதமான மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்த ராஜிவ் ஊடகங்கள் 1984 கலவரத்தை பற்றி பேசுவதை தடுத்தார், அந்த கலவரங்களுக்கு முறையான விசாரணை இன்றி தாமதப்படுத்தினார். இந்த கலவரத்தை பற்றி விசாரித்து மிகவும் நீர்த்து போன அறிக்கையை தந்ததற்கு பரிசாக நீதிபதி மிஸ்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியில் அமர்த்தப்பட்டார்.

மனித நேயம், மதச்சார்பின்மை சிறுபான்மை நலன்களின் காவலனாக தன்னை முன்னிறுத்தி கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் இது தான். பாதிக்கப்பட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட சீக்கியர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காமல் தடுத்து கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. சென்ற 10 ஆண்டுகளில் பதவியில் இருந்த போது காங்கிரஸின் அனைத்து கொலைகாரர்களையும் விடுவித்து கொண்டது. இவர்களின் கைப்பாவையாக செயல்பட்ட சிபிஐயும் அனைத்து வழக்குகளையும் விலக்கி கொண்டது.

இந்த வழக்குகளை விசாரிக்க மார்வா கமிஷன், மிஷ்ரா கமிஷன், கபூர் மிட்டல் கமிஷன்,ஜெயின் பானர்ஜி கமிஷன், பொட்டி ரோஷா கமிஷன், ஜெயின் அகர்வால் கமிஷன்,அஹிஜா கமிட்டி தில்லான் கமிட்டி,நருல்லா கமிட்டி, நானாவதி கமிஷன் என்று பல கமிஷன்களை அமைத்து காங்கிரஸின் கொலை தடங்களை அழித்து நீர்த்து போக செய்ய காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்து சாதித்து விட்டது.

காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சீக்கிய இன ஒழிப்பு விசாரணை இன்னும் நீதி மன்றத்தில் தான் இருக்கிறது. 10க்கும் மேற்பட்ட விசாரணை கமிஷன்கள் நியமிக்கப்பட்டும் அந்த அப்பாவி சகோதர சகோதரிகளுக்கு இன்னும் நீதி கிடைத்த பாடில்லை. கான்கிரஸ் கொலைகார இயக்கம் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சீக்கிய இன அழிப்பு விசாரணையை நீர்த்து போக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். ஆனால் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். மக்கள் மனதில் ஆறாத வடுவாக நீடித்து நிலைத்திருக்கும் 1984 சீக்கிய இன அழிப்பு சித்திரங்கள் என்றும் அழியாது. இந்திரா கானின் நினைவு நாளில் இவர்கள் செய்துள்ள கொலைகளுக்கு பகிரங்க மன்னிப்பு கோர இத்தனை ஆண்டுகளில் காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. இந்த தேசத்தின் நீதி பரிபாலன முறையிலும் மக்களின் நீதி உணர்ச்சியிலும் இந்த இன ஒழிப்பு ஒரு ஆறாத தழும்பாகவே இருக்கும்.

கலவரத்தில் மறைந்த அப்பாவி சீக்கிய சகோதர சகோதரிகளையும், தங்கள் உடமைகளையும் மானத்தையும் இழந்தவர்களை இந்த நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம். இந்த இன ஒழிப்பை திட்டமிட்டு செய்த காங்கிரஸ் அரச பரம்பரையை ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் மக்கள் மனதிலிருந்தும் விலக்கியே வைக்க நம்மால் இயன்ற சேவையை செய்வோம் என உறுதி ஏற்போம். இது தான் இறந்த அந்த சகோதர சகோதரிகளுக்கு  நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

ஒரு ஒப்பீட்டுக்காக: 1984 Vs 2002

1984_vs_2002_Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *