மதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்

சில தினங்களுக்கு முன் உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில், 57 இஸ்லாமிய குடும்பங்களை சார்ந்தவர்கள் தங்களது தாய் மதமான இந்து மத்த்திற்கு மாறினார்கள்.  இந்த மத மாற்ற நிகழ்ச்சியை நடத்திய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையது  என்பதாக கூறி தங்களை மதசார்பற்றவர்களாக கருதும் அரசியல்வாதிகள், கடுமையான அறிக்கையை வழக்கம் போல் விடுத்தார்கள்.  இதற்காக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என கூச்சல் இட்டார்கள்.  மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர எதிர்கட்சிகள் ஒத்துழைத்தால், அரசு கொண்டு வர தயாராக இருப்பதாக கூறியவுடன் , அனைவரும் அமைதியாகி விட்டார்கள். ஏதே இந்திய சுதந்திரம் அடைந்து 57 ஆண்டுகளில் தற்போது தான் மத மாற்றம் நடப்பதாக கருதி கொண்டு கூச்சல் போட்டிருக்கிறார்கள்.  1947 ல் நாடு விடுதலை பெற்ற போது, இந்தியாவில் உள்ள மக்கள் தொகை கணக்கின் படி இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதும், 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் இவர்களின் எண்ணிக்கை என்ன என்பதை பார்த்தாலே நன்கு தெரியும், கடந்த 57 ஆண்டுகளில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மிஷினரிகள் மத மாற்ற வேலையை எவ்வாறு செய்தார்கள் என்பதும் நன்கு தெரியும்.

தாய்மதம் திரும்பும் விழா - ஆக்ரா - 2014
தாய்மதம் திரும்பும் விழா – ஆக்ரா – 2014

காந்தியைப் பற்றி வாய் கிழிய பேசும் இவர்கள், மத மாற்றத்தைப் பற்றி காந்தி கூறியதை காற்றில் பற்க்கவிட்டு விட்டார்கள். ”ஹிந்துஸ்தானத்திலும் மற்றைய இடங்களிலும் மத மாற்றம் (கிறிஸ்துவ மத்த்திற்கு) நிகழ்த்தப்படுவதையும், அது நிகழ்த்தப்படும் முறைகளையும் நோக்குங்கால்  என்னால் அதை ஏற்கவே இயலாது. இது தவறானது மேலும் உலகத்தின் முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் (மதமாற்றம்) பெரும் தடைக்கல்   ஒரு கிறிஸ்துவர் ஏன் ஹிந்துவை கிறிஸ்துவ மத்த்திற்கு மாற்ற வேண்டும்? ஒரு ஹிந்து நல்லவனாகவும், கடவுளுக்குப் பணிந்தவனாகவும் இருப்பதில் ஏன் அவர் திருப்தியடைக்கூடாது( ஆதாரம் ஹரிஜன இதழ் 30 ஜனவரி 1937)  இந்த கருத்தை தங்களது வாக்கு வங்கிக்கு உதவாது என்பதால் மறந்து விட்டு விவாதம் செய்கிறார்கள்.

நாடு முழுவதும் கிறிஸ்துவ மிஷனரிகள், இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ச்சியாக மதம் மாற்றுவதில் முழு கவனம் செலுத்துகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.  ஒரு காலத்தில் இந்து மத்த்தில் தீண்டாமை இருந்த்து என்பது உண்மை, ஆனால் தற்போது தீண்டாமை இல்லை என்பதை மறந்து விட்டு 1947க்கு முன் இருந்த நிலையை ஒப்பிட்டு பேசுவது சரியா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

1981-ம் வருடம் பிப்ரவரி மாதம் 19ந் தேதி  தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில், மீனாட்சி புரம் என்ற இடத்தில் 280 குடும்பங்களை சார்ந்த தலித்துகள் அடங்கிய ஒரு கிராமமே இந்து மத்ததிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியது பலருக்கு நினைவு இருக்காது.  இந்த மத மாற்றத்திற்கு காரணமாக கூறியது,  இந்து மதத்திலிருந்த தீண்டாமை என்று வெளியே கூறினாலும், உண்மை அது இல்லை என்பது சில ஆண்டுகளுக்கு பின்னர் தெரியவந்தது. , ஒரு வழக்கின் காரணமாக குற்றவாளிகளை தப்பிக்க செய்த முயற்சி என்பதும், அருகில் உள்ள கீழக்கரையில் உள்ள வசதி படைத்த இஸ்லாமியர்கள், மதம் மாறினால், வளைகுடா நாடுகளில் வேலை வாங்கி கொடுப்பதாக கொடுத்த உறுதி மொழி என்பதும் தெரியவந்தது.

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் மத மாற்ற தடைச் சட்டம் உள்ளது.  1967-ல் ஒரிஸ்ஸாவிலும், 1968-ல் மத்திய பிரதேசத்திலும், 1978-ல் ஹிமாச்சல பிரதேசத்திலும், பின்னர் குஜராத் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் அமல் படுத்தப்படுகிறது.  மத மாற்ற சட்டம் கொண்டு வர வேண்டிய சூழ் நிலை உருவானதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.  அதிக படிப்பறிவு இல்லாத ஆதிவாசி எனப்படும் வனவாசி ஜாதிகள் அதிகமாக இருக்கும் மத்திய பிரதேசத்தில் வெளிநாட்டு, உள்நாட்டு பாதிரிகள் மோசடி தனமாக அப்பாவி மக்களை மதம் மாற்றுவதாக வந்த செய்திகளின் அடிப்படையில் , மூத்த நீதிபதி டாக்டர் பவானி சங்கர் நியோகி என்பவர் தலைமையில் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய பிரதேசத்தில் மத மாற்ற தடை  சட்டம் கொண்டு வரப்பட்டது.  கமிஷன் கொடுத்த அறிக்கையில் உள்ள முக்கியமான அம்சங்கள்.

1956-ல் நியோகி கமிஷன் கொடுத்த அறிக்கையில், மத மாற்றத்திற்கு வெளிநாடுகளிடமிருந்து ஏராளமான பண உதவி கிடைக்கிறது.  கிறிஸ்துவ நிறுவனங்கள் மத உரிமையைப் பயன்படுத்தி ஏராளமான ஒன்றுமறியாத அப்பாவி மக்களை ஏமாற்றி, ஆசைக் காட்டி, மதம் மாற்றுகின்றனர்.  அவ்வாறு மதம் மாறியவர்களுக்கு வேலை , இன்னும் பல ஆசைகளை காட்டிதான் மத மாற்றம் செய்கின்றனர் என்ற அறிக்கையின் அடிப்படையில் மத மாற்றம் கொண்டு வரப்பட்டது.

தாய்மதம் திரும்புபவர்களைப் பாதபூஜை செய்து வரவேற்றல் - ஜார்கண்ட் - 2013
தாய்மதம் திரும்புபவர்களைப் பாதபூஜை செய்து வரவேற்றல் – ஜார்கண்ட் – 2013

மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய இரு மாநிலங்களில் கொண்டு வந்த மத மாற்ற தடை சட்டத்தை எதிர்த்து, கிறிஸ்துவ பாதிரிகள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.  இந்த வழக்கில் 1977-ல் உச்ச நீதிமன்றம், மத தடைச் சட்டம் அரசியல் சாசனப்படி சரியானதே, மத சுதந்திரம் என்பது, மதம் மாற்றும் சுதந்திரம் அல்ல என்றும், கட்டாய மத மாற்றம், சமூக அளவில் அமைதியைக குலைக்கும், அதனால் அது போன்ற மதமாற்றங்களைத் தடை செய்வதற்கான சட்டம் இருக்க வேண்டும் என தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டார்கள்.  இந்த தீர்ப்பிற்கு பின்னர் தான் அருணாசல பிரதேசத்திலும் மத மாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு சட்டம் இருந்தும், இந்த சட்ட ஷரத்தில் முக்கியமான அம்சம், யார் யாரெல்லாம் மதம் மாற்றப்படுகிறார்களோ, அவர்கள் மதம் மாறியது பற்றிய விவரம் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் ஒரிஸ்ஸாவில் நடந்த மத மாற்றங்களை பதிவு செய்யவில்லை.  ஒரிஸ்ஸாவில் ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரேலிய கிறிஸ்துவ பாதிரியார் கொலை செய்ப்பட்ட விவகாரத்தை விசாரித்த வார்வா கமிஷன், ஒரிஸ்ஸாவில் நடந்த பல மத மாற்றங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை.  அவ்வாறு பதிவு செய்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என்று தெரிவித்ததை குறிப்பிட வேண்டும்.  ஏன் பதிவு செய்யப்படவில்லை என்றால், மத மாறிய தலித்துக்களுக்கு சலுகைகள் கிடையாது என்பதால், மத மாறியவர்கள், அரசாங்கத்தின் படி தான் இந்து தலித்துக்களாகவும், மலைவாழ் மக்களாகவும் காட்டி சலுகைகளை பெற்று வருவதும் முக்கிய மான காரணமாகும்.

தாய்மதம் திரும்பும் விழா - கேரளா - 2014
தாய்மதம் திரும்பும் விழா – கேரளா – 2014

2014-ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வெளி நாடுகளிலிருந்து மத மாற்றம் செய்வதற்கு என்றே ஆண்டுக்கு ரூ10,500 கோடி வருவதாகவும், மேற்படி நிதியை பெறும் தொண்டு நிறுவனங்கள் தங்களது கணக்குகளை முறையாக காட்டுவதில்லை என்றும் உளவு துறையினர் தெரிவித்தார்கள்.  இது சம்பந்தமாக பெங்களுரில் உள்ள BIRD  என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் கிறிஸ்துவ  மத போதகர்கள் சிறப்பான மார்க்கெட்டிங் மூலமாக இந்துக்களை மத மாற்றம் செய்து வருவதாக கண்டு பிடித்துள்ளார்கள்.  இவர்களின் ஆய்வில் பணம் கொடுத்து உதவி செய்து மதம் மாற்றுவது, வேலை வாங்கி கொடுத்து மதம் மாற்றுவது, சில நேரங்களில் மிரட்டலும் நடப்து உண்டு என தெரிவித்துள்ளார்கள்.  இநத தொண்டு அமைப்புகளுக்கு அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பா, நெதர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான நிதி உதவி கிடைக்கிறது.

தமிழகத்தில்  சில ஆண்டு காலமாகவே மனித நீதி பாசரை மூலமாக , மத மாற்றம் நடைபெறுகிறது.  சுமார் 2,500 பேர்களை மத மாற்றம் செய்துள்ளார்கள்.  அறிவகம் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி, மத மாற்றங்கள் செய்யப்படுகின்றன.  இவ்வாறு மத மாற்றம் செய்யப்பட்டவர்களில், 350 பெண்களுக்கு மட்டும் தாரூல் ஹிக்மா ( Darul Hitkma) மூலமாக ஏர்வாடியில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது பற்றிய செய்திகள் வெளி வந்த போது, மதசார்பற்றவர்கள், வாய் திற்க்கவில்லை.

கன்னியாகுமரியில் மண்டைக்காடு பகுதியில் நடந்த கலவரத்தை விசாரிக்க அமைந்த வேணுகோபல் கமிஷன் பரிந்துறையில் குறிப்பிட்டதையும் இச் சமயத்தில் நினைவுப்படுத்த வேண்டும்.  கிறிஸ்துவ மத மாற்றத்தின் காரணமாக தான் சமூக அமைதி குலைந்திருக்கிறது.  இது போன்ற சமூக அமைதி குலையாமல் இருக்க வேண்டுமானால், கலவரங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றால், வேணுகோபல் கமிஷன் தெரிவித்த பரிந்துரை, ஆசை காட்டி மோசம் செய்து கட்டாயப்படுத்தி, செய்யப்படும் மத மாற்றங்களை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது.  ஆனால் மத்திய மாநில அரசுகள் இது பற்றி வாய் திறக்க மறுத்து வருகிறார்கள்.

மத மாற்றத்தின் காரணமாக வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில், இந்திய இறையான்மைக்கும், உள்நாட்டு பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.  மத்திய அரசு அமைத்த கமிட்டி, மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் பற்றிய விரிவான அறிக்கையில், இந்தியாவில் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மத மாற்றம் காரணமாக 2030-ல் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 340 மில்லியனாக மாறிவிடும் என்று குறிப்பிட்டுள்ளது.

தாய்மதம் திரும்புதல் – கன்னியாகுமரி – 2008

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.  வட கிழக்கு எல்லைப்புற மாநிலங்களான மணிப்புர், மேகாலயா, நாகலாந்து  போன்ற மாநிலங்களில் கிறிஸ்துவர்களின் மத மாற்றம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். மேகாலயாவில் 1961-ல் 35.2 சதவீதமாக இருந்த கிறிஸ்துவர்கள் 1991-ல் 64.5 சதவீதமாக அதிகரித்துள்ளார்கள்.  நாகலாந்து மாநிலத்தில் 1961-ல் 52.9 சதவீதமாக இருந்தவர்கள் 1991-ல் 87.4 சதவீதமாக உயர்ந்துள்ளார்கள்.  இந்த மாநிலங்களை போலவே கேரளத்தில் 1961-ல் 17.9 சதவீதமாக இருந்து இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 1991-ல் 23.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.   2001-ல் மிஜோராமில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 90.5 சதவீதம், நாகலாந்தில் 90 சதவீதம், மேகாலாயாவில் 70.3 சதவீதம் ஆனால் 1948-ல் இந்துக்கள் பெருவாரியாக இருந்த இந்த மாநிலங்கள் தற்போது கிறிஸ்துவர்களின் ஆதிக்கத்தில் வந்துள்ளது.  இதற்கு முக்கியமான காரணம் மத மாற்றம் என்பது அனைவருக்கும் தெரிந்தும், வாக்கு வங்கி அரசியலுக்காக வாய் திறப்பதில்லை.

இன்று ஆக்ராவில் நடந்த தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியை மையப்படுத்தி ஆர்பாட்டம் நடத்தும், இவர்கள் ஆந்திர பிரதேசத்தில் ஓங்கோல் மாவட்டத்தில் ஒரே நாளில் 15,018 பேர்களை மத மாற்றம் செய்த போது எங்கே போயிருந்தார்கள்.  இந்தியாவில்  Seventh Adventist Church    என்ற கிறிஸ்துவ நிறுவனத்தில் 1998-ல்  2,25,000 பேர்கள் இருந்த்தாகவும், 2005-ல் இதில் 8,25,000 பேர்கள் இணைந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள், இவர்கள் அனைவரும் மத மாற்றத்தின் மூலமாகவே இவ்வாறு சேர்க்கப்பட்டார்கள் என்று தெரிந்தும் எந்த மதசார்பற்றவாதிகளும் குரல் கொடுக்கவில்லை.

2008-2009-ல் மட்டும் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற்ற தொண்டு நிறுவனங்கள் 20,088 என்றும், இதில் ஒரிரு அமைப்புகள் தவிர மற்ற அனைத்தும் கிறிஸ்துவ அமைப்புகள்.  தமிழகத்தில் வொர்ல்டு விஷன் என்ற அமைப்பு மிக அதிகமான நன்கொடைகளை பெற்று மத மாற்ற முயற்சியில் ஈடுபடுகிறது.

மத மாற்றம் செய்வதற்காகவே உலக நாடுகள் ஆண்டு ஒன்றுக்கு ரூ7,50,000 கோடி செலவிடுகிறது.  மத மாற்றம் செய்வதற்காகவே சர்ச்சுகளுக்கு 40 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.  13,000  நூலகங்கள் நடத்துகிறார்கள்,  சர்ச்சுகள் மூலமாக 22,000 தினசரி, வார, மாத இதழ்கள் நடத்தப்படுகின்றன.  ஆண்டுக்கு 400 கோடிக்கு மேல் துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்.  1,800க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்கள் மற்றும் ரேடியோகள் செயல்படுகின்றன. எனவே மத மாற்றம் எவ்வளவு அபாயமானது என்பதை புரிந்து கொண்டு கட்டாய மத மாற்ற சட்டம் கொண்டு வரவேண்டும்.

மத மாற்றத்தின் மூலமாகவும், எல்லைப்பகுதிளில் ஊடுருவல் மூலமாகவும், இந்தியா திரு நாட்டை மீன்டும் ஒரு பிளவுக்கு இஸ்லாமியர்கள் திட்டமிடுகிறார்கள்.  பாகிஸ்தானிலிருந்து பங்களா தேஷ் நாட்டின் எல்லை வரை உள்ள பகுதிகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உத்திர பிரதேசம், பிகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு மத மாற்றம் என்ற ஆயுத்தை கையில் எடுத்துள்ளார்கள். இதற்கு மெகல்ஸ்தான் என்ற பெயரும் வைக்கப்பட்டுள்து.  இதில் இன்னும் ஒரு மோசமான விளைவுகள் என்ன வென்றால், மத மாறியுள்ள இந்துக்களை ஜிகாதிகாலாக மாற்றும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

மத நல்லிணக்கம் நிலவ வேண்டுமானால் அதற்கு இருக்கின்ற மிக எளிதான ஒரே வழி மத மாற்ற முயற்சியை கைவிடப் படுவதுதான்.  இதற்கு தானாக மனம் எந்த சிறுபான்மையினருக்கும் வருவதில்லை, சட்டத்தின் மூலமாகதான்  மத மாற்ற நடவடிக்கைகளை தடை செய்ய இயலும்.  மத மாற்ற தடைச் சட்டம் இல்லாதவரை சமுதாயத்தில் மத அடிப்படையிலான மோதல்களை தவிர்க்க இயலாது.  சட்டத்தின் மூலம் மதமாற்றத்திற்கு தடை விதிக்கும் போதெல்லாம் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயத் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புவதை பாரக்கிறோம்.  இவ்வாறு எதிர்ப்பு கிளம்பும் போது, சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டி, நாட்டு நலனை மறந்து விட்டு, சிறுபான்மையினரின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக அரசியல்வாதிகளும் குரல் கொடுப்பதால், மத மாற்ற சட்டம் கொண்டு வரஇயலவில்லை.

ஆகவே மத மாற்றம் என்பது மிகவும் மேசமான விளவு என்பதும். இதன் காரணமாக இந்தியா மீன்டும் பிளவு படும் அபாயம் உள்ளது என்பதை மதசார்பற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  வாக்கு வங்கி அரசியலை மறந்து விட்டு, தேசிய சிந்தனையோடு இப்பிரச்சனையை அனுக வேண்டும்.

சொந்த வீட்டிற்குத் திரும்புகிறார்கள், ஏன் இவ்வளவு கூச்சல்?

“காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த, எத்தனையோ தாய் மதம் திரும்புதல் நிகழ்வுகளை உதாரணமாக முன்வைக்கலாம். அதனால், பா.ஜ., ஆட்சியினால் தான் இத்தகய நிகழ்வுகள் நடக்கின்றன என்பது உண்மைக்கு புறம்பானது…

இந்து அமைப்புகள் செய்வது மதமாற்றம் அல்ல; தாய் மதம் திருப்புவது மட்டும் தான். இது இன்று துவங்கிய ஒன்றல்ல, மதமாற்றம் துவங்கிய காலத்தில் இருந்தே நடந்து வருகிறது.இஸ்லாமியர்களை, சைதன்ய மகாபிரபு இந்து தர்மத்திற்கு எப்படி கொண்டு வந்தார் என்பதை பற்றி மார்க்சிய வரலாற்றாசிரியர் ஹர்பன்ஸ் முக்கியா எழுதி உள்ளார். அதே போல், சீக்கிய குரு ஹர்கோவிந்தர், மிக பெரிய அளவிலான இஸ்லாமிய மதமாற்றத்தை தடுத்து, தாய் மதத்திற்கு மக்களை திருப்பியது பற்றியும் எழுதி உள்ளார்….

மதமாற்றங்களை நியாயப்படுத்துபவர்கள், ‘ஜாதி கொடுமைகளால் மதம் மாறுகின்றனர்’ என பிரசாரம் செய்கின்றனர். உண்மை என்னவென்றால், ஜாதி கொடுமைகளை நீக்குவதாக சொல்லி மதமாற்றம் செய்யும் மதங்களில், ஜாதியம் அப்படியே நீடிக்கிறது. அதாவது, இது பச்சையான ஏமாற்று வேலை. ஜாதியம் இந்து சமுதாயத்தில் இருப்பதை விட கொடுமையாகவே இந்த ‘அமைதி’ மற்றும் ‘அன்பு’ மதங்களில் உள்ளன.டாக்டர் அம்பேத்கர், ‘ஒடுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவராகவோ, இஸ்லாமியராகவோ மாறும் போது தங்கள் தேசிய தன்மையை இழந்துவிடுகின்றனர்’ என்று கூறியுள்ளார்…. ”

தினமலரில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரையிலிருந்து

9 Replies to “மதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்”

 1. ஏசுநாதர் மகாவிஷ்ணுவின் புனித குமாரன். யேஹோவா என்பதே மகாவிஷ்ணு தான். இதற்கு பைபிள் நுலிலே நிறைய விளக்கங்கள் உள்ளன்

  ஏசுநாதர் இந்திய நாட்டுக்கு வந்து இந்து மத வேதங்களையும் புத்த மத கோட்பாடுகளையும் படித்து சென்று செங்கடல் பிரதேசத்திலே இருக்கும் யூதர்களுக்கு போதனை செய்தார். அவர் முழுமையான நமது வேதத்தை அவர்களுக்கு சொல்லி தர வில்லை. அந்த ஜனங்களுக்கு எவளோ சொல்ல முடியுமோ அவ்வளவு போதனைகள் கூறினர்.

  யோவான் சுவிசேசம் அதிகாரம் 3 வசனம் 12இல் பூமியுள் உள்ளதை பற்றி கூறினாலே உங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லையே பரலோக ராஜ்யம் (வைகுண்டம்) பற்றி கூறினால் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா என இயேசு கூறுகிறார்.

  இதே யோன்வன் சுவிசேசம் அதிகாரம் 3 வசனம் 7 முதல் 15 வரை கூறுவதை பாருங்கள்

  7. நான் உங்களுக்கு உண்மையை சொல்லுகிறேன். நான் போகிறது உங்களுக்கு பிரயோசனமாக இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றரிவாளன் உங்களிடத்தில் வரார் (நபிகள் நாயகம்). நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்துக்கு அனுப்ப்வேன்.
  8. அவர் வந்து பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாய தீர்ப்பை குறித்தும் உலகத்தை கண்டித்து உணர்த்துவார்.
  9. அவர்கள் என்னை விசுவாத படியுனாலே பாவத்தை குறித்தும்
  10. நீங்கள் என்னை காணாதபடிக்கு பிதாவிநிடத்துக்கு போகிறபடியுநாளே நீதியை குறித்தும்
  11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந் தீர்க்கபடாததினாலே நியாய தீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்துவார்.
  12. இன்னும் அநேககாரியங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டியதிருக்கிறது. அவைகளை நீங்கள் இப்போது தாங்கமாட்டிர்கள்.
  12. சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திட்குள்ளும் உங்களை நடத்துவர். அவர் தம்முடயதை சுயமாய் பேசாமல் தான் கேள்வி பட்டவைகள் யாவையும் சொல்லி வரபோகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
  14. அவர் என்னுடையதை எடுத்து உங்களுக்கு அறிவிப்பதனால் என்னை மகிமை படுத்துவர்.
  15. பிதவினுடயவை யாவும் என்னுடையவைகள். அதனாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

  இப்பொழுது சொல்லுங்கள் பைபிள் முழுமையான வேத நூலா என்று .

 2. மேலே சொன்ன இரண்டாவது விளக்கத்தில் அதிகாரம் 16 என திருத்தி படிக்கவும்

 3. ராஜசேகர ரெட்டி மற்றும் அஜீத் ஜோகி போன்றோர் முடலமைச்சர்களாய் இருந்தபோது ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கரில் மத மாற்றம் தீவிரமாக நடந்தது. அனேகமாக ஆந்திர மக்கள் தொகையில் 10 சதவீதம் ராஜசேகர ரெட்டி ஆட்சியில் மதம் மாறினார். ஒரு முதல்வரின் மனைவியும், மருமகனுமே இவான்ஜலிஸ்ட்டுகலாய் இருந்தனர்.

 4. நம் மதத்தின் அருமை பெருமைகளை இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்க பட வேண்டியது அவசியமாகும் ..கோவில்கள் தோறும் இளையோரை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள் நடை பெற வேண்டும்.. கடந்த தலை முறை இணைய பாவனை இன்மையால் மோசடி மத மாற்ற பேர்வழிகளின் உண்மை அறிய முகம் வாய்ப்பின்றி போனது ..ஆனால் தற்போது காலத்தின் தேவை நம் மதத்தின் நிலவுகை நம் கைகளிலே உள்ளது என உணர வேண்டும்

 5. உலக ஊடகங்களே இந்து சமயத்திற்கு எதிராகச் செயல்படுவதுபோல எனக்குத் தோன்றுகிறது.

  அசோசியேடட் பிரஸ் ஒவ்வொரு நாளும் மோடியைப் பற்றியும், இந்து சமயத்திற்கு மக்கள் திரும்புவதையும் குறித்து அவதூறாக எழுதிக்கொண்டே இருக்கிறது. அதே சமயம், இந்துக்கள் சமயமாற்றம் செய்யப்படும்போது அமைதிகாத்தார்கள்.

  கொரியப் போரின்போது அங்கு இல்லாதிருந்த கிறித்தவ சமயம், அமெரிக்க ஆதரவுடன் பரப்பப்பட்டது. 1965ல் 5% ஆக இருந்த கிறித்தவ சமயம் 200ல் 5 29.2%ஆக உயர்ந்தது. அப்பொழுது யாரும் எதுவும் பேசவில்லை.

  However, with an annual growth rate of nearly 4%, Christianity is by far the fastest-growing of all major religions in India. – See more at: https://christiannews.net/2013/12/02/report-christian-church-growing-at-a-rapid-rate-in-india/#sthash.7zptlGJ4.dpuf

  இதைப் பற்றியும் யாரும் பேசுவதில்லை.

  The truly exciting thing is that the percentage of Christians has increased substantially from 2.5% a decade ago to about 5.8% today. That represents a huge increase in the growth rate.
  https://www.joyfulheart.com/misc/growth-of-christianity-in-india.htm

  இன்னும் நான் சான்று கொடுத்துக்கொண்டே போகலாம்.
  ஊடகங்கள் விலைக்கு வாங்கப்பட்டது போன்று இந்து சமயத்திற்கு எதிராகவே கருத்துப் பதிகின்றன.

  இது என்று நிற்குமோ?

  ஈஸ்வரோ ரக்ஷது. இறைவன் காப்பாற்றட்டும்.

 6. இறையில்லா இஸ்லாம் மற்றும் செங்கொடி பகடு நல்லூா் முழக்கம் என்ற வலைதளத்தை அனைவரும் படிக்க கேட்டுக் கொள்கிறேன். அரேபிய மதம் எவ்வளவு ……….. எப்பதனைத் தொிந்து கொள்ளலாம்.

 7. Yes Mr.Anburaj, we should know a lot more about Islam and Christianity; while reading certain reviews in that website, I felt that many of us do not know many a facts and details of those religion as that of our own too. Ours’ i.e the so called HINDU religion ( Personally,I never consider/accept our Hindu religion as religion in the strictest term because it is a way and a view of LIFE.It comprises all the human beings and forms and there is NO HARD and FAST RULE to follow or practise; it is totally free and no more compulsion to follow on dotted lines…..but then and there Gnanis/Saints appeared on gave us an umpteen number of morals and ethics which will extricate from the clutches of bad things or sins……..so on and so forth..) Besides arguing in the matter such as ” Mathoru Baagan”, let the readers go through the following piece of article and put their views/opinions
  முகம்மதுவுக்கு அல்லாஹ் வெளிப்படுத்திய ஏழு குர்ஆன்கள்

  Dr. ஜாகிர் நாயக் தன்னுடைய உருது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்றில், அதை தொகுத்து வழங்குபவர் ஏன் இஸ்லாம் மற்ற எல்லா மதங்களைவிட உயர்வானது என்று உரிமை கோருகிறது என்று கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்கிறார். மற்ற மதங்கள் தவறான கணக்கீடுகளுக்கு வழிகாட்டும் போது, 2+2=4 என்ற சரியான விடையை பெற, இஸ்லாமே நேரான பாதையை அவருக்கு போதிக்கிறது என்று Dr. ஜாகிர் நாயக் வாதிட்டார். இப்படி, தன்னுடைய நிகழ்ச்சிகளில் எதையும் கண்மூடித்தனமாக நம்புகின்ற முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு தமாஷாக அவர் விடையளிக்கின்றார். உண்மையில், அவரும் அவருடைய குரு அஹ்மத் தீதத்தும் இஸ்லாத்துடைய மேலாதிக்க இயல்பை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளும்படியே செய்துள்ளனர். அவர்கள் இதற்க்கு முன்பு, தங்களுடைய மதத்தை பற்றி அறிந்துகொள்வதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமலே இருந்தனர். தீதத்துக்கும் ஜாகிருக்கும் நன்றிகள்!
  23 வருடங்களில் 7 குர்ஆன்கள், எல்லாமே அரபியில்.

  1 = 7
  23 வருடங்கள் என்ற நம்ப முடியாத நீண்ட காலகட்டத்தில், ஏழு வெவ்வேறு விதமான முறைகளில் முஹம்மதுக்கு குர் ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்பதையும், எல்லா ஏழு குர் ஆன்களும் முஹம்மதின் மரணத்திற்கு பிறகே புத்தக வடிவங்களாக தொகுக்கப்பட்டன என்பதையும் அறிந்துகொள்ளும்போது அது முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இல்லாமலிருக்கலாம், ஆனால் அது முஸ்லிமல்லாதோர்க்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கின்றது. அவைகள் தொகுக்கப்பட்டு சுமார் 20 வருடங்களுக்கு பிறகு, மூன்றாவது கலீபாவான உத்மான், ஏழு பாடபேதங்களில்(versions) இருந்து ஒரே கைப்பிரதியை(codex) உருவாக்கி அதையே அதிகாரப்பூர்வமான குர்ஆனாக அறிவித்து, இஸ்லாமிய பேரரசு எங்கும் உள்ள மற்ற ஆறு பாடபேதங்களையும் (versions) எரித்துவிடும்படி ஆணையிட்டார். எனவே நூற்றுக்கணக்கான குர்ஆன்களின் மற்ற ஆறு பாடபேதங்களும் சடங்கு ஏதுமின்றி தகனம் செய்யப்பட்டன.
  இந்த உண்மையை எல்லா முஸ்லிம்களும் அறிவார்களா?
  அநேகமாக இன்றைய குர்ஆனை போலவே, புனிதமாகவும் முக்கியத்துவமிக்கதாகவும் உள்ள, மனித இனத்துக்கு வழிகாட்ட வெளிப்படுத்தப்பட்ட அல்லாஹ்வின் புத்தகங்கள்- ஒன்றல்ல, ஆனால் அவைகளில் ஆறு புத்தகங்கள், அவைகளின் எந்த அறிகுறியும் இல்லாமல் சாம்பலாக எரிக்கப்பட்டுவிட்டன என்பதை அவர்கள் அறிய வரும்போது முஸ்லிம்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள்?
  7 வெவ்வேறு மூல குர்ஆன்களுக்கு ஆதாரம்
  கூறப்படுவதைபோல, ஏழு வெவ்வேறு பாட பேதங்களில் (versions / விருத்தாந்தங்கள்) முஹம்மதுக்கு குர் ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்பதற்கும் முஹம்மதின் மரணத்திற்கு பிறகுகூட அவை புத்தக வடிவத்தில் இல்லை என்பதற்கும் கீழ்க்கண்ட ஹதீதகளே சான்றுகள் :
  ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 3, புத்தகம் 41, எண் 601 :
  உமர் பின் அல் கத்தாப் அறிவித்தார் : ‘……………. அதை ஓதியபோது, அல்லாஹ்வின் தூதர், “அது இந்த வகையில் வெளிப்படுத்தப்பட்டது” என்று கூறினார் . அதை நான் ஓதியபோது, அது இந்த வகையில் வெளிப்படுத்தப்பட்டது” என்று அவர் கூறினார், எனவே உங்களுக்கு எளிதான முறையில் அதை ஓதுங்கள்.”
  குர்ஆன் ஒரே புத்தக வடிவில் இருந்ததே இல்லை
  முஹம்மது தன்னுடைய வாழ்நாளின்போது குர்ஆனை புத்தக வடிவில் தொகுப்பதை பற்றி அலட்டிகொள்ளவே இல்லை என்பதற்கும், இன்றைய சாதாரண முஸ்லிம்களைபோல மிகப்பெரிய சஹாபாக்காளில் ஒருவர்கூட குர் ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருக்கவில்லை என்பதற்கும் அடுத்த ஹதீத் சான்றாக உள்ளது. குர்ஆனை புத்தக வடிவத்தில் தொகுத்ததின்மூலம், நேர்வழிபெற்ற கலீபாக்கள் முஹம்மதின் கொள்கையை சட்டப்படி நீக்கிவிட்டனர் (abrogated).
  ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 6: 509:
  ஜைத் பின் தாபித் அறிவித்தார் :
  வெவ்வேறு மூலங்களில் இருந்து குர்ஆனை சேகரித்து அதை ஒரு புத்தக வடிவமாக தொகுக்கும்படி அபு பக்கரை உமர் பின் கத்தாப் கேட்டுக்கொண்டார். அப்பொழுது, அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படி செய்ய முடியும்? என்று அபு பக்கர் அவருக்கு பதிலுரைத்தார்.
  அல்லாஹ் தன்னுடைய குர்ஆனில் பொய் உரைக்கிறார்
  தான் புத்தக வடிவத்தில் குர் ஆனை முஹம்மதுக்கு வெளிப்படுத்தியதாக தன்னுடைய குர் ஆனில் அல்லாஹ் பல இடங்களில் உறுதிபடுத்துகிறார்.

  1. வஹியின் மூலம் உமக்கு புத்தகத்திலிருந்து இறக்கி வைக்கப்பட்டதை ஓதுவீராக, மேலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக (குர்ஆன் 29:45).

  2. புத்தகத்திலிருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளது முன்பே வெளிப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் உண்மை ஆகும் (குர் ஆன் 35:31) .
  புனித குர் ஆனின் 6 பாடபேதங்களை (versions ) புனிதமாக எரிப்பது
  ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 6: 510:
  அனஸ் பின் மாலிக் அறிவித்தார் : “… அவர்கள் எதை பிரதி எடுத்தார்களோ அதின் ஒரு ஒரு பிரதியை ஒவ்வொரு முஸ்லிம் மாகாணத்திற்கும் அனுப்பி வைத்து, மற்ற எல்லா குர்ஆன் எழுத்துக்களையும், தனித்தனி கைப்பிரதிகளோ(fragmented manuscripts) அல்லது முழுமையான பிரதிகளோ, அவைகளை எரித்துவிடவேண்டும் என்று உத்மான் உத்தரவு இட்டார்….”
  குர்ஆனின் ஏழு பாடபேதங்களை குறித்த அதிகமான ஆதாரங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ள வாசகர்கள் இந்த ஹதீத்களை படித்து பார்க்கலாம் :
  ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 4: 442
  ஸஹீஹ் முஸ்லிம் 1787
  அல் திர்மிதி 2215
  ஆகையால், 7 வெவ்வேறு விதங்களில் குர்ஆனை முஹம்மதுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தினார்; எந்த சஹாபாவும் குர் ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருக்கவில்லை; முஹம்மதின் மரணத்திற்கு பிறகும்கூட குர் ஆன் புத்தக வடிவத்தில் இல்லை; முஹம்மதின் மரணத்திற்கு 20 வருடங்களுக்கு பிறகே, உத்மான் குர் ஆனின் மீதமுள்ள 6 பாடபேதங்களையும் எரித்துவிட்டு தன்னுடைய சொந்த பாடபேதத்தை தொகுத்தார் என்பதை இந்த ஹதீத்கள் உறுதிப்படுத்துகின்றன.
  அல்லாஹ்வின் தெளிவாக விளக்கும் அரபி
  இதற்கு மாறாக, அல்லாஹ் தன்னுடைய குர் ஆனில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :
  1 . நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்(12 :2)
  2 . மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்(20:113).
  3 . தெளிவான அரபி மொழியில்(26:195).
  4 . (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்) (39:28).
  5 . அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது(41:3).
  எனவே, அரபி தெளிவாக விளக்குகின்ற மற்றும் மிக சிறந்த மொழி என்பதால் குர் ஆனை எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்வதற்காக, அதை மனித குலத்துக்கு வழிகாட்டியாக தான் அரபியில் வெளிப்படுத்தியதாக இந்த வசனங்களில் அல்லாஹ் கூறுகிறார்.
  அல்லாஹ்வுடைய குர்ஆனிய அரபி மொழியே உயர்வானது என்றால், பிறகு ஏன் அவர் எபிரேயு, அபிசீனியம், பாரசீகம் , சிரிய, கிரேக்கம் போன்ற மற்றும் பல மொழிகளில் இருந்து சொற்களை தன்னுடைய குர்ஆனுக்காக கடன் வாங்கினார்?
  மேலும், அரபி மொழியின் 7 விதங்களில் ஏன் அவர் தன்னுடைய குர் ஆனை அனுப்பினார்?
  உலகின் மற்ற பகுதிகளில் வாழும் தன்னுடைய படைப்பின் பெரும் பகுதியினரை பற்றி அல்லாஹ் பொருட்படுத்துபவராக இருந்திருப்பாரானால் , மற்ற 6 பாடபேதங்களையும் அவர்களுடைய மொழிகளிலும் அனுப்பி இருப்பார்.
  தன்னுடைய குர்ஆனின் 7 பாடபேதங்களையும் ஒரே மொழியில் அனுப்புகிற அளவுக்கு இப்படிப்பட்ட அறிவீனராக எப்படி அல்லாஹ் இருக்க முடியும்?
  அவருடைய குர்ஆனின் எல்லா 7 பாடபேதங்களையும் பின்பற்றும் அளவுக்கு அவரை பின்பற்றுபவர்கள் நிச்சயமாக அறிவீனர்களாக இருக்கவில்லை. ஆகையால், அவர்கள் அதிக அடிப்படை அறிவையும் புத்திசாலி தனத்தையும் காட்டி, தங்களுக்கு ஒரே ஒரு குர்ஆனை தேர்ந்தெடுத்துக்கொண்டு மற்ற 6 பாடபேதங்களையும் எரித்து விட்டார்கள்.
  எனவே, Dr. ஜாகிர்! உண்மையாகவே இஸ்லாம் போதிப்பது 7=1 என்றா? நீங்கள் உரிமை கோருகிறபடி, சரியான கணக்கீடுகளை ஒன்றும் இஸ்லாம் போதிக்கவில்லை.
  குர்ஆனிய வாரிசுரிமை சட்டம் என்பது அல்லாஹ்வின் இன்னொரு முழுமையான கணக்கு குழப்பம். குர்ஆனில் கூறப்பட்டுள்ள வாரிசுரிமை சட்டத்தை ஒரு முஸ்லிம் பின்பற்ற விரும்பினால், அவர் கண்டிப்பாக பைத்தியமாகி விடுவார். எழுத்தறிவில்லாத, குர்ஆனுடைய ஆசிரியரான முஹம்மது, இப்படிப்பட்ட மடத்தனமான வசனங்களை புனைந்து தன்னுடைய அறிவீனத்தை இன்னொரு முறையும் நிரூபித்துள்ளார்.

  மூல ஆசிரியர் : மிர்சா காலிப்(Mirza Ghalib) – 19/02/2012
  மொழி பெயர்ப்பு : ஆர்ய ஆனந்த்
  இடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 18:26
  Email This
  BlogThis!
  Share to Twitter
  Share to Facebook
  Share to Pinterest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *