தாய்மதம் திரும்புதலும் சாதியும்

இந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல… தேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது.. விஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது… இவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம் திரும்பும் இந்துக்கள் எந்த சாதிகளுக்குள் இணைந்தார்கள்? விடை மிக எளிது…

View More தாய்மதம் திரும்புதலும் சாதியும்

மதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்

2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பார்த்தால், சுதந்திரத்திற்குப் பின் கடந்த 67 ஆண்டுகளில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மிஷினரிகள் மத மாற்ற வேலையை எந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள் என்பது தெரியும்… கிறிஸ்துவ மத மாற்றத்தின் காரணமாக சமூக அமைதி குலைவதையும், கலவரங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டுமென்றால், ஆசை காட்டி மோசம் செய்து கட்டாயப்படுத்தி, செய்யப்படும் மத மாற்றங்களை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் – இது வேணுகோபல் கமிஷன் தெரிவித்த பரிந்துரை… சட்டத்தின் மூலம் மதமாற்றத்திற்கு தடை விதிக்கும் போதெல்லாம் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயத் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புவதை பாரக்கிறோம். வாக்கு வங்கி அரசியலை மறந்து விட்டு, தேசிய சிந்தனையோடு இப்பிரச்சனையை அனுக வேண்டும்…

View More மதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்

ஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..

மரணத்தையொட்டிய எளிய சடங்கினை வேத நெறிப்படி விதிக்கும் சுவாமி தயானந்தர், வருடந்தோறும் மேற்கொள்ள வலியுறுத்தப்படும் சிராத்தச் சடங்கைத்தான் தேவையில்லை எனக் கூறுகிறார். உற்றார் உறவினர் உயிரோடு இருக்கையில் அவர்களை நன்கு பராமரியுங்கள், அவர்கள் இறந்தபின் அவர்களை முன்னிட்டுச் சடங்குகளின் பெயரால் வீண்செலவு செய்வதால் என்ன பயன் என்றுதான் அவர் கேட்கிறார்.

View More ஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..