கிமு 1450 ல் இந்திரபிரஸ்தா என்ற பெயரில் பாண்டவர்களால் ஆட்சி செய்யப்பட்ட நிலப்பகுதியே இன்றைய டெல்லி ஆகும். அதன் பின்னர் பல அரசர்களின் கீழ் டெல்லி ஆளப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு முன்னால் நிலப்பிரபுத்துவத்தின் கீழும், கவர்னரின் கீழும் டெல்லி இருந்தது.
மீண்டும் அதே இந்திராவின் ஆட்சியில் 1983 ல் மெட்ரோ பொலிட்டன் உயிர்ப்பித்தது. மீண்டும் 1990 ல் மெட்ரோ பொலிட்டன் கவுன்சில் கலைக்கப் பட்டது.
74 ஆவது சட்ட திருத்தத்தின் படி மாநிலங்கள் தங்களது மாநில முன்னேற்றத்திற்கு அதிகாரப்பரவலாக்கம் முறையே சரியானது என்ற அடிப்படையில் சட்டசபை தேர்தல்களும் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும், மேலும் கவுன்சிலர் தேர்தல்களும் 1992 லிருந்து நடைமுறைக்கு வந்தது. அன்றிலிருந்து இதுவரு டெல்லி NCT(National Capital Territory ) of Delhi என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
NCT of delhi யைப் பொறுத்தவரையில் மாநில அரசிற்கு சில அதிகாரங்களும், மத்திய அரசிற்கு சில அதிகாரங்களும் உள்ளன. New Delhi Municipal Council (NDMC), the Municipal Corporation of Delhi (MCD) and the Cantonment Board ஆகிய மூன்று துறைகளும் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது.
மத்திய அரசின் கீழ் சட்டம், ஒழுங்கு, Enforcement of planning controls போன்ற துறைகள் உள்துறை அமைச்சகத்தின் கீழும், நகரத்தைத் திட்டமிடல் மற்றும் நகர மேம்பாடு போன்ற துறைகள் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கீழும், தொலைபேசி துறையும் மத்திய அரசின் கீழ் வருகிறது.
மாநில அரசு ஏதேனும் ஒரு இடத்தில் தொழிற்சாலை கொண்டு வந்தாலோ, கல்விக் கூடம் கொண்டு வர வேண்டுமென்றால் கூட DDA (Delhi Development Authority ) யின் அனுமதியோடுதான் திட்டத்தை செயல்படுத்த முடியும். DDA வும் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது.
இன்னமும் சொல்லப்போனால் மாநில முதல்வரைக் காட்டிலும் டெல்லி கவர்னருக்குத் தான் அதிக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சட்டத்தை மாநில அரசு கொண்டு வர வேண்டுமானால் கவர்னரின் அனுமதிக்குப் பிறகே சட்டசபையில் நிறைவேற்ற இயலும். ஒருவேளை கவர்னருக்கும், முதல்வருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை குடியரசுத் தலைவரின் பார்வைக்குக் கவர்னர் கொண்டு செல்ல வேண்டும் என்பதே சட்டம். (Government of India , 1991, Article 4 ).
இதுவெல்லாம் தெரிந்தும் கேஜ்ரிவால் கடந்த முறை ஜன் லோக்பாலுக்கான கவர்னரின் அனுமதியைப் பெறாமலேயே சட்டசபையில் முன் மொழிந்ததையும், சட்ட மீறலை ஒத்துக் கொள்ள இயலாது என காங்கிரசும் பிஜேபியும் சொன்ன போது, அவர்கள் ஜன் லோக்பாலை எதிர்க்கிறார்கள் என பதவியைத் தியாகம் செய்தது போல கேஜ்ரிவால் நாடகமாடியத்தை நாடறியும்.
ஏன் முழு மாநிலமாக அறிவிக்கப்படாமல் டெல்லி உள்ளது என்பதற்குக் கடந்த கால மத்திய அரசுகள் சொல்லும் காரணங்கள் இதுதான். மற்ற மாநிலங்களைப் போல டெல்லியை முழு மாநிலமாக ஆக்காமல் இருப்பதற்கு டெல்லி பாரதத்தின் தலைநகரம் என்பதே முதன்மைக் காரணமாக சொல்லப்படுகிறது. டெல்லியில் தான் அனைத்து தேசிய அலுவலகங்களும், பன்னாட்டின் அலுவலகங்களும் உள்ளன என்பதும், தலைநகரின் பாதுகாப்பு, தேசத்தின் இமேஜை மற்ற நாடுகளுக்குக் காண்பிக்க, தலைநகரின் சட்ட ஒழுங்கைக் காக்க, தலைநகரின் மேம்பாட்டில் நலம் செலுத்த , நாட்டின் அனைத்து பெருந்தலைவர்களும் வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற நாடுகளின் embassy இங்குள்ளது என பல காரணங்களை முன்வைத்தே இதுவரையிலான மத்திய அரசுகள் டெல்லியை முழு மாநிலமாக அறிவிக்காமல் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதும் கூட கெஜ்ரிவாலுக்கு நன்றாகத் தெரியும். மோடியே விரும்பினாலும், பாஜக விரும்பினாலும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டுமானால் லோக்சபா, ராஜ்யசபா என இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தைக் காண்பித்து நிரூபிக்க வேண்டும். முழு மாநிலமாக அறிவிக்க சட்டத் திருத்தம் தேவை. அதை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றே நிறைவேற்ற இயலும். அதுவரையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட இயலாது. இதுவெல்லாம் தெரிந்தும் கெஜ்ரிவால் பல நாடகங்களை அரங்கேற்றுவார் என்பதை நாம் கண்கூடாகப் பார்ப்போம்.
ஆம் ஆத்மியின் பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய அரசு நிதி உதவியையும், மத்திய அரசின் அனுமதியும் மிக முக்கியம். மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது என்கிற உண்மையைக் கூட manifesto வில் சொல்லாமல் விட்டார்கள் என்பதே உண்மை. டெல்லியைப் பொறுத்தவரையில் கேஜ்ரிவால் எதைச் செய்யாவிட்டாலும் மத்திய அரசின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள பல நாடகங்கள் அரங்கேறுவதை நாம் பார்ப்போம் என்பது திண்ணம்.
மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளி போட்டுகொண்டு உள்ளனர். ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் கிரண் பேடியை விட சிறந்தவரா? உண்மையிலேயே மக்கள் சுயநினைவோடு தான் உள்ளனரா? புரியவில்லை. நான் நினைக்கிறேன் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்க நினைக்கும் பஜ்ரதங்கள், RSS போன்ற நல்ல இயக்ககங்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் போனது தான் காரணமென்று நினைக்கிறேன். ஆகா இதிலிருந்து ஒன்று புரிகிறது இந்திய மக்கள் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை குழி தோண்டி புதைத்து விட்டு எல்லோரும் காம வெறி பிடித்து அலைய போவது உறுதி. முதலில் அளவுக்கு மீறிய சுதந்திரத்தையும் , அந்நிய மதங்களையும் அவற்றின் செயல்பாடுகளைய்ம், அவை சம்பட்ந்தபட்ட தினங்களையும் (காதலர் தினம் போன்ற) முற்றிலும் ஒழிக்க வேண்டு. நம்மால் முடியுமா? நம் பாரத தேசத்தை அந்த ஈசன் தான் காப்பாற்ற வேண்டும்.
உண்மை அனைத்தும். என்றாலும் இதை டெல்லி மக்கள் எப்படி அறியாமல் போனார்கள் என்பது தான் ஆச்சரியம். 🙁
தெளிவான விளக்கக் கட்டுரை. திரு. இலச்சுமணன் பெருமாள் அவர்கள் பாராட்டுக்கு உரியவர்.
ஆம் ஆத்மி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பது அறிந்தும் மத்திய வகுப்பினர் வாக்கு அளித்தனர். இதன் மூலம் அக்கட்சி யின் உண்மை முகம் தெரிய வேண்டும் என அளித்திருக்கலாம். ஏழை மக்கள் இலவசங்கள் அறிவிப்பில் மயங்கி வாக்கு அளித்தனர்.
ஆனால் ஒன்று, நமக்கு இன்னும் 5 வருடங்களுக்கு தினமும் ஏதேனும் நாடகம் நடப்பதை இலவசமாக கண்டு களிக்கலாம். தொலைக்காட்சி களும் இலவச மாக நாடகங்கள் கிடைப்பதை விரும்பும்.
டில்லியின் முன்னேற்றம் 5 ஆண்டுகள் பின் தள்ளப்படும். இது தான் உண்மை.
வாழக ஜனநாயகம். வாழ்க மக்களாட்சி.
இந்து மதம் நம் மதம்………….. இந்தியா நம் நாடு
மதத்தை விட்டுவிட்டு மனிதராய் இருங்கள்”என்று கூறும் “இந்துவா” நீங்கள்……. இதை படிக்கவும்.
*இந்துக்களில் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற சொல்வதில்லை.
*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் பழக்கங்களை “மூடநம்பிக்கை” என்று இழிவாக பேசுவது இல்லை.
*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் கடவுளை தீய சக்தியாக பார்ப்பதும், அவர்களைவணங்குவது பாவம் என்று சொல்வதில்லை.
*உலகின் பழமையான மதமாய் இருந்தாலும், பெரும்பான்மையானமதமாய் இல்லாது இருக்க காரணம், நாம் எந்த நாட்டையும் படை எடுத்து சென்று நாம் மதத்தை பரப்பாமல் இருந்தது. இப்படி இருந்தவர்களை அடிமை படுத்தி மற்ற மதத்தினர் அவர்கள் மதத்திற்கு நம் மக்களை மாற்றினர்.
*மேலும் நம் நாட்டில் நம்மைவிட மற்ற மதத்தினர்க்கே சலுகைகளும் சட்டங்களும் அதிகம்.
*ஆர்.எஸ்.எஸ்,இந்து முன்னணி போன்ற அமைப்புகளை “காவி தீவிரவாதிகள்” என்று அழைப்பதுக்கு முன், அந்த அமைப்புகளின் தொடங்க காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள். இந்துக்களின் ஒருங்கிணைப்புக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் தொடங்கப்பட்ட அமைப்பு அது. மேலும் இவ்வமைப்புகள் இல்லா விட்டால், இன்று நாம் தலையில் குல்லா அல்லது கழுத்தில் சிலுவை அணிந்து இருப்போம்.
*நம் மதம் இப்பொழுது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. *இந்து மதம் இந்தியாவின் பூர்வீக சொத்து. அப்படிபட்ட இந்து மதத்தை கலங்கப்படுத்த செய்யப்படும் எந்த ஒரு செயலும் தேச துரோகம்.
*நாம் ஒன்றும் மற்ற மதத்தினர் செய்வது போல் மற்றவர்களை மூளை சலவை செய்து பிழைப்பு நடத்துவது இல்லை.
*நமக்கு மற்ற நாடுகளில் இருந்து, வேற்று மதத்தினர்களை நம் மத்தினராக மாற்ற பண உதவியோ பொருள் உதவியோ கிடைப்பதிலை.
*நமது நாட்டின் பழம்பெருமைக்கானகாரணம் நம் மதமே. நம் மதம் அழிவாதல் அழிவது நம் நாட்டின் பெருமையும் தான். மேலும் இந்துக்கள் மற்ற மதத்தினரை மனிதனாக பார்தாலும், அவர்கள் நம்மை பாவிகளாகதான் பார்க்கின்றனர். நாம் அவர்களில் தவறு செய்யும் ஒருசிலரை சித்தரிப்போம். ஆனால் அவர்கள், நாம் அனைவரையும் பாவிகளாக தான் சித்தரிக்கின்றனர்.
*நாம் யாரையும் கெடுக்காத போது நம்மை கெடுக்க நினைக்கும் எவருக்கும் இடம் கொடுக்காதீர்கள். சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! அது இயலாவிட்டால், பின்நின்று குறைசொல்வதையாவது தயவு செய்து நிறுத்துங்கள்.