பயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்

tmmk-pothukuzhu-meeting

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்ற அஇஅதிமுக, மிகப் பெரிய தவறுக்குத் துணைசென்றுள்ளது. இந்தியாவில் 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதியும் அதற்கு முன்பும் பலமுறை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான சிமிக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் வகையிலும், சிறுபான்மையினரின் வாக்குக்காகவும் அஇஅதிமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டது. தடைசெய்யப்பட்ட சிமி இயக்கம் பல்வேறு காலகட்டங்களில் தனது பெயரை மாற்றிக் கொண்டு அரசியல் களத்தில் வலம் வருகிறது. தமிழகத்தில் அதன் பெயர், “மனித நேய மக்கள் கட்சி”யாகும்.

இந்திய அரசியலில் தங்களது பயங்கரவாதத் தன்மை மறைய வேண்டும் என்கிற நோக்கத்திலேயே செயல்படுகின்ற சில இஸ்லாமிய அமைப்புகள், காலத்திற்குத் தகுந்தாற்போல் தங்களது கூட்டணிகளை மாற்றிக் கொண்டு நல்லவர்கள் போல் காட்சி அளிக்க முயலுகிறார்கள். இப்படிப்பட்ட பச்சோந்தித்தனத்திற்கு தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான திமுகவும், அஇஅதிமுகவும் பக்கபலமாக இருக்கிறார்கள். 2006-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த மனித நேய மக்கள் கட்சி, மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தவுடன் 2011-இல் நடைபெற்ற தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு மூன்று இடங்களைப் பெற்று, இரண்டு இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆகவே இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயரை மாற்றி அரசியல் அரங்கில் அங்கீகாரம் பெற்றுள்ளது, மிகப் பெரிய ஆபத்தாக முடியும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது.

tmmk-candidates2011-இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியிலும், சென்னையில் சேப்பாக்கம் தொகுதியிலும் இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு இடங்களில் பெற்ற வெற்றி, ‘இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும்’ என்கிற கோரிக்கைக்கு இந்துக்களும் ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள நடத்திய நாடகமாகும். இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜவாஹிருல்லா எப்படிப்பட்டவர், இவரின் தொடர்புகள் எப்படிப்பட்டவை என்பதைப் பார்த்தால் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கத்தின் ஊற்றுகண் என்பது வெட்ட வெளிச்சமாகும்.

1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்திற்குக் குண்டு வைத்து 11 பேர்களைக் கொன்ற செயலில் ஈடுபட்டவார்கள் அல்-உம்மா இயக்கத்தினார். நாடு முழுவதும் சிமி இயக்கத்திற்கு முதன்முதலில் தடை விதித்தபோது தமிழகத்தில் உள்ள சிமி இயக்கத்தினார் அல்-உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டி எனும் புதிய பெயரில் இயக்கத்தை நடத்தினார்கள். பழனிபாபா கொலைக்குப்பின் அல்-உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டபின் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் எனும் பெயரில் 1995-இல் ஒரு புதிய அரசியல் இயக்கம் துவக்கியவர்கள் அல்-உம்மா இயக்கத்தினர். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்கு அரசியல் சாயம் பூச வேண்டும் என்கிற நோக்கில் துவக்கப்பட்ட இயக்கம் தமுமுக (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்) என்பதாகும். இதன் தலைவார் ஹைதர் அலி முன்னாள் சிமியில், தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். 1998-இல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்குப் பின் ஹைதர் அலி கைது செய்யப்பட்டதால் தமுமுக-வின் தலைவராக பொறுப்புக்கு வந்தவார் ஜவாஹிருல்லா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

1993-ஆம் ஆண்டிலிருந்து 1998-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இயக்கம் அல்-உம்மாவும் பின்னர் பெயர்மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் ஆகும். 1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாகூரில், இந்து முன்னணியின் பொறுப்பாளருக்குக் குறிவைத்து, அவரது மனைவியைக் கொன்ற சம்பவத்திலும், 1996-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் தமுமுக-விற்குப் பங்கு உண்டு. இந்தச் சம்பவங்களுக்காக நைனா முகமது, சேட் சாகீப், ராஜா ஹூசைன், பக்குரூதீன் போன்ற தமுமுக-வின் பொறுப்பாளார்கள் கைது செய்யப்பட்டார்கள். தஞ்சாவூரில் உள்ள தூர்தார்ஷன் மீது 6.6.1997-ஆம் தேதி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள், 6.12.1997-ஆம் தேதி பிரச்சினைக்குரிய கட்டடம் அயோத்தியில் இடிக்கப்பட்ட நினைவுதினத்தை ஒட்டி சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியிலும் ஆழப்புழா எக்ஸ்பிரஸ் வண்டியிலும் குண்டுவைத்து சிலரைக் கொன்ற குற்றவாளிகள்- தமுமுகவினர். இது போல பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட இயக்கம் தமுமுக-வாகும். 10.1.1998-ஆம் தேதி சென்னை அண்ணா மேல்பாலத்தில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல், 18.9.1997-இல் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐந்து இந்து இயக்கங்களின் ஆதரவாளார்கள், 9.12.1997-ஆம் தேதி கோவையின் வெளிப்பகுதியில் நடத்திய தாக்குதல்களில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டதும், இதற்காக சுல்தான் நாஸார், அப்துல் காயும் என்பவர்கள் கைது செய்யப்பட்டதும், இவ்வாறு நடந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள், தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் என அனைவருமே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்கள்.

javahirulla1980-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னால் செயல்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் அனைத்திலும் ஜவாஹிருல்லாவின் பங்கு உண்டு என்பது காவல் துறையினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவருமான ஜவாஹிருல்லா, 1995-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியவார். 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி கோவையில் திரு.அத்வானி அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இயக்கங்களில் ஒன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமாகும். இவ்வாறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட தமுமுகவினர் ‘மனித நீதிப் பாசறை’ என்கிற பெயரில் சில காலம் தங்களது ‘பணிகளை’ச் செய்துகொண்டு இருந்தார்கள். தீவிரவாதம் தவிர்த்து இவர்களின் முக்கியப் பணி பல்வேறு இடங்களில் உள்ள தலித்களை இஸ்லாமியார்களாக மதமாற்றம் செய்வதாகும். 2005-ஆம் ஆண்டு மீண்டும் தங்களது இயக்கத்தின் பெயரை மனித நேய மக்கள் கட்சி என பெயர்மாற்றம் செய்து, தமிழக அரசியலில் புதிய அவதாரம் எடுக்க முனைந்தார்கள்.

இவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்ட இந்தப் பயங்கரவாத இயக்கத்திற்கு இரண்டு கழகங்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களது முழு ஆதரவை அளித்தார்கள், கிடைத்த ஆதரவில், பயங்கரவாதிகள் என்கிற பெயரை மாற்றுவதற்கு தேர்தல் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். தமிழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது. 1996-ஆம் வருடம் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளார் கோவை மு.ராமநாதன் பொதுமேடைகளில் பகிரங்கமாக இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். கோவையில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோட்டைமேடு பகுதியில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது, இதற்கு இஸ்லாமியார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால், உடனடியாக கோட்டைமேடு பகுதியில் உள்ள செக்போஸ்ட் அப்புறப்படுத்தப்படும் என பகிரங்கமாகத் தெரிவித்தார். திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்ற செய்தி வந்தபோது அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அந்த செக்போஸ்ட் இஸ்லாமியார்களின் துணையோடு அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது கோவையில் உள்ள கோட்டைமேடு தனி பாகிஸ்தானாகக் காட்சி அளிக்கிறது.

javaharullah-election-discussion-2011

இதே ஆண்டில் சிறையில் இருந்த அல்-உம்மா கைதிகள் எவ்விதக் காரணமுமின்றி விடுதலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹருல்லாவும் ஒருவர். 1998-ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பிற்குக் காரணமான அல்-உம்மா மற்றும் ஜிகாத் இயக்கங்கள் தடை செய்யப்பட்டவுடன் திமுகவின் ஆதரவுடன், “மனித நீதிப் பாசறை” எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

19.2.2009-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அது, 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை கேரளத்தில் உள்ள கள்ளிக்கோட்டையில் நடந்த தேசிய அரசியல் மாநாடு (National Political Conference) பற்றியது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் டெல்லி உட்பட 16 மாநிலங்களில் உள்ள முன்னாள் சிமி ஆதரவாளார்களால் துவக்கப்பட்ட பாப்புலார் பிரண்ஃட் ஆப் இந்தியாவின் மாநாடாகும். இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து ஜவஹிருல்லா கலந்து கொண்டார், இவருடன் மனித நேய மக்கள் கட்சியின் சில முக்கியப் பொறுப்பாளார்களும் கலந்து கொண்டார்கள்.

mmkஆகவே 2011-இல் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்திலிருந்து வேறு பெயரில் அரசியல் கட்சியாக மாறிய மனித நேய மக்கள் கட்சிக்கு அஇஅதிமுக கூட்டணி எனும் பெயரில் அரசியல் அங்கீகாரம் அளித்துள்ளது ஆபத்தில் முடியுமோ என்கிற அச்ச உணர்வுடன் தமிழகம் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

16 Replies to “பயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்”

 1. Padavi verikkaaga naattaik kaattik kodukkum hinthuth thalaivarkalai makkal adaiyaalam kandu othukka vendum

 2. தமிழ்நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் போதே முஸ்லீம்களின் ஜிகாத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இவர்களின் ஓட்டுக்காக நம் அரசியல் வியாதிகள் ஆதரித்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்களின் ஜனத்தொகை அதிகரித்து ஐம்பது சதவீதத்தை எட்டிவிட்டால் நம் அரசியல் வாதிகள் அப்போதும் அவர்களின் ஓட்டுக்களைப் பொறுக்குவதற்காக அவர்களுடன் கூட்டு வைப்பார்களே தவிர நாட்டின் நலனில் அக்கறை கொள்ளமாட்டார்கள். அதன் பின் தமிழகமும் பாகிஸ்தானாக மாற ஆரம்பித்து விடும்.

  ஆங்கிலம் அறிந்த நம் வாசகர்கள் கீழ்க்கண்ட இணையதளங்களை காணும் வண்ணம் நிரந்தரமாக தமிழ் ஹிந்துவில் லிங்க் கொடுங்கள்
  http://www.alisina.org
  http://www.faithfreedom.org
  http://www.evilbible.com

 3. ஜனநாயகப்படுகொலை என்னுமாப்போலே இது ஜனநாயகத்தில் அரசியல் படுகொலை. மக்களைத் தங்கள் கைகளாலேயே தங்கள் கண்களையே குத்திகொள்ளவைக்கும் முறைக்குப் பெயர்தான் ஜனநாயகம். முன்னர் இதே இஸ்லாமியர்களும்,கிறித்தவர்களும் இன்னபிறரும் பாட்ஷாக்களாகவும்,சுல்தான்களாகவும், நவாபுக்களாகவும் ராணிகளாகவும்,கவர்னர் ஜெநேரல்களாகவும் இருந்து படுகொலைகள் நிகழ்த்தியிருப்பது அனைவரும் அறிந்த சரித்திர உண்மைகளாகும்.

 4. “தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா” என்பது ஒரு Oxymoronஆகி வருகிறது.
  சில நாட்களுக்கு முன் மதுரையைச்சேர்ந்த ஒருவர் ஃப்ரான்ஸில் கைதானார்.
  இவர் ஜிகாத்திய தீவிரவாதத்திற்கு ஆள் பிடித்ததாகவும் இருவரை
  பாகிஸ்தானிற்கு பயிற்சிக்கு அனுப்பியதாகவும் தெரிகிறது.

  தஞ்சாவூரில் நான் வசிக்கும் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில்
  ஒரு முஸ்லீம் பெரும்பான்மை கிராமம் உள்ளது. அங்கு போலீஸ்
  போக முடியாது. அவர்களுக்குள் வரும் சர்ச்சைகள் கிராம முதியவர்களால்
  அவர்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளப்படுகின்றன. 2, 3 வருடங்களாக
  நிலைமை இப்படி உள்ளது. கோயம்புத்தூரிலும் சில பகுதிகள் இப்படி
  இருப்பதாக செய்திகள் வருகின்றன.

  மாயவரத்தில் ஒரு தெருவில் ஹவாலா முறை பரிவர்த்தனை பட்டப்
  பகலில் நடக்கிறது.

  என் தனிப்பட்ட கருத்துப்படி, தமிழ்நாடு ஆள் பிடிக்கும் பிராந்தியமாகவும்,
  ஆயுத கடத்தல், பணப் பரிமாற்றம் போன்றவற்றிற்கு தலைமை
  இடமாகவும் மாறி வருகிறது.

  வெளியில் பார்ப்பதற்கு பிரச்சினையே இல்லாதது போல் ஒரு தோற்றம்
  உருவாக்கப் பட்டிருக்கிறது. கேரளாவில் நடக்கும் அடிப்படைவாதத்திற்கு
  தமிழ்நாட்டிலிருந்து உதவி செய்யப்படுவதாகவே நான் பார்க்கிறேன்.

 5. தீவிரவாதிகளை ஆட்சி பீடத்தில் அமர்த்த கழகங்கள் தயாராக இருகின்றன. ஆனால் ஒரு தேச பக்தனை(உணர்வுள்ள ஹிந்துவை) ஆதரிக்கவோ, ஆட்சி பீடத்தில் அமர்த்தவோ கழகங்கள் தயாராக இல்லை. இதை ஹிந்துக்கள் உணரும் வரை இந்த ஹிந்து பூமியை யாராலும் காப்பாற்ற முடியாது.

  சுரேஷ் கு

 6. ஒரு தீவிரவாத முஸ்லீம் கட்சியை இணைத்துகொண்டு அரசியல் கட்சிகள் வெற்றி பெற முடியும், ஆனால் பாஜகவை இணைத்துகொண்டால் அவை முஸ்லீம்களின் வாக்கை இழக்கும் என்ற பரப்புரையை செய்து வைத்திருக்கிறார்கள்.

  முஸ்லீம் தீவிரவாத கட்சியை இணைத்துகொள்ளும் கட்சி தோற்கும்/ தோற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்துக்கள் எடுக்காததுதான் இப்படிப்பட்ட அவல நிலைக்கு காரணம்.

  சமீபத்தில் அஸ்ஸாமில் இந்துக்கள் அப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுத்தார்கள். அஸாம் கன பரிஷத் அங்கு உள்ள ஒரு தீவிரவாத முஸ்லீம் கட்சியிடம் ஆதரவுகோரியது. காங்கிரஸ் அந்த கட்சியோடு உறவு வைத்துகொள்ளமாட்டொம் என்று வெளிப்படையாக அறிவித்தது. ஆனால் பாஜக இந்த அஸாம் கனபரிஷத்துடன் கூட்டாக சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று அறிவிததது.

  இதனால் கடுப்படைந்த இந்துக்கள் பெருவாரியாக சென்று காங்கிரசுக்கு வாக்களித்தார்கள். காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது.

  இதே போல, தமிழ்நாட்டிலும் இந்த மாதிரி பயங்கரவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்யவேண்டும். இங்கே பாஜக வெற்றி பெறுவதை விட இந்த மாதிரி கட்சிகள் தோற்கவேண்டும் என்பதே முக்கியம்.

 7. என்ன செய்வது? கட்டுரை ஆசிரியருக்கு தெரிந்த உண்மை, கழகங்களுக்கும், காவல் துறைக்கும், உளவு துறைக்கும் தெரிய வில்லை. இதில் பெரிய கொடுமை என்னவென்றால் ஓட்டு போட்ட மக்களுக்கும் தெரியவில்லை.

 8. சமூக விரோதப் போக்கிரிகள் அணிந்துள்ள முகமூடிதான் இந்த மனித நேய மக்கள் கட்சி. இந்தக் கும்பல் அதிகாரம் ஏதும் இல்லாதபோதே சிறுபான்மையினர் என்றால் கடும் நடவடிகை எடுக்கத் தயங்குவார்கள் என்கிற தைரியத்தில் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு திரிந்தது. இப்போது இதற்கு அரசியல் அங்கீகாரமும் ஜயலலிதா தயவில் கிடைத்துவிட்டதால் கேட்கவே வேண்டாம். குறிப்பாக உள்ளூர் காவல் நிலையங்கள், வட்டாட்சி, மாவட்ட ஆட்சி அலுவலகங்கள், மற்றுமுள்ள அரசு அலுவலகங்களில் மிரட்டித் திரிவார்கள். ஜயலலிதா ஹிந்து சமூக நலனுக்கு மிகப் பெரிய துரோகம் இழைத்துள்ளார் என்பதை வெளிப்படையாகக் கூறுவதில் தயக்கம் தேவையில்லை. அவர் தவறிழைத்துவிட்டார் என்று குறிப்பிட்டு அவர் இழைத்துள்ள மாபெரும் துரோகத்தை நீர்த்துப் போகச் செய்ய வேண்டிய தில்லை. இதற்கு ஜயலலிதா ஏதும் பரிகாரம் செய்யக் கூடுமானால் அது அனைத்து காவல், அரசு அலுவலகங்களுக்கும் இந்தக் கட்சி எம் எல் ஏ உள்ளிட்ட எவர் முறைகேடாக நடந்துகொண்டாலும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்குமாறு கண்டிப்பாக ஆணையிட வேண்டும். எவரையும் தூக்கி எறிவதில் சிறிதும் தயங்காத ஜயலலிதா இந்தக் கட்சி உறவையும் கெட்ட கனவாய் உதறித் தள்ளுவது நல்லது. ஹிந்து சமூகத்தில் போதிய விழிப்புணர்வு இருந்திருப்பின் ஜயலலிதாவுக்கு அந்தக் கட்சியைச் சேர்த்துக்கொள்ளத் துணிவு வந்திருக்குமா? எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற தவிப்பில் ஜயலலிதா கன்னியா குமரி கிறிஸ்தவர்களுக்கு ஹிந்து ஆலயங்களுக்கு அருகிலேயே சர்ச் கட்டிக்கொள்ளலாம் என்று ஆதரவு காட்டியும், சமூக விரோத, தேச விரோத மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் கொடுத்தும் பெருந் தீங்கிழைத்துள்ளார்.
  -மலர்மன்னன்

 9. முஸ்லீம் பயங்கரவாதிகள் சட்டமன்ற உரிப்பினர்கலாகிவிட்டார்கள் .ஆனால் பெரும்பாலான ஹிந்துக்கள் ஓட்டுபோட்டு போட்டுதானே இவர்கள் பதவிக்கு வந்திருக்கிறார்கள்.ஆகவே புலம்பி பயனில்லை.கட்சிபார்த்து ஹிந்துக்கள் ஒட்டுபோடும்வரை இந்த இழிநிலை தொடரத்தான் செய்யும்.எருமைமாடுகூட இரண்டுமுறை குத்தினால் எழுந்துவிடும்.ஆனால் ஹிந்துக்கள் இன்னும் எத்தனை குத்துக்களையும் வாங்க தயாராய் இருக்கிறார்களே.எங்கே போய் முட்டிக்க?

 10. ஜெயலலிதாவின் தயவில் மனித நேய மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததா? அல்லது மனித நேய மக்கள் கட்சியின் தயவில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாரா? என்பதை தமிழக உளவுத்துறையில் உங்களுக்கு யாராவது நண்பர்கள் இருந்தால் அவரை கேட்டுவிட்டு பின்பு எதையும் எழுதுங்கள்.
  சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் முழுவதும் ஜெயலலிதாவுக்கு மட்டும் கிடைத்ததுள்ளது என்பதே உளவுத்துறை கருணாநிதிக்கு அளித்த அறிக்கையாகும்.

 11. Abdul,
  Please understand that it was becos Manitha neya makkal katchi was in JJ’s alliance, it could win its seats, not the other way round.

  Minority vote in TN has little bearing on the election outcome, not like in UP or bihar.

  Minorities have almost always voted for the DMK, did the DMK come to power always?

  Also, TN has the least number of terrorist acts & bomb blasts for 1 main reason – muslim population is low in TN compared to other states.

  Just imagine if we had a muslim populatoin like say, kerala or AP, how many innocent lives we would have lost.

 12. என்ன செய்வது? கட்டுரை ஆசிரியருக்கு தெரிந்த உண்மை, கழகங்களுக்கும், காவல் துறைக்கும், உளவு துறைக்கும் தெரிய வில்லை. இதில் பெரிய கொடுமை என்னவென்றால் ஓட்டு போட்ட மக்களுக்கும் தெரியவில்லை.

  U are right, abdul.

  Hindus are not clever enough to see thro’ your treacherous acts, what to do?

  But you will continue to take innocent lives & when asked, say “Islam oru amaidhi maargam, Koran does not preach violence” blah blah.

  Frankly, are U not ashamed?

 13. மனிதனை காட்டுமிராண்டி களாக்க ஒரு மதம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

 14. அமைதியை விரும்பகூடிய சகோதருக்கு என்னுடைய கேள்வி நீங்கள் அமைதியான இயக்கத்தை சேர்ந்தவரா?
  சகோதர்களஹா வாழும் தமிழ் முஸ்லிம் மற்றும் ஹிந்து சமுதாய மக்களை உங்களுடைய செயல் பாடுகள் அமைதியை ஏற்படுதுஹிறதா? இல்லை கலவரத்தை ஏற்படுதுஹிறதா ?
  ம்மக் மற்றும் நீங்கள் சார்ந்து இருக்ஹிற இயக்கம் இரண்டுமே இல்லாமல் இருந்தால் நிச்சயம் தமிழகம் எப்பொழுதும் அமைதி பூங்காவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை இந்தியாவின் முன்னேற்றம் முஸ்லிம்,ஹிந்து,christian மற்றும் அணைத்து சமுதாய ஒற்றுமையில் தான் உள்ளது.நீங்கள் அதர்க்காக ,அனைவரின் சம உரிமைகஹாக முயற்சி செய்யுங்கள் அதுதான் உண்மையான இந்தியனின் அடையாலம்:டேக் கேர்

 15. Vanakkam nanba…..hindhu,muslim,christin evatrai yellam thandi namellam MANITHARGAL………manithargalukku edaiyaa eppoluthu anbu alinthu?suyanalam elukiratho?….athan piragu nam evvulagil vala thaguthi attravargal……..oruvar ennoruvarai kurai sollvathai thavirpom…….muthalil indianaga vala muyarchi seivome……..namathu india matra nattiruku mun utharanamaga eruka muyarchipom…..ulaipom,uyarvom..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *