இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடரின் 16-வது பாகம்.
  முந்தைய பகுதிகள்
2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி குண்டு வெடிப்பிற்கு முன்பே பல்வேறு தேதிகளில் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முழு முயற்சியில் ஈடுபட்டார்கள். வெளி மாநிலங்களில் நடத்திய குண்டு வெடிப்புச் சம்பவங்களின் குற்றவாளிகள் கூட டெல்லியில் தங்கி வேறு தாக்குதல் சம்பவத்திற்குத் தங்களது உதவிகளைப் புரிந்தார்கள். ஹைதராபாத் குண்டு வெடிப்பின் குற்றவாளியான லஷ்கர் அமைப்பைச் சார்ந்த அபு ரஸாக் மசூத் (Abu Razak Masood) என்பவன் டெல்லியில் ஜாகீர் நகர் பகுதியில் தங்கியிருந்ததைக் கண்டு பிடித்துப் பின்னர் கைது செய்தார்கள். இவன் துபாயில் உள்ள முக்கிய நபர்கள் மூலமாக இந்தியாவில் உள்ள லஷ்கர் அமைப்பினருக்கு நிதி உதவி பெற்றுத் தருவதில் முக்கியப் பங்கு வகித்தவன். 23.8.2005-ம் தேதி கைது செய்யப்பட்ட போது, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களில் தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்தப்படுவது பற்றிய சந்தேகக் குறிகள் இருந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தார்கள்.

பாரத தேசத்தின் தலைநகர் டெல்லி என்பதால் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளின் முக்கியத் தலைவர்களும் தங்களுக்குத் தேவையான அனைத்து விதமான தகவல் பெறுவதிலும், அந்தத் தகவல்களை முறைப்படி யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்புவதற்கும், உரிய இடமாக டெல்லியை மாற்றி வைத்திருந்தார்கள். 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி குண்டு வெடிப்பிற்கு முன்பே பல கால கட்டங்களில் டெல்லியில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. 12.7.2005-ம் தேதி டெல்லி பாலம் விமான நிலையத்தில் குண்டு வெடிக்கச் செய்த சதித் திட்டத்தை முறியடித்தார்கள். ஹிஸ்புல் முஜாஹதின் என்ற அமைப்பு இந்தச் சதித் திட்டத்தைத் தீட்டியதாகக் காவல் துறையினர் தெரிவித்தார்கள். ஹிஸ்புல் முஜாஹதின் அமைப்பின் பொறுப்பாளரும், காஷ்மீர் மாநில இணை டைரக்டருமாக இருந்தவன், டெல்லியில் கைது செய்யப்பட்டான். கைது செய்த போது அதிக அளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. காஷ்மீர் மாநில அமைதிச் சட்டத்தின் படி தேடப்பட்ட ஹிஸ்புல் முஜாஹதின் குற்றவாளியான அப்துல் மஜீத் பட் என்பவன் புது டெல்லி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டான். இவ்வாறு டெல்லியில் தினசரி இஸ்லாமியப் பயங்கரவாதிகள் ஏதேனும் ஒரு இடத்தில் காவல் துறையினரால் பிடிப்படும் சம்பவம் ஏராளமாகும். காஷ்மீர் மாநில மண் சோதனை அலுவலகத்தைச் சார்ந்த முகமது க்யூம் கான் என்பவன் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி கிடைக்கு ஏற்பாடு செய்த குற்றத்திற்குக் கைது செய்ப்பட்டான், ஆனால் கைது செய்யப்பட்ட இடம் புது டெல்லியாகும். இவன் பயங்கரவாதிகளுக்குச் சுமார் 50 லட்சத்திற்கு மேல் நிதி திரட்டி கொடுத்தாகக் காஷ்மீர் மாநில இணை போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாசி தெரிவித்தார்.

1997லிருந்து டெல்லியில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்கள்:

1997-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் பல்வேறு இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையில், தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் உள்ளது. ஆனால் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை டெல்லியில் மட்டும் 200க்கும் மேற்பட்டது. . கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே பயங்கரவாதிகள் அதுவும் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள், மற்றவர்கள் அப்பாவிப் பொது மக்கள் என்பதை மறந்து விட இயலாது. இவ்வாறு இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக விளங்குவது மகாராஷ்ட்ரா மாநிலமாகும். இந்த மாநிலத்தில் நடந்த இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 600க்கு மேல் உயரக் கூடும்.

  • 9.1.1997ந் தேதி டெல்லி காவல் துறையின் தலைமையிடத்தில் நடந்த வெடி குண்டுத் தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.
  • 1.10.1997ல் சதார் பஜார் (Sadar Bazar) பகுதியில் ஊர்வலம் சென்றவர்கள் மீது இரண்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
  • 10.10.1997-ம் தேதி டெல்லியில் சாந்திவன்(Shantivan), கௌரியா பால்(Kauria Pul), மற்றும் கிங்வே கேம்ப் (Kingway Camp) பகுதியில் வெடித்த குண்டுகளில் ஒருவர் கொல்லப்பட்டார், 16க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.
  • 18.10.1997ல் ராணிபாக் மார்க்கெட்டில் (Rani Bagh Market) வெடித்த இரண்டு குண்டுவெடிப்பின் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டார், 23க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பலியானார்கள்.
  • 26.10.1997-ம் தேதி அதிக அளவில் மக்கள் நடமாடும் பகுதியான கரோல் பாக் (Karol Bagh) பகுதியில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார், 34க்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிர்களை இழந்தார்கள்.
  • 30.11.1997-ம் தேதி டெல்லி செங்கோட்டைக்கு அருகில் வெடித்த இரண்டு குண்டுகளின் காரணமாக மூவர் கொல்லப்பட்டார்கள், 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். செங்கோட்டையின் உள்ளேயே இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரில் கேம்ப் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • 30.12.1997-ம் தேதி அதாவது இரண்டு குண்டு வெடிப்பு நடந்து ஒரு மாதம் முடிந்தவுடன் அடுத்த குண்டு வெடிப்பு பஞ்சாப் பாக் (Punjab Bagh) பகுதியில் நின்ற பேருந்தில் வைத்த குண்டு வெடித்ததின் காரணமாக நான்கு கணினிப் பொறியாளர்கள் கொல்லப்பட்டார்கள், 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.
பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் (Batla House encounter): 

13.9.2008-ம் தேதி டெல்லியில் ஐந்து இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக, டெல்லி காவல் துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்ய முயன்ற போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தத்  துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம் ஜாமியா நகர் பகுதியாகும், இந்தப் பகுதியுள்ள பாட்லா ஹவுஸில் தங்கியிருந்த பயங்கரவாதிகளைக் கைது செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையாகும். நடைபெற்ற சம்பவத்திற்குப் பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் எனப் பெயரிட்டுத் தங்களை மதச்சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும், இந்த நாட்டின் இறையாண்மைக்கு நம்பகத் தன்மையற்ற சமூக ஆர்வலர்களும் எழும் குரல் இந்தத் துப்பாக்கிச் சூடு, போலீஸாரின் அத்து மீறல்கள் எனப் புலம்பத் துவங்கினார்கள்.

19.9.2008-ம் தேதி டெல்லி ஜாமியா நகரில் உள்ள பாட்லா ஹவுஸில் சந்தேகத்திற்கு இடமான இந்தியன் முஜாஹதின் பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த குற்றவாளிகள் தங்கியிருப்பதாக டெல்லி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. ஆகவே பயங்கரவாதிகளைக் கைது செய்ய முயன்ற போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்தியன் முஜாஹதின் அமைப்பைச் சார்ந்த ஆடிஃப் அமீன் (Atif Amin), முகமது சாஜித் (Mohamed Sajid) என்பவர்கள் கொல்லப்பட்டார்கள், முகமது சைஃப்(Mohamed Saif) , சீஷன் (Zeeshan) என்பவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தில் அரீஸ் கான் தப்பியோடிவிட்டான். நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் துறை இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மா கொல்லப்பட்டார். இது சம்பந்தமாக அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டார்கள். என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஆடிஃப் அமீன் கல்லூரி மாணவன் என்பதால் ஜாமியா கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மாவைப் பற்றி எவரும் கவலைப்படவில்லை. மனித உரிமைக் கமிஷன் கூட இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டதைப் பற்றி விவரங்கள் விசாரிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் டெல்லி உயர்நீதி மன்றத்தின் உத்திரவுப் படி பாட்லா ஹவுஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களைப் பற்றிய முழு விசாரணை நடத்தித் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.  சமர்ப்பித்த அறிக்கையில் காவல் துறையினர் எந்த விதமான சட்ட அத்துமீறல்களும் நடத்தவில்லை என 22.7.2009-ம் தேதி தெரிவித்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற வேண்டி உத்திரப் பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சியினர் இஸ்லாமியர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகக் கருதி பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் மறு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்புகின்றனர். ஆகவே பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நிலை டெல்லியில் உள்ள ஆளும் கட்சியினரிடமும், தங்களை சமூக ஆர்வலர்களாகக் காட்டிக் கொள்பவர்களிடமும் இருப்பதால், அதிக அளவில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தலைநகர் டெல்லி இருக்கிறது.

ன்கௌன்டரின் போது கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மா சம்பந்தமாக டெல்லி காவல் துறையினர் 28.4.2010-ம் தேதி நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்தார்கள். ஷாஹ்சாத் , ஆரிஸ் கான்(தலைமறைவாக உள்ளான்), ஆடிஃப் அமீன், மொஹம்மத் சஜித்,  ஆகிய நால்வர் மீதும் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டதில் பங்கு இருப்பதாகக் குற்றப்பத்திரிக்கை தெரிவித்தது. இந்த வழக்கு சம்பந்தமாக 12.2.2011ந-ம் தேதி அடிஷனல் செசன்ஸ் நீதிபதி அஜய் குமார் கௌர் நால்வரும் குற்றவாளிகள் என தீர்ப்புக் கூறினார். இதன் மூலம் பாட்லா ஹவுஸ் என்கௌன்டரில் கொல்லப்பட்டவர்களும், கைது செய்யப்பட்டவர்களும் இஸ்லாமிய பயங்கரவாதிகள்  என்பது உண்மையானது.

பாட்லா ஹவுஸ் என்கௌன்டர் நடந்த இரண்டு ஆண்டு நிறைவை ஒட்டி 19.9.2010ந-ம் தேதி ஜூம்மா மசூதியின் 3வது

பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி மோஹன் சந்த் ஷர்மா

வாயிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்த பஸ் மீது  மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு பேர்கள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் இரண்டு தைவான் நாட்டினர் படுகாயமடைந்தார்கள்.

டெல்லியில் லஷ்கர்-இ-தொய்பாவினரின் தாக்குதல் அச்சுறுத்தல்:

லைநகர் டெல்லியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல் மீண்டும் மீண்டும் தலைதூக்குவது ஆட்சியாளர்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.  ஆனால் பல்வேறு கால கட்டங்களில் டெல்லி காவல் துறையினர் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள், விசாரணையின் போது கொடுக்கும் வாக்கு மூலங்கள் பெரும் அச்சத்தை உண்டாக்கும் விதமாக உள்ளன.  புது டெல்லியில் உள்ள தில்லி ஹாட் (Dilli Haat)  என்ற பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.  இவனிடம் நடத்திய விசாரணையில் நாட்டில் உள்ள பல்வேறு பயங்கரவாத இயக்கங்களின் முக்கியப் பொறுப்பாளர்கள் அடிக்கடி டெல்லியில் கூடுவதாகவும், மீண்டும் நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் தெரிவித்தான்.  இவ்வாறு நடைபெறும் ஆலோசனையின் போது கலந்து கொள்ளும் முக்கியமான பயங்கரவாத இயக்கம் லஷ்கர்-இ-தொய்பா என்பதையும் குறிப்பிட்டான்.

னவே தில்லி ஹாட்(Dilli Haat) பகுதியில் கைது செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளான ஷஃபாகத் இக்பால் மிர் (Shafaqat Iqbal Mir) மற்றும் ஷபீர் அகமது(Shabbir Ahmed) என்பவனும் காஷ்மீர் மாநிலத்தை சார்ந்தவர்கள்.  கைது செய்த போது இவர்களிடம் இரண்டு கி.லோ. ஆர்.டி.எக்ஸ்.வெடிமருந்தும், இரண்டு கையெறிக் குண்டுகளும், மூன்று டெட்டனேட்டர்களும், ரொக்கமாக ரூ25,000-ம் கைப்பற்றப்பட்டன.  இவர்களுடன் மூன்றாவதாக ஒருவன் கைது செய்யப்பட்டான், இவனது பெயர் அபு காசிம்(Abu Qasim)  பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியைச் சார்ந்தவன். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த ஷஃபாகத் இக்பால் மிர் (Shafaqat Iqbal Mir)  மற்றும் ஷபீர் அகமது(Shabbir Ahmed) இருவரும் காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு வெடி மருந்துகளைக் கொண்டு வந்தவர்கள் என தெரிய வந்தது.  பாகிஸ்தானால்-கைப்பற்றப்பட்ட-காஷ்மீரில் உள்ள லஷ்கர் இ தொய்பாவில் பயிற்சி பெற்றவர்கள்.  ஜம்மு பகுதியில் லஷ்கர் இ தொய்பாவின் பொறுப்பாளரான அபு அம்மர் (Abu Ammar) என்பவனிடம் முக்கியமான பயிற்சி பெற்றவர்கள். கைது செய்யப்பட்ட அபு காசிம் 29.10.2005-ம் தேதி டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பின் சூத்திரதாரியான அபு அல்குவமா(Abu Alqama) என்பவனிடம் முழுப் பயிற்சி பெற்றவன் என்பது தெரியவந்தது. 2007ம் வருடம் மே மாதம் 10-ம் தேதி தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என திட்டங்கள் தீட்டப்பட்டன.

இந்தத் தேதியைத் தேர்வு செய்ததற்கு முக்கியமான காரணமாக இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தெரிவித்தது, 1857ல் நடந்திய புரட்சியின் 150வது ஆண்டு தினமாக இருப்பதால் இந்தத் தேதியைத் தாக்குதல் நடத்த தேர்வு செய்தார்கள்.  இது சம்பந்தமாக டெல்லி காவல்துறையின் உதவி கமிஷனர் திரு.அலோக் குமார் தெரிவித்தது, 150வது ஆண்டு தினத்தை டெல்லி செங்கோட்டையில் விழா நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது, எனவே பயங்கரவாதிகள் செங்கோட்டையைத்  தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என தெரிவித்தனர்.

லஷ்கர்-இ-தொய்பாவினர் கடந்த பல ஆண்டுகளாகவே தில்லியைத் தாக்குவதற்கு பல்வேறு விதமான திட்டங்களை தயார்படுத்தி வைத்திருந்தார்கள்.  இம்மாதிரித் தாக்குதல் நடத்தக் கூடிய பயங்கரவாத அமைப்புகளில் லஷ்கர் அமைப்பினர் முதன்மையானவர்களாக தெரிந்தார்கள்.  இதற்கு முக்கிய காரணம், தொடாந்து காவல்துறையினர் நடத்தி என்கவுண்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பெரும்பான்மையானவர்கள் லஷ்கர் அமைப்பினர்.  2005-ம் ஆண்டு மட்டும் நடத்தப்பட்ட என்கவுண்டரில் கொல்லப்பட்ட லஷ்கர் அமைப்பினர் 19 பேர்கள், இந்த எண்ணிக்கை 21 ஆக 2006ல் உயர்ந்தது.  ஆகவே கொல்லப்பட்டவர்களின் கணிசமானவர்கள் லஷ்கர் அமைப்பினர் என்பதும், தொடர் தாக்குதலுக்கு லஷ்கர் அமைப்பினர் திட்டமிட்டார்கள் என்பதற்குறிய காரணமாகும்.  2006ம் ஆண்டு டெல்லியில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட இஸ்லாமியப் பயங்கரவாதிகள் 21 பேர்கள், கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர்கள் லஷ்கர் அமைப்பினர், அல்பதார் அமைப்பினர் நான்கு பேர்கள், ஹிஸ்புல் முஜாஹதின் அமைப்பினர் இருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2007ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் டெல்லியில் மட்டும் கைப்பற்றப்பட்ட வெடிமருந்தின் அளவு பற்றிய சில புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன.  பல்வேறு இடங்களில் டெல்லி காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தின் அளவு சுமார் 10.6 கிலோ எடை கொண்டதாகும்.  2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி டெல்லிக் காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமான இருவரைக் கைது செய்தார்கள். பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்த  ஹஜி அமைப்பபைச் சார்ந்த லட்ஃபுல் ரஹ்மான்(Lutful Rahman) என்பவனும்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சார்ந்த முகமது அமீன் வானி என்பவனும், டெல்லி காவல் துறையினரால் தெற்கு டெல்லியில் நிஜாமுதின் பகுதியிலும், வடமேற்கு டெல்லியில் உள்ள ஆதர்ஸ் நகரிலும் கைது செய்யப்பட்டார்கள்.  கைது செய்த போது இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிமருந்தின் அளவு 1.6 கிலோ மற்றும் ஒரு டெட்டனெட்டர்கள், கையெறி குண்டுகள் மற்றும் ரொக்கமாக ரூ 4.5 லட்சமும் கைப்பற்றப்பட்டது.  இதை போலவே சீலாம்பூர் மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் லஷ்கர் அமைப்பைச் சார்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டான்.  இவனிடம் 2.5 கிலோ எடை கொண்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தும், அமெரிக்க நாணயமான டாலர் சுமார் 10,000-மும், கைப்பற்றப்பட்டன.  இந்த வெடிமருந்தைக்  கொண்டு டெல்லியில் குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக டெல்லியில் உள்ள லஷ்கர் அமைப்பினருக்குக் கொடுப்பதற்காகக் கடத்தியதாகத்  தகவல் தெரிவித்தான்.

ந்த சம்பவத்தைப் போலவே 4.2.2007ந் தேதி டெல்லி காவல்துறையினர்  ஜயிஷ்-இ-மொஹம்மத் (Jaish-e-Mohammed)  அமைப்பினர் நான்கு பேர்களைக் கைது செய்தார்கள்.  இவர்களிடமிருந்து 3 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தும், நான்கு டெட்டனேட்டர்களும், ஆறு கையெறி குண்டுகளும், 0.30 போர் ஃபயர் ஆர்ம்களும் (bore firearm), மற்றும் இந்திய ரூபாய்கள் சில ஆயிரமும் கைப்பற்றப்பட்டன.  இம்மாதிரியானப் பயங்கரவாத இயக்கங்கள் டெல்லியில் அதிக அளவில் மறைமுகமாகவும், சில அமைப்புகள் நேரிடையாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இந்த இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிகத் தொடர்பும் உண்டு.  உண்மையைக் கூற வேண்டுமானலும், பல்வேறு ஆய்வுகளின் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியாவில் இயங்கும் இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மற்றும் பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்து Directorate General of Forces Intelligence என்ற அமைப்பும்  நேரிடையாகவும், மறைமுகமாகவும் உதவி செய்கிறார்கள்.  2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி ராணுவத்தின் ரகசியப் பிரிவும், டெல்லி காவல்துறையினரும் இணைந்து நடத்திய சோதனையில் பிடிப்பட்ட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ சார்ந்த கேப்டன் சலீம் ஷபர் ஆஸாத் என்பவன் கொடுத்த தகவலாகும்.  மேலும் விசாரணையின் போது  கேப்டன் சலீம் ஷபர் ஆஸாத் சில ஆண்டுகள் பங்களாதேஷ் நாட்டில் இருந்ததாகவும்,  ஐ.எஸ்.ஐயின் உத்திரவுப் படி அவன் டெல்லிக்கு வந்ததாகவும் தெரிவித்தான்.

இந்த தருணத்தில் 22.7.2006-ம் தேதி டைம் ஆப் இந்தியா நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.  இந்தியாவின் பல பகுதிகளில் ஐ.எஸ்.ஐ 256 தொகுதிகளில் ஜிகாத் அமைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஐ.எஸ்.ஐ யைக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டு பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்து Directorate General of Forces Intelligence என்ற அமைப்பும் லஷ்கர் இ தொய்பா போன்ற இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மட்டுமில்லாமல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களுர், வாரணாசி, ஹைதராபாத் போன்ற இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.  இதன் காரணமாக 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களுரில் நடந்த குண்டு வெடிப்பும், 2006ம் ஆண்டு மார்ச் மாதம் வாரணாசியில் நடத்திய குண்டு வெடிப்பும், 1.6.2006-ம் தேதி நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தின் மீது நடத்திய தாக்குதலும் இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக 2006ம் ஆண்டு ஜீன் மாதம் மும்பை ரயிலில் நடத்திய குண்டு வெடிப்பும் சான்றாகும்.

ஜூம்மா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு:

14.4.2006ந் தேதி டெல்லியில் உள்ள ஜும்மா மஸ்ஜிதில்  இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தன.  இது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியாகும், டெல்லியில் முக்கியமான இடத்தில் உள்ளது.  ஏப்ரல் 14-ம் தேதி மாலை 5.26க்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் கை கால்கள் கழுவுகின்ற Wazoo Khana என்ற குளத்திற்கு அருகில் வெடித்தது.  இரண்டாவது குண்டு முதல் குண்டு வெடித்த இடத்திற்கு அருகில் சில நிமிடங்கள் கழித்து வெடித்தது.  நடந்த இரண்டு குண்டு வெடிப்புக்களிலும் 13க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள், ஒரு பாலிதின் பையில் இரண்டு வெடிகுண்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.  இந்த குண்டு வெடிப்பு நடந்த தினம் வெள்ளிக் கிழமை, சுமார் 1000 பேர்கள் நமாஸ் செய்வதற்கு வருகின்ற நேரத்தில் குண்டு வெடிப்பு நிகழந்துள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் நிகழந்தவுடன் எந்த அமைப்பும் இந்த செயலுக்கு பொறுப்பு ஏற்கவில்லை.  ஆனால் டெல்லி காவல்துறையினரின் விடா முயற்சி காரணமாக குண்டு வெடிப்பிற்கு முக்கிய குற்றவாளியாக இந்தியன் முஜாஹதின் அமைப்பினர் என்பது தெரிய வந்தது.

டெல்லி உயர் நீதிமன்ற தாக்குதல்: 

2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ந் தேதி டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் வெடித்த குண்டின் காரணமாக 13 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 91 பேர்கள் காயமடைந்தார்கள்.  இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருந்த ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமியா என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாகும்.  குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் அனைத்து மீடியாக்களுக்கும் ஒரு இமெயில் அனுப்பபட்டது.  2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்ற கட்டிடம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் குற்றவாளியான முகமது அப்சல் குருவிற்கு மரண தண்டனை விதித்ததை கண்டித்து இந்த குண்டு வெடிப்பு நடத்தியதாக இ மெயில் தெரிவித்தது. மேலும் அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்பிய இ மெயிலில் “Our demand is the repeal of the sentence. Otherwise, we will attack the major courts and the Supreme Court of India”.

து காஷ்மீர் முஸ்லீம்கள் நன்மைக்காக இந்த எச்சரிக்கை என எழுதப்பட்டிருந்தது.  இந்த குண்டு வெடிப்பைச் செய்த Wasim Akram Malik என்பவன் இந்தியன் முஜாஹதின் அமைப்பைச் சார்ந்தவன். இவனுக்கு உதவியாக Kishtwar   எனுமிடத்தை தலைமையாகக் கொண்டு செயல்படும்  லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமியா அமைப்பும் சேர்ந்து இந்தச் செயலைச் செய்தார்கள்.  குண்டு வெடித்து 50 நாட்கள் வரை விசாரணையை நடத்திய தேசிய புலானாய்வு அமைப்பினர் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியான வாசிம் அக்ரம் மாலிக் ஒரு யூனானி வைத்தியர் டாக்காவை சார்ந்தவன், டெல்லி உயர்நீதி மன்ற வளாகத்தில் குண்டு வெடிப்புச்  சம்பவம் நடத்த இந்தியன் முஜாஹதின் அமைப்பைச் சார்ந்த அமீர் அக்மல்(Amir Akmal), ஜகாங்கீர் ஷரோரி (Jahangir) ஆகிய இருவரும் வாசிம் சகோதரர் Junaid
என்பவன் உதவியுடன் டெல்லிக்கு கொண்டு வந்தார்கள்.

            டெல்லியில் நடந்த பல்வேறு பயங்கரவாதக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிமி, லஷ்கர் போன்ற அமைப்புகளின் பங்கு பெருமளவில்  உண்டு என்றாலும், இந்த இயக்கங்களைத் தூண்டிச் செயலாக்கிய ஒரு அமைப்பு உண்டு என்றால் அது ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமிய என்ற அமைப்பாகும்.  இதுவரை தரைமார்க்கமாகவே தங்களது திட்டங்களை செயல்படுத்தி ஜிகாதிகளை அனுப்பிக் கொண்டிருந்த பயங்கரவாத அமைப்புகள், கடல் மார்க்கமாகவும் தங்களது பயங்கரவாத தாக்குதலுக்கு ஆட்களை அனுப்பும் பணியை செய்தார்கள்.  இதற்காகவே லஷ்கர் அமைப்பில் புதிதாக ஆட்களைச் சேர்த்தார்கள். 10.3.2007-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் Rajauri மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட லஷ்கர் அமைப்பைச் சார்ந்தவனைக் கைது செய்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் கராச்சியிலிருந்து எட்டு பேர்கள் கொண்ட குழு கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு வந்ததாகவும், 3.1.2007-ம் தேதி காஷ்மீரிலிருந்து வெளியாகும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த செய்தியானது 600 லஷ்கர் அமைப்பினருக்கு கடல்வழி மார்க்கமாக தாக்குதல் நடத்தும் பயிற்சி அளித்ததாகவும், இவர்களுக்கு படகுகளை கையாளுவது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தன.  ஆகவே கைது செய்யப்பட்ட லஷ்கர் அமைப்பை சார்ந்தவன் கொடுத்த தகவலும், ஊடகங்களில் வெளிவந்த தகவல்களும் ஒன்றாகவே இருந்தன.

ஸ்லாமியப் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான ஆந்திரா, கர்நாடாக, மகாராஷ்ட்ரா, உத்திரபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, கேரள உட்பட  பல மாநிலங்களில் நடத்திய தாக்குதலுக்கு முக்கியக் காரணமான இயக்கம் சிமி என்பது பல்வேறு கால கட்ட விசாரணையில் தெரியவந்தது.  சிமி இயக்கம் இந்தியாவில் துவங்கிய இயக்கமட்டுமில்லாமல் தாக்குதலுக்கு உட்பட்ட இடங்களை தேர்வு செய்வதும், தாக்குதல் நடத்திய பின், நடத்தியவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் இவர்களின் முக்கிய செயலாகும்.  ஆனால் டெல்லியில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட இயக்கம் என குறிப்பிடுவது ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமியா, இந்த அமைப்புடன் அதிக அளவில் தொடர்பு கொண்ட ஹர்க்கத்-உல்-முஜாஹிதீன் என்ற அமைப்பும் முக்கியமானதாகும்.  முக்கிய இயக்கமாக கருதப்படும் இந்த இரு இயக்கங்களும் 1979ல் ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யா படையெடுத்த போது, ரஷ்யாவின் படையெடுப்பைத் தடுக்கவும், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியாகளை ஒன்று திரட்டுவதற்காகவும் துவக்கப்பட்ட இயக்கம் தான் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமியா.

டுத்த கட்டுரையில் டெல்லி குண்டு வெடிப்பு சம்பந்தமாக இன்னும் சில தகவல்களை பார்ப்போம் அதே நேரத்தில் இன்னும் சில இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகள் சம்பந்தமாக விளக்கமான செய்திகளையும் பார்ப்போம்.
(தொடர்கிறது..)