புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு

president-pm-pays-tribute-to-br-ambedkar_140414015806

சமஸ்கிருதம் என்றாலே அது தீட்டுப்பட்ட மொழிபோலவே நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். அது ஆரிய மொழி, பிராமணர்களின் மொழி, அது தமிழை அழிக்கும் மொழி என்றெல்லாம்கூட கருத்தை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறோம். தலித்துகளில்கூட அப்படியான ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனங்களில் இந்த எண்ணங்களைத்தான் பல நூறாண்டுகளாக வெள்ளைக்காரர்கள் செய்தார்கள், இப்போது திராவிட, கம்யூனிச, கிறிஸ்தவ, இஸ்லாமிய தேசவிரோத சக்திகள் இந்த எண்ணங்களைத்தான் தலித்துகளின் – மக்களின் மனங்களில் தொடர்ந்து விதைத்து வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் சமஸ்கிருதம் இந்த நாட்டின் மொழி. இம்மக்களின் மொழி. இன்று தலித்துகளின் பட்டியலில் உள்ள வள்ளுவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் வானியல், ஜோதிடம் போன்றவற்றில் மிகச்சிறந்த திறமைசாலிகளாக, புகழ்பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். பல்வேறு அரசர்களுக்கு நாள் குறித்து தரும் கணியன்களாக பணிபுரிந்துள்ளனர். சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெறாமல் ஜோதிடத்தையும், வானியலையும் தொழிலாகக் கொள்ள முடியாது. காலத்தையும் கணிக்க முடியாது.

இப்படி எல்லா மக்களுக்குமான மொழியாக இருந்த சமஸ்கிருதம் நாளடைவில் ஒரு சமுதாயத்திற்கான மொழியாக உருமாற்றம் பெற்றது வரலாற்றின் புதிர். ஆனால் ஒரு சில இடங்களில் தலித்துகள் சமஸ்கிருதம் பயின்றனர் என்ற விபரம் நமக்குக் கிடைக்கிறது. உதாரணத்திற்கு பறையரான க.அயோத்திதாசப் பண்டிதர், அவரின் பாட்டனார் போன்றவர்கள் சமஸ்கிருத மொழியில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர்கள். அதே சமயம் அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எம்.ஆர்.ஜெயகர் போன்றவர்களுக்கு சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க முடியாமல் ஆதிக்க சாதியினரால் துரத்தப்பட்ட சம்பவங்கள்தான் மிக மிக அதிகம்.

ஆனால் இதற்காக அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருத மொழியை வெறுத்து ஒதுக்கிடவில்லை. தம் சொந்த முயற்சியாலும் பண்டிதர்களின் துணைகொண்டும் சமஸ்கிருத மொழியைக் கற்றார். அவர் சமஸ்கிருத மொழியைப் பற்றி கூறும்போது ‘சமஸ்கிருதம் காவியங்களின் புதையல்; அரசியலுக்கு, த த்துவத்திற்கு, இலக்கணத்திற்கு இது தொட்டில்; நாடகங்களுக்கு, தர்க்க இயலுக்கு, திறனாய்வுக்கு இது ஒரு வீடு’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.1

சமஸ்கிருத மொழியின்மேல் அண்ணல் அம்பேத்கருக்கு என்றைக்குமே வெறுப்பில்லை. சமஸ்கிருத மொழி இந்த பாரத தேசத்தின்  மொழியாக, தேசிய மொழியாக வரவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். தனக்கு வாய்ப்புக் கிடைத்த போது அதை நிரூபித்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அரசியல் சட்ட நிர்ணய சபை விவாதத்தில் கலந்துகொண்ட அம்பேத்கர் பாரதத்தின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் வர வேண்டும் என்ற தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இது பற்றி பிடிஐ நிருபர், நீங்கள் சமஸ்கிருதத்திற்கு ஆதரவு தெரிவித்தீர்களாமே என்று அம்பேத்கரிடம் கேட்டபோது, ஆம், அதில் என்ன தவறு இருக்கிறது? என்று அந்த நிருபரைப் பார்த்து கேள்வி கேட்டார்.2

संस्कृत-संभाषण (जून-2003 ) 1

இந்த செய்தி அன்றைய எல்லா பத்திரிகைகளிலும் வெளியானது. தி சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் எனும் பத்திரிகைக்கு செப்டம்பர் 11, 1949 அன்று அளித்த பேட்டியில் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்: ‘சட்ட அமைச்சர் எனும் முறையில் அதிகார பூர்வமாக பாரத தேசத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும். என நான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன். ‘ 3

இதற்கு இரண்டுநாள் முன் நடந்த அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் பெடரேஷன் கூட்டத்திலும் அண்ணல் அம்பேத்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது B.P.மௌர்யா போன்ற சில உறுப்பினர்கள் எதிர்த்தனர். இது டாக்டர் அம்பேத்கருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. பின் B.P.மௌர்யா அவர்கள் என்சிஈஆர்டி-க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். தான் அப்போது அறியாமையினாலும் சமஸ்கிருத மொழியின்மேல் இருந்த வெறுப்பினாலும் அப்படி நடந்துகொண்டதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அண்ணல் அம்பேத்கரை பின்பற்றும் தலித்துகள் இன்றும் அறியாமையின் காரணத்தாலோ அல்லது இந்த தேசத்தின் எதிரிகள் கட்டமைத்திருக்கிற பொய்ப் பிரச்சாரத்தாலோ மயங்கி சமஸ்கிருதம் என்ற பொக்கிஷத்தை புறக்கணித்து வருகின்றனர். இதில் நஷ்டம் சமஸ்கிருத மொழிக்கல்ல.

 (இந்தக் கட்டுரை விஜயபாரதம் இதழில் வெளிவந்துள்ளது)

அடிக்குறிப்புகள்

1. 1947 ஏப்ரல் 13ஆம் நாள் நவயுகம் வெளியிட்ட அம்பேத்கர் சிறப்பு மலரில் பேராசிரியர் சத்தியபோத் ஹட்லிக் எழுதியது. (நூல் :டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, தனஞ்செய் கீர், தமிழாக்கம் – க.முகிலன், வெளியீடு :மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி.

2. The Hindu 11-9-1949

3. The Sunday Hindustan standard 11-9-1949

29 Replies to “புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு”

 1. In 1951 census in INDIA only 5000 people have sanskrit as their mother tonque.Before 150 AD there was no sanskrit inscriptions and No letters for that.The literature written in sanskrit all are after 450 AD.only.The authors of those literature also not born in a family related to sanskrit.All epics , or sastras now found in sanskrit versions are translated one.No schlors can dictate direct meaning for those sanskrit versions.They have to carry stories from one to another, as well as the theories.
  Sans krit = samas + kirutham. samas–good-making good– kirutham =done. that means it was made good. Prokrit= prok =earlier—kritham=done, earlier done script. sanskrit has 500 letters.In this world no language has this much letters. Sanskrit has 51 no vowels. so many pronunciation, itself shows it created to dodge the native people , in the name of GOD. which was hated by Hinduism.

 2. அண்ணல் அம்பேத்கர் ஒரு மாமேதை என்பது பலருக்கும் தெரியும். இந்நாட்டின் தேச தலைவரான அண்ணலை ஒரு ஜாதிக்குள் அடைத்துவிட்டனர் ஜாதி பேய்கள். எவ்வாறு பசும்பொன் தேவர் தேவர்களுக்கும், கர்ம வீரர் காமராஜர் நாடார்களுக்கும், வ.ஊ.சி பிள்ளைமார்களுக்கும் சொந்தமாகி போனார்களோ அதே போல நடுநிலையான அண்ணலும் தலித்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை போல ஒரு மாயையை உருவாக்கி விட்டார்கள். அண்ணல் பெயரை சொல்லி கட்சி நடத்தும் வளவங்களும், க்ரிஷ்ணசாமிகளும், ஜான் பண்டியங்களும் மற்றும் இவர்களது முகமூடிகளும் எப்போது கிழியும், தலித்கள் எப்போது உண்மைகளை உணர போகிறார்களோ அப்போது தான் நாடு சுபிட்ச மடையும் . ஜெய் ஹிந்த்.

 3. சமஸ்கிருதம் என்ற பொக்கிஷம்

  அண்ணல் அம்பேத்கரை பின்பற்றும் தலித்துகள் மட்டு மல்ல, தமிழ் சமுதாயம் கூட இன்று திராவிட, கம்யூனிச, கிறிஸ்தவ, இஸ்லாமிய தேசவிரோத சக்திகள், இந்த தேசத்தின் எதிரிகள் மற்றும் ஜாதியவாத சோரம்போன, இந்து ஒற்றுமையை விரும்பாத சுயநல தலித் கட்சிகளின் இடைவிடாத பொய்ப் பிரச்சாரத்தினாலே சமஸ்கிருதம் என்ற பொக்கிஷத்தை அறியாமல் உள்ளனர் . புறக்கணிக்கவில்லை.

 4. //Sans krit = samas + kirutham. samas–good-making good– kirutham =done. that means it was made good. //

  ?????
  and there is a difference between the names. pandiyan and paandiyan

 5. சம்ஸ்கிருத ஞான மரபு பற்றி அண்ணல் அம்பேத்கர் எவ்வளவு அக்கறையோடு இருந்தார் என்பதை வெளிப்படுத்தும் அற்புதமான, இன்றைக்கு அவசியம் தேவையான கட்டுரை..

 6. Shri S Dhanasekaran,
  Please do some basic research rather than swallowing whatever is written on the net. Sangam literature, oldest in tamil, is not as old as the Vedas. Sangam, (union) I believe is a Sanskrit word.
  Dhana Sekaran, I believe are Sanskrit worrds.

 7. வழக்கில் இல்லாத மொழியை பிரகாச படுத்துவதால் எவ்வித பலனும் இல்லை ஆங்கில மோகம் குறைந்தால்தான் பிராந்திய மொழிகள் வளரும் சமஸ்கிருதம் வளர முதலில் மலிவான அல்லது இலவசமாக வெளியீடுகள் அவசியம் பார்பனர்களை விட குறிப்பாக முஸ்லிம்கள் இம்மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர்கள் சம்ஸ்கிருத வல்லுனர்கள் தலித் சமுதாயத்துக்கு அவர்கள் இருப்பிடம் சென்று போதித்தால் மொழி வளரும்

 8. //பார்பனர்களை விட குறிப்பாக முஸ்லிம்கள் இம்மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர்கள்//

  எனக்குத் தெரிந்த வரை அகமதிய முஸ்லிம்கள் கொஞ்சம் சமஸ்க்ரிதம் பேசிக் கேட்டு இருக்கின்றேன். சமீபத்தில் ஒரு தமிழ் சினிமாவில் இஸ்லாமியர் ஒருவர்
  ‘ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் ‘ என்று சொல்லி அதற்கு விளக்கம் சொல்வார். ஒருவேளை இதை வைத்து நீங்கள் சொல்கிறீர்களோ என்னவோ தெரியவில்லை. வெளி மாகாணங்களில் எப்படியோ தெரியாது – ஆனால் தமிழ் நாட்டில் நீங்கள் சொல்கின்ற நிலை உண்டு என்று என்னால் கருத முடியவில்லை.

  தமிழில் கரை கண்ட இஸ்லாமிய அறிஞர்கள் பல உண்டு – அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

  //சம்ஸ்கிருத வல்லுனர்கள் தலித் சமுதாயத்துக்கு அவர்கள் இருப்பிடம் சென்று போதித்தால் மொழி வளரும்..//

  மிகவும் அற்புதமான யோசனை. ஆனால் தலைவர்கள் அனுமதிப்பார்களா? தவிரவும் நகரங்களில் சமஸ்க்ரிதம் யார் வேண்டுமானாலும் சுலபமாக செலவில்லாமல் கற்றுக் கொள்ளலாம். பல பேருக்கு இது ரொம்பவும் தெரியாது – தெரிந்தாலும் ( என் போன்றோர் ) பலர் அதை அலட்சியப் படுத்திவிடுகிறார்கள்.

 9. /சம்ஸ்கிருத வல்லுனர்கள் தலித் சமுதாயத்துக்கு அவர்கள் இருப்பிடம் சென்று போதித்தால் மொழி வளரும்..//

  சரி தலித் சமுகத்தை சார்ந்தவர்கள் சமற்க்ருதம் கற்றுக்கொள்வதால் என்ன பயன் அவர்களுக்கு. ஒரு தலித் சமுகத்தை சேர்ந்தவர் நன்றாக சமற்க்ருதம் பேசுகிறார், வடமொழி மந்திரங்களை நன்கு உச்சரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு தாழ்த்தப்பட்டவர் என்கிற கரை நீங்கி ,கருவறை வரை சென்று இறைவனின் திருமேனியை தொட்டு பூஜிக்கும் அர்ச்சகர் ஆகும் பணி கிடைத்து விடுமா? தலித் என்கிற சமுக இழிவு நீங்கி விடுமா கூறுங்கள்!!!!! நன்றாக வடமொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை பார்த்து ” ஆஹா!! இந்த ஆதி திராவிட இளைஞன் ஆதி சங்கரரை காட்டிலும் அற்புதமாக சமற்க்ருத மொழியை பேசுகிறானே என்று புளங்காகிதம் அடைந்து எந்த பிராமணனாவது அல்லது மேல் சாதி இந்துவாவது தன் வீட்டு பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க முன்வருவானா? இப்படி எதற்குமே பயனில்லை என்றால் பின்பு எதற்க்காக ம.வெங்கடேசன் அம்பேத்கரின் பெயரால் இங்கு வந்து சமஸ்க்ருதத்தை “Marketing” செய்ய வேண்டிய அவசியம் என்ன?.ஆகவே,அம்பேத்கர் கூறிவிட்டார் என்பதற்காக அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதற்க்கு திரு.ம. வெங்கடேசன் அவர்கள் திறந்த மனதோடு நேர்மையாக பதில் அளித்தால் மிக உத்தமமாக இருக்கும்.

 10. Here, we need big discussion over here. First of all, Sanskrit is communication language before Islamic invasions ie (before 1200 CE) .Even , Great Tamil Poet like Kambar, ottakutthar are all known Sanskrit well both are not belongs to Brahmin community. Even ,at the end of Vijyanagara
  Empire, Sanskrit is communication in South India. Only beginning of British Empire, English replaced Sanskrit. In North India, after Islamic Invasions( 1200 to 1700 CE) , Persian Language is court Langua ge. But,Again Maratha Empire (1700 CE to 1800 CE), Sanskrit became communication Language.
  Even in Tamil Nadu, many people belongs to chettiyar, pillai, valluvan communites knew Sanskrit.well. Srinugeri matt Leader clearly said Sanskrit is not Brahmins Language. Sanskrit Language is Hindu culture Language. All Dharama religions (Shiva,vishnu,buddha,jain) religions using Sanskrit. If Sankrit become common Language, no one can dominate other languages.

 11. திரு இராமா,

  சமஸ்கிருதம் என்பது பிராக்கிருதம் என்று சொல்லப்பட்ட பலவேறு பகுதி மக்கள் வழக்கினை , தெளிவு படுத்தும்பொருட்டு, அவற்றை செம்மையாக்கி இலக்கணம், இலக்கியம், நாடகம், இசை என்று வகுத்து பல்வேறு தளங்களில் அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட மொழி. அதற்கு தந்தை பாணினி என்பார். நீங்கள் சொல்லும் வேதம் என்பது சிவபிரானின் உடுக்கையில் பிறந்த சந்தஸ் என்ற மொழியை சேர்ந்தது. தமிழும், வட மொழி எனப்படும் சந்தஸ் ஸும் , சிவபிரானின் உடுக்கையின் இருபக்கத்திலிருந்தும் ஒரே காலக் கட்டத்தில் வெளிவந்தவை. இரண்டும் உடன் பிறந்த சகோதரிகள். சந்தஸ் வெறும் இறைத்துதிகளை மட்டுமே தன்னகத்தில் கொண்டது. சமஸ்கிருத மொழியின் இலக்கணம் வேத மந்திரங்களுக்கு பொருந்தாது என்பதில் இருந்தே, சமஸ்கிருதம் இன்றைக்கு சுமார் 5000 ஆண்டு வரலாறு மட்டுமே உடையது என உணரலாம். ஆனால் தமிழும், சந்தசும் கால எல்லைக்குள் வரையறுக்க முடியாத அளவு பழமையானவை. தமிழிலும், சந்தசிலும் காலத்தால் அழிந்த சாகைகள் ஏராளம். ஒரு சாகை என்பது தமிழ் மற்றும் சந்தசில் இருந்த வேடங்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே. அழிந்தது போக எஞ்சி இருப்பவை சிலவே. தமிழ் சமஸ்கிருதத்தைவிட மிக மிக பழமையானது. கடல் கொண்ட அகத்தியமே தமிழின் முதல் நூல். அகத்தியம் அழிந்ததால், சமஸ்கிருதம் தமிழை விட பழைய மொழி என்று ஆகிவிட முடியாது. திராவிட பொய்யர்கள் அடிக்கும் பித்தலாட்டக் கூத்துக்களை பார்த்து , தமிழை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திராவிடம் என்பது பித்தலாட்டங்களின் தொகுப்பு. ஆனால் தமிழோ ஆன்மீக சிறப்பு கொண்டது. திராவிடம் தமிழின் எதிரி. ஆனால் தமிழ் ஒரு ஆன்மீக மொழி. இந்த வேறுபாடுகளை புரிந்துகொண்டால், திராவிடம் வேறு, தமிழ் வேறு என்பதை நன்கு உணரமுடியும்.

 12. Sangam literature ( last Sangam) is not the oldest of tamil literary works.Tholkaappiyam ,is the earliest of available grammar and literature in Tamil. In that , there are ample references of availability of many earlier literary works in Tamil and loss of those literary works in aazhippEralai ( tsunami). As such , the issue of Tamilised Sanskrit words or Sanskritised Tamilwords is solved automatically if the theory that Sanskrit had been cultured fron Tamil is taken into account, which has accepted by many scholars. Linguistic scholars like Dr. sunith Kumar Chatterjee had stated that Vedas contain so many Tamil Words. We are averse to certain realities which is the root cause of the problems.

 13. Shri Athvika, PRIMARY EVIDENCE please on the antiquity of Tamil over Vedic Sanskrit or whatever you want to call it. I’m not in anyway putting down the great Tamil language. I am a tamilian first and foremost but we all got to accept that Vedas are the oldest work known to mankind .

 14. //அண்ணல் அம்பேத்கரை பின்பற்றும் தலித்துகள் இன்றும் அறியாமையின் காரணத்தாலோ அல்லது இந்த தேசத்தின் எதிரிகள் கட்டமைத்திருக்கிற பொய்ப் பிரச்சாரத்தாலோ மயங்கி சமஸ்கிருதம் என்ற பொக்கிஷத்தை புறக்கணித்து வருகின்றனர். இதில் நஷ்டம் சமஸ்கிருத மொழிக்கல்ல.//

  ஆசிரியர் ம. வெங்கடேசன் அவர்களே……….

  தலித் சமுகத்தை சார்ந்தவர்கள் சமற்க்ருதம் கற்றுக்கொள்வதால் என்ன பயன் அவர்களுக்கு. ஒரு தலித் சமுகத்தை சேர்ந்தவர் நன்றாக சமற்க்ருதம் பேசுகிறார், வடமொழி மந்திரங்களை நன்கு உச்சரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு தாழ்த்தப்பட்டவர் என்கிற கரை நீங்கி ,கருவறை வரை சென்று இறைவனின் திருமேனியை தொட்டு பூஜிக்கும் அர்ச்சகர் ஆகும் பணி கிடைத்து விடுமா? தலித் என்கிற சமுக இழிவு நீங்கி விடுமா கூறுங்கள்!!!!! நன்றாக வடமொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை பார்த்து ” ஆஹா!! இந்த ஆதி திராவிட இளைஞன் ஆதி சங்கரரை காட்டிலும் அற்புதமாக சமற்க்ருத மொழியை பேசுகிறானே என்று புளங்காகிதம் அடைந்து எந்த பிராமணனாவது அல்லது மேல் சாதி இந்துவாவது தன் வீட்டு பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க முன்வருவானா? இப்படி எதற்குமே பயனில்லை என்றால் பின்பு எதற்க்காக ம.வெங்கடேசன் அம்பேத்கரின் பெயரால் இங்கு வந்து சமஸ்க்ருதத்தை “Marketing” செய்ய வேண்டும்?.ஆகவே,அம்பேத்கர் கூறிவிட்டார் என்பதற்காக அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதற்க்கு திரு.ம. வெங்கடேசன் அவர்கள் திறந்த மனதோடு நேர்மையாக பதில் அளித்தால் மிக உத்தமமாக இருக்கும்.

 15. @Aativka,

  I like your arguments. Still many Tamil Savaties hate vedas. But you are different. SIVA has one of the name Veda Nayakan meaning Leader of Vedas. If anybody disagree with Vedas, he would not be either Saivaites or Vasinavties endorsed by all Shiva agamas and Vasinava Agamas.

 16. சமஸ்கிருதம் யாரும் படிக்கலாம்.அனைவரும் படிக்க வேண்டும். அா்ச்சகா் வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் படிக்கலாம். அா்ச்சகா் வேலைக்கு பல கோவில்களில் ஆள் இல்லை. எனவே அா்ச்சகா் பணி கிடைக்கும். முற்றிலும் பாா்ப்பனா்கள் ஆதிக்கத்தில் உள்ள கோவில்கள் தமிழநாட்டில் மிகக் கொஞசமே.மீதமுள்ள கோவில்களில் முயற்சிக்கலாம்.ஒரு யாதவா் சமஸ்கிருதம் கற்றாா்.தற்சமயம் திருச்செந்தூா் வட்டம் நயினாா்பத்து அருள்மிகு பொன் அய்யனாா் திருக்கோவிலில் அா்ச்சகராக உள்ளாா்.

 17. Shri தாயுமானவன்
  I am sorry Sir but you are going off in a tangent regarding the Sanskrit language and on the views of the author. I do admit that I also side tracked with my earlier comments, though it was in response to someone else’s view.
  Learning Sanskrit will enlighten one intellectually and will clear one’s clogged up mind. It will sharpen their thinking.
  But, whether it will get a Dalit a Brhamin wife (usual Brhamin bashing, I was waiting for this) or a CEO of a MNC is entirely another matter. Learning Sanskrit is educational, cerebral and it will give a clear perception of Indian ( Hindu) culture. Its is not going to solve the social problems of the society.

 18. கூடிய விரைவில் புரட்சியாளர் அம்பேத்கர் ”ஹிந்து மதமே சிறந்த மதம், நான் வாழும்வரை ஹிந்துவாக இருப்பேன், சாகும்போது இந்துவாகவே சாக விரும்புகிறேன்” என்று கூறினார் என எழுதி மங்கலம் பாடிவிடலாம். அதற்கும் நான்கு பேர் ஆமாம்…ஆமாம்… உண்மை என பல பதிலிடலாம். மொத்தத்தில் எனக்கு பொழுதுபோகும்.

 19. திருவாளர் தாயுமானவன் என்ற ”தமிழ் காவலருக்கு” யாராவது சமஸ்கிருதத்தை புகழ்ந்து பேசிவிட்டால் உடனே அவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடும். அந்த அளவிற்கு அவருக்கு தமிழ் மீது காதலோ காதல். ஆனால் பாருங்கள் அவர் ”தலித்” என்ற சம்ஸ்கிருத வார்த்தையை பயன்படுத்துவார். ஏன் அந்த வார்த்தைக்கு ஈடான தமிழ் வார்த்தை கிடையாதோ? இருந்தாலும் அதை பயன்படுத்த மாட்டாரோ? Marketing என்று ஆங்கிலத்தில் எழுதுவார். ”ஆஹா” என்று வடமொழி எழுத்தை (=ஹா) பயன்படுத்துவார். சமற்க்ருதமா? சமஸ்கிருதமா? எது சரி?

 20. அம்பேத்கார் அவர் வாழ்ந்த காலத்தில் புத்த மதத்தை தழுவினார் என்பது உண்மை என்றாலும், அவரது எழுத்துக்களை முழுவதும் வாசித்தோருக்கு தான் அவர் மதமாற்றங்களை பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார் என்பது தெளிவாக தெரியும். புத்தம், ஜைனம் இரண்டுமே இந்துமதத்தின் பல்வேறு கிளைகளில் இரண்டு – அவ்வளவுதான்.

  கேரளாவில் திரு நாராயண குரு அவர்கள் எழவா பிரிவினரை முன்னேற்ற அவர்களுக்கு என்று தனியாக ஏராளம் சிவன்கோயில்களை நிறுவினார். அந்த கோயில்களில் எழவா பிரிவினரையே பூஜகர்களாக பணியாற்ற செய்தார். அவர் நிறுவிய கோயில்களின் விளைவாக , முற்பட்ட சாதியினரும் அந்த கோயில்களில் வந்து வழிபட ஆரம்பித்தனர். அது தான் உண்மையான சீர்திருத்தம். யாராயினும் இருக்கும் இடத்தை விட்டு ஓடக்கூடாது. சீர்திருத்தங்கள் வேண்டி போராடி வெற்றி பெறுவதே முறை. நாம் போகும் இடத்தில் மட்டும் நியாயம் கிடைக்கும் என்பது என்ன நிச்சயம் ? அப்புறம் அங்கிருந்தும் மூன்றாவதாக வேறு ஒரு இடத்துக்கு போவது என்று ஆரம்பித்தால், இதற்கு முடிவு தான் என்ன ?

  நாராயண குரு செய்தது தான் உண்மையான சீர்திருத்தம். இப்போது இருக்கும் மதங்களில் ஹிந்து மதமே சிறந்த மதம். ஏனெனில் கருத்து, சிந்தனை சுதந்திரம் உள்ள மதமே இது ஒன்றுதான். புதிய சிந்தனைகளுக்கு தடை இல்லை. மேலும் தனி நபர் விருப்பத்துக்கு ஏற்றவாறு , வழிபாட்டு முறைகளில் முழு சுதந்திரம் உள்ளது. இங்கு நரகத்தில் தள்ளும் கடவுள் யாரும் கிடையாது. மேலும் வேதங்களை ஏற்காத நாத்திகர்களுக்கும் கூட இந்துமதத்தில் இடம் உண்டு. அவர்கள் அந்த காலத்தில் அவைதிகம் – என்று அழைக்கப்பட்டனர். சார்வாக கருத்துக்களை மதிக்கும் ஒரே மதம் உலகிலேயே இந்து மதம் தான். எனவே, இப்போது உலகில் உள்ள பல மதங்களிலும் இந்து மதமே சிறந்ததாக காணக்கிடக்கிறது. இந்த உண்மை புரியாத சில மானிடரை நினைத்து நாம் பரிதாபப் படத்தான் முடியும்.

 21. தாயுமானவன் …..

  வேடிக்கையாக இருக்கிறது உங்கள் வினாக்கள், உங்களுக்கு அது வாடிக்கைதான்.

  தங்கள் சில பல கருத்துக்களை நானே ஆதரித்திருக்கிறேன். சமத்துவம் குறித்த கருத்துக்கள் எவருக்குமே ஏற்புடையவைதான். தங்களது தற்போதைய வினாக்களுக்கு வருவோம்:
  கேள்வி:
  அவருக்கு தாழ்த்தப்பட்டவர் என்கிற கரை நீங்கி ,கருவறை வரை சென்று இறைவனின் திருமேனியை தொட்டு பூஜிக்கும் அர்ச்சகர் ஆகும் பணி கிடைத்து விடுமா? தலித் என்கிற சமுக இழிவு நீங்கி விடுமா கூறுங்கள்!!!!!

  பதில்:
  சமஸ்கிருதம் படிக்காவிட்டால் இதே பணி கிடைத்துவிடுமா? ஆக, சமஸ்கிருதம் படிப்பதும் படிக்காததும் இந்தப் பணியுடன் தொடர்புடையன அல்ல.
  தாழ்த்தப்பட்டவர் என்ற கறை நீங்குவது சமுதாயம் தொடர்புடையது. அது நீங்கத்தான் அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருதம் படித்து, ஹிந்து மதத்தின் புனித நூல்களைப் படித்து ஆராய்ந்து வரலாற்றுப் பூர்வமாகவும், நடமுறை சார்ந்தும் பல ஆராய்ச்சி நூல்களை எழுதி வைத்தார். அண்ணல் அம்பேத்கரின் உண்மையான தொண்டர்கள் சிலர் நடத்தி வந்த http://www.ambedkar.org என்ற தளத்தில் அவற்றைப் பதித்து பொதுநல நோக்கில் சிலர் அதை நடத்தி வந்தனர். பணம் தட்டுப்பாட்டால், அந்தத் தளத்தை இப்போது மாயாவதியிடம் கொடுத்துவிட்டனர். அந்தத் தளம் சிறிது சிறிதாக மாயாவதி, கன்ஷிராம் புகழ் பாட ஆரம்பித்து விட்டது. இனி அம்பேத்கர் அவ்வளவுதான்.

  எனவே முழுவதும் கெடும் முன் அந்தத் தளத்தில் சென்று அண்ணல் பார்வையில் கறை எப்படி ஏற்பட்டது எனப் படித்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக, அவர் சொல்வது மாட்டுக் கறி உண்பவர்கள்தான் தீண்டத் தகாதவர்களாக ஆக்கப் பட்டனர் என்பதுதான், எனவே கறை நீங்க அவர் சொன்ன “surf excel ” மாட்டுக் கறி உணவை விடுவதுதான். ஆனால், அதைச் சாப்பிட்டால்தான் பகுத்தறிவு கிடைக்கும் (வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு வருவது போல) என்று வீரமணி சொல்வதை நீங்கள் ஆதரித்தாலும் ஆதரிக்கலாம்.

  மற்றபடி, கண்டிப்பாகக் கருவறை சென்று இறைவனின் திருமேனி தொட்டுப் பூஜை செய்யும் வாய்ப்பு உண்மையான பக்தனுக்குக் கிடைக்கும், அதில் ஐயம் ஏதுமில்லை. எம் போன்றவர்கள் “மேச்சாதி” என்றழக்கப்படும் சாதியில் பிறந்தாலும், எமக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காததன் காரணம் சமஸ்கிருதம் அறியாதது என நாங்கள் கருதவில்லை, ஏனெனில் அதற்குத் தக்க பக்தி எமக்கு முற்பிறவியிலோ, இப்பிறவியிலோ இல்லை என்று உணர்ந்திருக்கிறோம். கண்ணப்ப நாயனார் போன்ற பக்தி இருந்திருந்தால் வாயால் அபிஷேகித்தாலும், காலால் பூச்சார்த்தினாலும் எம் அய்யன் தாயுமானவர் ஏற்பார் என்பது உணர்ந்திருக்கிறோம்.

  எனவே, இறைத் திருமேனியைத் தொடத் தக்க வாய்ப்பு வருமளவுக்குப் பக்திவேண்டுமே அல்லாது மொழி அவசியம் இல்லை. உடனே ஏன் இந்த மொழியில்தான் அர்ச்சிக்கவேண்டும் என்ற பாட்டுக்குத் தாவவேண்டாம். அது நம்பிக்கையின் பாற்பட்ட பாரம்பரியப் பழக்கம் மட்டுமே.

  கேள்வி:

  நன்றாக வடமொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை பார்த்து ” ஆஹா!! இந்த ஆதி திராவிட இளைஞன் ஆதி சங்கரரை காட்டிலும் அற்புதமாக சமற்க்ருத மொழியை பேசுகிறானே என்று புளங்காகிதம் அடைந்து எந்த பிராமணனாவது அல்லது மேல் சாதி இந்துவாவது தன் வீட்டு பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க முன்வருவானா?

  பதில்:

  “ஆதி சங்கரரைக் காட்டிலும் அற்புதமாக சமஸ்கிருதம் பேசுவது” என்பதை ஒரு உவமைக்குக் கூடக் கூறாதிருத்தல் எனது பார்வையில் நற்பண்பாகும்.ஏனெனில், ஆதி சங்கரர் சமஸ்கிருதம் பேசுவதை நாம் எவரும் கண்டிருக்கும் வாய்ப்பில்லை. அப்படியே கண்டிருந்தாலும் கூட அது சிறப்பாக இருக்கிறதா என்று தீர்மானிக்கும் அளவுக்கு நமக்கு அறிவு இருக்குமா என்ற கேள்விக்கு அனைவருக்கும் விடை தெரியும்!

  நிற்க, நடைமுறையில் நன்றாக சமஸ்கிருதம் பேசுவதற்காக எவரும் தமது மகளைக் கல்யாணம் செய்து தரும் அளவுக்கு இன்றைய சமுதாயம் வளர்ந்து விடவில்லை! எனவே இந்தக் கேள்வி எந்த வகையிலும் “ஆகாவழிக் கேள்வியாகவே” அதாவது விதண்டாவாதமாகவே இருக்கிறது.

  நடைமுறையில் இப்போது வைணவச் சுடராழி ஜோசப் பற்றி அறிந்திருப்பீர்கள்.

  அவருக்கு இருக்கும் சமஸ்கிருத அறிவும், வைணவ மறை நூல்களில் உள்ள அறிவும் உலகறிந்தது. அவர் கிறிஸ்தவர்தான். ஆனால் வைணவத் சென்னை பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட பல திருக்கோயில்களில் அவரது ஆன்மீகப் பேருரைகளை பக்தியுடனும், பணிவுடனும் ஆயிரக்கணக்கான அந்தணர்கள் வணங்கிக் கேட்பதை நீங்கள் இன்னமும் காணலாம். வைணவப் பெரியோர்களான ஜீயர் சுவாமிகள் போன்றோர் அவருக்கு மரியாதை செய்து பட்டம் கொடுத்திருக்கிறார்கள். எவரும் அவரை ஹிந்து இல்லை என்று நினைப்பது கூட இல்லை.

  எனவே, நடைமுறையில் இப்போது உள்ள சான்று: சமஸ்கிருதம் படித்து, மறை நூல்களைப் படித்து, பக்தியும் இருக்குமானால், நிச்சயமாக திருக்கோயில்களிலேயே சிறப்புச் செய்யப்படும் அளவுக்கு வர முடியும். சந்தேகம் இருந்தால் வைணவச் சுடராழி ஜோசப் அவர்களின் அடுத்த ஆன்மீக உரை நடக்கும் திருக்கோயில் சென்று காண்க.

 22. ம வெங்கடேசனுக்கு அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

 23. “நான் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் ” என்று புரட்சியாளர் அம்பேத்கார் அவர்கள் மனம் வெதும்பிக் கூறியதைப் பற்றியும் , அந்த நிலை இன்று மாறிவிட்டதா என்பது பற்றியும் எழுதுங்கள்.

 24. Shrimati Advika

  We had discussed this topic earlier also.

  A few to you.

  Is Ramayanam Samskrutam or Prakrutam. What about mahabharatam, puranams. All these were written before Panini

  Bhaasaas Natakams were written well before Panini. Bagavad Geetha was written before Panini. What language are these written in.

  Panini is a vyakarana kartha. there were manay vyakaranam before Panini. aindariya vyaakaranam (done by Indra) was the first vyakaranam. (tolkappiyar also says that he has written tamizh vyaakaranam based on Aindariya vyaakaranam)

  this samskrutam coming from prakrutam does not gel well. this is the same spin given by dravida kanmanis.

  the language itself was not newly put together by panini, it got more tight and well defined after Panini’s ashtaadyaayi vyaakaranam.

  indra chandraha kasha-krutsnaha apihaalee, shaakataayanaha, paanini amaraha jainedraha – these are the famous early samskrit grammarians.

 25. pandiyan,

  from where did you get this great deal of facts. These are extremely funny

  firstly it is not samas + krutam. It is Samyak Krutam. BY this it does not mean it was bad earlier. It was made the best ever grammar. To this date there is not a grammar better than this.

  You are talking like a kid by saying no works on samskrit existed before 450 AD. Panini himself was born in 8th century BCE. Nagarjuna is a samskrit scholar he was a Buddhist – he has written works in samskrit. His period is 3rd Century BCE. there are documented proofs for this.

  Why are cutting and pasting arguments that you read in some cheap blogs written by people who do not bother to even do a cursory reading about samskrit. there are well researched books on the history of samskrit.

  Well, what proofs do you have for the statements you make.

  Ashvagosha a famous samskrit poet lived during 1st century AD – there are proofs for this.

  Kalidasa’s first play is Malavika Agnimitram. In this he refers to himself as the Living poet (first act). He also refers to Agni Mitra as the ruler. Agni mitra was the son of Pushya Mitra who was the first sunga leader in First century BC.

  Was Kalida a Urudu Poet. Or do you want to call him a tamizh poet just because Vaali has used Kalidasaa’s name in many of his songs.

  I request you to do some decent readings before writing something

 26. தனசேகரன் அவர்களே ,

  இத பத்தியும் விஜய பாரத்திலே எழுதி இருக்காங்க . வாங்கி படிக்கலாமே ,

 27. //
  //சம்ஸ்கிருத வல்லுனர்கள் தலித் சமுதாயத்துக்கு அவர்கள் இருப்பிடம் சென்று போதித்தால் மொழி வளரும்..//

  மிகவும் அற்புதமான யோசனை. ஆனால் தலைவர்கள் அனுமதிப்பார்களா? தவிரவும் நகரங்களில் சமஸ்க்ரிதம் யார் வேண்டுமானாலும் சுலபமாக செலவில்லாமல் கற்றுக் கொள்ளலாம். பல பேருக்கு இது ரொம்பவும் தெரியாது – தெரிந்தாலும் ( என் போன்றோர் ) பலர் அதை அலட்சியப் படுத்திவிடுகிறார்கள்

  //

  இது சிறிய அளவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது . ஒரு தலித் விவசாயி மகன் சமஸ்க்ருதம் கற்றுக் கொண்டு சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற பாடசாலைக்கு சென்று அங்குள்ள சிறுவர்களுக்கு சமஸ்க்ருத ஆரம்ப பாடம் நடத்தியுள்ளார்.

  மரமேறி வழி வந்த ஒருவர் தானும் சமஸ்க்ருதம் கற்றுக் கொண்டு சமஸ்க்ருத வளர்ச்சிக்காக பிரச்சாரத்திற்காக தன வாழ்வை arpaniththullaar. அவரது மகள் பாண்டிச்சேரியில் ஒரு பள்ளிக் கூடத்தில் சமஸ்க்ருத ஆசிரியராக உள்ளார்.

  இது மாதிரி பலர் நம் கண்ணில் படாமால் வேலை செய்து கொண்டு தான் உள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *