இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!

இன்று (11-09-2008) மகாகவி பாரதியார் நினைவு நாள்!

Mahakavi Bharati

தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள் இது.

அரசியல், ஆன்மீகம், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, நகைச்சுவை என்று அவன் தொடாததில்லை. தொட்டுத் துலங்காததில்லை.

ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். அந்த ஞானத்தால் தமிழை வளப்படுத்தினான்.

இதே செப்டம்பர் 11ஆம் நாளன்றுதான் வீரத்துறவி விவேகானந்தன் பாரதத்தின் ஞானதீபத்தால் சர்வமதப் பேரவையில் ஒளிபெருகச் செய்தான். அந்த விவேகானந்தனின் சிஷ்யை நிவேதிதா ஒருவகையில் பாரதிக்கு குரு ஆயினள்.

மகாகவிஞர்கள் மறைவதில்லை. அவர்களை மறப்பதும் சாத்தியமில்லை.

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம்
புலவோர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித்
துலங்கு வாயே!

என்று பாரதி உ.வே.சாமிநாதையரைக் குறித்துப் பாடியதை பாரதிக்கே அஞ்சலியாகச் சமர்ப்பிக்கிறோம்.

5 Replies to “இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!”

 1. Today is also the day on which Swami Vivekananda gave his historic speech “Sisters and Brothers of America….” at Chicago’s World Parliament of Religions !

 2. “இதே செப்டம்பர் 11ஆம் நாளன்றுதான் வீரத்துறவி விவேகானந்தன் பாரதத்தின் ஞானதீபத்தால் சர்வமதப் பேரவையில் ஒளிபெருகச் செய்தான். அந்த விவேகானந்தனின் சிஷ்யை நிவேதிதா ஒருவகையில் பாரதிக்கு குரு ஆயினள். ”

  மன்னிக்கவும், முதலில் நான் இதை படிக்க தவறிவிட்டேன்.

  ஓரு திருத்தம் . சுவாமி விவேகானந்தர் நம் குரு. அவரை ஒரு கவிஞனை குறிப்பிடுவதை போல் “விவேகானந்தன்”, “செய்தான்” என்று ஏக வசனத்தில் அழைப்பது வருத்தம் அளிக்கிறது..திருத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 3. //Today is also the day on which Swami Vivekananda gave his historic speech “Sisters and Brothers of America….” at Chicago’s World Parliament of Religions!//

  மேலே உள்ல பாரதி அஞ்ஜலியில் சிகாகோ உறையைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுல்ளதே. கவணிக்கவில்லையா?

 4. 9/11 – ஹிந்துஸ்தானம் அமெரிக்காவிற்கு அனுப்பிய விவேகானந்தர் மனித வாழ்வை உயர்த்திய தினம்

  9/11 – இஸ்லாம் அமெரிக்காவிற்கு அனுப்பிய தீவிரவாதம் மனித வாழ்வை கேவலப்படுத்திய தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *