இந்தியாவில் செயல்படும் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும், ஜிகாத்திற்காக சேர்க்கப்படுபவர்களின் குடும்பத்திற்கு நிதி கொடுக்கவும், மேற்படி நிதி எவ்வாறு கிடைக்கிறது என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஆரம்ப காலங்களில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு மட்டுமே நிதி கிடைத்து வந்தது. பின்னர் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஜீ –இ-முகமது, சிமி, இந்தியன் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் எவ்வாறு தொடர்ந்து நிதி கிடைத்தது என்பது பற்றியும் ஆய்வு செய்வோம்.
பொருளாதார பயங்கரவாதம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய பொருளாதாரத்தை சீர்குழைக்கும் விதமாக, கள்ள நோட்டுகளை இந்தியாவில் அதிக அளவில் புழகத்தில் விடுவதிலும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ஆயுதங்கள் வாங்குவது பற்றியும் இந்தக் கட்டுரையில் சற்று விரிவாக பார்க்கலாம்.
இஸ்லாமிய நாடான சௌதி அரேபியாவிலிருந்தும், இரண்டாவதாக — பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்ட கள்ள நோட்டின் காரணமாகவும், மூன்றாவது — பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயிரப்படும் கஞ்சா, அபீன் போன்ற போதைப்பொருள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதின் மூலமகாவும் கிடைக்கும் நிதியிலிருந்தும் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைக்கிறது.
இந்தியாவில் இயங்குகின்ற அனைத்து இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்கும், பெருவாரியான நிதியானது, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐயின் மூலமாகவே துவக்க காலங்களில் கிடைத்தது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலகமாக கிடைத்தது போலவே, உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகள் இநதியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு, இஸ்லாமியத் தொண்டு அமைப்புகள் மூலம் தாங்கள் பெறும் நிதியிலிருந்து குறிப்பிட்ட சதவீத நிதி வழங்கியது ஆய்வின் போது தெரியவந்தது.

துவக்க காலங்களில் தொண்டுநிறுவனங்கள் அளிக்கும் நிதியானது அல்கயிதா அமைப்பின் மூலமாகவே மற்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக தெரிவிக்கிறார்கள். ஓசமா பின்லேடன் உயிருடன் இருந்த வரை, அவர் மூலமாகவே நிதியானது அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.
இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைக்கும் வழிகள் (1) போதை மருந்து கடத்தல் (2) தொண்டுநிறுவனங்கள் மூலம் பெறப்படும் நிதி (3) திருடுதல் மற்றும் கொள்ளையடித்தல் (4) மிரட்டி பணம் பறித்தல் (6) கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவது, போன்ற வழிகளில் நிதி கிடைக்கிறது. இந்த வழிகளில் கிடைக்கும் பணம் பல்வேறு சந்தர்பங்களில் ஹவாலா பண பரிவர்த்தனை மூலமாகவே பல்வேறு நாடுகளில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு அனுப்பபடுகிறது.
இந்தியாவில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன், சிமி, போன்ற இயக்கங்களும், காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பெயர்களில் உலாவரும் பயங்கரவாத இயக்கங்களுக்கு துவக்கத்தில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. நிதி உதவியை செய்தது, பின்னர் அல்கயிதாவின் பின்லோடன் மூலமாகவும் இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைத்தது .. உலகில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு எவ்வாறு நிதி கிடைக்கிறதோ அதே வழியில் தான் இந்தியாவில் இருக்கின்ற பயங்கரவாத இயக்கங்களுக்கும் நிதி கொடுத்து வந்த நாடு சௌதி அரேபியா, மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் நிதி கொடுப்பதில் தொடர்பு உண்டு. மேலே குறிப்பிட்ட வழிகளில் கிடைக்கும் நிதியை மட்டும் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவை போலவே, பங்களாதேஷ் நாட்டிலிருந்து செயல்படும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி என்ற அமைப்பினருக்கும் நிதியானது முதலில் ஐ.எஸ்.ஐ. மூலமாகவும், பின்னர் அல்கயிதா அமைப்பினர் மூலமாகவும் தொடர்ந்து நிதி கிடைத்து வந்த்து. இந்த அமைப்பினர் தான் இந்தியாவில் உள்ள இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன், லஷ்கர் அமைப்பினருக்கு ஆட்கள் சேர்க்கின்ற பொறுப்பும் கொண்டவர்கள். ஆனவே இந்த அமைப்பினருக்கு எவ்வாறு நிதி கிடைக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
போதைப்பொருள்கள் கடத்தல்:
பொதுவாக இஸ்லாமியர்கள் மது, போதை மருந்து முதலியவற்றை கையால்கூடத் தொடமாட்டோம், அல்லா அவற்றை ஒதுக்கியுள்ளார் என்றெல்லாம் பெருமையாகப் பேசுவார்கள், பெரிய தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள்.
தற்போது, இஸ்லாமியப் பயங்கரவாத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு, அந்தந்த நாட்டின் சட்டங்களை மீறியும், தார்மீக விதிமுறைகளை புறக்கணித்தும், மனித நேயங்களைத் குழித் தோண்டி புதைத்து விட்டு, சமூகத்தை சீர்குலைக்க வேண்டும், உலகை அல்லா ஒருவரே ஆள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுவதால், இம்மாதிரியான ஈனத் தனமான செயல்களுக்கு நிதி தேவைப்படுகிறது,
ஆகவே இந்த நிதியை பெற கையான்ட வழிகளில் போதைப்பொருள்கள் உற்பத்திசெய்வதும், சட்டவிரோதமாக அந்நியநாடுகளுக்கு கடத்துவதும் ஒன்றாகும். போதைப்பொருள்கள் கடத்துவதுமட்டுமில்லாமல், போதைப்பொருள்களை உற்பத்திசெய்வதிலும் தங்களது கவனத்தை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுகள் திருப்பியிருக்கிறார்கள்.

இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பகளுக்கும், போதைப்பொருள்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது, இருவரை கைது செய்த போது தெளிவாக தெரியவந்த்து. டேவிட் கோல்மேன் ஹெட்லி மற்றும் சையது தாவுத் ஜிலானி இருவரையும் முதலில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டார்கள், விசாரணையின் முடிவில் இருவருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்குக்கிடைக்கும் நிதியில் 75 சதவீதம் போதைப்பொருள்கள் கடத்துவதிலிருந்து கிடைக்கிறது. இதில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஜியாவுல் ஹக் முதல் பெனாசிர் புட்டோ வரை ஆட்சியில் இருந்தவர்கள் இதில் தொடர்புகொண்டிருந்தார்கள். ஆகவே இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைக்கின்ற வழிகளை ஒவ்வென்றாக ஆய்வுசெய்வதன்மூலம் நன்கு அறியலாம்.
ஆகவே இந்த ஆய்வுக்கு முதலில் போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் பயிரிடுவது, சந்தைப்படுத்துவது பற்றி எடுத்துக்கொள்ளலாம்.
போதைமருந்து கடத்தலின்மூலம் கிடைக்கும் பணத்தை இந்தியாவில் உள்ள இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளுக்கு கொடுக்கவேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏன் ஏற்பட்டது? இந்தியாவில் பயங்கரவாத செயலுக்கு உறுதுணையாக இருப்பதற்காக அதிக அளவில் நிதிகொடுக்க வேண்டிய சூழ் நிலை பாகிஸ்தானுக்கு உருவானது. இதற்காகக் குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆகும் செலவு ரூ100 முதல் ரூ150 கோடி தேவைப்படுகிறது.
பாகிஸ்தானின் பொருளாதார நிலை இவ்வளவு கோடி ரூபாய் கொடுப்பதற்கு இடம்கொடுக்காது என்பது நன்கு தெரிந்த உண்மையாகும். ஆகவே பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கொடுக்கவேண்டும் என்பதற்காகவே போதைப்பொருள்கடத்தல் தொழிலில் பாகிஸ்தான் ஈடுபட்டது.
பல்வேறு நாடுகளின் உளவுப்பிரிவினரின் தேடுதல் வேட்டைக்குப்பின் போதைப்பொருள்கள் கடத்தலில் முதன்மைவகிக்கின்ற நாடுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும். இந்த இருநாடுகளிலும் உள்ள ஆட்சியாளர்கள், சட்டவிரோத தொழிலாகவே போதைப்பொருள்களை உற்பத்திசெய்வதும், கடத்துவதையும், அதன்மூலம் கிடைக்கும் நிதியை பயங்கரவாத இயக்கங்களுக்குக் கொடுப்பதையும் தங்களின் அன்றாட நடவடிக்கையாகச் செய்துவருகிறார்கள்.
போதைப்பொருள்கள் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியைப் பெருமளவில் பயன்படுத்தும் பயங்கரவாத அமைப்புகள் உள்ள பகுதி இந்தியா.

போதைப்பொருளான கஞ்சா, அபின் போன்ற பொருள்கள் விளையும் பகுதிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான். ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியிலும், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாநிலங்களிலும் கஞ்சா அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படும் பாகிஸ்தான் அரசும், அரசு அல்லாத தொண்டுநிறுவனங்களும் போதைப்பொருள் விற்பனையின்மூலம் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பாகிஸ்தானை விட ஆப்கானிஸ்தானில் மட்டுமே அதிக அளவில் போதைப்பொருள்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன. 2003-ம் ஆண்டு 2143 ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட போதைப்பொருள்கள், தற்போது 2011-ல் 3810 ஹெக்டேர் ஏக்கரில் பயிரப்படுகின்றன.. ஆரம்பத்தில் ஒரு ஹெக்டேருக்கு 29.2 கி.லோ கஞ்சா மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் இந்த அளவை உயர்த்தும்விதமாக வேறுவழிகளைப் பின்பற்றியதால் உற்பத்தியின் அளவு 2011-ல் 44.5 கி.லோ கிடைக்கும்வகையில் பயிரிடப்பட்டது ஆண்டுக்கு 16.34 பில்லியன் டாலருக்கு நிகரான அளவு நிதி (ஒரு பில்லியன் டாலர் என்பது ரூ6500 கோடியாகும்) போதைப்பொருள்கள் பயிரிடுவதால் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்கும் நிதியில் 60 சதவீதம் [53105 கோடி ரூபாய்கள்] இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்கு கிடைக்கிறது.
பாகிஸ்தானில் உற்பத்தியாகும் கஞ்சா மற்றும் அபினுக்கு, அமெரிக்கா மற்ற ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் கிராக்கி இருக்கிறது. இந்தநாடுகளில் கள்ளக்கடத்தல்மூலமாகக் கடத்தப்படும் போதைப்பொருள்களுக்கு சந்தையும் உள்ளது.
1978-ம் வருடம் வரை பாகிஸ்தானில் உள்ள மலைவாழ்பகுதிகளில் வசிக்கும் உள்ளுர்மக்களின் தேவைக்குமட்டுமே சில இடங்களில் அபின் மற்றும் கஞ்சா உற்பத்திசெய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான்மீது ரஷ்யா படையெடுத்தபின்னர், இந்தியாவில் இயங்கிவரும் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதிகொடுக்கவேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டவுடன், சட்டவிரோத வழிகளில் விற்பனைசெய்ய முற்பட்டார்கள். பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் ஜியா உல் ஹக்கின் ஆட்சியில் இதற்காகவே தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

கிழக்கில் பர்மா, தாய்லாந்து, லாவோஸ் நாடுகளை இணைத்த பகுதிக்கு தங்க முக்கோணப்பகுதி என்றும், மேற்குப்பகுதியில் உள்ள ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளுக்கு தங்கப்பிறை என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இந்தப்பெயரகளை வைத்தவர்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பயங்கரவாத இயக்கங்கள்,
இந்தப்பாதையானது இந்தியா வழியாகச் செல்வதால், போதைப்பொருள்கள் அதிக அளவில் மேற்கூறிய வழிகளில் கடத்தப்படுகிறது. நேபாளத்தின் வடக்குப் பகுதியிலிருந்து கஞ்சாச் சுருட்டு [marijuana], ஹாசிஸ் என்ற போதைப்பொருள்கள் உலக அளவில் கடத்தப்படுகின்றன. இந்த போதைப்பொருட்களுடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உற்பத்தியாகும், கஞ்சா, அபின், மார்பின், பிரவுன் சுகர் (ஹெராயின்) போன்ற போதைப்பொருட்களும், தங்க முக்கோணம் மற்றும் தங்கப்பிறையை உள்ளடக்கிய நாடுகளிலிருந்து இந்தியா வழியாக உலகின் பிறநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன.
இவ்வாறு கடத்தப்படும் போதைப்பொருள்கள்மூலம் கிடைக்கும் நிதியில் ஒருபகுதி இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்குக் கிடைக்கிறது. சென்ற ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு வந்த ரூ10 கோடி பெருமான போதைமருந்து பிடிக்கப்பட்டது.
JK02F-0217 என்ற பதிவு பெற்ற சரக்குலாரி இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சலமாபாத் மற்றும் அமன்சேது என்ற இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பிடிப்பட்டது. இந்த லாரியின் ஓட்டுநர் அப்துல் அஹத் கனி (Abdul Ahad Ganie) என்பவனிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள்கள் எங்கிருந்து அனுப்பட்டன, எந்த பயங்கரவாத இயக்கத்திற்கு இதில் தொடர்பு இருக்கின்றது என்ற விவரங்கள் தெரியவந்தன.
ஸ்ரீநகர் மண்டியிலிருந்து வாழைப்பழங்களை பைஸன் டிரேடர்ஸ் பாக்(Faizan Traders Pak) என்ற கடையில் இறக்கிவைத்துவிட்டுத் திரும்பிவந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் பாதுகாப்பு படையினர் வண்டியை சோதனைசெய்தபோது, அதில் ஒன்பது பார்சல்களில் நன்றாக பேக் செய்யப்பட்ட வெண்மை நிறம் கொண்ட போதைப்பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொருள்களை சோதனை செய்த போது, அவைகள் கோக்கைன் என்பது தெரியவந்த்து. இதன் காரணமாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள், வழக்கு எண் 47ஃ2013 (FIR No. 47/2013) பிடிப்பட்ட டிரைவர் தனது வாக்குமூலத்தில், இப்பொருள்களை காஷ்மீரில் உள்ள ஒருவரிடம் டெலிவரி செய்ய வேண்டும், பின்னர் அவைகள் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு, அதலிருந்து வரும் பணம் தீவிரவாத – பயங்கரவாத – பிரிவினைவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தான்.
பாகிஸ்தான் – காஷ்மீர் – தாலிபான் போன்ற இணைப்புப்பாதை, போதைமருந்து வியாபாரம், ஜிஹாதி தொடர்பு, தீவிரவாதிகள் ஊடுருவல், போன்ற செயல்பாடுகளுக்கு இணைப்பாக இருக்கிறது.
போதைப்பொருள்கள் கடத்துபவர்கள் பாகிஸ்தானின் ஆட்சிக்கு இணையான ஒரு ஆட்சியை நடத்துகிறார்கள். பாகிஸ்தானின் ஆண்டு வருமானத்தில் 74 பில்லியன் டாலர் வருமானம் போதைப்பொருள்கள் உற்பத்தியில் கிடைக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் மொத்த வருமானத்தில் 5 சதவீதம் கடத்தல்காரர்களால் போதைப்பொருள் கடத்தலில் கிடைக்கிறது. 1992-1993-ல் முந்தைய வருமானத்தை காட்டிலும் 20 முதல் 25 சதவீதம் அதிகவருவாய் போதைப்பொருள் உற்பத்தியில் கிடைத்துள்ளது.
ஜிஹாத்தின்போது, ராணுவம் நேரடியாக போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டிருந்த்து. நேஷனல் லாஜிஸ்டிகல் செல் (National Logistical Cell) என்ற டிரக்குகள் நிறுவனம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமானது. காராச்சியில் வந்திறங்கிய சி.ஐ.ஏ.வினால் வழங்கப்பட்ட ஆயுதங்களை இந்த டிரக்குள் ஏற்றிக்கொள்ளும், இவை பெஷாவர், குவெட்டா போன்ற இடங்களுக்குச் செல்லும், அங்கே ஜிஹாத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கிவிட்டு, அதே டிரக்குள் கராச்சிக்கு திரும்பும்போது, அவை ஹெராயின் மூட்டைகளைச் சுமந்துவரும். இவை கராச்சியிலிருந்து உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு பாகிஸ்தான் அமெரிக்காவின் துணையோடு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது.
ஜெனரல் ஜியாவுல் ஹக்கின் மரணத்திற்கு பிறகு, போதைப்பொருள்கள் கடத்தலில் அவரின் பங்கு வெளிச்சத்திற்கு வந்தது, ஜியா உல் ஹக் ஆட்சியில் அமைச்சராக இருந்த மியான் முஸஃப்பர் ஷா (Mian Muzaffar Shah) என்பவர் இதைத்தெரிவித்தார். ஜியா உல் ஹக் ஆட்சியில் போதைப்பொருள் கடத்தல் சின்டிகேட் அதிக அளவில் வளர்ந்தாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் மன்னன் தாஹிர் பட் என்பவன் 1984-ம் வருடம் நார்வே நாட்டில் ஒஸ்லோ நகரில் உள்ள ஃபோர்நெபு விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டான்.
இவனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், போதை மருந்து கடத்தலில் ஜெனரல் ஜியா உல் ஹக்கின் தொடர்பு இருப்பது வெளியே தெரியவந்தது,
நார்வே காவல்துறையினர் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த தகீர் பட், முனவர் ஹூசைன், ஹமீத் ஹூசைன் (Tahir Butt, Munawar Hussain and Hamid Hussain) என்ற மூவர் முக்கியமான நபர்கள் எனக் கண்டுபிடித்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசைக் கேட்டுக்கொண்டது.
ஆனால் பாகிஸ்தான் அரசு அக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை, பின்னர் நார்வே அரசு எச்சரிக்கைசெய்த பின்னர் — அதாவது தூதரக உறவு முறிவு ஏற்படும் என்றதால், இம்மூவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.

கைதுசெய்யப்பட்ட ஹமீத் ஹூசைன் அரசு வங்கியான ஹபீப் வங்கியின் (Habib Bank) துணைத்தலைவர் ஆவான், மேலும், ஜெனரல் ஜியா உல் ஹக்கின் மனைவியின் மகன் உறவு முறையாகும். ஜியா உல் ஹக்கின் வரவு செலவு கணக்குகளைப் பராமரித்தவனும், போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த வருமானத்தின் கணக்குகளைப் பராமரித்தவனும் இவன்தான்.
போதைப்பொருள்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம், எச்.எஸ்.பி.சி. (HSBC) வங்கியின் மூலமாகவே பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக உளவுத்துறையினர் தெரிவித்தார்கள்.
2011-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு தேவையான நிதியானது இந்த வங்கியிலிருந்து தான் பெறப்பட்டது. அல்-குவைதா என்ற அமைப்பின் பட்டியலில் இருந்த அப்துல் ஆசிஸ் அல்-ரஜியின் வங்கியான அல்-ரஜி வங்கியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள வங்கி எச்.எஸ்.பி.சி . அல்-ரஜியின் வங்கிக்கு வங்கதேசத்திலும் கிளை உள்ளது. இவ்வாறு போதைப்பொருள்கள் கடத்தல்கள்மூலம் கிடைக்கும் பணம் சுமார் 3,000 கணக்குகளில் உள்ளதாகவும் உளவு அறிக்கை தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் போதைப்பொருள்கள் கடத்துபவர்களின் கணக்கும் இந்த வங்கியில்தான் உள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான நாடுகளில் உள்ள தீவிரவாத – பயங்கரவாத கும்பல்களிடமிருந்து, இந்தியாவில் உள்ள தாவுத் இப்ராஹிமுக்கு பணம் வரும் வழி சற்றே ஆய்வு செய்யவேண்டிய ஒன்றாகும். இவ்வாறு போதைப்பொருள்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்யது கிடைக்கும் நிதியானது, அல்-ஜரௌனி பணபரிமாற்ற வங்கி (al-Zarouni Exchange) துபாய் பணபரிமாற்ற வங்கி (Dubai Exchange), அல்-திர்ஹம் பணபரிமாற்ற வங்கி (al-Dirham Exchange), அலமாஸ் எலெக்டரானிக்ஸ் (Almas Electronics), யுசுப் டிரேடிங் (Yusuf Trading), ரீம் யுசுப் டிரேடிங் (Reem Yusuf Trading), ஃப்லௌதி டிரேடிங் கம்பெனி (Falaudi Trading Company), கல்ப் கோஸ்ட் ரியல் எஸ்டேட்ஸ் (Gulf Coast Real Estates) போன்ற நிறுவனங்கள்மூலம் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத இயக்கங்களுக்கும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் சுமார் 3.5 மில்லியன் டாலருக்கு இணையான போதைப்பொருள்கள் கடத்தலில் முக்கியமானவன் தாவுத் இப்ராஹிம்.
(தொடரும்)
ஒரு முஸ்லிம் பற்றிய கட்டுரை எதிர்வினை வந்தால் , ஒரு ஹிந்துவை அதுவும் அரசியல்வாதி பேசியதை தவராக புரிந்துகொண்டு ஒரு கிரிடிக் கட்டுரை எழுதும் வியாதி பெரிய எழுத்தாளர்களுக்கே இருக்கும்போது (சமநிலை படுத்துகின்ரார்கலாம்) இந்த மாதரி கட்டுறைகளை இங்கு மட்டுமே காணலாம்.
இந்துமதத்துக்காகவும் ,இந்துக்களுக்காகவும் பாடுபடும்,தமிழ் இந்து நாளிதழ் சேவைகள் பல்லாண்டு தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
1. இதெல்லாம் பொய் prachaaram..
2.அதுக்கு இன்னன்கிரே இப்போ?