விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்

முதலில் சில தகவல்களைத் தெளிவு படுத்தி விடுவோம். சாகித்ய அகாதமி விருது என்பது அரசு நேரடியாக அளிப்பது அல்ல. அரசு ஆதரவில் இயங்கும் அமைப்பு அது. அதில் விருது அளிக்கத் தீர்மானிக்கும் நடுவர் குழுவில் இடதுசாரி “அறிவுஜீவிகள்” மட்டுமே இடம் பெறுவர். தொடர்ந்து நடந்த காங்கிரஸ் – கம்யூனிச அரசுகள் அவ்வாறு நடக்கும் வகையில் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்து / இந்திய சிந்தனை உள்ளவர்கள் அகாதமியில் இடம் பெறுவது இயலாத காரியம். இப்படிப் பட்டவர்கள் கூடி அப்படி யாருக்கு விருது அளிப்பார்கள்? இவர்களைப் போலவே இந்து/இந்திய சிந்தனை துளியும் இல்லாத, இந்த நாட்டின் மீது வெறுப்பும், பெரும்பான்மை இந்துக்கள் மீது காழ்ப்பும் கொண்டவர்களுக்கே விருது. அண்மையில் எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ் அவர்களுக்கு சாகித்ய அகாதமியில் விருது அளித்த போது, அவர் வலது சாரி சிந்தனை உள்ளவர் என்று பின்னர் தெரிந்ததும் வருந்தினார் நடுவர் குழு உறுப்பினர். அந்த வருத்தத்தை வெளியிடவும் செய்தனர். இந்த நிலையில் தான் இருக்கிறது சாகித்ய அகாதமி அமைப்பு.

sahitya-academi-awardமேலை நாடுகளில் அரசே நேரடியாக இலக்கியத்துக்கு எல்லாம் விருது அளிப்பது அரிது. அங்கே தனியார் அமைப்புகள் தான் இந்த விருது அரசியலில் ஈடுபடுகின்றன. அரசிடமிருந்து அதிக பட்சமாக இந்த விருது அமைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கக் கூடும். அதற்கு மேல் நேரடியாக அரசு தலையிடுவதில்லை. மன்னராட்சி காலத்தில் புலவர்களை வைத்து தம்மைப் புகழ்ந்து பாட்டெழுதச் சொல்லி பரிசளிப்பார்கள். இதனால் கூட்டம் கூட்டமாக புலவர்கள் மன்னரைப் புகழ்ந்து பாடி மக்கள் மத்தியில் மன்னனின் புகழைப் பரப்புவர். நவீன காலத்திலும் காங்கிரஸ் – கம்யூனிச அரசுகள் சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகளை வைத்து எழுத்தாளர்களை தம் கைத்தடியாக உபயோகப் படுத்தி வந்துள்ளனர். இப்போது ஆட்சியில் இல்லாத போதும் கூட, இந்த அறிவு ஜீவிக் கைத்தடிகளை வைத்து காங்கிரஸ் அருமையாக காய் நகர்த்தி மோதி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.

இந்த எழுத்தாளர்கள், தம்மைப் போன்ற இதர கைத்தடி எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்பது, அடுத்த தலைமுறையிலும் தம்மைப் போலவே ஒத்த “கொள்கையுடைய” நடுவர்களையும் நியமிப்பது என்றுதான் அறுபது எழுபது ஆண்டுகளாக இந்திய அறிவு ஜீவி உலகம் இயங்கி வருகிறது. அதனாலேயே நேரடியாக அரசு தரும் விருதாக இல்லாவிட்டாலும், அரசு தரும் விருதைப் போலவும் தற்போதைய அரசின் மீது அதிருப்தியால் அதைத் திருப்பி தருவதாகவும் ஒரு நாடகத்தை பீகார் தேர்தலுக்கு முன்பாக அரங்கேற்றுகின்றனர்.

இவ்வாறு வரிசை கட்டி விருதைத் திருப்பி தருவதற்கு என்ன காரணம்? கல்புர்கி என்ற எழுத்தாளர் கொலை செய்யப்பட்டதுதான் காரணம் என்கின்றனர். அந்த கல்பர்கி எதனால் கொல்லப் பட்டார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதோடு கல்புர்கி கொலை செய்யப் பட்டு இரண்டு மாதங்களுக்குப் பின் திடீரென்று விழித்துக் கொண்டு விருதுகளை ஏன் திருப்பித் தரவேண்டும்? வேறென்ன பீகார் தேர்தல் அரசியல் தான். இவர்களுக்கு விருது கொடுத்ததும் அரசியல், அதை இன்று திருப்பிக் கொடுப்பதாக ஆடும் நாடகமும் அரசியல் தான்.

இன்று விருதுகளை திருப்பித் தருவதாக நாடகம் ஆடுவோருக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் சில கேள்விகள். மற்றவர்களின் நம்பிக்கைகளை புண்படுத்துவது போல் கல்புர்கி பேசி வந்த போது எத்தனை பேர் மனசாட்சியுடன் அதனை கண்டித்தீர்கள்? தஸ்லிமா நஸ்ரீனுக்கு எத்தனை பேர் துணை நின்றீர்கள்? எழுத்தாளர் ஜோடி க்ருஸ் மீது வழக்குகள் போடப் பட்டபோது எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்தீர்கள்? சீக்கியர் படுகொலைக்கும், காஷ்மீர் பண்டிட்டுகள் வன்முறையாக வெளியேற்றப் பட்ட போதும் எத்தனை பேர் அதற்காக போராடினீர்கள்? சிறுபான்மைக்கும் – பெரும்பான்மை மக்களுக்கும் பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்து வந்த காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் அரசுகளுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது எழுதி இருக்கிறீர்களா? நமது ராணுவத்தினர் ஜிகாதிகளாலும், நக்சல்களாலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டபோது எத்தனை எழுத்தாளர்கள் அதற்காக பொங்கி எழுந்தனர்? தமிழ் நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட இந்து இயக்கத் தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

நயன்தாரா என்கிற எழுத்தாளர் 1986ல் விருது வாங்கிக் கொண்டிருக்கிறார். அதற்கு இரு வருடங்கள் முன்புதான் மூவாயிரம் சீக்கியர்கள் காங்கிரஸ் கட்சியினரால் படுகொலை செய்யப் பட்டனர். அப்போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு இப்போது சமாஜ்வாதி அரசு ஆட்சி செய்யும் உ.பி மாநிலம் தாத்ரியில் நடந்த குற்றத்துக்கு மத்திய அரசை குற்றம் சாட்டி விருதைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார். சரி யார் இந்த நயந்தாரா? அப்படி என்ன எழுதினார்? எதற்காக இவருக்கு விருது? வேறு எந்த காரணமும் தேட வேண்டாம். அவர் ஜவஹர்லால் நேருவின் உறவினர். அது போதாதா விருது கொடுப்பதற்கு? இன்று பாஜக ஆட்சி என்றவுடன் தன்னுடைய செல்வாக்கு குறைவதால், விருதை திருப்பி அளிப்பதாக கூச்சலிடுகிறார்.

நரேந்திர மோதி மௌனமாக இதையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு, தன் பாட்டுக்கு தன் வேலையை செய்வது இவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. சரி ஒரு பேச்சுக்கு இவர்கள் எல்லாம் கேட்பது போல, மாநிலங்களில் அதிகாரத்துக்குட்பட்ட குற்றச்செயல்களாக இருந்தாலும், மோதி ஏதாவது சொல்வாரே ஆனால், அதை இந்த அறிவு ஜீவி கூட்டம் ஏற்றுக் கொள்ளுமா? அதை திரித்துக் கூறுவார்கள். சந்தேகத்தை எழுப்புவார்கள். அதை ஊடகங்கள் பன்மடங்கு பெருக்கி ஒலிபரப்பும். இறுதியில் மோதி இவர்களுக்கு பதில் சொல்வதிலேயே காலத்தைக் கழிக்க வேண்டியதுதான். அரசு நடத்தவே முடியாது.

“ஒரு நாட்டில் எப்போது அறிவு ஜீவிகள் அமைதி இன்றி பலவிதமாக பிரச்சனைகளை கிளப்புகிறார்களோ அப்போது அரசு சரியாக செயல்படுகிறது என்று அர்த்தம்” என்கிறது சாணக்கிய நீதி. முதலில் இவர்கள் நிஜமாகவே அறிவு ஜீவிகள் தானா என்பதை விட்டுவிடுவோம். அரசாங்கம் இவர்கள் பலவிதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு அளிக்கும் போதே, அந்த சுதந்திரத்தை அளிக்கும் போதே சரியாகச் செயல்படுகிறது என்று தானே அர்த்தம். இத்தனை வருடங்களாக மோதிக்கும், பாஜகவுக்கும், இந்தியாவுக்கும், இந்துக்களுக்கும் எதிராக எவ்வாறெல்லாம் செயல்பட்டார்கள். முஸ்லிம்கள் உட்பட பெருவாரியான மக்கள் மோதிக்கு ஓட்டளித்த பின்பும், அவருக்கு விசா கொடுக்கக் கூடாது என்று அமெரிக்காவுக்கு பெட்டிஷன் எழுதினார்களே! சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மோதியின் மீது வெறுப்பைக் கொட்டினார்களே! இவர்களை மோதி என்ன செய்து விட்டார்?

writers-writingஎழுத்தாளனை பொதுமக்கள் விமர்சிப்பதா? நயன்தாராவைப் படித்திருக்கிறாயா? சாரா ஜோசப்பை படித்திருக்கிறாயா என்று சில எழுத்தாளர்கள் கேட்கின்றனர். அவர்களின் எழுத்துக்களை விட அவர்களின் இரட்டை வேடம் தானே இங்கே விமர்சனத்துக்குள்ளாகிறது. மேலும் கம்யூனிச, கிறிஸ்தவ அடிப்படை வாதிகள் எழுத்தாளர்களாவதற்கு இங்கே அரசு, தனியார், பத்திரிகை என்று எல்லா விதத்திலும் லாபகரமான சூழ்நிலை நிலவுகிறது. அதனால் ஒரு வலது சாரி எழுத்தாளருக்கு ஆயிரம் இடது சாரி எழுத்தாளர்கள் இருக்கின்றனர். இவர்களிடம் சார்புநிலை இருக்கிறதே தவிர நடுநிலை எங்கே இருக்கிறது?

மோடி ஆட்சியில் எந்தவொரு எழுத்தாளரும் படைப்பாளியும் அச்சுறுத்தப் படவில்லை. எந்தவொரு வலதுசாரி எழுத்தாளர்களும் இன்று வரை எந்தப் பதவிக்கும் தெரிவு செய்யப்படவில்லை. திருச்செங்கொட்டு மக்களைப் பற்றி ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பிய எழுத்தாளருக்காக, அவருக்கு ஆதரவாகவே கூட மத்திய அரசு நீதிமன்றத்தில் முறையிடுகிறது. இருந்தும் இந்த இடது சாரி எழுத்தாளர்கள், மாவோ, ஸ்டாலின் ஆட்சிகாலத்தில் அப்பாவிகள் அழித்தொழிப்பு செய்யப் பட்டதைப் பற்றி எல்லாம் வாயைத் திறக்காதவர்கள்,   இப்போது அழித்தொழிப்பு நடப்பதாக கூசாமல் பரப்புரை செய்கிறார்கள்.

இது இணைய யுகம். சாமானியர்களும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. எதிர்வினை ஆற்ற முடிகிறது. சாமானியர்கள் அவர்களுக்குத் தெரிந்த வழியில் தான் போராட முடியும். ஜனநாயகத்தில் எந்த ஒரு மனிதனும் போராட்டம் செய்ய முடியும். அதற்கு உரிமை இருக்க வேண்டும். அந்த போராட்டம் வன்முறையாக வெடிக்காமல் பார்த்துக் கொள்வது மட்டுமே அந்தந்த பிரதேச அரசின்/அதிகாரத்தின் பொறுப்பு.

அண்மையில் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், கேரளாவில் எம்.எம். பஷீர் (இவர் வைக்கம் முகமது பஷீர் அல்ல) என்ற எழுத்தாளர் (ராமாயணத்தைப் பற்றி தொடர் எழுதிய விவகாரத்தில்) மக்களிடம் எதிர்ப்பைச் சந்தித்தார். உடனே எழுத்தாளர் ஜெயமோகன் அந்த போராட்ட மக்களை, மடையர்கள், தெருப்பொறுக்கிகள் என்று திட்டி ஒரு பதிவு எழுதி இருந்தார். “இன்று எழுந்து வரவேண்டிய குரல் இந்து அறிஞர்களிடமிருந்து. இந்து ஞானிகளிடமிருந்து. பன்முகத்தன்மையும் உள்விவாதத்தன்மையும் கொண்ட இந்து மெய்யியலை, பண்பாட்டை அவர்கள் முன்வைக்கவேண்டியிருக்கிறது. ” என்கிறார் ஜெயமோகன்.

கேரளாவில் அத்தகைய இந்து ஞானிகள் உருவாகக் கூடிய சூழலா இருக்கிறது? தொடர்ந்து நடந்த கம்யூநிச – காங்கிரஸ் அரசுகள் மருந்துக்கும் இந்து மதம் குறித்த புரிதல், மாணவர்கள்/இளைஞர்களிடம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. கேரளா உருவானதிலிருந்து இன்று வரை அமைந்த அரசுகளில் கல்வி மந்திரிகளாக சிறுபான்மையினர் மட்டுமே (விதிவிலக்காக ஒரே ஒரு முறை தவிர) பதவி வகித்து வருகின்றனர். இந்து மதம் குறித்த அறிமுகம் கூட நசுக்கப் படும் நிலையில் எப்படி இந்து அறிஞர்களும், ஞானிகளும் அங்கே உருவாக முடியும்? (தமிழகத்தில் இந்து கல்வி மந்திரிகள் இருந்தார்களே என்றால், இவர்களும் இந்துக்கள் அல்ல, நாத்திகர்கள்!). இவ்வாறு கேரளாவில் தொடர்ந்து இந்து மதம் நசுக்கப் பட்டு, இன்று கிட்டத்தட்ட சிறுபான்மை மதமாகவே ஆகி விட்டது. அங்கே இருக்கிற கொஞ்ச-நஞ்ச இந்து உணர்வுடையவர்கள் அவர்களுக்குத் தெரிந்த வழியில் போராடுகிறார்கள்.

இறுதியாக சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்து, மாநிலங்களின் மொழி வளர்ச்சிக்காக அரசு இது போன்ற விருதளிக்கும் அமைப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளது. இனியும் இது தேவையா என்று யோசிக்க வேண்டும். பல கோடி மக்கள் பேசும் மொழியின் வளர்ச்சிக்கு அந்த மக்களில் இருந்தே சில அமைப்புகள் உருவாகட்டுமே, அரசு இதிலிருந்து விலகிக் கொள்வது தான் சரி என்று தோன்றுகிறது. ஜிஹாதிகளின் விடுதலைக்காகவும், மோதி போன்ற தலைவர்களுக்கு எதிராக வெளிநாடுகளின் காலில் விழுந்து கெஞ்சுபவர்களாகவும், இந்தியக் கலாசாரத்தை சற்றும் மதிக்காதவர்களாகவும் இருக்கும் இந்த அறிவுஜீவிக் கூட்டத்தினால் என்ன பயன்? இவர்கள் இது வரை எழுதியவற்றால் சமூகத்துக்குத் தான் என்ன பயன்? இனியும் இது போன்ற விருது அமைப்புகளை அரசு ஆதரிக்க வேண்டுமா? செயல்படுத்த வேண்டுமா என்று யோசிக்க வேண்டிய தருணம் இது.

27 Replies to “விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்”

  1. ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நயன்தாராவும் மங்கத் ராயும் காதல் வலையில் வீழ்ந்து விட்டனர். தாரா வயதில் மூத்தவர்.தெய்வீகக் காதல்.
    ஆனால் குஷ்வந்த் சிங் போல தாராவின் கணவர் கௌதம் சாத்வீகமானவர் அல்ல. மங்கத் ராய் அவர்கள் அன்னார் கௌதமால் வெளுத்து விரியக் கட்டப்பட்டார். கௌதம் பின்னியெடுத்துவிட்டார். மங்கத் படுகாயம். ஆனால் நயன்தாராவோ தன் காதலில் உறுதியாக நின்று கௌதமை ’ச்சீ..காலிப்பயலே போடா’ என்று விவாகரத்து செய்து விட்டு மங்கத் ராயுடன் போய் விட்டார். நயனும் மங்கத் ராயும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆக, மங்கத் இப்போது ஜவஹர்லாலின் உறவினராக ஆகி விட்டார்!
    Read more at https://rprajanayahem.blogspot.com/2014/04/blog-post.html#3z83wxAqDSIGQWjd.99

  2. விருதுகளும் விருதாகளும் என்று துக்ளக்ல் பழ கருப்பையா ஒரு கட்டுரை எழுதியதாக ஜாபகம் . விருதாக்கள் திருப்பி கொடுகின்றார்கள் . அது சரி “வாங்கினால்” “கொடுத்துதான” ஆகவேண்டும் .

  3. தமிழ் நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட இந்து இயக்கத் தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?———-சரியான கேள்வி.

  4. போலி மதசார்பின்மை எழுத்தாளர்களுக்கு மோடி பதில் சொல்ல தேவை இல்லை. அதை பிஜேபிக்கு ஒட்டு போட்ட மக்கள் அவரிடம் எத்ரிபார்க்கவில்லை. அவர் வளர்ச்சி பயணத்தை தொடரலாம்.

  5. சீக்கியர்களை கொன்று குவித்தபோது சுரணையற்று கிடந்த ஒரு எருது (=நயன்தாரா – பேரைப் பாரு) இப்போது ஒரு துலுக்கன் செத்ததற்கு தான் பெற்ற விருதை திருப்பி தராராம்! ரொம்ப நல்லது. உனக்கு அதை கொடுத்ததே தப்பு. முதலில் அதை உனக்கு கொடுத்தவனை உதைக்கணும். கேரளாவில் ஒரு சிறுக்கி (=அருந்ததி ராய்) Gods of small things என்று ஒரு பொல்லாத புக்கை (=book) எழுதி பரிசை வாங்கிவிட்டாராம். அதுமுதல் காஷ்மீர் பிரச்சனை முதல் மாவோயிஸ்ட் பிரச்சனை என்று எல்லா பிரச்சனைகளுக்கும் தனது opinion ஐ தெரிவித்து தனது மேதாவி தனத்தை காட்டுவார். முதலி விருத்து பரிசு கொடுப்பதை நிறுத்தவேண்டும். நல்லாசிரியர் விருது கொடுக்கிறார்கள். அப்படியானால் அது கிடைக்காதவர்கள் அனைவரும் கெட்ட ஆசிரியர்களா? 1977ல் அமைந்த ஜனதா அரசு பத்மஸ்ரீ போன்ற அனைத்து விருதுகளையும் ஒழித்தது. மீண்டும் வந்த காங்கிரஸ் அதை கொண்டுவந்தது. மோடி அரசு அதை ஒழிக்கவேண்டும்.

  6. இத்தகைய அந்நிய கைக்கூலி எழுத்தாளர்களை தயங்காமல் அரபு நாட்டிற்கு அனுப்பி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற அனுமதிக்கவேண்டும். துரோகிகள்! இந்துக்களை தூற்றியே வயிறு வளர்க்கும் இவர்களுக்கு ஆண்டவன் நல்ல சாவு தரமாட்டார்.

  7. கடந்த vaaram, ஒரு பஜ்ரங் தால் ஊழியர் ( பூ விற்பவர்) கொலை seyyappattar.
    அவர் சாக vendiyavarthaan. aanal, கல்புர்கி அப்படியா? தைரியமாக கடவுள் சிலை மேல் சிறுநீர் கழிப்பதை பற்றி pesinaar.

  8. நாம் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால் சிறுக்கி, பேரப் பாரு என்பதெல்லாம் சரியல்ல. நாம் ஹிந்துக்கள். கருத்தை கருத்தால் எதிர்க்கத்தான் இந்த தளம்

  9. Luckily my message here wasn’t allowed by admn. I must thank them. Because if it had been released here, honest man would have pounced upon me and torn me to pieces. However, he has one good point, which he is incapable of inserting with decent words. He wants all awards to be abolished. I would add the Government awards may be stopped but not private awards. Because if a govt gives away some awards to some writers, after it loses power and a new govt takes over, the awardees would be called partisans and stooges of the previous govt. If writers and artists are awarded by private people, no such charge is possible. If at all they return the awards to the people who gave, it won’t make news. Every award given by govt is attacked by other who misses that award. He says that the awardee had influence with powers. Such politicking will come to an end.

    In his wanton and summary attack, the honest man questions teachers award also: scurrilous attack. I don’t know why he is angry with teachers. Among lakhs of teachers, awards are given to a few hundreds all over India. It doesn’t mean others are incompetent. It does mean that Govt don’t have the wherewithal to select thousands and it has limited finances for limited numbers. Awards to teachers are symbolic encouragement to teaching community. No teacher has regretted that someone has got and he is neglected. The teacher is happy to know the teaching fraternity and sorority are lauded and encouraged by the govt.

    While they took especial editorial care to stop my reasoned message, the editors became careless in allowing such bad words from honest man. He crossed all limits of decency. Maybe, he wants to be known as a fire brand writer here.

  10. – நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அவரின் எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்,? அவரின் எதிர்ப்பைதான் நாம் எதிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நான் ஜெயமோகன் கட்சி. நாம் அவர்களை நினைத்து நினைத்து அவர்கள் மாதிரியே ஆகி விட்டோம். அவர்களை நம் மாதிரி ஆக்காமல், நாம் அவர்கள் ஆகி விட்டோம்.

  11. அந்த கிழவிக்கு காலம் கடந்த கவன ஈர்ப்பு கவர்ச்சி கொழுப்புத்தான் !
    என் தலைவி ,நடிகை நயனதாரா என்று நினைப்பு !

  12. இடது சாரி,நாஸ்திக குஞ்சுகளின் கல்யாண குணங்களில் ஒன்று ,அனைத்து இடங்களிலும் தாங்களே மறித்து மறித்து ,மக்களின் கண்களை உறுத்திக்கொண்டு உங்களை நாங்கள்தான் வழிநடத்துகிறோம் ,என்று காட்டிக்கொள்வது,சான்றாக முக்காலே மூணு வீசம் உள்ள இந்த தறுதலைகள் ,நூற்றிலே முக்கால் பங்கு அடைத்துக்கொண்டு வெட்டி விருதாக்களை பேசுவது .
    தொலைக்காட்சி ,பத்திரிகை விவாதங்களில் இவர்களின் சவடால்களை கேட்பவர்கள் எதோ இந்த பறக்காவேட்டிகள்தான் ,ஊரைக்காக்க வந்த உய்யலாலாக்கள் என்று நினைத்து மயங்கும்படி ஆகும் !
    சான்றாக தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டம் ,ஆன்மீகம் இல்லாத கலை இலக்கியம் என்ன ஆகும் ?கருணாநிதி ,வைரமுத்து எழுத்துகளை போல் எழுத்தாளன் இருக்கும் போதே இறந்து விடும்.
    என்றாலும் இதயெல்லாம் கண்டு நகைத்தவாறு வலது சாரிகள் நிம்மதியாஇருப்பார்கள் ,அவர்கள் பெருமை அசையாத புராண ,வைரம் பாய்ந்த களஞ்சியங்களில் உள்ளன.அவர்கள் வாழும் சிட்டுகள்.
    ஆகையால் இந்த வாழா வெட்டிகளின் {கமுநிஸ்ட்,இடது சாரி }பிழைப்பு அன்றாட பிரசாரங்களை நம்பி வாழ்வது,அடுத்த நாளில் காலாவதியாகிவிடும்,எப்போதுமே கூவியும் ,கூக்குரலிட்டும் ,குமைந்தும் வாழும் வாழ்க்கை .
    அவர்களும் என்னதான் செய்வார்கள் பேதைகள்?
    பிறவி சாபனை!

  13. தமிழ் எழுத்தாள ‘பிதாமக குஞ்சுகள் ’16 சேர்ந்து கூட்டறிக்கை விட்டு மத்திய அரசை
    ‘எச்சரித்துள்ளனர்!’தாசில்தார் குமாஸ்தா ‘இலக்கிய அந்தஸ்தில் ‘இதுகளெல்லாம் எழுதி பிழைக்க ‘சொல்லொன்னா தொழில்கள் ‘இயற்றி {தொழிலாள தோழர்களல்லவா?}பரிசிகளை கைப்பற்றும் வித்தைகள் ஓராயிரம் ,வாங்கின தொகையை வட்டியோடு திருப்பி அனுப்புவதுதானே மானஸ்தங்களின் லட்சணம்?
    இதில் காலேஜ் மேட் ‘அகாதமி தலைமைக்கு வந்தவுடன் ,கோயில் வாசலில் தேங்காய் பொறுக்கியது போல் ,அப்துல் ரகுமான் ,மேத்தா,வைரமுத்தேல்லாம் வாங்கியது சந்தி சிரிக்கவில்லையா?
    அடுத்து ,ரொம்ப நாளா ஒரே கதையை ,அதாவது ஆமபிளைகலேல்லாம் அய்யோக்கிய பயலுக ,அவனுன்களோடு என்ன சகவாசம்?எப்போது நீங்களெல்லாம் ‘விட்டு விடுதலையாவது?’,அதாவது ‘எப்போ என் மேன்சன் ரூமுக்கு வரப்போறீங்க?’என்றெல்லாம் பேதைகளை கிளப்பி விட்டு ,முச்சந்தியில் நிற்க வைத்தார்.
    அப்புறம் மகாபாரதம் ,ராமாயணம் {அவையெல்லாம் ஹூமன் டாகுமண்டுகலாம்!}என்று எழுதி ,பட்டிணத்து புழுதிகளை கிளப்பும் அந்த பாண்டி சேரி எழுத்தாளன் ,
    காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளவும் ,கதவுள்ள போதே சாத்திக்கொள்ளவும் தெரிந்தவர்கள்தான்!

  14. எழுத்தாளர்கள் தாங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பிக்கொடுத்தால், அரசோ, மோடியோ, மற்றும் இங்கெழுதுபவர்களோ ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும்? அவர்கள் விருதுகளைத்தானே திருப்பிக்கொடுக்கிறார்கள்? அதையேன் அவர்கள் செய்யக்கூடாது? அப்படி செய்யும்போது அங்கே மற்றவருக்கென்ன வேலை? என்னய்யா உங்கள் பிரச்சினை?

  15. பல நல்லவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கத் தயங்காதவர்கள் முற்போக்கர்கள். நாம் அவர்கள் வாழ்கையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் -[இப்போதாவது ] தவறு ஒன்றுமில்லை. ஒரு குடும்பம், அதன் பல உறுப்பினர்கள் , மற்றும் இந்தக் குடும்பத்துடன் எப்படியோ சம்பந்தப் பட்ட பல அடிமைகள்-அறிவு ஜீவிகள் என எப்படிப் பல காலமாக நாட்டை ஏமாற்றி வந்துள்ளார்கள் என்று நமக்குத் தெரிய வேண்டும். இணையம் வாழ்க!

    திரு பாண்டியன் அவர்கள் கொடுத்த இணைப்பில் மன்கட் ராயின் பெயர் எட்வர்டு மங்கத் ராய் என்று இருக்கிறது.குஷ்வந்த் சிங் குடும்பம் டில்லியில் பெற்றிருந்த செல்வாக்கு ..டில்லியின் அறிவு ஜீவிக் கூட்டங்களின் மேற்கத்திய வாழ்க்கை முறை…முற்போக்கர்கள் பற்றி பல விஷயங்கள் விளங்குகிறது அல்லவா?

    இன்றைக்கும் டில்லியில் இவர்களைப் போன்றோர் அதிகம் இருக்கிறார்கள் என்பதைத் தான் ஆப்புக் கட்சியின் செல்வாக்கு காட்டுகிறது.ஆனால் மக்கள் புரிந்து கொள்ளும் நாள் தூரத்தில் இல்லை, வேலை அற்ற விருது பெற்ற காங்கிரஸ் துதிபாடிகளுக்கு ஜுரப் பிதற்றல் பாவம்.

  16. //நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அவரின் எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்,? //
    யாரு நயன்தார என்றா பல பேருக்கு தெரியாது இதில் யார் நயன்தார என்று ஒரு “மிக சிறந்த” கட்டுரை லிங்க் கொடுப்பதில் என்ன தவறு . இந்தியாவ இந்திரா, இந்திரா தான் இந்தியா எனும்போது தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்று இருக்கின்றதா என்ன நேரு குடும்பத்திற்கு !!

  17. //எழுத்தாளர்கள் தாங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பிக்கொடுத்தால், அரசோ, மோடியோ, மற்றும் இங்கெழுதுபவர்களோ ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும்? அவர்கள் விருதுகளைத்தானே திருப்பிக்கொடுக்கிறார்கள்? அதையேன் அவர்கள் செய்யக்கூடாது? அப்படி செய்யும்போது அங்கே மற்றவருக்கென்ன வேலை? என்னய்யா உங்கள் பிரச்சினை?///

    இதில் உங்கள் பிரச்னை என்ன ? விருதை திருப்பி கொடுத்தார்கள் , விவாதிகின்றோம் .. சரி. உங்கள் பிரச்சனை என்ன ? திருப்பி கொடுக்கும் விருது எல்லாம் உங்களுக்கு வேண்டுமா ? பின்னூட்டம் போடுப்வர்க்கு எல்லாம் அகாடமி விருது என்றாலும் நீங்கள் ஜூனியர் தான ?!!??

  18. பிரமாதம் – இப்போது நம் ஹிந்து சஹோதரர்கள் பலர் – செருப்பால் அடிப்பேன், என்றெலாம் வீர வசனம் பேசுகிறார்கள். இந்த வசனம் எல்லாம் மத்தியில் பா ஜ க அரசும் இங்கே அ தி மு க அரசும் இருக்கும் தைரியம்தான். இவர்களில் பலர் மற்று அரசில் வாயை மூடிக் கொண்டிருந்தவர்கள். இப்படிப்பட்ட வீர வசனங்கள்தான் பிரச்சினையை திசை திருப்பி மோதி அரசுக்கு பிரச்சினையை உண்டு செய்கிறது.

    இன்று விருதைத் திருப்பிக் கொடுப்பவர்கள் – எமெர்ஜென்சி, சீக்கியப் படுகொலை நடக்கும்போது வீர அமைதி காத்தவர்கள். இப்போது இவர்களுக்கு மத்தியில் வேலை நடக்காததால் பிரச்சினை கிளப்புகிறார்கள்.

    மோதி அரசு என் ஜி ஒ க்களைக் கட்டுப்படுத்தி மத மாற்ற பண வரவைக் கட்டுப்பதுத்தியது.

    அந்த அரசாங்கம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் உங்கள் வீர வசனங்களை விட்டுவிட்டு அமைதி காப்பீர்களாக.

  19. அன்பர் பி எசு

    \\ எழுத்தாளர்கள் தாங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பிக்கொடுத்தால், அரசோ, மோடியோ, மற்றும் இங்கெழுதுபவர்களோ ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும்? \\

    வூட்ல வெக்க எடமில்லன்னு திருப்பிக்கொடுத்திருந்தா யாரும் அலட்டிக்கொண்டிருக்க வேண்டாம்.

    காங்க்ரஸ் ஆட்சி செய்யும் மாகாணமான கர்நாடகத்திலும் ஸமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்யும் உத்தரப்ரதேசத்திலும் நடந்த நிகழ்வுகளுக்கு ………இன்னமும் விசாரணை கூட முடியாத நிலையில் …….. ஜபர்தஸ்தியாக மதச்சாயம் பூசி……. தேசத்தில் ஏதோ படுபயங்கரமாக மதப்பூசல் நிகழ்வது போல ஒரு போலி அச்சுறுத்தலை சகட்டு மேனிக்கு பாவ்லா காட்டி கூச்சல் போட்டு அவார்டுகளைத் திருப்பிக் கொடுத்ததால்……..தேசத்தின் இறையாண்மையிலும்……. தேசத்தில் மத நல்லிணக்கத்திலும் அக்கறை உள்ள அன்பர்கள் நிச்சயமாக அதற்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள்.

    பயங்கரவாத ஆப்ரஹாமியத்துக்காக தேசத்தை விலை பேச முனைபவர்கள் இந்த எழுத்தாளர்களுடன் சேர்ந்து கும்மி அடிப்பதை தேசத்தில் அக்கறை உள்ளவர்கள் அறியமாட்டார்களா என்ன?

    \\ அவர்கள் விருதுகளைத்தானே திருப்பிக்கொடுக்கிறார்கள்? அதையேன் அவர்கள் செய்யக்கூடாது? \\

    எவ்வளவு பேர் தாங்கள் விருதுடன் சேர்ந்து வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். வாங்கிய பணத்தை மென்று முழுங்கி புளியேப்பம் விட்டு விட்டு இன்று காயலாங்கடையில் போட வேண்டிய விருதைத் திருப்பிக் கொடுக்கிறார்களாம்.

    மோஹ்தர்மா தஸ்லீமா நஸ் ரீன் அவர்களுக்கு வஹாபிய பயங்கரவாத குண்டர்கள் மிரட்டல் விடுத்த போது ஹிந்துஸ்தானத்தில் காணாத மதபயங்கரவாதத்தை இப்போது இந்த முற்போக்கு வாதிகள் கண்டு விட்டார்களாம். யாரை ஏமாற்றுகிறார்கள்.

    ஹிந்துஸ்தானத்தை ஊழலில் தள்ளிய ………… வாடிகனின் கையசைப்பில் இயங்கும் ……….. அதளபாதாளத்தில் விழுந்துள்ள காங்க்ரஸ் கட்சியால் …………..வரிப்பணத்திலிருந்து வீசப்பட்ட பிச்சையில் காலம் தள்ளிய பிச்சைக்காரர்கள்…….. எந்த உழைப்பும் இல்லாமல் தங்களுக்குக் கிடைக்கும் பிச்சைப்பணம் இன்று பறிபோகிறதே என்ற ஆதங்கத்தில் செய்யும் மாய்மாலம் இந்த அவார்டு வாபஸ் கூத்துக்கள் எல்லாம்.

  20. அவர்கள் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுத்தார்களா இல்லையா என்பது என் கேள்வி கிடையாது.

    அவர்களுக்கேன் விளம்பரம் கொடுக்கிறீர்கள் என்பதுதான் என் கேள்வி.

  21. கருத்துக்களைப் பற்றி பேசும்போது கருத்தாளர்களைப் பற்றியும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையினைப் பற்றியும் பேசுவது அவசியமா?

  22. அன்பர் பி எசு

    நெம்பவே டமாஸ் பண்றீங்க நீங்க.

    \\ அவர்கள் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுத்தார்களா இல்லையா என்பது என் கேள்வி கிடையாது. அவர்களுக்கேன் விளம்பரம் கொடுக்கிறீர்கள் என்பதுதான் என் கேள்வி. \\

    வெளம்பரமா. நெசமாலுமேவா ராசா. அப்ப நல்லது நடக்குது நாட்ல. சர்தானே.

    தீரா விட அயோக்ய கும்பலை எப்படி எதிர்மறையா வெளம்பரம் செய்ய வேண்டுமோ அதே போல ஹிந்துஸ்தானமளாவிய கும்பலையும் செமத்தியா எதிர்மறையா வெளம்பரம் பண்ணணும். சரி காதா பி எசு காரு, செப்பண்டி.

    இந்த அகா டம்மி எலக்கிய வாதி / எலக்கிய வாந்தி கள பத்தி பரந்த இலக்கிய வாசிப்புள்ள ஹிந்துத்வ அன்பர்கள் இவர்களது இலக்கியங்களை விசாரித்து இதில் இலக்கியத்தரம் அலக்கியத் தரம் என்று ஏதாவது இருக்கான்னு ஹிந்துத்வ அன்பர்களை விக்ஞாபித்திருந்தேன்.

    அதுக்கு அவச்யமே இல்லையென்று தெரிகிறது.

    ஒரு காலத்தில் சான்றோர்கள் கோலோச்சிய அகாதமி என்ற குதிரை கொஞ்சம் கொஞ்சமாக கழுதையாக ஆகி, பின்னர் அகா டம்மி என்ற கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகியது பரிதாபம். அகா டம்மியாகப்பட்டது ஊடக மாஃபியா, இடதுசாரி குண்டர் படை, காங்க்ரஸில் பொதுமக்களின் வரிப்பணத்தை சுருட்டி எந்த உழைப்பும் இல்லாமல் சுகபோக வாழ்வு வாழ்ந்து வரும் ஒரு கொள்ளைக்கும்பல் என …….. ஒரு நமக்கு நாமே திட்டத்தின் படி செயல்படும் பரஸ்பர ஸ்துதிபாடிகளின் சதிவலையாக ஆகி மாமாங்கங்கள் ஆகிவிட்டது என்று தெரிய வருகிறது.

    பார்க்க கீழ்க்கண்ட உரல்கள்.

    https://www.opindia.com/2015/10/meet-your-sahitya-akademi-award-returnees/

    சிலபல எலக்கிய வாதிகளே சில பலரின் தகுதிகளை தெளிவாக கடாசி விட்டார்கள். அகா டம்மி அவார்டு நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்பட்டது என்று வாக்குமூலமே கொடுத்து விட்டார்கள். சில இடது சாரி குண்டர் ப்ரக்ருதிகள் கடந்த காலத்தில் அகாதமியை அகா டம்மி என்று வசவெல்லாம் இட்டு விட்டு………. எதிர்காலத்தில் தமக்கு அவார்டு கிடைக்கும் போது நவத்வாரங்களையும் பொத்திக்கொண்டு……….. அகா டம்மியின் பணத்தை நக்கியுள்ளார்கள்.

    https://indiafacts.co.in/sad-sardesai-happy-india/

    மிக மிக முக்யமாக …………. ஹிந்துஸ்தானத்தின்…………. பொதுமக்களின் வரிப்பணத்தை சுருட்டி கொள்ளையடிக்கும்……… சுகபோக வாழ்வு வாழும்………. சதிவலைக்கும்பலின் ரத்த சம்பந்தம் எப்படி என்பதை ஒரு அன்பர் தொகுத்திருக்கிறார். அசத்த வைக்கிறது.

    https://www.india-forum.com/forums/index.php?showtopic=2209&s=28d9cbb8c490a32d8cca799cd169d763

  23. அன்பின் ஸ்ரீ தனசேகரன்

    \\ கருத்துக்களைப் பற்றி பேசும்போது கருத்தாளர்களைப் பற்றியும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையினைப் பற்றியும் பேசுவது அவசியமா? \\

    நான் கொடுத்துள்ள உரல்களை தீர்க்கமாக வாசியுங்கள். கருத்தாளர்கள் என்று நீங்கள் சொல்லும் ப்ரக்ருதிகளில் பலபேர் நாளொரு பொய்யும் பொழுதொரு பணம் சுருட்டலுமாக சுகபோக வாழ்வு வரும் அயோக்ய சிகாமணிகள் என்று தெரியவரும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டுமா என்ற கருத்தில் சற்றாவது ந்யாயம் உள்ளது. ஆனால் இந்த கருத்தாளர்கள் பற்றி……..பொதுவாழ்வில் இவர்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி நிச்சயம் பேசவேண்டும். தேசத்தில் ஒரு காலத்தில் மதிப்பு இருந்த ஒரு ஸ்தாபனத்தை…… எப்படி ஒரு கொள்ளையர் கும்பல் தங்களது நமக்கு நாமே திட்டத்தின் படி நாசம் செய்து வருகிறது……. சம்பந்தம் என்பது இந்த கும்பலுக்கும் இலக்கியத்துக்குமா அல்லது இந்த கும்பலுக்கும் இடதுசாரி குண்டர்படையினருக்குமா? ………… என்பது நிச்சயம் பொது தளத்தில் பேசப்பட வேண்டும்.

  24. //தீரா விட அயோக்ய கும்பலை எப்படி எதிர்மறையா வெளம்பரம் செய்ய வேண்டுமோ அதே போல ஹிந்துஸ்தானமளாவிய கும்பலையும் செமத்தியா எதிர்மறையா வெளம்பரம் பண்ணணும். சரி காதா பி எசு காரு, செப்பண்டி.//

    செப்புகிறேன்.

    சின்னச்சின்ன விசயங்களைப் பூதாகரமாகப் பண்ணி அரசின் பெயரைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள் என்று மத்திய அமைச்சர்கள் பேசியிருக்கின்றார்கள். கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டு வருகிறார்கள்.

    திரு கிருட்டிணக்குமார் அப்படிப்பட்ட ஊடகவியனர், மற்றும் அரசியல்வாதிகள் சார்பாக தொடர்ந்து இங்கு சொல்வது: கண்டிப்பாக பூதாகரமாக்கியே தீரவேண்டுமென்று.

    தப்பு நண்பரே. நான் சொல்வதுதான் சரி. விளம்பரம் தேவையில்லை.

    சாஹித்ய அகாடமி பரிசுகள் தனிநபர்களுக்கு அளிக்கப்படுகின்றன. அகாடமி தொடங்கியதிலிருந்து இன்று வரை நூற்றுக்குமேற்பட்டோர் வாங்கியிருக்க, அவர்கள் ஒரு பத்துபேர் திருப்பிக் கொடுத்ததை விளம்பரமாக்கியே தீருவேன் என்றால் அதன் உள்ளோக்கம் அரசின் பெயரைக் கெடுப்பதே.

    சாஹித்ய அகாடமி தேவையேயில்லை. நிதிக்குழவை மோடி அரசு எப்படிக் கலைத்ததே அப்படியே இந்த அகாடமியைக் கலைத்துவிடுவது நன்று. இலக்கியவாதிகளுக்கு உதவவேண்டுமென்றால், அவர்கள் நலிந்தோருக்கு பண உதவி கொடுத்து உதவலாம். பரிசுகளெல்லாம் கொடுக்ககூடா..

    1.விளம்பரம் கொடுக்கக்கூடாது.
    2.பரிசுகள் கொடுக்கக்கூடா.
    3.சாஹித்ய அகாடமி கலைக்கப்படவேண்டும்.

    இவையே என் கருத்துக்கள்.

  25. திரு BS அவர்களுடைய கருத்து வரவேர்க்கபடவேண்டிய கருத்து

    1. சாகித்ய அகடமி விருது வாங்கும்பொழுது இருந்த விளம்பரத்தை விட திருப்பி
    கொடுக்கும் பொழுது அதிக விளம்பரம் கிடைப்பதால் இவர்கள் இந்த விருதை
    திருப்பி கொடுக்கிறார்கலோ என்ற சந்தேகம் எழுகிறது .

    2.விருதை திருப்பி கொடுக்காதவர்கள் பற்றி இவர்கள்என்ன கருதுகிறார்கள் ,அவர்கள் என்ன கருதுகிறார்கள் , மக்கள் கருத்து என்ன, அரசாங்க கருத்து என்ன, சாகித்ய அகடமி கருத்து என்ன, ஒத்த கருத்தா அல்லது மாறுபட்ட கருத்தா என்பதை பற்றி சிந்திப்பதில்லை

    3. எழுத்தை மட்டும் தொழிலாக கொண்டு வாழ்க்கை நடத்தும் எழுத்தாளர்கள் பரிசு பணத்தை திருப்பி எப்படி தர முடியும் .
    4 மேலும் விருது என்பது எழுத்தாளருக்கு அன்றைய சூழலில் அன்றைய எழுத்துக்கு
    அன்றைய சமூக சிந்தனையாளர்களால் வழங்கப்படுவது .
    5.எனவே சாகித்ய அகடமி கலைக்கப்படவும் வேண்டாம், கவலை படவும் வேண்டாம்
    என்தில் காலத்தில் சட்ட திட்டங்களை மாற்றி அமைத்தாலே போதுமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *