போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

 

அற்ப ஆசை?
அற்ப ஆசை?

ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழகத்தை ஆளும் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கும் பாமகவுக்கு நிச்சயமாகப் பொருந்தும்.

பாமகவினர் அண்மைக்காலமாக செய்துவரும் அலப்பறைகளைக் கண்ணுறும் எவரும், சற்றே கதிகலங்கிப் போவார்கள். உண்மையிலேயே அன்புமணிக்கு முதல்வர் கனவு வந்துவிட்டதா? அல்லது, தந்தையின் இயக்கத்தில் முதல்வன் வேடத்தில் அன்புமணி நடிக்கும் ஏதாவது புதிய திரைப்படம் தயாரிக்கும் முஸ்தீபா? “அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” என்று எப்படித்தான் நெஞ்சு நிமிர்த்தி அறைகூவல் விடுக்கிறார் ராமதாஸ்?

காண்க: அன்புமணியே முதல்வர் வேட்பாளர் பா.ஜ.,வுக்கு ராமதாஸ் நிபந்தனை (தினமலர்)

பாமகவின் கடந்தகால வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு பாமகவின் தற்போதைய நாடகத்தின் வெளிவராத பக்கங்கள் புலப்படும்.  “எனது குடும்பத்தினர் எவரும் அரசியலுக்கோ, அரசுப் பதவிகளுக்கோ வந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சாட்டையால் அடிக்கலாம்” என்று வீர வசனம் பேசியவர் அல்லவா தைலாபுர மருத்துவர்?

1980களில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரான வன்னியரை ஒருங்கிணைக்க முற்பட்ட திண்டிவனம் மருத்துவர் ராமதாஸால் எம்.ஜி.ராமசந்திரன் முதல்வராக இருந்த வரை எதுவும் செய்ய முடியவில்லை. அவருக்குப் பின் ஏற்பட்ட அரசியல் நிலையற்ற தன்மையே ஜாதிச் சங்கத் தலைவரான அவரை அரசியல் தலைவராக்கியது. தமிழகத்தின் தனித்தன்மையான அரசியல் நீரோட்டத்துக்கு ஏற்ப கொள்கைகளை வடிவமைத்துக்கொண்ட அவர், சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம் ஆகிய தூண்களின் மீது தனது கட்சியை கட்டியெழுப்புவதாக அறிவித்தார். 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது.

Anbumani-Ramadoss
தனயனும் தந்தையும்

ஆனால், ஆரம்பகாலத்தில் அவரது சமையலில் பருப்பு வேகவில்லை. 1991 சட்டசபை தேர்தலிலும் (1), 1996 சட்டசபைத் தேர்தலிலும் (4) போட்டியிட்டு சிறிய அளவில் அவர் பெற்ற வெற்றிகள், அவரை அடுத்தகட்டத்துக்கு சிந்திக்குமாறு செய்தன. தமிழ்த் தேசியம், தமிழீழ ஆதரவு, பகுத்தறிவு, சிறுபான்மையினருடன் இணக்கம், தாய்மொழிக் கல்வி, சமூக நீதி,… என தமிழகத்துக்கே உரித்தான அரசியல் சொல்வங்கியில் இருந்து பல சொற்களை கைப்பற்றிக்கொண்டார். அத்துடன் அரசியல் மதியூகமாக (ராஜதந்திரம் என்று சொன்னால் வடமொழி நுழைந்துவிடும்) பிற ஒத்த கட்சிகளுடன் கூட்டணி காண்பது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

ஆனால், அவர் அமைத்த கூட்டணிகளால் பாமக அடைந்த வெற்றியின் சதவிகிதம் அதிகரித்தபோதும், அவரது அரசியல் நம்பகத்தன்மை சரிந்துகொண்டே போனது. கலைஞருடன் குலாவும்போது அவரை தமிழினத் தலைவர் என்பார், ஜெயலலிதாவுடன் கூட்டணி காண்கையில், அவர் அன்புச் சகோதரி ஆகிவிடுவார். இந்த நாடகம் சம்பந்தப்பட்ட இருவருக்குமே தெரியும். ஆனாலும், சில மாவட்டங்களில் அவர் வைத்திருப்பதாக நம்பப்படும் வாக்கு வங்கியைக் கருத்தில்கொண்டு அவர்கள் பாமகவுக்கு சில தொகுதிகளைக் கையளித்து கூட்டணி காண்பார்கள். ராமதாஸும் தேர்தல் முடிந்தவுடன் வழக்கமான பல்லவியுடன் கூட்டணித் தோழரையே விமர்சிப்பார். இப்படித்தான் அவரது அரசியல் நேர்மை மதிப்பிழந்தது.

தமிழினத் தலைவருடன் மருத்துவர் ஐயா
தமிழினத் தலைவருடன் மருத்துவர் ஐயா

கிட்டத்தட்ட மதிமுகவின் வைகோவும் பாமகவின் ராமதாஸும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. ஆனால், கருப்புத் துண்டை வலிந்து இழுக்கும் வைகோவுக்கு இல்லாத ஜாதிபலம் ராமதாஸுக்கு இருப்பதால் அவ்வப்போது முன்னுக்கு வந்து விடுகிறார். இருவருமே அதிகாரத்தின் ருசியை நன்கு உணர்ந்தவர்கள். அரசியல் கட்சி நடத்துவதன் லாபத்தைப் புரிந்தவர்கள். வைகோவுக்கு அவர் அதீதமாக நடிக்கும் கோபமே எதிரி. ராமதாஸுக்கோ, எப்படியும் வளையும் நாக்கே நண்பன்.

1998-ல் அதிமுக, பாஜகவுடன் பாமக கூட்டணியில் இணைந்தது தான் பாமகவின் வெற்றிப்பயணத்துக்கு வித்திட்ட முதல் கூட்டணி அனுபவம். அந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வென்று மத்திய அமைச்சரவையிலும் பாமக இடம்பெறவே, பாமகவின் அரசியல் மதிப்பு கூடத் துவங்கியது. அதிமுக தலைவியின் தவறான முடிவால் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தபோது, பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியபோது, அந்த இடத்தை திமுக கைப்பற்றியபோது, பாஜகவை விட்டு பாமக விலகவில்லை. அதன் பலனை அடுத்து 1999-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 5 எம்.பி.களாக அறுவடை செய்தது பாமக.

அன்பு சகோதரியுடன் மருத்துவர் ஐயா
அன்பு சகோதரியுடன் மருத்துவர் ஐயா

அதன்பிறகு மாநிலத்தில் அதிமுகவுடன் அதிசயக் கூட்டணி அமைத்த ராமதாஸுக்கு, 2001 சட்டசபை தேர்தலில் 20 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். அதுவே பாமக இதுவரை பெற்ற வெற்றிகளில் உச்சம். ஆனால் அந்தக் கூட்டணியும் நிலைக்கவில்லை. 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக, காங்கிரஸ் இடம் பெற்ற ஐ.மு.கூட்டணியின் அங்கமானது பாமக. அதன் விளைவாக 6 எம்பிக்களைப் பெற்றது பாமக. அப்போதுதான் தனையன் அன்புமணி ஊழல் வழக்கில் சிக்குவதற்குக் காரணமான சுகாதார அமைச்சர் பதவி அவருக்கு வெள்ளித்தட்டில் வைத்து வழங்கப்பட்டது.

மன்மோகன் சிங் அரசில் சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், இந்தூரில் செயல்படும் இண்டெக்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அதிகார துஷ்பிரயோகம் மூலம் 2008-09 காலகட்டத்தில் இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கினார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. மருத்துவக் கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்று கூறி அகில இந்திய மருத்துவ கவுன்சில் வழங்க மறுத்த அந்த அனுமதியை, தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வழங்கியதால் தான் அன்புமணி சிபிஐயால் ஊழல் வழக்கில் விசாரிக்கப்படுகிறார். இந்த வழக்கைத் தொடுத்தது (2012) அன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசு என்பது முக்கியமான தகவல். (எனவே காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் பாமக இடம் பெறுவது சாத்தியமல்ல).

மத்தியில் நெருக்கம் காட்டும் தனயன்
மத்தியில் நெருக்கம் காட்டும் தனயன்

எனவே தான் அன்புமணி 2004 முதல் 2009 வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் காங்கிரஸைக் கைகழுவினார். அப்போது மருத்துவர் ஐயா அமைத்த மூன்றாவது அணிக்கு 2009 தேர்தலில் எந்த லாபமும் கிட்டவில்லை.

அதன்பிறகு 2011 சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கண்ட பாமகவுக்கு 3 எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைத்தனர். ராமதாஸ் மாவு விற்கப்போன நேரத்தில் வீசிய அதிமுக சூறாவளி அவரது மதியூகத்தை பொடியாக்கிவிட்டது. பிறகு அரசியல் சதுரங்கத்தில் பொலிவிழந்து வலம் வந்த மருத்துவர் ஐயாவுக்கு அவரது மகன் அன்புமணி அளித்த ஆலோசனையால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது திரும்பியது பாமக. இத்தேர்தலில் அதிமுக அலைமுன்பு மோடி அலை பெரு வெற்றி பெறவில்லை. ஆயினும் பாஜகவும் பாமகவும் தலா ஒரு தொகுதிகளில் வென்றன. அதில் முக்கியமான வெற்றி அன்புமணியின் தர்மபுரி தொகுதி வெற்றி.

தேர்தலுக்குப் பிறகு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்த அன்புமணிக்கு பாஜகவின் விஸ்வரூப வெற்றி தடைக்கல்லாகிவிட, காத்திருந்த கொக்கான அன்புமணி நொந்துபோனார். மோடியின் ராஜ்ஜியத்தில் காவடி தூக்கும் கட்சிகளுக்கு இடமளிக்கும் மன்மோகன் வகையறா அரசியல் செல்லுபடியாகவில்லை. எனவே மீண்டும் கலகக்காரர் ஆகிவிட்டார் ராமதாஸ்.

ஊழல் வினை உறுத்து வந்து ஊட்டும்?
ஊழல் வினை உறுத்து வந்து ஊட்டும்?

இதிலும்கூட நுட்பமான ஒரு நாடகம் இருப்பதை அனைவரும் கவனிக்கலாம். அன்புமணி பாஜகவுடன் நெருங்கி இருப்பதுபோல அறிக்கை விடுவார். ராமதாஸோ, உரிமைக்குரல் எழுப்பும் தனியொருவனாக தன்னை முன்னிறுத்துவார்.

தவிர பாஜகவுடன் கூட்டணியில் இருந்தும் எந்தப் பயனும் இல்லை. மத்தியப் புலனாய்வு அமைப்பால் (சிபிஐ) விசாரிக்கப்படும் அன்புமணி மீதான ஊழல் வழக்கை தாமதப்படுத்தவோ, அவரைக் காப்பாற்றவோ மோடி எதுவும் செய்யவில்லை. மிக விரைவில் கைது நடவடிக்கை வரும் சூழல் நெருங்குவதாகவும் தகவல். அப்போது சொந்த வாக்கு வங்கி மக்களேனும் உடனிருக்க வேண்டுமானால், பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதே உகந்த முடிவு என்பது ராமதாஸுக்குத் தெரியும். அப்போதுதான் எதிர்காலத்தில் (நவம்பரில்?) அன்புமணி கைதாகும் நேரத்தில், “பாஜக கூட்டணியிலிருந்து விலகியதால்தான் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபடுகிறது” என்று பிரசாரமாவது செய்யலாம்.

காண்க:  அன்புமணிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆணை (தினமணி) 

தவிர, சேலம், தருமபுரி, விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய வன்னியர் ஜாதி அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சிக்கு கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. இந்தச் செல்வாக்கும் கூட, ஏதாவது ஒரு கூட்டணியில் இருந்தால் தான் செல்லுபடியாகும். இப்போதைய நிலைமையில் பாமகவை அரவணைக்க இரு பிரதான திராவிடக் கட்சிகளும் தயாரில்லை. கலாகார் பாமகவுக்கு கூட்டணியில் இடமில்லை என்று தெளிவாகவே விளம்பிவிட்டார். அந்த அளவுக்கு அவர் ராமதாஸால் நொந்துவிட்டார். சம்பத் முதல் எம்ஜிஆர் வரை பலரை திகைப்பில் ஆழ்த்தி மதியூகத்தில் முனைவர் பட்டம் வாங்கிய தனக்கே பாடம் நடத்தும் மருத்துவரை அவரால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

பலம் காட்டக் கூட்டப்படும் மண்டல மாநாடுகள்
பலம் காட்டக் கூட்டப்படும் மண்டல மாநாடுகள்

அன்பு சகோதரியோ பாமக என்ற வார்த்தையைக் கேட்டாலே முகத்தைத் திருப்பிக் கொள்வதாகத் தகவல். மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சியான தேமுதிகவின் தலைவர் விஜயகாந்துடன் ராமதாஸின் சச்சரவு நாடறிந்தது. இப்போதைக்கு இடதுசாரிகளும் மதிமுகவும் பாஜகவும் தான் மீதமுள்ள கட்சிகள். இவற்றில் பாஜக தேமுதிகவுடன் உலா செல்வது உறுதியாக உள்ள நிலையில், அதனுடன் பாமக சேர்வது தகாது. இடதுசாரிகள் ஏற்கனவே வைகோவை நம்பி ஓட்டைப்படகில் ஏறிவிட்டார்கள். வேறு எந்தக் கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கப்போகிறது?

திமுக அணியில் கலாகாரும் அதிமுக அணியில் அம்மையாரும் தான் முதல்வர் வேட்பாளர்கள் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். பாஜக அணி அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கப் போவதில்லை. பிறகு எதற்கு இந்த வீண் அலட்டல்?

இந்த இடத்தில் ஒரு சிறு புள்ளிவிவரத்தை ஒப்பிடுவது அவசியமானதாக இருக்கும். 2006, 2011 ஆண்டுகளில் நடைபெற்ற இரு சட்டசபைத் தேர்தல்களிலும் பாமக திமுக தலைமை தாங்கிய கூட்டணியில் இருந்தது. அதில், 2006-ல் 18,63,749 வாக்குகள் பெற்று 18 தொகுதிகளில் வென்றது பாமக. ஆனால், 2011-ல் 19,27,783 வாக்குகள் பெற்றும் 3 தொகுதிகளில் மட்டுமே பாமகவால் வெல்ல முடிந்தது. 2011-ல் பாமக பெற்ற வாக்குகள் 2006-ல் பெற்றதைவிட அதிகம். ஆனால், வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை தலைகீழாகிவிட்டது. இதன் காரணம் என்ன?

ஏனெனில், 2006-ல் அதிமுக மீதான அதிருப்தியால் திமுக கூட்டணிக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்தனர். அதே மக்கள் 2011-ல் திமுக மீதான அதிருப்தியால் அதிமுக கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களித்தனர். தமிழகத்தைப் பொருத்த வரை திமுக- அதிமுக என்ற இரு துருவ அரசியலில் இருந்து இப்போதைக்கு மாற்றம் ஏற்படப் போவதில்லை. அதற்குள் ‘மாற்றம் என்றால் அன்புமணி’ என்று விளம்பரப்படுத்துவதால் அடையப் போகும் லாபம் என்ன?

இன்னுமா ஊர் நம்புகிறது?
வடிவேலின்  ‘வின்னர்’ பட வசனம் நினைவுக்கு வருகிறதா?

இப்போதெல்லாம் கட்சி நடத்துவதே அதிகாரத் தரகுக்கான கவசமாகத் தான். தவிர தேர்தலில் போட்டியிடுவதே தேர்தல் நிதி வசூலிக்கத் தான். அல்லது தன்னிடம் ஏற்கனவே உள்ள கருப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக்கத் தான் என்று விஷயமறிந்த ஞானிகள் கூறுகிறார்கள். இது பாமக விஷயத்தில் உண்மையா என்பதற்கு, ராமதாஸின் முன்னாள் சகாவான வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) தான் பதில் சொல்ல வேண்டும்.

விளம்பர நிறுவனம் வடிவமைத்துத் தரும் சுவரொட்டியை தமிழகம் முழுவதும் ஒட்டிவிட்டு, அனைத்து பத்திரிகைகளிலும் முழுப்பக்க விளம்பரம் கொடுத்துவிட்டால், மக்கள் வரிசைகட்டி நின்று தங்களுக்கு வாக்களித்து விடுவர் என்று மருத்துவர் ராமதாஸ் பகல் கனவு காண மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.

எனினும், மதுவிலக்கு, தாய்மொழிக் கல்வி, தொழில்வளம், சுகாதாரம் தொடர்பான தெளிவான கருத்துகள் ராமதாஸிடமும் அன்புமணியிடமும் உள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. அதற்காக, இறக்கை கட்டிக்கொண்டு மலை உச்சியில் இருந்து குதித்தால் பறந்துவிட முடியாது.

இப்போதைய தமிழக அரசியல் சூழல் அதிமுகவுக்கே சாதகமாக இருக்கிறது. அதை வெல்ல வேண்டுமானால், திமுக தரப்பில் வலுவான அணி அமைய வேண்டும். அதைத் தடுக்கவே பாமகவின் கோஷங்கள் பயன்படும். மருத்துவர் ஐயா காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார் என்று நம்பும் தொண்டர்களும் இம்முறை நம்பிக்கை இழக்க, நூறு சதவிகிதம் அதிகமாகவே வாய்ப்புகள் காணப்படுகின்றன.

.

40 Replies to “போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி”

  1. இவரை இவ்வளவு அறிந்தும் ,,,,பிறகு ஏன்?

  2. In a democracy like ours, any leader can aspire to be the ruler as PM or CM through democratic means of getting elected as the leader of the party in the House and then, as PM or CM. No party MLA or MP can bother about CBI cases about their leader. Today CBI cases are not taken seriously because they are motivated and used as weapons by the powers that be, for e.g. the cases against incumbent Himachal CM.

    PMK has a solid and loyal vote bank of vanniyars and they will give the party MLA seats. It has alliance with caste parties like Kongu Vellal Gaundars and Thevars and even Tamil brahamanar Sangam – in other words, all anti-dalit combination. Together, the Coalition will get a a simple majority and in that case, there are chances of AnbumanI getting elected as CM.

    Nothing can be ruled out from today.

    I am not a supporter of PMK. I only look to a future of possibilities to remind you of the fact that a villain can be a hero and a hero be a villain in today Indian democracy.

  3. //மதுவிலக்கு, தாய்மொழிக் கல்வி, தொழில்வளம், சுகாதாரம் தொடர்பான தெளிவான கருத்துகள் ராமதாஸிடமும் அன்புமணியிடமும் உள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. //

    இந்த தெளிவும் அக்கறையும் வேறு கட்சிகளிடம் இல்லாதபோது, பிறகு ஏன் பா.ம.க,ஆட்சிக்கு வரக்கூடாது,அன்புமணி முதல்வர் ஆகக்கூடாது? தமிழகத்தில் உண்மையான நல்ல அரசியல் மாற்றம் வரவேண்டுமென்றால் தமிழக மக்கள் பா.ம.க வுக்கு ஒரு வாய்ப்பை தந்து பார்க்கலாம்.

  4. அடடா, ஸ்வாமின் உங்களால் இப்படி ஜகஜ்ஜாலமா ஹாஸ்யமா கூட எழுத முடியுமா.

    இப்படி நீங்கள் ஸொஷ்டமா எழுதியது டமில் தான் என்று நீங்கள் வழக்கம் போல துண்டு தாண்டி சத்யப்ரமாணம் செய்வதையொத்து………….

    தேவரீருடைய மேதாவிலாஸத்தை அடியொற்ற சிறியே…………ச ச அடியேனும் ப்ரயத்னம் செய்கிறேன்

    \\ In a democracy like ours, any leader can aspire to be the ruler as PM or CM through democratic means of getting elected as the leader of the party in the House and then, as PM or CM. \\

    பிரியுது. பிரியுது. எழுபத்துரெண்டு கன்னிகைகளுடன் சுவனத்தில் க்ரீடை செய்து கொண்டிருக்கும் செந்தமிழரான யாகூப் மேமனை பூலோகத்துக்கு இழுத்து வந்து தமிழகத்தில் போட்டியிடச் செய்து செங்கோட்டையில்……….. கருணாநிதிச் சோழர், ஜெயலலிதா சோழி……….. இத்யாதி சான்றோர் பெருமக்கள் அமர்ந்த சிம்ஹாஸனத்தில் இருத்திவைக்க கையில் பட்டுத்துண்டுடன் ( குறிப்பு :- மஞ்சள் கலர்) காத்துக்கொண்டிருக்கிறீர்கள். கருணாநிதிச் சோழர் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பொங்கி வழிகிறது உங்கள் கண்களிலும் வழிகிறது. இரண்டும் ஒன்று கலந்து சங்கமமாகி காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. சங்கே முழங்கு. முரசொலி. அசுபம்.

    \\ No party MLA or MP can bother about CBI cases about their leader \\

    அட்றா சக்க. அட்றா சக்க. அட்றா சக்க.

    ஃபாஸிஸ்ட் ராம்சாமி நாயக்கருடைய பக்த கோடிகளில் ஒருவரான தேவரீர் அவருடைய இன்னொரு பக்த கோடியாகிய கருணாநிதிச் சோழரை அடியொற்றிக் கருத்துப் பகிர்வது புளகாங்கிதமடையச் செய்கிறது. ஆனந்தமென்சொல்வனே (வாழி எம்.எஸ்)

    பச்சே டம்ளரான தக்ஷிணாமூர்த்தி காரு செப்துன்னாரு. கட்பாடு ரொம்ப முக்யா. கட்பாடா மீரந்தரு பொட்டிய ரொப்னா கண்யா வெங்காயமெல்லா பொடக்காலில போடுன்னு செப்துன்னாரு.

    தலைவன் எவ்வழி தொண்டரடிப்பொடிகள் அவ்வழி. பொலிக பொலிக.

    \\ Today CBI cases are not taken seriously because they are motivated and used as weapons by the powers that be, for e.g. the cases against incumbent Himachal CM.

    ஸீபீஅய் எல்லாம் டுபாக்கூர். சரண்டி. தரவாத இந்த கோர்ட்டு கச்சேரியெல்லாம் கூட டுபாக்கூரண்டி. லாலு யாதவ்…………. சரி சரி உங்கள் படிக்கு லல்லு யாதவ் போன்ற சான்றோரை மோட்டியோ சோட்டியோ வேட்டடா காராக்ருஹத்தில் தள்ளிருக்கே.

    மனவாள்ளு தக்ஷிணாமூர்த்தி காரு அவருக்கு ஹிமாசல் இன்கும்பெண்ட் முக் மந்த்ரி காரோடா ஏமி கனெக்ஷனு.

    ஓஹோ. பச்சே டம்ளரான கருணாநிதிச் சோழர் இத்தாலிய ராஜமாதா ஜீ யை மணிமேகலைத் தாயே என்று செப்பியிருக்கிறார். ஸ்………… செப்துன்னாரு. தமிழகத்தின் அசலான தமிழர்கள் தக்ஷிணாமூர்த்தி காரு சொல்ல வந்தது மணிமேகலை இல்லவே இல்லை……….. அவர் சொல்ல வந்தது தேவரீருடைய செந்தங்க்ளீஷ் பாஷை ப்ரகாரம் money making கலை என்று புரிந்துகொண்டு விட்டார்கள். மாதா ஜீ யின் கடாக்ஷத்துக்கு பாத்ரரான…………. அது என்னா? குகும்பர்………ச ச இன்கும்பெண்ட் அவருக்கு ஜலதோஷம் என்றால் பச்சே டம்ளரனா தக்ஷிணாமூர்த்தி காருக்கு தும்பல் வராதா என்ன. தேவரீடுயை மனோவ்யாகூலம் சால பிரியுது . பிரியுது.

    \\ I am not a supporter of PMK \\

    பிள்ளையார் சிலைகளை தெருத்தெருவாய் உடைத்த ராம்சாமி நாயக்கருடைய பக்த கோடியாகிய தேவரீர் இதை சொல்லவும் வேணுமோ

    \\ I only look to a future of possibilities to remind you of the fact that a villain can be a hero and a hero be a villain in today Indian democracy. \\

    த்தோடா. சொல்ட்டாரு. ஒரு தபா சொன்னா நூறு தபா சொன்ன மாரி. மணியில் குறியாய் இருக்கும் கழகக் கண்மணிகாள் அன்புமணியில் ஏமாறாதீர். கட்பாடா நாம் பொட்டியில் ரொப்ப வேண்டிய மணி வேறே மணி.

    த்தோ…………. இசுடாலினார் சைக்கிள் மேலே ஒஸ்தாரு. ஓரம்போ ஓரம்போ

    ஆமென்.

  5. //PMK has a solid and loyal vote bank of vanniyars and they will give the party MLA seats. It has alliance with caste parties like Kongu Vellal Gaundars and Thevars and even Tamil brahamanar Sangam – in other words, all anti-dalit combination. //

    ஐயா BS இதென்ன புதுக்கதை ! PMK ஆட்சிக்கு வந்தால் முதலில் அவஸ்தை பிராமணர்களுக்குத்தான் . Tamil brahamanar Sangam – PMK வை ஆதரிக்கிறது என்று எங்கு படித்தீர்கள் என்று சொல்ல முடியுமா ? அப்படி இருந்தால் கண்டிப்பாக அதை எதிர்த்து அந்த சங்கத்துக்கு நான் கடிதம் எழுதுகிறேன். மேலும் TAMBRAS ஆதரித்து ஒரு கட்சி ஜெயிக்கும் அளவுக்கு TAMBRAS க்கு செல்வாக்கு இருக்கிறதா ? நம்பவே முடியவில்லையே !

  6. திரு கிருட்டிணக்குமார்!

    இக்கட்டுரை பா ம கட்சியைப்பற்றியது. சரியாக கட்டுரையைப் படித்த பின்னர் எழுதுங்கள்.

    அன்புமணி முதல்வராவது எனக்குச் சரி; உங்களுக்கு?

  7. கட்டுரையில் தாய்மொழிக் கல்வி என்று சொல்லியுள்ளீர்கள். தாய்மொழ்க் கல்வி என்பது வேறு – தாய்மொழி வழிக் கல்வி என்பது வேறு. இன்று தமிழகத்தில் தாய்மொழிக் கல்வி உள்ளது. சி சுப்பிரமணியம் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட தாய்மொழி வழிக்கல்வியை , திராவிட இயக்கங்கள் சிறிது சிறிதாக அடகு வைத்து , வெளியே அனுப்பும் வேலையை செய்து அந்த இடத்தில் ஆங்கிலம் ஆட்சிசெய்ய வழிவகுத்து இருக்கிறார்கள்.

    காரணம் தமிழ் காட்டுமிராண்டி மொழி- தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன கன்னடத்து நாயக்கரை தலைவர் என்று சொல்லித்திரியும் கும்பல் தானே திராவிட இயக்கங்கள் என்பது – பாமக என்ற கட்சியின் மொழிக்கொள்கை தெளிவாக சொல்லப்படவில்லை. மேலும் துவக்கத்தில் வன்னியர் சங்கம் என்ற ஜாதி சங்கம் மூலமாக அரசியலில் நுழைந்ததால் , இப்போதும் பாமக என்ற கட்சிக்கு மக்கள் வாக்கை பெறுவது சிரமம். போதாக்குறைக்கு அடிக்கடி விடுதலைப்புலிகளை பற்றியெல்லாம் பேசி வெட்டிப்பேச்சும் பேசுகிறார்கள்.

    மக்கள் இன்றைய சூழலில் வி-சி ,பாமக,கம்யூனிஸ்டுகள்,போன்றவற்றின் பக்கம் இல்லை. எதிர் அணியில்தான் இருக்கிறார்கள். அதிமுக 2011- தேர்தலை போலவே மீண்டும் பெருவெற்றி பெரும் நிலையே உள்ளது. திமுக ஆதரவு வாக்காளர் எண்ணிக்கை மேலும் தொடர்ந்து குறைந்துவருகிறது. டூஜி – வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் திமுக அதல பாதாளத்துக்கு போய்விடும். மோடியின் புகழால் பாஜகவுக்கு தமிழகத்தில் சிறிது வாக்கு சதவீதம் கூடும். சட்டசபையில் பாஜகவுக்கு ஒரு பத்து இடம் கிடைக்கும் அவ்வளவுதான். அந்த பத்து இடம் என்னவென்றால், 1977- சட்ட சபை தேர்தலில் ஸ்தாபனக் காங்கிரஸ் ( ஜனதா ) பெற்ற அதே பத்து எண்ணிக்கைதான் பாஜகவுக்கு கிடைக்கும்.

  8. அன்பர் பி எசு

    \\ இக்கட்டுரை பா ம கட்சியைப்பற்றியது. சரியாக கட்டுரையைப் படித்த பின்னர் எழுதுங்கள். \\ அன்புமணி முதல்வராவது எனக்குச் சரி; உங்களுக்கு? \\

    ஸ் ஸப்பா………..த்சோ த்சோ இந்த வ்யாசத்துக்கு தேவரீர் எழுதிய காமெடி பீஸினை வாசித்து விழுந்து விழுந்து சிரித்து அதற்கு அணிமணி பொன் மாலைகள் சமர்ப்பித்த படிக்கு அடியேனுடைய உத்தரம்.

    \\ அன்புமணி முதல்வராவது எனக்குச் சரி; உங்களுக்கு? \\

    அப்டீங்ளாண்ணே. அப்ப, ***** I am not a supporter of PMK. I only look to a future of possibilities to remind you of the fact that a villain can be a hero and a hero be a villain in today Indian democracy. *** இந்த மாதிரி செந்தங்களீஷில அட்ச்சு வுட்டது யாருங்க. நெம்ப டமாஸ் பண்றீங்க ஸாம்யோவ்.

    உங்களச் சொல்லி குத்தமில்ல. ஆதிக்க ஜாதி இனவெறி ராம்சாமி நாயக்கர் பச்சே டம்ளரான தக்ஷிணாமூர்த்தி காரு மற்றும் சாரங்கபாணிக்கோனார் இத்யாதி தீரா விட தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்ட மழுங்கிப்போன பகுத்தறிய முடியாயத கையறுநிலை இப்படித்தான் எழுத வைக்கும்.

    தமிழகத்தை ஆறு தசாப்தங்களாக சீரழித்த தீரா விட தீய சக்திகள் அடிச்சுவடின்றி அழித்தொழிக்கப்பட வேண்டும். அது தான் எனது முதல் லக்ஷ்யம்.

  9. தீரா விட தீய சக்திகள் தமிழகத்திற்கு செய்த தீங்குகள் எண்ணிறந்தவை. அவற்றை பட்டியலிட்டால் ஒரு முழு வ்யாசமே எழுத வேண்டும். ஆனால் தீரா விட தீய சக்திகள் தமிழகத்திற்குச் செய்த தீங்குகளில் தலையானது தமிழகத்து நீராதாரங்களை சுவடு இல்லாமல் தொடர்ந்து அழித்தொழித்து வருவது.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆறு, ஏரி, குளம், குட்டை என்று அனைத்து நீராதாரங்களையும் தூர்த்துப் பாழாக்கி தங்கள் குடும்ப சொத்துக்களை பெருக்க வேண்டி ……….இவற்றையெல்லாம் ப்ளாட் போட்டு விற்று இவற்றில் குடியிருப்புக் காலோனிகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் என சிமெண்டு ஜல்லிக் காடுகளாக மாற்றி…………. தங்கள் குடும்ப சொத்தைப் பெருக்கி……. தமிழகத்தை சிறிது சிறிதாக பாலைவனமாக்கி வரும் அவலம்.

    இது சம்பந்தமாக இணையத்தில் வாசித்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். கீழே வாசிக்க நேர்ந்த ஒரு ஃபேஸ்புக் பதிவு :-

    ……… ………… ……… ……….. ……… ………..

    கேரளா பொதுப்பணித்துறை மூத்த பொறியாளார் அவர்.. தற்போது அரசியலில் உள்ளார்.. அவரை இன்று சந்தித்து ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்க நேர்ந்தது. நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவது பற்றி ஒரு தகவலை என்னிடம் பகிர்ந்தார்..
    இந்தியாவிலேயே தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்.. கேரளாவுக்கு முல்லை பெரியாறு, கர்நாடகாவுக்கு காவிரி, ஆந்திராவுக்கு கிருஷ்ணா.. ஆனால் தமிழகத்திற்கு??
    ரொம்பவும் பரிதாபப்பட்டு கொள்ளாதீர்கள்.. இந்த மாநிலங்களை விடவும் அதிக நீர்வளம் உங்கள் மாநிலத்தில்தான் உள்ளது.. ஆனால் இப்போது இல்லை. காமாராஜர் ஆட்சிக்குப் பின் வந்த எந்த அரசும் நீர்நிலைகள் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை.
    விளைவு, தமிழகத்தில் 5 ஆயிரம் குளங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளது.. 45 சதவீதம் குளங்கள் மறைந்துவிட்டன. இவ்வளவு நடந்த பின்னரும் கூட, நீர்நிலைகளை அழிவிலிருந்து காக்க அரசு முன்வரவில்லை..
    தமிழகத்தில் நீர்வளம் பெருமளவு குறைந்துவிட்டது. இப்போதும்கூட நீர்வளத்தை அதிகரிப்பதற்கு வழி தேடாமல், அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் கேட்டு அலைகிறீர்கள்.. தமிழகத்தின் நீராதாரம் எந்தளவுக்கு அழிவடைந்து வருகிறது என்பதைப்பற்றி நம்மாழ்வார் அவர்கள் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறார்.. ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை..
    உண்மையிலேயே அரசுக்கு மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் மீது அக்கறை இருந்தால், தண்ணீர் பற்றாக்குறைக்கு உண்மையாகவே நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற நினைப்பிருந்தால், தண்ணீருக்காக கையேந்தி நிற்பதை முதலில் விடுங்கள்..
    தமிழகத்தில் உள்ள அணைகள், குளங்கள், ஏரிகள், கணவாய்கள் போன்ற நீர்நிலைகளை தூர்வாரி நீர் சேமிப்பை அதிகரிக்கச் செய்யுங்கள். எஞ்சியிருக்கும் நீர்நிலைகளையாவது ஆக்கிரமிப்பிலிருந்து தடுத்து நிறுத்துங்கள்.. மழைநீர் சேமிப்பு திட்டத்தை விரிவாக்கம் செய்யுங்கள்.. அணை, ஆறுகளில் மணல் கொள்ளையை முழுவதுமாக தடுங்கள்.. தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைத்து நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துங்கள்..
    இதுமட்டும் நடந்தால் தமிழகம் தனது தேவை போக, அண்டை மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் அளவுக்கு நீர்வளம் பெருகும் வாய்ப்பிருக்கிறது..
    ஆனால் அப்படி செய்ய மாட்டார்கள்.. ஏனென்றால் வெற்றிகரமான அரசியலுக்கு பெரிய அளவிலான நிரந்தர பிரச்சினை ஒன்று வேண்டும்..

    ……………….

    எங்கள் ஜில்லாவான சேலத்தில் மட்டிலும் பாழாக்கப்பட்ட ஏரிகளைப் பட்டியலிடுகிறேன். மனது கொதிக்கிறது.

    மரவனேரி……… சேலத்தின் மிகவும் பெரிய குடியிருப்புக் காலோனி………. முன்னாளைய பெரிய நீராதாரமான ஏரி
    ராஜாராம் நகர்…….. சேலத்தின் குடியிருப்புக் காலோனிகளில் ஒன்று ……… முன்னாளைய பெரிய ஏரி
    நாராயண நகர்………. சேலத்தின் குடியிருப்புக் காலோனிகளில் ஒன்று………. முன்னாளைய பெரிய ஏரி

    சேலம் புதிய பஸ் நிலையம்…………. எண்பதுகள் வரை என் கண் முன்னால் கடல் போன்று கரைகளில் நீர் ததும்ப கண்கொள்ளாக் காட்சியாக இருந்த பெரிய ஏரி………. இன்றைய தினத்தில் சேலமாநகரத்தின் மிகப்பெரிய சிமெண்டு ஜல்லிக்காடு

    மஹாத்மா காந்தி ஸ்டேடியம்……….. சேலத்தின் விளையாட்டு மைதானம்…… ஒருகாலத்தில் தமிழகம் vs ஸ்ரீலங்கா க்ரிக்கெட் விளையாட்டுக்கள் இங்கு நடந்திருக்கிறது………… முன்னாளைய பெரிய ஏரி

    ……………….

    இவற்றை அழித்தொழித்ததில் பெரும் பங்கு தீரா விட தீய சக்திகளுக்கு இருக்கிறது.

    இன்றைய தினத்தில் இடது சாரி சார்புடைய மார்வாடியாகிய ஸ்ரீ பீயுஷ் மானுஷ் என்ற ஒரு அன்பர் சேலத்து நீராதாரங்களை பாதுக்காக்கவும் புனரமைக்கவும் பெரும்பாடுபட்டு வருகிறார். அவரது முயற்சிகளால் இது வரை மூக்கனேரி மற்றும் குமரகிரி மலையடிவாரத்தில் உள்ள ஏரி இரண்டும் புனரமைக்கப்பட்டு அமுதிற்கீடான இனிமையான நீர் இதில் கிட்டுகிறது. மேலும் அரிசிப்பாளையத்தில் உள்ள ஒரு கேழ்ப்பாரற்ற மாசுபட்டிருந்த ஒரு குளத்தை பொதுமக்களின் உதவியுடன் சுத்திகரித்து இன்று கண்ணுக்கு விருந்தாக தூய்மையான ஒரு நீராதாரமாக மாற்றியிருக்கிறார்.

    ……………..

    தமிழகத்து நீராதாரங்களைக் காப்போம்.

    மணல் வாரி மாஃபியாக்களுடன் கூட்டு சேர்ந்துள்ள………. தேச விரோத……… ஹிந்து விரோத…….. தீரா விட தீய சக்திகளைச் சுவடு இல்லாமல் அழித்தொழிப்போம்.

  10. Krishakumar

    Do you like Anbu mani as CM of TN or not?

    Advantages are:

    No truck with dravidian parties.
    PMK does not support Muslims or Christians
    PMD is against dalits marrying upper and middle class brides. It will make Tamil brahmins save their daughters from dalit boys.
    PMK is not anti-brahmin
    PMK does not laud EVR as their hero
    PMK are not atheists
    PMK members are devote Hindus
    PMK is holding three-day Pongu Tamizh Conferences to celebrate Hindu saints and musicians

    (There may be many; couldn’t remember all)

    The only drawback is they support Tamil eelam.

    Krishnakumar, you may consider the advantages and neglect the one drawback – but that is no harmful disadvantage as LTTE is history now and political and social scene in Srilanka is fast changing and there is no support for Srilankan Tamils in TN as seen from election results – VAIKO was defeated! –

    So, you can support PMK and PMK is a good ally of BJP in TN. If Anbumani becomes CM, BJP can take up Dy. CM post first using which post, BJP makes deep inroads and later on, can usurp PMK also. Further, the only substantial hope for BJP in choosing a allies is PMK.

    Support PMK. It is the best bet for you

    Regards.

  11. திரு.கிருஷ்ண குமார் ……..

    //தமிழகத்தை ஆறு தசாப்தங்களாக சீரழித்த தீரா விட தீய சக்திகள் அடிச்சுவடின்றி அழித்தொழிக்கப்பட வேண்டும். அது தான் எனது முதல் லக்ஷ்யம்.//

    நல்லது, உங்களின் லக்ஷ்யம் ஈடேற எனது வாழ்த்துக்கள்.. நீங்களாவது அதை செய்ய வேண்டும். வெற்றிகரமாக செய்தால் மகிழ்ச்சியே..

  12. 2016 சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கின்றன. தமிழகத்தில் பி ஜே பி மூன்றாவது இடத்தில் வருவது கூட நினைத்துப் பார்க்க முடியாது. அக்கட்சியில் மகத்தான தலைவர்கள் தமிழகத்தில் இல்லை. ஒரே வழி ஏதாவது கட்சியோடு சேர்ந்து கூட்டணியை வைத்துக் கொண்டு கொஞ்சமாவது தாமும் இருக்கிறோம் என்று நிலைப்படுத்திக்கொள்வது எதிர்காலத்திற்கு நன்று.

    அப்படிப்பட்ட கூட்டணிக்கு பா ம கவே சிறந்தது. அவர்கள் ஏற்கனவே பி ஜே பியோடு இணைந்திருக்கிறார்கள். விலகவில்லை. அவர்களின் கொள்கைகள் பி ஜேபிக்கு ஒத்துவரும். தலித்து எதிர்ப்பு ஒரு பிரச்சினையில்லை. இந்துமத ஆதரவே முக்கியம். கிருத்துவ இசுலாமியர்கள் பெருக்கத்தை பி ஜே பியால் குறைக்க பா ம கவின் கூட்டணியே சிறந்தது. ஊழல் என்றெல்லாம் பேசிப் பயனில்லை. ஊழலை மக்கள் பெரிதாக எடுக்கவில்லை என்பதை ஜெயலலிதாவின் தொடர் வெற்றி நிரூபித்திருக்கிறது.

    கூட்டணி சேர அன்புமணியே முதல்வர் எனபதை ஏற்பதில் பி ஜே பிக்கு பிரச்சினையில்லை. ஏனெனில், அவர்கள் ஆட்சி அமைக்க, அல்லது ஒரு கூட்டணியின் தலைமை தாங்க தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அது தற்போது நடக்காது. எனவே, அன்புமணியின் தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்து திராவிடக்கட்சிக்களை எதிர்க்கலாம். அன்புமணி ஆட்சியமைத்தால், டெபுட்டி முதல்வர் பதவியைகேட்டுப்பெற்று,. அப்பதவியின் மூலமாக தமிழக மக்களின் பார்வையைப்பெற்று அடுத்த தேர்தலை இலக்காகக் கொள்ளலாம்.

    சுருக்கமாக என் கருத்து என்னவென்றால், பா ம கவே ஒரே வழி. அன்பு மணியே முதல்வர். இல்லாவிட்டால் ஜெயலலிதாவை அசைக்கவே முடியாது. பி ஜே பி அவரோடு கூட்டு சேர்ந்தால் எந்த அமைச்சர் பதவியும் கொடுக்க மாட்டார். அன்புமணி கொடுப்பார்.

    இத்தளத்தில் வன்னியர்களுக்கெதிராக, பா மா கவை எதிர்த்து எழுதுபவைகளை நிறுத்தினால் நன்மையுண்டு.

  13. //தமிழகத்து நீராதாரங்களைக் காப்போம்.//

    அரசியல் கட்சிகளை நம்பிக்கொண்டு இருக்காமல் நீர், மரம் போன்ற இயற்கை வளங்களை பெருக்க மாபெரும் சமூக இயக்கத்தை ஆரம்பித்து நடத்த வேண்டும்.

  14. Bring Anbumani as CM. He will retrieve all water sources. He will send back all DMKs and DKists to history. I am sure.

  15. அன்பின் ஸ்ரீ ஆனந்த் சாகர், நீராதாரங்களையும் வனங்களையும் பாதுகாக்க வேண்டிய இயக்கங்கள் தமிழகத்தில் வெற்றியுடன் இயங்கி வருகின்றன. தமிழக சர்க்கார் நீராதாரங்களையோ வனங்களையோ காக்க சுட்டு விரலையாவது அசைக்கும் என்று எனக்கு (இந்த தீரா விட தீய சக்திகள் இருக்கும் வரை) நம்பிக்கையில்லை. சர்க்கார் நீராதாரங்களையோ வனங்களையோ மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்தாலே பெரிய காரியம்.

    இங்கு நான் இந்த விஷயத்தை ப்ரஸ்தாபிக்க முனைவதன் காரணம். கண்முன்னால் பார்த்த நீர்நிலைகள் சிமெண்டு ஜல்லிக்காடுகளானதை பார்த்து நொந்து போனது.

    உத்தரபாரதத்தில் விருந்தாவனத்தில் நீராதாரங்களை மீட்க நிகழும் இது போன்ற ஒரு பெரும் முயற்சியை நான் நேரில் கண்டு அதை ஆதரித்து வருகின்றேன். தமிழகத்தில் என் சொந்த ஜில்லாவான சேலத்தில் இந்த முயற்சிகளுக்கு அரும்பாடுபட்டு வரும் ஸ்ரீமான் பீயுஷ் மானுஷ் அவர்களது செயல்பாடுகளால் சேலத்தில் அருகி வரும் நீராதாரங்கள் பாதுகாக்கப்படுவதை எனக்கு பரிச்சயமானவர்கள் மூலம் நன்றாக அறிந்து வருகிறேன். அந்த இயக்கம் இடது சாரி சார்புடையதாக இருந்தாலும் சரி என்னுடைய சொந்த ஜில்லாவுக்கு இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின் செயல்பாடுகளால் பற்பல தலைமுறைகளுக்கும் நன்மை என்பதற்காக இதை ஆதரித்து வருகிறேன். ஆகையால் இதை இங்கு பகிரவும் நேர்ந்துள்ளது.

    இது போன்ற செயல்பாடுகள் பாரதமளாவி ஹிந்துத்வ தரப்பினரிடமிருந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது என் அபிலாஷை. அதுவும் ஒரு காரணம்.

    மருத்துவர் ஐயா அவர்களது கட்சி ஒரு காலத்தில் மரம் வெட்டிக் கட்சி என்று அழைக்கப்பட்டது. அது போன்ற கார்யத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஸ்ரீமான் தொல் திருமாவளவன் அவர்களுடன் கூட்டு சேர்ந்து தமிழகத்தில் இவர்களது அரசியல் கட்சி அரசியல் நடத்தியுள்ளது. ஆனால் இந்த கட்சியினர் தமிழகத்தின் பழம் பெரும்பாரம்பர்யம் வாய்ந்த ஜாதியினருடன் பிணக்கு கொண்டுள்ளது தமிழகம் அறிந்ததே. இதை எப்படி இவர்கள் சமன் செய்வார்கள்……….. தங்களை எப்படி சீர்திருத்திக்கொள்வார்கள்………. என்பதைப் பொறுத்தே வெகுஜன ஆதரவு இதற்கு சாத்தியம் என்பது என் புரிதல்.

    யார் தப்பித் தவறிக்கூட தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டாலே தமிழக அரசியல் உருப்படும். அன்பின் ஸ்ரீ தாயுமானவன் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    ஹிந்துஸ்தானத்தின் மற்ற மாகாணங்களை அந்தந்த மாகாணத்தவர் ஆட்சி செய்கையில் ………….. ஸ்ரீமான் பக்தவத்சலம் அவர்களுக்குப் பிறகு ……….. தொடர்ந்து தமிழகம் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத தீரா விட தீய சக்திகளின் ஆளுமையில் இருந்தமை ஒரு முடிவுக்குக் கொணரப்பட வேண்டும்.

  16. @கிருஷ்ணகுமார் – ஒரு கட்டுரை ஒருவரை கிறுக்கனாக முடியுமா? உதாரணம் கிருஷ்ணகுமார் அவர்கள்… இந்த PMK வேண்டும் என்றுதான் பிஜேபி விரும்பியதை அனைவரும் அறிவோம்…

  17. “தீரா விட தீய சக்திகளைச்” வரம்பு மீறி பேசுதல் அழகல்ல… இன்று இந்து மதத்திற்கு நிலவும் சூழல் யாரால் என்பது அனைவருக்கும் தெரியும்… ஒருவர் இந்து மதத்தை விட்டு விலகுவது என்பது தீண்டாமையினால் என்பது தங்களது பேரறிவிர்ற்கு தெரியுமா???

    தாங்கள் என்ன செய்தீர்கள்? மழை நீர் சேகரிப்பு தங்கள் வீட்டில் உள்ளதா என்பது தங்கள் மனசாட்சிக்கு தெரியும்…

  18. அன்பர் சாரை

    ஃபாஸிஸ்ட் ராமசாமி நாயக்கரின் அகராதியில் நீராதாரங்களைப் பாதுகாத்தல் என்பது கிறுக்குத் தனம் என்று சொல்லியிருக்கிறதோ. பொலிக பொலிக.

    என்னை நேரில் கூட பார்த்திராத உங்களுக்கு என் வீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம் உள்ளதா………..என்று என் மனசாக்ஷியை கேழ்க்க விழைவது தங்களுக்கு………. கிறுக்குத் தனமாக தோன்றவில்லையோ ஐயா. வாழ்க. உள்ளது ஐயா உள்ளது.

    \\ தாங்கள் என்ன செய்தீர்கள்? \\

    சாரை யார் என்று கூட தெரியாத நான் நிச்சயமாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் அது கிறுக்குத் தனமாகத் தான் இருக்கும். அல்லது வெறுப்புத் தனமாக. அது போன்ற கிறுக்குத் தனமான அல்லது வெறுப்புத் தனமான கருத்துக்களின் சொந்தக்காரர் தாங்களாகவே இருக்கட்டும் சரியா?

    நீராதாரங்களைப் பாதுகாக்கும் இயக்கங்களில் நான் ஈடுபட்டு வருவதால் அதன் செயல்பாடுகளைப் பற்றிய அறிமுகம் உள்ளதால் அதைப் பகிர வேண்டியது என் கடமை. நீராதாரங்களை சீர்குலைத்து ப்ளாட் போட்டு விற்பது என்ற தீரா விட தீய இயக்கங்களின் மாண்பிற்கு தாங்கள் ஆதரவளிக்க விழைந்தால் அதைத் தாங்கள் நேரடியாகச் செய்யலாமே.

    சீர்குலைக்கப்பட்ட நீராதாரங்கள் பெயர் வாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலனவை சீரழிக்கப்பட்டது தீரா விட தீய சக்திகளின் ஆட்சிக்காலத்தில் தான் என்பது உலகமறிந்த விஷயம். தமிழகத்தை சீர் குலைத்த தீரா விட தீய சக்திகளின் பக்த கோடிகளாக இருந்தால் மட்டிலுமே இந்த சீரழிவுகளைப் பற்றி வாயே திறவாது நீராதாரங்களைக் காக்க வேண்டும் என்று சொல்வது கிறுக்குத் தனம் என்று முத்துதிர்க்க முடியும். பொலிக பொலிக.

    \\ ஒருவர் இந்து மதத்தை விட்டு விலகுவது என்பது தீண்டாமையினால் என்பது தங்களது பேரறிவிர்ற்கு தெரியுமா \\

    ஹிந்து மதத்தின் எந்த ஒரு நூலிலும் ஹிந்துஸ்தானத்தின் எந்த ஒரு ஜாதியையும் தெளிவாகக் குறிப்பிட்டு இந்த ஜாதியைத் தீண்டாமைக்கு ஆட்படுத்த வேண்டும் என்று பரப்புரை செய்யப்பட்டதில்லை என்பது தங்களது பஹூத் அறிவிற்குத் தெரியாது இல்லையா? தீண்டாமை என்ற கொடுமை ஹிந்துக்களுடைய செயல்பாட்டில் காணப்பட்ட விஷயமே அன்றி ஹிந்து மதம் பரப்புரை செய்யும் விஷயம் அன்று என்று தெளிவீர். மேலும் வைதிகம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் மற்றும் எண்ணிறந்த நாட்டார் வழிபாடுகள் அடங்கிய ஒரு தொகுப்பே ஹிந்து மதம் என்ற விஷயத்தைத் தாங்கள் அறிந்திருந்தால் இப்படி அட்ச்சு வுட்டுருக்க மாட்டீர்கள் அல்லவா. என் செய. தீரா விட தீய சக்திகள் செய்த போதனையை கிளிப்பிள்ளைகளாகச் சொல்லவே பழக்கப்பட்டவர்களிடமிருந்து அறிவு பூர்வமான உரையாடலை எதிர்பார்த்தல் வீணானது அன்றோ.

    வரம்பு என்பது தீரா விட தீய சக்திகளுக்கு மட்டிலும் தான் இல்லை என்பது உலகமறிந்த விஷயம். தீரா விட தீய சக்திகளின் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டதாகப் பேசப்படும் ஊழல்கள் இத்தனை கோடிக்கணக்கான ரூபாய்கள் என்று பத்திரிக்கைகளில் பேசப்பட்ட போது அதில் உள்ள பூஜ்யங்களுக்கான வரம்புகளைக் கூட இந்த தீரா விட தீய சக்தியினர் அறிந்திருப்பாரோ என்றே உலகம் வியந்துள்ளது என்று தங்களுடைய பேரறிவுக்கும் கூட எட்டியிருக்கலாம் ஐயா.

  19. //Bring Anbumani as CM. He will retrieve all water sources. He will send back all DMKs and DKists to history. I am sure.//

    நான் இதை வழிமொழிகிறேன்.

  20. அன்பர் பி எசு

    \\ PMK does not support Muslims or Christians \\

    முஸ்லீம் ஓட்டுக்களுக்காக மேல் விஷாரம் கீழ் விஷாரம் விஷயத்தில் இவர்கள் சொந்த ஜாதியினராகிய வன்னியர்களைக் கூட காக்க விழையவில்லை என்பது உலகமறிந்த விஷயம்.

    \\ PMD is against dalits marrying upper and middle class brides. It will make Tamil brahmins save their daughters from dalit boys. \\ PMK is not anti-brahmin \\

    நீங்கள் எழுதும் தளம் தமிழ் ஹிந்து தளம். இந்த தளத்தில் ஜாதி இணக்கத் திருமணங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது தாங்கள் அறிந்ததே. சங்க பரிவார இயக்கத்தைச் சார்ந்த அன்பர்கள் எல்லோரும் ஜாதி இணக்கத் திருமணங்களை ஆதரிப்பவர்கள். நிலமை அப்படி இருக்கையில் நீங்கள் பகிரும் கருத்து பி எம் கே வுக்கு ஆதரவுக்கருத்தா. அல்லது வேட்டு வைக்கும் கருத்தா என்பதனை உங்களது தங்க்ளீஷ் உபயகுதர்க்க வாதத்துக்கேவிட்டு விடுகிறேன்.

    ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் ஹிந்துக்கள் ஒன்றிணைந்த சக்தியாக தேச ஒற்றுமைக்குப் பாடுபட வேண்டும் என்பதே ஹிந்து இயக்கங்களைச் சார்ந்தவர்களது எண்ணப்பாடு.

    சுவிசேஷிகளுக்கும் முகமூடி சுவிசேஷிகளுக்கும் மட்டிலும் ஆப்ரஹாமிய மதமாற்ற வ்யாபாரத்தை அபிவ்ருத்தி செய்ய வேண்டி ஹிந்துக்கள் ஒன்றிணையாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது முக்யமான விஷயம். இப்படியெல்லாம் தேவரீர் கருத்துப் பகிர்ந்தால் தேவரீரை யாரேனும் முன்னதிலாவது பின்னதிலாவது சேர்த்து விடுவார்கள். பூர்வாவதாரமெல்லாத்தையும் வேற நினைவு கூறுவார்கள். இதெல்லாம் தேவையா ஸ்வாமின். தீரா விட தீய சக்திகளை தாங்கள் தலை முழுக விழைவது தெரிகிறது. வாழ்த்துக்கள். மிக நல்ல முதல் படி. அடுத்த படியாக தீரா விட தீய சக்திகளின் ஆதிக்க ஜாதி இனவெறிக்கருத்துக்களையெல்லாம் தலை முழுகி ஹிந்து ஒற்றுமைக்குப் பாடுபட விழைவது இன்னமும் நன்றாக இருக்குமே.

    \\ PMK does not laud EVR as their hero \\

    ஆதிக்க ஜாதி இனவெறி ஃபாஸிஸ்ட் ஈ.வெ.ராம்சாமி நாயக்கருடைய படங்கள் இல்லாமல் பி எம் கே சுவரொட்டிகள் தமிழகத்தில் ஒட்டப்பட்டதில்லை என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றாக அறியும். அதை அவர்கள் தலை முழுகி விட்டார்கள் என்றால் நன்று. மிக நன்று.

    \\ PMK are not atheists \\ PMK is holding three-day Pongu Tamizh Conferences to celebrate Hindu saints and musicians \\

    மிக நல்ல காரியம். உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ஆனால் நான் முன்னமே குறிப்பிட்ட படிக்கு தமிழகத்தின் பழம்பெரும் பாரம்பர்யம் வாய்ந்த ஜாதியினருடன் இவர்கள் கொண்டிருந்த பிணக்கினை சீர்திருத்த இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பகிருங்கள்.

    தமிழ் ஹிந்து தள வாசகர்களுக்கு எந்தெந்தக் கட்சிகள் ஹிந்து ஒற்றுமைக்குப் பாடுபடுகிறார்கள் என்று தாங்கள் கருத்துப் பகிர்வது மட்டிலுமே அவதானிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கும்.

    உங்களுடைய ஜாதிவாதக்கருத்துக்கள் உங்களை நீங்கள் தலை முழுக விழையும் தீரா விட தீய சக்திகளுடனான பிணைப்பு அறுந்து போகவில்லை என்றே கருத வைக்கும்.

    சுவிசேஷ மற்றும் முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கிகளுக்கு மட்டிலும் ஹிந்துக்களை பிளவு செய்வது உகப்பாக இருக்கும் என்பது தாங்கள் அறியாத விஷயமா என்ன?

  21. //ஹிந்துஸ்தானத்தின் மற்ற மாகாணங்களை அந்தந்த மாகாணத்தவர் ஆட்சி செய்கையில் ………….. ஸ்ரீமான் பக்தவத்சலம் அவர்களுக்குப் பிறகு ……….. தொடர்ந்து தமிழகம் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத தீரா விட தீய சக்திகளின் ஆளுமையில் இருந்தமை ஒரு முடிவுக்குக் கொணரப்பட வேண்டும்.//

    எம் ஜீ ஆர் பல்லாண்டுகளாக முதல்வராக இருந்தார். அவரின் தாய்மொழி தமிழ் இல்லை. அவர் மலையாளி எனபது இரகசியமாக அவர் வைக்கவில்லை. தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் முதல்வராயிருந்த போது அவரை மலையாளி என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார்கள். தமிழக மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். அவர் இருந்தபோது, திரு கிருட்டிணக்குமார் போன்றவர்களால் வாய் திறக்க முடியவில்லை. அதே போல தமிழ்ப்பார்ப்பனர்களை ஆரியர்கள் எனவும் வந்தேறிகள் எனவும் திராவிடகட்சிகள் எழுதிய போது திரு கிருட்டிணக்குமார் போன்றவர்கள் வருந்தினார்கள். இன்றும் வருந்துகிறார்கள். தனக்கு வந்தால் இரத்தம். மற்றவனுக்கு வந்தால் தக்காளிச்சட்னியா ?

    சரி, இவர் சொல்வது போல தமிழ் நாட்டைத் தமிழனே ஆளவேண்டுமென்றால், திராவிடக்கட்சிகளுக்கெதிரான மாற்றாக பி ஜே பி வரவேண்டும் இவர் சொன்னால், அக்கட்சியின் நிலையென்ன?

    அக்கட்சி ஆட்சிக்கு வந்தால், முதல்வர் பதவிக்கு வேண்டுமென்றால், தற்போதைய தலைவர சவந்திரராஜன், மத்திய அரசு அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன் இருவரில் ஒருவரைப் போட்டுவிடலாம். இருவருக்கும் தமிழ் தாய்மொழி எனவே.

    அமைச்சர்களாக தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோரே இருக்கவேண்டுமென்றால், பிற பி ஜே பி தலைவர்களை என்ன ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் கேரளாவுக்குமா முதல்வராகப் போட? பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டோராக பல பிரபலங்கள் பி ஜே பியில் இருக்கும்போது திரு கிருட்டிணக்குமாரின் திடீர் தமிழ்க்காதல் – பலத்தைப் பழம் என்றும் கேள்வியைக் கேழ்வி என்று தமிழைச்சிதைத்துக்கொண்டு எழுதும் கிருட்டிணக்குமாருக்கும் தமிழ்க்காதல் வரும் 🙂 – பி ஜே பிக்கு எதிராக போகுமே?

    ஆர் எஸ் எஸ்சோ, பி ஜே பியோ – தேசிய நிலைபாடு கொண்டவை. மண்ணின் மைந்தருக்கே மண் என்றால் இந்தியா உடைந்துவிடும். திரு கிருட்டிணக்குமார் உள்ளிருந்தே குழிதோண்டிக் கொண்டிருக்கிறார்.

    திராவிடக்கட்சிகள் வேணடாமென்றால், பிற கட்சி வரட்டும். அதுவே சரியான எதிர்ப்பார்ப்பு.

  22. //தமிழக சர்க்கார் நீராதாரங்களையோ வனங்களையோ காக்க சுட்டு விரலையாவது அசைக்கும் என்று எனக்கு (இந்த தீரா விட தீய சக்திகள் இருக்கும் வரை) நம்பிக்கையில்லை//

    விருந்தாவனத்தில் நடப்பதைப்பார்த்து எழுதும் திரு கிருட்டிணக்குமார், தமிழகத்தில் நடைபெறுவதைப்பார்க்கவில்லை.

    தீரா விட கட்சிகள் என்று இவரால் இகழப்படும் ஆட்சிக்கு வந்த இருகட்சிகள் தி மு க, அ. தி மு க மட்டுமே.

    அ தி மு க ஆட்சிக்காலத்தில்தான் மழை நீர் சேகரிப்புத் திட்டம் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

  23. DMK is not anti-Hindu: Stalin

    Refuting the allegations that the DMK was anti-Hindu, party treasurer M.K. Stalin said 90 per cent of the party cadres were Hindus and their family members had faith in religion and god.

    “There is a well-planned campaign to project that the DMK is anti-Hindu. But the family members of party leaders and cadre have faith in god. Even my wife is visiting all temples across the State and I never once asked her not to go. We do not stand in the way of those who have faith,” he told The Hindu .

    Mr. Stalin, who had a meeting with a team of temple priests in Kumbakonam, said he visited Thirukoshtiyur temple in the first phase of his tour because it was there Saint Ramanuja, ignoring the warning of his teacher, climbed the temple tower and spoke aloud so that everyone could know what he had been taught.

    “We, the followers of Anna, have faith in Thirumoolar’s dictum Ontrey Kulam Oruvaney Devan (There is one community and one God). Our leader Kalaignar wrote dialogues for the tele-serial Ramanuja, because it was he who had paved way for entry of all communities, including Dalits, into the temples,” he said. Rejecting the allegation that he was visiting temples and meeting priests in view of the coming election, the DMK leader said that he respected the sentiments of all sections of people and even in the past had visited temples and accepted the poorna kumbam .

    “I began Namakku Naamey in Kanyakumari and there I called on leaders of all religions. I have visited mosques and I have been invited to visit the church at Velankanni. Our leader is always given warm reception at Saidapet temple during election campaigns,” he said.

    Asked about the feedback to his tour, he said people in the State were looking for a change and the DMK was the only alternative.

    – From today The Hindu.

    This will shut the mouths of many like Mr Krishnakumar

  24. தமிழகத்தைப் பொறுத்த வரை பெரிய கட்சிகள் இரண்டும் இவ்விஷயத்தில் ஒன்று தான். தமிழ் நாட்டின் இயற்கைச் செல்வங்கள், கலாசாரச் செல்வங்கள் இவற்றையெலாம் அழிப்பதில் பெரும் முனைப்போடு செயல் படுபவை இரு கட்சிகளும்,

    ” சர்க்கார் நீராதாரங்களையோ வனங்களையோ மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்தாலே பெரிய காரியம்.”

    முற்றிலும் உண்மை. சென்னையில் சமீபத்தில் காணாமல் போன நீர்நிலைகள் எத்தனை.

    இதில் குடும்ப அரசியல் செய்யும் பெரியவர் நடத்தும் கட்சி மேலும் பல படிகள் படு மோசமானது, கேடுகள் பலவற்றிற்கு வித்து இட்டது அனைவருக்கும் தெரிந்ததே.இவர்கள் அடிப்படை, அழிவு சித்தாந்தமான தீரா -விஷ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது.

    இவர்கள் செய்த பெரும் மோசம் மக்கள் மனதை ஓரளவு வெற்றிகரமாக விஷமிட்டுக் கெடுத்ததே .நல்ல சம்பாத்தியம், நல்ல வாழ்க்கை அமைந்த மக்களும் அடுத்த மாநிலத்துக் காரனைப் பார்த்து எதற்கோ பொருமுவது தீரா-விட காம்ப்ளெக்ஸ் காரணமாகவே.

    ஆனால் தமிழ் பேசும் பாரதீயனின் முன்னோர்கள் செய்த அறம் வீணாகாது. “…ஆழ்க தீயதெல்லாம் ,அரன் நாமமே சூழ்க! வையகமும் துயர் தீர்கவே! ” என்ற தெய்வப் பிள்ளையின் வாக்கு பொய்க்காது. தீரா விடம் தீர்ந்து விடும் மக்கள் பலரும் உணரும் போது…

  25. பெரிய கட்சிகள் மட்டுமல்ல , அவற்றின் இடத்தைப் பிடிக்க ஆசைப் படும் அடுத்த படியில் இருக்கும் மற்ற திராவிடக் கட்சிகளும் திராவிட மாயை வேலைகளில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. பெயர்கள் வேறு. என்பதைத் தவிர பெரிய வித்யாசம் வேறு ஒன்றுமில்லை.

  26. திரு BS

    தாங்கள் தங்களுடைய பிராமண வெறுப்பை இந்தத் தளத்தில் நிறையவே சொல்லிருக்கின்றீகள்.
    பின் ஏன் வீணாக பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள் ? “பிராமணர் ஒழிக – அதிலும் தமிழ் பிராமணர்
    அறவே ஒழிக” என்று எழுதிவிட்டுப் போங்களேன். யார் என்ன சொல்லப் போகிறார்கள் !

    அதிலும் நீங்கள் PMK வைப் பற்றி எழுதும்போது ( நீங்கள் நிஜமாகவே சொல்கிறீர்களா என்று தெரியவில்லை )
    நீங்கள் தமிழக அரசியலில் இருந்து வெகு தூரம் உள்ளவர் போல் தெரிகின்றது.

    ( இப்போதைக்கு அதிமுக வுக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்பதை எல்லாக் கட்சிகளும் உணர்ந்துதான் உள்ளன )

    திரு சரவ் என்பவர் திரு கிருஷ்ணகுமார் அவர்களை கிறுக்கன் என்று கூறுகிறார். திரு BS அவர்களின் மறுமொழியை என்னவென்று சொல்வரோ ?

  27. //தனக்கு வந்தால் இரத்தம். மற்றவனுக்கு வந்தால் தக்காளிச்சட்னியா ?//

    தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை என்று பாடிய போதே தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் ‘ஆர்ய பார்ப்பனர்’ உட்பட திரு எம்ஜியார் அவர்களை தமிழராக ஏற்றுக் கொண்டோம். தவிர அவரை மலையாளி என்று சொன்னது ‘தெலுங்கர்’ ஆன திரு கருணாநதி அவர்கள்தான், மற்றவர்கள் சொல்லவில்லை.

    ஆர்ய வந்தேறிகள் என்று கூறி 1967 இல் அரசு அமைத்த பிறகு அந்த கூப்பாடு பிறகு நடந்த தேர்தல்களில் வோட்டு வாங்குவதற்கு உபயோகப் படவில்லை என்பது தமிழ் நாடறிந்த விஷயம்.

    இன்றைய விஞ்சான ஆராய்ச்சிப் படி ஆப்பிரிக்காவில் முதலில் மனித இனம் தோன்றியது என்றும் கூறப் படுகிறது. அது உண்மை என்றால் மனித குலமே ‘ஆப்ரிக்க வந்தேறிகள்’ தான்.

  28. அன்பின் ஸ்ரீ ரங்கன்

    \\ திரு சரவ் என்பவர் திரு கிருஷ்ணகுமார் அவர்களை கிறுக்கன் என்று கூறுகிறார். திரு BS அவர்களின் மறுமொழியை என்னவென்று சொல்வரோ ? \\

    அந்த அன்பரின் பெயர் சரவ்? SARAY என்று படித்து விட்டேன். வெள்ளெழுத்துக் கண்ணாடி. க்ஷமிக்கவும்.

    அதாவது தீரா விட இயக்கத்தின் அனந்த கல்யாண அவகுணங்களை பட்டியலிட ஆரம்பித்து விட்டேனாம். அது பொறுக்கலை போலும். இந்த லக்ஷணத்தில் வரம்பு பற்றி வேறா லெக்சர்.

    ஒரு சதாப்தம் வசவிலேயே காலம் தள்ளிய இயக்கத்தின் கைப்புண்ணுக்குக் கண்ணாடி காண்பித்ததற்கே இப்புடி.

    தமிழகத்தில் தமிழர்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள். ஆதிக்க ஜாதியினரும் சரி. தமிழகத்தின் பழம்பெரும் பாரம்பர்யம் வாய்ந்த ……… ஆதிக்க ஜாதியினருடன் பூசலுக்கு உள்ளான ஜாதிகளும் சரி……….. இந்த தீரா விட இயக்கத்தை தமிழகத்திலிருந்து சுவடு இல்லாமல் அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தெளிவு கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

    தமிழகத்தின் பழம்பெரும் பாரம்பர்யம் வாய்ந்த ஜாதியினர் தங்களது முன்னோர்கள் தமிழகத்திற்குச் செய்த சேவைகள், பங்களிப்புகள் மேலும் தங்களது முன்னோர்கள் கோவிலுக்கு விட்ட நிவந்தங்கள் போன்றவற்றை நினைவு கூற ஆரம்பித்து விட்டனர். ராஜாக்களாகவும் நிலச்சுவான் தாரர்களாகவும் பெருமை வாய்ந்து இருந்த குமுகங்கள் தங்களது யதார்த்தமான பெருமைகளை உள்வாங்கி இன்று தாழ்த்தப்பட்ட அல்லது தலித் என்ற சொல்லாடல்களையும் விடுத்து தம் பாரம்பர்யப் பெருமைகளின் வாயிலாகவே தம்மை அடையாளப்படுத்த விழைகின்றனர். மிகவும் பெருமையுடன் அவதானிக்க வேண்டிய விஷயம் இது.

    தீரா விட தீய சக்திகளை கருவறுக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்களிடையே பெரும் தெளிவு உள்ளது. இந்த சிந்தனை ஒரு புறம் வளர்ந்து வருகையிலேயே மறு புறம் பரங்கிக் கும்பினியர்களுக்கு வால் பிடித்த தீரா விட தீய இயக்க குடும்ப கும்பினிக்காரர்களிடம் வாலி சுக்ரீவன் தோற்றுப்போகுமளவு பாசம் பொங்கி வழிகிறது.

  29. அன்பர் பி எசு

    \\ DMK is not anti-Hindu: Stalin \\ This will shut the mouths of many like Mr Krishnakumar \\

    மீரு தக்ஷிணாமூர்த்தி காருக்கு சப்போர்ட் சேஸ்துன்னாரு. சரண்டி.

    இத நேர்மையா நேரடியா சொல்லலாமே.

    இந்த கழகக் கும்பினி ஹிந்து விரோதி இல்லையாமா? ஆருக்கிட்ட ஆரு அட்ட்சு விட்றாங்க.

    ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னது எந்த நாக்கு என்பதை தமிழகம் இன்னும் மறந்து விடவில்லை.

    அராபியக் காசில் வஹாபியரின் நோன்பில் கஞ்சி குடித்து கை நக்கிய வாய் ஆனால் ……. ஒரு புறம் ஆப்ரஹாமியத் திருவிழாக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ஒவ்வொரு ஹிந்துப் பண்டிகைகளின் போதும் ஹிந்துக் கடவுட்களை இழித்துப் பழித்துப் பேசிய அவலத்தை தமிழக ஹிந்துக்கள் யாரும் மறந்து விடவில்லை. மறந்தாலும் நினைவுறுத்தப்படுவார்கள்.

    இதே இசுடாலின் காரு அவர்கள் வினாயகர் சதுர்த்தியின் போது வாழ்த்தும் தெரிவித்து பின்னர் அதை வாபஸ் வாங்கிய கந்தறகோளத்தையும் தமிழகம் அறியும்.

    ராம சேதுவை சுவடு இல்லாமல் அழித்தொழித்து கடல்மார்க்கத்தில் பணத்தைக் கொட்டி அரசியல் வாதிகளின் சொத்துபத்துக்களை வளமாக்க இந்த தீராவிட தீய இயக்கத்தினர் செயல்பட்டமை தமிழகத்துக்குத் தெரிந்த விஷயமே.

  30. அன்பர் பி எசு

    \\ விருந்தாவனத்தில் நடப்பதைப்பார்த்து எழுதும் திரு கிருட்டிணக்குமார், தமிழகத்தில் நடைபெறுவதைப்பார்க்கவில்லை. தீரா விட கட்சிகள் என்று இவரால் இகழப்படும் ஆட்சிக்கு வந்த இருகட்சிகள் தி மு க, அ. தி மு க மட்டுமே. அ தி மு க ஆட்சிக்காலத்தில்தான் மழை நீர் சேகரிப்புத் திட்டம் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. \\

    தீரா விடக் குசும்புத் தனம் என்பது இது தான். நான் விருந்தாவனத்து நீராதார மீட்புக்களில் மட்டிலும் பங்கெடுக்கவில்லை. தமிழகத்தில் எனது சொந்த ஜில்லாவில் இதற்காக எடுக்கப்படும் முயற்சிகளில் பங்கெடுத்து வருகிறேன்.

    ஆயிரக்கணக்காக குளங்களைத் தூர்த்து நாசமாக்கி ஆறுகளில் இருந்து மணல் கொள்ளை அடிக்கப்படுவதை கண்டும் காணாமலும் இருந்த தீரா விட தீய சர்க்கார்கள் ……… மணல்கொள்ளையில் தொடரும் ஒவ்வொரு தீரா விட தீய இயக்கத்துக்கும் சம்பந்தம் இருப்பது தமிழ்ப்பத்திரிக்கைகளில் நாற்றமாக நாறும் சமாசாரம்…….. மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைப் பேசுவதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    ஆறு, ஏரி, குளம், குட்டை, மரம், மட்டை எல்லாத்தையும் காலி செய்து பணம் பார்ப்பார்களாம். அதை அப்படியே கபள சோற்றில் பூஷணிக்காயை மறைப்பது போல மறைத்து மழை நீர் சேகரிப்பு பஜனை செய்வார்களாம். கேவுறுல நெய் வடியுது என்று கேப்பவரிடம் மட்டிலும் இப்படி தேவரீர் கதை அளக்கலாம்.

  31. அன்பின் ஸ்ரீ சாய்

    \\ ” சர்க்கார் நீராதாரங்களையோ வனங்களையோ மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்தாலே பெரிய காரியம்.” முற்றிலும் உண்மை. சென்னையில் சமீபத்தில் காணாமல் போன நீர்நிலைகள் எத்தனை. \\

    இதைப் பற்றிப் பேசவும் கூடாது என்று கிட்டத்தட்ட சபதமேற்றுள்ளன தீராவிட தீய சக்திகள். அது மட்டுமா? ஆறு தசாப்தங்களாக தமிழருக்கு தமிழக சர்க்காரே மலிவு விலையில் சாராயம் விக்ரயம் செய்து தமிழ்க்குடும்பங்களை சின்னாபின்னமாக்கிய பெருமை வாய்ந்தது தீரா விட இயக்கம். தமிழகத்துக் கோவில்களை புனரமைக்கிறேன் பேர்வழி என்று மணல்வீச்சடித்து சிற்பங்களையும் கோவில் கற்றளிகளையும் பாழ் செய்த பெருமை வாய்ந்தது தீரா விட தீய இயக்கம். தமிழகத்தின் சரித்ரப் பெருமைகளைப் பகரும் ஒவ்வொரு கோவில் கல்வெட்டுக்களையும் மணல்வீச்சடித்துப் பாழாக்கி அழித்தொழித்த பெருமை வாய்த்தது தீரா விட தீய இயக்கம்.

    களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்லப்படுவதுண்டு. தீரா விட தீய இயக்கத்தினரின் காலமும் எதிர்கால தமிழக வரலாற்றில் இருண்ட காலமாக தமிழர்களால் அடையாளம் காணப்படும் என்பது திண்ணம்.

  32. Mr Rangan

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்டேரே தமிழகத்தை ஆள வேண்டுமென்பது மண்ணின் மைந்தர் (sons of the soil) என்ற கொளகையே. இதைத்தான் திரு கிருட்டிணக்குமார் சொல்கிறார். இக்கொள்கை தேசியத்துக்கு எதிரானது. பி ஜே பி மண்ணின் மைந்தருக்கே என்று எக்கொள்கையும் வைத்துக் கொள்ளவில்லை. பி ஜே பி ஒரு தேசியக்கட்சி.

    சின்னாட்களுக்கு முன் நடைபெற்ற பத்திரைக்கையாளர் சந்திப்பில் பி ஜே பியின் தலைவி சுவந்திரராஜன் அருகில் அமர்ந்திருந்தவர் ஹன்டே. கன்னடக்காரர். இப்படி பலரையும் காட்டலாம். தமிழக‌ மக்கள் எவரை விரும்புகிறாரே அவரும் அவர் சகாக்களும் ஆட்சிக்கு வரலாம். அப்படித்தான் மலையாளியான எம் ஜி ஆரை அழைத்தார்கள்.

    திராவிட திராவிடருக்கே என்ற கோஷமும் தமிழ்நாடு தமிழைத்தாய்மொழியாகக் கொண்டவரே வேண்டும் என்ற கோஷமும் ஒன்றே. கடைசியில் திரு கிருட்டிணக்குமார் திராவிடப் பாசறையிலே அடைக்கலம் ஆகிவிட்டார் போலும்.

    இக்கருத்துக்களில் எங்கே பார்ப்பனத் தூடணை இருக்கிறது?

    நான் எதை விரும்புகிறேன் விரும்பவில்லை என்பதா இங்கு பிரச்சினை?. எதார்த்தங்களைப் பார்த்துப் பேசுகிறேன். அபபடிப் பேசும்போது, திராவிடக்கட்சிகளுக்கு மாற்று பா ம கவே. பி ஜே பி இராமதாசு கூடத்தான் சேரவேண்டும். அன்புமணியின் தலைமையை ஏற்று பின்னர் தனி வலிமை பெற்றவுடன் பிரிந்து கொள்ளலாம். இதுதான் என் எதார்த்தப்பார்வை.

    அன்புமணிக்காவது அவர் ஜாதிக்காரர்கள் வாக்குகள் நிச்சயம். பி ஜே பிக்கு எவர் வாக்குக்கள்? பார்ப்பனர்கள் வாக்குகள் கூட நிலையில்லை. காரணம் அவை பெருவாரியாக ஜெயலலிதாவுக்கே போய்ச்சேருகின்றன. ஸ்டாலின் வருகின்ற வரத்தைப்பார்த்தால், அவர்கள் வாக்குகள் சிதறும்.

    ஒரு கட்சி ஆட்சிக்கு வரலாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு. அக்கட்சியை நமக்குப் பிடிக்காது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக அக்கட்சி உழைக்காமல் வானத்திலிருந்து ஒரே நாளில் கீழே குதித்து விட்டதா? இல்லை. ஏன் வாக்களித்தார்கள் என்பதை ஆராயும் போது மற்றவர்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்பதும், தெரிந்துவிடுமே? ஆக, நம் விருப்பு வெறுப்பு என்றில்லை. உழைத்தவன் கனியைப் பெறுகிறான். குதித்துபபறிக்கத்தெரியாதவனும், சோம்பேறியும் கனியை அவன் பெற்றுவிட்டானே என்று அலற்றும்போது நகைக்கத்தான் முடியும்.

    எனவே வகையறிந்து செயல்படுக.

  33. அன்பர் பி எசு

    \\ எம் ஜீ ஆர் பல்லாண்டுகளாக முதல்வராக இருந்தார். அவரின் தாய்மொழி தமிழ் இல்லை. அவர் மலையாளி எனபது இரகசியமாக அவர் வைக்கவில்லை. தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் முதல்வராயிருந்த போது அவரை மலையாளி என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார்கள். தமிழக மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். \\

    மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் என்றெல்லாம் ஸ்ரீ எம் ஜி ராமசந்த்ரன் அவர்களை தமிழ் மக்கள் சும்மனாச்சிக்கும் அழைக்கவில்லை.

    தீராவிடப் பெரும்பாலைவனத்தின் பாலைவனச்சோலை ஸ்ரீ எம் ஜி ராமசந்த்ரன் அவர்கள் என்றால் மிகையாகாது. பொது வினியோகத்தில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அரிசி, சீனி, க்ருஷ்ணாயில் போன்ற பொருட்களின் சீரான வினியோகம், அரசாங்க மருத்துவ மனைகளில் இருந்து ஏழை மக்களுக்கு இலவசமாகவும் சல்லிசான செலவில் வைத்யம் போன்ற அடிமட்ட மக்களின் தேவைகளை குறையில்லாமல் பார்த்துக்கொண்ட அன்பர் அவர்.

    மலையாளி என்பதை அவர் ரகசியமாக வைக்கவில்லை. தனது அரசால் ஏழை மக்களுக்குத் தொல்லையும் கொடுக்கவில்லை. ஆப்ரஹாமியக் காசில் ஹிந்துக்களுக்கு ஆப்பும் வைக்கவில்லை. ரெண்டு லக்ஷம் கோடி மூணு லக்ஷம் கோடி என்று சைபரை எண்ணியே கொல நடுங்கிப் போகுமளவுக்கு ஊழலும் செய்யவில்லை. அதனால் அவர் மக்கள் திலகமாகத் திகழ்ந்தார்.

    தீராவிட தீய இயக்கங்கள் குஹத்திரு க்ருபானந்தவாரியார் ஸ்வாமிகளை இழித்துப்பழித்த பெருமை உடைத்தக்கால் அவரை மிகவும் மதித்துப் போற்றிய மாண்புடையவர் புரட்சித் தலைவர்.

    ஆப்ரஹாமியத்துக்கு தமிழகத்தை விலை பேசும் தீரா விட தீய இயக்கத்தை சார்ந்த வடுகர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாமல் தமிழர்கள் போல நடிப்பவர்கள் என்பதைத் தமிழர்கள் உணர ஆரம்பித்து விட்டனர்.

    \\ அதே போல தமிழ்ப்பார்ப்பனர்களை ஆரியர்கள் எனவும் வந்தேறிகள் எனவும் திராவிடகட்சிகள் எழுதிய போது திரு கிருட்டிணக்குமார் போன்றவர்கள் வருந்தினார்கள். இன்றும் வருந்துகிறார்கள். தனக்கு வந்தால் இரத்தம். மற்றவனுக்கு வந்தால் தக்காளிச்சட்னியா ? \\

    த்சோ. த்சோ. தீரா விட தீய சக்திகள் தமிழகத்திலிருந்து சைவம் வைஷ்ணவம் போன்றவற்றை சுவடு இல்லாது மெது மெதுவாக அழித்தொழித்து தமிழகத்தை ஆப்ரஹாமிய மயமாக்கி அல்லேலூயா பாடுகையில்……………ஃபாஸிஸ்டு ராமசாமி நாயக்கர் பிள்ளையார் சிலையை தெருத்தெருவாக் உடைத்த அவலத்தை …….. பி எசு போன்றோர் குதூஹலிக்கிறார்கள் என்றும் கூட சொல்லலாம் இல்லையா?

    தமிழகத்தில் நூறு ஆயிரம் வருஷங்களாக வாழ்ந்து வருபவர்களை வந்தேறி என்று சொல்வது தீரா விடத்திற்கு மட்டிலுமே உரித்தான மாண்பு. தமிழகத்தில் இருக்கும் ஒரு அன்பர்…… தீரா விட தீய சக்திகளால் சீரழிக்கப்பட்ட நீராதாரங்களை சீர் செய்பவர்……. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாவிட்டாலும்…………. கொள்கையளவில் இடதுசாரிக்கருத்துக்களைக் கொண்டாலும் ……….. தமிழக நலன் மட்டிலுமே கண்ணாகக் கொண்டவர்கள் ……….. தமிழக நலம் விரும்பியோரை ஆதரிப்பது ஹிந்துத்வ மாண்பு.

    தமிழகத்தை தமிழ் மொழி பேசுபவர் ஆள வேண்டும் என்பது ஃபாஸிஸ்டு ராமசாமி நாயக்கரை ஆதரிக்கும் சக்திகளுக்கு………….. ஆப்ரஹாமியத்துக்கு வால் பிடிக்கும் சக்திகளுக்கு……… ஹிந்து விரோத சக்திகளுக்கு………. ஏன் கசக்கிறது? தீரா விட தீய சக்திகளின் நாஸித்தனமான இனவெறுப்பு இனக்காழ்ப்பு அரசியலின் பாற்பட்டதன்று………… தமிழகத்தை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் ஆட்சி செய்யவேண்டும் என்பதான இப்படியான ஒரு கருத்து. தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மலையாளிகள், மார்வாடிகள் போன்று வடுகர்களும் அனுபவிக்கட்டுமே. ஆட்சி மட்டிலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் கையில் இருக்கவேண்டும் என்பதில் என்ன தவறு. இதில் தேச ஒற்றுமைக்கு எங்கு ஊறு?

    தமிழகத்தை ஆப்ரஹாமிய மயம்னாக்கும் தீரா விட………. தீய ஹிந்து விரோத அரசியல்………. சுவடு இல்லாமல் அழித்தொழிக்கப் பட வேண்டும் என்பதில் சம்சயமே இருக்கக் கூடாது.

    \\ திரு கிருட்டிணக்குமாரின் திடீர் தமிழ்க்காதல் – பலத்தைப் பழம் என்றும் கேள்வியைக் கேழ்வி என்று தமிழைச்சிதைத்துக்கொண்டு எழுதும் கிருட்டிணக்குமாருக்கும் தமிழ்க்காதல் வரும் \\

    என்னுடைய மொழி தீந்தமிழ் என்று எங்குமே நான் சொன்னதும் கிடையாது. முறையாக தூய தமிழில் எழுதும் அன்பர்கள் அனைவரையும் …………. ஸ்ரீமான் கள் பாலா, தாயுமானவன், விக்ஞானி ஜெயபாரதன், வைத்யர் ஸ்ரீ ஜான்சன், பெருமதிப்பிற்குரிய முத்துக்குமாரசாமி மஹாசயர் என அனைவரையும் அப்படியான தூய தமிழில் எழுது விழையும் செயல்பாட்டுக்காக வாழ்த்துவதும் என் செயல்பாடு. திடீர்க்காதல் எங்கு வந்தது.

    அவதார வரிஷ்டராகிய………… வைஷ்ணவத்தைப் பழிக்கும்………. தேவரீரது செந்தங்க்ளீஷ் பாஷை இணையம் முழுதும் கொட்டிக்கிடக்கிறதே.

    என்னுடைய மொழிநடை ஹிந்துஸ்தானத்தின் பாஷைகளான தமிழ், சம்ஸ்க்ருதம் மற்றும் உர்தூ சேர்ந்தது. பரங்கிக் கும்பினியரின் ஆங்க்ல சாராயத்தைத் தமிழ்ப்பொன்னிப்புனலில் சகட்டு மேனிக்குக் கலக்கும் மாண்புடையது தேவரீரது மொழிநடை. இயல்பின் பாற்பட்டு கலப்பு மொழிநடை கருத்துப் பகிர சுளுவான படிக்குக் கைக்கொள்வது நான். தூய தமிழை அறிந்தும் கூட வாக்குதத்தத்தின்பாற்பட்டு தங்க்ளீஷைக் கைக்கொள்வது தேவரீர்.

    தேவரீரது தங்க்ளீஷ் தமிழுக்கு அணி சேர்க்கிறது என்ற தேவரீரது கந்தறகோள சிந்தனை பரிதாபமானது.

    என்னுடையது கலப்பு மொழிநடை என்று நேர்மையாகச் சொல்பவன் நான்.

    கலப்பு மொழிநடையைக் கைக்கொண்டு செந்தமிழில் எழுதுவது போல நடித்து கூசாது செந்தமிழுக்காக முதலைக்கண்ணீர் விடுவது தேவரீர்.

  34. அன்பர் பி எசு

    \\ ஆர் எஸ் எஸ்சோ, பி ஜே பியோ – தேசிய நிலைபாடு கொண்டவை. மண்ணின் மைந்தருக்கே மண் என்றால் இந்தியா உடைந்துவிடும். திரு கிருட்டிணக்குமார் உள்ளிருந்தே குழிதோண்டிக் கொண்டிருக்கிறார். திராவிடக்கட்சிகள் வேணடாமென்றால், பிற கட்சி வரட்டும். அதுவே சரியான எதிர்ப்பார்ப்பு. \\

    தீரா விட கருத்துத் திரிபு என்பது தமிழகத்துக்குத் தெரியாத அவலமா?

    தமிழகத்தை ஆட்சி செய்யும் உரிமை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரிடம் மட்டிலும் இருக்க வேண்டும்………… என்பதை மண்ணின் மைந்தருக்கே மண் என்று கருத்தைத் திரிப்பது தீரா விடத் தீய சக்திக்கு ஆட்பட்டவராலேயே முடியும்.

    மண்ணின் மைந்தருக்கே மண் என்று யாரும் எங்கும் சொல்லவில்லை.

    தமிழகத்தின் முக்ய மந்த்ரியாக இருக்க வேண்டியவர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவராக இருக்க வேண்டும். தமிழகத்தில் மற்றமொழி பேசுபவர்கள் எப்போதும் போல தமிழகத்தில் வாழ்ந்து தமிழகத்துக்கு உழைத்து பெருமை பெற்று வளரட்டும். இதில் எங்கே மண்ணின் மைந்தருக்கே மண் என்று இருக்கிறது.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தப்பித்தவறிக்கூட தமிழகத்தை ஆள்வதற்கு வரவே கூடாது என்ற தீரா விட தீய எண்ணப்பாங்கு மட்டிலும் தேவரீரது கருத்தில் தென்படுகிறது.

    தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் தீரா விட எச்சங்களாக தமிழகத்தில் உலா வருவதை தமிழகத்துத் தமிழர்கள் நன்றாக அறிவர்.

    தமிழகத்துக் கோவில்களை சிதைத்து சின்னாபின்னமாக்கிய, தமிழ்க் கோவில் கதவைப் பெயர்த்து அதற்கு பதிலாகப் பொறுத்திய மரக்கதவில் ஆதிக்க ஜாதி இனவெறி ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் சித்திரத்தையும் ஹிந்துக்களை மதமாற்றிய ஆப்ரஹாமிய புனித தெரசாளின் சித்திரத்தையும் ஏற்றிய சிறுமையை உடைய, தமிழகத்து நீராதாரங்களை அழித்தொழித்த சிறுமையை உடைய, தமிழர்களுக்கு சர்க்கார் செலவில் சாராய விக்ரயம் செய்து தமிழ்க்குடும்பங்களை சின்னாபின்னமாக்கிய சிறுமை உடைய தீரா விட சக்தி தீய சக்தியை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். சொச்ச மிச்சம் இல்லாது தீரா விட எச்சமாக செயல் படும் அனைத்து தீரா விட இயக்கங்களையும் தமிழகம்………… தமிழக நலனை முன்னிட்டு புறக்கணிக்க வேண்டும்.

    இதைச் சொல்வதற்கு நான் தமிழில் எம் ஏ பெற்றிருக்க வேண்டும் என்று அவச்யமில்லை. ஆனால் தமிழக நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பது அவச்யம்.

  35. மண்ணில் மைந்தர்களே வரவேண்டும் எனபதும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோரே முதலமைச்சராக வேண்டுமெனபதும் ஒன்றுதான்.

    திரிபன்று.

    தமிழைத்தாய்மொழியாக எம் ஜி ஆர் கொள்ளவில்லை. பல மாநிலங்களில் அம்மாநிலத்தைச்சேர்ந்தோர் – அதாவது அம்மாநில மொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர் – முதலமைச்சாராக இல்லை. இராஜஸ்தான் முதலமைச்சருக்குத் தாய்மொழி மராட்டி. கருநாடகாவில் முன்னால் முதலமைச்சர் ஒரு மார்வாடி இனத்தைச்ச்சார்ந்தவர். எங்கெங்கு போய் தொடர்ந்து இரு, அல்லது மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து அவ்வூர் மக்களுக்குச் சேவை செய்பவராக இருந்தால் அம்மக்களே ஆட்சி பீடத்தில் வைப்பார்கள் என்பதற்கு எம் ஜி ஆர் மட்டுமல்ல பலர் எடுத்துக்காட்டுக்களாக உள்ளனர்.

    தாய்மொழியோரே ஆளவேண்டுமென்பது. பிறமொழியினர் இரண்டாம் தரக்குடிகளாகத்தான் இருக்க வேண்டுமெனபதாகும். தில்லியில் 10 இலட்சம் தமிழர்கள்; மும்பாயில் அதற்கும் மேல் நான்கு ஐந்து தலைமுறைகளாக வாழ்கின்றனர். உங்கள் கருத்தின்படி அவர்கள் என்றுமே அங்கு உரிமையிழந்தவர்களே.

    இப்படிபப்ட்ட சிந்தனையும் கொள்கையும் இந்தியாவைத்துண்டாடும். பாரதீயக் கலாச்சாரத்தை அழிக்கும்.

    சிவசேனா, 60 களில் தமிழர்களை அடித்துவிரட்டியது. தற்போது பீஹாரிகளை அடித்துவிரட்டுகிறது. உள்ளேயே விடவில்லையென்றால், அரசியலில் விடுவார்களா? மும்பாய் மராட்டியருக்கே. தமிழ்நாடு தமிழருக்கே. கன்ன்டா கன்ன்டையருக்கே. கேரளா மலையாளிகளுக்கே என்றால் என்ன பொருள் தெரியுமா? எங்கு வாழ்கிறோமே அங்கு பலதலைமுறைகளாக வாழ்ந்து அவ்வூரையும் மக்களையும் நேசித்து வாழ்பவன், அவ்வூர் மொழியை நன்கு கற்று மொழிச்சேவை செய்தவன் – இவர்களேல்லரும் இரண்டாம்தரக்குடிகளாகத்தான் அங்கு வாழவேண்டும். காரணம் அவர்களின் தாய்மொழி வேறு. அதே சமயம் அவ்வூரின் தாய்மொழியைக்கொண்டவன் 50 வயது வரை எங்கேயோ வாழ்ந்துவிட்டு இப்போது இங்கு வந்து அம்மொழியையே கற்காமல், தப்புத்தவறுமாகப் பேசினாலும் அவன் தாய்மொழி அது என்ற காரணத்தால் அரசியலில் நுழைந்து ஆட்சி பீடத்திலேற தடையேதுமில்லை.

    உங்கள் சிந்தனை இந்தியாவைத் துண்டாடும். தேசியம், இந்தியா அல்லது பாரதம் என்ற அடையாளம் அழிக்கப்படும். இரண்டாவது: ஓரிடத்து மக்களையே விரும்பாதவன் பதவிக்கு வர, விரும்புவன் வெளியே தள்ளப்படுவான். People will be forced to accept a rascal as their ruler merely because his mother tongue is same with theirs; and reject and ill treat the good person, no matter how many generations he and his forefathers have lived here; how much he and they have served the land of their migration and how much love they had and have for the language of the land they live in; — all will be buried and they will be rejected – because their mother tongues are different.

    No one doubts your aversion and animosity to DMKs and others and you have been spending your time and energy to use all forums to express in no uncertain terms all your aversion. No one stops you. But you can show that and use all your abuses against them, on all grounds except that of mother tongue. You seem to have not known Tamil history. Not only your hate figures, but many many Tamil writers in the past and now, who have enriched our language and literature, didn’t / don’t have Tamil as their mother-tongue. In spiritual spheres too. Even social sphere, many people you may be thinking as Tamil brahmins are indeed Telugu Brahmins. The Junior seer of Kanchi mutt is one.

    I remember to have read – how far it is true I donno – that Arunagirinathar’s ancestors were migrants from Bengal. Kulasekara Alwar was from Kerala country but in his times, no language as Malayalam existed. Tolkappiyar, if he were there now, will be counted as Malayali because he was from Kollam. 40 percent of population of Trivandrum don’t have Malayalam as their mother tongue. It is Tamil.

  36. சரஸ்வதி என்றால் நீர்நிலைகளில் உறைபவள் என்றும் ஒரு அர்த்தம் உள்ளதாக சொல்கிறார்கள்.சரஸ்வதி பூஜையான இன்றைய பொழுது அந்த சரஸ்வதியிடமே தமிழகத்தின் தண்ணீர் வளத்தை காக்க வேண்டுவோம்.

    திரு கிருஷ்ணகுமார் அவர்கள் சொல்வது போல “ஆறு தசாப்தங்களாக தமிழருக்கு தமிழக சர்க்காரே மலிவு விலையில் சாராயம் விக்ரயம் செய்து தமிழ்க்குடும்பங்களை சின்னாபின்னமாக்கிய பெருமை வாய்ந்தது தீரா விட இயக்கம்.”

    தண்ணீர் இல்லை, ஆனால் “தண்ணி ” நிறைய உண்டு என்ற நிலை மாற அகங்கார மகிஷனை வென்ற அந்த ஆதி சக்தி அருளட்டும்.

    தங்கள் மண் வளம் , நீர் வளம் , கோயில் கலாசார வளம் கொள்ளை போவது பற்றி ஏதும் புரிந்து கொள்ளாமல் ஆயுத பூஜை சிறப்புப்படம் பார்க்கும் தமிழ் பேசுவோன் விழித்துக் கொள்ளத் தான் வேண்டும். இன்றில்லா விட்டா; நாளை…

    வயதான பெண்மணிகள் சொல்வது போல ” காலம் இப்படியே போயிடாது. நல்ல காலமும் வரும்”. விரைவில் -தீரும்-விடம் தின்று பழகிய தமிழ் பேசும் பாரதீயன் விடம் தின்பதை நிறுத்தும் மறு கணமே.அன்னை அருளட்டும்.

    அனைவருக்கும் விஜய தசமி வாழ்த்துக்கள்!

  37. //தாய்மொழியோரே ஆளவேண்டுமென்பது. பிறமொழியினர் இரண்டாம் தரக்குடிகளாகத்தான் இருக்க வேண்டுமெனபதாகும். தில்லியில் 10 இலட்சம் தமிழர்கள்; மும்பாயில் அதற்கும் மேல் நான்கு ஐந்து தலைமுறைகளாக வாழ்கின்றனர். உங்கள் கருத்தின்படி அவர்கள் என்றுமே அங்கு உரிமையிழந்தவர்களே.//

    சரியான கருத்து. ஆனால் பிராமணர்கள் என்று வரும்போது இந்த நீதி நியாயம் அத்தனையும் ஓடிப் போய் ‘ ஆர்ய பார்பன வந்தேறிகள், தக்காளி சட்னி, ரத்தம்’ என்கிற வசனமெல்லாம் வந்த குதிக்கின்றன !

  38. அன்பர் பி எசு

    \\ People will be forced to accept a rascal as their ruler merely because his mother tongue is same with theirs; and reject and ill treat the good person, no matter how many generations he and his forefathers have lived here; how much he and they have served the land of their migration and how much love they had and have for the language of the land they live in; — all will be buried and they will be rejected – because their mother tongues are different. \\

    என்னா குசும்புக்கருத்து. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் முக்யமந்த்ரியாக வரவேண்டுமென்றால் தமிழர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு அயோக்யனைத் தேர்வு செய்வார்கள் என்பது உங்கள் கருத்து. கூசவில்லை இப்படி ஒரு கருத்தைச் சொல்வதற்கு?

    சைவம், வைஷ்ணவம் என்று சமயப்படி ஒழுகும் தமிழர்கள் எல்லோரும் ராஸ்கல்.சல்லிக்காசுக்கும் ரம்ஜான் கஞ்சிக்கும் ஆப்ரஹாமியத்துக்கு விலைபோன தீரா விடத்தவர்கள் யோக்யர்கள் என்று தெளிவாகச் சொல்லி விடுங்களேன்.

    \\ No one doubts your aversion and animosity to DMKs and others and you have been spending your time and energy to use all forums to express in no uncertain terms all your aversion. No one stops you. But you can show that and use all your abuses against them, on all grounds except that of mother tongue. You seem to have not known Tamil history. \\

    தீரா விடத்தை தீரா விடம் என்று சொன்னது ஏன் என்பதற்கு தர்க்க பூர்வமாக கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் ஒன்றுக்காவது உங்களிடம் இருந்து ஜவாப் இல்லை.

    தீரா விடத்தை வசவிடவில்லை. வசவு ஜாதிக்காழ்ப்பு பயங்கரவாதத்துக்கு ஆதரவு இதெல்லாம் தேவரீருடைய ஏக போக கருத்தாக்கங்கள்.

    தமிழகத்தை தீரா விடத்தினர் சின்னாபின்னம் செய்த அவல நிலையை சித்திரம் சித்திரமாக நிதர்சனத்தை புட்டு புட்டு வைத்திருக்கிறேன். இதில் உங்களுக்கு ஏற்பில்லாத விஷயம் எது? ஏன்? என்று கருத்துப்பகிர்வது ந்யாயமானது. உண்மை சுடுவதால் உங்களால் அதை நிச்சயமாக செய்ய முடியாது.

    தீரா விடம் ஹிந்து விரோத இயக்கமில்லை என்று எப்படி கூசாமல் உங்களால் அட்ச்சுவுட முடிகிறது?

    தமிழ் வரலாறு. அது எப்புடி. அவதாரம் அவதாரமாக நீங்கள் அட்ச்சு வுடுவதா?

    கந்தசஷ்டி கவசம் எழுதியது அருணகிரி நாதர்.
    1330 குறட்பாக்காள் இல்லாமல் தேவரீருக்கு கனவில் வந்த 1331வது குறள்
    தேவரீர் அட்ச்சு வுட்ட 64 நாயன் மார்.

    இதெல்லாம் சாம்பிளுக்கு. இன்னும் வண்டி வண்டியாக உங்களது தமிழ் வரலாற்று மேதமைச் சான்றுகளை உரல் உரலாகக் காண்பிக்க முடியும்.

    எந்த ஒரு மாகாணத்திலும் எந்த ஒரு மாகாணத்தவரும் வளமுடன் வாழ ஹிந்துஸ்தானத்தின் சட்டம் வழிவகுக்கிறது. அதே போல எந்த ஒரு மாகானத்திலும் எந்த மொழி பேசுபவரும் முக்யமந்த்ரியாகவும் தேசத்து அரசியல் சாஸனம் தடைவிதிப்பதில்லை.

    ஆனால் தமிழகத்தில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர் முக்ய மந்த்ரியாக எக்காரணம் கொண்டும் வரவே கூடாது என்று தாங்கள் மனப்பால் குடிப்பது ஏன் என்று தெளிவாகச் சொல்லலாமே.

  39. கட்டாருக்கு ஹரியான்வி தாய்மொழியன்று. பஞ்சாபிதான் தாய்மொழி அவர் ஒரு பஞ்சாபி கத்ரி. (ஜாதி). ஹரியானா ஜாட்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?

    தேசியம் பேசும் பி ஜே பி ஏற்றது. ஹரியானா ஹரியானா ஜாட்களுக்கே என்று பேசியிருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.

    தாய் மொழி தமிழே என்று இருந்துவிட்டால் மட்டும் மக்களூக்குப்போதாது. அவர்களுக்கு எவர் மீது நம்பிக்கை இருக்கிறதோ, அவரின் தாய்மொழி எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது நடக்கும் செயல். புரட்சித்தலைவராக ஏற்று முதலமைச்சராக்கி அழகுபார்த்தார்கள். எம் ஜி ஆர் மக்களின் ஏகோபித்த ஆதரவோடுதான் வாழ்ந்தார். அவரின் தாய்மொழி தமிழ் இல்லை எனப்து குழந்தைகளூக்குக் கூட தெரியும்.

    ஜர்மனியில் ஒரு நகரத்து மேயராக தெலுங்கர் ஒருவர் ஆகியுள்ளார். சிங்கப்பூரில் எவருமே ஆகலாம். நாளை அமெரிகாவில் ஹிந்தியைத்தாய்மொழியாகக் கொண்ட்வர் குடியரசுத்தலைவராகலாம். கனடாவில் தமிழைத்தாய்மொழியாகக் கொண்டவர் பிரதமர் ஆகும் காலம் வரும். ஏற்கனவே பாராளுமன்றத்தில் உறுப்பினராகிவிட்டார்கள். சீக்கியர்கள் இங்கிலாந்து மேல் சபையிலும் எம்பிக்களாகவும் உள்ளனர்.பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்டவர் அமைச்சராக உள்ளார். ஒரு குஜராத்தி, அல்லது சீக்கியர் ஆங்கிலேயர்களுக்குத் தலைவராக காலம் வெகுதூரமில்லை.

    திரு கிருட்டிணக்குமார் காலம் உங்களை கையில் இல்லை. மக்கள் கையில் என்பதை ஹரியானா காட்டுகிறது.

    அன்புமணிக்கு தாய்மொழி தமிழே. தேர்ந்தெடுக்க ஏன் தயங்குகிறீர்கள்?

  40. ஜெருமன் பான் நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் சிரிதரன் தேர்வு.

    https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=174833

    இவருக்குத் தாய்மொழி ஜெருமன் இல்லை. ஜெருமன் தாய்மொழியாகக் கொண்டவரும் இவருக்கு எதிர் வேட்பாளரக இருக்க இவரை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?

    எனவே தாய்மொழி அன்று; தரமானவரா என்பதுதான் தேர்ந்தெடுக்கும் மக்கள் கணிப்பது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *