புதிய பொற்காலத்தை நோக்கி – 18

பிரிட்டிஷாருக்கும் கிறிஸ்தவத்துக்குமான பிணைப்பு இதுவென்றால், இந்தியாவில் இருந்தவர்கள் ஒரு மண்வெட்டி செய்வதாக இருந்தாலும் வயலில் நாற்று நடுவதாக இருந்தாலும் வான் ஆராய்ச்சி செய்வதாக இருந்தாலும் அம்மை நோய்க்கு மருந்து தயாரிப்பதாக இருந்தாலும் அனைத்தையும் தெய்வ நம்பிக்கையோடு பக்தியோடு இறைவனைக் கும்பிட்டுவிட்டே செய்திருக்கிறார்கள். பிரிட்டிஷாரின் அராஜகத்தை கிறிஸ்தவத்தோடு இணைத்துப் பேசாமல் இருந்ததில் என்ன அரசியல் இருந்ததோ அதுவே இந்துஸ்தானத்தில் இருந்தவர்களின் மேன்மையை இந்து மதத்தோடு இணைத்துச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். இந்தியாவில் அனைத்து ஜாதியினருக்கும் தரப்பட்ட கல்வி பற்றிய ஆவணத்தில் அந்தப் பள்ளிகள் சரஸ்வதி வணக்கத்துடன் தான் ஆரம்பித்தது என்ற குறிப்பு எங்குமே இல்லை…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 18

புதிய பொற்காலத்தை நோக்கி – 16

உலக நாடுகள் தாம் தயாரிக்கும் மருந்துகளுக்கு கொள்ளை விலை வைக்கிறார்கள். ஜன் ஆயுஷில் அதே மருந்தை நாலில் ஒரு பங்குக்கும் குறைவான விலையில் தயாரித்து வழங்குகிறார்கள். இது அற்புதமான இந்திய அணுகுமுறை… இந்த நடமாடும் இருதய பரிசோதனைக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதனால்தான் இந்த சிகிச்சை சாத்தியமானது. இந்தக் கருவியின் விலையானது பெரு நகர மருத்துவமனையில் இருக்கும் பரிசோதனைக் கருவியின் விலையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை… பாரதம் இதை தனது ஆன்மிகக் கடமையாக முன்னெடுத்துச் செய்யவேண்டும். மிகக் குறைந்த விலைக்கு நாகரிக மாமிசத்தை உற்பத்தி செய்து உயிர்களையெல்லாம் கொடூரத்தில் இருந்து காப்பாற்றவேண்டும்…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 16

புதிய பொற்காலத்தை நோக்கி – 14

சொந்த கலாசாரம், தேச பக்தி, உயர் மதிப்பீடுகள் போன்றவை கல்வியின் அடிப்படையாக இருக்கவேண்டும். பொருளாதார, சர்வதேச அம்சங்கள் இரண்டாம்பட்சமானதாக இருக்கவேண்டும்.. இணையம் என்பது அனைவரையும் அருகே கொண்டுவந்து விட்டிருக்கிறது. இணைய வழி வகுப்புகள், கருத்தரங்குகள், சந்திப்புகள் போல் இணைய வழி குடும்ப நிகழ்ச்சிகள் மாதம்தோறும் நடத்தப்படலாம்…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 14

புதிய பொற்காலத்தை நோக்கி – 13

கிறிஸ்தவ மதம் உலக மக்கள் அனைவரையும் கிறிஸ்தவராக மாற்றத் துடிப்பதுபோல் கிறிஸ்தவ தேசப் பொருளாதார சக்திகள் தமது கார்ப்பரேட் பொருளாதார வடிவத்தையே உலகம் முழுவதிலும் திணிக்கத் துடிக்கின்றன. கிறிஸ்தவ தேச குளிர்பான நிறுவனங்கள் உலகம் முழுவதும் தாகத்துக்கு தனது பானத்தை மட்டுமே அருந்தவேண்டும் என்று நினைக்கின்றன. கிறிஸ்தவ தேசக் கல்வி அமைப்புகள் உலகம் முழுவதும் தனது கலாசாரம், வரலாறு, விஞ்ஞானம் இவை மட்டுமே இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறது. கிறிஸ்தவ தேச அரசியல் சக்திகள் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை மலரச் செய்யும் பெரும் சிலுவையைக் கஷ்டப்பட்டுத் தானே தோளில் சுமந்துகொண்டு தமது கைப்பாவைகளையே உலகம் முழுவதிலும் நியமித்துவருகின்றன…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 13

திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

சிறுவன் அவர் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வகுப்பறையில் இருக்கும் அனைவருமே வள்ளுவரைக் கண்டு அதிசயித்து நிற்கிறார்கள். மடமடவென குழந்தைகளும் ஐயனை வணங்கி ஆசி பெறுகின்றன. ஒன்றிரண்டு பெரிய வகுப்பு மாணவர்கள் மட்டும் கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று பார்க்கிறார்கள்… இந்த முரண் என்பவை வாழ்க்கையின், உயிர்களின், உலகின் ஆதார அம்சம். மானுக்குப் புலி முரண்… பூவுக்கு முள் முரண்…நீருக்கு நெருப்பு முரண்… இரவுக்குப் பகல் முரண்… சூரியனுக்கு நிலவு முரண்… உலகம் பெரும் ஒத்திசைவால் ஆனது… அதுபோலவே முரண்களாலும் ஆனது… அறங்கள் முரண்படவில்லை… இரவையும் பகலையும் போல் இணை பாதையில் செல்கின்றன அருகருகே அகலாது அணுகாது… நல்லது ஐயனே… இப்போது லேசாகப் புரிகிறது…

View More திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

  ‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற…

View More போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி