நெருக்கடி நிலை யாருக்கு?

தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. ஆனால், 1975-77-இல் இந்திராவின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன?…..

View More நெருக்கடி நிலை யாருக்கு?

கம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்

தினசரி வன்முறை நாடகங்களை மாணவர்களை வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போடுகிறது. அதில் ரத்தம் தோய்ந்த கைகளை வைத்துக்கொண்டும் சுடுவது போன்றும் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். காந்தி இந்தியாவின் ரஸ்புடின் என்று உங்களை குற்றம் சாட்டுகிறார்கள். பன்னெடுங்காலமாக சாத்வீக உணவை உண்டு வரும் பிராமண மற்றும் வைஸ்ய மாணவர்களை கட்டாயமாக மாமிச உணவு உண்ண வைக்கிறார்கள். கட்டற்ற பாலுறவு என்பது தான் அவர்கள் கொள்கை. ஒரு தார மணம் பற்றி கடுமையாக தூற்றுகிறார்கள். இதை தவிர தடி கொண்டு தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குகிறார்கள். வாய்ப்பிருந்தால் அவர்களையும் விடுதலை வீரர்களையும் பிரிட்டிஷ் காவல்துறையிடம் போட்டு கொடுக்கிறார்கள்…. ஜோஷியின் பதில்களை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. காந்திக்கு அன்றே தெரியும் கம்யூனிஸ்டுகள் தேச விரோதமாக மாறுவார்கள் என்ற உண்மை….

View More கம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்

போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

  ‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற…

View More போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி