மூலம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தவ்லீன் சிங் எழுதிய கட்டுரை
தமிழில்: எஸ்.கண்ணன்
இந்திய முஸ்லீம்கள் உலகின் மற்ற பகுதிகளிலுள்ள தங்கள் சகோதரர்களோடு தங்களை அடையாளப்படுத்தத் தொடங்கிவிட்டார்களா ?
நபியின் காலம் பொற்காலம் என்றும் அதைநோக்கி இஸ்லாம் திரும்பவேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு ஜிகாதி தீவிரவாதம்தான் இஸ்லாத்தின் உண்மை முகம் என்பது புரிபடவில்லை.
பாரிஸ் படுகொலைகளுக்குப் பிறகு, நமது செய்தித்தாள்களின் தலையங்கங்களிலும், ஊடக விவாதங்களிலும் இரண்டு பொய்கள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருகின்றன. முதலாவது, ஜிஹாதுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது. இரண்டாவது, எல்லா மதங்களும் ஒன்றே, அதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் திரிபுகள் ஏற்படுகின்றன என்பது. இவ்விரு பொய்களும், பாரிஸில் மோசமாகக் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை அவமானப்படுத்துகின்றன என்ற போதிலும் திரும்பத் திரும்ப கூறப்படுகின்றன. உலகின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாகிய நாம், உண்மையைச் சந்திக்க பயப்படுவது போன்ற தோற்றத்தை இது அளிக்கிறது.
உண்மை என்னவென்றால், முகமது நபியின் காலம் பொற்காலம் என்றும் அதை நோக்கி இஸ்லாம் திரும்பவேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மை முகம் ஜிஹாத் என்பது புரியாததுதான். அக்காலகட்டத்தில் முகமது நபி பல போர்களில் ஈடுபட்டபோது, தன்னுடைய கோட்பாடுகளைப் பின்பற்றாதவர்களை மோசமான வழிகளில் துன்புறுத்துமாறு தன்னுடைய ஆதரவாளர்களுக்குக் கட்டளையிட்டு அவற்றை குரானிலும் பொறித்துவைத்தார். இந்தக் கட்டளைகளை அடியொற்றியே இஸ்லாமிய ஸ்டேட் (ஐ.எஸ்), பாவிகள் நிறைந்தவை என்று அவர்கள் நம்பும் நாடுகளுக்கு எதிராகவும் , நம்மை போன்ற சிலைகளை வழிபடும் நாடுகளுக்கு எதிராகவும் அருவருப்பான பல செயல்களை நிறைவேற்றி வருகிறது.
அதன் சொந்த வார்த்தைகளில் – “அல்லாவினால் வெற்றிக்கான காரணங்கள் செயலூக்கம் பெற்று, ஆசீர்வதிக்கப்பட்ட போர்களில் ஒன்றில், கலீபாவின் வீரர்களிலிருந்து நம்பிக்கையாளர்களின் கூட்டம் ஒன்று (அல்லா அவர்களுக்கு வலிமையளித்து ஆதரவு தருவாராக), ஐரோப்பாவில் மோசமான செயல்களின் முன்னுதாரணமாகவும், விபசாரம் போன்ற தீயவைகளின் தலைநகரமாகவும் விளங்கும் பாரிஸை குறிவைத்துக் கிளம்பியது….எனவே அவர்கள் அல்லாவிற்கு உண்மையானவர்கள் – நாங்கள் அவ்வாறு நம்புகிறோம் – அல்லா அவர்களின் கைகளில் வெற்றியை அளித்தார்”.
கடந்தவாரம் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட இரண்டாவது பொய், எல்லா மதங்கள் தரும் செய்திகளும் ஒன்றே என்பது. இது உண்மையல்ல. எந்த ஒரு இந்திய மதமும், அதன் மீது நம்பிக்கை இல்லாதவர்களை ‘காபிர்கள்’ என்று கருதுமாறு தன் மதத்தவர்களுக்குக் கட்டளை இடவில்லை. எந்த ஒரு இந்திய மதமும், தன்னிடம்தான் அனைத்திற்கும் பதில் இருக்கிறது என்றும், அதை நம்பாதவர்கள் கீழ்த்தரமானவர்கள் என்றும் கருதுவதில்லை. இஸ்லாம், அதை நம்பாதவர்களை ‘காபிர்கள்’ என்று கருதுவதோடு மட்டும் அல்லாமல், இஸ்லாம் பரவாத இடங்கள் எல்லாம் ‘புனிதப் போர்களைச்’ செய்யவேண்டிய போர்க்களங்களாக கருதுவது அல்லாவின் விருப்பம் என்று நம்புகிறது. ‘தார்-உல்-ஹர்ப்’ (Dar-ul-Harb) என்ற வார்த்தை உங்களுக்கு அறிமுகமாகாதது என்றால் கூகுள் செய்து அதைப் பற்றிய உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஜிஹாதி தீவிரவாதத்தோடு இஸ்லாத்திற்கு இருக்கும் தொடர்பைப் பற்றி பொய்களைக் கூறிக்கொண்டே இருக்கும் வரையில் இந்த பயங்கரவாதத்தின் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சமாளிக்க இயலாது (உலகின் எல்லா நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தோனேசியாவுக்கு அடுத்து அதிக இஸ்லாமியர்களைக் கொண்ட நாடு இந்தியா என்பதை மறந்து விடக் கூடாது). நமது முஸ்லிம்கள் அமைதியாகவும் மற்ற மதத்தினரோடு இணக்கமாகவும் இதுவரை வாழ்ந்துவந்தார்கள் என்றால், பல நூற்றாண்டுகளாக இங்கு பின்பற்றப்பட்ட இஸ்லாம், இப்போது உலகம் முழுவதிலும் ஐ.எஸ். புகுத்த முயலும் இஸ்லாத்திற்கு மாறுபட்டதாக இருந்தது ஒரு முக்கியக் காரணம். ஆனால், சில வருடங்களாக இது மாறிவருகிறது.
இந்திய மசூதிகளில் இப்போது போதிக்கப்படும் இஸ்லாம், சையத் குதூப் மற்றும் அப்துல் வஹாப் போன்றவர்களின் போதனைகளைப் பின்பற்றுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பினால் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்ற தவறான பிரச்சாரம் 2001 நியூயார்க் உலக வர்த்தக மைய தாக்குதல் (9/11) தொடங்கி இஸ்லாமிய போதகர்களால் செய்யப்பட்டு வருகிறது. நியூயார்க்கிலும் வாஷிங்டனிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அவர்கள் சொல்கின்றனர். கவலையைத் தரக்கூடிய அதிக எண்ணிக்கையில் இந்திய முஸ்லீம்கள் இந்தப் பொய்யை நம்புகின்றனர். அதே போல, 2008 மும்பை பயங்கரவாத முற்றுகை (26/11) ஒரு ஆர்எஸ்எஸ் சதித்திட்டம் என்ற பொய்யையும் பல இந்திய முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
ஜிஹாதி தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு இந்தப் பொய்களை, முதலில் பொய்கள் என்று நாம் அங்கீகரிக்கவேண்டும். இது போன்று எதிர்நோக்கவேண்டிய இன்னொரு பொய், மும்பையில் நடந்தது, பாரிஸில் நடந்ததற்கான ஒரு மாதிரி என்பது. மும்பை கொலையாளிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்படவர்கள் என்பது கட்டாயம் இது உண்மையில்லை என்பதற்கான சான்று. இந்திய மண்ணில் ஜிஹாதி வன்முறையை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்பதற்கான சான்றை அதனிடம் அளித்து இந்தப் பிரச்சனையை நாம் தீர்க்க முற்படுவது ஒரு வகையில் எளிதான விஷயம். ஆனால் கலீபா என்பது நவீன உலகத்தின் பார்வையில் ஒரு ‘நாடு’ அல்ல. எனவே, ஐரோப்பாவின் எதிரிலிருப்பது தெளிவில்லாத, மிகவும் அபாயகரமான ஒரு பிரச்சனை. இந்த ஜிஹாதி தீவிரவாதத்தை எதிர்நோக்க ஐரோப்பா அதற்கான வழி ஒன்றைத் தேடவேண்டும், இந்தியா தனக்கான வழி ஒன்றை கண்டறியவேண்டும்.
நமக்குத் தெரிந்த இஸ்லாம், ஏன் சில பத்தாண்டுகளாக இவ்வளவு மோசமாக மாறியது என்பதைக் கண்டறிவதில்தான், இந்தியாவில் இந்தப் பிரச்சனைகளுக்கான விடைகள் அடங்கியிருக்கின்றன. மசூதிகளின் மேடைகளில் புதுவிதமான இஸ்லாம் போதிக்கப்படுவதினால்தான் இந்தப் பிரச்சனைகள் ஏற்படுகின்றனவா? இந்திய முஸ்லீம்கள், உலகின் மற்ற பகுதிகளில் உள்ள முஸ்லீம்களோடு தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளதுதான் இதற்கான காரணங்களா? வஹாபி இஸ்லாத்தை தீவிரமாக சவூதி பரப்பி வருவது தான் இதன் மூலகாரணமா? இந்தக் கேள்விகளுக்கான விடைகள்தான் இப்போதைய உடனடித் தேவை. ஆனால், நாம் எதிர்கொள்ளும் இந்த அபாயத்தைப் பற்றிய பொய்களை தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருந்தால், இந்த விடைகளை அடைய முடியாது. இந்திய மதங்கள் இஸ்லாத்திற்கு சரியான மாற்று என்பதை ஏற்பது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.
தவ்லீன் சிங் இந்தியாவின் முக்கியமான பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஸ்டெட்ஸ்மென், தி டெலிகிராஃப், இந்தியா டுடே உள்ளிட்ட பல பிரபல ஆங்கில நாளிதழ்களிலும், ஹிந்தி இதழ்களிலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதியும் பணியாற்றியும் வருகிறார். இந்திய அரசியல் குறித்து ஐந்து புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
உலகெங்கும் சோற்றுக்கிலாமல்,பஞ்ச பரதேசிகளாய் அலைந்து கூரையும் ,சோறும்மிட்ட நாடுகளின் நாட்டு மக்களின் கருணைக்கும் ,உண்ட உப்புக்கும் துரோகமிழைக்கும் சல்லிகள் அதை எதோ போர் வெற்றி என்று பேசி இறுமாந்து போகின்றனர்.
தமிழகத்தில் இவர்களுக்கு ஆதரவாக புதிதாக குப்பை போட வந்த ‘முட்டு சந்து’பேப்பர் ‘சர்வதேசியம் பேசும் ஜெர்மனி’க்கு ஜே,என்றெல்லாம் ஏத்திவிட்டு ,கம்மினாட்டிகள் எழுதும் கட்டுரைகளை வெளியிடும் லுச்சா பயல்களையும் ,அதை படித்து பரவசமடையும் பேமானிகளையும்,புறந்தள்ளி இக்கட்டுரை உண்மையின் முகத்தில் ஒளி இறைக்கிறது.பழைய இஸ்லாமிய குடியேற்றங்கள் எப்படி பரவின என்பதை அண்மைய அகதிகளின் ‘தந்திரோஆபாயங்கள்’விளக்குகின்றன.
குழந்தையை கொன்று கடலில் வீசி,அதை ஆயிரனகோனகளில் படம்பிடித்து பரப்பி பேதைகளின் கருணையை பிளாக்மெயில் செய்து ,உள்ளே நுழைந்து மக்களை கொள்ளும் உத்தி கொலைகார வியாதிகளுக்கே உரியது.
;அயலானை ‘பார்த்து உலகமே உருக்குலைய வில்லையா?என்றெல்லாம் பட்டி மன்ற பாப்பாக்கள் பேசி ,கைதட்டல் வாங்க,எத்தனை சாக வேண்டும்?
கட்டிய பொண்டாடியைகூட,நம் மத சார்பற்ற மாமாக்கள்,சந்தேகப்படுவார்கள் ,ஆனால் சிறுபான்மையினரை நியாயமாக விமர்சித்தாலே கொந்தளித்து போவார்கள் ,இந்த ‘முற்போக்கு ‘முக்காடுகளின் படுதா பாசதோடுதான்,அவர்களும் எங்களை ”எங்களை சந்தேகப்படலாமா?நாங்கள் உத்தம புதிரரர்களலவா?நாங்கள் வாசிப்பது பத்தினி பத்திரமல்லவா?”என்று பசப்பி ஒளிந்து கொள்கிறார்கள் .
இங்கிலிஸ் எழுத்தாளன் ஜோனதன் ஸ்விப்ட்,மனிதர்கள் மயங்கும் போது,விலங்குகளிடமிருந்தும் ,பறவைகளிடமிருந்தும் விளக்கங்கள் பெறலாம் என்கிறான்.பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகள் ,ஆதாயம் கிடைக்கும் வரை அண்டீருப்பார்கள் ,அதற்கு பங்கம் என்றால் வசை பாடிவிட்டு ,ஓடிவிடுவார்கள்.
ஆமீர்கான் அச்சாரம் போடுகிறார்,காங்கிரசின் ‘விசயமறிந்த்ததுகள்’அமைதிக்காக்க,’கீழதுகள்’சமாதான அடையாமல்,அலைகின்றன,பாக்கிச்தானதிடமே ,பிராது வைக்கின்றன,
”எப்படியாவது மோடியை ஒழித்துவிடுங்கள் ,எங்களிடம் ஆட்சி வந்தால் எல்லாம்”இஷ்டம் ”போல நடக்கும் ”என்று சோறில்லாமல் இளைத்து போன கலிங்கத்து பரணி பேய்களைபோல் முறையிடுகின்றன!
கட்டுரை ஆழ்ந்த சிந்தனைக்கு உட்பட்டது. உண்மை நிலையை எடுத்துரைக்கிறது. 1800 களில் பிரிட்டிஷ் ஆங்கிலேய கிருத்துவ ஆட்சியாளர்களால் விதைக்கப்பட்ட ஹிந்து – முஸ்லிம் விரோத விஷம் பாகிஸ்தான் பிரிவினையில் முடிந்து சுதந்திரத்திற்கு பிறகு படிப்படியாக ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை தோன்றி அமைதி வளர்ந்தது. இப்போது ஐ.எஸ்.யின் வளர்ச்சியால் இந்தியாவில் அதன் காலூன்றும் முயற்சியால் சில துன்மதிபெற்ற இந்திய இஸ்லாமிய இளைஞர்களால் இங்கும் பயங்கரவாதம் ஆரம்பித்துள்ளது. இதற்க்கு முழு காரணம் ஐ.எஸ்.மற்றும் அதை ஆதரிக்கும் இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்ல. மூல காரணம் கிருத்துவ மதம் என்பதை மறுக்கமுடியாது. கிருத்துவ மத மிஷினரிகளின் எப்படியாவது, என்ன தில்லுமுல்லுகள் செய்தாவது, பாவப்பட்ட ஏழை ஹிந்துக்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றி, இந்தியாவை மேலும் பல துண்டுகளாக்கி தங்கள் ஆதிக்கத்தை மேலோங்க செய்யவேண்டும் என்னும் பேராசைத்தான் மூல காரணம், உதாரணத்திற்கு கிழக்கிலே நாகலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலங்களை கிருத்துவ மாநிலங்களாக அறிவிக்கவேண்டும் என்று போராடுகிறது. இன்று தனி மாநிலம், பிறகு தனி நாடு. அந்த வியாதி மற்ற மாநிலங்களுக்கும் பரவும் என்பது திண்ணம். நமது அரசியல் வாதிகளின் தவறான சாதி-மத கொள்கையால் அது நடைமுறைக்கு வரலாம் என்பதும் எதிர்பர்க்ககூடியதே. அந்நிலை வருமானால் முஸ்லிம்கள் இன்று ஹிந்துக்களோடு ஒன்றியிருப்பது போல் கிருத்துவர்களோடு வாழ முடியாது என்பதும் திண்ணம். அந்த அச்சத்தினால் கூட ஐ.எஸ்.சுடன் உறவு கொள்ள சில முஸ்லிம்கள். முயற்சிக்கலாம். எது எப்படியாயினும் இதை முறியடிப்பதே நம் நாட்டிற்கு உகந்தது. அதற்க்கு மதமாற்று தடை சட்டத்தை கடுமையாக அமுலாக்கப்பட வேண்டும். சில வருடங்களுக்கு முன் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மதமாற்று தடை சட்டம் கொண்டுவரப்பட்டதும், கிருத்துவ மிஷினரிகளின் தலையீட்டிற்கு பிறகு அதே அதிமுக அந்த தடை சட்டத்தை வாபஸ் பெறப்பட்டதை நினைவுகூரவேண்டும். உலகளவில் மத அமைத்து கெட்டு கோடிக்கணக்கான மக்கள் மடிவதற்கு மூல காரணம் கிருத்துவமே. இது கற்பனையோ அல்ல வெறும் கருத்தோ அல்ல, 2000 ஆண்டுகளுக்கு மேலான சரித்திரம். இஸ்லாமியர்களின் நாடாக இருந்த ஸ்பெயின் கிருத்துவர்களின் நாடாக மாறியது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கரு என்றால் தவறாகாது.
இதையும் பாருங்கள்
https://www.youtube.com/watch?v=Zxdz5MOQvEk
salman rustiyin satananin kavithaikal tamil translation kidaikuma
ஜப்பானில் ஒரு அஹமதியா மசுதி கட்டப்பட்டுள்ளது என்ற செய்திக்குஅல் ஜெசிரா இணையத்தில் ஒரு வாசகா் எழுதிய ஒரு கடிதம். மிண்டும் ஒரு கடிதம்Dolly Tsering
Nice to see Japan is respecting Kenji Goto’s beheading by a muSlime !
To understand Islam all we have to do is take a look at the people of the Islamic Faith – the Muslims
Iraq – War;Death Beheadings and Burning People Alive
Syria – War;Death Beheadings and Burning People Alive
Yemen- War;Death Beheadings and Burning People Alive
Somalia – War;Death Beheadings and Burning People Alive
Libya – War;Death Beheadings and Burning People Alive
Mali – War;Death Beheadings and Burning People Alive
Egypt – War;Death Beheadings and Burning People Alive
Pakistan – War;Death Beheadings and Burning People Alive
Afghanistan – War;Death Beheadings and Burning People Alive
Sudan – War;Death Beheadings and Burning People Alive
Nigeria – War; Death Beheadings and Burning People Alive
//இஸ்லாமியர்களின் நாடாக இருந்த ஸ்பெயின் கிருத்துவர்களின் நாடாக மாறியது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கரு என்றால் தவறாகாது.//
இது முற்றிலும் தவறான கருத்து. இஸ்லாம்மிய பயங்கரவாதத்தின் கரு சாட்சாத் முஹம்மதுதான். கிறிஸ்தவம் அல்ல. பயங்கரவாத போர்களின் மூலம் இஸ்லாத்தை கிழக்கில் விஸ்தரித்ததுபோல் மேற்கில் விஸ்தரிக்க முதலில் ஸ்பெயினை முஸ்லிம்கள் ஆக்கிரமித்தனர். சில நூற்றாண்டுகள் அங்கு அவர்கள் ஆட்சி செய்தனர். பிறகு கிறிஸ்தவர்களின் எழுச்சிமிகு போரின் மூலம் முஸ்லிம்கள் ஸ்பெயினிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இது மட்டும் நடக்காதிருந்தால் ஐரோப்பாவை இஸ்லாம் ஆக்கிரமித்து இருக்கும். ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்காது. அதனால் இன்று நாம் காணும் அறிவியல் முன்னேற்றமும் நாகரிகமும் ஏற்பட்டிருக்காது.
//இந்திய மசூதிகளில் இப்போது போதிக்கப்படும் இஸ்லாம், சையத் குதூப் மற்றும் அப்துல் வஹாப் போன்றவர்களின் போதனைகளைப் பின்பற்றுகிறது.//
தமிழ்நாட்டில் இந்த வேலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது. மனிதநேய கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியவை கூட அந்த வகையை சேர்ந்தவைதான்.
இஸ்லாமிய தேசம் என்ற பயங்கரவாத குழு கடந்த செவ்வாய்க்கிழமை(1.12.15) தங்களுடைய ஜிஹாத் போரை உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நடத்தப்போவதாக அறிவித்து தங்களுடைய விரிவான திட்டத்தை இணைய தளங்களில் வெளியிட்டுள்ளதாக இணைய தள செய்தி வெளியாகி இருக்கிறது. குறிப்பாக ஐரோப்பாவிலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா,பங்களாதேஷ் நாடுகளிலும் தங்களுடைய பயங்கரவாத போரை விஸ்தரிக்க போவதாக கூறியிருக்கிறது. இதற்காக முஸ்லிம்களைக்கொண்ட ரகசிய செல்கள் அமைத்து செயல்படப்போவதாகவும் அவர்கள் போலீசிடம் மாட்டாமல் இருப்பதற்காக இமெயில், மொபைல் போன் போன்றவற்றை பயன்படுத்த மாட்டார்கள் என்றும் அறிவித்திருக்கிறது. பிரதமர் மோடி அவர்களை பற்றியும் பல பொய்களை கூறி மிரட்டியிருக்கிறது. அந்த இயக்கத்தை இவ்வளவு தூரம் வளர விட்டதே தப்பு. வெறும் விமான தாக்குதல் மட்டும் செய்து கொண்டிராமல் அந்த இயக்கத்தை உடனடியாக முற்றிலுமாக துடைத்தெரிய அனைத்து வழிமுறைகளையும் உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.
இந்த அந்நிய சக்திகளின் பிடியில் சிக்காமல் இருக்கும்படி நம்முடைய இந்திய இஸ்லாமிய சகோதரர்களை நாம் தான் பாதுகாக்காது, உண்மையை புரியவைக்கவும் வேண்டும்.
இங்கே நம் சண்டையிட்டு கொண்டு ஒரு முஸ்லிம் இறந்தாலும், இந்து இறந்தாலும் அவர்களுக்கு ஒரு இந்தியனாக தான் கணக்கில் கொள்வார்கள்.
எனவே ஒவொரு இந்துவும் இதனை புரிந்து கொண்டு தேவையற்ற சண்டை சச்சரவுகளை விட்டுவிட்டு இந்து மதத்தினை வலுப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு இந்து கோவில்களிலும் குழந்தைகளுக்கு கட்டாய மத போதனை விளக்கமும், வரவிருக்கும் ஆபத்துகளையும் பிரசாரம் செய்ய வேண்டும்.
இனியாவது இந்த ஜாதி சண்டைகளையும், அரசியல் சண்டைகளையும் விட்டுவிட்டு நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய இறுதி காலம் வந்துவிட்டதை உணர்வோம்.
பொன்மொழி- சுய முயற்சி இல்லாதவனுக்கு இறைவனும் உதவமாட்டான்.