இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்

நவீன அறிவியல் என்பதே மேற்குலகச் சிந்தனைகளின் தாக்கத்தால் உருவானது, எனவே அதனைப் புரிந்துகொள்ள மேற்கத்திய அறிதல் முறைகளையே பயன்படுத்தவேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இன்று நம்முடைய கல்வி நிலையங்களில் மேற்கத்திய அறிதல் முறைகளின் அடிப்படையிலேதான் அறிவியலை அணுகவும் புரிந்துகொள்ளவும் சொல்லித்தரப்படுகிறது. ஆனால் இந்திய அறிதல் முறைகளுக்கும் உலகின் அறிவியல் வளர்ச்சிக்கும் நீண்ட நெடிய தொடர்புகள் உள்ளன. இந்திய அறிதல் முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது நவீன அறிவியலின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுவரும் புதிய கண்டுபிடிப்புகளை வித்தியாசமான கோணங்களில் பார்க்கும் பார்வை நமக்கு ஏற்படும்.

அரவிந்தன் நீலகண்டன் & சாந்தினிதேவி ராமசாமி இணைந்து எழுதியுள்ள இந்த நூல் இந்திய அறிதல் முறைகளை நமக்கு அறிமுகப்படுத்தி, இவற்றின் பின்னணியில் நவீன அறிவியல் புலங்களை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதையும் சொல்லித்தருகிறது.

indiya_arithal_muraikal_book_cover“இந்த நூலை பெரும் உவகையோடு படித்து முடித்தேன். யஷ்பால் பதிலை ஆழமாகப் புரிந்துகொள்ள பெளதிக அறிவியலை ஆழக்கற்று கேள்விகளின் தொடர்சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த இளமைக்கால வாசிப்புக்குப் பிறகு பல்துறை ஞானங்களை இணைத்துப்பார்க்கும் பெரிய வாசலை எனக்கு இந்த புத்தகம் திறந்து விட்டிருக்கிறது. இந்த புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையின் மேல்வாசிப்பிலும் ஒரு வாழ்நாளையே செலவழிக்க முடியும். இந்த நூலின் ரெண்டாம் பாகங்களாக ஒவ்வொரு அறிதல் முறைகளையும் விரிவாக அறிமுகப்படுத்த வேண்டியதை நூலாசிரியர்களிடம் ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். அரவிந்தன நீலகண்டனும் சாந்தினிதேவி ராமசாமியும் தமிழ் அறிவுலகத்துக்கு பெரும் திறப்பை அளித்துள்ளனர். கூறுமுறையில் ஒரு சிந்தனைத் தொடர்ச்சியை தீவிரமாக முன்வைத்துள்ளதால் சில இடங்களில் கவனச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த எளிய சிக்கலைத் தாண்டி மீண்டும் அணுகும்போது நமது மூளையில் சில பகுதிகளைப் புதுப்பித்த சந்தோஷம் உருவானது… “

–   எழுத்தாளர் கிரிதரன் ராஜகோபாலன் (முழு விமரிசனத்தையும் இங்கே வாசிக்கலாம்).

“பாரத மெய் அறிதல் மரபும் அறிவியல் தேடலும் என்றென்றைக்குமான இணை ஜீவநதிகள். இவ்விரு மரபுகளின் மீதும் தீராத பற்றும் ஆழ்ந்த வாசிப்பும் கொண்ட ஆசிரியர்களின் தேடலும் கண்டடைதல்களும் இந்நூலில் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளோடும் மூன்றாவது நதி. இம்மூன்று நதிகளும் கலக்கும் திரிவேணி சங்கமம் இந்த நூல். தமிழில் இது வந்திருப்பது நம் நல்லூழ்.  இன்றைய அறிவியலுக்கும்  பாரத மெய்ஞானச் சிந்தனை முறைகளுக்கும் என்ன தொடர்பு? அறிவியல் கண்டுபிடிப்புகளை நம் பாரம்பரியமான சிந்தனை மரபுகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடியுமா என்னும் கேள்வியுள்ள தேடல் கொண்டவர்களுக்கு வீணான பெருமித மார்தட்டல்களின்றி, மிகக் கறாராக நவீன விஞ்ஞானத்தின் பாய்ச்சலை, பாரதத்தின் மெய்ஞான தரிசனங்களின் ஒளியில் விளக்கும் சிறந்த நூல். இந்நூலுக்காக அரவிந்தன் நீலகண்டனுக்கும் சாந்தினிதேவி ராமசாமிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். பாரதம் அளித்த தரிசனங்களிலும் நவீன அறிவியலிலும் ஈடுபாடுள்ளவர்கள் இந்த நூலைக் கண்டிப்பாகத் தவறவிடக் கூடாது”

– பிரகாஷ்  சங்கரன், உயிரியல் ஆராய்ச்சியாளர்

2016 மார்ச் மாதம் நிகழ்ந்த இந்த நூலின் புத்தக வெளியீட்டு நிகழ்வில்  ரவிஷங்கர் (‘சொல்வனம்’ ஆசிரியர் குழு), முனைவர் உத்ரா துரைராஜன் (இயற்பியல் பேராசியர்), பத்ரி சேஷாத்ரி (சிந்தனையாளர் – பதிப்பாளர்)  மற்றும் நூலாசிரியர்கள் ஆற்றிய உரைகளின் வீடியோக்களை இங்கு காணலாம்.

இந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள
ஆசிரியர்கள்: அரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி ராமசாமி
கிழக்கு பதிப்பகம், சென்னை.
பக். 222, விலை ரூ. 225 / (அச்சுப்புத்தகம்)

இணையத்தில் இங்கே வாங்கலாம்.

மின்நூல் : கூகிள்ப்ளேயில் வாங்க.   விலை ரூ. 50/

2016 ஜூன் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்குப் பதிப்பக அரங்கில் கிடைக்கும்.

One Reply to “இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்”

  1. எங்கள் பாரம்பரிய கலாச்சாரங்களை மறைத்து மறந்து அந்நிய மார்க்கங்களை நம்பி பின்பற்றுவதற்கு மிகமுக்கிய காரணம் , சமூக ஏற்றத் தாழ்வுகளே !ஒன்று பணம் மற்றயது சாதி எனும் பெரும்தீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *