ஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்

இந்திய விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் இந்துக்களோடு இணைந்துவாழ விரும்பாத கடும்போக்கு கொண்ட இஸ்லாமியர்கள் (குறிப்பாக மேல்தட்டு மற்றும் மேல்மத்தியதர வர்க்கத்தவர்கள்)  முஸ்லிம் லீக் கட்சியின் தலைமையின் கீழ் அணிதிரண்டனர்.  இந்திய நிலப்பரப்பைப் பிரித்து  அதிலிருந்து ஷரியா சட்டம் அமலிலிருக்கும் ஒரு சுதந்திர இசுலாமிய நாட்டை உருவாக்கி அதில் ஒன்று சேர்ந்து வாழலாம் என்று திட்டமிட்டனர்; அக்கருத்தியலின் பெயர் “தாருல் இஸ்லாம்”. அதன் விளைவே பாகிஸ்தான்.

அல்லாஹ்வின் அருளை நாடியவராய், ஷரியா சட்டத்தின்பால் உள்ள நம்பிக்கையால் கனவுலக மிதப்புக்களோடு பாகிஸ்தான் சென்று, இறுதியில் தார் அல் இஸ்லாம் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல், போன மச்சான் திரும்பிவந்த கதையாக பாரதம் மீண்டுவந்து செட்டிலான கடந்த நூற்றாண்டின் பிரபலங்கள் பலரின் கதைகள் நம்மில் பலர் அறியாத செய்தி.

1. புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி இசைப் பாடகர் உஸ்தாத் படே குலாம் அலிகான் ஸாஹப் 1947 தேசப் பிரிவினையின் போது  லாகூர் மாகாணத்திலுள்ள தனது சொந்த ஊருக்குக் குடிபெயர்ந்தார். ஆனால் அங்கிருந்த சூழலைப் பொறுக்க முடியாமல் 1957ல் நிரந்தரமாக இந்தியாவுக்குத் திரும்பினார்.  அன்றைய மும்பை மாகாண முதலமைச்சராக இருந்த மொரர்ஜீ தேசாய் அவர்களின் உதவியோடு மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் குடிபுகுந்தார். ‘பத்ம விபூஷண்’ விருதும் பெற்றார்.

2. புகழ் பெற்ற கவிஞர் ஸாஹிர் லுதியான்வியும் பாகிஸ்தானில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப் படுவதால் பாரதம் திரும்பினார்; மும்பையில் குடியேறிய இவர் ஹிந்தித் திரைப்பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றார்.

dalit_jogendranath_mandal_pakistan_law_minister3. ஜோகேந்திர நாத் மண்டல் தாழ்த்தப்பட்டோர் தலைவராகவும், முஸ்லிம் லீக் சார்புடையராகவும் இருந்தவர் [நம் திருமா அண்ணாச்சியைப்போல]. இஸ்லாம் குறித்த டாக்டர் அம்பேத்கரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் பிரிவினைக்குப் பின் கிழக்கு பாகிஸ்தான்  (தற்போதைய பங்களாதேஷ்) சென்றார். பாகிஸ்தான் அமைச்சரவையிலும் பொறுப்பேற்றார். பாகிஸ்தான் இவருக்கு காஃபிர் எனும் மரியாதையையே தந்தது. மனக்கசப்புற்ற மண்டல் ஜீ சில ஆண்டுகளுக்குள்ளேயே மீண்டும் பாரதத்தில் புகலடைந்தார். டாக்டர் அம்பேத்கர் தம் தந்தைக்கு எழுதிய கடிதத்தை, மறைந்த ஜோகேந்திர நாத் மண்டலின் மகன் ஜகதீஷ் மண்டல் வெளியிடுகிறார் – வீடியோ இங்கே.

தான் ஏன் இஸ்லாமிய நாடான கிழக்கு பாகிஸ்தானை விட்டு வெளியேறினேன் என்பதை விளக்கி ஜோகேந்திர நாத் மண்டல் எழுதிய விரிவான கடிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.  இக்கடிதத்தின் தமிழ் மொழியாக்கம் இங்கே.

4. ”ஆக் கா தரியா” எனும் புகழ்பெற்ற உருது மொழி நாவலை எழுதிய ’குர் அதுல்  ஐன் ஹைதர்’  சிறந்த பெண் எழுத்தாளர் (இந்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு  ‘அக்னி நதி’ என்ற பெயரில் சாகித்திய அகாதமி வெளியீடாக வந்துள்ளது).  லக்னோவைப் பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமிய பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1947ல் பாகிஸ்தான் உருவானபோது அங்குக் குடி பெயர்ந்தார். அகண்ட பாரதத்தின் பழைய வரலாற்றையும் இஸ்லாமியப் படையெடுப்புகள் நிகழ்த்திய வன்முறைகளையும் இவர் உள்ளபடியே தனது எழுத்துக்களில் எடுத்துரைத்ததால் பாகிஸ்தானிய மொகமதியரின் வெறுப்புக்கு ஆளானர்.  அமைதியையும் பாதுகாப்பையும் வேண்டி சில ஆண்டுகளிலேயே இந்தியாவில் புகலடைந்து குடியுரிமையும் பெற்றார். இவரது இலக்கியப் புலமை, சுதந்திர இந்தியாவில் தான் முழுமையாக வெளிப்பட்டது. உருது இலக்கியப் பங்களிப்புக்காக ஞானபீட விருதையும் பின்பு ‘பத்ம பூஷண்’ விருதையும் பெற்றார்.

இத்தகையவர்களின் பட்டியல் இன்னும் நீளும்.

1942ல் தோன்றிய எஸ் பி சிங்கா தலைமையிலான அகில இந்தியக் கிறிஸ்தவர் கூட்டமைப்பு பாக். பிரிவினைக்கு முழு ஆதரவு தந்ததோடு, பஞ்சாப் மாநிலம் முழுவதும் பாகிஸ்தானோடு இணைய வேண்டும் என்றும் போராடியது. இன்று பாகிஸ்தானில் கிறிஸ்தவரின் நிலைமை என்ன ?  அதனை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

விசா நீட்டிப்புச் செய்து பாரதத்திலேயே தங்கிவிட முனையும் பாகிஸ்தானியர் இருப்பதாகவும் தெரிகிறது.

முஸ்லிம் நாடுகளின் வம்சாவளியைச் சேர்ந்த பாடகர் அத்னன் சாமி (அவரது தந்தை ஆஃப்கானிய பஷ்தூன் இனத்தவர். தாய் காஷ்மீரி).  அவர் தற்போது இந்தியக் குடியுரிமையைத் தேர்வு செய்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆமிர் கான்  போன்றோர் பாகிஸ்தான் போய்விடுவேன் என்று உதார் விடுவதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாம். அவர்கள் ஒருநாளும் இந்தியாவை விட்டுப் போக மாட்டார்கள். இங்கு துருக்கர் அனுபவிக்கும் சொகுசும், சுதந்திரமும்,சலுகைகளும் வேறெந்த நாட்டிலும் கிடைக்காது.

கிழக்குப் பாகிஸ்தான் ரத்தக்களரிக்குப்பின் 1971ல் பங்களா தேசமாகப் பிரிந்தது. ஹிந்துவான ரவீந்திரநாத் டாகூர் இயற்றிய “ஆமார் ஸோனார் பங்களா..” பங்களா தேஷின் தேசிய கீதமானது. ஒவ்வொரு வரியிலும் வாழும் நாட்டை அன்னையாகப் போற்றும் அப்பாடலை ஏற்பதில் அன்றைய வங்க முஸ்லிம்களுக்குச் சிக்கல் இருக்கவில்லை.  ஆனால் வங்க தேசத்திலேயே தங்கிவிட்ட வங்க மொழி தெரியாத, உர்துவைத் தாய்மொழியாகக் கொண்ட பிஹாரி முஸ்லிம்களின் நிலைமையோ இன்னும் பரிதாபத்துக்குரியது. பங்களா தேஷ் பிரிவினைக் காலத்தில் வங்க முஸ்லிம்களால் பல பிஹாரிகள் கொலையுண்டனர்; பிஹாரி முஸ்லிம் பெண்கள் வன்புணர்வுக்குள்ளாயினர். பலர் மேற்கு வங்கத்தில் ஒட்டிக்கொண்டனர். பாகிஸ்தானும் இவர்களுக்குப் பொறுப்பேற்கவில்லை. எஞ்சிய 1,60,000 பிஹாரி முஸ்லிம்கள் வங்க தேச அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  இது குறித்த காணொளி இங்கே.

வங்கதேசம் உருவாகப் பாடுபட்ட வங்க அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானைக் குடும்பத்தோடு அழித்து மயான காண்டம் பாடிய பணியைச் செய்தவர்கள் வங்கதேச இஸ்லாமிய ராணுவத் தலைவர்கள், 1975ல்.  இந்தப் போர்க் கொடுமைகள் குறித்த காணொளி இங்கே.

தற்போது பலோச் விடுதலைப்படை பாக். நிலப்பகுதியில் செம்பாதியைத் தனியாகப் பிரித்து பலோசிஸ்தான் என்ற சுதந்திர நாடாக்க வேண்டும் என்று முனைந்து போராடிக் கொண்டிருக்கிறது.

இந்நூற்றாண்டின் முதல் பதின்மத்தில் மட்டுமே குண்டு வெடிப்பு, தீவிரவாதத் தாக்குதலால் மடிந்த பாகிஸ்தானியரின் எண்ணிக்கை 35,000க்கும் மேல்.

PARTITION_MIGRATIONஹிந்து வெறுப்பால் பாகிஸ்தான் என்ற கனவுலகை நோக்கிச் சென்ற முஸ்லிம்கள், கடைசியில் அடிமையானது அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியே போன்ற எதேச்சாதிகார சக்திகளுக்கு மட்டுமே.  அந்த சக்திகள் பாகிஸ்தானையும் அதன் மக்களையும் தங்கள் வியூகங்களின் ஒரு பகுதியாகப் பகடைக்காயாகப் பயன்படுத்தி சில எலும்புத்துண்டுகளை வீசி எறிகின்றன. அந்த நிலையிலேயே வாழ வேண்டிய அளவுக்கு இஸ்லாமிய மதவெறியும் அடிப்படைவாதமும் அந்த நாட்டை இட்டுச் சென்றுள்ளன.  முன்னேற்றமும், குறைந்தபட்ச நிம்மதியான வாழ்க்கையும் கூட பாக். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களுக்கு அமையவில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை.

அதே இஸ்லாமிய மதவெறியால் ஒடுக்கப்பட்டு தினம்தினம் கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகும் சிறுபான்மை ஹிந்துக்களும், சீக்கியர்களும் பாகிஸ்தானிலிருந்தும், பங்களா தேசத்திலிருந்தும் பாரதத்தில் தஞ்சமடைவது அன்றாட நிகழ்வு.

தார் அல் இஸ்லாம் ஒரு கானல் நீர் என்பதைப் பாக். வசமுள்ள காஷ்மீர் (POK) முஸ்லிம்கள் கடைசியில் உணர்ந்து கொண்டனர்; பாகிஸ்தானுக்கு எதிராகக் கூக்குரல் எழும்பியுள்ளது. விமானக் கடத்தல் புகழ் – மாஜி ஜிஹாதி ஹஷிம் குரேஷி இப்போது உண்மைகளை வெளிப்படை ஆக்குகிறார்.

செல்வம் கொழிக்கும் இஸ்லாமிய அரபு நாடுகள் சிரிய முஸ்லிம் அகதிகளுக்கு இடமில்லாமல் கை விரித்தது அண்மைய நிகழ்வு.

கலிமாவை ஏற்ற மாந்தரிடையே எந்த நிற – மொழி – இன – பிராந்திய வேற்றுமையும் கிடையாது; எல்லாரும் சகோதரரே; தோளோடு தோள் உரசிக்கொண்டு தொழலாம் என்னும் பம்மாத்துகள் எல்லாம் எந்த அளவு உண்மை என்பதை இனியாவது அப்பாவி இந்திய  முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாகப் பாகிஸ்தானையும் அரபு எதேச்சாதிகார இஸ்லாமிய நாடுகளையும் தொடர்ந்து ஆதரிக்கும்  ஒரு சாரார்  இந்திய முஸ்லிம்களிடையே உள்ளனர்.  அவர்கள்  உண்மையை உணர்ந்து அந்த ஆதரவு நிலைப்பாடுகளைத் துண்டித்து, இந்திய தேசியத்தையும் அரசியலைப்புச் சட்டத்தையுமே முழுமையாக ஆதரிக்க வேண்டும்.

16 Replies to “ஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்”

 1. சரியான சமயத்தில் வந்த எச்சரிக்கை இது. கத்தியின் வலுவை மட்டுமே நம்பி வளர்க்கப்பட்ட மதம் இஸ்லாம். இந்த சகாப்தத்தை முஹம்மதே துவைக்கிவைத்தார். அவருக்குப் பின் முஹம்மதியர்கள் புகுந்த ஒவ்வொரு நாட்டையும் கைப்பற்றி, அங்கிருந்த பூர்வ மக்களை மதம் மாறச்செய்தோ அல்லது கொன்றுகுவித்தோ தங்களை வலுப்படுத்திக்கொண்டார்கள். பழைய ரோம சாம்ராஜ்யத்தையே உலுக்கினார்கள்.ஐரோப்பாவில் பல இடங்கலைப் பிடித்தார்கள். கிறிஸ்தவர்கள்- யூதர்களின் தலைமை இடத்தையே ஆக்ரமித்தனர். கிறிஸ்தவர்கள் அனைவரும் சேர்ந்து இரண்டு நூற்றாண்டுகளுக்குமேல் போராடியும் சில இடங்களையே மீட்க முடிந்தது. இந்தப் பூசல் இன்றுவரை நீடிக்கிறது.

  சண்டைபோட பிறர் கிடைக்காவிட்டால். முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு தங்களையே அழித்துக்கொள்கிறார்கள்! கத்திபிடித்தவன் கையும் சுத்திபிடித்தவன் கையும் சும்மா இருக்குமா?

  இந்த இரு மதத்தவருமே உலக அளவில் தங்கள் மதத்தை நிலை நாட்டமுற்படுவதால், இந்தப் போட்டியும் பூசலும் தவிற்கமுடியாதது.’வஞ்சிக்கோட்டை வாலிபனில்’ வீரப்பா சொல்வதுபோல் “சபாஷ், சரியான போட்டி” (பூசல்) என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. Those that take the sword shall perish by the sword என்று பைபிள் சொல்வதுபோல் அதுதான் இவர்கள் முடிவாக இருக்கும்!.

  ஆனால் இவர்கள் செய்வது, உண்மையிலேயே என்றுமே அமைதியைப் போற்றியும், ஆதிக்கவெறி இல்லாமலும் இருந்த ஹிந்து, பௌத்தம் போன்ற மதங்களுக்கும் கேடு விளைவிக்கிறது. இதை ஹிந்துக்கள் இன்னமும் உணரவில்லை. இந்தியாவை முழுதும் இஸ்லாம் நாடாக மாற்றவில்லை- பிரிவினையே செய்தார்கள் என்கிறார்கள். ஆனால், இந்தியா-பாகிஸ்தான்-பங்களாதேஷ் என்ற பழைய பாரதத்தை எடுத்துக்கொண்டால். உலகிலேயே இங்குதான் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம்! இது நம் கழுத்தை நெறிப்பது போன்றது. நாம் இன்னும் இதை உணரவில்லை. மேலை நாடுகளில் என்ன நடந்தாலும் , நம் நாட்டிலேயே நமக்கு நெருக்கடி!
  இதில், இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டுமே ஒரே கத்திரிக்கோலின் இரு முனைகள். ஒன்று, வாள் போல் பகை; மற்றொன்று கேள்போல் தொடர்பு. இந்தியாவில் இருவருமே ஹிந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

  இதை நாம் இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ளாததற்கு “சர்வ மத சமரசம்” என்ற பெயரில் காந்தியார் புனைந்த மாயையே முக்கிய காரணம்.ஹிந்து மதம் தமக்குச் சமம் என்று இவர்கள் யாரும் சொல்லவில்லை; நம்மில் பலர் இதைச்சொல்லி, ஒற்றைக்கை தாளம்போட்டு நம்மை உதவாக்கரை ஆக்கிவிட்டனர்.

 2. J N Mandal’s letter to the then Pakistan Prime Minister is a historic documents and the same will not only open the eyes of the Dalit activists but also gone so called seculars here.

 3. “சர்வ மதம் சமரசம்” “எம்மதமும் சம்மதம்” என்கிற காந்தியின் கூற்று ஹிந்துக்கள் தம்மை தாமே ஏமாற்றிக்கொள்ள ஏற்படுத்தியதுதான். இந்திய- பாக் பிரிவினையின்போது மகாத்மா என்றும் தேசப்பிதா என்றும் நாம் போற்றும் காந்தியடிகளின் செயலை படிக்கும்போது அவர் ஜவஹர்லால் நேருவுடன் கைகோர்த்து ஹிந்துக்களுக்கு துரோகம் செய்ததையே உணர்த்துகிறது. அதே நேருவின் குடும்ப தொடர் ஆட்சியிலும் அந்த துரோக செயல் தொடர்ந்தது என்பதையும், அந்த ஹிந்து-துரோக கொள்கையிலேயே எல்லா அரசியல் கட்சிகளும் பதவியை பிடிக்க கையாளும் உத்தி என்பதை மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். ஆனால், நம் மக்களோ, தமிழ் நாட்டை பொறுத்தவரை, அரசியல் கட்சியின் தலைவர் என்ன ஊழல் செய்தாலும், மக்களுக்கு என்ன துரோகம் செய்தாலும், அந்த தலைவர் போடும் எலும்பு துண்டுக்காக அவர் புகழ் பாட மட்டுமே கற்றிருக்கிரார்களே தவிர சரித்திரத்தை படித்து தங்கள் பொது அறிவை வளர்த்துகொள்ள தவறிவிட்டனர்.

  திராவிட அரசியல்வாதிகள் மக்கள் மனதில் சாதி வெறியை தூண்டிவிட்டு மத மாற்றத்தை ஊக்குவிக்கின்றனர். மதம் மாறி போனவர்கள் அங்கு அடிமையாகித்தான் போகிறார்களே தவிர புதியதாக எந்த பலனையும் அனுபவிப்பதில்லை.

  எஞ்சி இருக்கும் இந்தியாவை கிருத்துவமும் இஸ்லாமும் போட்டி போட்டுக்கொண்டு மேலும் துண்டாக்க செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை படித்த ஹிந்து மக்கள் கூட உணரவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். மதத்தை வைத்து பாகிஸ்தானை பிரித்ததுபோல சில மாநிலங்களில் கிருத்துவமும் சில மாநிலங்களில் இஸ்லாமும் பாவப்பட்ட ஹிந்து ஏழைகளை ஏமாற்றியும், காதல் வசபடுத்தியும் மதம் மாற்றம் செய்து தங்கள் மதத்தினரின் எண்ணிக்கையை அதிகபடுத்தி அந்தந்த மாநிலத்தை கிருத்துவ மாநிலமாகவும், இஸ்லாம் மாநிலமாகவும் பிரிப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள் என்பதை மக்கள் உணரவில்லை. அதை நன்கு உணர்ந்த அரசியல்வாதிகள் தங்கள் ராஜ வாழ்க்கைக்காக தங்கள் தாய் நாட்டை தியாகம் செய்ய துணிந்திருக்கிறார்கள். 1947ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவை முதன் முதலில் ஆட்சி செய்த சுதந்திரத்திற்காக பாடுபட்ட மூத்த பெரும் தலைவர்களே அம்மாதிரியான சுயநல ஆதிக்க மனப்பான்மையுடன் செயல் பட்டதால் தான் இன்று காஷ்மீர் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்து பல்லாயிர உயிர்களை பலிவாங்கிக்கொண்டிருக்கிறது. இப்போதாவது நம் மக்கள் விழித்தெழந்து அரசியல் போக்கை மாற்றவில்லையானால் வருங்காலத்தில் நமது சந்ததியினர் தம் தாய்நாட்டிலேயே அகதிகளாக, அடிமையாக வாழவேண்டிய நிலை வரும்.

 4. சரியான வரலாற்று விளக்கங்கள், ஒவ்வொரு முஸ்லீம் தெரிந்துகொள்ள வேண்டும்.

 5. ஒரு மார்க்கம் பகிரங்கமாக இந்து மதத்தை அழிக்கப்பார்க்கிறது. மற்றொன்று குள்ளநரித்தனத்தைப் பயன்படுத்தி ஒழிக்கப்பார்க்கிறது. ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. நினைத்துப்பார்க்கையில் கண்ணதாசனின் “ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம், இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்” பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. வஞ்சகர்களும், துரோகிகளும் மற்றும் ஓட்டுப்பிழைப்பு நாயகர்களும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறார்களேயொழியக் குறைவதாகக்கானோம். தமிழ்நாட்டின் கடற்கரையோரக் கிராமங்கள் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் இவ்விருவினத்தாரின் கூட்டம் அசுர வளர்ச்சி கண்டுகொண்டிருக்கிறது. கடலரிப்பின் தாக்கத்தால் நிலப்பரப்பு குறைவதுபோல் நம்மக்கள் காணாமல்போய்க்கொண்டிருக்கிறார்கள்.

 6. Tarek Fateh, pakistan-born Canadian Citizen, has also applied for Indian citizenship. He has even requested PM Modi to help in this regard.

 7. மகாத்மா காந்தி இந்து மதத்தின் சிறப்பை அறிந்தவர் என்றபோதும், இஸ்லாத்தின் திருக்குர்ரானை முழுவதும் படிக்காமலேயே எல்லா மதமும் சம்மதமே என்று கூறினார். பிற மதங்களை ஒரு வழியாக அங்கீகாரம் செய்வது இந்து மதம் மட்டுமே. ஆனால் கிறித்தவமும், இஸ்லாமும் பிறமதங்களை சைத்தான் என்றும் , காபிர் என்றும் சொல்லி ஏளனப் படுத்துகின்றன. நாமும் அந்த மதங்களை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கினால் என்ன ஆகும் என்பதை அவர்கள் சிந்திப்பதே கிடையாது.

  அவர்கள் முழுக்காட்டுமிராண்டியாக மாறி ஒருவரை ஒருவர் கொன்று அழித்து வருகிறார்கள். இஸ்லாம் தோன்றியபின்னர் அவர்கள் மதம் வாளால் பரவியதே தவிர அந்த பெண்ணடிமை மடத்தை ஏற்பார் எங்குமே கிடையாது. நபிகள் நாயகம் இறந்த அன்றே அவர்களுக்குள் நபிகள் நாயகத்தின் மனைவிகளில் ஒருவரான ஆயிஷாவின் தந்தை ஆகிய நபிகளின் மாமனாருக்கும், நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமா வை மணந்த மாப்பிள்ளை ஆகிய அலி அவர்களுக்கும் வாரிசுப்போர் மறைமுகமாக உருவாகிவிட்டது. அந்த வாரிசுப்போரில் கலிபாக்களின் வரிசை எண் ஒன்று யார் என்பதில் ஆரம்பித்து பல கலீபாக்கள் இந்த சன்னி ஷியா போரில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சன்னி ஷியா மோதல்கள் கடந்த 1500 வருடங்களுக்கும் மேலாக பலகோடி மனித உயிர்களை பலி வாங்கி இருக்கிறது.

  இன்னமும் குறைந்தது நூறுகோடி இஸ்லாமியர்களின் உயிரை பலி வாங்காமல் இந்த மோதல்கள் நிற்கப்போவதில்லை. ஷியாக்களை தவிர அகமதியா மற்றும் சுபி என்று சிறிசிறு குழுக்களையும் வஹாபி சன்னி மூடர்கள் தினசரி கொன்று குவித்து வருகிறார்கள். பாகிஸ்தானில் வாரா வாரம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மசூதிக்குள் நுழையும் ஷியா முஸ்லீம்கள் தொழுகையை முடித்துவிட்டு , பத்திரமாக உயிர் திரும்புவார்கள் என்ற உத்திரவாதம் கிடையாது.

  கிறித்தவமும் சைவப்பூனை அல்ல. அதுவும் இரத்தக்காட்டேரி தான். அவர்கள் ஆஸ்திரேலியா , இங்கிலாந்து, வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பூர்வ குடிகளை கொன்று , மதம் மாற்றித்தான் தங்கள் மத விஷத்தை பரப்பினார்கள். அன்புவழியில் இந்துக்களை தவிர வேறு எந்த மதமும் பரவவில்லை.

  இந்த இரு ஆபிரகாமிய மதங்களும் ஒழிந்தால் தான் மனித இனம் அமைதி பெறும். இல்லை என்றால் உலகப்போரில் மனித இனமே அழிந்துவிடும் சூழல் உள்ளது. இன்று சிரியா, ஈராக் , தெற்கு யேமன் ஆகிய நாடுகளில் நடக்கும் இன அழிப்பு போர்கள் எல்லாமே சவூதி வஹாபி சன்னி தீவிரவாதிகளால் அமெரிக்காவின் உதவியோடும், சவூதி மன்னர் குடும்ப பொக்கிஷத்திலிருந்து கிடைக்கும் மறைமுக உதவிகளாலுமே நடந்துவருகிறது. அமெரிக்கா இரட்டை வேடம் போட்டு பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று செயல்பட்டுவருகிறது.

 8. ஒரு பக்கம் ஷியா முஸ்லீம் ஈரானுடன் அணுஆயுத ஒப்பந்தம் மறுபுறம் வஹாபி சவூதியுடன் சேர்ந்து சிறிய ஷியா அதிபருக்கு எதிரான போர் என்று இரட்டை வேடத்தில் அமெரிக்காவை யாரும் இன்று மிஞ்ச முடியாது.

 9. அமெரிக்கா என்றுமே எதிலுமே இரட்டை வேடம்தான் போடுகிறது. இன்று உலக அளவில் பயங்கரவாதத்திற்கு அமெரிக்காவும் ஒரு காரணம்.

 10. அமெரிக்கா காரணமா?

  “The top of the pyramid – humansarefree” என்று கூகிள் செய்து, முதல் லிங்க்கை கிளிக் செய்து படித்துப்பாருங்கள்.

 11. 1. “the secret creators of world war”

  2. “the secret instigators of world war”

  இவற்றை முறையே கூகிள் செய்து, முதல் லிங்க்கை கிளிக் செய்து படித்துப்பாருங்கள்.

 12. இதனையும் :

  1. “new world order conspiracy”

  2. “population control – haarp”

 13. தற்போதுள்ள இந்த கால சூழலில் நமக்குள் ‘வைஷ்ணவம் சைவம்,சாக்தம்’ என்று சண்டையிட்டுக் கொண்டோமானால் முஸ்லிம்களும் கிருஸ்தவர்களும் நம்மை விழுங்கிவிடுவார்கள்.
  (edited)

 14. சரவணன் கூறுவது முற்றிலும் உண்மையே. வைஷ்ணவம், சைவம், சாக்தம் அவைகளின் உட்பிரிவுகள் எல்லாம் ஒன்று சேரவேண்டும். முன்னாளில் ஆன்மீக தலைவர்கள் அவரவர்களுக்கு தோன்றிய தத்துவத்தை போதித்தார்கள். ஆனால் அவர்கள் யாரும் சமூகத்தை சாதிவாரியாக பிரிந்து வாழ போதிக்கவில்லை. ஆனால் அவர்களை பின்பற்றிய சுயநலஆன்மீக தலைவர்கள் சமூக அமைப்புக்குள் விரோதத்தை விதைத்துவிட்டனர். அதுவே அந்நிய மதத்தினர் நம்மை கேலி செய்வதற்கு காரணமாகிவிட்டது. அறிவு வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையிலும் அவர்கள் தங்கள் தனித்தன்மையை விட்டுகொடுக்க தயார் இல்லை. ஆதி சங்கரர் வழியில் வந்த ச்ருங்கேரி மடம் காஞ்சி மடத்தை ஏற்க்க மறுக்கிறது. இதேபோல் மற்ற சங்கர மடங்களும் ஒன்றுக்கொன்று விரோத மனபான்மையுடன் போட்டி போடுகிறது. அதேபோல் வைணவத்திலும் ஒரு ஜீயர் மற்ற ஜீயருடன் ஒத்து போவதில்லை. இந்த ஒற்றுமையற்ற செயல் சாக்தத்திலும் உண்டு. இவர்களின் இந்த பேத செயல்பாடு கிருத்துவ மிஷனரி(நரி)களுக்கு தங்கள் தில்லு முல்லு மத மாற்ற நடவடிக்கைகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. காலம் இப்படியே சென்றால் வரும் காலத்தில் ஹிந்துக்கள் தங்கள் தாய் நாட்டில் சிறுபான்மையினராகி அகதிகளாக வாழ வேண்டி வரும்.

  அந்த இழிபாட்டிலிருந்து ஹிந்து சமயம் மீள வேண்டுமானால் அனைத்து மடாதிபதிகளும், ஆதீனகர்த்தர்களும், ஆன்மீக தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு அமைப்பின் கீழ், தங்கள் பிரிவின் சடங்குமுறைகளுக்கு பாதகமில்லாமல் செயல் படுவார்களேயானால் ஹிந்து மக்களும் ஒன்றுபடுவார்கள் ஹிந்து சமயமும் அழிவிலிருந்து மீள வழியேற்படும்.

  இங்கு வேறொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டிய கால கட்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது, வருங்காலத்தில்,பொறுமையிழந்த ஹிந்து தீவிர பற்றாளர்கள், அந்நிய மதவெறிக்கு எதிராக தீவிர செயலில் ஈடுபடும் காலம் வரலாம். அப்போது, ஹிந்துக்களுக்குள் ஒற்றுமை ஏற்படவேண்டும் என்கிற எண்ணத்தில், ஆன்மீக தலைவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்தும் நோக்கம் தீவிரமானால், அவர்கள் ஆன்மீக தலைவர்களுக்கு எதிராக செயல் படலாம். அப்போது அந்நிய மத தீவிர விஷகிருமிகள் உள்ளே புகுந்து நிரந்திர அழிவை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு என்பதை நாம் ஒதுக்கி விடமுடியாது. இதை ஹிந்து மத தலைவர்களிடம் எடுத்து சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கடந்த நூறு வருட மத ரீதியான ஜனத்தொகை மாற்றத்தையும், சுதந்திரத்திற்கு பின் ஏற்பட்ட மத மாற்ற வேகத்தையும், அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக ஹிந்துக்களை இழிவு செய்வதையும் ஒத்துப்பார்த்தால் உண்மை விளங்கும்.

  தேவை ஹிந்து மத புரட்சி.

 15. Hindu society should be desilted as advocated by Modern preachers of Hinduism.Sri Narayana Guru of Kerala is good social reformer. Once Sri Narayaana Guru visited the hamlet of EZHAVAS who are considered untouchable and subjected to heinous social injustice. The Ezhavas had 59 small shrines in the temple. Sri Narayana Guru had ordered domolition of 58 shrines except one Sri Mahaganapathi Temple.The people obeyed the order.Because of time and Money management the Ezhava community flourished a lot after that.They brought off a school, library and polytechnic one by one. Now Ezhava are a socially educationally, politically advanced community.Thanks to the religious reforms made by Guru. All over India such reforms are need of the time.

  Insome temple Hindus break coconut on their head.What anon sense ?
  unless Hindus abandon such outdated burdens Hindus could never raise to the occasion and meet the challenge posed by Islam /christianity.But nobody is there to guide Hindus

 16. நான் இந்தியப் பிரிவினையை ஆதரிக்கவில்லை, ஆனால் பிரிவினைக்கான காரணத்தை ஆதரிக்கிறேன். 1930 களில் நாடு சுதந்திரமடையப்போகிறது என்று அறிந்தவுடன் இந்து மதத் தலைவர்களில் சிலர் இந்தியாவை இந்து நாடாக மாற்ற முனைந்தனர் அப்போது சிறுபான்மையினமான முஸ்லிம்கள் தங்கள் பாதுகாப்பு நிலை குறித்து சிந்தித்தனர் அதன் விளைவாக சிலர் தனி நாடு கோரிக்கை வைத்தனர் முஸ்லிம்களிலேயே பலர் அதை எதிர்த்தனர் இறுதியாக முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் முஸ்லிம்களுக்கும் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இந்துக்களுக்குமாகப் பிரிக்கப்பட்டு இரு பகுதிகளிலும் வசிக்கும் மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் விரும்பினால் தன் மதம் சார்ந்த பகுதிகளுக்கு செல்லலாம், இல்லையென்றால் அவர்கள் அந்தந்த நாட்டில் மத சிறுபான்மையினராக வாழவும் அவர்களுக்கான மத உரிமைகளை இரு நாடுகளும் வழங்க வேண்டும் என்பது சாசனமாக இயற்றப்பட்டே நாடு பிரிக்கப்பட்டது. இதுதான் நாடு பிரிக்கப்பட காரணம், அதாவது ஒரு பக்கம் இந்தியா இந்து நாடே என்ற கோரிக்கை- அதை மறுத்து உங்களுக்கு இந்து நாடு வேண்டுமென்றால் எங்களுக்கு இஸ்லாமிய நாடு வேண்டுமென்ற கோரிக்கை- இறுதியில் அமைந்தது இந்து நாடும் அல்லாத இஸ்லாமிய நாடும் அல்லாத இரு நாடுகளிலும் மாற்று மதத்தார் வாழும் நிலையிலான ஜனநாயக நாடு, இறுதியில் இரு பிரிவினைவாதிகளின் கனவும் நிறைவேறாமல் போனது. பாக். பிரிவினைவாதிகளின் தாருல் இஸ்லாம் கனவு எப்படி பொய்யாகி அங்குள்ள சிறுபான்மை மக்கள் சிறுமைப்படுத்தப்படுகிறார்களோ அதே நிலைதான் இன்று இந்தியாவிலும் நீடிக்கிறது.இரு நாடுகளிலும் மத சிறுபான்மை மக்கள் என்று நிம்மதியாக வாழுகிறார்களோ அன்றுதான் அந்த நாடு உன்மையான ஜனநாயக நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *