வேதப் பாக்கள் வனங்களில் தான் உருப்பெற்றன. ஆரண்ய காண்டம், வன பர்வம் இரண்டுமே நம் இதிஹாஸங்களில் உள்ளவையே. நைமிச வனம்,காம்யக வனம், த்வைத வனம், தண்டக வனம், மது வனம், தாருகா வனம் என்று பல பண்டைய வனப் பெயர்கள்.. ஆனைக்கா, கோலக்கா, கோடிக்கா, நெல்லிக்கா, குரக்குக்கா, வெஃகா, தண்கா எனும் அழகான பெயர்கள் வனம் சார்ந்த தலங்களைக் குறிப்பவை… நெருங்கிய வனப்பகுதி நாட்டுக்கு ஓர் அரணாகவே திகழ்ந்தது. தமிழ் மன்னர்கள் பனையையும், வேங்கையையும், ஆரையும் காவல் மரமாகக் கொண்டிருந்தனர்… காடுறை வாழ்க்கை ஆன்மிகத்துக்குத் துணை புரிவதாக நம்பினர்; வானப்ரஸ்தம் எனும் ஒருநிலையும் வரையறுக்கப் பட்டது. ..
View More வனங்களும் நமது பண்பாடும்Author: தேவ்
இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?
தென்னகத்தில் அரக்கர் எவரும் வாழ்ந்ததாக வால்மீகி சொல்லவில்லை. காவிரி/பொருநை நதிதீரங்கள் எழிலார்ந்த அமைதி தவழ்ந்த பகுதிகள். பாண்டியரின் செம்பொற் கபாடம் இராமாயண விவரிப்புக்குள்ளாகிறது. தொடக்கத்திலிருந்தே இராமபிரான் ஒருவகையான வலிமையைச் சமப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதே இராமாயணத்தின் உட்பொதிந்த பொருள்.
View More இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?ஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்
ஹிந்து வெறுப்பால் பாகிஸ்தான் என்ற கனவுலகை நோக்கிச் சென்ற முஸ்லிம்கள், கடைசியில் அடிமையானது அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியே போன்ற எதேச்சாதிகார சக்திகளுக்கு மட்டுமே. முன்னேற்றமும், குறைந்தபட்ச நிம்மதியான வாழ்க்கையும் கூட பாக். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களுக்கு அமையவில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை. இந்நூற்றாண்டின் முதல் பதின்மத்தில் மட்டுமே குண்டு வெடிப்பு, தீவிரவாதத் தாக்குதலால் மடிந்த பாகிஸ்தானியரின் எண்ணிக்கை 35,000க்கும் மேல். செல்வம் கொழிக்கும் இஸ்லாமிய அரபு நாடுகள் சிரிய முஸ்லிம் அகதிகளுக்கு இடமில்லாமல் கை விரித்தது அண்மைய நிகழ்வு.. கலிமாவை ஏற்ற மாந்தரிடையே எந்த நிற – மொழி – இன – பிராந்திய வேற்றுமையும் கிடையாது; எல்லாரும் சகோதரரே; தோளோடு தோள் உரசிக்கொண்டு தொழலாம் என்னும் பம்மாத்துகள் எல்லாம் எந்த அளவு உண்மை என்பதை இனியாவது அப்பாவி இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்….
View More ஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?
வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்… இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட கிறித்தவ திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. இவ்வழிபாட்டுத்தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ? அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?….
View More வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்
தமிழர் பெருமிதம் கொள்ளும் சீனத் தொடர்பு, அராபிய வணிகத் தொடர்பு, கீழ்த்திசை நாடுகளின் தொடர்பு இவற்றுக்கும் முன்பாகவே ஒரு நீடித்த வடபுலத் தொடர்பிருந்ததை பாரதத்தின் பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன…. அடிகளாரின் விரிந்த பார்வையின் விளைவே சிலப்பதிகாரக் காப்பியம்… பாகவதத்தை முன்மாதிரியாகக் கொண்டு தேவகுமாரனான, தேவதூதரான இயேசு பிரானுக்கும் கடந்த நூற்றாண்டில் தேவசி என்பவர்… பேரா. வையாபுரிப் பிள்ளையவர்களின் பல்சந்த மாலை இஸ்லாமிய இலக்கியத்தைச் சார்ந்தவை… இவர் தொகுத்த ’ப்ரதானப்பெட்ட மதிலகம் ரேககள்’ (Important Temple Records) அநந்தபுரம் ஆலயத்தில் தற்போது கண்டெடுக்கப்பட்ட ஆபரணக் குவியலைப் பதிவு செய்துள்ளது… இலக்கிய ஈர்ப்பும் இறையுணர்வும் இனிய கவிதைகளும் பல்லினப் பாகுபாட்டைத் தகர்த்து மக்களை ஒன்றுபடுத்தி வருவதை உலக வரலாற்றில் நாம் தொடர்ந்து காண முடிகிறது.
View More எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்அச்சுதனும், அம்பிகையும்
அடர்ந்த வனங்களில் முனிவர்கள்தம் குடில்களில் அவதரிக்கவும் இவர்கள்
தயங்கியதில்லை. அறத்தை நிலைநாட்ட யுகம்தோறும் அவதரிப்பவன் அண்ணன்; அறம் வளர்த்த நாயகியாக ஐயாற்றில் விளங்குபவள் தங்கை.
அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்
அழகிய மணவாள தாசர் என்ற ஓர் அடியவர்; ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’ என்றும் அழைப்பர். இவர் எழுதியது ‘அஷ்டபிரபந்தம்’ என்னும் நூல். எட்டு நூல்களின் தொகுப்பான இந்த நூலில் ‘திருவரங்கக் கலம்பகம்’ என்னும் நூலும் அடங்கும். திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது. இப்பாடல் பெருமானுடைய ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் மனதைக் கவர்வதாக உள்ளது…
View More அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்