2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்

கடந்த வாரத்தில்  மட்டும்  தமிழ்நாட்டில் இந்து இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து   மூன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன.  இதில்  இரண்டில்  சம்பந்தப் பட்ட தலைவர்கள் உயிரிழந்துள்ளனர்.   2013-14ல் நிகழ்ந்தது போன்று திட்டமிட்டு இந்தத் தாக்குதல்கள்  நிகழ்த்தப் படுகின்றனவோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில்  இஸ்லாமிய பயங்கரவாதம் தீவிரமாக வளர்ந்து வருகிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிந்தே இருக்கக் கூடும்.   இந்து இயக்கங்களின் முக்கியத் தலைவர்களுக்கு எந்நேரமும் அபாயம் என்ற சூழலும் இதனால் ஏற்பட்டுள்ளது.  இவ்வளவு அபாயம்  இருக்கும் நிலையில்,   தமிழ்நாடு மாநில அரசும், காவல்துறையும் ஏன் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.  சம்பந்தப் பட்ட இயக்கங்களும் கூட தங்களது முக்கியத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் ஏன் இவ்வளவு தொய்வு காண்பிக்கின்றன என்பது  புரியவில்லை.

மதுரை பேராசிரியர் பரமசிவன் முதல்  பா.ஜ.க.  செயலர் சேலம் ஆடிட்டர் ரமேஷ்  வரை 200க்கு மேற்பட்ட முக்கிய இந்துத் தலைவர்களும் செயல்வீரர்களும்   கடந்த  15-20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்  பட்டுள்ளனர்.   கடந்த 3-4 ஆண்டுகளில் இத்தகைய தாக்குதல்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன.   இவற்றில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளும் குற்றவாளிகளும் தமிழக காவல் துறையால் செய்யப் பட்டனர். ஆனால், இந்தக் குற்றங்களுக்காக இதுவரை யாருக்கும் கடுமையான தண்டனைகள் எழுதும் வழங்கப் படவில்லை.  சம்பந்தப் பட்ட கொலைவழக்குகளும்  இந்திய நீதிமன்றங்களின் வழக்கமான தாமத செயல்பாட்டுக் காலங்களையும் தாண்டி  எந்தத் தீர்ப்புகளுமின்றி இழுத்தடிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.  தங்கள் உயிரையே பலியாகத் தந்து விட்ட இயக்கத்தவர்களின் கொலைகளுக்கு நீதி கேட்டுப் போராடுவதிலும், சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும்  கூட பா.ஜ.கவும்  இந்து இயக்கங்களும்  தொய்வு காட்டுவது பொதுமக்களிடையிலும் தொண்டர்களிடத்திலும் சோர்வையையும் நிராசையையும் ஏற்படுத்தும் என்பதை இயக்கங்கள் உணர வேண்டும்.  மத்தியில் நரேந்திர மோதியின் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி  செய்யும்  இந்தக் காலகட்டத்தில் கூட இந்தக் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப் படாதது மட்டுமல்ல,  மேலும் வன்முறைகள் தொடர்வது  மிகவும் கவலைக்குரிய விஷயம்.

******

சூரி (எ) சுரேஷ்
சூரி (எ) சுரேஷ்

ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி  (எ) சுரேஷ் (வயது 40)  19-செப்டம்பர், 2016 இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முகமூடி அணிந்து வந்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது.

வழக்கம் போல அவர் வேலைகளை முடித்து விட்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்புவதற்காக, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவரை விடாமல் விரட்டிச் சென்று ஒரு வீட்டின் வாசல் முன்பு, சுற்றி வளைத்த முகமூடி கும்பல், சூரியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் தலையின் பின்பகுதி உள்பட பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. சூரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட கும்பல், அங்கிருந்து பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது.  இந்த கொலையை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.  (செய்தி இங்கே).

kovai_sasikumar_hindu_munnani_photo
சசிகுமார்

இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்தவர் சசிகுமார் (வயது 36). அவரது வீடு, கோவை, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டர்மில் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ளது.

சசிகுமார் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் நால்வர், அவரது வாகனத்தை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பியோடி சசிகுமாரைத் துரத்திச் சென்ற மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த சசிகுமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். அவரது சடலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இத்தகவல் பரவியதும் இந்து முன்னணியினர், பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், சசிகுமார் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை முன்பாகவும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாகவும் திரண்டு, காவல் துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  (செய்தி  இங்கே மற்றும் கீழே).

 

நன்றி: தினமணி, 23-9-2016
நன்றி: தினமணி, 23-9-2016

மரணமடைந்த இந்து இயக்கத் தலைவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி.

அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

********

dindigul_shankar_hindu_munnani_attack
சங்கர் கணேஷ் மீது கொலைவெறித் தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டத்தின் இந்து முண்ணனியின் மாவட்ட பொறுப்பாளர் சங்கர் கணேஷ் செப்டம்பர் 19 அன்று 9 மணியளவில் திண்டுக்கல்லில் அடையாளம் மறைக்கப்பட்ட நபர்களால்  கொடூரமாகத் தாக்கப் பட்டார்.

தலை, முதுகு, கை, கால் ஆகிய இடங்களில் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டிருக்கிறார் சங்கர் கணேஷ்.  

அவர் விரைவில்  உடல்நலம் தேறி வரப் பிரார்த்திக்கிறோம்.  

இந்தத் தாக்குதல் தொடர்பாக யாசின், மாலிக், ஜெயக்குமார் (எ) பாசித், சுரேஷ் ஆகிய நால்வர் கைது செய்யப் பட்டுள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன   (இதில் இருவர் இந்துவாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பாக முஸ்லீமாக மதம்மாறியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது).

 

9 Replies to “2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்”

 1. எல்லாம் சரி.. இந்த கொலை சம்பவம் தொடர்பாக இந்து இயக்கங்களை சேர்ந்த குண்டர்கள் கோவையில் நிகழ்த்திய வன்முறை செயல்களை தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு ஒரு வரி கூட கண்டிக்காதது ஆச்சர்யமே. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வன்முறையில் ஈடுபட்ட இசுலாமியர்களை கண்டியோ கண்டி என்று கண்டித்த தமிழ்ஹிந்து தளம் அதே காட்டுமிராண்டி தனத்தை இந்து இயக்கங்கள் செய்யும் போது மட்டும் அமைதியாக இருப்பதன் நோக்கம் என்னவோ? என் மறுமொழியை தடை செய்வதை விட , இது குறித்து விளக்கினால் தகும்.

  இன்னும் சசிகுமார் எதனால் கொலை செய்யப்பட்டார், யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. கொலை செய்தவர் யாராக இருப்பினும் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும் தான். ஆனால்,அதற்குள் முன்முடிவுகளோடு சிலர் வன்முறையில் இறங்கி பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பது எந்த விதத்தில் நியாயம். அரசு சொத்தான பேருந்துகளையம் அப்பாவி ஏழைகளின் சொத்தான ஆட்டோ மற்றும் கடைகளையும் சிறு வியாபார வர்த்தக நிறுவனங்களையும் தாக்கி வன்முறையில் ஈடுப்படுவோர்களை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மேலும் மதவாத வன்முறை நிகழாமல் இருக்க அங்கிருக்கும் இசுலாமியர்களுக்கு அவர்களின் வழிப்பாட்டு தலங்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். அமைதியை வேண்டும் ஒரு மதசார்பற்ற இந்துவாக இதுவே நான் வைக்கும் கோரிக்கையாகும். நன்றி

 2. தாயுமானவன் அவர்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக் கூடாது. சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில் முஸ்லிம்கள் நடத்திய வன்முறைக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
  அது திட்டமிட்டு இந்திய மக்களை, தமிழக மக்களை, சென்னை மக்களை அச்சுறுத்தச் செய்யப் பட்ட வன்முறை.
  உலகின் எந்த மூலையிலோ எங்கோ எவரோ – சற்றும் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும், சென்னைக்கும் சம்பந்தமில்லாமல் – முகமதுவின் வாழ்க்கை நடப்புகளைக் குறைகூறும் விதமாக எடுத்த குறும்படத்துக்கு சென்னையில் வன்முறை செய்வதன் நோக்கம் அதுதான்.
  அதனால் சென்னை மக்கள் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் போக்குவரத்து நெரிசலில் அவதிக்குள்ளானார்கள், காரணம் அமெரிக்கத் தூதரகத்துக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஜெயாவின் அதிமுக அரசு (கூட்டணியில் இருந்த மனித நேய மக்கள் கட்சி – முன்னாள் அல்-உம்மாவின் – திருப்திக்காக அந்தப் பகுதியில் இருந்த சர்வீஸ் பாதையை அடைத்தது.

  தொடர்ந்து இந்து இயக்கங்களின் முன்னிலை பிரமுகர்களை முஸ்லிம் குண்டர்கள் கொன்று வந்தாலும், அதிமுக அரசு வாக்கு வங்கி அரசியல் காரணமாக, குண்டர்களை அப்படியே விட்டு வைப்பதால் பொங்கி எழுந்த பொதுமக்களின் வெளிப்பாடே கோவை வன்முறைக்குக் காரணம். தானே இரண்டாம் நாள் அடங்கி விட்டது. இது கூடச் செய்யாவிட்டால் தொடர்ந்து கொலைகள் விழும் என்ற பயம் கலந்த காரணத்தால் இது நியாயமானதே. எப்படி வள்ளுவர் பொய்மையும் வாய்மையிடத்து என்று சொல்கிறாரோ அது பொல இந்த வன்முறை இனி வரும் கொலைகளுக்கு எதிர்ப்பு என்ற வகையில் தேவையானதே. இது தற்காப்பின் பாற்பட்டது.

 3. ஒரு மதசார்பற்ற இந்துவாக தன்னைக்கருதும் தாயுமானவன் இந்தக்கட்டுரை இறுதி ஊர்வலத்திற்கு முன்னரே வெளியாகிவிட்டது. ஆகவே இறுதி ஊர்வலத்தினைப்பற்றிய முழுமையானத்தகவல்கள் வெளியானபின் ஹிந்துக்களால் வன்முறை நிகழ்ந்திருந்தாலும் அதற்கும் கண்டனம் வெளியாகும். வன்முறையை ஹிந்துத்துவர்கள் ஏற்பதில்லை.
  மதச்சார்பில்லாவர் எப்படி ஹிந்துவாக இருக்கமுடியும்? மதச்சார்பின்மை என்றால் எந்தமதத்தையும் சாராதிருத்தல் அல்லவா? மதச்சார்பின்மை என்றபெயரில் ஹிந்துமதத்தினர்களுக்கு ஏற்படும் இன்னலைப்பற்றிக்கவலைப்படாமல் இருக்கின்றீர்களா? இல்லை மதச்சார்பின்மை பேசும் பெரும்பாலானவர்களைப்போல ஜிஹாதிகளையும் மதமாற்றி மிஷனரிகளையும் ஆதரிக்கின்றீர்களா?

 4. தாயுமானவன் அவர்கள் கேட்கும் கேள்வி சரி அல்ல. கோவையில் ஒரு படுகொலை நிகழ்த்தப்பட்டு , அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டு ஊர்வலம் போகிறார்கள். அப்போது இந்த வன்முறை எழுந்ததற்கு , ஊர்வலத்தை மறித்து, இஸ்லாமிய தீவிரவாதிகள் இட்ட கோஷங்களும் இன்னபிற செயல்களும் என்று தகவல்கள் கூறுகின்றன.மேலும் இந்த வன்முறையில் சில வெளிமாநிலத்தவர்களும் உள்ளே புகுந்திருக்க கூடும் என்று அனைவரும் கருதுகிறார்கள். முக்கியமாக பங்களாதேசத்து மத தீவிரவாதிகளும் கலந்து கொண்டு வன்முறையை அரங்கேற்றியுள்ளனரா என்பதை ஆராய வேண்டும். இந்து இயக்கத்தவர்களை கைது செய்து , திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பியுள்ளனர் என்று தெரிகிறது. அதிமுக அரசு ஆம்பூர் சம்பவத்திற்கு பிறகு , அம்மா மருத்துவமனையில் இருப்பதால் ,சரிவர செயல்படவில்லை. மேலும் வஹாபிய சன்னி தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அரசு தவறினால் எதிர்காலத்தில் மேலும் பல ஆம்பூர்கள் உருவானால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு எதிரே கோஷம் போடுவதனுடன் நிறுத்தாமல் , ஜெனெரல் பேட்டர்ஸ் ரோடில் உள்ள இருசக்கர வாகனங்களை தீவைத்துக் கொளுத்திய தீவிரவாதிகளை உடனே சிறையில் தள்ளியிருந்தால் , இந்த வன்முறை வளர்ந்திருக்காது.

 5. வன்முறையை யார் நிகழ்த்தியிருந்தாலும் கண்டிக்கத்தக்கது. மற்றும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிப்பது குற்றம். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். சட்டத்தினடிப்படையில். இதிலேந்த வேறுபாடுமில்லை.

  \\ எல்லாம் சரி..\\
  எதெல்லாம் சரியென்பது புரியவில்லை. எப்படி இவ்வளவு சாதாரணமாக, தொடர்ந்து திட்டமிட்டு நடத்தப்படுகிற கொலைகளை எடுத்துக்கொள்வது. தமிழக ஆட்சியாளர்களின் மெத்தெனப்போக்கே இந்தப் பாதகச்செயல்களுக்கெல்லாம் காரணம்.

  \\இன்னும் சசிகுமார் எதனால் கொலை செய்யப்பட்டார்,\\
  \\அதற்குள் முன்முடிவுகளோடு சிலர் வன்முறையில் இறங்கி பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பது எந்த விதத்தில் நியாயம்.\\

  எக்காரணத்தைக்கொண்டு கொலைசெய்யப்பட்டாலென்ன, கொலையென்பது குற்றம்தானே. இதற்கெல்லாம் பின்னணியில் ஒரு கூட்டமிருக்கவேண்டுமென்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ளமுடியவில்லையா என்ன.

 6. உலகையே தன் காலின் கீழ்கொண்டுவர எண்ணி, எதிர்க்கும் அனைவரையும் வென்ற “அலெக்சாண்டர் தி கிரேட்”, நம் பாரதநாட்டின் வடமேற்கு எல்லையில் இருந்த ஒரு சிறு மன்னனான புருஷோத்தமனிடம் தோற்று (புருஷோத்தமன் தோற்றதாக சொல்லும் வரலாறு கிரேக்கர்களால் எழுதப்பட்டது), உலகை கைப்பற்றும் தன் எண்ணத்தையே விடுத்து, வீடு திரும்பினான். (தன் குதிரை “பியூஸிபாலஸ்” இறந்ததால் மனமுடைந்து வீடு திரும்பினான் என்ற வரலாற்றை நம்புபவர்கள் நம்பட்டும்)

  அப்படியிருக்க, பல்லாயிரம் வருடங்களாக கலைமகளும் (கல்வி), அலைமகளும் (செல்வம்), மலைமகளும் (வீரம்) குடிகொண்டிருந்த, 30 கோடி மக்களை கொண்டிருந்த நம் பாரதநாட்டை, மிக சிறிய நான்கு நாடுகள் ஒன்றாக சேர்ததால் “கிரேட்” -டான பிரிட்டன், சில ஆயிரம் பேர்களைக்கொண்டு எப்படி கைப்பற்றி ஆண்டது என்று பல வருடங்களாக புரியாமல் இருந்தது.

  திரு.தாயுமானவன் அவர்களின் மறுமொழியை படித்தபின்னர் இப்பொழுது நன்றாக புரிகிறது.

 7. “எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்!” – இந்தியா

  நிறைய தாயுமானவர் உள்ளனர் நம்நாட்டில்.

  “முத்தே பவழமே மொய்த்தபசும் பொற்சுடரே
  சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே!
  கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
  விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே!”

  என்று பாடியவரை குறிப்பிடவில்லை நான்.

 8. பெருவாரியான இந்தியர்கள் இந்திய சுதந்திர போராட்டத்திலிருந்து எதையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை!

  Ruin of India by British Rule
  =============================

  “The British Empire in India is the most striking example in the history of the world of the domination of a vast territory and population by a small minority of an alien race.”

  “To begin with, India was conquered for the Empire NOT BY THE ENGLISH THEMSELVES but by INDIANS under English leadership, and by TAKING ADVANTAGE of INDIAN DISPUTES.”

  – Hyndman: Report on India of the “Social Democratic Federation” (Great Britain), Stuttgart (1907)

  reference: https://www.marxists.org/archive/hyndman/1907/ruin-india.htm

 9. இந்திய மதங்கள் கொலை செய்வதை ஆதரிப்பதில்லை. ஆனால் பாலைவனத்து (ஆபிரகாமிய) மதங்கள் தங்கள் மதங்களை சேராதவர்களை கொலை செய்யும்படி உபதேசிக்கின்றன. பைபிளும், குரானுனும் ஒன்றேதான் என்று சமீபத்தில் போப் பிரான்சிஸ் சொன்னதை நினைவில் கொள்வது நல்லது. இந்துக்கள் தீயவர்களை ஒழிக்க வேண்டும் என்றும் அதற்கு “தனுர் வேதம் ‘ என்ற உப வேதத்தில் சொல்லப்படும் காரணங்களை அடுத்தே போர் தொடுக்க வேண்டும் என்கிறார்கள். எனவே இந்துக்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யும் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்துக்கள் “எதிரிகள் ” என்று மட்டுமல்ல இந்து மதத்தை கேவலப்படுத்துபவர்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.மதம் மாறும் ஆட்கள் இந்துக்களை கொள்ள தங்களுக்கு உரிமை கிடைப்பதாகவே கருதுகிறார்கள். ஆனாலும் ஹிந்து பெயர்களை தொடர்ந்தும் வைப்பதன் மூலம் அரசின் சலுகைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். இந்த விஷயத்தை இந்து ஸ்தாபனங்கள் அறிந்து அவற்றை அம்பலப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *