மறக்குமா இந்த மாபாதகங்கள்?: தொடரும் படுகொலைகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஹிந்து இயக்கத் தலைவர்கள் மீது நடைபெற்றுள்ள தாக்குதல்கள்:
arvind11. டாக்டர் அரவிந்த ரெட்டி கொலை:

வேலூர், கொசப்பேட்டை பகுதியில் கடந்த 2012, அக்டோபர்-23ம் தேதி அன்று தமிழக பா.ஜ.க. மருத்துவ அணித் தலைவர் டாக்டர் அரவிந்த் ரெட்டி தமது மருத்துவமனைக்கு முன்பாக மூன்று நபர் கும்பலால் கொல்லப்பட்டார். இவ்வழக்கு காவல்துறையால் திசைதிருப்ப்ப்பட்டுவிட்டது.

காண்க: • பா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை

2. பாஜக நிர்வாகிகள் புகழேந்தி, காளையார் கோவில் படைவென்றான் அம்பலம் ஆகியோர் 2012-ல் கொலை செய்யப்பட்டனர்.

3. ஆர்.எஸ்.எஸ். மாவ்ட்டச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்:

attack-on-anandji-thirupur-2ஆர்.எஸ்.எஸ். திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆனந்த், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 2012, நவம்பர் 6-ல் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார். பலத்த காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

காண்க:
திருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்: சேக்கிழான் வலைப்பதிவு கட்டுரை
இந்த தாக்குதல் குறித்த தமிழ்ஹிந்து கட்டுரை

Manjunath4.இந்து முன்னணி நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்:

நீலகிரி மாவட்டத்தில், உதகையில் 2013, ஏப்ரல் 15-ல் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இக்கொலை தொடர்பாக தமுமுக-வைச் சார்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்த வலைப்பதிவு கட்டுரை –

மீண்டும் தலையெடுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்

5. இந்து முன்னணி நிர்வாகிகள் மீது மீண்டும் கொலைவெறித் தாக்குதல்கள்:

நீலகிரி மாவட்டம், குன்னூரில், 2013, ஏப்ரல் 16-ல் இன்னொரு மாவட்டச் செயலாளர் ஹரிஹரன், ஹிந்து முன்னணி தொண்டர்கள் வெங்கட்ராஜ், ஜெயகுமார் ஆகியோர் முஸ்லிம் குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஹரிஹரனும், ஜெயகுமாரும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

நீலகிரி இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்த சேக்கிழான் கட்டுரை
நீலகிரி இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் குறித்த தமிழ்ஹிந்து.காம் கட்டுரை:

bjp_leader_m.r.gandhi6.பாஜக தலைவர் மீது தாக்குதல்:

நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி 2013, ஏப்ரல் 21-ல் மர்ம நபர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்தார்.

• ந‌டைப்ப‌யிற்சி சென்ற‌ பார‌தீய‌ ஜ‌ன‌தா க‌ட்சி மூத்த‌ த‌லைவ‌ர் எம்.ஆர்.காந்திக்கு வெட்டு
• செய்தி : ந‌டைப‌யிற்சி-சென்ற‌-பார‌தீய‌-ஜ‌ன‌தா-க‌ட்சி-மூத்த‌-த‌லைவ‌ர்-எம்ஆர்காந்திக்கு-வெட்டு

7.வெள்ளையப்பன் படுகொலை:

jaihindஇந்து முன்னணி மாநிலச் செயலாளர் சு வெள்ளையப்பன், வேலூரில் 2013, ஜூலை 21-ல் கொடூரமாக்க் கொல்லப்பட்டார். இது தொடர்பாக முஸ்லிம் அமைப்பைச் சார்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்படுகொலை தொடர்பான இரு பதிவுகள்:

இந்து சமுதாய நலனுக்காக மீண்டும் ஒரு களபலி வெள்ளையப்பன்ஜி!

இந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் தமிழ்ஹிந்து அஞ்சலி

8.ஆடிட்டர் ரமேஷ் படுகொலை: 

பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் அவரது வீட்டிலேயே, 2013, ஜுலை 19-ம் தேதி இரவு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

ramesh

தொகுப்பு: சேக்கிழான்

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? தட்டி கேட்க ஆள் இல்லையா? பயங்கரவாதிகளின் ஓட்டுகளுக்காக நம் சகோதரர் உயிர்கள் ஏலம் போடப்படுகின்றனவா இந்த அரசினால்? இரண்டு சீட் வைத்து கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தமுமுக போன்ற பயங்கரவாத ஆதரவு சக்திகள் இன்று சென்னை கோட்டைக்குள் போனது யாரால்? மக்கள் சிந்திக்க வேண்டும். சாதியின் பெயராலும் கட்சியின் பெயராலும் நம்மில் நாமே இழப்புகளை ஏற்படுத்தியும் நம் சகோதரர்களை நாமே ஒடுக்கியும் ஒதுக்கியும் வைத்தோம். சமுதாயக் குழுக்களிடையே ஏற்பட்ட போட்டிகள் வெறுப்புகள் ஆகியவற்றை அரசியல் வியாதிகள் பயன்படுத்தின. இன்று பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்துகின்றன.  ஒன்றுபட்ட அரசியல் சக்தியாக இந்து சக்தி மாற வேண்டிய வேளை வந்து விட்டது என்பதே உண்மை.  ஹிந்துக்கள் அரசியல் பெரும்பான்மையாக இல்லாமல் வெறும் வகுப்புவாரி பெரும்பான்மையாக இருப்பதே தேசத்தின் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம். இதை சுட்டிக்காட்டியவர் டாக்டர் அம்பேத்கர்.

ஹிந்து சங்கதான் எனும் சமூக ஒற்றுமை இல்லாவிட்டால் இறுதியில் இந்துக்கள் எவரும் அக்கறை கொள்ளாத அனாதைகள் ஆகிவிடுவார்கள் என்கிறார் வீர சாவர்க்கர். இன்று தமிழ்நாட்டில் அதுதான் நிகழ்ந்துள்ளது. ஹிந்துக்கள் தங்களை சாதிகளாகவும் கட்சிகளாகவும் பிரிவுபடுத்தியதன் விளைவு – கோவை குண்டுவெடிப்பை நடத்தியவர்களும் அதில் மகிழ்ச்சி அடைந்தவர்களும் இன்றும் மக்கள் பிரதிநிதிகளாக உலா வருகின்றனர்.  அது மட்டுமல்ல அவர்கள் தமிழகமெங்கும் தங்கள் பயங்கரவாத செயல்களுக்காக தளம் அமைத்து வருகின்றனர். கன்னியாகுமரி முதல் சென்னை வரை குட்டி பாகிஸ்தான்கள் ஆங்காங்கே உருவாகி வருகின்றன. அவை நச்சு பாம்புகளின் விளைகளன்களாக செயல்படுகின்றன.  கேரளத்தின் மாராடு  படுகொலை போன்ற எண்ணற்ற படுகொலைகளை நடத்தும் வலிமையை அவர்கள் பெற்றுள்ளனர்.

இன்று அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாமக ராமதாஸும், தலித் அரசியல் எனும் பெயரில் திமுக ஆதரவு அரசியல் நடத்தும் திருமாவளவனும் அன்று கோவை குண்டு வெடிப்பு பிரதான குற்றவாளி மதானிக்கு சாமரம் வீசியவர்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். ஜிகாதிகளின் குண்டுகளில் வெடித்து சிதறி நம் தெருக்களில் இறக்கும் நம் சகோதரர்களில் ஆண்ட சாதியும் இல்லை ஒடுக்கப்பட்ட சாதியும் இல்லை. அத்தெருக்களில் ஓடி கலக்கும் நம் சோதரரின் ரத்தம் ஜிகாதிகளுக்கு காஃபிரின் ரத்தமே என்பதையும் சாதி பெருமையும் கட்சி வேற்றுமையும் பேசும் ஒவ்வொரு இந்துவும் உணர வேண்டும். நம் சமுதாய ஒற்றுமையின்மையின் ரத்த விளைவுதான் இந்த தொடர் தாக்குதல்கள்.

ஜெயலலிதாவோ கருணாநிதியோ இந்து விரோதிகளும் அல்ல ஆதரவாளர்களும் அல்ல. நம்மிடம் வாக்குவங்கி இருந்தால் நம்மிடம் கைகட்டி சேவகம் செய்வார்கள். நம்மிடம் வாக்குவங்கி இல்லை. தேசவிரோத சக்திகளிடம் அன்னிய மத நச்சுவிரியன்களிடம் அந்த வாக்குவங்கி உள்ளது எனவே தெரிந்தே தேசவிரோத சக்திகளுக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள். ஆக நம் இழப்புகளுக்கு நம் ஒற்றுமையின்மையே காரணம். இனியாவது நாம் ஒன்றுபடுவோம். காலம் கடந்துவிடவில்லை இன்னும்.  இப்போதாவது நாம் இணையாவிட்டால், நாளை தெருக்களில் ஜிகாதி குண்டுகளால் சிதறி மடியும் நம் சந்ததிகள் நம்மை சபிப்பார்கள்.

ஆசிரியர் குழு

19 Replies to “மறக்குமா இந்த மாபாதகங்கள்?: தொடரும் படுகொலைகள்”

 1. பலி தானிகள் அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலி.

 2. // ஹிந்துக்கள் அரசியல் பெரும்பான்மையாக இல்லாமல் வெறும் வகுப்புவாரி பெரும்பான்மையாக இருப்பதே தேசத்தின் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம். இதை சுட்டிக்காட்டியவர் டாக்டர் அம்பேத்கர். ஹிந்து சங்கதான் எனும் சமூக ஒற்றுமை இல்லாவிட்டால் இறுதியில் இந்துக்கள் எவரும் அக்கறை கொள்ளாத அனாதைகள் ஆகிவிடுவார்கள் என்கிறார் வீர சாவர்க்கர். இன்று தமிழ்நாட்டில் அதுதான் நிகழ்ந்துள்ளது. ஹிந்துக்கள் தங்களை சாதிகளாகவும் கட்சிகளாகவும் பிரிவுபடுத்தியதன் விளைவு – கோவை குண்டுவெடிப்பை நடத்தியவர்களும் அதில் மகிழ்ச்சி அடைந்தவர்களும் இன்றும் மக்கள் பிரதிநிதிகளாக உலா வருகின்றனர்.//

  இந்து சங்கதான் உருவாகும் வேளை வந்துவிட்டது. இந்து செயல்வீரர்கள் மீது எவ்வளவுதான் தாக்குதல் நடந்தாலும் வாளாவிருப்பது என்பதே அரசின் கொள்கை போலிருக்கிறது. இந்த நாட்டில் ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்யும் கட்சிகளின் பட்டியலில் தற்போதைய ஆளும் கட்சியும் சேர்ந்துவிட்டது மனதைக் கலக்குகிறது. இத்தனை வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்ற போதும் இவற்றில் எந்த வித முனைப்பையும் அரசும் காவல்துறையும் காட்டாதது அரசின் மீது மெல்ல மெல்ல ஏற்படுகிற ஐயத்தை மேலும் மேலும் உறுதியாக்குகிறது.

  பாஜகவின் தேசியத் தலைவர்கள் இதை பெரிய அளவில் முன்னெடுத்து செயலாற்ற வேண்டும்.

 3. கட்டுரையில் ஆசிரியர் குழு “இப்போதேனும் இந்துக்கள் இணையாவிட்டால் எதிர்கால சந்ததி நம்மை சபிக்கும்” என்று கூறுகிறது. எல்லாம் நல்லாதான் சொல்லுகிறீர்கள். ஆனால் அதை (இந்துக்கள் ஒற்றுமை) ஏற்படுத்த ஒரு துரும்பையாவது எடுத்து போடுகிறீர்களா? பத்திரிக்கை ஒன்று ஆரம்பிக்க சொன்னால் அதை காதில் வாங்குகிறீர்களா? நமக்கு electronic and print media பலம் இல்லை அதை முதலில் ஏற்படுத்தவேண்டும். இந்து ஒற்றுமை மந்திரத்தில் மாங்காய் வரவழைப்பது போல கொண்டு வரமுடியாது. இதை பிஜேபி தமிழ்நாடு தலைமைக்கு சொல்லுங்கள். அதெல்லாம் ஆகாது என்றால் கட்சியை close பண்ணிவிட்டு நாவிதர் கடையை open பண்ணி நடத்த சொல்லுங்கள். நல்ல வருமானம் கிடைக்கும்
  மோடி “நாய்க்குட்டி” என்று ஒரு வார்த்தையை சொல்லிவிட்டார் என்று சன் நியூஸ் டிவியில் காரசாரமாக விவாதம் நடத்தினார்கள். ஆனால் ரமேஷ் என்பவரை கொன்ற “வெறி நாய்களை” பற்றி விவாத மேடையில் விவாதம் நடத்த மாட்டான் அந்த சோரம்போன வீரபாண்டியன் ( அவன் “மனித நேய மக்கள் கட்சி” மாநாட்டில் கலந்து கொண்டு உரை ஆற்றியவன் இவனுக்கு secularism பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?)
  காம வெறி பிடித்து 13 மனைவிகளை மணந்த யோக்கியன் முகமது நபி பற்றி ஒரு கிறிஸ்தவன் எடுத்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மவுண்ட் ரோட்டில் நின்றுகொண்டு கோஷா பெண்கள் (Muslims ) கோஷம் போடுகிறார்கள். ஆனால் நமது இந்து பெண்கள் தமிழ் நாட்டில் வாராவாரம் ஒரு கொலை நடப்பதை பற்றி கவலை படாமல் நேற்று வந்த ஒரு டிவி serial ல் கதாநாயகி பட்ட கஷ்டத்தை பற்றி serious ஆக discussion செய்து கொண்டு இருப்பார்கள். வெட்கக்கேடு! எந்த பெண் தாலி அறுத்தா நமக்கென்ன என்றிருக்கும் இவங்களை என்ன சொல்வது.? நரி வலம் போனால் என்ன இடம் போனால் நமக்கென்ன நம்மை கடிக்காது போனால் போதும் என்றிருக்கும் நாளை கடிக்காமலா போகிறது? இன்று “பாட்டி கதை” பேசிகொண்டிருக்கும் இவர்கள் தங்களின் பேத்தி பேரன்கள் எதிர்காலம் முஸ்லிம்களின் கையில் என்னாகுமோ என்ற பயமே இல்லையே! இருந்தால் இந்நேரம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று நினைக்க மாட்டார்களா?
  “Iftar party ” க்கு ஏற்பாடு செய்துகொண்டும் ரம்சானுக்கு 3000 மசூதிகளுக்கு 4000 டன் அரிசி supply செய்துகொண்டிருக்கும் ஒரு pseudo-secularist இடம் ஒரு ஒன்னாம் நம்பர் ஒட்டு பொறுக்கி இடம் ஒரு இந்து துரோகியிடம் எந்த கோரிக்கை வைத்தாலும் எடுபடாது.என்பதை பிஜேபி உணரட்டும் மீண்டும் தர்மபுரியில் கலப்பு திருமணம் (பெண் தலித் + ஆண் caste Hindu ) செய்துகொண்டு ஒரு குழந்தையினை பெற்று மகிழ்ச்சியாக வாழும் ஒரு குடும்பத்தை பிரிக்க நினைகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது.(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 21.7.13) நம்மவர்கள் யாராவது அங்கே போவார்களா? கம்யூனிஸ்ட்காரன் போவான் ஆதரவு தெரிவிக்கிறான் அதனால் கட்சிக்கு நல்ல பேர் வருகிறது.(உங்கள் கட்டுரையில் ஒரு சாதியினரை ஒதுக்கி ஒடுக்கி வைத்தோம் என்று எழுதுகிறீர்கள். இப்போதும் அது நடக்கிறதே அதற்கு என்ன நாம் செய்கிறோம்?) ஜகத்(=உலக) குரு என்று சொல்லபடுகிற அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்.? அது பற்றி வாயே திறப்பதில்லை அப்புறம் அவர் எப்படி ஜகத்குரு ஆவார்? எல்லா தப்புகளும் நம்மிடம் வைத்துகொண்டு ஒற்றுமை இல்லை என்று வருதபட்டால் ஒற்றுமை எப்படி வரும்?

 4. //ஜெயலலிதாவோ கருணாநிதியோ இந்து விரோதிகளும் அல்ல ஆதரவாளர்களும் அல்ல. நம்மிடம் வாக்குவங்கி இருந்தால் நம்மிடம் கைகட்டி சேவகம் செய்வார்கள். நம்மிடம் வாக்குவங்கி இல்லை.//

  I am having problems with the Tamil font here, hence writing this comment in English. ADMK’s story is different, but how do you say that DMK is not anti-Hindu?. Comments like “Hindus are thieves” given by the DMK supremo, don’t convey that he loves Hindus.

  When A.R.Rahman was presented with the Oscar award for the grossly anti-Hindu and anti-Indian movie ‘Slumdog millionaire’, every Indian including Hindus, were happy that an INDIAN received the award. But the DMK supremo gave an outright separatist comment:- “I am happy that a member of the minority community receives this award”. Just think of the venom he spews on Hindus everytime he opens his mouth.

  I would like to ask:- everyone is saying Modi and the BJP are communal. If supporting one particular religion is communal, hating one particular religion is equally communal. In that case, DMK is the biggest communal party not only in Tamil Nadu, but in India itself, not to mention their alliances with ‘secular’ parties like TMMK and Manidhaneya makkal katchi.

  Muslims are bullies, Hindus are cowards!- Mahatma Gandhi

 5. ஓராண்டில் 6 படுகொலைகள்

  சென்னை, ஜூலை 20: கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் பாஜக மற்றும் இந்து இயக்கங்களைச் சேர்ந்த 6 பேர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம்:

  ஜூலை 4, 2012: நாகப்பட்டினத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி.

  அக்டோபர் 23, 2012: வேலூரில் பாஜக மருத்துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி.

  மார்ச் 19, 2013: பரமக்குடி நகராட்சி பாஜக முன்னாள் கவுன்சிலர் முருகன்.

  ஜூலை 1, 2013: வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன்.

  ஜூலை 8, 2013: ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு.

  ஜூலை 19, 2013: சேலத்தில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ்.

  அரிவாளால் வெட்டப்பட்டு உயிர் பிழைத்தவர்கள்:

  நாகர்கோவிலில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி, மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்டச் செயலாளர் ஆனந்த், ஊட்டியில் இந்து முன்னணி நிர்வாகி ஹரி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டு உயிர் பிழைத்தனர்.

  நன்றி: தினமணி (21.07.2013)

 6. ஜூலை 2013ல் மட்டிலும் இதுவரை 3 படுகொலைகள்.

  தற்போது பொறுப்பில் இருக்கும் ஹிந்து இயக்கப் பொறுப்பாளர்கள் இனிமேலாவது மிகுந்த விழிப்புணர்வுடன் இருத்தல் மிகவும் அவசியம்.

  மனஒழுங்குப் பயிற்சிகள் சுயபாதுகாப்பு உடற்பயிற்சிகள் இவைகள் முறையே கற்பிக்கப்படும் சங்கத்தில் சுயபாதுகாப்பு என்பது மிகவும் பரிச்ரமப்பட்டு போதிக்கப்பட வேண்டிய விஷயமில்லை. வெகு விரைவில் அனைத்து பொறுப்பாளர்களுக்கும்….. முனைப்பு எடுத்தால்….. பாதுகாப்புப் பயிற்சிகளை அளிக்க இயலும். ஆனால் முனைப்பு மட்டிலும் அவசியம்.

  ஹிந்து இயக்கப்பொறுப்பாளர்கள் அனைவரும் முறையாகத் தமிழகத்தில் அமைதி திரும்பும் வரையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

  இயன்ற வரை சர்க்காரிடமிருந்து பாதுகாப்பு பெறுவது அல்லாமல் தனியார் பாதுகாப்பு ஏஜென்ஸி மூலமும் பொறுப்பாளர்களின் பாதுகாப்பிற்கு முனைய வேண்டும். ஹிந்துஸ்தான அளவில் ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் விரைவில் தீட்டப்பட்டு அமலாக்கத்திற்கு வரவேண்டும். கார்யாலயங்களில் கண்காணிப்பு கேமரா உள்பட என்னென்ன பாதுகாப்பு கவசங்கள் அவசியமோ அனைத்தும் முனையப்பட வேண்டும்.

  தேர்தலில் வெற்றி என்பதெல்லாம் அடுத்தபடி.

  நரேந்த்ரபாய் அவர்கள் முதலில் கார்யகர்த்தர்களின் பாதுகாப்பைப் பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்து பாஜக செயலர் படுகொலை செய்யப்பட்டும் வெறும் உபசாரத்திற்காக ஒரு அறிக்கை விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனால் கார்யகர்த்தர்கள் அயர்வடையாது என்செய்வர்? அல்லது அடுத்த கட்சிகள் தான் பாஜகவை மதிக்குமா? மாகாண அளவிலான ஒரு செயலரின் படுக்கொலைக்குக் கூட தூங்கிவழியும் கண்டன அறிக்கையுடன் முன்னகர்வது அறுவறுப்பூட்டுகிறது.

 7. முதற்கண் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷ் அவர்களுக்கு அடியேனது கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறோம். அன்பார்ந்த இந்து மக்களே இன்னுமா அமைதி
  இன்னுமா நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் மதச்சார்பற்ற தன்மை உங்களை காப்பாற்றும் என்று. அப்படி நம்பினால் இன்னும் பல படுகொலைகளை சுலபமாக செய்துவிடுவான் நமது மதச்சார்பற்ற தன்மை என்ற எதிரி. . அதற்க்கு முன் சுதாரித்துக்கொண்டு எழுந்து நமது வருங்கால சந்ததிகளை காக்க வேண்டும் நமது நாடு இந்துஸ்தான் நமது மதம் இந்து.என்று அவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்.எமது ஆன்ம பலம் பலமடங்கு அதிகரிக்க வேண்டும். இந்த படுகொலைக்கு எதிராக ஒன்று திரண்டு அனைத்து அலுவலகங்களுக்கு முனனால் அறப்போர் தொடுக்க வேண்டும். ராஜபக்சேயின் பேரினவாத கொடுங்கரங்கள் ஈழத்தமிழர்களை அழித்த நிலை போல் இங்கும் ஆகிவிடக்கூடாது. எனவே இந்து மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பாஜகவின் பூரண பந்திற்கு ஆதரவு கரம் கொடுத்து இனிமேலாவது இப்படியான படுகொலைகளை நடக்க விடாது தடுத்தல் நமது தலையாய கடனாகும். அதனை இன்றே செய்வோம். நன்றே செய்வோம்.

 8. கமலஹாசன் திரைப்பட விவகாரத்தில் ஜெயா கமலஹசனை முஸ்லீம்களுடன் பேச்சு வார்த்தை நடத்தச் சொன்னார்.

  அது[போல இப்போது பா ஜ க மற்றும் ஹிந்து இயக்கங்களை முஸ்லீம்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் விரும்புவது போல் எப்படி நடந்து கொண்டால் தங்களது தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் தலைகள் தப்பும் என்று தெரிந்து கொள்ள பேச்சு வார்த்தை நடத்தச் சொல்வாரோ ?

 9. திஹார் ஜெயிலில் இருக்க வேண்டியவனஎல்லாம் சட்ட சபையிலே வைத்து அழகு பார்ப்பது ஆட்சியாளர் மட்டுமல்ல, நாமும்தான். ஹிந்து ஓட்டு போடாமல் இவனெல்லாம் மக்கள் பிரதிநிதி ஆகமுடியுமா? ஹிந்துக்கள் கண்ணீர் விட்டது போதும். இனி சீறும் நரசிம்மமாக நமக்குள் உள்ள ஜாதி, மொழி, ஏற்ற தாழ்வு எனும் தடை தூணை உடைத்தெறிந்து ஹிரனியன் எனும் போலிமதசார்பின்மை வாதிகளையும், மதவெறி கொண்டு அலையும் பிரிவினைவாத, பயங்கரவாத தேச துரோகிகளினையும் துடைத்தெறிவோம். அந்த ஆயுதம் ‘ஒற்றுமை’. அது ஓட்டாக மாறவேண்டும். அதுதான் நாம் பலிதானிகளுக்கு செய்யும் அஞ்சலி. அஃறிணைத்தனத்தை விட்டொழித்து சுவாமி விவேகானந்தரும், பகவான் கண்ணனும் காட்டிய வழியில் அந்த தியாகிகள் விட்டு சென்ற பணியினை இன்னும் கோடி மடங்கு வேகமாக முன்னெடுத்து செல்லுவோம். ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று காட்டும் சத்தியம்.

 10. There are Tamil people in eastern province in Sri Lanka willing to help Tamil Hindus. There are Hindu organisations in Eastern province.Tamil people in TN has lost the ability of identifying the real enemies and lost the courage to fight back.

 11. //ஜெயலலிதாவோ கருணாநிதியோ இந்து விரோதிகளும் அல்ல//

  நான் முதலில் இந்த இடுகையைப் பார்த்தபோது ஆசிரியர்குழுவின் கருத்தைப் பார்த்த நினைவில்லை. மேலே உள்ள வரி கடுப்பை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதாவுக்கு மட்டுமே இந்த வரி பொருந்தும். அவர் இந்து விரோதியும் அல்ல, ஆதரவாளரும் அல்ல. தேவை என்றால் பயன்படுத்திக்கொள்வார். ஆனால் கருணாநிதியை எப்படி இந்து விரோதி இல்லை என்கிறது ஆசிரியர் குழு? வெளங்கிடும்.

 12. All hindus are requested to wake up……………..otherwise we will lose our valued brothers & sisters

 13. ஸ்ரீ கண்ணன், ஹிந்து ஒற்றுமை கண்டிப்பாக அடையப்பட வேண்டிய ஆனால் அதிக கால அவகாசம் எடுக்கக்கூடிய இலக்கு.

  ஆனால் உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டிய இலக்கு மிக உறுதியான ஒரு ஒருங்கிணைந்த சுயபாதுகாப்புத் திட்டம். மிக விரைவில் ஹிந்துஸ்தானமுழுமைக்கும் சங்கத்திற்கும் சங்கத்தைச் சார்ந்த அனைத்து சங்க பரிவார இயக்கப்பொறுப்பாளர்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு சுயபாதுகாப்புத் திட்டத்தை அறிமுகம் செய்து முறையான பயிற்சியும் அளித்தல் மிகவும் அவசியம். இனி ஹிந்து இயக்கப்பொறுப்பாளர் ஒருவரின் உயிரைக் கூட இழக்கும் படியான நிலை வரக்கூடாது.

  மும்பையில் வஸந்த் பாடீல் என்று ஒரு மாநகர கார்பொரேஷன் உறுப்பினர் கொலை செய்யப்பட்டுள்ளார். மந்த்ரி, முக்யமந்த்ரி, ப்ரதமமந்த்ரி, ஜனாதிபதி போன்ற பதவிகளை அடைய வலதுசாரிகள் திட்டமிடுதல் அது சம்பந்தமான அறிவுப்புக்கள் எல்லாம் தேவை தான். வலதுசாரி இயக்கப்பொறுப்பாளர்கள் ஹிந்துஸ்தானமெங்கும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகையில் முழு இயக்கத்தின் கவனமும் இது போன்ற அவலங்களை தடுத்து நிறுத்த முனைவதில் இருக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவுறுத்தல் மிகவும் அவசியம்.

 14. my sincere condolences for the departed soul. tamil nadu govt should be very serious in investigating and arresting the murderers instead of going behind minority votes. for that first she has to come down from ooty and concentrate on administration and law and order.

 15. இந்துக்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழிப்பது ஒருப்பக்கம். முதுகெலும்பு இல்லாத தமிழக ஊடகங்களின், பத்திரிக்கைகைகளின் மனசாட்சியற்ற விஷமத்தனத்தை பாருங்கள்.

  1. மாலைமலர் என்ற மின்-நாளிதழ் பா ஜ க, இந்து முன்னணி, மோடி மற்றும் இந்துக்கட்சியினர் படுகொலைகளை குறித்து செய்திகள் வெளியிடுவார்கள். அதன் கீழ் வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க பின்னூட்டம் அனுப்பவம் தங்கள் இணையத்தில் மென்பொருள் வடிவமைத்துள்ளனர். இதில் பல இஸ்லாமியர்கள் வன்முறைக்கு ஆதரவாகவும், இந்துத் தலைவர்களையும் இந்து மதத்தையும் படுக்கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி ஏசுவார்கள். பகிரங்கமாக இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிப்பார்கள். அப்படிதாண்டா செய்வோம் என்று அறைக்கூவல் விடுப்பார்கள். அதற்கும் மேலே பாரத மாதாவையே கேவலமாக சித்தரித்து பின்னூட்டங்கள் அனுப்புவார்கள். அத்தனை கருத்துக்களையும் மாலைமலர் தணிக்கை செய்யாமல் அப்படியே வெளியிட்டு மகிழ்ந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்துக்கள் பதிலடி கொடுத்தாலோ தீவிரவாதத்திற்கு எதிராக யாராவது பின்னூட்டங்கள் அனுப்பினாலோ பத்து நிமிடங்களில் இந்துக்கள் கூறிய கருத்துக்களை உடனடியாக நீக்கிவிடுகிறது. கெட்ட வார்த்தைகளைக் கூறி இந்துக்களை திட்டுவார்கள் இஸ்லாமியர்கள். இந்தக் கருத்து அப்படியே வெளியாகும். இந்துக்களின் பதில் கருத்துக்கள் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும். சில இஸ்லாமியர்கள் இந்துப்புனை பெயர்களில் “இந்து மதம் இந்தியாவை விட்டு ஓடவேண்டும்” என்றும் எழுதுகிறார்கள். “இந்து மத தர்மமே மிகச்சிறந்த மதம்” என்று பின்னோட்டம் அனுப்பினால் சில நிமிடங்களில் இந்து மத ஆதரவுக்கருத்துக்கள் காணமல் போவது உறுதி. ஒருவேளை மாலைமலர் தணிக்கை பிரிவில் இருப்பவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும்.

  மாலைமலர் மின் நாளிதழை படிப்பவருக்கு இந்த செய்தி புதிது அல்ல

  2. சன் நியுஸ் தொலைக்காட்சியில் நேற்று இரவு விவாதமேடை நிகழ்ச்சியில் இந்து மதத்லைவர்கள் படுகொலைகளைக் குறித்து விவாதம் நிகழ்ந்தது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் “கொலைகளுக்கு காரணம் இஸ்லாமிய ஜிகாதிகளே” என்று ஆணித்தரமாக கூறுகிறார். ஆனால் சன் நியுஸ் நிருபரோ அவரைப் பேசவிடாமல் செய்து “கொலை நடந்தவுடனே நீங்கள் ஏன் மதச்சாயம் பூசுகிறீர்கள்?” என்று ஏதோ அறிவாளியை போல கேட்கிறார். அர்ஜுன் சம்பத் கூறிய எந்த வாதத்தையும் அவர் கடுகளவுக்கூட கேட்கவில்லை. மாறாக “நீங்கள் ஏன் இஸ்லாமிய அமைப்புகளை குற்றம் சாற்றுகிறீர்? என்று அதேக்கேள்வியை கேட்கிறார். “தமிழகத்தில் தமிழர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அன்னிய மதத்தினர் அதிகம் வளர்கின்றனர்” என்கிறார் அர்ஜுன். “அதுக்குறித்து பேசாதீர்கள்” என்கிறார் நிருபர். முஸ்லிம் அமைப்பின் தலைவரோ “பாபர் மசூதியை இடித்தீர்களே” என்று தீவிரவாதத்தை ஆதரிக்கும் நோக்கில் பேசுகிறார். நிருபர் அவரைப் பேச விட்டு வேடிக்கைப்பார்க்கிறார்

  அர்ஜுன் சம்பத்தையும் தமிழிசைசௌந்திர ராஜனையும் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

  அதே விவாத மேடை நிகழ்ச்சியில் அருணன் என்றொரு எழுத்தாளராம் (அந்தாள் யார் என்றே தெரியவில்லை) அந்த அறிவாளி கூறுகிறார் “இந்துத் தலைவர்கள் படுகொலைகள் நடந்தால் இஸ்லாமிய அமைப்பினரை சந்தேகப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்”

  “முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல; ஆனால் பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் என்பது ஏதோப் பெரிய அறிவாளித்தனமான வாதமா?”

  “காவல்துறை தேடப்படும் மூன்று இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகைப்படங்களை இந்தக் கொலையுடன் தொடர்புபடுத்தி வெளியிட்டது பெரும் தவறு. ஊடகங்கள் காவிச்சாயம் பூசிகொண்டுள்ளன. இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பே கிடையாது என்றக் கருத்தை நான் ஆதரிக்கிறேன்”

  இன்னொருபுறம் இருந்த இஸ்லாமிய அமைப்பின் தலைவரோ விஷமத்தனமாக சிரிக்கிறார். அவரது சிரிப்பின் அர்த்தங்கள் ஆயிரமல்ல ஒன்றேதான்.

  தமிழக அரசைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் நக்சலைட்டுகள் இருக்கக்கூடாது. புலிகள் அமைப்பும் இருக்கக் கூடாது. அவ்வளவுதான். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருக்கும். இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாராளமாக தமிழ்நாட்டில் வசிக்கலாம், படுகொலைகளை செய்யலாம். அதன் மூலம் தமிழ்நாடு சுடுகாடு ஆனாலும் ஒன்றும் தவறில்லை.

  இப்பொழுது சிந்தியுங்கள். தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் எப்படி தைரியமாக உலா வருகின்றனர் என்று. இதிலிருந்து மீள்வது எப்படி என்பது புரியவில்லை

 16. கருணாநிதி ஹிந்து விரோதி, ஜெயலலிதா ஹிந்து துரோஹி என்று ராமகோபாலன் அவர்கள் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது

 17. I sincerely condemns this violence act against Hindu leaders on behalf a Tamil Muslim community..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *