சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த பிரசாரகரும் செயற்குழு உறுப்பினருமான கே.சூரியநாராயண ராவ் அவர்கள் நவம்பர்-19 அன்று பெங்களூரில் தனது 92ம் வயதில் காலமானார். அவரது மறைவுக்கு நமது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

suriji-youngசூரிஜி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் பட்ட கே.சூரியநாராயண ராவ் 1924ல் மைசூரில் பிறந்தார். தனது மேற்படிப்புக்காக 1942ல் பெங்களூர் நகரத்திற்கு வந்தபோது சங்கத்தின் அறிமுகம் ஏற்பட்டு  ஸ்வயம்சேவகராக ஆனார். தேசபக்தி, வீரம், தன்னலமற்ற சமூகத் தொண்டு ஆகிய உயர் லட்சியங்களால் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த சூரிஜி, தனது பி.எஸ்.சி ஹானர்ஸ் (கணிதம்) பட்டத்தைப் பெற்றவுடன் 1946ம் ஆண்டிலேயே முழுநேர பிரசாரகராக சங்கத்தில் இணைந்தார். அப்போது சங்கம் தென்மாநிலங்களின் பல பகுதிகளில் வேர்விட்டுக் கொண்டிருந்தது. சங்கத்தின் பல பணிகளைப் பொறுப்பெடுத்து நடத்திய சூரிஜி, கர்நாடக மாநிலம் முழுவதும் சுற்றி இயக்கத்தின் வளர்ச்சியில் பங்காற்றினார்.

1969 சங்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். ஸ்ரீகுருஜி கோல்வல்கர் அப்போது சங்கத்தை வழிநடத்தி வந்தார். அந்த ஆண்டு விஸ்வ ஹிந்து பரிஷத் உடுப்பியில் அனைத்து இந்துத் துறவியர், பல்வேறு மரபுகளைச் சார்ந்த ஆசாரியர்களை ஒன்றுகூட்டி ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் தீண்டாமையும் சாதிக்கொடுமைகளும் இந்துமதத்திற்கு எதிரானவை, இந்து சாஸ்திரங்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை அங்கு கூடியிருந்த துறவியர் மற்றும் ஆன்றோர் பேரவை வெளியிட்டது. சமூகத்தில் நிலவிவரும் சாதீயக் கொடுமைகளை நீக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்ற உறுதிமொழியும் எடுக்கப் பட்டது. மாநாட்டின் முழுப் பொறுப்பாளராக இருந்து அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை சூரிஜி அவர்களையே சாரும்.

முன்வரிசை நடுவில்: ஸ்ரீகுருஜி. பின்வரிசை வலமிருந்து மூன்றாவது : சூரிஜி
முன்வரிசை நடுவில்: ஸ்ரீகுருஜி. பின்வரிசை வலமிருந்து மூன்றாவது : சூரிஜி

பின்னர், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றுமாறு ஸ்ரீகுருஜி சூரிஜியைப் பணித்தார். 1972 முதல் சுமார் 12 ஆண்டுகள் சூரிஜி தமிழ்நாடு மாநிலத்தின் சங்கப் பொறுப்பாளராக (பிராந்த பிரசாரகர்) பணியாற்றினார். இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து பல ஊர்களிலும் உள்ள சங்கத் தொண்டர்களிடமும் பலதரப்பட்ட மக்களிடமும் மிக சகஜமாகப் பழகி வந்தார். 1990 வரை கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கிய தென்மண்டலத்தின் பொறுப்பாளராகவும் (சஹ க்ஷேத்ர பிரசாரகர்) அதன் பிறகு நாடு முழுவதும் சங்கம் மற்றும் அதன் பரிவார அமைப்புகள் நடத்தி வரும் அனைத்து சமூகசேவை செயல்பாடுகளுக்குமான ஒட்டுமொத்தப் பொறுப்பாளராகவும் (அகில பாரத சேவா பிரமுகர்) மகத்தான பணியாற்றினார். குறிப்பாக, கானகப் பகுதிகளில் வாழும் பழங்குடி சகோதரர்களின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம், ஏழை மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கும் ஆரோக்ய பாரதி, பேரிடர்க் காலங்களில் நிவாரணம் வழங்குவதற்கான அமைப்புகள் போன்ற பல சேவை இயக்கங்கள் இக்காலகட்டத்தில் வளர்ச்சியுற்றன.

தனது முதுமைக் காலத்தில் அன்றாட நேரடிப் பொறுப்புகள் இல்லாதபோதும், சங்க ஸ்வயம்சேவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டி வந்தவர் சூரிஜி. 2012ம் ஆண்டு பெங்களூரில் ஒரு பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு சூரிஜி தலைமை வகித்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பெங்களூரில் வசித்து வரும் குடும்பங்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப் பட்ட நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சியில் சூரிஜி நாயன்மார்கள், ஆழ்வார்கள் குறித்தும் தமிழ்நாட்டின் கோயில் கலாசாரம், குடும்ப அமைப்பின் சிறப்புகள் குறித்தும் எளிய தமிழில் அருமையாக உரையாற்றினார். நிகழ்ச்சி முடிவில் இக்கட்டுரையாசிரியனுடன் சிறிது நேரம் ஒரு குழந்தையின் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் அவர் உரையாடியது இத்தருணத்தில் நினைவில் எழுகிறது.

குருஜி கோல்வல்கர் தொடர்பான நினைவலைகளை Shri Guruji Reminiscences என்ற பெயரில் நூலாக சூரிஜி அருமையாக எழுதியிருக்கிறார். சிறு வயது முதலே சுவாமி விவேகானந்தரைத் தனது ஆதர்சமாகக் கொண்டிருந்தவர் சூரிஜி. சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட லட்சிய இந்தியாவும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் செயல்திட்டங்களும் ஒன்றுக்கொன்று நேரடியாக சங்கிலித் தொடர் போன்று அமைந்துள்ளன என்பதை விளக்கி அவர் எழுதியுள்ள சிறப்பான நூல் National Regeneration: The Vision of Swami Vivekananda and the Mission of Rashtriya Swayamsevak Sangh. இந்த இரண்டு ஆங்கில நூல்களையும் விஜயபாரதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

2013: சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்த ஆண்டு விழாவில் உரையாற்றும் சூரிஜி
2013: சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்த ஆண்டு விழாவில் உரையாற்றும் சூரிஜி

“எல்லாக் கல்வியும் நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும். தான் கற்றுக் கொண்டு, அதைத்த ன்னுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல், எதை உலகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்பதை அறியாமல் ஒருவர் மற்றவர்களுக்கு எதையும் சிறப்பாகக் கற்பிக்க முடியாது. உறுதியான சிரத்தை, முழுமையான ஈடுபாடு, நடத்தையிலும் பேச்சிலும் சிந்தனையிலும் செயலிலும் தூய்மை ஆகியவை மட்டுமே மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் உரிமையை ஒருவருக்கு அளிக்கும். எனவே இந்தப் பண்புகளை மிகவும் கவனத்தோடு நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று ஸ்ரீகுருஜி 1969 மாநாட்டின் போது சூரிஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் (Shri Guruji Reminiscences, பக்-277). அந்த எதிர்ப்பார்ப்பின் படியே, வாழ்நாள் இறுதி வரை இந்த உயர்பண்புகளின் உறைவிடமாக சூரிஜி திகழ்ந்தார்.

செல்வத்தைத் தந்தேன் – உடலின்
உழைப்பினைத் தந்தேன்
திறமைகள் அனைத்தும் – உனக்கே
அர்ப்பணம் செய்தேன்
என்ன தந்தபோதும் – மனம்
அமைதியற்றதால் (குருவே)
உந்தன் பாதத்தில் – இனிமேல்
நானே அர்ப்பணம்

என்று ஒவ்வோர் ஆண்டும் குருபூஜை விழாவில் பாடப் படும் பாடலில் சில வரிகள் வரும். அந்த வரிகளுக்கு முழு இலக்கணமாய் வாழ்ந்தவர் சூரிஜி.  அவரது சகோதரிகளும் ராஷ்ட்ர சேவிகா சமிதியின் பொறுப்பாளர்கள். அவரது குடும்பம் முழுவதுமே தேசத்தின் சேவைக்காக அர்ப்பணிக்கப் பட்ட பெருமைக்குரிய குடும்பம்.

அந்த மாமனிதரின் புனித நினைவு நமது தேசத்தையும் தேசபக்தர்களையும் சமூகசேவர்களையும் என்றென்றும் வழிநடத்தும்.

11 Replies to “சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்”

 1. திரு சூரிஜி ஒரு மாமனிதர் என உணர்ந்தேன்.

 2. மானனீய ஸ்ரீ சூரி ஜி அவர்கள் தமிழகத்தில் ப்ராந்த ப்ரசாரகராக பணி செய்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. சங்க ஸ்வயம்சேவகர்களுடனான கலந்துரையாடல்களில் ………….ஷாகா விஸ்தரிப்புப் பணிகள் பற்றியும் ………….சமூஹத்தின் அனைத்து தரப்பு மக்களையும் (இஸ்லாமிய சஹோதரர்கள் உட்பட) ஷகாவுக்கு தரவழைக்க ஸ்வயம் சேவகர்களை ஸ்ரீ சூரி ஜி உத்சாஹப் படுத்தியது நினைவுக்கு வருகிறது.

  அன்னாரது நினைவுகளை மனதிலிறுத்தி சங்கப் பணிகளில் இயன்ற வழிகளில் ஸ்வயம்சேவகர்கள் பங்கு பெறுவது அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

  வெற்றிவேல்.

 3. சூருஜியின் ஆளுமைக்கு ஏற்ற விதமாக அஞ்சலி அமைந்திருக்கிறது.

  சில திருத்தங்கள்:

  “அவரது சகோதரிகளும் ராஷ்ட்ரிய சேவிகா சமிதியின் பொறுப்பாளர்கள்…”

  ராஷ்ட்ர சேவிகா சமிதி என்பது சரியான வடிவம்.

  “தென்மண்டலத்தின் பொறுப்பாளராகவும் (க்ஷேத்ர பிரசாரகர்)”

  சஹ க்ஷேத்ர பிரசாரகர்

 4. பாரத சர்க்காரின் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட துணிகரமான முடிபுகளில் ஒன்று நோட்பந்தி எனப்படும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் ஒழிப்பு.

  ஏழை எளிய மக்களுடைய ஜன் தன் அக்கவுண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஜமா ஆகி உள்ளது. கருப்புப்பணத்தை விதேசங்களிலிருந்து கொணர்ந்தால் தலைக்கு 15 லக்ஷம் என ஹிந்துஸ்தானியர் அனைவருக்கும் கிட்டும் என்று ஒரு கணக்குக்காக ஸ்ரீ நரேந்த்ரபாய் சொல்லியது ……. கிட்டத்தட்ட முழுமையாக இல்லாவிட்டாலும் கொஞ்சநஞ்சமாவது நிதர்சனமாகி விட்டது.

  கருப்புப் பண முதலைகள் பலர் ஏழை எளிய மக்களை பாங்குகளின் க்யூ வரிசையில் ஜபர்தஸ்தியாக நிறுத்தி வைத்து பேனாமியாக அவர்களது கணக்குகளில் தங்களது கருப்புப் பணத்தை ஜமா செய்திருந்தாலொழிய ஜன் தன் கணக்குகளில் இந்த அளவு பணம் ஜமா ஆகி இருந்திருக்க முடியாது. ஆக மோதி கணக்கு வழக்குக்காக சொன்ன பேச்சு நோட்பந்தி நடவடிக்கை மூலமாக நிதர்சனமாகவே ஆகிவிட்டது.

  ரொக்கமில்லா பரிவர்த்தனை என்று இப்போதெல்லாம் முழங்க ஆரம்பித்து உள்ளார்கள். நடக்க வேண்டியது தான்.

  ஆயினும் உ.பி மற்றும் பீஹார் போன்ற மாகாணங்களில் 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் குறைந்து உள்ளதால்………. அல்லது புழக்கத்தில் சுளுவாக இல்லாததால்……… பொதுவிலே அன்றாட வ்யாபார பரிவர்த்தனைகள் மிகவும் குறைந்து உள்ளது. இந்தக் குறைபாட்டை மோதி அவர்கள் கிட்டத்தட்ட ஒரு ராணுவ முஸ்தீபுடன் சரி செய்யாவிட்டால் வரவிருக்கும் உ.பி தேர்தலில் இது பெரும் தலைவலியாக எழும். கட்சிக்கும் தேச நலனுக்கும் பெரும் கேடாக இந்தக் குறைபாடு உருவெடுக்கும்.

 5. 1986 தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் புதிய இந்து தொடக்கப்பள்ளி மேநி பள்ளி துவக்க ஊாில் உள்ள இந்து தலைவா்கள் பெரும்முயற்சி எடுத்து வந்தாா்கள்.இருப்பினும் மக்களின் மனம் ஒன்று படாமல் பிளவுகள் பிசிறுகள் வந்து தடையாக இருந்தது. இந்நிலையில் அமைப்பபைச் சோந்த் அன்பா்கள் சுாிஜியை உடன்குடிக்கு அழைத்து வந்தாா்கள். பள்ளி கட்டுவதில் ஆா்வம் காட்டிய அனபா்கள் அனைவரையும் சந்தித்து எழுச்சி மிக்கஒரு வீர உரையாற்றினாா்கள். அந்த உரை சொற்பொழிவு அங்கே இருந்த பிசிறுகளையும் பிளவுகளையும் ஒழத்து கட்டி மனம் ஒற்றுமையை ஏற்படுத்தியது ஒற்றுமை உறுதி பட்டது. இன்று உடன்குடியில் ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரா் தொடக்கப்பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆகியவை திறம்பட கல்வி தொண்டாற்றி வருகின்றது.

 6. திரு சுகுமார்!

  ஏற்கனவே ஊருக்கு உள்ளேயே ஒரு இந்து வித்யாலயா இருந்தது. முன்பு அது உயர்தர ஆரம்பப்பாடசாலை. எட்டாம் வகுப்புவரை. ஒன்பதாம் வகுப்புக்கு டி டி டி ஏ (T D T A) மேநிலைப்பள்ளியில் வந்து சேர்வார்கள். இது ஒரு சி எஸ் ஐ பள்ளி. இதைவிட்டால் உடங்குடியில் மேநிலைப்பள்ளி கிடையாது.

  எட்டாம் வகுப்பு வரை இருந்து ஹிந்து வித்யாலயாதான் தற்சமயம் மேநிலைப்பள்ளி ஆக்கப்பட்ட் நீங்கள் குறிப்பிட்ட பள்ளியாகிவிட்டதா அல்லது இரண்டும் வெவ்வேறா? நீங்கள் குறிப்பிடும் மேநிலைப்பள்ளி எத்தெருவில் இருக்கிறது? நான் சொல்லும் ஹிந்து வித்யாலயா சந்தையிலுருந்து சினிமா கொட்டகை தெருவழியாக மெயின் ரோட்டில் சென்றால் வரும்.

  உடங்குடி சந்தை ரொம்ப ஃபேமஸ். திங்கட்கிழமை மட்டும்.

 7. Dear Mr.BS.Thank you for your enquiry.That school is Saiva PraKasa vidyasalai Middle school.The founders had created an endowment of properties worth 1.5 crores.But due to imcombatibility the management has failed to function and the school suffered a lot.For the past 30 yrs the school management was entrusted to the Asst Ele.Officer,Udangudi.My efforts to retain its Hindu character either by restoring the management or entrusting the management to some Hindu agency/ Hindu religious endowment Board ie Kusasekaranpatnam Sri Mutharamman temple bore no fruit.lately the school was taken over by Government and its endowed properties is also taken over by Local Panchayat. A Hindu School was destroyed and converted into secular school. Hindu society has not yet realised the importance of Hindu service Institutions.

 8. Sri Ramakrishna primary @ Hr.sec.school is situated in tisaiyanvilai road theriyur.Udangudi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *