(தடாக மலர் பதிப்பகம் நமக்கு அனுப்பிய கீழ்க்கண்ட செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் – ஆசிரியர் குழு)
இன்று மே-28, வீர சாவர்க்கர் பிறந்த தினம்.
தடாகமலர் பதிப்பகம் சார்பாக வீர்சாவர்க்கர் எழுதிய இரண்டு புத்தகம் வெளியிடுகிறோம்.
1. இந்துத்துவத்தின் அடிப்படைகள்
தமிழில்: எஸ்.ராமன்
இந்துத்துவம் என்றால் என்ன என்று நம்மை யாராவது கேட்டால் இன்று கூட நம்மால் சரியாக விளக்க முடியாது. அந்த அளவில்தான் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். இந்துத்துவம் என்றால் என்ன என்பது பற்றி விரிவாகவே வீர்சாவர்க்கர் இந்த புத்தகத்தில் அலசுகிறார். இந்துமதம், இந்துத்துவம் இவற்றைப் புரிந்துகொள்ளகூட வீர்சாவர்க்கரின் இந்த புத்தகத்தை நாம் படித்தாக வேண்டும்.
2. அந்தமானிலிருந்து கடிதங்கள்
தமிழில்: ஓகை நடராஜன்
அந்தமான் சிறையில் இருக்கும்போது வீர்சாவர்க்கர் நெருங்கிய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. சிறையிலிருக்கும்போது அவருடைய மனநிலை, சுதந்திரம், சுதந்திரப்போராட்ட வீரர்களிடம் அவர் எதிர்பார்த்தது போன்ற விஷயங்கள் ஏராளமாக உள்ளது.
வீரசாவர்க்கரின் பிறந்தநாளில் அவருடைய புத்தகங்களை படிப்போம். மற்றவர்களை வாங்கி படிக்க வைப்போம்.
3. 1857 முதல் சுதந்திரப் போர் அல்லது எரிமலை
இந்த புத்தகம் எங்களது பதிப்பகம் வெளியிடவில்லை. ஆனால் வேண்டியவர்களுக்கு வாங்கித்தர தயாராக உள்ளோம்.
தடாக மலர் பதிப்பகம்
105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5. (திருவல்லிக்கேணி தபால்நிலையம் அருகில்)
தொலைபேசி: 9941424629, 9094772502.
மின் அஞ்சல்: sales@thadagamalar.com
இணையதளம்: www.thadagamalar.com
தடாக மலர் பதிப்பகம் சென்று நேற்று நான்கு நூல்களை வாங்கிவந்தேன். அதில் அப்துல் கலாம் மற்றும் ஜைன மத குரு ஒருவருடன் சேர்ந்து எழுதிய நூலும், கொலைகாரன் பேட்டை, (பா ராகவன் ) ஆகியவையும் அடங்கும். தடாக மலர் பதிப்பகத்துடன் பிற பதிப்பகங்களின் இந்துத்துவ நூல்களும் விலைக்கு கிடைக்கின்றன.இந்த பதிப்பகம் மேலும் சிறப்படைய எல்லாம் வல்ல , தந்தைக்கு பிரணவப்பொருளை உபதேசம் செய்த பெரியசாமி எனப்படும் முருகப்பெருமானை பிரார்த்திக்கிறேன். வையகம் வளமுடன் வாழ்க