அண்ணாமலையின் பயணம் அரசுமுறைப் பயணம் அல்ல. இக்கட்டான நிலையில் இருக்கும் இலங்கையில் என்ன நடக்கிறது என்று நேரில் அறிந்து வரவும், ஆறுதல் சொல்லவும், அபயக்கரம் நீட்டவும். அதன் பின்னான அரசியல் ஆக்கங்களைச் செய்யவும் ஓர் அருமையான வாய்ப்பாக இந்தப் பயணம் அவருக்கு அமைந்திருக்கிறது. இப்படி ஒரு அழைப்பை திமுக ஏற்படுத்திக் கொள்ள முடியாதா? உள்மனது சொல்லுகிறது, முடியாது. அங்கே அவர்களுக்கு வரவேற்பு கிடைக்குமா அல்லது வேறு ஏதும் கிடைக்குமா என்பது எனக்கு ஐயமாக இருக்கிறது..
View More சிங்கக்கொடி நாட்டில் சிங்கம்: இலங்கையில் தலைவர் அண்ணாமலைAuthor: ஓகை நடராஜன்
பட்டாசுடன் கொண்டாடுங்கள்!
உலகெங்கும் பெரும் அளவில் விளையாட்டு நிகழ்வுகள் என்றாலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றாலும் மாபெரும் வான வேடிக்கைகள் அவ்விழாக்களின் அடையாளமாக இருக்கின்றன. ஆனால் வெகுமக்கள் தாங்களாகவே ஒவ்வொரு இல்லத்திலும் வானவேடிக்கை நடத்தும் சிறப்பு உலகிலேயே தீபாவளித் திருநாளுக்கு மட்டுமே உரித்தானது. இதை நாம் இழக்கலாமா…உண்மையில் பட்டாசுகளும் மத்தாப்புகளும் விளைவிக்கும் ஒலி ஒளி அளவுகளுக்கு மிக மிகச்சிறிய அளவிலேயே வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகளை பணிக்குப் பயன்படுத்துவது ஒரு சமூக அவலம். இதற்கான தீர்வு தயரிப்புப் பொருட்களை தவிர்ப்பதால் நிச்சயம் வந்துவிடாது…
View More பட்டாசுடன் கொண்டாடுங்கள்!அஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்
எண்ணத்தில் ஏறி எப்போது நினைத்தாலும் அவரது எண்ணற்ற பாடலொன்றால் எண்ணம் முழுதும் நிரப்புகின்ற பெரும் இசையாற்றலுக்குச் சொந்தக்காரர்… சரஸ்வதியின் ஒரு சாயலை நமக்குக் காட்டிய பெருமகன் இவர். தன் திறமைக்கு ஏற்ப புகழும் பொருளும் பெயரும் ஈட்டி தமிழக கோடானு கோடி மனங்களில் இடம் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தவர். வாழ்கிறவர்… மதுரையில் சௌராட்டிரக் குடும்பத்தில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் மகனாகப் பிறந்த சௌந்தரராஜன், பிரபல வித்துவான் பூச்சி ஶ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றவர்…. ஒரு நிகழ்ச்சியில் பழம்பெரும் இயக்குனர் ஒருவர் சௌந்தரராஜனைப் பற்றி இப்படிச் சொன்னார் – சௌந்தரம் என்றால் அழகு ராஜன் என்றால் அரசன், இவர் அழகாக பாடுபவர்களில் அரசன்…
View More அஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்வரலாறு.காமும் தமிழ்ப்புத்தாண்டும்
வரலாறு என்பது சிலரின் விழைவுக் கற்பனையோ அல்லது பரப்புரைப் புனைவோ அல்ல. வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களாலேயே உருவாக்கப் படுகிறது. இதை பின்பற்றுபவர்கள் மட்டுமே வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் இருக்க முடியும். வரலாற்று அறிஞர்களிடம் பல விஷயங்களில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் கூட கிடைக்கும் ஆதாரங்களை புரிந்தேற்றுக் கொள்வதில் வரும் மாறுபாடுகளாலேயே வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது எந்த ஆதாரமும் எந்த வகையிலும் இல்லாத தை மாத தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஒரு வரலாற்றுக்கான தளம் ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை விதந்தோதுவதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பழிப்பதும் சற்றும் சகிக்கக்கூடியதாக இல்லை.
View More வரலாறு.காமும் தமிழ்ப்புத்தாண்டும்தெய்வத் திருமகள் – திரைப்பார்வை
எதிர்மறை செய்திகளும் எதிர்மறை எண்ணங்களும் எதிர்மறை மனிதர்களும் மிக மிகக் குறைவாக இருக்கும் ஒரு கதைக்களம், நிறைவான ஒரு நீண்ட படத்தைத் தருவது இப்படத்தின் சிறப்பம்சம்… நமது கலாச்சாரத்தின் நல்லடையாளமாகத் திகழும் மகளிர் இடும் நெற்றித் திலகம் இப்படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் பாத்திரங்களாலும் தெளிவாகத் துலங்கும்படி உடையலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது…
View More தெய்வத் திருமகள் – திரைப்பார்வைதிமுகவுக்கு பிடிக்காத வார்த்தை
ஒரு காங்கிரஸ் ஆளூ ஓட்டு கேட்டு பேசிகினாரு. முழ்ஷா பேத்தல் சார். ஆனா இன்னா ஒன்னு, கட்சீல ஜெய் ஹிந்த் அப்டீன்னு முட்சிகினார். நம்ம கூட ஒரு திமுகா தோஸ்த் இர்ந்துகிணு ஜோரா விசில் உட்டார். நான், ‘இன்னாத்துக்கு இப்பொ விசிலு வுட்ற, சுத்த பேத்தலுக்கா’ ன்னு கேட்டென். ‘நம்ம கூட்டணி ஆளு, அதுக்கோசரம்’னார். [..]
View More திமுகவுக்கு பிடிக்காத வார்த்தைபயணம்: திரைப்பார்வை
திருப்பதி விமானநிலையத்தில் ஓடுவழி நடுவில் இருக்கும் மூடிய விமானத்துக்குள்ளாக ஒரு மாதா கோயில் மணியோசை கேட்பதாக படத்தில் காட்டுகிறார்கள்… பாதிரியார் விமானத்துக்குள்ளே பைபிள் படிக்க அனுமதி பெற்று, அதை உரக்க எல்லோருக்குமாகப் படிப்பதில் இயல்பாகத் தொடங்கும் கிருத்துவக் காட்சிகள், இறந்த பயணிக்காக பாதிரியார் ஜபிக்கும்போது இயல்பை இழக்க ஆரம்பிக்கிறது.
View More பயணம்: திரைப்பார்வைதையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை அரசாணையாலும் பொய்யான பரப்புரைகளாலும் அரசு மாற்ற முனைந்து கொண்டிருகிறது. அரசின் இந்த முனைப்பு தமிழ் மரபுக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பதோடு தமிழ் மரபிற்கே எதிரானது… மேற்கொள்ள எந்த தரவுகளுமற்ற நிலையில் இது சிலரின் தனிப்பட்ட அபிலாஷை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அபிலாஷை நிறைவேற்றலை தமிழைக் கொண்டு செய்ய முற்படும்போது உண்மையான தமிழன்பர்கள் வெட்கமும் வருத்தமும் அச்சமும் கொள்ளவேண்டி இருக்கிறது.
View More தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினை
ஹுஸைனின் இந்த ஓவிய முறைமை அத்தகைய ஆன்மிகத் தேடலோ அல்லது வழிபாட்டு முறையோ எனக்கொள்ளும்படிக்கு ஜெயமோகனுக்கு எவ்வாறு தோன்றுகிறது? … இந்து மதத்தினரின் கண்டனத்துக்குள்ளாகும் ஒரு ஓவிய முறைமையை விடாப்பிடியாக செய்தே தீருவேன் என்று செய்பவர் வக்கிர மனத்த்தினர் தரும் மாபெரும் விலைகளுக்காக பொது நாகரிகம் கருதாத, மனித மன மரியாதையற்ற, கலை வியாபாரியாகவே இருக்க வேண்டும். அல்லது தன் மதத்தைக் காயப்படுத்தாமல் இந்து மதத்தினரைக் காயப்படுத்தி, தீவிரவாதிகள் குண்டுகளால் சாதிப்பதை தூரிகையால் சாதிப்பவராக இருக்க வேண்டும்.
View More இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினை