இயக்கம் என்றாலே வெளிப்படுவது, அல்லது சக்தியின் தொழில் என்றாகிவிடுகிறது. அதனால் சக்தியிடம் சரண் புகுவதே சரியான வழி. சரணடைந்ததால் சக்தி போல் ஆகி ‘சித்’தாகிய இறைவனை அடைந்து, பேரின்பப் பெருவெள்ளமாகிய ஆனந்தத்தை அறிவுடன் இருக்கும் நிலையில் உணரலாம்… அருள் தரும் பராசக்தி ஒன்றே என்றாலும் காணப்படும் இயற்கைத் தோற்றங்களை ஒட்டி, பெண் தெய்வங்களையும் அந்த முனிவர்கள் கண்டார்கள். தன்னை அறிவதே அறியப்படும் அனைத்திலும் முதன்மையானது என்பதால் அறிவை வழங்கும் பரம்பொருளாகச் சரஸ்வதியைக் கருதினார்கள்…
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10Author: எஸ்.ராமன்
ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9
“மனமற்ற நித்திரையில் தினம் அனுபவிக்கும் சுபாவமான அச்சுகம்” என்று ரமணர் குறிப்பிடுவது சோமனின் துளிகள் பெருகி வெள்ளமாக நம்முள் ஓடும் அந்த நிலையைத் தான். தினந்தோறும் அது நம்முள் ஓடுவதை நாம் அறியாவிட்டாலும், அதை நன்கு அனுபவித்துக்கொண்டு சுகமாக உறங்கிக்கொண்டிருக்கிறோம். அதை ஏன் அப்போது மட்டுமே நாம் அனுபவிக்கிறோம் என்றால், அந்த நிலையில் மட்டுமே நாம் மனம் அற்று இருக்கிறோம். அதாவது எந்த விதமான எண்ணங்களின் குறுக்கீடுகளும் இல்லாமல், இருப்பதை அது இருக்கும்விதமாக மட்டுமே அனுபவித்து, ஆனந்தமாகத் தூங்குகிறோம். அப்போது ‘நான்’ என்றோ ‘எனது’ என்றோ எண்ண வைக்கும் அகங்காரம் நமக்கில்லை. அதனால் ‘பிறர்’ என்ற வேறுபாடும் கிடையாது. அந்த நிலையில், இருக்கும் பிரம்மமான ஒன்றை உள்ளூற உணர்வதால், சோம வெள்ளம் பிரவாகமாக ஓடி நம்மை ஆனந்த நிலையில் அப்போதைக்கு நிறுத்திவைக்கிறது….
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8
ஞானக் கண்ணால் மட்டுமே உணரக் கூடிய ஞானச் சூரியன், மற்றும் ஊனக் கண்ணால் காணக் கூடிய ஊனச் சூரியன் இரண்டையும், அவைகளின் தன்மைகளைக்கொண்டு, சூரியனின் இருவேறு முகங்களாக ரிக் வேதம் வர்ணிக்கிறது. ஊனச் சூரியன் உதிப்பதால் உலகின் பல வளங்கள் செழிப்பதற்குக் காரணமாய் இருப்பதாலும், அது இன்னார்க்குத்தான் என்றில்லாமல் எவர்க்குமே தன் சக்தியை அளிப்பதாலும், அதை அனைவரின் ஆப்த நண்பனாக உருவகித்து மித்ரன் என்றழைத்தனர். ஞான சூரியன் உதிக்கும்போது, அது அனைவர்க்கும் பரம ஆனந்தத்தை அளிப்பதுடன், ஓர் உயிருடன் வேறு உயிர்களைப் பிரித்துப் பார்க்கும் தன்மையையும் களைந்தெடுத்து, சீவராசிகள் அனைத்தும் பரவலான ஓரினமே என்று காட்டுவதால் அதை வருணன் என்றழைத்தனர்…
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7
இந்திரன் என்ற சொல்லில் இருந்து வந்ததுதான் இந்திரியங்கள் என்ற சொல்லாடலும். நமது பஞ்ச இந்திரியங்கள் வெளிமுகமாக நோக்கினால், நாம் உலகியலில் ஈடுபடுவோம். அவ்வாறான வெளிப்புற நோக்கை அடக்கி, அதை உண்முக நோக்கிற்கு அதனைப் பழக்கப் பழக்க, உலகைப் பற்றிய உண்மைகளும் தெரியவரும். மனத்தின் உண்மை சொரூபமும் தெரியவரும். .. நம் உலகியல் சிந்தனைகளும், அதையொட்டி நடக்கும் செயல்களும் மனத்தின் கண் குவிந்துள்ள வாசனைகளால் உந்தப்பட்டு நடைபெறுவதால், அவை அனைத்துமே நம் உண்மை சொரூபம் பற்றிய அறியாமையால் விளைந்தவை ஆகும். அந்த அறியாமையைப் போக்க இந்திர சக்தியால் வளரும் ஆன்ம அறிவு ஒன்றால் மட்டுமே முடியும். ..
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6
வெளியுலகில் அக்னி வளர்த்து செய்யப்படும் ஹோம யக்ஞங்கள், நம் உள்ளத்தளவில் புத்தியின் மூலம் நம்மையே தியாகம் செய்யும் அளவுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய ஒரு குறியீடுதான். அதில் முதன்மையானது உலகியலில் “நான்” என்னும் எண்ணம் அழியும் வகையில் நமது சிந்தனை-சொல்-செயல் மூன்றும் ஒன்றாகச் செயல்படுவது. அப்போது மட்டுமே, “தான்” எனும் தெய்வீக உணர்வு எஞ்சி நிற்கும். அந்த நிலை கிட்டினால் மட்டுமே, நம்மைச் சுற்றியுள்ள எதுவும் வேறுபட்டதல்ல, அனைத்தும் ஒன்றே என்ற உண்மை உணரப்படும்… அவ்வாறு உணர்ந்ததாலேயே, இதை விளக்கிக் கூறிய ரிஷி, அந்த நிலையில் தான் “அனைத்து உலகின் நண்பன்” என்ற அர்த்தம் தரும் வகையில், விஸ்வாமித்திரர் என்று தன் பெயரை வைத்துக்கொண்டார்…
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5
அதாவது கடவுள் எனும் தத்துவம் எங்கோ மறைந்து, காணமுடியாத இடத்தில் இருப்பதாகவோ, ஏதோ சில ரிஷிகளின் கற்பனையில் உதித்த உருவகங்களாகவோ எண்ணுவது தவறானது. அவை அனைத்துமே நமது தினசரி அனுபவங்களின் அடிப்படையிலும், இயற்கையில் காணப்படுபவைகளையும் ஒட்டியே உருவானவைகள்… ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள நான்கு கடவுட்களும், இருக்கும் ஒரு பிரம்மத்தின் நான்கு முகங்களே என்பதால் பிரம்மனுக்கு நான்முகன் என்றொரு பெயரும் உண்டு. அவை அனைத்தும் ஒன்றா என்று கேட்டால் அதுவும் சரியே எனலாம்…
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4
இருளில் இருந்து ஒருவன் விழித்து எழும் தருணமான அதிகாலை வேளையை அவர்கள் “உஷஸ்” என்று குறிப்பிட்டு, அதற்கு ஒரு தனி மகத்துவத்தையும் அளித்தனர். ஏனென்றால் அனைத்து உயிர்களும் அறியாமையில் மூழ்கி இருந்தாலும், வேற்றுமையை மறந்து அப்போது அவர்கள் அனைவரும் ஒரே நிலையில் இருக்கும் அந்த உறக்க நிலையில் இருந்து மாறி, உலக இயல்பின் படி தங்களின் வேற்றுமைகளை விழிப்பு நிலையில் காணப் போவதன் முதல் படி அது. அப்படி என்றால் நமது உண்மை நிலை எது? அனைத்தும் ஒன்றே என்று பார்ப்பதா? அல்லது வேற்றுமைகளைக் காண்பதா? ….
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3
சூரியன் உலகில் உயிர் வாழ ஆதாரமாக இருப்பதையும், அது தோன்றி மறைவதுடன் நமது பகல்-இரவு வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதையும் கண்ட வேதகால ரிஷிகள், அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்ந்தனர்… வானத்தில் உள்ள சூரியன் போல, உலகில் அக்னியையும், நம்முள்ளே உயிரையும் கண்டார்கள். என்றைக்கு ஒருவனது உயிர் பிரிகிறதோ அன்று சிவம் சவமாகி, அக்னி குளிர்ந்து அணைவதைக் கண்டனர். அதுவரை இந்திரன் நம்முள் இருந்து, பஞ்ச இந்திரியங்கள் மூலம் வெளிப்படுகிறான்….
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2
கண்ணதாசனின் பாடலுக்கு வருவோம். அவர் எப்படி ஆரம்பிக்கிறார்? “உலகம் பிறந்தது எனக்காக” என்றுதானே. சாதாரணமாக ‘நான் பிறந்தேன்’, ‘அவர் பிறந்தார்’ என்போம். ஆனால் இங்கோ உலகம் முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது உலகம் வரும் முன்பே ‘நான்’ இருந்திருக்கிறேன். அது உதித்து இருப்பது எனக்காக. இப்படியாக ‘நான்’ இல்லையென்றால் உலகம் இல்லை என்றாகிறது. அது உண்மைதானே?… சிறிதானாலும் தன்னால் ஒளியை உருவாக்கலாம், ஆனால் இருளை உருவாக்க முடியாது – ஒளியை மறைத்தே இருளை உருவாக்க முடியும் என்று தெளிகிறான். அதனால், உலகில் சூரியனால் இயற்கையாக நடக்கும் ஒளி-இருளைக் கொண்டு, சூரியனை அறிவாகவும் அது இல்லாது இருப்பதை அறியாமை என்றும் கொள்கிறான்….
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1
” எனக்குத் தஞ்சாவூர் பக்கம் கிராமமுங்க; ஒரு பொண்ணு, ஒரு பையன். விவசாயந்தான் பொழப்பே நமக்கு. ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். கடன உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணும் விளங்கலே, கடவுள் கண்ணே தொறக்கல… எனக்கு அந்த பெரியவரை அணைக்கத் தோன்றியது; அணைத்துக் கொண்டேன். வேண்டாமென மறுத்தபோதும், பாக்கெட்டில் பலவந்தமாய் பணத்தைத் திணித்தேன்… இந்தப் பதிவுகள்தான் என்னை இந்த நூலை எழுதவைத்தது. “வாட்ஸ்-அப்”பிலேயே நானும் இதை எழுதி முடித்தேன். அவைகளின் தொகுப்புதான் இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருப்பது…
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1