சில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் ஆட்டோவில் போகும் போது அந்த ஃப்ளெக்ஸ் கண்ணில் பட்டது. ஏனோ தோன்றியது கைபேசி காமிராவில் எடுத்து வைத்துக் கொண்டேன். ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’ என்றது அந்த ஃப்ளெக்ஸ். ஏதோ வழக்கமான சாதி பெருமை பேசுகிற ஒன்று என்பதைத் தாண்டி எதுவும் படவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஏதோ கிளறின.
நேற்று ‘திருவாசகமும் சிவராஜயோகமும்’ எனும் நூல் கிட்டியது. திருவாசகத்துக்கான விளக்க உரை. எழுதியவர் சிவயோகி என புகழப்படும் திருவாரூர் மா.இரத்தினசபாபதி பிள்ளை அவர்கள். 1978 இல் வெளியான இந்நூலுக்கு ஆசியுரை எழுதியவர் காஞ்சிபுரம், மெய்கண்டார் மரபு தொண்டைமண்டாலாதீன குரு மஹா சந்நிதானம் சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். அணிந்துரை எழுதியவர்கள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். இதில் விசேடமென்னவென்றால் திருமுருக கிருபானந்தவாரியார் சிவ தீக்கை பெற்றது இப்பெரியார் திருவாரூர் மா. இரத்தினசபாபதி ஐயா அவர்களிடம்தான்.
இந்நூலில் பின்வரும் விஷயத்தை வாசித்தேன் –
பரை/பறை ஆகியவை ஆழமான ஆன்மிக பொருள் கொண்டவை. நாத முடியில் சந்திரன் இருப்பதாகக் கொள்வது யோக மரபில் ஒரு முக்கியக் குறியீடு. சந்திரன் சுவாதிஷ்டானத்தில் ஒரு கலையுடன் விளங்கும். சிரசின் நாதமாக விளங்கும் போது ஏழாவது கலையாக விளங்கி சக்தி பொருந்தும் இடமாகும். இதற்கு மேல் பரையோகம், பரைபோகம், பரையில் அதீதம் உள்ளன. இவ்வகையாக 16 சந்திர நிலைகள் தேகத்தில் உள்ளன.
திருமூலரும் இதனைச் சொல்கிறார்:
பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் ஆங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளியாய் நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன்தானே.
(திருவாசகமும் சிவராஜயோகமும், மா.ரத்தினசபாபதி பிள்ளை, 1978)
சுவாரசியமான ஒரு விஷயம். திருவருட் பிரகாச வடலூர் வள்ளல் ராமலிங்க சுவாமிகள் நாத முடிவில் இருக்கும் இந்த பரை நிலை தனக்கு வாய்க்க வேண்டுகிறார். அதுவே ஒரு சர்ச்சையாயிற்று. ஏனெனில் ‘நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே அங்கே நானும் வர வேண்டுகிறேன் வெண்ணிலாவே’ என அவர் பாடியதை திருவருட்பா எதிர்ப்பு பிரச்சாரக் குழுவில் சுட்டிக்காட்டினார்கள். சைவ அறிஞரான யாழ்ப்பாணம் கதிரை வேற்பிள்ளை அவர்கள், இறைவன் முடி மேல் தான் அமர வேண்டுமென வள்ளலார் பாடுவது மருட்சியால் எனவே அது அருட்பா அல்ல மருட்பா என கூறினார்.
இந்த் கூட்டத்தில் குமரி மாவட்ட சதாவதானி செய்கு தம்பி பாவலர் இருந்தார். அவர் எழுந்து மேற்கூறிய உண்மையை விளக்கினார். நாதர் என்பது அச்சுப்பிழையாக இருக்கலாம். அது நாத முடி நாதம் என்றால் பிரணவம். அதன் மேல் இருக்கும் சந்திர நிலை . அங்கே வர வள்ளலார் விரும்புவதையே அவ்வாறு பாடியுள்ளார் என பாவலர் விளக்கினார். சைவ மக்கள் பாவலரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.
அது அச்சுப்பிழையாக இருக்கக் கூட வாய்ப்பில்லை. ஏனெனில் திருவாரூர் இரத்தினசபாபதி ஐயா விளக்குகிறார்:
தொழில் நிலையில் சீவர்களை இயக்கும் போது ஐந்து நிலைகளில் சிவன் இருக்கிறார்: சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், நடராசர், இடபாரூடர், கல்யாண சுந்தரர் என்பவை அவை. இவற்றில் சந்திரசேகரரே மகாநிர்வாண தந்திரத்தில் ’மானுட உடலில் சோம மண்டல ஒளியில் சிரசில் விளங்குபவர்’ என கூறப்படுகிறார்.
எனவே பறையர் எனும் பெயரே சந்திர சேகரராக விளங்கும் சிவனைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது சந்திரசேகரராக சிவன் அளிக்கும் பரையோக, பரை போக, பரை அதீத நிலையில் நிலைப் பெற்றிருப்பவர், அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். எனவே பறையர் எனும் பொருள் ஆழ்ந்த பொருள் கொண்டது. இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது ஏமாற்று வேலை.
இப்போது சென்னையில் எங்கோ என்றோ கட்டப்பட்ட அந்த ப்ளெக்ஸின் புகைப்படத்தை எடுத்து அந்த வரிகளைப் பார்க்கிறேன்: ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு!’
எத்தனை உண்மை!
(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
அருமையானப் பதிவு.சுவையான விசயங்கள்.படித்தேன் வியந்தேன். நன்றி.
Aadhi Bhagavan can any one explain this Thirukural first verse first line
பரையா பறையா? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது, அச்சுப் பிழை எதுவும் இல்லையே?
// அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். எனவே பறையர் எனும் பொருள் ஆழ்ந்த பொருள் கொண்டது. இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது ஏமாற்று வேலை. // என்று எழுதுகிறீர்கள். இருக்கலாம் என்ற ஊகத்திலிருந்து பிரிட்டிஷ் காலத்தில்தான் இது இழிவான பெயர் என்று நினைக்கும் போக்கு உருவானது என்ற முடிவுக்கு எப்படி வருகிறீர்கள்?
சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என்று நினைக்கிறார்களா? சிலரா? சரிதான்.
/// நாதம் என்றால் பிரணவம். அதன் மேல் இருக்கும் சந்திர நிலை ///
ஓம் என்ற பிரணவத்தை சமஸ்கிருதத்தில் எழுதும்போது அதன் உச்சியில் பிறை போன்று வருவதை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஆக பிரணவமே சந்திரசேகரன்… பிறைசூடன்.
நூல்களின் வழியாக எவரையும் இறைவன் லெவலுக்குக் கொண்டுபோய் வைக்கலாம். ஆனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நூல்களின்படி வாழ்வதில்லை. அவர்களுக்கு பறையன் பறையந்தான். அங்கேயே இருந்துகொள் என்பதுதான். பிரிட்டிஷ் காலத்தில்தான் பறையன் என்ற சொல் இழிவாக்கப்பட்டது என்பது டூ மச். அதற்கு முன்பே பறையர்கள் கோயில்களுக்குள் நுழைய முடியுமா? செத்த மாட்டை தோலையுரித்து பறை செய்து இசை முழுக்கி அவர்கள் சாதி சடங்குகளில் வாசித்தபடியால் பறையர். பறையிசை இசையே அன்று. அது ஒரு கும்மாளமடிக்கப் பயன்படுவது அவ்வளவுதான். பறையர்களின் ஆன்மிகம் அவர்கள் குலதெய்வத்தோடு நின்றுவிடும். அவர்களின் ஒரு சிலர், (நம்பாடுவான், திருப்பாணாழ்வார், நந்தனார் போன்றவர்கள்) வைதீக் கோயில் பெருந்தெயஙகளை வணங்கி வாழ் ஆசைப்பட்டதால், அவர்கள் வரலாறுகள் த்மிழ்நாட்டில் நுழைந்தன. மற்றபடி எந்த பறையரும் தான் ஈசன் மரபு என்று நினைத்துக்கூட பாரப்பதில்லை. அதனால் எப்பலனுமில் என்று அவர்களுக்குத் தெரியும். பறையர்கள் வாழவு என்றுமே சேரியில் தங்கள் தெய்வங்களோடுதான். எம்முயற்சியும் வெற்றி பெறாது.இவனுக ஈசன் மரபென்றால், நாங்களென்ன பேயின் மரபா என்று கேட்பார் இராமதாசு. என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?
பறையிசை இசையே அன்று என்பது ஆதிக்க மனப்பான்மையின் விளைவே ஆகும்.
//பறையிசை இசையே அன்று என்பது ஆதிக்க மனப்பான்மையின் விளைவே ஆகும்.//
Listen to it and comment on it.
பறையிசை இசையே அன்று என்பது ஆதிக்க மனப்பான்மையின் விளைவே ஆகும்.
It is wrong to issue a rank certificate for Music here! It depends on the mind who enjoys. Some people laugh at Carnatic music, in some area no body listen or watch carnatic music. In some area people do not know anything about parai isai. It does not mean one is lower. it is the level understanding of the mind. one has to understand “Music is outer meditation and Meditation is inner music”
//It depends on the mind who enjoys. Some people laugh at Carnatic music, in some area no body listen or watch carnatic music. In some area people do not know anything about parai isai. It does not mean one is lower. it is the level understanding of the mind. one has to understand “Music is outer meditation and Meditation is inner music”//
Yes one can enjoy the music and songs by blind beggars on the moving suburban trains in Chennai city. The mind enjoys the music, doesn’t? One can enjoy hearing the music that comes from the woman assistant of the acrobat in our city. What a heavenly music it is coming as it does from her percussion instrument! So, mind can enjoy any raucous noise as great music. //In some areas no one listens to the carnatic music.// So, they laugh at it? Wow !! How is it possible to laugh at a thing you haven’t seen or heard, Sir? Are you making a comedy show here?
Music is of two kinds on society level: 1) For those who have time and inclination to study the grammar of the music so as to enhance their enjoyment in the concert hall. It needs a life of leisure; or even within a busy life, inclination to take off from time to time to learn, to go and to listen. W/o study also, it’s possible. But you need the inclination and time to go to the hall
2) Instant music — to the delight of those who cannot afford such long duration of time, place and effort to learn an intricate and arabesque music. Such music has no nuances – or at least not as intricate as the fist kind. It’s like the tribal dance, in circle with the routine movement of hands and hips. However, even here, the music should be pleasing to the ears; otherwise, people will curse the men who play the instruments. The lower classes won’t write reviews on papers; but openly curse and leave the place with the warning to the organisers not to call the ”party” for the next year kodai utsavam. Under this kind also, parai isai won’t fall under. It’s noise made by many at one place and time. It can however be made musical if you insert it slightly in an orchestra as the cine musicians do to lend rustic charm. Listen to certain Ilayraja rustic numbers.
I was mentioning about the music and not the noises. If you consider noises and sounds I am not responsible. Just I was saying, if any one hears the music and the mind is absent – then it is meditation. let it be from parai isai or carnatic / hindustani or symphony…
இசையை வசை ஆக்க வேண்டாம்.
சிரிப்பாக வருகிறது.ஆன்மீகத்தை அறியாத மூடத்தனத்தை நினைத்து.
“பரம்” என்பது அணுவுக்கும் அணு எனும் அணுத்தத்துவத்தைக் குறிக்கும்.
இறைவன் நிலை அந்த பரமாணு எனும் பரம அணு நிலை.
அந்த நிலையில் இருந்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம் பொருள்.அந்த நிலை 1008 இதழ்களாக சகத்திரம் எனும் உச்சந்தலையில் விரிந்து வரும் உன்னத நிலையை உணர்ந்தவர் அந்த பரபிரம்ம நிலையில் ஐக்கியமாவர்…
இந்த இறைநிலைக்கும் பறையர் எனும் பிற்கால சமுதாயத்திற்கும் என்ன சம்பந்தம்?பறையர் என்றோ பரையர் என்றோ எந்த நிகண்டு களிலும் ஒரு குலமே கிடையாது…
பாணர்களில் பறை அடித்தவர் மண்டைப்பாணர்.இவர்கள் தோல் கருவிகளை இசைத்து அத்தோலுக்காக இறந்த விலங்குகளை களைந்ததால் புலைத்தொழிலாளராக புலையர் என அறியப்பட்டு தன் சொந்த பாண் மரபிலேயே இழிவாக்கப்பட்டார்.
அப்பொழுது தான் இவர்களுக்கு பறையர் என்னும் பெயரே வந்தது.
தேவையற்ற சர்ச்சை.
வெளிப்படையாக உள்ளதை ஆரியமும் பிராமணியமும் மறைத்தும் திரித்தும் கூறுவது இயல்பு.
சிவன் சூத்திரனுக்கு உரிய பண்புகளை உடைய கடவுள். அதாவது காக்கும் (security) கடவுள். சுடலைப் பொடி பூசுபவன், தோல் கருவியான உடுக்கை, வேட்டைக் கருவிகள், உடை, சடை, காளை வாகனம், பாம்பு கழுத்து என சொல்லிக் கொண்டே போகலாம். தன் சூத்திர இன, நந்தன், திருப்பாணாழ்வார் போன்றவர்கள் பார்ப்பனக் கொடுமைக்கு உள்ளான போது,
அந்தணர்களையே, பூரண கும்ப மரியாதையுடன் அழைத்து வரச் செய்தும், தோளில் தூக்கி வரச் செய்ததும் இலக்கிய வரலாறு. இன்றும் சிதம்பரம் நடராஜர் கோவிலில், பிராமணர்கள், மத்தியான பறையர்களாகும் சடங்கு நடக்கிறது. ஏன்? பிராமணர்களை பறையர்களின் பங்காளிகள் என நாட்டு வழக்கில் கூறுவதும் உண்டு. சிவன் தன்னை, வேதத்தின் பெயரால் அபகரித்த அவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிழைக்க வைப்பதும் கண்கூடு. காப்பவன் யாராக இருக்க முடியும்? அவன் பழைய வழக்குப்படி அரசன்தான். இராவணன் உட்பட அரக்கர்களாக சித்தரிக்கப்பட்ட பலர் சிவனிடம் பெற்ற மாபெரும் வரங்கள்தான் எத்தகையது! அனைத்தும் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டதே தவிர, நேருக்கு நேர், திரும்பப் பெற்றதல்ல! அமிர்தம் கடைந்தெடுத்த பொழுது சூழ்ச்சி நடந்த விவகாரம் அறிவோம். வேதம் என்பது மகா விஷ்ணுவிற்கு உரியது. பின்னர், அனைத்தும் நானே என, சூத்திர யாதவனாக (சத்திரியன்) வந்த மகா விஷ்ணு வைப்பற்றி, என்ன கூறுவது. வேதம் சிவனுக்கென்பது கற்பனை. ஏனெனில் அவருக்கு அதன் பொருள் தெரியாது, குழந்தை வேலன் மூலம் அறிந்த கதைகூட உண்டு. அறிவுடை மாந்தர்களான சித்தர்கள் யார்? ஐம்பெரும் காப்பியங்கள் தந்தது சமணம்! திருக்குறள் தந்த வள்ளுவன் மற்றும் யாதும் ஊரே… என்ற பூங்குன்றன் எல்லாம், சூத்திர அடையாளம் இடப்பட்ட மகான்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்த திருமூலரோ, காளிதாசனோ, வள்ளலாரோ, ஏன் இன்று இந்து மதத்தை தூக்கிப்பிடிக்கப் பயன்படும் விவேகானந்தரோ அனைவரும் சத்திரிய-சூத்திரர்கள்தான். சமீப துர்க்கா பூஜையை திரித்து, ராமன், ராவணனை வதைத்து முடி சூடிய நாள், என புதிதாக திரிக்கப்படுகிறது. ஆனால், ராமன் ஒரு சத்திரிய (சூத்திரன்) மன்னன் என்பதும், 56 தேசத்தில் ஒன்றான அயோத்தியின் மன்னனானதும் கதை.
இவை எல்லாம், நடைமுறை விளக்கங்கள். திரித்து மறைத்தவர்களின் உள்ளம் உண்மை அறியும். இப்போது செய்யும் வாதம், பெற்ற சுகத்தையும், அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்ளவே. சூத்திர அரச வம்சங்களால் அனுபவித்தவர்கள், பகுத்தறிவு சிந்தனை கண்டு அலறுகிறார்கள். எனவே, சிவன் சூத்திரன் தான். பறையன் என்பது ஈசன் மரபு! ஆடோக்காரருக்கு தைரியமாக தெரிந்ததை, விமர்சிப்பதை விட, நாமே சிந்தித்தால் புரிகிறது.
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
அன்னைப் பத்து
ஆத்தும பூரணம்
எட்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வேத மொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர் இந்நாதனார் அன்னே என்னும்.
திருச்சிற்றம்பலம்
இதற்கு என்னங்க அர்த்தம்?