ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)

ரோட்டுல போனா, சிவனேன்னு ஒரு போக்கு போணும். அதவிட்டுட்டு, வேலில போற ஓணான ‘வே நல்லாயிருக்கீரா?ன்னு கேட்டது தப்புதான். ஒத்துக்கறேன்.

அதுக்காக ஒரு மணி நேரமாய்யா ஒராளு அறுப்பான்?

”சவச காரியதரிசின்னா என்னன்னு நெனச்சீய? என்றார் நடுவில் ஒரு நிமிடம் நிறுத்தியபடி, அவர். ”எல்லா எளவெடுத்த வேலைக்கு நடுவுல, எங்க இளைய தலைவருக்கு நாந்தான் வண்டியோட்டுதேன்.”

“அதான் சீன தூதரகத்துக்குக் கூட்டிட்டுப் போனீரோ?”

“அய்யோ” என்றார் தலையில் அடித்துக்கொண்டு “ நீங்க நினைக்கற மாரி தலைவரு, சீன தூதரகத்துல ஒண்ணும் ரகசியமாப் பேசப்போகல”

“பொறவு?”

“அன்னிக்குக் காத்தால, ராகுல்ஜிக்கு நூடில்ஸு திங்கணும்னு ஆசை வந்திருச்சி. அதோட ரெண்டு ப்ளேட்டு சிக்கன் 65 ஆர்டர் பண்ணாரா? என்ன தோணிச்சோ தெரியல, சாப்பாடு வந்ததும், என்னியக் கூப்ட்டு எத்தனை பீஸு இருக்குன்னு?’ எண்ணச் சொன்னாரு”

“ஏன் அவரு எண்ண மாட்டாரோ?”

” அவரு படிச்ச ஆக்ஸ்போர்டு ஸ்க்கூல்ல எண்ணச் சொல்லிக்கொடுக்கல. வச்சுகிட்டா மாட்டேங்காரு?.”

”சரி,மேல சொல்லும்”

”எட்டு பீஸ் இருக்குன்னேன், அவ்வளவுதான் பொங்கிட்டாரு. மீதி பீஸெல்லாம் சீனாக்காரன் தின்னுட்டான்னு”

“ஏ, இது வடிவேலு ஜோக் கணக்கால்லா இருக்கு?”

“எங்க தலைவரு கொதிக்காரு, ஒமக்கு ஜோக்கா இருக்கு என்னா?”

“சரி, மேலே…”

“போற வழில சீன தூதரகத்தப் பாத்துட்டாரு. அதென்னா சைனீஸ்ல எழுதீருக்கான்?. இதான் அந்தக் கடையோன்னு கேட்டவரு , நிறுத்துன்னுட்டாரு”

“அங்?”

“நானும் போனேனா? உள்ள போனவரு “உங்க செஃப் எங்க?”ன்னு ரிசப்ஷன்ல கேட்டாரு.. அவன் சீஃப்னு நினைச்சிகிட்டு தூதரைப் பாக்க வந்திருக்காருன்னு , ஒரு ஃபார்ம் கொடுத்து ’நிரப்பு’ன்னுட்டான். அதுல இங்க்லிஷ்லயும் சைனீஸ்லயுமா எழுதியிருந்திச்சா, அண்ணன் குழம்பிட்டாரு”

‘ரெண்டுமே தெரியலயே என்னன்னா?”

“இல்ல, மெனு கார்டு இவ்ளோ சிறீசா இருக்கே? விலை எங்க போட்டிருக்கான்?னு கேட்டாரு”

”ஒக்காருங்க, பெரிய விவகாரமால்லா இருக்கு? என்றவாறே அவருக்கு சேர் இழுத்துப் போட்டேன்.

”இத்தனைல தூதர் வந்துட்டாரு. இவர் யாருன்னு தெரிஞ்சு போயி “ ஒங்க தாத்தா எங்க நாட்டுக்கு எவ்ளோ உதவி செஞ்சிருக்காரு?”ன்னு கையப் பிடிச்சு கண்ணீர் விட்டாரு. இவரு மனசு தாங்கல.”இப்ப நான் என்ன செய்யணும்?’னாரு. அவரு “ஒண்ணுமில்ல, தும்மாத்தூண்டு இடம் சிக்கிம்னு சொல்லுவாங்க. அதுவும் பூட்டானும் கொடுத்திருங்க. மவராசனா இருப்பீய”ன்னாரு.

“இவரு என்ன சொன்னாரு?”

“தலைவரு , அது வேணாம். கொச்சி தர்றேன். சிக்கன் தரியா?ன்னாரு”

“ஆனாலும் ரொம்ப கொறைச்சலா கேட்டுட்டாரே, தலைவரு?”

”அதான் இல்ல! நீங்க இன்னும் தலைவரோட புத்திசாலித்தனத்தை புரிஞ்சிகிடலை”

‘வெளங்கும்.”

“கொச்சி தர்றேன். ஒவ்வொருநாளும் மூணு ப்ளேட்டு சிக்கன் 65 வீட்டுக்கு வரணும். அதுவும் 65 இருக்கான்னு எண்ணிப் பாப்போம். ஒரு பீஸு கொறஞ்சாலும், பீஜிங் இருக்காது மவனே”ன்னு சொல்லிட்டாரு.”

”ஆகா.இதுதான் அந்த மீட்டிங்கா?”

”இது புரியாம என்னமோ எங்காளு சீனாக்காரன்கிட்ட ரகசியமாப் பேசப்போயிருக்காருன்னு ஆ ஊன்னு மோடிக்காரங்க குதிக்காங்க. அவரு, அவங்க தாத்தா மாரி புத்திசாலில்லா?”

“கரெக்டு தாத்தாவோட புத்திசாலித்தனம் அப்படியே வந்திருக்கே?!”

“ஆமா, இவரு மாதிரியே நேரு மாமாக்கும் லெக் பீஸ் பிடிக்குமோ?”

“அவருக்கு பிடிச்சது வேற லெக் பீஸுவே”

”ஒரு வெண்பா சொல்லுங்க. அப்படியே கட்சி இதழ்ல போட்டுருதேன்.”

”கொடுத்துருவம்”.

சீனரின் நட்பினாய் நாட்டையே விற்றவர்க்
கீனமே என்பாய் பிறப்பு.

*******

(சுதாகர் கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

5 Replies to “ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)”

 1. //“ஆமா, இவரு மாதிரியே நேரு மாமாக்கும் லெக் பீஸ் பிடிக்குமோ?”

  “அவருக்கு பிடிச்சது வேற லெக் பீஸுவே”//

  சிரிப்பை அடக்க முடியவில்லை.

 2. இந்த சி“றுவன் தானகவே காங்கிரஸ் கட்சியை நல்லடக்கம் செய்து பால்ஊற்றி 16 விசேசமும் முடித்து விடுவான்.
  நாட்டில் அது மெதுவாக நடந்து கொண்டிருக்கின்றது.

 3. அன்பான ஆசிரியர் குழுவினருக்கு ,

  எனக்கு சமூகம் மற்றும் மொழி தொடர்புள்ள சில படைப்புக்களை தங்கள் இணைய தளத்தில் எழுத அவா .அதற்காக நான் Google உள்ளீட்டு கருவி தனை
  https://www.google.com/intl/ta/inputtools/try/
  பயன்படுத்துகின்றேன் .
  அக்கருவியில் சொற்றொடர்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து , தமிழ் எழுத்துக்களாக மாற்ற முடிகின்றது.
  இவ்வாறு எழுதப்படும் படைப்புக்களை , தாங்கள் ஏற்பீர்களா ?
  நான் தமிழ் தட்டச்சு செய்ய கற்கவில்லை .
  சரியாக வழி காட்டவும் .
  நன்றி ,
  துளசிராம்

 4. அன்பின் ஸ்ரீ துளசிராம்

  கூகுள் ஸாஃப்ட்வேர் மூலம் தட்டச்சு செய்வதில் பிழை ஏதும் இல்லை ஐயா. ஆனால் இந்த முறைமை மிகுந்த கால அவகாசம் எடுக்கக் கூடியது.

  அருகாமையில் இருக்கும் நண்பர்கள் மூலமாக தங்கள் கம்ப்யூட்டரில் அழகி ஸாஃப்ட்வேர் டவுன்லோட் செய்து விட்டீர்களானால் தாங்கள் மிக எளிதாக தட்டச்சு செய்ய முடியும். கூகுளை விட மிக விரைவாக இந்த முறைமையில் தட்டச்சு செய்ய முடிவதை உணர்வீர்கள். ப்ரயாசிக்கவும்.

  தங்களுடைய படைப்புகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *