தாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்

முகலாய அரசர் ஷாஜஹானுக்கும், மும்தாஜுக்கும் பிறந்த நான்கு மகள்களில் மூத்தவளான ஜஹனாராபேகமும், எல்லாவருக்கும் கடைசியான ரோஷனாரா பேகமும் மிக முக்கியமானவர்கள். முகலாய அரியணை அரசியலில் ஷாஜஹானும், அவருக்குப் பிரியமான ஜஹானாரா பேகமும், அவரது மூத்தமகனான தாரா ஷிகோவும் ஒரு கட்சிக்காரர்கள் என்றால், ரோஷனாரா பேகமும், அவ்ரங்க்ஸிப்பும் இன்னொரு கட்சிக்காரர்கள். அரண்மனையின் அந்தப்புரத்தில் எடுக்கப்படும் அத்தனை ரகசிய முடிவுகளையும் தக்காணத்தில் இருந்த அவ்ரங்க்ஸிப்பிற்கு ஒற்றர்கள் மூலம்ரோஷனாரா பேகம் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அதனை வைத்தே அவ்ரங்க்ஸிப் முகலாய அரண்மனையைக் கைப்பற்ற முடிந்தது என்பதில் சந்தேகமில்லை.

ரோஷனாரா பேகம் தனது மூத்த சகோதரனான தாரா ஷிகோவிடம் மிகக் கடுமையான வெறுப்பு கொண்டிருந்தாள். அவள் மூலம் தனக்கு அரண்மனைக்குள்ளேயே கடுமையான எதிரிகள் உருவாகியிருப்பதனை தாரா ஷிகோ உணர்ந்திருக்கவில்லை. அதனை அவருக்கு எடுத்துச் சொன்ன அவர்களது நண்பர்களின் பேச்சையும் தாரா ஷிகோ மதிக்கவில்லை. ஷாஜஹானுக்குப் பிறகு தானே ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் போவது உறுதியானது என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்கவில்லை. அதையெல்லாம் விட, தாரா ஷிகோ முகலாய அரசவை முல்லாக்களை தனது எதிரிகளாக்கிப் பெரும் பிழை செய்திருந்தார். எல்லா மதத்தவரையும் மதித்து நடக்கும் அவரை அரசவை முல்லாக்கள் அவரைக் “காஃபிர்” என்று மனதுக்குள் கறுவிக்கொண்டு தாராவைக் கவிழ்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஷாஜஹான் அவரிடம் அரசுப் பொறுப்புகளை ஒப்படைத்த காலத்தில் தாரா ஷிகோ ஏறக்குறைய இஸ்லாமை விட்டு வெளியேறியிருந்தார். வெள்ளைக்கார கிறிஸ்தவ பாதிரிகள் என்னேரமும் அவரைச் சூழ்ந்திருந்தார்கள். தொடர்ந்த மூளைச்சலவையின் காரணமாக தாரா ஷிகோ ஒரு கிறிஸ்தவரைப் போலவே நடந்து கொள்ளத் தலைப்பட்டார். அவர் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டதாகவும் வதந்திகள் உலவின. ஒருவேளை அவர் பதவியேற்றிருந்தால் இந்தியாவை ஆண்ட முதல் கிறிஸ்தவ அரசாராக அவர் இருந்திருக்கலாம்.

மெல்லக் கசிந்த இந்தச் செய்திகளை முகலாய அரசவை முல்லாக்கள் வெறுத்தார்கள். எனவே இஸ்லாமிய அடிப்படைவாத எண்ணம் கொண்டவராக அறியப்படுகிற, தாரா ஷிகோவினால் “நமாஸி” என்று தமாஷாக அழைக்கப்பட்ட அவ்ரங்க்ஸிப்பிடம் ரகசியமாக தொடர்பு வைத்திருந்தார்கள்.

போரில் தோல்வியடைந்த தாரா ஷிகோவும் அவரது ஏழு வயது மகனான ஷிஃபிர் ஷிகோவும் கைப்பற்றப்பட்டு, தில்லியில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பின்னர் ஒரு சிறிய கட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டார்கள் (அந்தக் கட்டிடம் இன்றைக்கும் தில்லியில் இருக்கிறது). அவரை என்ன செய்வது என்று அவ்ரங்க்ஸிப் அவரது அரசவை பிரதானிகள் மற்றும் சகோதரி ரோஷனரா பேகத்திடம் ஆலோசனை கேட்க, ஒன்றிரண்டு பேர்கள் அவரை மற்ற இளவரசர்களைப் போல குவாலியர் சிறையில் அடைத்து வைக்கலாம் என்று யோசனை சொல்ல, ரோஷனாரா பேகம் மிகக் கோபத்துடன் தாரா ஷிகோவைக் கொல்ல வேண்டும் என்று வாதிடுகிறாள். அவளுக்கு ஆதரவாக அரசவை முல்லாக்களும் சேர்ந்து கொண்டு காஃபிரான தாரா ஷிகோவைக் கொல்வதுதான் சரியானது என்று யோசனை சொல்ல, அவ்ரங்க்ஸிப் அவரைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதன்படியே தாரா ஷிகோவைக் கொல்ல அவரது அடிமைகளில் ஒருவனை அனுப்புகிறார்.

இதற்கிடையே, தன்னையும் தன் மகனையும் விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சிய தாரா ஷிகோ தன்னுடைய உணவைத் தானே சமைத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு, தனது மகனுடன் பேசியபடியே ஒரு சிறிய பாத்திரத்தில் பருப்பை (lentils) வேகவைத்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் கதவை உடைத்துக் கொண்டு நான்கு பேர் உள்ளே புகுந்திருக்கிறார்கள். தாரா ஷிகோ உடனே சிறுவனைத் தூக்கி அணைத்துக் கொண்டு, “நம்மைக் கொல்வதற்காக வந்திருக்கிறார்கள் மகனே” எனக் கூறியபடி சமையலறையிலிருந்த சிறிய கத்தியை எடுத்துக் கொண்டு அவர்களுடன் சண்டையிடுகிறார்.

தன்னுடைய நேரம் வந்துவிட்டதை உணர்ந்த தாரா ஷிகோ சத்தமாக “முகமது எனக்கு இறப்பைத் தந்தார்; தேவனின் பிள்ளை என்னைக் காப்பார்” எனப் பாரசீக மொழியில் மீண்டும் மீண்டும் சத்தமாகச் சொல்கிறார்.

“He found the Prince in his apartment raising his eyes to heaven, and repeating these words: [Mahammad ma-ra mikushad, ibn Allah Maryam mibashaid, Pers.], which is, “Mahomet gives me death, and the Son of God [and Mary] will [are necessary to] save me.” – Bernier, Page 102

ஷிஃபிர் ஷிகோவை தாரா ஷிகோவிடமிருந்து ஒருவன் வலுக்கட்டாயமாகப் பிடுங்குகிறான். மற்ற மூன்று பேர்களும் தாரா ஷிகோவின் மீது பாய்ந்து அவரை அடித்துத் தரையில் வீழ்த்திக் கழுத்தை அறுத்துத் தலையைத் துண்டித்து எடுக்கிறார்கள். இது அத்தனையும் அந்தச் சிறுவனின் முன்பு நடக்கிறது. அந்தச் சிறுவன் மனது என்ன பாடுபட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

துண்டித்த தலையைக் கழுவி, ஒரு தட்டில் வைத்து அவ்ரங்க்ஸிப்பின் முன் வைக்கிறார்கள். அவ்ரங்க்ஸிப் மிகச் சந்தோஷமாகத் தனது வாளின் முனையால் அந்தத் தலையைத் தொட்டுப் பார்க்கிறார். அதே வாளால் தலையின் ஒரு கண்ணைத் திறந்து பார்த்து அது சரியானதுதான் என உறுதி செய்து கொண்டு உடனடியாக அந்தத் தலையை ஒரு பெட்டியில் வைத்து மூடி “பாதுஷாவின் பரிசாக” சிறைப்பட்டிருக்கும் அவரது தந்தையான ஷாஜஹானிடம் அனுப்பி வைக்க உத்தரவிடுகிறார் அவ்ரங்க்ஸிப் (Page 103).

பெட்டியில் என்ன இருக்கிறது என்பதனை அறியாத ஷாஜஹான் சந்தோஷமாக “இப்போதாவது அந்தக் கொடியவனுக்கு இந்த அப்பனின் நினைவு வந்ததே” என்று சொல்லிக் கொண்டு பெட்டியைத் திறந்து பாத்து அவரது பிரியமான மகனின் வெட்டப்பட்ட தலையைப் பார்த்துக் கதறி அழுகிறார். பின்னர் அந்தத் தலையையும், தாரா ஷிகோவின் உடலையும் ஹுமாயூனின் கல்லறையில் புதைக்க உத்தரவிடுகிறார் அவ்ரங்க்ஸிப். சிறுவன் ஷிஃபிர் ஷிகோ அவ்ரங்க்ஸிப்பை எதிர்த்த பிற இளவரசர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த குவாலியர் சிறைக்குக் கொண்டு போய் சிறையில் அடைக்கப்படுகிறான்.

(பி.எஸ்.நரேந்திரனின் ஃபேஸ்புக் பக்கம்  )

10 Replies to “தாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்”

  1. சரித்திரத்தைக் கூறும் இப்பதிவுக்கு நன்றி. ஆனால், தாரா ஷூகோ இந்துசமயக் கருத்துக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டு இந்துமத குருக்களுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றதே, அதைப்பற்றி ஏதாவது ஆதாரம், விளக்கம் தர இயலுமா?

  2. Recedntlly I bought a book ” THE NAKED MUGHALS -Forbidden Tales of Harem and Butchery) by Vashi Sharama – The details printed in the back cover are as follows: – Did you know that?
    Babur was a drunkard! – He loved a boynamed Babri – Akbar raped children! – Akbar raped his own daughter-in-law – Akbar had Harem of 5000 women – Jahangir blinded his son with his own hands – Shah Jahan did not spare even his own daughter – Aurangzeb beheaded his own brother and sent his head to his imprisoned father – Almost every Mughal king killed some of his sons and brothers and much more.
    This book is an eye opener on Mughal history in India. Mughals have been glorified as great rulers in Inidan history books despite being maniacs, in-cest-lovers, rapists and merciless invaders.
    The book isa compilation of all hidden facts. Straight from their authentic biographies. To make Indians realise, enough is enough.

  3. //சகோதரி ரோஷனரா பேகத்திடம் ஆலோசனை கேட்க, ஒன்றிரண்டு பேர்கள் அவரை மற்ற இளவரசர்களைப் போல குவாலியர் சிறையில் அடைத்து வைக்கலாம் என்று யோசனை சொல்ல, ரோஷனாரா பேகம் மிகக் கோபத்துடன் தாரா ஷிகோவைக் கொல்ல வேண்டும் என்று வாதிடுகிறாள்.//

    ஒரு தங்கைக்கு அண்ணன் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பும் கோபமும் அவனைக்கொல்லத்தான் வேண்டுமென்று வாதிடுமளவுக்கு?

  4. தாரா ஷிவோவின் கிறிஸ்தவ சாா்பு குறித்த நான் விாிவாக படிக்கவில்லை.ஆனால் அவா் யோக சுத்திரத்தை பகவத்கீதையை உருதுவின் மொழி பெயா்த்தாா். யோக சுத்திரத்தை அவரே மொழி பெயா்த்துள்ளாா்.மகாபாரதத்தை உருதுவில் மொழி பெயா்கக ஒரு குழுவை அமைத்தாா். அவா் இந்துக்களுக்குநியாயம் செய்தாா். அரேபிய மத கருத்துக்களை அவா்ஏற்கவில்லை. ஆன்மாவிற்கு மறுபிறவி உண்டு என்று நம்பினாா். ஆகவே இந்து பண்பாட்டின்ன நல்ல அமசங்களை ஆய்வு செய்து வந்தாா்.அரேபிய பிராண்டட் முஸ்லீம்ஆக என்றும் அவா் வாழவில்லை.எனவேதான் அவரை காபீா் -இசுலாத்தை துறந்தவா் என்று பழி போட்டு கொன்றாா்கள்.அவா் குறித்து நிறையவே தொிந்து கொள்ள விரும்புகின்றேன். தேடிப்பிடித்து கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  5. Dara Shukoh also translatedinto Persian the renowned philosophic treatises of
    Yog VashishtandGita.
    This show that Dara Shukoh had made an expansive study of the Epic poem,
    Mahabharata,claimed to be the fifth Veda by the Hindus, sinceGitaforms the last and eighteenth chapter of the epic.DaraShukoh‟s exclusiveand undiluted aim was to educate and equip Ahl-e-Islam with the knowledge ofreligious and social beliefs and customs of Hindus whom the Great Mughals ruled. He hoped
    this would result in induction of peace and harmony in the Indian subjects.
    It is one of the greatesttragedies of the Indian history that Aurangzeb overcame the legitimate heir of the Mughals, Dara Shukoh, and imposed his own blinkered vision of Islam on India, obscuringthe finer points of
    Islamthat had so much to offerthe country of its adoption interms of equality and energetic administration. Had Dara come to the throne, even Akbar,
    India‟s greatest of rulers, would have been outshone by the great grandson‟s
    ability to weld different faiths into a mighty nation. Dara was executed by Aurangzeb fordeclaring Hinduism and Islam to be twin brothers.“Some Hindus view Akbaras anAvatarand, unquestionably, of all the mortal rulers history recorded, hecame nearest to fitting the bill.”The wonder that was India-MussaRizvi)Dara Shukoh was a born poet,a virtuoso calligrapher and painter, apart from his being a sufi with the seal of royaltyon him. All his poetical compositions were in Persian, drenched in his belief in thedoctrine ofWahadat-ul-Wajud. He was accepted to be, in Sufi and non-Muslim circles, an incarnation of his great
    -grandfather Akbar the Great who also was an advocateofWahdat-ul-Wajud.Wahdat
    -ul-Wajud postulatesthat,
    “The absolute is the One creator of all creatures and is
    pervading into all.”Sheikh Ibn Irabi is accepted to be the founder of this doctrine thoug,h in itself, it isas old as theUpanishads.
    Dara Shukoh expresses thefact thus:Dar Zaat, dooeyee na deedhoshiar
    Mao tu bavad, baraaeye guftaar;Aadaad meaaney yak eeyaan beein
    Azyak benigar keh gashat bisseeyaar.
    i.e. The wise see not a second in essence we and you are mere calling words,
    See One contained evident in many -See One hath formed in shapes m

  6. Recedntlly I bought a book ” THE NAKED MUGHALS -Forbidden Tales of Harem and Butchery) by Vashi Sharama

    Please furnsih the address of the Publication and cost

  7. source:- http://www.free faith international
    Unhappy Muslims

    The Muslims are not happy!
    They’re not happy in Gaza.
    They’re not happy in Egypt.
    They’re not happy in Libya.
    They’re not happy in Morocco.
    They’re not happy in Iran.
    They’re not happy in Iraq.
    They’re not happy in Syria
    They’re not happy in Southi Arabia
    They’re not happy in Islamic Bangaladesh
    They’re not happy in Yemen.
    They’re not happy in Afghanistan.
    They’re not happy in Pakistan.
    They’re not happy in Syria.
    They’re not happy in Lebanon.

    So, where are they happy?

    They’re happy in Australia.
    They’re happy in England.
    They’re happy in France.
    They’re happy in Italy.
    They’re happy in Germany.
    They’re happy in Sweden.
    They’re happy in the USA.
    They’re happy in Norway.
    They’re happy in SriLanka
    They’re happy in India
    They’re-Palestinians- happy in Israel
    They’re happy in every country that is not Muslim.
    And who do they blame?
    Not Islam.
    Not their leadership.
    Not themselves.
    THEY BLAME THE COUNTRIES THEY ARE HAPPY IN!
    AND THEY WANT TO CHANGE THEM TO BE LIKE THE COUNTRY THEY CAME FROM
    WHERE THEY are UNHAPPY.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *