மாணவி அனிதாவின் உயிரிழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது. அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். இறந்த உயிர் நற்கதியடையட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
அனிதாவின் தற்கொலைக்கு யார் காரணம்?
அனிதாவிற்கு நீட் பற்றி தெரியாதா? கண்டிப்பாக தெரியும். அனிதாவின் உறவினர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளுக்கு படித்து வருபவர்கள் என்ற தகவல் வருகிறது. இது உண்மையாயின் கண்டிப்பாக நீட் தேர்வு பற்றி தெரிந்திருக்கும்.
அதுமட்டுமல்ல, நீட் தேர்விற்குப் பிறகு அனிதா ஏரோநாட்டிக்கல் படிப்பதற்காக அப்ளை செய்திருந்தாராம். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்திருந்தால், விரக்தி எண்ணம் இருந்திருந்தால் ஏரோநாட்டிக்கல் படிப்பிற்கு அப்ளை செய்திருக்கமாட்டார். மேலும் அவர் அக்ரி படிக்கவும் ஆசைபட்டார். நீட் தேர்வால் விரக்தி அடைந்திருந்தால் அக்ரி படிக்க ஆசைபட்டிருக்கமாட்டார். அக்ரி படிக்க ஆசைப்பட்ட பெண், ஏரோநாட்டிக்கல் படிப்பிற்கு அப்ளை செய்திருந்த பெண் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?
கண்டிப்பாக இது அனிதாவே முடிவு செய்திருக்க முடியாது. அவரை மூளைச் சலவை செய்திருக்கலாம். அல்லது இது கொலையாக கூட இருக்கலாம்.
திமுக அனிதாவை உச்சநீதிமன்றம் வரை செலவழித்து அழைத்துச் சென்றது. நீட் தேர்வில் செலக்ட் ஆகவில்லையென்றால் இந்த திமுக என்ன செய்திருக்க வேண்டும்? தங்கள் கட்சிக்காரன் நடத்தும் மருத்துவ கல்லூரியில் இவர்களே ஒரு சீட் அனிதாவிற்கு வாங்கிக் கொடுத்திருக்கலாம். அல்லது தங்கள் கட்சியின் சொந்த செலவில் மருத்துவ சீட் வாங்கிக் கொடுத்திருக்கலாம். இதை ஏன் இவர்கள் செய்யவில்லை?
இப்போது போராடும் வைகோவிலிருந்து திருமாவளவனிலிருந்து யாராவது ஒருவர் இந்தப் பெண்ணுக்கு தங்கள் அதிகாரத்தை வைத்து, பணபலத்தை வைத்து ஒரு மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
இன்று அனிதாவிற்காக குரல் கொடுக்கும் அத்தனை கட்சிகளும் நினைத்தால் நீட்டில் தேர்வெழுதிய அத்தனை தலித் மாணவர்களுக்கும் தங்கள் சொந்த செலவிலேயே மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்திருக்க முடியும். அவ்வளவு மெடிக்கல் கல்லூரிகளையும், அவ்வளவு பணபலத்தையும் இந்த அரசியல்வாதிகள்தான் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அப்படி செய்ய இவர்கள் என்ன தியாகிகளா?
நீட் தேர்வில் பாதிக்கப்பட்டது இந்த திராவிட அரசியல்வாதிகள்தான். அதனால் திட்டம்போட்டு அனிதாவை பலிகடா ஆக்கியிருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வர பாஜக தமிழ்நாட்டில் முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதனால் பாஜகவை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடாக கூட இது இருக்கலாம்.
அதனால் அனிதா தற்கொலையில் சிபிஐ நீதிவிசாரணை வேண்டும். முதலில் திமுகவை விசாரித்தால் உண்மை வெளிவரலாம். வெளிவரும்.
நீட் தேர்வால் தற்கொலைக்கு அல்லது கொலைக்கு திட்டமிட்டு தள்ளப்பட்ட அனிதா சாவில் திருமாவளவன் திமுக, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். நீட் தேர்வை கொண்டுவந்ததே காங்கிரஸ்தான். அதற்கு விளக்கு பிடித்தது திமுகதான். நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடியது காங்கிரசை சார்ந்த சிதம்பரத்தின் மனைவி நளினிதான். இப்போது கேரளாவில் நீட் தேர்வை தங்களது சாதனையாக சொல்லி வருபவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். இப்போது புரிகிறதா? இவர்கள் நீட் தேர்வை ஒழிப்பதற்காக குரல் கொடுக்கவில்லை. பாஜகவை எதிர்க்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள் இங்கே.
*****
இது தொடர்பாக எனக்கு வந்த இந்த கீழ்க்கண்ட பதிவைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அனிதா சாவுக்கு ‘ஒரு தரப்பை’ கைநீட்டி வசைபாடும் முன் தயவுசெய்து இதை ஒருமுறை படிச்சுருங்க. அதுதான் அனிதா போன்று மற்றொரு பிஞ்சு உயிர் இழப்பதை தடுக்க நீங்க செய்யும் ஆக சிறந்த கைமாறு.
முதலில் உங்களுக்கு 10 கேள்விகள்:
1. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அனிதா நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?
+2வில் 1200 க்கு 1176 அதாவது 96% மதிப்பெண் எடுக்க முடிந்தவரால், நீட் தேர்வில் எடுக்க முடிந்தது வெறும் 86 மதிப்பெண்கள் தான். அதுவும் 720 க்கு.
ஏன் இந்த நிலை? இத்தனைக்கும் 55% கேள்விகள் +1 பாடத்திலும், 45% +2 பாடத்திலும் கேட்கப்படும் என்று முன்னரே அறிவித்து இருந்த நிலையில் எப்படி இவ்வளவு குறைவான மதிப்பெண்ணை தான் இவர் பெற்றார்?! காரணம் இவர் படித்தது அரசு பள்ளி இல்ல..Raja vignesh என்ற தனியார் பள்ளி. தமிழ்நாட்டில் எத்தனை தனியார் பள்ளில +1 பாடம் நடத்துறாங்க..? உங்கள் சிந்தனைக்கே விட்டுறேன்.
2. இன்று அவரது சாவில் அரசியல் பண்ணும் கட்சிகள் Psg, meenakshi, SRM மெடிக்கல் காலேஜ்கள் ₹கோடி கணக்கில் மெடிக்கல் சீட்டை விற்ற போது ஏன் வாய் திறக்கல?
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எம்புட்டு நேர்மைனா – விஜயகாந்த் மச்சானுக்கு ஒரு மெடிக்கல் காலேஜ் இருக்கு. பச்சமுத்து காலேஜ் தான் SRM னு சொல்லி தெரிய வேண்டியதில்லை. ராமதாஸ் சொந்தமா மெடிக்கல் காலேஜ் இருக்கு. Dr. MGR University ல பெரும் பங்கு யாருதுனு ஒங்களுக்கு தெரியும்னு நெனக்கேன். இதுல என்னடா ஒரு கட்சி மட்டும் வரலயே. அவனுக அம்புட்டு யோக்கியனா இல்ல மறைக்குற நீ அயோக்கியனானு கோபப்பட வேண்டாம். ஜெகத் ரட்சகன் தொடங்கி மெடிக்கல் காலேஜ் இல்லாத திமுக முக்கிய புள்ளிகள் யார் இருக்கா? இதை பட்டியல் போட்டா நாடு தாங்குமா ?
3. இப்போது கூப்பாடு போடுற தமிழக ‘அற நெறி’ ஊடகங்கள் அப்போது ஏன் கள்ள மெளனம் சாதித்தன?
கோவை PSG Collegeல டொனேஷன் மட்டுமே ₹75 லட்சம் வாங்குனாங்க. Meenakshi College ல ₹60 லட்சம், SRM சொல்லவே வேணாம் உங்களுக்கே தெரியும். அப்ப ஏன் எந்த ஊடகமும் இதை பொது விவாதத்திற்கு எடுக்கல. அட உண்டியல் கட்சின்னு சொல்ற கம்யூனிஸ்ட் கூட மெளன விரதம் இருந்தார்களே ஏன்? Cheque வாங்கிட்டாங்களா? அதுசரி பச்சமுத்து நடத்துற SRM medical college ன் பகல் கொள்ளையை அவரது மகன் நடத்துற புதிய தலைமுறை டிவி வெளிச்சம் போட்டு காட்டும் என நினைத்தால்.. நாம் தான் குருடர்கள்.
4. மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்தது சரின்னு வச்சுக்குவோம். ஆனா SRM போன்ற கல்லூரிகள் உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்க்க காரணம்?
சரி மாணவர்கள் எதிர்த்தார்கள் ரைட்டு. இந்த SRM ஏன் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினான்? மன்னிக்கவும் அவன் போராடியது நீட் தேர்வை எதிர்த்து இல்ல. நீட் தேர்வு மூலம் அட்மிஷன் நடந்தா தன் management quota seats எப்படி அதிக விலைக்கு விற்பது? அதனால் அவனுக்கு மட்டும் விலக்கு கேட்டு போராடினான். இதே போன்று மத்த கல்லூரிகள் ஒன்று சேர்ந்து மறைமுகமாக நீட் தேர்வை தடுக்க பெரிய லாபி செய்து தோற்றார்கள் என்பதே உண்மை. ஏன்? பின்ன ₹கோடி கணக்கில் விற்ற மேனேஜ்மென்ட் சீட்களை இன்று நீட் மூலம் மிகக்குறைந்த செலவில் மாணவன் படிக்க முடிந்தால் அவனுக பொழப்பு என்னாவுறது..
5. உண்மையில் அனைத்து சாதியையும் உள்ளடக்கிய சமூக நீதி.. இந்த நீட் தேர்வால் நசுக்கப்பட்டுள்ளதா?
இதுதான் அடுத்த திட்டமிட்டு பரப்பப்படும் பொய். ஒரு சின்ன உதாரணம். கடந்த வருடம் medical seat பெற்ற எஸ்.சி. மாணவர்கள் 94. இந்த வருடம் 135. இதுல எங்க தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நீட் இருக்கு??! அடுத்த வாதம் OC category ல போன வருடம் 168 ஆனா இந்த முறை 515.. இவனுக எப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு மிக சிறந்த உதாரணம். அதாவது அந்த 515 பேரும் brahmins or upper (forward) caste னு காட்ட முற்படுறாங்க. ஆனா உண்மையில் அதுல 36 பேர் sc, 201 பேர் BC, 179 MBC. இதுபோக மீதி 99 பேர்ல தான் brahmin, chettiar உட்பட ஏனைய unreserved and upper castes வற்ராங்க. இதுல எங்க சமூக நீதிக்கு குல்லா போடப்பட்டது..
6. நீட் தேர்வில் பிற மாநிலங்களின் நிலைப்பாடு என்ன? அங்கு ஏன் நீட் எதிரா ஒரு போராட்டமும் இல்ல.
இதுதான் மிக முக்கிய கேள்வி. திராவிடம் என்று பேசிய நாம் இந்தி தொடங்கி நீட் வரை எதிர்க்கிறோம். ஆனா ஏன் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா போன்ற பிற திராவிட பகுதியில் எதிர்ப்பு இல்ல? காரணம் இங்க திராவிட கோஷம் எதிர்ப்பு அரசியல் நடத்தவும், மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைக்கவும் தான் பயன்பட்டது. ஆனா மத்த தென் மாநிலங்களில் திராவிட நாடு கோஷத்தோட பெரியாரும் அவர் வாழ்ந்த காலத்திலயே புறக்கணுக்கப்பட்டது வரலாறு. சரி விஷயத்துக்கு வருவோம். தமிழ்னு வெறும் அரசியல் கோஷம் போட்ட நாம் இந்தியை எதிர்த்தோம் ஆனா ஆங்கிலத்துக்கு அடிமையானோம். இது சிலரது அரசியலுக்கு மட்டும் தான் பயன்பட்டது. ஆனா கேரளா உட்பட எந்த மாநிலமும் இந்தியை எதிர்க்கல. நம்மில் எத்தனை பேருக்கு நவோதயா, இ-கல் வித்யாலயா பற்றி தெரியும். தரமான சிபிஎஸ்இ கல்வியை மிக குறைந்த செலவில் அளிக்கும் மத்திய அரசு கல்வி நிறுவனத்தை ஏன் தமிழ்நாடு மட்டும் ஏற்கல?? அப்ப திமுக கட்சிக்காரர்கள் மட்டும் சிபிஎஸ்இ பள்ளி நடத்தலாமா?? உங்க சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
7. நீட் தேர்வில் அரசியல் செய்யும் கட்சிகளின் உண்மை நோக்கம் என்ன?
நீட் தேர்வு வந்தால் தங்கள் உறவினர், கட்சிக்காரர், நன்கொடை வழங்கும் பெரு முதலாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக தான் முழு மூச்சாக தமிழக கட்சிகள் எதிர்க்கின்றன. உதாரணம், PSG medical college ல மு. க. ஸ்டாலினுக்கு என்று தனி கோட்டாவே உண்டு, புதுவை ஜிப்மர்ல வைகோவுக்கு ஒரு சீட் உண்டு ஆனா சில லட்சங்கள் செலவோடு.
8. அடுத்து கல்வித்துறை செய்ய வேண்டியது என்ன?
இந்த முறையாவது அரையாண்டு, பொது தேர்வு விடுமுறையில் தனியார் பயிற்சி நிறுவனங்களோடு கூட்டு முறையில் short term crash course அறிமுகம் செய்து ஏழை அரசு பள்ளி மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவருக்கு உதவணும்.
9. நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத்தை ஏன் யாரும் கேள்வி கேட்கல அல்லது கேட்க முடியல?
10. நீட் தேர்வு என்ற ஒரு பிரச்சனை எப்போது, எதனால், யாரால் முளைத்தது?
இந்தியாவில் மருத்துவ சீட் கிடைக்காத மாணவர்கள் மலேசியா, தாய்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகள்ல இங்க management quotaல செலவு பண்றத விட குறைந்த செலவில் படித்துவிட்டு MCI தேர்வு எழுதி டாக்குடராவது ஏற்புடையதா?? இதனால மருத்துவ தரம் எப்படி இருக்கும் – அப்படின்னு சாட்டையடி கொடுத்த பின் தான் வேற வழியின்றி கான்கிரஸ் அரசு நீட் வரைவை உருவாக்கியது. அதை செயல்படுத்தியது பாஜக அரசு. இதனால தான் உச்சநீதிமன்றத்தை கேள்வி கேட்க முடியாது. ஏன்னா அது எடுத்த நடவடிக்கை மிக சரி.. கட்டுக்கடங்காத management fees, donation இதுல படித்து வர்றவன் எப்டி சேவை மனப்பான்மையோடு இருப்பான்?
இதுக்கு மேலயும் மோடி ஒழிக, நீட் வேண்டாம் என்றால்.. தயக்கமின்றி சொல்வேன் நீங்களும் சந்தர்ப்பவாதி தான்.
(ம.வெங்கடேசன் தமிழ்நாடு பாஜக எஸ்.சி பிரிவு மாநிலத் தலைவர். இது அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
********
திரு ம வெங்கடேசன் அவர்களுக்கு
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளும் படி இல்லை
நீட் தேர்வு பற்றி அனித்தாவிற்கு தெரியாது என்று யாரும் இங்கு சொல்ல வில்லை
நீட் தேர்வு தேவை இல்லை என்று ஒரு போராட்டம் இங்கு கட்டமைக்க பட்டதும்
சென்ற ஆண்டுகள் அதில் இருந்து விளக்கு அளிக்க பட்டதும் தெரியும்.
இம்முறையும் அது தவிர்க்க படும் என்று நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நியாயமானது தான்.
நீட் தேர்வு எழுதும் நாள் வரை மக்களிடமும் ஆசிரியர்களிடமும் அரசியல் வாதிகளிடமும் குழப்பமும் நம்பிக்கையும் இருந்தது தமிழ் நாடு அறியும்..
/*நீட் தேர்விற்குப் பிறகு அனிதா ஏரோநாட்டிக்கல் படிப்பதற்காக அப்ளை செய்திருந்தாராம். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்திருந்தால், விரக்தி எண்ணம் இருந்திருந்தால் ஏரோநாட்டிக்கல் படிப்பிற்கு அப்ளை செய்திருக்கமாட்டார்.*/
வேடிக்கையாக உள்ளது உமது கூற்று..எனக்கு தெரிந்த ஒரு பார்ப்பன சகோதிரி 194/200 அவளுக்கு மருத்துவம் தவிர வேறு எதுவும் படிக்க விருப்பம் இல்லை, ஆனால் அவளின் பெற்றோரும் ஆசிரியரும் அவளுக்கு இன்ஜினியரிங் அப்ப்ளிகேஷனும் அக்ரியிலும் அப்ப்ளிகாடின் செய்து வைத்துள்ளார்கள். நீட் தேர்வு சாதகம் அழிக்காத பட்சத்தில் அதில் தேர்வு செய்து கொள்ளலாம். அனாலும் அந்த சகோதரிக்கு வேறு எதிலும் விருப்பம் இல்லை
அதே போல் ஏரோநாடிகளுக்கும் அக்ரிகும் பிறரின் வழிகாட்டுதலின் பேரில் அனிதா விண்ணப்பித்து இருக்கலாம்
அந்த சின்ன பெண் தன்னுடைய லட்சியம் தகர்ந்து விட்டது என்பதில் அடைந்த சோகத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்…
1. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அனிதா நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?*/
நீட் தேர்வுக்கு தயார் யாரும் ஆகவில்லை என்பது தானே தமிழ் நாட்டின் யதார்த்தம், அதில் நீர் அவள் பெற்ற மதிப்பினை கேலி செய்யவது எவ் வகையில் நியாயம் ??
நீர் சொல்வது போல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை தனியார் பள்ளிகள் மீது… ஆனால் நஷ்டம் ஒரு உயிர்…
ஒரு வேலை இதற்கு பிஜேபி பொறுப்பு இல்லை என்று சொல்வதை விட. இதையும் பொறுப்பில் எடுத்து கொள்ளும் தலைமை மாநிலத்திலும் மத்தியிலும் இல்லை என்பது யதார்த்தம்..
/*
5. உண்மையில் அனைத்து சாதியையும் உள்ளடக்கிய சமூக நீதி.. இந்த நீட் தேர்வால் நசுக்கப்பட்டுள்ளதா?
இதுதான் அடுத்த திட்டமிட்டு பரப்பப்படும் பொய். ஒரு சின்ன உதாரணம். கடந்த வருடம் medical seat பெற்ற எஸ்.சி. மாணவர்கள் 94. இந்த வருடம் 135. இதுல எங்க தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நீட் இருக்கு??! அடுத்த வாதம் OC category ல போன வருடம் 168 ஆனா இந்த முறை 515.. இவனுக எப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு மிக சிறந்த உதாரணம். அதாவது அந்த 515 பேரும் brahmins or upper (forward) caste னு காட்ட முற்படுறாங்க. ஆனா உண்மையில் அதுல 36 பேர் sc, 201 பேர் BC, 179 MBC. இதுபோக மீதி 99 பேர்ல தான் brahmin, chettiar உட்பட ஏனைய unreserved and upper castes வற்ராங்க. இதுல எங்க சமூக நீதிக்கு குல்லா போடப்பட்டது..
*/
ஒரு வேலை நீட் இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறிய எஸ்.சி. மாணவர்களின் எணிக்கை உயராது என்று உங்களால் கூற முடியுமா ? அடுத்து வருகின்ற வருடங்களில் இவை குறைவதற்கு வாய்ப்பு இல்லையா ?
நீட் தேவை இல்லை என்பது தான் வாதம்.
ஒரு பிற்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவி நல்ல மதிப்பெண் பெற்று.. எதற்காக அரசியல் வாதிகளின்
கல்லூரிகளில் கருணை அடிப்படையில் சேர வேண்டும் என்று எதிர் பார்க்கின்றீர்கள்???
நீங்கள் சொல்வது போல் அவள் தூண்ட பட்டிருந்தால் ?
கண்டிப்பாக இந்த நிலைக்கு அவள் தூண்ட பட்டு இருக்கிறாள். ஞாபகம் வைத்து கொள்ளுங்கள், சமரசம் அடைய மறுக்கிறாள் என்றால் லட்சியம் பெரிது என்று வாழ்ந்து இருக்கிறாள் என்று பொருள்
லட்சியம் இல்லாதவர்களை தூண்ட முடியாது…
மத்திய மாநில கொள்கை முட்டு கட்டைகள், அரசியல் அராஜகங்கல் இவை எல்லாமே தூண்டுதல்
லட்சியத்தை விட முடியாமல் அடுத்த கட்டத்திற்கு நம்மையும் நகர்த்தி இருக்கிறாள்..
ஒரு அப்பாவி பெண் அவள் கொண்ட லட்சியத்தால் அவளையும் அறியாது ஒரு போராளி ஆகி இருக்கிறாள்…
தமிழ் ஹிந்து ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறது?
ஒரு இளம்பெண்ணின் தற்கொலை. எந்த வித முகாந்தரமும் இல்லாமல் அது கொலையாக இருந்திருக்கலாம் என்று மலினப்படுத்த உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? அரவிந்தன் நீலகண்டனும் ஜடாயுவும் பொறுப்பாளர்களாக இருக்கும் தளத்தில் இப்படி ஒரு கருத்தா? உங்களுக்கெல்லாம் மனம் கூசவில்லையா?
இந்த ஆசிரியர் கேள்வி கேட்பதைப் போல இன்னும் நிறைய கேட்கலாம். இதே பச்சமுத்துவோடு பாஜக கூட்டணி வைத்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் ம.வே? ஏன் வாயை மூடிக் கொண்டிருந்தார்? அப்போது பகல் கொள்ளை பச்சமுத்து என்று ஏன் அவர் உணரவில்லை? அவர்தான் உணரவில்லை, அந்த உண்மையை ஏன் தமிழ் ஹிந்து பிரசுரிக்கவில்லை? இந்த திராவிடக் கட்சிகளோடு – திமுக, அதிமுக எதுவும் விலக்கல்ல – மாறி மாறி பாஜக கூட்டணி அமைத்தபோது ம.வே. என்ன செய்தார்? அதைக் கண்டித்து இன்று வரை ஏன் தமிழ் ஹிந்துவில் ஒரு கட்டுரை வரவில்லை? விஜய் ஆதரவு தருவாரா, ரஜினியை இழுக்க முடியுமா என்று மோடி அவர்கள் வீட்டுக்கே போய் கெஞ்சிக் கொண்டிருந்தபோது தமிழ் ஹிந்து என்ன செய்தது? அதெல்லாம் சந்தர்ப்பவாதம் இல்லையாமா? அட இன்றைக்கும் எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் ரிமோட் கண்ட்ரோல் செய்யும்போது நியாய உணர்வு பீறிட்டு எழாதா? அதெல்லாம் பிரச்சினை இல்லையாமா? நீட்டுக்கு ஒரு வருஷ விலக்கு என்று தமிழக அரசின் சட்டத்தை முதலில் மத்திய அரசு அமைச்சகங்கள் ஏன் ஏற்றன? நாலு நாளில் அதை ஏன் நீதிமன்றத்தில் மாற்றிச் சொல்கிறது? அதை ஏன் வசதியாக இந்தத் தளமும் இந்த ஆசிரியரும் மறைக்கிறீர்கள்? மற்றவரை குறை சொல்ல இந்த அரசுக்கும் பாஜகவுக்கும் என்ன அருகதை இருக்கிறது? எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், இதில் தான் மட்டும் உத்தமன் மாதிரி என்ன நடிப்பு?
I am a man living outside Tamil Nadu. I had experience of staying in Delhi and Mumbai. Now I am in Mysore for a year or so.
The way Tamilians are supported by north Indians were amazing. If you accept them. There is no ill feelings of being south or north india.
But in Tamil Nadu it is always portrayed as the NEET is one of the Aryan Operation against Dhravidians.
So Anitha’s suicide or murder will keep Tamil Nadu boiling and our Tamil People also emotionally fight. Strike in schools, colleges in support of Anitha.
Newly found technique of locking the bridge and troubling all office goers.
Now Anitha is made as Goddess of NEET opposition by Thiruma, Seeman, Amir, Stalin. None of the Tamilians are ready to hear good things. Her family members are having good education. Some on is having coaching for IAS, two of her relatives are engineers.
How come Tamil Nadu is asking for exemption from NEET when all other states are accepted and prepared for the same? Why none of the Tamil Media asked the same question?
Tamil Nadu Gov got exemption for NEET only after a long battle last year. How come the students are not prepared for NEET? This year frankly speaking right from the beginning, the Central Gov is not for exemption. But Tamil Nadu politicians trying to gain popularity by opposing NEET. This is the fact. The who should be blamed?
Today Stalin lavishly stating Nirmala Seetharaman and Radhakrishnan IAS as murderers.
EPS, Vijayabhaskar and Co are lobbying for blocking NEET till the last moment. But they know the outcome. But showed that they are opposing without doing anything.
Tamil Nadu people have the habit of realising all the problems only with emotion but not practical.
How our tamilians are thinking. Here is the example. One of my colleaque is saying that Medical college lands were given by their paattans and Poottans. So NEET is against ethics. How stupid of them! How come they are thinking like these?
The only agenda for tamilians now a days to blame Modi and BJP for anything and everything.
Shame of being a Tamilian now.
Regretfully
S. Lakshmana Kumar
தாங்கள் சொல்வது நியாயமானதல்ல.செல்வி.அனிதா மத்திய அரசு பாடத்திட்டத்தில் படிக்கவில்லை. மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்தவா்களை மத்தியஅரசு பாடத்திட்டத்தில் தாயாாிக்கப்பட்ட வினாத்தாள் தோ்வை எழுதச் சொல்வது முட்டாள்தனம். மத்திய அரசுக்கும் அறிிவு இல்லை.நீதிமன்றத்திற்கும் அறிவு மழுங்கி விட்டது. நீதிபதி ஒரு வடிகட்டின முட்டாள்.மனிதாபிமானம் கிஞ்சித்தும் இல்லாத நீசன்.
அரசியல் குழப்பம் காரணமாக அதிமுக அரசு மத்திய அரசை எதிா்க்கவோ கட்டாயப்படுத்தவோ இயலவில்லை. அதிமுக அரசை தன் தன்பிடியில் வைத்திருக்க பாரதிய ஜனதா அரசு முயன்று வருகின்றது. பாரதீய ஜனதா -அதிமுக அரசியலில் மாணவா்களின் பாிதாப நிலையை யாரும் காணவில்லை.
மாநில அரசின் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்.
முறையாக ஆசிாியா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
ஆய்வகம் மற்றும் இதர வசதிகள் செய்ய அவகாசம் வேண்டும்.
இப்படி எவ்வளவோ காாியங்கள் செய்து பின்
நீட் தோ்வு கட்டாயம் என்று வைக்க வேண்டும்.
மத்திய அரசு பாடத்திட்டத்தில் படித்தவா்கள் அனைவரும் தனியாா் டயுசன் வகுப்புக்குச் சென்று படித்துதானே NEET/JEE/JIBMER/AIM etc தோ்வுகளை எழுதுகின்றாா்கள்.தனியாா் ட்யுசன் வகுப்புக்கு போகாதவா்கள் எத்தனை போ் தோ்ச்சி பெறுகின்றாா்கள்? புள்ளி விபரங்கள் தங்கள் கையில் உள்ளதா ? பாமர ஏழைகள் இப்படி தனியே டயுசன் வைக்க இயலுமா ? அனிதா போன்று உயா்மதிப்பெண் பெறக் கூடிய ஒரு தினக் கூலியிின் மகளுக்கு ட்யுசன் சாத்தியமா ?
தற்சமயம் 12 ம்வகுப்பு தோ்வு ஊழலுக்கு அப்பால்பட்ட முறையில் மிக அற்புதமாக நடத்தப்படுகின்றது. இதில் பெறும் தோ்ச்சி உண்மையானது.தகுதியை பிரதிபலிப்பது.
தங்கள் கருத்து பாரதிய ஜனதா செய்த தவறை மறைக்க எழுதப்பட்டுள்ளது.
தவறு செய்து விட்டீர்கள்.
செல்வி.ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் நீட் தோ்வு தமிழகத்தில் அமுல்
படுத்த மத்திய அரசு துணிந்து இருக்குமா ? நீதிமன்றம்தான் துணிந்து இருக்குமா ?
எத்தனை நீதீமன்ற தீா்ப்புகள் குப்பையில் கிடக்கின்றது? பணம் பெண் என்று எல்லா
வகை ஊழல்களிலும் நீதிபதிகள் ஈடுபட்டு வருவதாகவே செய்திகள் வருகின்றதே.யாா்
என்ன கீழித்து விட்டாா்கள். ?
ஜெயலலிதா இருந்திருந்தால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மாநில பாடத்திட்டப்படி மாணவா் சோ்க்கை கூட நடந்திருக்கும்.
திரு.லட்மணகுமாா் அவா்களே முதலில் ஆங்கிலத்தை முறையாக படித்து சாியாக கருத்துக்களை பதிவு செய்யுங்கள். தங்களின் ஆங்கிலப் புலமை படு மட்டம். இந்த நிலையில் நீட் தோ்வு குறித்து பொிய வியாக்கியானம் செய்ய வந்து விட்டீர்கள் முட்டாள்தனமானது.
திரு. பரணி அவா்களுக்கு
அருமையான பதிவு.அனிதா கோழை அல்ல.போராளி. அருமையான பதிவு. பாராட்டுக்கள். தமிழ இந்து வலைதளம் தவறு செய்து விட்டது.
நான் ஒரு விஷயத்தில் RV அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன்.ஏனெனில் நீட் விஷயத்தில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் ஒரு யோக்கியதையும் கிடையாது.அவரவர்களின் வசதிப்படி நிலைகளை எடுத்து இந்த வருடம் + 2 முடித்தவர்களை கிறுக்கர்களாக ஆக்கிவிட்டார்கள்.ம.வெங்கடேசன் அவர்களின் கருத்துக்களில் என்றுமே நேர்மை வெளிப்படும்(நீட் பற்றிய பல கருத்துக்கள் விளக்கங்கள் மிகவும் ஏற்புடையவை இந்த ஒன்றைத்தவிர)ஆனால் இந்த விஷயத்தில் பி.ஜே.பி கட்சியும் /அரசும் செய்த கடைசி நேர கந்தரகோளங்களை கண்டுக்காமல் விட்டுவிட்டார்.ஒரு வழியாக இந்த வருடம் நீட் அடிப்படையில்தான் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் ஒதுக்கப்படும் என்ற நிலை, உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிபட்ட பிறகு,சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி,மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,தமிழக அரசு இந்த வருடத்திற்கு மட்டும் விலக்கு கேட்டு ஒரு அரசாணை கொண்டு வந்தால் அதை மத்திய அரசு கண்டிப்பாக ஆதரித்து அதற்கு ஆவன செய்யும் என்றும்,இது பற்றி பிரதமரிடமும்,சம்பந்தப்பட்டவர்களிடமும் தானும்,பொன்.ரா.அவர்களும் பேசி ஏற்பாடு செய்துவிட்டோம் என்று கூறினார்.உடனே தமிழக அரசும் அதற்கான சட்ட வழி முறைகளை உடன் தயார் செய்து அவையும் மத்திய அரசின் உள்துறை,சட்டம்,மற்றும் சுகாதார துறைகளையும் ஒப்புதலையும் பெற்று விட்டது என்று தகவல் வந்த நிலையில்(இதற்காக – அரசாணைக்காக-உச்ச நீதி மன்றமும் நீட்வழக்கை ஒத்திவைத்த நிலையில்) திடீரென்று உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் ”அந்தர் பல்டி” அடித்து ஒரு மாநிலத்திற்காக மட்டும் விலக்கு கேட்க முடியாது என்றார்!(இதற்கு முன் தமிழக அரசுக்கு விலக்கு கேட்டு அரசாணை கொண்டு வருவதற்கு சட்ட தகுதி உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளதாக செய்தியும் வந்தது!)இதை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி மாநில பாடத்திட்ட மாணவர்களின் தலையில் மண்ணை கொட்டியது.இதற்கு பிறகு ஏன் இப்படி மத்திய அரசு முதுகில் குத்தியது? என்று கேட்டதற்கு பி.ஜே.பி மாநில தலைவி அது நிர்மலா சீத்தாராமனின் சொந்த நிலைப்பாடு என்று தடாலடி அடித்தார்!.நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சராக “பதவி உயர்வு” பெற்றிருக்கும் நிர்மலாசீத்தாராமன் அவர்கள் இந்த முரண்பட்ட நிலையை மத்திய அரசு எடுத்ததற்கான காரணத்தை கூற மறுக்கிறார்!(இடையில் என்ன நடந்ததோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்! )இப்படி மத்திய ,மாநில அரசுகளும் மற்றவர்களும் மாணவர்களை பாடாபடுத்திய நிலையில் நமது மாநில உயர் நீதி மன்ற நீதிபதி ஒருவரும் இது சம்பந்தப்பட்ட வழக்கில் முந்தின நாள் தமிழக அரசின் நிலையை வசமாக கண்டித்துவிட்டு நாளை விரிவான தீர்ப்பை வழங்குகிறேன் என்று கூறி மறுநாள் நான் என்ன செய்ய முடியும் ஏற்கனவே உச்ச நீதி மன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கி விட்டது என்று திருவாய் மலர்ந்தார்! அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல்,தமிழக மாணவர்கள் இத்தீர்ப்பினால் மனமுடைந்து தற்கொலை போன்ற தகாத முடிவுகளுக்கு போகவேண்டாமெனவும்,அரசும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று இலவச அறிவுரை வழங்கினார்!. எப்பேர்ப்பட்ட தமிழ் நாட்டில் பிறக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறோம்! என்பதை தவிர சொல்ல என்ன இருக்கிறது இனி?
Mr. Sukumar, Thanks for your comments. I agreed that there may be mistakes in my way of writing. But I think I dont need to be an orator in english to express my view or opinion.
தமிழகத்தில் சென்ற ஆண்டு நீட் தேர்வில் இருந்து விதி விலக்கு கூறியபோதே , ஒரே ஒரு ஆண்டுக்குத்தான் விதி விலக்கு அளிக்கமுடியும். அடுத்த ஆண்டு நிச்சயம் விதி விலக்கு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லியது. அதே போல சென்ற ஆண்டு விதி விலக்கு பெற்ற ஏழு மாநிலங்களில் தமிழகம் தவிர எஞ்சிய ஆறு மாநிலங்களும் தங்கள் மாநில கல்வி பாட திட்டத்தில் தக்க மாறுதல் செய்துவிட்டன. தமிழகம் மட்டும் அம்மா மறைந்ததால், சின்னத்தை இழந்த ஆளும் கட்சியும், யார் எவ்வளவு நாள் என்று தெரியாமல் மன்னார்குடி குடும்பத்தினரின் ஏவுகணை வீச்சில் கட்சியே சின்னாபின்னமாகி மக்கள் நலன் பற்றி சிந்திக்கவே வழி இல்லாமல் செய்துவிட்டனர். ஆர் கே நகர் இடைத்தேர்தலையே நடத்த முடியாமல் போனது. அப்படி இருக்கையிலே இந்த நீட் தேர்வு உண்டா இல்லையா என்று கவலைப்பட யாருமே இல்லை. ஆனால் மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் முன்னாள் கழக அமைச்சர்கள் தங்கள் நன்கொடை மற்றும் அன்பளிப்பு பணம் வரவேண்டியது கோவிந்தா ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் , எப்படியாவது நீட்டி தடுத்துவிட வேண்டும் என்று அனிதா என்ற மறைந்த மாணவியின் பெயரில் வழக்கு தொடுத்து , நீட்டுக்கு எதிராக செயல்பட்டனர். ஆனால் உச்ச நீதிமன்றம் குறுக்கே வந்து காரியத்தை கெடுத்து விட்டது.அதே சமயம் உச்ச நீதிமன்றத்தை திட்டமுடியாது. எனவே பார்த்தார்கள் இருக்கவே இருக்கிறது யாரைத்தான் திட்டுவதோ பேதை நெஞ்சம் என்று மோடியையும், மத்திய அரசையும் வாரிக்கொட்டுகிறார்கள். நீட் எதிர்ப்பாளர்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டது யார் தெரியுமா ? தமிழக ஸ்டேட் போர்டு சிலபஸில் படித்த தமிழ் நாட்டு மாணவர்கள் தான். அவர்கள் தான் நீட் தேர்வில் 6 3 % வெற்றி பெற்றதுடன், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறவே முடியாது என்று பொய்ப் பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சியினரின் மூக்கை உடைத்துவிட்டார்கள். சமச்சீர் என்ற குழப்படிக் கல்வி முறையில் படித்த மாணவர்களே நீட் தேர்வில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பிடித்துவிட்டால், சற்று சிந்தித்துப் பாருங்கள், சி பி எஸ் ஈ சிலபஸ் தமிழக அரசு பள்ளிகளில் பின்பற்றப்பட்டு இருந்தால், தமிழக மாணவர்கள் நூற்றுக்கு நூறு (100 % ) இடங்களையும் ஒட்டுமொத்தமாக வென்றிருப்பார்கள். நிர்மலா சீதாராமன் அவர்கள் வாக்கு கொடுத்தபடி , மத்திய அரசின் இரு துறைகள் நீட் தேர்வுக்கு இந்த ஒரு ஆண்டுக்கு தமிழக அரசுக்கு விதி விலக்கு கொடுக்கலாம் என்று கருத்து தெரிவித்து பரிந்துரை செய்தும் கூட , இறுதியில் தமிழகத்துக்கு விதி விலக்கு கிடைக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் தமிழகத்தில் இந்த விதிவிலக்கு கோரும் வேலையை , நீட் தேர்வு நடக்கும் முன்னரே கவனிக்காமல் , சின்னத்தாய் கூவாத்தூர் ஆட்டங்கள் ஆடியதில் முழுக் கவனம் செலுத்தியதால், ஒரு அரசியல் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டு , கோட்டை விட்டுவிட்டார்கள். ஆனால் எந்த நீதி மன்றமும் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து ஒரு போட்டித்தேர்வினை எழுதிய பிறகு, அந்த தேர்வின் முடிவை நிராகரித்து, பிளஸ் 2 தேர்வின் முடிவின் அடிப்படையில் மருத்துவக் கல்வி அட்மிஷனை நடத்த அனுமதிக்காது. நீட் தேர்வு நடக்கும் முன்னரே இதனை செய்திருக்கவேண்டும். மேலும் உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டே கடும் எச்சரிக்கை கொடுத்திருந்தது. ஏனெனில் நீட் ஆரம்பித்து 2012-13 இல் இருந்தே ஐந்து ஆண்டுகளாக தூங்கிவிட்டு, இப்போது முட்டி மோதுவதில் ஒரு பொருளும் இல்லை. இன்னொரு உண்மை என்னவெனில் , ஸ்டேட் போர்டு மாணவர்களில் கூட மேல்நிலை இரண்டு வருட பாடங்களையும் படித்த மாணவர்கள் பெருவெற்றி பெற்றனர். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடங்களை மட்டும் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. தமிழக மாணவர்களை சி பி எஸ் ஈ சிலபஸ் படி பயிற்ருவித்தால் வரும் ஆண்டில் நூறு சதவீத இடங்களையும் தமிழக மாநில கல்வி வாரிய மாணவர்களே கைப்பற்றுவார்கள்.இது உறுதி.
The people who were comment about the NEET VS Anitha article not the follower of Tamil Hindu net readers. They all are anti nationalist and separatist. They are indirectly supporting Medical Collage Owners. M. Venkatesh Ji don’t bother about such coward and insincere people.
எனக்கும் தோன்றியது… நீட் தேர்வு – அனிதா தற்கொலை கட்டுரைக்கு வந்த கருத்துக்களை படித்தபின்பு மே 17 இயக்கம் – சைமன் செபாஸ்டின் சைமன் வலைதளங்களுக்கு தவறுதலாக வந்துவிட்டேனா!
திரு பரணி அவர்களின் கருத்து முற்றிலும் தவறானது.
” இம்முறையும் அது தவிர்க்க படும் என்று நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நியாயமானது தான்.”-
யார் காதில் பூச்சுற்றுகிரீர்கள் ? லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுதி , அதிலும் 63 விழுக்காடு இடங்களை பிடித்து, தமிழக ஸ்டேட் போர்டு மாணவர்கள் வெற்றிகரமாக மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்துள்ளனர்.அப்படி இருக்கும் போது, நீங்கள் சொல்வது யாரை ஏமாற்ற ? தவறாக வழி நடத்துவது சரி அல்ல.
” நீட் தேர்வு எழுதும் நாள் வரை மக்களிடமும் ஆசிரியர்களிடமும் அரசியல் வாதிகளிடமும் குழப்பமும் நம்பிக்கையும் இருந்தது தமிழ் நாடு அறியும்..”-
ஆமாம் .அரசியல்வாதிகள் என்று சொல்லாமல், தனியார் மருத்துவக்கல்லூரி நடத்தும் முன்னாள் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவர்களிடம் சகாயம் பெறும் நண்பர்கள் என்று சொல்லுங்கள். தனியார் மருத்துவக் கல்லூரி நடத்துவோருக்கு வசூலுக்கு வழி இல்லாமல் போய்விட்டது. அந்த வயிற்று எரிச்சலில் அவர்கள் பிளஸ் 1 பாடங்களை படிக்காமல் பிளஸ் 2 பாடங்களை மட்டும் படித்த மாணவர்களை தூண்டிவிட்டு கலாட்டா செய்கிறார்கள் என்பதே உண்மை. உண்மையான மாணவர்கள் மருத்துவ கல்வி பெற தகுதியான மாணவர்கள் போராட்டத்தில் மிக குறைவு. பள்ளி கல்லூரிகளில் வாணிகம், அரசியல், சமூகவியல் , மொழிப்பாடங்கள் ஆகியவற்றை பிளஸ் 2 வில் படித்த மாணவர்கள் எல்லாம் சேர்ந்து போராட்டம் என்ற பெயரில் வெளியே வீண் பொழுது கழிக்கிறார்கள் .
கொலை அல்லது தற்கொலையை தியாகம் என்று சொல்லி கேவலப்படுத்துகிறார் பரணி. அனிதாவின் கனவு ஒன்றும் சிதைந்துவிட வில்லை. இன்னமும் இரண்டு முறை அவர் இதே நீட் தேர்வை எழுத வாய்ப்பு உள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் , தற்கொலை என்பது தவறான முடிவு. அதற்கு அனிதாவை தூண்டியவன் படு நாசமாய்ப்போவான்.
அது சரி , பரணி அவர்களே, மிக முக்கியமான யூபிஎஸ்சி நடத்தும் ஐ ஏ எஸ் போன்ற தேர்வுகளில் கூட , சில மாணவர்கள் பல முறை முயன்று தான் தாங்கள் விரும்பிய பணியை பெறுகிறார்கள். ஐ பி எஸ் தேர்வான மாணவர்கள் பலர் , கூடுதல் ராங் வேண்டும் என்று ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீண்டும் அதே தேர்வுக்கு மிக கடினமாக உழைத்து தான் யூ பி எஸ் சி மூலம் ஐ ஏ எஸ் பணியை பெற்றிருக்கிறார்கள். ஒரே முயற்சியில் பெறுவோர் சிலரே. அப்படி செய்வதே முறை மற்றும் விடா முயற்சி ஆகும். அனிதா தனக்கு இருந்த பாக்கி இரண்டு வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை.அவர் செய்த தவறை தியாகம் என்று சொன்னால் அது இளைய தலைமுறைக்கு நீங்கள் காட்டும் நல்ல வழி ஆகாது. தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்கு சாதகமாகவும், பதவியை பிடிக்க துடிக்கும் தமிழினத்துரோக எதிர்க்கட்சிகளுக்கும் கூலிகளாக இருப்போர் தான் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். இதுவே உண்மை.
ஆர் வி
\\ தமிழ் ஹிந்து ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறது? \\
அப்படி இங்கு கருத்துப்பகிரும் பலரும் கருதவில்லை.
\\ ஒரு இளம்பெண்ணின் தற்கொலை. எந்த வித முகாந்தரமும் இல்லாமல் அது கொலையாக இருந்திருக்கலாம் என்று மலினப்படுத்த உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? \\
தற்கொலை என்று ஊடகங்களும் நீங்களும் உரத்துச் சொல்லுவதால் இதை தற்கொலை என்று ஏன் ஏற்க வேண்டும்? ஊடகங்களும் நீங்களும் எப்படி ஒரே சமயத்தில் புலீஸ், ந்யாயாலயம், ஜட்ஜ் என பன்முனை வித்தகர்களாக ஆகிவிடுகிறீர்கள்? இந்தப்பெண்ணின் சாவை எந்த முகாந்தரத்தின் பாற்பட்டு இந்தப்பெண்ணின் சாவை தற்கொலை என்று எப்படி துப்பறிந்து தீர்ப்பளித்திருக்கிறீர்கள் என்று கேழ்க்கவும் முடியும்.
கொலையாக இருக்கலாம் என்று சம்சயம் எழுப்பப்படுகிறது. மலினப்படுத்தப்படவில்லை. கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான முகாந்தரங்கள் யாவை என்பதும் வ்யாசத்தின் ஆரம்பத்தில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், மாறாக 1176 மதிப்பெண் பெற்ற அளவுக்கு படிப்பில் சூட்டிகையான ஒரு பெண் ந்யாயாலயம் சென்று தனது தரப்பிற்காக வழக்காடிய துணிவுள்ள ஒருபெண்………… தற்கொலை செய்து கொண்டாள் என்பது தான் தரம் தாழ்ந்து மலினப்படுத்தும் விஷயம். அறிவும் துணிவும் உள்ள இந்தப்பெண்ணை எந்த வித முகாந்தரமும் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டாள் என்று சொல்லுவது தான் தரம் தாழ்ந்த செயற்பாடு. அப்படிச் சொல்வதற்குத் தான் கூச வேண்டும். அதற்கு நீங்களோ அல்லது ஊடகங்களோ இதுவரை எந்த முகாந்தரமும் முன் வைக்கவில்லை.
ஆனால் இது ஏன் தற்கொலையாகக் கருதப்படக்கூடாது என்பதற்கு பற்பல முகாந்தரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன இந்த வ்யாசத்தில்.
பச்சமுத்து போன்ற நபர்களுடன் பாஜக கூட்டணி வைத்திருந்ததை விமர்சனம் செய்வதில் எனக்கு உடன்பாடு உண்டு. தமிழ் ஹிந்து இதை ஏன் செய்யவில்லை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் ஹிந்து என்பது ஒரு தனிநபர் இல்லை. இங்கு பங்களிக்கும் அனைவரும் அதன் அங்கம். அவ்வாறு சமயத்தில் விமர்சனம் செய்யாத ………. அதற்காக ஒரு பதிவிடாத நாம் அனைவருமே அதற்காகத் தலைகுனியவேண்டும். ம.வெ இதற்காக தனியாக குற்றம்சாட்டப்படுவது தேவையில்லாதது.
பாஜகவும் தமிழ் ஹிந்துவும் ஒரே ஸ்தாபனம் கிடையாது. பாஜகவின் அனைத்து முடிவுகளுக்கும் தமிழ் ஹிந்து எப்படி பொறுப்பேற்க முடியும்? ஏன் பொறுப்பேற்க வேண்டும்? சங்க பரிவாரத்தின் அங்கங்களில் பாஜகவும் ஒன்று. தமிழ் ஹிந்துவும் சங்க பரிவாரத்தில் ஒரு அங்கம் என்பது புரிதல். நிச்சயமாக எனக்குத் தெரியாது. பாஜக எனும் கட்சியின் முடிவுகளை தனிப்பட்ட முறையில் ம.வெ பொதுதளத்தில் விமர்சிக்க வேண்டும் என்பது எனது எதிர்ப்பார்ப்பு கிடையாது. அது சரியானதும் கிடையாது. எந்த ஒரு கட்சியின் எந்த ஒரு முடிவையும் அக்கட்சியைச் சார்ந்த ஒரு தனிநபர் விமர்சிப்பதில்லை என்பது பொதுவில் மீறப்படாத ஒரு எழுதப்படாத விதி.
தமிழ் ஹிந்துவில் பங்குபெறுவோர் யாராயினும் அவர்களுக்கு அரசியல் கட்சி முத்திரை குத்துவது குறுகிய புத்தியை மட்டுமே காட்டுகிறது. தமிழ் பேசும் இந்துக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். இந்து சமயத்தின் சிறப்பினையும், அதன் தற்கால பிரச்சினைகளையும் அழகாக தொகுத்து பகிர்கிறார்கள். தமிழ் பேசும் மனிதர்கள் அதிகம் வாழும் பகுதி உலகிலேயே தமிழகம் தான் என்பதால் , தமிழகத்தில் உள்ள மக்களின் அரசியல், கலை , கலாச்சாரம் , ஆன்மிகம், மொழி, எல்லாமே இங்கு விவாதிக்கப்படுகிறது. பி ஜெ பி காரர்கள் என்று சொன்னால் எனக்கு தெரிந்து ம வெ போல ஒரு சிலர் தான் பார்க்கிறேன். மற்றவர்கள் எல்லாம் அரசியல் சாராத தமிழக இந்துக்களே.
The seeds to protest against NEET stems from the faculty and management of Loyola College. They often induce students against union and state Govts since they are very strongly backed by DMK, Thirumavalavan, Seeman, Vaiko, Tamil partition ists
The Christian missionaries including the management of Loyola college and with that of staff spoke very badly about Nirmala Seetaraman on Anita’s suicide issue. They receive several grants from the central govt like Ugc, DSt, DBT etc for funds to facilitate educational activities. But, one will observe all these funds are diverted for various other Purposes. The Central investigating team will seriously take this matter and balcklist these institutions. They enjoy 200% tax exemption, centre of excellence etc and these very rare privileges were given to the college by previous UPA govt. Recently, they received 3 criteria from present central govt under UGC Koushal programme. Please stop all these funds as they are not deserving and they do more harm to the nation with their dangerous ideologies. No Hindus are given respect or position there. One cannot become a faculty there if he or she is a Hindu. Else, they convert them into Christians.
மாநில அரசின் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்.தகுதியான ஆசிாியா்கள் நியமிக்ப்பட வேண்டும்.
முறையாக ஆசிாியா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
ஆய்வகம் மற்றும் இதர வசதிகள் செய்ய அவகாசம் வேண்டும்.
இப்படி எவ்வளவோ காாியங்கள் செய்து பின்
நீட் தோ்வு கட்டாயம் என்று வைக்க வேண்டும்.
இந்த பிரச்சனைக்கு விடை என்ன ? இவ்வளவு அவசரம் காட்டினால் மாணவா்கள் தாங்க முடியுமா.மாநில பாடத்திட்டத்தில் படித்தவா்கள் நிறைய போ் நன்கு தோ்ச்சி பெற்று விட்டாா்கள் என்ற சப்பைகட்டு சாியான வாதம் அல்ல.பொது நியதிபடி நடக்க வேண்டும்
தமிழ் குருவி முனியனிலிருந்து ,மூத்திரசந்தில்,கூட்டம் போட்டு ”அடுத்த முதலமைச்சர் நான்தான் ,உறவுகளே,ஹஹீஹ்ஹே”என்று உளறும் தீவட்டி தடியன்கள் வரை ஒரே கூமுட்டை வாதத்தை கூசாமல் வைக்கிறார்கள்,[இங்கே பின்னூட்டம் போடும் சிலரும்],அதாவது மருத்துவத்தில் எங்கள் மாநில பாடத்திட்டம் பின்பற்ற வேண்டும் ,மத்திய நீட் ‘தேவையில்லை!என்று.எத்தனை அய்யோக்கிய தனம்?
அதுவே ,இங்கிலீஸ் மருத்துவம்,வெள்ளைக்காரனிடம் எடுத்த பிச்சை ,அதிலென்ன மாநில சிலபஸ் ?ஒரு வேளை,கழக கண்மணிகளே மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு ,பாட திட்டத்தை எழுத்துவார்களோ?இங்கிலாந்து,அமெரிக்கா,உள்ளிட்ட நாட்டு பரிசைகளிலும் கலந்து கொண்டு நம் மருத்துவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் ,அவர்களிடம்தான் சிகிச்சை பெறுவேன்’என்று தீர்மானிக்கும் உரிமை நோயாளிகளுக்கு உண்டு.
//மருத்துவத்தில் எங்கள் மாநில பாடத்திட்டம் பின்பற்ற வேண்டும் ,மத்திய நீட் ‘தேவையில்லை!என்று.எத்தனை அய்யோக்கிய தனம்?//
அயோக்கியத்தனமாகாது. மாநிலங்கள் தங்கள்தங்கள் பாடமுறைகளை வைத்திருக்க, மத்திய அரசு தன் பாடமுறை (சி பி எஸ் சி) அடிப்படையாக வைத்த தேர்வை இந்தியா முழவதும் திணிப்பதுதான் அயோக்கியத்தனம்.
நேர்மை என்னவென்றால், மாநில பாடமுறைகள் அனைத்தையும் சி பி எஸ் சிக்கு நிகராக கொண்டுவரவேண்டும். அதன் பின்னர் பொதுத்தேர்வு சரியே. அது நடக்கும் வரை எதிர்க்கட்சிகளின் கோரிக்கை சரியே.
அடாவடியாக எழுதிவிட்டால் உண்மை பொய்யாகவோ, பொய் உண்மையாகவோ ஆகாது.
// அதாவது மருத்துவத்தில் எங்கள் மாநில பாடத்திட்டம் பின்பற்ற வேண்டும் ,மத்திய நீட் ‘தேவையில்லை!என்று.எத்தனை அய்யோக்கிய தனம்? //
இப்படிக்கூடவா அபத்தமாக சொல்வீர்கள் ? கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில்; படிப்பது பெரும்பான்மையோர் தமிழக பள்ளிக்கல்வித்திட்டத்தில் பயின்ற தமிழக மாணவர்கள். அவர்களுக்கு எதற்கு மத்திய பாடத்திட்டத்தின்கீழான நுழைவுத்தேர்வு ? ஏன் இதுவரை நீட் தேர்வு இல்லாமல் மருத்துவம் படித்த மாணவர்களெல்லாம் மாணவர்களில் சேர்த்தி இல்லையா ?
இந்த அகில இந்திய நுழைவுத்தேர்வு காலத்தின் கட்டாயம். இந்திராகாங்கிரசும், திமுகவும் சேர்ந்து தான் இந்த அகில இந்திய நீட் நுழைவு தேர்வை கொண்டுவந்தனர். இந்த தேர்வு வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது இதனை எதிர்த்து LARGER BENCH-ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இதனை எடுத்து சென்றதும் இந்திரா காங்கிரஸ் ஆட்சியில் தான். அதன் பின்னரே அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து அக்குவேறு ஆணிவேராக அலசி நீட் கட்டாயம் என்ற நிலையை உருவாக்கியது. மேலும் தமிழக அரசின் சமச்சீர் என்ற மோசடி கல்வி முறையில் நடந்தது என்ன தெரியுமா நாமக்கல் கோழி முட்டை பள்ளிகள் என்ற அடையாளத்தால் குறிப்பிடப்படும் பல்வேறு தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பாஸ் செய்த மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு வருடங்களுமே பிளஸ் 2 பாடத்தை மட்டுமே நடத்தி, பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண் பெற செய்து எல்லா மெடிகல் காலேஜ் சீட்டுக்களிலும் மற்ற மாவட்ட பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெறமுடியாதபடி தடுத்து, எங்கள் பள்ளியில் படித்தால் தான் மெடிகல் சீட் நிச்சயம் என்று சொல்லி, லட்சக்கணக்கான கல்விக்கட்டணத்தை கறந்தார்கள். இப்போது நீட் தேர்வால் ஒதுக்கீட்டு கொள்கையில் எந்த பாதிப்பும் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்கு நட்டம். பொன் முத்துக்குமார் போன்றவர்கள் ஒன்று புரிந்து கொள்ளாமல் எழுதுகிறார்கள். அல்லது வேறு யாரையோ காப்பாற்ற முயலுகிறார்கள். சுமார் 70 லட்சம் முதல் ஒரு கோடி வரை லஞ்சம் என்ற நன்கொடை பெற்று ஏழைகளால் மருத்துவக் கல்வி படிக்க முடியாது. இந்த நீட் தேர்வால் ஏழைகள் ஏராளம் பயன் பெற்றுள்ளனர். பிறந்து இரண்டு வருடம் ஆனவுடனேயே ஒரு குழந்தைக்கு பிரிகேஜி வகுப்பில் சேர்க்க நுழைவு தேர்வு நடத்தும் நாட்டில்,பல உயிர்களை காப்பாற்றும் மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு வேண்டாம் என்று சொல்வதும் ஒரு பெரிய கூத்து இல்லையா ? அனிதா தற்கொலை செய்து கொண்டதால், நீட் தேர்வு வேண்டாம் என்றால், ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்தவுடனும், பிளஸ் 2 ரிசல்ட் வந்தவுடனும் மீடியாவில் குறைந்தது பத்து மாணவர்களின் தற்கொலை செய்தியை படிக்கிறோமே. பத்து மாணவர்கள் தற்கொலைக்கு காரணமான பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முறையை உடனே ஒழித்துவிட முடியுமா ? வெட்கங்கெட்டவர்கள் தான் இப்படி மோசடியான விதத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கூக்குரல் இடுகிறார்கள். அதிலும் நீட் தேர்வை அகில இந்திய அளவில் சட்டம் கொண்டுவந்து , உச்ச நீதிமன்றத்தில் SINGLE JUDGE- இந்த தேர்வு வேண்டாம் என்று சொன்ன பின்னர், மேல்முறையீடு செய்து ,இந்த நீட் தேர்வு கட்டாயம் ஆக வழிவகுத்த இந்திரா காங்கிரஸ் திமுக ஆகிய இருகட்சிகளும் இப்போது மாறுவேடம் தரித்து , நீட்டி எதிர்ப்பதாக கோஷம் போடுவது யாரை ஏமாற்ற ? தனியார் மருத்துவக் கல்வி தந்தைகளின் பணம் இதில் நன்றாக விளையாடுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. திக, திமுக, மே 17 , நாம் தமிழர் ஆகியவை மக்களை தமிழகத்தில் தவறாக வழி நடத்துகின்றன என்பதே உண்மை.
தமிழ் நாட்டு நோயாளிக்கு ஏன் இங்கிலாந்து மருத்துவரையும் ,எய்ம்ஸ் மருத்துவர்களையும் கொள்ளை பணம் செலவழித்து கூப்பிடுகிறீர்கள்? நாங்கள்தான் சிலபஸ் எழுதுவோம் என்று அடம் பிடித்தால் ,சித்த மருத்துவத்திற்கு வேண்டுமானால் இஷ்டப்படி சிலபஸ் எழுதிக்கொள்ளலாம் ,எவனும் கேட்கமாட்டான்,
திரு வெங்கடேஷ் , சித்த மருத்துவம் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. சித்தா மற்றும் ஆயுர்வேதம் இரண்டுமே நிறையப் படிக்கவேண்டிய விஷயம். முழுவதும் படிக்க உண்மையாகவே ஆறு ஆண்டுகள் தேவைப்படும்.ஐம்பது மார்க் வாங்கி பாஸ் பண்ணிய டாக்டர்கள் நோயை குணப்படுத்துவது மிகவும் சிரமம்.
எங்கள் பாடத்திட்டத்தைத்தான் படிப்போம்,என்கிற சுயமரியாதை திலகங்களுக்கு ஓர் எளிய பரிந்துரை!அடுத்தவனை கொலை செய்வதுதானே குற்றம் ?தற்கொலை செய்து கொண்டால் வழக்கு போட முடியாதல்லவா?
அன்புள்ள வெங்கடேஷ்,சித்த மருத்துவம் பற்றி, தங்கள் சித்தம் போன போக்கில் பேச வேண்டாம்.
// தமிழ் நாட்டு நோயாளிக்கு ஏன் இங்கிலாந்து மருத்துவரையும் ,எய்ம்ஸ் மருத்துவர்களையும் கொள்ளை பணம் செலவழித்து கூப்பிடுகிறீர்கள்? நாங்கள்தான் சிலபஸ் எழுதுவோம் என்று அடம் பிடித்தால் ,சித்த மருத்துவத்திற்கு வேண்டுமானால் இஷ்டப்படி சிலபஸ் எழுதிக்கொள்ளலாம் ,எவனும் கேட்கமாட்டான், //
எதுகுறித்து என்னவிதமாக உரையாடுகிறோம் என்ற பிரக்ஞையின்மை எல்லை மீறிப்போனால் இப்படித்தான் ஆகும். வாழ்த்துக்கள்.
// எங்கள் பாடத்திட்டத்தைத்தான் படிப்போம்,என்கிற சுயமரியாதை திலகங்களுக்கு ஓர் எளிய பரிந்துரை!அடுத்தவனை கொலை செய்வதுதானே குற்றம் ?தற்கொலை செய்து கொண்டால் வழக்கு போட முடியாதல்லவா? //
யப்பா யப்பா யப்பா ஜொலிக்கிறீர்கள். 🙂
// நாமக்கல் கோழி முட்டை பள்ளிகள் என்ற அடையாளத்தால் குறிப்பிடப்படும் பல்வேறு தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பாஸ் செய்த மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு வருடங்களுமே பிளஸ் 2 பாடத்தை மட்டுமே நடத்தி, பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண் பெற செய்து எல்லா மெடிகல் காலேஜ் சீட்டுக்களிலும் மற்ற மாவட்ட பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெறமுடியாதபடி தடுத்து, எங்கள் பள்ளியில் படித்தால் தான் மெடிகல் சீட் நிச்சயம் என்று சொல்லி, லட்சக்கணக்கான கல்விக்கட்டணத்தை கறந்தார்கள். //
அதற்கு நீட்தான் ஒரே தீர்வா ? ஆமெனில், இதோ பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என்று ஆகியிருக்கிறது. எனவே மேற்படி “கோழிப்பண்ணை” பள்ளிகள் பதினொன்றாம் வகுப்பை புறக்கணிக்கவே முடியாது, நடத்தியே ஆகவேண்டும். எனில் நீட் தேர்வு தேவையில்லைதானே ?
மாநிலம் முழுதும் வேறொரு பாடத்திட்டத்தை பின்பற்றிக்கொண்டிருக்கும்போது தேர்வை மட்டும் வேறொரு பாடத்திட்டத்தின்படி நடத்துவது எப்படிப்பட்ட சிரமம் என்று உங்களுக்குக்கூடவா தெரியவில்லை ? ஏன் நமக்குத் தேவையான தரமான நுழைவுத்தேர்வை நம்மால் வடிவமைத்துக்கொள்ளத்தெரியாதா இல்லை முடியாதா ?
நுழைவுத்தேர்வு கூடாது என்று சொல்லவில்லை. மாநில அரசின் பாடத்திட்டத்தை கண்டே கொள்ளாமல் கண்ணை கட்டிவிட்ட குதிரை கணக்காக ‘பொத்திகிட்டு நா சொல்றத கேளு’ என்றவிதமான ஆதிக்க மனோபாவம்தான் குமட்டவைக்கிறது. எனவே நான் வேறு யாரையும் காப்பாற்ற (ஒரே நகைச்சுவைதான் போங்கள்) முயலவில்லை.
அனிதா தற்கொலையால் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லவில்லை. அது ஒரு முகாந்திரம், அவ்வளவுதான். அதுவே காரணமல்ல.
திரு பொன் முத்துக்குமார் நீட் தேர்வுக்கு எதிராக நீங்கள் எடுத்து வைத்துள்ள வாதங்கள் அனைத்துமே சரி அன்று. இனிமேல் நடத்தப்போவதாக சொல்லி இருக்கின்ற 11 – ஆம் வகுப்பு தேர்வு பற்றி சொல்லும் நீங்கள் , இவ்வளவு நாட்களாக அதனை நடத்தாமல் தான் கல்விநிலை தாழ்ந்தது என்ற உண்மையை மறைப்பது ஏன்.
நீட் பற்றிய எதிர்ப்பாளர்கள் பல விஷயங்களை மூடி மறைக்கின்றனர் மற்றும் நீட் பற்றி ஏராளம் பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள்.
1.நீட் தேர்வை பற்றி முதலில் சட்டம் கொண்டுவந்தது இந்திரா காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு தான் என்பதை வசதியாக எங்குமே பேசுவதில்லை. அப்போது வாய் மூடி ஆதரவு தந்துவிட்டு , மீத்தேன், நெடுவாசல், என்று எதுவாயினும் கை எழுத்துப்போட்டுவிட்டு, பின்னர் எதிர்க்கட்சி ஆனவுடன் எதிர்ப்பது காங்கிரஸ் மற்றும் திமுகவினர் தான். அவர்கள் செய்வது அரசியல்.
2.இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி வாரியங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வுபற்றி பல விஷயங்கள் வெளி வந்துவிட்டன. ஒரு உதாரணம் பாருங்கள் பிளஸ் 2 தேர்வில் என்ன கேள்வி கேட்கவேண்டும் என்று ஒரு ப்ளூ பிரின்ட் போட்டு எல்லா பள்ளிகளுக்கும் கொடுத்துள்ளார்கள். அந்த ப்ளூ பிரிண்டுக்குள் தான் கேள்வி கேட்கவேண்டும். அதாவது பிளஸ் 2 வில் கூட எல்லா பாடங்களையும் படிக்க தேவை இல்லை. ஸ்டேட் போர்டில் நடத்தும் பரீட்சி பிளஸ் 2 இந்த லட்சணம் தான். பிளஸ் 1 பாடங்களை படிக்காமல் பிளஸ் 2 விழும் கூட ப்ளூ பிரின்ட் எனப்படும் தேர்ந்தெடுத்த பகுதிகளை மட்டுமே திரும்ப திரும்ப படித்து, அதில்தானடா கேள்வி வரும். வேறு எதையும் படிக்காதே என்பது ஒரு படிப்பா ? இப்படி படித்து வரும் ஒரு மாணவர் மருத்துவர் ஆனால் முத்துக்குமார் போன்ற நண்பர்கள் அவரிடம் சிகிச்சை பெறலாம் ஆனால் பொதுமக்கள் உயிருக்கு இது ஆபத்து.
3 .பல மாநிலங்களிலும் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறுவோர் ஏராளம் வித்தியாசமாக இருக்கும். அதனை வைத்து அவர்களை சமப்படுத்துவது என்பது சரி அல்ல. ஒரிஸ்ஸா போர்டில் கணிதத்தில் முதல் மதிப்பெண்ணே 91 என்றால் தமிழகத்தில் கணிதத்தில் 2 0 0 க்கு 2 0 0 வாங்கியவர்கள் பத்தாயிரம் பேர் இருப்பார்கள்.இதனால் தான் இதற்கு weightage கொடுத்தாலும் சரியாக வராது. ஏனெனில் ஒரிஸ்ஸாவில் இரண்டாவது மதிப்பெண் கணிதத்தில் 84- என்று இருக்கும்.
4. பல்வேறு மாநில பாடத்திட்டங்கள் ஒரே மாதிரி இல்லாததால் தான் , மற்றும் தேர்வுகளும் ஒரே மாதிரி இல்லாததால் தான் மருத்துவ படிப்புக்கு அவசியம் நீட் தேவை என்பதை உணர்ந்து இந்த மாற்றங்களை அரசும், உச்ச நீதிமன்றமும் சேர்ந்து தான் செய்துள்ளன.
5.பாடத்திட்டத்தில் உலகெங்கும் ஏராளம் முன்னேற்றம் வந்துகொண்டே இருக்கிறது. நான் பி யு சியில் படித்த கணிதப்பாடத்தை என் மகன் இப்போது எட்டாம் வகுப்பிலேயே படிக்கிறான். இதுதான் உண்மை. நான் கூடுதல் பாடங்களை படிக்க மாட்டேன் என்று சொன்னால் , நீ எதற்கும் லாயக்கில்லை என்று உலகமே நம்மை ஒதுக்கி வைத்து விடும்.
6.அது சரி , தெலுங்கன் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், கன்னடன் கர்நாடகத்திலும் , மலையாளி கேரளாவிலும் குடிக்கிறான் , அப்படி இருக்கும் போது தமிழன் மட்டும் சுற்றி எரியும் நெருப்பிற்கு மத்தியில் எரியாத கற்பூரமாக எப்படி இருக்க முடியும் என்று மற்ற மாநிலங்களை சுட்டிக்காட்டி , தமிழன் குடிப்பதற்காக கள் மற்றும் சாராயக் கடைகளை திறந்தாரே கட்டுமரம், அப்போது அவர் அறிவுரைப்படி , குடிக்க ஆரம்பித்த நம் மக்கள், அதே ஆந்திராக்காரனும், கர்நாடகாக்காரனும், மலையாளியும், நீட் தேர்வை எதிர்க்கவில்லை, நவோதயா பள்ளிகளை தங்கள் மாநிலங்களில் உருவாக்கி படிக்கிறார்கள், அது மட்டுமல்ல அவர்கள் எல்லாருமே தங்கள் பள்ளிகளில் இந்தியை ஒரு கட்டாயப்பாடமாக அல்லவா வைத்துள்ளனர். குடிக்கு மட்டும் பிற திராவிட மாநிலங்களை உதாரணம் காட்டி , தமிழனை மது அருந்த வைத்த கட்டுமரம் , அதே போல மற்ற மாநிலங்களை காட்டி , நவோதயாவை அனுமதித்து, நீட் தேர்வை ஆதரித்து, இந்தியும் படிக்க வைத்திருந்தால் தான் நியாயம் ஆகும். இவர்கள் குடும்பங்கள் தான் சாராய ஆலைகளை ஏராளம் நடத்துகின்றனர். கோடிக்கணக்கில் சம்பாதிக்க கொள்ளை அடிக்க மதுக்கடைகளை திறந்தார்கள். இப்போது நீட் , நவோதயா , இந்தி ஆகியவற்றை மட்டும் எதிர்ப்பதற்கு காரணம், இவர்கள் கட்சி முக்கியப்பிரமுகர்களும் , முன்னாள் அமைச்சர்களும் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் வியாபாரம் கெட்டுவிடுமே என்ற பயம் காரணமாக நீட்டையும், ஏழைகள் மலிவு கட்டணத்தில் படித்தால் போட்டிக்கு வந்துவிடுவார்களே என்ற அச்சத்தில் நவோதயாவையும், என் பேரன்கள் மட்டும் தான் இந்தி படித்து மத்திய கேபினெட் அமைச்சர் ஆகவேண்டும் என்று நினைப்பதாலும், மற்றவர் இந்தி படித்தால் அவர்கள் கேபினெட் அமைச்சர் ஆகிவிடுவார்களே என்ற வயிற்று எரிச்சலிலும் தான் கட்டுமரம் இந்தியை எதிர்க்கிறது என்பதே உண்மை.
பாடத்திட்டங்கள் இந்தியா முழுவதும் ஒன்றாக தரம் உயர்த்தினாலும் கூட , இந்தியா முழுவதும் தேர்வுகளை ஒரே மாதிரி வினாத்தாள் கொடுத்து நடத்துவது என்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது. ஒரு கேள்வி தாள் சற்று சுலபமானதாகவும் , ஒரு கேள்வித்தாள் பிற மாநிலத்தில் மிக கடினமாகவும் அமைந்துவிடும் வாய்ப்பு ஏராளம் உள்ளது. எனவே பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக மாணவர்களை மருத்துவப் படிப்புக்குத் தேர்வு செய்வது என்பது மிக பெரிய பாவம். அதனைத்தான் இப்போது சீர்திருத்தி உள்ளனர்.
https://amaruvi.in/2017/09/10/neet-qa/
https://amaruvi.in/2017/09/14/neet_2/
திரு பொன் முத்துக்குமார் போன்ற நண்பர்கள் திரு ஆமருவி தேவநாதன் அவர்களின் மேலே உள்ள இரு சுட்டிகளையும் முழுவதையும் படித்தால் சற்று தெளிவான விளக்கங்களை பெற்று திருப்தி அடைவார் என்று கருதுகிறேன். நீட் பற்றிய மிக தெளிவான விளக்கங்கள் தந்துள்ளார் திரு ஆமருவி .
மாநில அரசு நடத்தும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து எத்தனையோ மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் அவர்களுக்கு நீதி கிடைக்க பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வையும் ரத்து செய்ய நீட் தேர்வுக்கு எதிராக போராடும் நாம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேணடும்.