அலையலவும் வங்காளக் குடாக்கடலின் அடிக்கிடக்கும்
விலைவரம்பு காணாத முழுமுத்தும் மேலுயர்ந்த
மலையருவி கொழித்துவரும் மணிகளொடு பசும்பொன்னும்
தலையணியப் பிறநாட்டார்தந்தனை இந்திய மாதே
உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்
பலவாறு நின்புகழ்மை பாரித்து என்சிற்றறிவாற்
சொலவருமோ? தொலையாத வளமுடையாய் தொன்றுதொட்ட
நலமெலாம் பிறர்கவர இந்நாளில் நாணினையே
அந்நாணம் இனியொழிய நின்மகார் அறிந்தெழுந்து
முன்னாளில் விரிந்தபல கைத்தொழிலை முதிர்ச்சியுற்ற
மன்னிமிக முயல்கின்றார் மனக்கவலை நீங்குற்றோம்
இன்னுமிவர் சிறக்கவென ஏத்திமிக வாழ்த்துவமே!
இதைப் பாடியவர் ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் நாகபட்டினம் என்கிற ஊரைச் சார்ந்த மறைமலையடிகள் எனும் தெலுங்கர். பாரத அன்னையை ‘உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்’ என பாடியிருக்கிறார். அவரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழன் என்று சொல்லிவிட்டது. பார்ப்பன பாசிசம்! உண்மையில் இந்த வரிகளே தமிழ் வரிகள் அல்ல. தமிழ் என்பது பராசக்தி வசனத்தில் உருவாகி சீமான் திருமுருகன்காந்தி போன்ற மடையர்களின் உளறலில் மட்டுமே வாழ்வது 🙂
பாரத நாட்டைப் பாடுவமே
பரமா னந்தங் கூடுவமே!
முனிவர்கள் தேசம் பாரதமே
முழங்கும் வீரர் மாரதமே!
பாரத தேசம் பேரின்பம்
பார்க்கப் பார்க்கப் போந்துன்பம்!
வந்தே மாதர மந்திரமே
வாழ்த்த வாழ்த்த சுதந்திரமே!
வந்தேமாதரம் என்போமே
வாழ்க்கைப் பிணிகள் பின்போமே!
காலை சிந்தை கதிரொளியேம்
மாலை நெஞ்சில் மதிநிலவே!
சாந்தம் சாந்தம் இமயமலை
சார்ந்து நிற்றல் சமயநிலை!
கங்கை யோடுங் காட்சியிலே
கடவுள் நடனம் மாட்சியிலே!
காடும் மலையும் எங்கள் மடம்
கவியும் வரைவும் எங்கள் படம்!
…
பெண்கள் பெருமை பேசுவமே
மண்ணில் அடிமை வீசுவமே!
அடிமையழிப்பது பெண்ணொளியே
அன்பை வளர்ப்பது அவள் வழியே!
பெண்ணை வெறுப்பது பேய்குணமே
பேசும் அவளிடம் தாய்க்குணமே!
சாதிப் பேயை யோட்டுவமே
சமநிலையெங்கும் நாட்டுவமே!
இதைப் பாடியவர் திரு. வி. கலியாண சுந்தரனார். இவர் ஆந்திராவைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைதாப்பேட்டை வட்டத்தில் துள்ளல் என்கிற கிராமத்தில் பிறந்த ஒரு தெலுங்கர். இவரையும் தமிழன் என்று ஆர்.எஸ்.எஸ் பாசிசக் கும்பலும் பார்ப்பன பாசிஸ்ட்களும் அப்பாவி தமிழர்களை நம்பவைத்துவிட்டார்கள். இந்த ஆரிய அடிவருடியான தெலுங்கரை தமிழ் தென்றல் என்றும் அப்பாவி தமிழர்களை அழைக்க வைத்துவிட்டார்கள். இவரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கருத்துகளை பாடல்களில் நுழைத்து அதை தமிழ் என்று மக்களை நம்ப வைத்துவிட்டார்.வந்தே மாதரத்தையும் மதத்தையும் தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட ஆரிய அடிவருடி தெலுங்கர்தான் திருவிக. உண்மையான தமிழர்களான சைமன் இல்லை இல்லை சீமான், டானிய… திருமுருகன் காந்தி போன்றவர்கள் மட்டுமே சான்றிதழ் பெற்ற தமிழர்கள்! 🙂
வேத வாணியும் பாரத தேவி
வீர துர்க்கையும் பாரத தேவி
மாதவர் கனல் பாரத தேவி
மங்கலத் திரு பாரத தேவி
சேது தொட்டிமயம் வரை நீண்ட
தெய்வ நாட்டினள் பாரத தேவி
மோது தென்கடல் முன் வளர்ந்தோங்கும்
மூலசக்தியும் பாரத தேவி
கோடி கோடி சிரங்கள் வணங்க
கோடி கோடிக் கரந்தொழு தேத்தக்
கோடி தேவர்கள் ஆசிகள் கூறக்
கொலுவிருப்பவள் பாரத தேவி!
இதைப் பாடிய கவியோகி சுத்தானந்த பாரதி பிறந்த சிவகங்கை தமிழ்நாடு என்று நீங்கள் நினைத்தால் திருமுருகன் காந்தியிடம் போய் புவியியல் பாடம் கற்று வரவும்.
(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
மறைமலை அடிகளாரும்,திரு.வி.க.வும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்;தமிழுக்குப் பெரும் பணியாற்றியவர்கள். இதிலும் ஏன் மாறுபட்ட விளக்கம்?
உண்மையில் இந்த வரிகளே தமிழ் வரிகள் அல்ல. தமிழ் என்பது பராசக்தி வசனத்தில் உருவாகி சீமான் திருமுருகன்காந்தி போன்ற மடையர்களின் உளறலில் மட்டுமே வாழ்வது
Ha Ha ha 🙂
மறைமலை அடிகள் தெலுங்கர் என்று கிண்டலாக தான் குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளர். கட்டுரையாளர் தெரிவித்துள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியானவை. தமிழ் என்பது தேசீயத்துடன் நாட்டுப்பற்றுடன் இணைந்த மொழி. அதனை பிரிவினை தீய சக்திகள் பயன்படுத்துவது கண்டிக்கப்படவேண்டிய விஷயம் .
வேளாளர் வேதாசலம் என்ற மறைமலைஅடிகளார் ஒருசமயம் நெல்லூர் சென்று நிகழ்திய உரையில் (1923 மார்ச் 22 இல்) இப்பகுதியில் பிராமிணர்களின் செல்வாக்கு மிகவும் அதிகம் ஓ எப்போது பிராமிணர்கள் இந்தியாவில் அவர்கள் இருந்த தடம்கூட தெரியாமல் ஒரேயடியாகப் பூண்டோடு ஒழிக்கப்படுவார்களோ என்று பேசியவர். தமிழகத்தில் நான்கு வர்ணமுறை இல்லை என்றும் அதை ஆரிய பார்பனர்கள் தான் கொண்டு வந்தார்கள் என்றும் குறை சொன்னவர். ”வேளாளர் நாகரீகம்” என்ற புத்தகத்தில் நிறைய வரலாற்று திரிபுகளை செய்துள்ளார். இவர் திராவிட வாடையில் முழ்கியவர். திரு.வி.க. இவர்களிடமும் திராவிட வாடை உண்டு. சில காலம் திராவிடன் பத்திரிகையில் வேலை செய்தார்.
வரவர , தனிநபர் தாக்குதல் இத் தளத்தில் அதிகமாகிக் கொண்டே இருப்பது நன்றல்ல.
For a long duration in Tamil History the Vellalars were very close and had cordial relationship with Brahmins and treated them with respect. The same treatment was given to Brahmins by other Tamil caste people also. During the start of Vijayanagar Empire the rift between Brahmins and Vellalas started. Vellalas included Nayakers (Vanniyars) in the army and along with Vadugars they started distancing from Brahmins which took wild shape during British time and gave birth to separate Dravida Nadu excluding Brahmin. This Vellalas, Vadugars, Vaniyar combination strength in Tamilnadu is more than +15%. And minorities support them always. Without the mindset change of these Dravidian Donk…s, it is very difficult to bring the Tamil masses into the national stream. To know more about Vellalars twisting of history, culture and literature please visit website of South Indian Social History Research Institute by authors Mr. S. Ramachandran and Mr. Pravaahan. Here lot of articles with literary evidences denying the twisted theories of Vellalars and other Dravidian supporters, tearing them into gossip pieces.
Typical examples of some people who have contributed for adulterated history, culture and literature are Devaneya Paavaner, Aappa Duraiyar, and Deivanayakam Pillai (all converted Christian). This man Deivanayakam Pillai said in one of his research paper that saint Thiruvalluvar was a disciple of apostle Thomas and these Dravidian idiot’s are keeping mum. Others in the list are Manonmaniam Sundaranar, Venkata Challapathy, Kanakasabai Pillai, Aravanan, Marai Malai Adikal, Bharathidasan, Kundrakudi Adikalar — the list goes endlessly. This Vellalar muting is not only in Tamilnadu, the same muting in Sri Lanka is the root cause of countless number of innocent Tamils killed in the undeclared civil war recently. The main reason is changing faith and colluding with Christians.
In Vellala caste plenty of gems of people contributed to Tamil literature, culture and religion. Starting from Kamban, Ottakoothar, Sekkizhar, Va. U. Se, Thillaiadi Valliammai, Shanbhaharaman, 13 Nayanmars and the list goes endlessly. Once Tamilnadu was in the forefront for whole of India in guiding principles. Such people’s heirs now engaged in all false propagandas due to alien brain wash. People called Rajaji as the conscience of Gandhi but the Dravidian people call C. N. Annadurai who wrote Kambarasam and calling him as South Indian Gandhi. Why such countless literate and ill-literate filthy stuff always claiming Dravidian superiority and roaming still is my anguish. Such were the venomous outpouring of Dravidians who took staunch anti-Brahmin hegemony.
இது ஃபேஸ்புக்கில் ஒரு டைம்பாஸ் பதிவாக வரலாம், தமிழ்ஹிந்துவில் கட்டுரையாக வரலாமா? அ.நீ.யே அப்படி நினைப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.
இதோட அரவிந்தன் நீலகண்டன் நிறுத்திக்கிட்டது சரியில்லைங்க…
நீங்கள் கீழ்க்காணும் தமிழர்களையும் வன்மையா கண்டிக்கணும்னு நான் வேண்டிக்கிறேன்ங்க…!
இந்து என்ற சொல்லையே பயன்படுத்தாத திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர். என்ன துணிச்சல் இருந்தா இந்த நாலு கயவாளிப்பயலுகளும் இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தாம திருமுறைகளை எழுதியிருப்பானுக…கண்டிக்க மறந்துடாதீங்க…!
அப்புறம் இந்த பன்னிரெண்டு ஆழ்வார்களும் இதே மாதிரி மோசமான பயலுகதேன்…அவனுகளையும் ரெண்டு காட்டு காட்டினீகன்னு வச்சிக்கன….அத்தனை பயலுகளும் பாரத் மாதா கி ஜே போட்ருவானுக…ஏதோ நம்மாள முடிஞ்ச யோசனை…அவ்வளவுதான்…!
// வரவர , தனிநபர் தாக்குதல் இத் தளத்தில் அதிகமாகிக் கொண்டே இருப்பது நன்றல்ல //
தனசேகரன் ஐயா எந்த தனி நபரை யார் தாக்குகிறார்கள் என்பதை வெளிபடையாக கூறலாமே ? திராவிட வாடை உள்ளவர்கள் அனைவருமே பிரிவினை வியாதிகளாகத் தான் உள்ளார்கள். அவர்களைப் பற்றி சொல்வது தனிநபர் தாக்காக கொள்ளமுடியாது. சமீபத்தில் ஒரு தொலைகாட்சி விவாதத்தில் ஒரு திராவிட வாடை உள்ளவர். ஹிந்து மதம் வேறு சைவ மதம் வேறு என்கிறார் ? ஹிந்துத்துவத்திற்கும் சைவத்திற்கு ஒட்டு உறவு இல்லை என்கிறார். ஹிந்துத்துவம் என்பது பன்முகதன்மையான கலாசாரத்தை ஆப்பிரகாமிய மதங்களைப் போல் ஒருமுக தன்மையாக மாற்றும் சூழ்சி என்கிறார்.. ஹிந்துத்துவம் என்றால் என்ன என்பதற்கு உச்ச நீதி மன்றமே முழுமையான விளக்கம் அளித்துள்ளது
(”Hindutva is indicative more of the way of life of the Indian people. It is not to be understood or construded narrowly. It is not Hindu fundamentalism nor is it to be confined only to the strict Hindu religious practices or as unrelated to the cultural and ethos of the people of India, depicting the way of life of the Indian people. Considering Hindutva as hostile, inimical, or intolerant of other faiths, or as communal proceeds from an improper appreciation of its true meaning” ( SC Judgement dated 11.12.1995. Reported at AIR 1996 SC at page 1113)
”இந்திய மக்களின் வாழ்கை நெறிமுறைகளை உள்ளடக்கி குறிப்பிட்டு கூறுபவைகளே இந்துத்துவம் ஆகும். இதை ஒரு குறிகிய கண்ணோட்டத்திலோ அல்லது ஒரு குறிகிய எல்லைக்குள்ளோ அடைத்துப் பார்க்ககூடாது. இதை ஒரு இந்து அடிப்படைவாதம் என்றோ அல்லது ஒரு குறிபிட்ட இந்துமத கோட்பாடுகளை உள்ளடக்கியதோ, இந்தியர்களின் கலாசார சிறப்பியல் பண்புகளுக்கு எதிரானதாகவோ கருதக்கூடாது. மேலும் இந்துவத்துவம் என்பது நேசமனப் பான்மையற்ற , தீண்டதகாத , மற்ற மதத்தவரை சகித்து கொள்ளாத , இன பகையை திட்டம் தீட்டுகிற வழிமுறையாக நாம் தவறான உள் அர்தம் கொண்டு பார்ப்பது இந்துத்துவம் என்ற சொல்லுக்கு விளக்கமாகாது.”
உச்ச நீதிமன்றமே இந்துத்துவம் என்ற சொல்லுக்கு தங்குதடையின்றி இது இந்தியர்களின் வாழ்கை நெறி முறைகளை குறிப்பதே ஆகும் என்று விளக்கியுள்ளது.