இலங்கையில் இந்துக்கோவில் இடிப்பு!

மரங்கள்சூழ்ந்தவொரு கிராமம்.  அருகிலுள்ள பகுதிகளில்லாம் நாட்டின் காப்புக்காடுகள்.  இந்தக்கிராமத்திற்கு வந்துபோவது மிகவும் கடினம்.  பாதுகாப்பிற்கென்றோ, புகாருக்காகவென்றோ காவலர் [போலீஸ்] இங்கு வந்துசெல்வதென்பது மிகவும் அரிதானவொன்று.

இந்துக்கள் இங்கு வசிக்கின்றனர்.  பெரும்பாலானோரின் தொழில் விவசாயம்.  செழிப்பான நிலம், நீருக்கோ குறைவில்லை. முதலியார்குளம் என்னும் ஏரிதான் நீருக்கு ஆதாரம்.  இந்த கிராமத்தின் பெயரே இந்த ஏரியின் பெயரிலிருந்தான் பெறப்பட்டது.

அரசுநிர்வாகத்தின் மிகமிகச் சிறிய பகுதியான நிலதாரிப்பகுதியான இது இந்துப் பெரும்பான்மையானது. ஆயிரத்து எழுநூற்றுப்பதிமூன்றுபேர் வாழும் இந்த முதலியார்குளத்தில் முன்னூற்றுமுப்பது வீடுகளில் ஆயிரத்துநூற்றைம்பத்தாறு இந்துக்களும், நூற்றிருபத்தொன்று வீடுகளில் நானூற்றருபத்தைந்து கத்தோலிக்கக் கிறித்தவர்களும், இருபத்தெட்டு வீடுகளில் தொண்ணூற்றிரண்டு முஸ்லிம்களும் வசிக்கிறார்கள்.

இந்துக்களின் கோவில்களில் அருள்மிகு சித்திவிநாயகர் கோவிலும் ஒன்றாகும்.

2017ம் ஆண்டு, நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை தங்களது சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள்.  கடவுளரின் திருவுருவங்கள் அதன் இருப்பிடங்களிலிருந்டு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகில் எறியப்பட்டிருந்தன.  இந்துத் தெய்வீகத்தன்மை மாசுபடுபத்தப்பட்டிருந்தது.  படங்கள் இவற்றைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

சமயமாற்றத்திற்கான ஒரு இலக்கு இக்கிராமம். இச்சமயமாற்றம் இஸ்லாமிலிருந்து கிறித்தவத்திற்கோ, கிறித்தவத்திலிருந்து இஸ்லாமிற்கோ அல்ல.  இஸ்லாமியரும், கிறித்தவரும் இந்துக்களையே குறிவைக்கிறார்கள்.

இந்துக்களின்பாலுள்ள பகைமை, வெறுப்பை, வன்முறையை வலுப்படுத்துகிறது இது.  இதைக் கொடுமையென்றுகூடச் சொல்லமுடியாது.  கொடுமையைவிடக் கொடியது இது.  தெய்வீகத்தூய்மைக்குக் கேடு என்றும் சொல்லமுடியாது.  அதைவிட மிகவும் கொடியது இச்செயல்.  இது கடும்பகையைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சி, சமயப் பகைமையைத் தூண்டி, வெறுப்பிற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும் நயவஞ்சகச் செயல்தான் இது.

காதல் ஜிஹாத்தின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. சமயமாற்றம் செய்யப்பட்ட ஒரு பெண் தனத் பெயரைமாற்றி அறிவிப்புக்கொடுத்திருந்தாள்.

இலங்கைக் குடியரசு புத்தசமயத்திற்கு முதன்மையளிக்கும்;  அதனால், புத்தசாசனத்தைப் பேணிப் பாதுகாப்பதும், அதேசமயம் மற்ற சமயங்களுக்கு சட்டக்கூறின் 10, மற்றும் 14(1)(e)ன்படி கொடுக்கப்பட்ட உரிமைகளையும் அரசின் கடமையாகும் என்று இலங்கையின் அரசியல் அமைப்பின் ஒன்பதாவது சட்டப்பிரிவுக்கூறு [Article 9 of Sri Lanka Constitution] கூறுகிறது.

வடமாநிலத்தின் மன்னார், வாவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் சமீபத்தில் நடந்துவரும், இதுவரை நடந்திராத, சில கிறிஸ்தவ, இஸ்லாமியக் குழுக்களின் — இந்துக்களின்மீதும், அவர்களின் ஆலயங்களின்மீது மேற்கொள்ளப்படும் கடும் தீவிரவாத வன்முறைகளின் அதிகரிப்பு, அரசு கொடுத்துள்ள மற்ற சமயங்களுக்கு சட்டக்கூறின் 10, மற்றும் 14(1)(e)ன்படி கொடுக்கப்பட்ட உரிமைகளைக் குழிபறித்து அழிக்கும்வகையில் அமைந்துவருகின்றன.

ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் மூன்றாம் பிரிவு அறிவிக்கிறது:

 1. வேற்றுமை உணர்வு, பகைமை, வன்முறை இவற்றைத் தூண்டுவதற்கு அடிப்படையான நாட்டு, இன, சமய வெறுப்புகளுகளுக்கு ஆதரவோ, சண்டையையோ யாரும் அளிக்கக்கூடாது.
 2. யாரொருவர் மேற்சொன்ன துணைப்பிரிவு 1ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை — [அ] செய்ய முற்படுகிறாரோ, [ஆ] செய்வதற்கு உதவியாக, உடந்தையாக இருக்கிறாரோ, அல்லது [இ] செய்வதாகப் பயமுறுத்துகிறாரோ — அவர் இந்த சட்டத்தின்படி குற்றமிழைத்தவராவார்.
 3. யாரொருவர் மேற்கன்ட உட்பிரிவின் 1ம், அல்லது 2ம் உட்பிரிவின்படி குற்றமிழைத்ததாக உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படுகிறாரோ, அவர்க் அதிகபட்சம் பத்தாண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை அளித்துத் தண்டிக்கப்படுவார்.
 4. இப்பிரிவின்படி இழைக்கப்பட்ட குற்றம், பிடியாணையின்றி கைதுசெய்யக்கூடிய, ஜாமீன் அளிக்கவியலாதது. இப்படிப்பட்ட குற்றத்தை இழைத்ததாகச் சந்தேகமோ, குற்றமோ சாட்டப்பட்டவர், ஜாமீனில் விடப்படமாட்டார், உயர்நீதிமன்றத்தால் இன்றியமையாத சந்தர்ப்பங்களின்போதுமட்டும் தீர்மானிக்கப்பட்டால்மட்டுமே.

தீவிரவாதத் தடுப்புச்சட்டத்தின் (PTA) 2(1)(h) சொல்கிறது:

..பேசிய, படிப்பதற்காக எழுதப்பட்ட சொற்களாலோ, அறிவிப்புகளாலோ, தெரியக்கூடிய உருவமைப்புகளாலோ, அல்லது மற்றவைகளாலோ வன்முறையோ, பல சமயங்களுக்குள்ளோ, இனங்களுக்குளோ, சமூகங்களுக்குள்ளோ, சமய, இன, சமூக வேற்றுமை, பிணக்கு, பகைமையோ உருவாக்குதல்.

இலங்கை பீனல் கோடின் பகுதிகள் 290-292 [சம்யங்களைப்பற்றிய குற்றங்கள்] மற்ற பகுதிகள் சம்ய நல்லிணக்கம், மற்றும் ஒத்துவாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்க பல சமயத்தோரை உள்ளடக்கிய குழுக்களின் அறிவுரையுடன் சமயப்பிணக்குகளை அகற்றமுற்படவேண்டும் என்று கூறுகிறது.

எனவே, இலங்கையில், முதலியார்குளத்தில் நடந்தேறிய இந்த அநீதியைச் சட்டஒழுங்குத்துறை அதிகாரிகள் விசாரித்து, இந்து சமய ஆலயங்களில் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடித்து, கைதுசெய்து, விசாரித்து, வழக்குத்தொடுப்பதே இப்போதைய தேவையாகும்.

வாவுனியா மாவட்டத்தில், வெங்காளசெட்டிகுளம் பிரிவில், முதலியார்குளத்திலுள்ள கோவிலுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நேரில் தலையிட்டு விசாரிக்கவேண்டும் என்று மேலதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நாமும் நமது இலங்கை இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை இலங்கை அரசு விசாரித்துத் தீர்த்துவைக்கவேண்டும் என்று நம்புவோமாக!

***

32 Replies to “இலங்கையில் இந்துக்கோவில் இடிப்பு!”

 1. Where is our so called Tamil Supporters, like Sebestian, Nedumaran, Vai. Kopalasamy, Daniel Gandhi, Thiruma Valavan and etc.

 2. இஸ்லாம் கிறிஸ்தவம் இரண்டிற்கும் மாறுவதற்கு முக்கிய காரணம் பசி பட்டினி நோய்
  வறுமை வீடற்ற முகாம் வாழ்க்கை என்பன போன்றவைதான்.இக் கொடுமைகளை
  தினமும் அனுபவித்தால்தான் தெரியும் அதன் அகோரத் தன்மையை. தினமும் இக்
  கொடுமையை அனுபவிப்பவரிடம் தனது மதம் என்பது மூன்றாம் அல்லது நான்காம்
  பட்சமே. வருடக் கணக்காக இக் கொடுமையை அனுபவிப்பவருக்கு மூன்று வேளை
  உணவு தரும், நோய்க்கு மருந்து தந்து ஆறுதல் வார்த்தை கூறும் இஸ்லாமியரும்
  கிரிச்தவரும்தான் கடவுள். அவர்களின் மதம் தான் அன்பான மதம்.

  லட்சக் கணக்கான பணம் செலவழித்து உடைந்த கோவில்களை போட்டிபோட்டு திருத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்துக்கள்.கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள இந்து ஏழைகள் இவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.1952ல் வெளிவந்த பராசக்தி படம் ஞாபகம் வருகிறதா?

  கோவில் உடைபட்டத்தை பற்றி எழுதியுள்ளீர்கள். இதே போல இன்னும் பல கோவில்கள் விக்கிரகங்கள் உடைபட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இவைகளைப் பற்றி ஈழத்து இந்துக்கள் எவனாவது அல்லது கொழும்பில் உள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் ஆல்லது இந்து கலாச்சார அமைச்சர் எப்பொழுதாவது வாய் திறந்தார்களா? புலம் பெயர்ந்து நாட்டுக்கு நாடு பல கோவில்கள் கட்டியிருக்கும் ஈழத்து இந்துக்களில் எவராவது ஒரு முறைப்பாட்டுக் கடிதம் எழுதி இருப்பாரா?

  இது இப்படி என்றால் அரச உதவியுடனும் அரச படைகளின் பாதுகாப்புடனும் பவுத்த பீடங்களின் ஆதரவுடனும் இந்துக்கள் பவுத்த மதத்திற்கு மாற்ற்ப்படுகின்றார்கள்.

  இப்பின்னணியில் படித்த பணக்கார வசதியான இந்துக்கள் போலி ஆன்மீக வாதிகளுக்கு பொன்னாடை போர்த்து பட்டமளித்து சிவ சிவா என அமர்ந்திருப்பாரே. என்ன காட்சி ஐயா அது.

 3. //இஸ்லாம் கிறிஸ்தவம் இரண்டிற்கும் மாறுவதற்கு முக்கிய காரணம் பசி பட்டினி நோய் வறுமை வீடற்ற முகாம் வாழ்க்கை என்பன போன்றவைதான். இக்கொடுமைகளை தினமும் அனுபவித்தால்தான் தெரியும்//

  இதே கொடுமைகள் தமிழ்க் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கும் இலங்கைப் போரின்போது ஏற்படத்தான் செய்தது. அவர்கள் ஏன் ரிஷி அவர்களே சமயமாற்றம் செய்யவில்லை? அது அவர்களின் சமயப்பற்று.

  இந்துசமயத்தை இந்துசமயத்தோரே பழிப்பதுபோல கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் தங்கள் சமயத்தைப் பழிப்பதில்லை. முக்கியமாக எந்தவொரு முஸ்லீமோ, வேறெந்த சமயத்தோரோ, இஸ்லாமைப் பழித்துவிட்டு நிம்மதியாக இருந்துவிட முடியாது.

  இந்துசமயத்தோர் தமது சமயத்தைப் பழிப்பதற்குக் காரணம் 900 ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்ததும், வெள்ளையரின் கல்விமூலம் தனது சமயம் மிகவும் தாழ்ந்தது என்று எண்ணத்துவங்கியதும், சாதிச்சண்டையின்மூலம் தம்மைக் கூறுபோட்டுக்கொண்டதுமோ காரணம்.

  வடிகட்டிய தன்னலமும் இன்னொரு காரணம்.

  சமயக்கல்வி இல்லாது இருப்பதும் மற்றொரு காரணம்.

  //லட்சக் கணக்கான பணம் செலவழித்து உடைந்த கோவில்களை போட்டிபோட்டு திருத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்துக்கள்.கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள இந்து ஏழைகள் இவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.//

  மற்ற சமயங்கள் சர்ச்சோ, மசூதியோ கட்டுவதில்லையா? முதலில் அதைத்தான் செய்கிறார்கள். சென்னையில் வெள்ளம் வந்ததும் அமெரிக்காவிலிருந்து எத்தனை தமிழர்கள் பண உதவி, பொருளுதவி செய்தார்கள் தெரியுமா? அதுபோல தமிழ்நாட்டிலிருந்து இலங்கை இந்துக்களுக்கு எவராவது முன்வந்து உதவிசெய்தால் குறைந்தா போய்விடும்?

  எத்தனை இலங்கைத் தமிழ் இந்து மங்கையர் போரினால் விதவைகளாக, நிராதரவாக இருக்கிறார்கள்? பெண்கள் குறைவாக இருக்கும் தமிழகத்தில் உள்ள இந்து ஆடவர்கள் இப்பெண்களை மணம்புரிந்து இலங்கைக் குடியேற்றம் பெறலாமே?

  இப்படி வழிமுறைகளக் கூறாமல், வெறுமனே சால்ஜாப்பு சொல்லி எழுதுவதால் என்னபயன்?

 4. தமிழகத்தில் உள்ள மணமகள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட இந்து பெண்களை தமிழக இளைஞர்கள் தேடிச்சென்று மணம் முடித்து , அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தரவேண்டும். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கற்பழிக்கப்பட்ட மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் நவகாளியில் பாதிக்கப்பட்ட பெண்களை இந்தியாவில் உள்ள இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று மகாத்மா காந்தி வேண்டுகோள் விடுத்தார். அதனை இப்போதும் நாம் செவிமடுத்து, இலங்கை இந்து தமிழர் விதவை பெண்களை மணம் முடித்து,அவர்களுக்கு வாழ்வு தரவேண்டும்.

 5. உடைக்கப்பட்ட ஆலயத்தை பாா்த்து என் மனம் பொிதும் வேதனை அடைந்தது. தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி என்ற ஊாில் உள்ள இயேசு விடுவிக்கின்றாா் என்ற கிறிஸ்தவ இயக்கத்தை நடத்தி வரும் மோசஸ்லாசரஸ் என்ற கிறிஸ்தவா் பேசிய பேச்சு விடியோவாக எனது வாடஸ்அப்பில் வந்துள்ளது அதில் தமிழ்நாட்டின் பொிய அரசியல்வாதிகளில் ஒருவரான திரு.வைகோபால்சாமி நாயக்கா் என்ற வைகோ தனது குடும்பத்தினரோடு கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டாா் என்பது மோசஸ் சொல்லியுள்ள செய்தி.

  வைகோ அவா்கள் திருவாசகம் பற்றி பேசிய சொற்பொழிவை நான் கேட்டுள்ளளேன்.

  அவாிடம் வறுமையில்லை. செல்வம் உண்டு.கல்வி உண்டு.சாதி அடிப்படையில் பாா்த்தாலும் ஆன்மீக பாரம்பாியம் உள்ள சாதியில் பிறந்தவா்தாம். தமிழ் இலக்கிய அறிவுஉண்டு.எனவே சைசித்தாந்தம் திருமந்திரம் போன்றஅாிய ஆன்மீக நூல்களைப் படித்து இருப்பாா்.இருப்பினும் ஏம் மதம் மாறினாா் ?????????

  முறையான சமய கல்வியை அவா் பெறவில்லை என்பதுதான்.இந்துமதம்மான் உயா்ந்தது என்ற கருத்து மனதில் வலுப்பெறும் போதுதான் இந்துக்கள் மதம் மாற மாட்டாா்கள்.

  பிற மதங்களில் உள்ள குறைகளை இந்துக்கள் பேசுவது இல்லை. இறையில்லா இசுலாத்தில் உள்ள கட்டுரைகளை இந்துக்களிடம் கொண்டு சோ்க்க வகைஏதும் இல்லை. இந்துக்கள் அமைப்பு ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்டவா்கள் அல்ல.

  மனிதா்களின் பிரச்சனைகளைத் தீா்கக நாம் முயல வேண்டும் என்பது நம்மிடைய வரவேண்டிய மாற்றம்.
  திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் திருக்கோவிலில் ஒரு பெண் தனது அண்மையில் பிறந்த குழந்தையை கோவில் வளாகத்தில் விட்டு சென்றுவிட்டாா். கோவில் நிா்வாகமும் காவல் துறையும் குழந்தையைக் கைபற்றினாா்கள். ஒரு இந்து பெண்காவலா் மேற்படிகுழந்தைக்கு தாய்பால் கொடுத்தாா்கள். ஆனாலும் அந்தகுழந்தையை பராமாிக்ககூடிய எந்த வசதியும் திருக்கோவில் வசம் இல்லை.எனவே அடைக்கலாபுரம் என்ற ஊாில் உள்ள புனித சுசையப்பா் இல்லத்தில் மேற்படி குழந்தையை ஒப்படைத்தனா்.

  இது போன்ற ஸ்தானபனங்களை நடத்த வகையில்லை. நடத்த முன் வருவோறும் இல்லை. நடத்த வேண்டியது சமூக தேவை என்ற விழிப்புணா்ச்சி இந்துக்களிடம் இல்லை.ஆனால் பிரமாண்டமாக சடங்குகளைச் செய்து விழாக்கள் எடுக்கின்றோம்.அபிஷேகம் ஆயிரம் செய்கின்றோம். ஆனால் ஒரு குழந்தையை வளா்க்க வகையின்றி கத்தோலிக்கா்கள் நடத்தும் இல்லத்தை நாம் நாடுகின்றோம். நியாயமா ?

 6. //தமிழகத்தில் உள்ள மணமகள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட இந்து பெண்களை தமிழக இளைஞர்கள் தேடிச்சென்று மணம் முடித்து , அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தரவேண்டும்…………//

  நல்ல யோசனை தான் .. நிச்சயம் இதனை நான் செயல்படுத்துகின்றேன்.. ஆனால் தாயே இதனை முதலில் உங்கள் குடும்பம் மற்றும் உறவுகளில் இருந்து நீங்கள் தொடங்கலாமே.. இல்லை ஊருக்கு மட்டும் உபதேசம் என்கிற கதை தானா..

 7. ஒரு அரிசோனன் / அத்விகா

  உங்களது கருத்துக்களுக்கு நன்றி.தமிழ்ஹிந்துவில் வெளிவந்திருந்த எனது முன்னையகருத்துக்களை வாசித்திருப்பின் எனது நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். திரும்பத் திரும்ப சொல்வது சலிப்பை ஊட்டும்.எனவே பலவற்றை இப்பொழுது கூறி இருக்கவில்லை.

  கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் தமது சமயத்திலிருந்து மாறுவதில்லை.அது அவர்களின் சமயப் பற்று. ஏற்றுக்கொள்கிறேன். இப்படியான பற்று ஏன் இந்துக்களிடம் இல்லை? இது அடிப்படையான பிரச்சினை.அறிவு சம்பந்தப்பட்டது.இந்துக்கள் விளக்கமற்ற வெறும் கிரியைகளில் மாத்திரமே காலம் காலமாக மூழ்கி இருக்கின்றனர்.தமது சமயம் சம்பந்தமாகவோ கிரியைகள் சம்பந்தமாகவோ அடிப்படை அறிவற்றவர்கள்.அப்படியான அறிவு தேவை என்பதைக்கூட உணராது இருப்பவர்கள். நான் சொல்வது பெரும்பாலும் ஈழத்து இந்துக்களைப் பற்றி. இந்நிலை பிரச்சினையின் ஒரு பகுதிதான்.அடுத்த பகுதி பொருளாதாரம் பற்றியது. போரினால் பாதிக்கப்பட்ட கிரிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உதவி புரிய வெளிநாடுகளில் அது சம்பந்தப்பட்ட அவர்களின் இஸ்தாபனங்களும் ஆளணியும் நிதியும் தயாராக உள்ளது. அவர்கள் நேரடியாகக் காலத்திற்கு வந்து உதவிகளை செய்கின்றார்கள்.உள்ளுரிலும் அவர்களது சமய குருமார்களும் உதவிகளைப் புரிய ஓடோடிவருகின்றார்கள். எனவே சமய மாற்றம் என்ற கேள்வியே எழாது. இந்நிலையை துப்பரவாக இந்துக்களிடையே காணமுடியாது.

  அரிசோநன் அவர்கள் கூறியதுபோல் சாதி தன்னலம் சமயக் கல்வி இல்லாதது என்பன அடிப்படைக் கோளாறுகளே. இவற்றை பற்றி நான் ஏற்கனவே கூறி இருந்திருக்கின்றேன்.

  தமிழ் நாட்டில் எத்தனை பணக்காரக் கோவில்களும் இஸ்தாபனங்களும் உதவி செய்யக்கூடிய நிலையில் உள்ளன. ஆனால் என் இவர்கள் முன்வருவதில்லை? இதற்கும் அந்த அடிப்படையான உதவி புரிய வேண்டும் என்ற மனப்பான்மை உருவாவதற்கான சமய அறிவு இரக்கம் அன்பு இல்லாததே.இது கிறிஸ்தவ முஸ்லிம் மதத்தினரிடையே நிறையவே உள்ளது. இதுதான் வித்தியாசம். இதனால்தான் கோவிலைத் திருத்துபவர்கிளிடையே அயலில் உள்ள இந்து ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை.

  திருமணம் பற்றி இருவரும் கூறியுள்ளீர்கள் .இது நடைமுறை சாத்தியமற்றது.இலங்கை அரசு இதற்கு ஒத்துக்கொள்ளவே மாட்டாது.தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறினால் அதற்காக சந்தோசப்படும் அரசு இது.முற்று முழுதாக சின்ஹல மக்களே வாழவும் ஆளவும் வேண்டுமென விருபுவது இது.இயலுமானால் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ,விதவைகளும் இதற்குள் அடங்குவர், பொருளாதார உதவி செய்யுங்கள். இந்து சமய நூல்களை பின் தங்கிய போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்புங்கள்.சிறைகளில் பல வருடங்களாக விசாரணை இன்றி வாடும் எம்மவருக்கு நூல்களை அனுப்புங்கள் .அவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார உதவி புரியுங்கள் .

  வலம்புரி ,tamilnet, battinews, malaiyaka tamils, போன்ற இணையத் தளங்களை வாசிப்பின் இன்னும் பலவற்றை அறியலாம்.

 8. அத்விகா அவர்களின் இந்தக் கருத்துடன் நான் உடன் படுகிறேன்.

 9. கிறிஸ்தவத்தை நிராகரித்தல் தமிழில் புத்தகமாக உள்ளதா?

 10. //இந்துசமயத்தை இந்துசமயத்தோரே பழிப்பதுபோல கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் தங்கள் சமயத்தைப் பழிப்பதில்லை. முக்கியமாக எந்தவொரு முஸ்லீமோ, வேறெந்த சமயத்தோரோ, இஸ்லாமைப் பழித்துவிட்டு நிம்மதியாக இருந்துவிட முடியாது.

  இந்துசமயத்தோர் தமது சமயத்தைப் பழிப்பதற்குக் காரணம் 900 ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்ததும், வெள்ளையரின் கல்விமூலம் தனது சமயம் மிகவும் தாழ்ந்தது என்று எண்ணத்துவங்கியதும், சாதிச்சண்டையின்மூலம் தம்மைக் கூறுபோட்டுக்கொண்டதுமோ காரணம்.

  வடிகட்டிய தன்னலமும் இன்னொரு காரணம்.

  சமயக்கல்வி இல்லாது இருப்பதும் மற்றொரு காரணம்.//

  நான்கு கரணியங்களைத் தருகிறார். 1. 900 ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்தது. 2. வெள்ளைக்காரர் போதித்த கல்விமுறை இந்துசமயத்தை வெறுக்க உதவியது 3. சாதி சண்டைகள் 4. வடிகட்டிய தன்னலம் 5. சமயக்கல்வி கிடைக்கப்படாமை.

  பதிலகள்:

  1) 900 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்தபின்னரும் இந்தியாவில் இந்துக்கள் எண்ணிகை அதிகம். கோடிக்கணக்கானோர் இந்துக்களாகவே உள்ளனர்.
  2) காலனி ஆதிக்க கல்விமுறையைப்பெற்றுத்தான் பலரும் விஞ்ஞானிகள் ஆனார்கள். அவர்கள் மதம் மாறவே இல்லை. கோடிக்கணக்கானோர் அப்படியே. அக்கல்வியில் பெரும்பகுதி இன்றைய வாழ்க்கைக்கு உதவும் கல்வி. விஞஞானிகள், சட்ட நிபுணர்கள், ஆடிட்டர்கள், என்று ஆகலாம். அதில் சிறுபங்கு சமய வெறுப்பை உருவாக்கியது. பெரியவர்களானதும் தன்னிச்சை சிந்தனை வரும். வந்தவுடன் நாமே அதன் பாதிப்பு வராதபடி பார்த்துக்கொள்ளலாம். கோடானுகோடிபேர் அக்கல்வியைப்பெற்றவர்கள்தான்: அவர்கள் கிருத்துவர்களைவிட மற்றவர்களே அதிகம். அவர்களெல்லாரும் தத்தம் மதங்களை வெறுத்துவிட்டனரா? இசுலாமிய் மாணவர்கள் கிருத்துவர்களாகி தங்கள் மதத்தை வெறுத்து தாழ்ந்தது என்று கருதிவிட்டார்களா?
  3) சாதி சண்டைகளினால் இந்து மதம் வேண்டாமென்று பிறமதங்களுக்கு போனவர்க்ள் தலித்துகள் மட்டுமே. அவர்கள் பிறசாதியினரின் தாக்குதலினால் மட்டுமன்று. தீண்டாமையிலிருந்து தப்பிக்க விலகினார்கள்.
  4) வடிகட்டிய தன்னலம் இந்துக்களுக்கு மட்டும்தானா? கிருத்துவர்களும் இசுலாமியர்களும் பொதுநலவாதிகளா?
  5) சமயக்கல்வி பிறருக்கு கிடைக்காமல் போனதற்கு காரணம், எக்கல்வியை கொடுப்பது என்ற கேள்விதான். பிரிவு பட்ட மதக்கூறுகள் இருப்பதால், ஒரே கல்வி என்பது எதார்த்ததில் வரமுடியாது.

 11. ஒரு அரிசோனன் அவர்கள் அருமையான விளக்கம் அளித்துள்ளார்.
  இலங்கையில் போர் நடைபெற்ற போது தமிழ்க் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் பாதிப்படைந்தனர், ஏன் அவர்கள் மதம் மாறுவது இல்லை? இந்துக்கள் தான் கிறிஸ்தவர்களாகவும் முஸ்லிம்களாகவும் மாறுகிறார்கள்.
  இந்துக்களின் ஆப்கானிஸ்தானுக்கு முஸ்லிம்கள் வந்து இந்துக்களை மதம் மாற்றினார்கள். இந்துக்களும் பவுத்தர்களும் வாழ்ந்த இநதோனேசியாவுக்கு வந்த முஸ்லிம்கள் இவர்களை மதம் மாற்றி முஸ்லிம் நாடாக மாற்றினார்கள். பவுத்தர்கள் இந்துக்களும் வாழும் இலங்கையையும் தங்கள் நாடாக மாற்றிவிட வேண்டும் என்று கிறிஸ்தவ சக்திகள் வெறிபிடித்து அலைகின்றன.முஸ்லிம்களும் தங்களால் முடிந்தளவு இந்துக்களை மதம் மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்துக்கள் இலகுவாக மதம் மாறக் கூடியவர்களாக இருப்பதிற்கு ஒரு அரிசோனன் தெரிவித்த காரணங்களே உண்மையானவை.
  நான் தெரிந்து கொண்டவை இலங்கை தமிழ் அரசியல் தலைமைகள் பவுத்தர்களை எதிர்ப்பது, விரோதம் கடைபிடிப்பது
  கிறிஸ்தவர்களிடம் சரணாகதி அடைவது, முஸ்லிம்களை அவர்கள் முதுகில் குத்தினாலும் அணைத்து கொள்வது என்ற அரசியல் கொள்கையை கடைபிடித்து வருவதால் அவர்கள் மத மாற்றத்திற்கு எவ்வளவு இந்துக்களையும் பலி கொடுக்க தயாராக உள்ளனர்.

 12. திரு அ அன்புராஜ்

  உங்களது கருத்துக்களுக்கு நன்றி. ஈழத்திலும் ஓரிரு இந்துசமய இல்லங்கள்தான் உள்ளன. இவர்களால் இடமற்ற நிலையில்ஏற்றுக்கொள்ள முடியாத ஆதரவற்ற இந்துப் பிள்ளைகளை கிறிஸ்தவ பவுத்த இல்லங்களில்தான் அரசு சேர்த்துவிடுகின்றது. வவுனியாவில் உள்ள பவுத்த மதகுரு ஒருவர் தனது இல்லத்தில் உள்ள இந்துப் பிள்ளைகளின்மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்ததைப் பத்திரிகைகளில் வாசித்திருந்தேன். ஆனாலும் அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்காது அப்பிள்ளைகளை தொடர்ந்து அதே இல்லத்திலேயே விட்டுவைத்திருந்தது. இப்பொழுது அப்பிள்ளைகள் சின்ஹல பவுத்தர்களாக மாறியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இதேமாதிரி கிறிஸ்தவ இல்லங்களில் சேர்க்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களாக மாற்றம் அடைந்துள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம் தூங்குமூஞ்சி இந்துக்களாகவுள்ள நாங்களேதவிர மற்றச் சமயத்தவர்கள் அல்ல.

  ஈழத்தைப் பொறுத்தளவில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் அக்கிரமம்தான் ஓங்கியுள்ளது. இவர்களினால்தான் கோவில் விக்கிரகங்கள் பெரியோர்களின் சிலைகள் உடைக்கப் படுகின்றன என்பது பரவலான அபிப்பிராயம். பவுத்த பிக்குகளினால் இந்துசமய கோவில்களும் நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும் புதிதாக பவுத்த விகாரைகள் நிறுவப்படுவதும் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வடக்கு மாகாணத்திலும் சர்வ சாதாரணமாக இடம் பெற்றுவருகின்றது.இது வெளிப்படையாகவே நிகழ்கின்றது. மன்னார் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கமும் அக்கிரமும் பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. இப்பகுதிகளில் இடம்பெறும் சிலயுடைப்புகள் இவர்களாலே
  நிகழ்த்தப்படுவதாக சந்தேகிக்கப் படுகின்றது.

  நண்பர்கள் சிலர் மறுமணம் பற்றி எழுதிகின்றார்கள். இது நடைமுறைச் சாத்தியமே அற்றது. இதைவிட்டுவிட்டு தயவுசெய்து அநாதரவாய் இருக்கும் ஈழத்து ஏழை இந்துக்களுக்கு பொருளாதார உதவிகளைப் புரியுங்கள். சமய அறிவினை ஊட்டக்கூடிய நூல்களை ஆயிரக்கணக்கில் அனுப்பிவையுங்கள். உங்களால் இவைகளைச் செய்யமுடியுமாயின் அதற்கான பெயர் விலாசங்களை கொடுக்கத் தயார்.

 13. //திருமணம் பற்றி இருவரும் கூறியுள்ளீர்கள் .இது நடைமுறை சாத்தியமற்றது.இலங்கை அரசு இதற்கு ஒத்துக்கொள்ளவே மாட்டாது.தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறினால் அதற்காக சந்தோசப்படும் அரசு இது.//
  Rishi கருத்து முன் பின் முரணாக உள்ளது.
  போரினால் பாதிக்கப்பட்ட இந்து பெண்களை தமிழக இளைஞர்கள் மணம் முடிப்பதை இலங்கை அரசு இதற்கு ஒத்துக்கொள்ளவே மாட்டாது என்கிறார். தமிழக இளைஞர்கள் இந்து பெண்களை மணம் முடித்து இலங்கையை விட்டு வெளியேறினால் அதற்காக சந்தோசப்படும் அரசு இது என்றும் சொல்கிறார்
  //இலங்கை அரசு இதற்கு ஒத்துக்கொள்ளவே மாட்டாது//
  போரினால் பாதிக்கப்பட்ட இந்து பெண்கள் எவரையும் இதுவரை தமிழக இளைஞர்கள் திருமணம் செய்யவில்லை. ஆனால் எனக்கு தெரிந்தே தங்களுக்கு பிடித்த இலங்கை பெண்களை திருமணம் செய்து இருக்கிறார்கள். இலங்கை அரசு ஒரு தடையும் செய்யவில்லை.
  இலங்கை கிரிக்கட் வீரன் முரளி திருமணம் செய்தது இந்திய தமிழ் பெண்ணை தான்.
  போரினால் பாதிக்கப்பட்ட இந்து பெண்ணுக்கு அல்ல, புலி பெண்ணுக்கு தான் வாழ்வளிப்பதாக சொன்ன செபஸ்டியான் ஏமாற்றிவிட்டார்.

 14. kumaran

  கிறிஸ்தவத்தை நிராகரித்தல் தொடராக இந்த தமில்ஹிந்துவில் வெளிவந்தமையால் புத்தகமாக வெளிவந்தது பற்றி அவருக்குத் தெரிந்திருக்கலாம். எனவே ஆசிரியர் இதுபற்றி தெரிவித்தால் எல்லோருக்கும் உதவியாய் இருக்கும்.

  நண்பர்களுக்கு

  ஹிந்துக்களை எப்படி கிறிஸ்தவராக்குவது என்பது பற்றிய அறிக்கை LOP14 christian witness to hindus lausanne movementல் பார்க்கலாம்.mini consultation on reaching hindus. Thailand 1980. Lousanne.org

 15. ஒருகோவில் புசாாி ஒருவனின் மனவருத்தம்.
  ஒரு கிராமத்து அருள்மிகு அய்யனாா் ஆலயத்தில் 3 நாட்கள் திருவிழா நடை பெற்றது.விழாவிற்கு கோவில் விலை உயா்ந்த வா்ணங்கள் புசப்பட்டு அழகு படுத்தப்பட்டது. அய்யனாா் ஆலயங்களில் பாிவாரக தேவதைகள் கிட்டத்தட்ட 20 சிலைகள் உள்ளன. விழாவிற்கு வந்தவா்கள் அனைவரும் ஆளுக்கு ஆள் பொட்டலம் பொட்டலமாக சதா அனைத்து தேவதை சந்திதிகளிலும் சுடகம் ஏற்றி கொளுத்தி கொளுத்தி வைக்கின்றாா்கள்.ஏதோ சுடகம் கொளுத்துவது ஒரு பிரமாண்டமான சமய அனுஷ்டானம் போல் பக்தி சிரத்தையோடு செய்தாா்களாாம்.

  விழா முடிந்து கோவில் மேல் காங்கிாிட் கூரையைப் பாா்த்தால் அனைத்தும் கறி படிந்து நாசமாக உள்ளது.

  கோவில் புசாாி சுடகம் கொளுத்தாதீர்கள் என்று பலமுறை அறிவுரை சொல்லியிருக்கின்றாா்.யாரும் கேட்கவில்லை.

  இப்படிப்பட்ட முட்டாள்தனங்கள் சா்ச்யில் பாா்க்க முடியாது.
  மசுதியிலும் பாா்க்க முடியாது.

  மனித வளமற்ற செலவுகள்
  பாழான செலவுகள் அதிகம் செய்வது இந்துக்கள்தாம்.

 16. மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அருளமிகு கருப்பசசாமி கோவில்கள் நிறைய உள்ளன. எனது குலதெய்வத்தின் அய்யனாா் கோவிலில் கருப்பசாமிக்கு சந்நதி உள்ளது.இந்த தெய்வத்திற்கு சாமகொடையின் போது ஒரு ஆட்டின் நெஞ்சை பிளந்து வெட்டி அதன் இதயத்தை வெளியே எடுத்து விடுவாா்கள். இதுதான் சாமகொடையின் முக்கிய நிகழ்ச்சி. நானும் எனது குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை.ஆனால் தடுக்க முடியவில்லை. எவனும் காது கொடுத்து கேடக மாட்டான்.
  சில கருப்பசாமி கோவில்களில் உயிருள்ள ஆட்டின்-கோழியின் கழுத்தை அறுத்து சாமியாடி வசம் கொடுக்கின்றாா்கள்.சாமியாடி ஆட்டின் கோழியின் இரத்தத்தை வெட்டு வாயில் வாய் வைத்து குடிக்கின்றாா். இது ஒரு கற்கால வழிபாடுதானே ?

  இன்னும்சில கருப்பசாமி கோவில்களில் பிராந்தி படைப்பதும்சாமியாடி பாட்டல் பாட்டலாக பிராந்தி குடிக்கின்றாா். இதுவும் இந்து ஆலயம் தான்.

  என்ன செய்வது அஅாிசோனன் அவா்களே!

  எனது குழந்தைகள் இத்தகைய பழக்கங்களைக் கண்டு வெறுத்து கோவில்களுக்குச் செல்ல மறுக்கின்றாா்கள்.தற்சமயம் சிவன் கோவில்களாக போய் வருகின்றோம்.

 17. படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்

  நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
  நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
  படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே.
  – திருமூலர் திருமந்திரம் 1857.

  கோயிலில் இருக்கும் கடவுளுக்கு செலுத்தும் காணிக்கைகள்
  எதுவும் அடியார்களுக்கும் ஏழைகளுக்கும் சென்று சேர்வதில்லை.
  ஆனால் அந்த ஏழை எளியவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் நேரிடையாக அந்த இறைவனுக்கே போய் சேரும்.

 18. துறவும் தொண்டும் நமது இரண்டு கண்கள் என்று சொன்ன விவேகானந்தாின் சொல்லை பல நுாற்றாண்டுகளுக்கு முன்னரே திருமந்திரம் சொல்லி விட்டது.ஆனால் இந்துக்கள் அதை பின்பற்றவில்லை. சுடகம் கொளுத்துவது பாலை கொடடுவது உணவு பொருட்களை நாசம் செய்வது என்“ற மனித வளமறை்ற செயல்களில் மனித ஆற்றலை விரயம் செய்து வருகின்றோம்.

 19. படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்

  நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா

  நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்

  படமாடக் கோயில் பகவற்க தாமே”. (திருமந்திரம் – 1957)

  “அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்

  சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்

  பகரு ஞானி பகலூண் பலத்துக்கு

  நிகரிலை என்பது நிச்சயந் தானே”. (திருமந்திரம் – 1860)

 20. ஒரு இந்து நாத்திகனின் குமுறல் கலி .புங்குன்றன்

  கோவில்களில் கொள்ளை நகைகள் ஏன் ஏன்?
  எழுத்துரு அளவு Larger Font Smaller Font
  இந்தியாவில் உள்ள கோயில்களில் குவிந்து கிடக்கும் தங்கம், வைரம், அணிமணிகள் இவற்றை அரசு கையகப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் செழித்து, மக்கள் வளமுடன் வாழ முடியும்.
  எல்லாம் கடவுள் செயல் என்றும், படைப்புகள் எல்லாவற்றிற்கும் உரியவன் பகவான் என்றும் ஏட்டில் எழுதி வைக்கும் ஆன்மிக சிரோன்மணிகள் பற்றற்ற பகவானுக்காக இப்படி விலை உயர்ந்த பொருள்கள் தூசு படிந்து கிடப்பதுபற்றி என்ன சொல்லுகிறார்கள்?
  திருவனந்தபுரம் பத்பநாபசாமி கோயிலில் பாதாள அறைகளில் ரூ. ஒரு லட்சம் கோடிக்கு மேலான மதிப்புடைய பொருள்கள் குவிந்து கிடக்கின்றன என்று நாள்தோறும் செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன.
  இன்னும் ஒரு அறையை மட்டும் திறக்க வில்லையாம். அதனைத் திறந்தால் சாமி குற்றம் ஆகிவிடுமாம். இத்தனை அறைகளைத் திறந்தபோது வராத சாமி குற்றம், குறிப்பிட்ட அறையைத் திறக்கும் பொழுது மட்டும் எங்கிருந்து குதிக்கப் போகிறதாம்!
  பொருளாதாரத்தில் முக்கியமாக ஒன்றை குறிப்பிடுவார்கள். ரூபாய்களை எவ்வளவுத் தொகை அளவுக்கு அரசு அச்சடித்து விநியோகம் செய்கிறதோ, அந்த அளவுக்கு மதிப்புள்ள தங்கம் இந்தியாவின் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டும்; அப்பொழுது தான் பண வீக்கம் தடுக்கப்படும் என்று பொரு ளாதாரத்தில் பால பாடமாகச் சொல்லுகிறார்கள்.
  இந்தியாவில் பணவீக்கம்பற்றிப் பெரிதும் பேசப் படுகிறது. இந்தியாவில் ஒரு ரூபாயின் உண்மையான மதிப்பு வெறும் 14 காசுகளாக இருக்கின்றன என்றெல்லாம் சொல்லுவதில் குறைச்சல் இல்லை.
  இந்தப் பொருளாதாரம் எல்லாம் தெரிந்த மேதைகள் பிரதமராகவும், நிதித்துறை அமைச்சராக வும், திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருக்கும் இந்நாட்டில், கோவில்களில் ஒன்றுக்கும் பயன் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் இந்தத் தங்கங்களை எல்லாம் கையகப்படுத்தினால் என்ன?
  மக்களுக்குப் பயன்படாத பணம் குழவிக் கல்லுக்காக குந்த வைக்கப்படுவானேன்? படித்த மக்களிடத்தில் குடி கொண்டிருக்கும் மவுடிகம்தான் மக்களின் வறுமைக்கும், பணவீக்கத்துக்கும் காரணம் என்பது விளங்கவில்லையா?
  பக்தி கிறுக்கு பிடித்த மக்கள் கடவுளுக்குக் காணிக்கையைக் குவிக்கிறார்கள் என்பது உண்மை தான். இது ஒரு வகையில் கடவுளை இழிவுபடுத்தும் செயல் என்பதை அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.
  கடவுளிடத்தில் காணிக்கை என்னும் லஞ்சம் கொடுத்துதான் காரியம் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதே கடவுள் லஞ்சம் வாங்கக் கூடியவர் என்ற கருத்தில்தானே!
  லஞ்சம் வாங்குவதும் குற்றம்; லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் உள்ள நாட்டில் இப்படி பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால், லஞ்ச லாவண்யம் அதிகார பூர்வமாக பட்டவர்த்தனமாக ஆனந்த நடனம் புரிகிறதே – இதைப்பற்றி எந்தப் பொது நலவாதிகளும் வாய் திறப்பதில்லையே – ஏன்?

  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. வி.ஆர். கிருஷ்ணஅய்யர் வாய் திறந்து இருக்கிறார்: திருவனந்தபுரம் பத்மநாபபுரம் கோயிலில் கொட்டிக் கிடக்கும் பொருள்களை, மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கருத்துக் கூறியுள்ளார்.

  இந்தியாவிலேயே ஒரே ஒரு பெரிய மனிதராவது மக்கள் நலக் கண்ணோட்டத்தில் வாய் திறந்துள்ளது – வரவேற்கத்தக்கதாகும்.
  ஒரு கால கட்டத்தில் கோயில் சொத்துகள் எல்லாம் புரோகிதச் சுரண்டலுக்கு வாட்டமாக, வசதியாக இருந்ததுண்டு.
  நீதிக் கட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் தான் அந்தச் சுரண்டலுக்கு, கோயில் திருட்டுக்கு மூக்கணாங் கயிறு போட்டது என்ற வரலாற்றுக் குறிப்பையும் நினைவூட்டுவது பொருத்த மாகும். பக்தர்களுக்குக் கடைசியாக ஒன்று:
  படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
  நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
  நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
  படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே
  – இந்தத் திருமந்திரப் பாடல் என்ன சொல்லுகிறது?
  ஆண்டவனுக்கு ஒன்று கொடுப்பது நடமாடும் மனிதர்களுக்குக் கொடுப்பது ஆகாது; மனிதர் களுக்கு ஒன்று கொடுப்பதுதான் கடவுளுக்குக் கொடுப்பதாகும் என்று திருமந்திரம் சொல்லுகிறதே – திருமந்திரம் என்ன நாத்திக நூலா? சிந்திப்பீர், பக்தர்களே!

 21. கோவில் நகை ” குறித்து ஒரு கட்டுரை வெளியிடலாமே திருஅாிசோனன் அவா்களே

 22. இந்துவா

  அரிசோணன் சொல்லியிருப்பது:

  “தமிழகத்தில் உள்ள இந்து ஆடவர்கள் இப்பெண்களை மணம்புரிந்து இலங்கை குடியுரிமை பெறலாமே?”

  இந்தியாவிற்கு கூட்டிக் கொண்டு போவதாக சொல்லவில்லையே அவர்.

  இலங்கை அரசு குடியுரிமை தருமா ? சாத்தியமா? எங்கே முன் பின் முரண்?

 23. திருவனந்த புரம் அருள்மிகு பத்மனாபசாதி ஆலயத்தில் குவிந்து கிடக்கும் தங்க நகைகளை மற்றும் செல்வங்களை ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் ஸ்ரீநாராயணகுரு இயக்கங்கள் போன்ற இந்து தொண்டு நிறுவனங்களின் வசம் ஒப்படைக்வேண்டும்.அவா்கள் விரும்பும் வண்ணம் செலவு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

  தங்க நகைகளை புட்டிவைப்பது பாவச் செயல்.

 24. கோவில்களில் மணி ஓசை எழுப்ப ஒரு மணி அவசியம் தேவை.ஆனால் காணிக்கை என்ற பெயாில் ஒரு கோவில் முழுவதும் ( 207) மணிகள் தொங்கும் காட்சியை இந்து ஆலயங்களில் காணலாம். அதுபோல்
  ஒரு ஆலயத்தில் வெட்டருவாள் நிறைய கிடக்கும்.
  ஒரு கிராமத்தில் கோவிலுக்கு வளையல் கணிக்கை.
  ஒரு கோவிலில் மண் சட்டிகள் காணிக்கை அளிக்கப்பட்டு ஆயிரக்கணகக்கில் பயன்படுத்தால் குவிந்து கிடக்கின்றது.முன் காலங்களில் ஏழைகள் அந்த மண் பாத்திரங்களை பயன்படுத்திக் கொள்ள எடுத்துச் செல்வாா்கள்.இன்று யாரும் மண்பாத்திரங்களை பயன்படுத்துவதில்லை. ஆகவே அனைத்தும் விரயமாக பயன்பாடடின்றி பாழாய் கிடக்கின்றது.
  இத்தகைய விநோதங்களை இந்து ஆலயங்களில்தான் காண முடியும்.
  இப்படித்தான் நமது சமூதாயம் போக வேண்டுமா ?
  இதை்தான் ஸ்ரீநாராயணகுரு கணடித்தாா்.மென்மையான முறையில் மாற்றி அமைத்தாா்.இன்று ஸ்ரீநாராயணகுருதான் நமக்கு தேவை.

 25. திரு அ அன்புராஜ்

  உங்கள் கருத்துக்களை வாசித்தேன்.மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்.இக் கருத்துக்களை எத்தனைபேர் வாசித்து கவனத்தில் எடுத்து நடைமுறைப் படுத்த விழைவார்கள்? செவிடன் காதில் ஊதிய சங்குமாதிரித்தான் முடியுமோ ?.எனினும் தொடர்ந்து முயற்சிப்போம்.

  உங்கள் புண்ணியத்தால் பல மாதங்களின்பின் திருமந்திரநூலை எடுத்து இன்று வாசித்து மகிழ்வடைந்தேன்.நன்றி.

  முன்பு குறிப்பிட்டிருந்த இணையத்தளங்களை வாசிப்பின் ஈழத்தைப்பற்றிய நிலைமைகளை அறிந்து கொள்ளலாம். கூடவே Hilda Raja, koenraad elst ஆகியோரது இணையத் தளங்களையும் வாசிக்குமாறு இந்து நண்பர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

 26. //அரிசோணன் சொல்லியிருப்பது:

  “தமிழகத்தில் உள்ள இந்து ஆடவர்கள் இப்பெண்களை மணம்புரிந்து இலங்கை குடியுரிமை பெறலாமே?”

  இந்தியாவிற்கு கூட்டிக் கொண்டு போவதாக சொல்லவில்லையே அவர்.//
  சரி தான். எனக்கு ஒரு தாரத்தை இழந்த உறவினர் இருக்கிறார். அவர் பேரினால் பாதிக்கபட்ட இலங்கை இந்து விதவையை திருமணம் செய்ய சம்மதிக்கிறார் என்று கற்பனை செய்து பார்த்தேன். ஆனால் அவர் இந்தியாவில் உள்ள தனது நல்ல வாழ்கை நிலையைவிட்டு இலங்கையில் குடியேற விரும்பமாட்டார்.
  ஆனால் இலங்கையை சேர்ந்தவரை திருமணம் செய்து இலங்கையில் குடியேற விரும்புபவர்களுக்கு? இந்திய இந்து தமிழ் பெண் இலங்கை முரளியை திருமணம் செய்து இலங்கையில் குடியேறி இருக்கிராரே!

 27. அன்புராஜ் ஐயா பாலை கொட்டுவது உணவு பொருட்களை நாசம் செய்வது போன்ற கொடுமையான செயல்ககள் நிறுத்தபட வேண்டும்.

 28. இலங்கை பற்றிய மகிழ்ச்சியான ஒரு செய்தி இலங்கை நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன்.
  இந்து ஆலயங்களில் மிருக பலி இடுவதற்கு யாழ்மேல் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
  இந்து ஆலயமான கவுணாவத்தை நரசிம்மர் ஆலய வேள்வியின் போது ஆடுகள் கோழிகள் என்பனவற்றை வெட்டி பூசை வழிபாடுகளில் ஈடுபடுவதனை தடை செய்யுமாறு தடையீட்டு எழுத்தாணை கோரி அகில இலங்கை இந்து மகா சபையினால் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.செய்தின் விபரம் இங்கே காண்க
  goo.gl/ChU5PV
  ஆனால் இதற்கு தமிழ்வாதிகள் என்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனராம் நாங்கள் இந்துக்கள் இல்லை. எமது மதம் சைவம். மிருக பலியிடுவது எமது மதத்தின் உரிமை. அதில் இலங்கை பவுத்த அரசின் நீதிமன்ற சட்டங்கள் தலையிட முடியாது என்று எதிர்க்கிறார்களாம்.

 29. அன்புள்ள Rishi அவா்களே எனது கருத்துக்களை பாிசீலனை செய்து அமோதித்துள்ளீா்கள்.மிக்க நன்றி. எனது உறவினா் ஒரு பையனுக்கு தாய் தந்தையில்லை.திருமணம் பெண் பாா்த்தது திருமணம் நிகழ்ச்சி நடத்துதல் அனைத்தும் நான் தான் செய்தேன்.
  01.ஜோசியா் குறிப்பிடும் முகூா்த்த நாளை நான் தோ்வு செய்யவில்லை.வசதியான ஒரு புதன் கிழமை நல்ல நாள் என்று சொல்லி திருமண தேதியை முடிவு செய்தேன்.
  02.அன்று வேறு எந்த திருமணமும் இல்லை.
  03.வேறு திருமணம் அன்று இல்லை.ஆகவே அழைத்தவா்கள் அனைவரும் கலந்து கொண்டனா். வெறும் மொய் கவா் கொடுத்து விட்டுச் செல்லாமல் திருமண நிகழ்ச்சியில் முழுமையாகக் கலந்து கொண்டு விருந்து உண்டு மகிழ்ச்சியாகச் சென்றாா்கள்.
  04. திருமணம மண்டபம் சுலபமாகக் கிடைத்தது. பாத்திரங்கள் மேளம் சமையல் காரா்கள்.பந்தல் காரா்கள் வாடகை காா்கள் காய்கறிகள் போன்ற அனைத்தும்

  மலிவான விலையில் இலகுவாக கிடைத்தது.

  திருமண ஏற்பாடுகளைச் செய்வது மிகச் சுலபமாக இருந்தது. அன்று வேறு திருமணம் இல்லை அதுதான் காரணம்.திருமணச் செலவில் 28000 மிச்சம் செய்தேன்.
  05.குறிப்பாக மாப்பிள்ளை மெற்றும் மணப்பெண் திருமண ஏற்பாடுகளுக்கு தேவையான மாலை புக்கள் மிகவும் மலிவான விலையில் கிடைத்தது .அந்த வகையில் எனக்கு கிட்டத்தட்ட ரூ 7000 மிச்சம்
  06.திருமணத்தை நடத்தி- வைக்க யாரையும் அழைக்கவில்லை. ஸ்ரீநாராயணகுரு ஏற்படுத்தியபடி அலங்காிக்கப்பட்ட ஒரு குத்து விளக்கை 3 முறை மணமக்கள் வலம் வந்து வணங்கினாா்கள். தாலி கட்டினாா் மாப்பிள்ளை. முடிந்தது திருமணம்.

  இப்படிப்டட முறையில் எனது வீட்டிலும் திருமணம் செய்ய முயன்றேன்.யாரும் ஒத்துழக்கவில்லை. அனைத்து வகையிலும் பெரும் வீண் வீண் வீண் செலவு. பணம் விரையம். மனம் நொந்தது தான் மிச்சம்.

 30. ஜிஹாதி கொடுமை ஒரு கிராமத்தின் சோகக் கதை!

  ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வி.எஸ். கர்னிக் கூறுகின்ற சோகக் கதை இது.

  ஒரு கிராமத்தில் பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், பனியா, தேலி மற்றும் ஹரிஜன்கள் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட மிகவும் சந்தோஷமாகவும் அன்யோன்யமாகவும் வாழ்ந்து வந்தனர்.

  ஒரு நாள் ஒரு முல்லா முஸ்லீம் தனது மனைவியுடனும் எட்டுப் பிள்ளைகளுடனும் அந்த கிராமத்திற்கு வந்தார். கிராம அதிகாரியிடம் அவர்கள் சென்றனர். அவர் ஒரு ராஜபுத்திரர். அந்தக் கிராமத்தில் தங்களை வசிக்க அனுமதிக்குமாறு அவர்கள் கெஞ்சினர்.

  தேலி மற்றும் ஹரிஜன சமூகங்கள் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். மற்ற அனைவரும் முஸ்லீம் குடும்பத்தைத் அனுமதிக்கலாம் என்றனர்.

  சில வருடங்கள் கழிந்தன. எட்டுப் பிள்ளைகளும் கல்யாண வயதை அடைந்தனர். முஸ்லீம் முல்லா கிராமத் தலைவரை அணுகினார். “ஹூஸூர், பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது.எனக்கு ஒரே ஒரு வீடு தான் இருக்கிறது.” என்றார்.

  ராஜபுத்திர தலைவர் தரிசாகக் கிடந்த நிலப்பகுதியை அவருக்குத் தந்து, கூறினார்: “இதில் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளுங்கள்.”

  பனியாவிடன் சென்ற முல்லா அவரிடம் பணத்தைக் கட்னாகப் பெற்றுக் கொண்டார்.

  காலம் கழிந்தது. எட்டுப் பிள்ளைக்ளுக்கு 72 பிள்ளைகள் பிறந்தன. 30 வருடங்களுக்கு அந்த கிராமத்தின் ஜனத்தொகையில் 40 சதவிகிதம் முஸ்லீமாக இருந்தது.

  இப்போது முஸ்லீம் இளைஞர்கள் அவர்களது கலாசாரத்தின்படி ஹிந்து இளைஞர்களுடன் சண்டை போடத் துவங்கினர். ஹிந்து பெண்களுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.
  மெல்ல மெல்ல பிராமணர்களும் பனியாக்களும் அந்த கிராமத்தை விட்டுச் சென்றனர்.

  ஒரு நாள் முல்லா அந்த கிராமத்தின் பிரதான கோவிலை இடித்தார். உடனே ராஜபுத்திரர்கள் இதற்கு வெகுவாக் ஆட்சேபணை தெரிவித்தனர்.

  30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒண்டிப் புக்லிடம் கேட்க வந்த முஸ்லீம்கள், “ அல்லாவின் பணியை எதிர்க்கும் எவரும் துண்டு துண்டாக வெட்டப்படுவர்” என்றனர்.

  ராஜபுத்திரர்களும் கிராமத்தை விட்டு அகன்றனர். அவர்கல் தேலி மற்றும் ஹரிஜன்களை நோக்கி, “உங்களின் பேச்சை அன்றே கேட்டிருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம். இந்த கிராமத்தின் பெயர் இப்போது பஞ்ச்வடி என்ற பெயரிலிருந்து ரஹிமாபாத் என்று ஆகி விட்டது.” என்றனர்.

  இந்த கிராமம் மஹ்ராஷ்டிர மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் உள்ளது.

  இது ஒரு உண்மைச் சம்பவம்.
  இதே போன்ற பல சம்பவங்கள் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய ப்ங்களாதேஷின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் நடந்துள்ளன.

  முஸ்லீம் ஜனத்தொகை அதிகமாக் உள்ள் உத்தர பிரதேசம், கேரளா மற்றும் இதர் மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் இது சர்வ சகஜம்.

  பிரிவினைக்குப் பிறகு காஷ்மீர் பண்டிட்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.

  ரோஹிங்யா முஸ்லீம்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதித்தால் இந்த வேலை இன்னும் தீவிரமாக நடக்கும்.

  தாராள் மனமுடையவர்களும், போலி செகுல்ரிஸ்டுகளும் மனித உரிமைக் கழகப் போராளிகளும் இந்திய நீதித் துறையும் ரோஹிங்யாக்களுக்கு ஆதரவு தந்தால் . அடடா, பாராட்டுக்கள்,பாராட்டுக்கள்!

  கொஞ்ச காலம் பொறுத்திருங்கள், ஐஎஸ ஐ எஸ் உங்களைத் துரத்தி விடுவார்கள்.பாரதத்தில் வசிப்போருக்கு பொறுமைக்கான் நோபல் பரிசு கிடைத்து விடும்.னம் நொந்து எழுதியுள்ள ஒரு உண்மைச் சமபவம் நம் கண்களைத் திறக்கட்டும். 11-9-2017 அன்று தனது பிளாக்கில இதை எழுதியுஅ வி.எஸ்.கர்னிக் நிர்வாகத் துறையில் பி.ஹெச் டி பட்டம் பெற்றவர்.

 31. திரு அ அன்புராஜ்

  உங்களது கருத்துக்களை வாசித்து மகிழ்ச்சியும் வேதனையும் எம் சமூகத்தின்மீது சினமும் அடைந்தேன்.

  இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் சனத்தொகையில் பெரும்பான்மையாக இருந்தாலும் அங்கு வசிக்கும் முஸ்லிம்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் கீழேயே பயந்து வாழ்கின்றனர். இதுபற்றிய சிறு கட்டுரை ஒன்று thinakkathir.com ல் பிரசுரமாய் உள்ளது.தலைப்பு: “சம்பந்தன் கூற்று நிகழுமானால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் வங்கக் கடலில் வீழ்வதைத் தவிர வேறு வழியில்லை”.நேற்று இக்கட்டுரையை தமிழ்ஹிண்டுவிட்கு email மூலம் அனுப்பி உள்ளேன் . அதனைப் பிரசுரித்தால் கிழக்கு மாகாண தமிழ் இந்துக்களின் நிலையை இந்திய தமிழ் ஹிந்துக்கள் அறிய முடியும். ஆசிரியர் பிரசுரிப்பாரா ?

 32. Rishi
  //இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் சனத்தொகையில் பெரும்பான்மையாக இருந்தாலும் அங்கு வசிக்கும் முஸ்லிம்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் கீழேயே பயந்து வாழ்கின்றனர்.//

  எங்கே முஸ்லிம்களின் கீழ் ஆட்சி அதிகாரம் வருகிறதோ அங்கே பிற மக்கள் யாவருமே அவர்களின் அடிவருடிகளான ஈவெரா.ராமசாமி நாயக்கரின் தொண்டர்கள், கம்யுனிஸ்ட்டுகளும் கூட அடங்கி ஒடுங்கி தான் வாழ வேண்டும்.கம்யுனிஸ்ட்டுகளை கொன்றும் விடுவார்கள்.
  மியான்மர் மக்களும், ராக்கைன் மக்களும் விழிப்படைந்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *