இந்துமதம் குறித்த அவதூறுகளை எப்படி எதிர்கொள்வது: ஒரு பார்வை

இந்து மதம் குறித்து அவதூறு பரப்புபவர்கள் எல்லாம் கிறிஸ்தவ, இஸ்லாமிய கார்ப்பரேட் கம்பெனியின் விளம்பர நடிகர்கள் போன்றவர்கள். காசு வாங்கிக் கொண்டு போய்கொண்டே இருப்பார்கள். ஆனால், ஒட்டு மொத்த இந்து தரப்பும் பதறியடித்துக்கொண்டு அதற்குப் பல்வேறுவிதமான பதில்களைச் சொல்லத் தொடங்குகிறது. .. நாம் பேச வேண்டியவற்றை மற்றவரைக் கொண்டு பேசவைப்பதென்பது மத அரசியலில் பால பாடம். கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படை சக்திகள் அதில் டாக்டரேட் முடித்து விட்டிருக்கிறார்கள். நாம் பத்தாவது பாஸ் செய்யவாவது முயற்சிகள் எடுக்கவேண்டும்…”ராஜராஜன் இந்து இல்லை என்று சொல்பவன், என் அம்மா என் அப்பாவுடன் படுத்து என்னைப் பெறவில்லை என்று சொல்கிறான்” என்று அவர்கள் மத்தியில் இருந்தே ஒருவரைப் பேசவைக்க வேண்டும்..

View More இந்துமதம் குறித்த அவதூறுகளை எப்படி எதிர்கொள்வது: ஒரு பார்வை

இசைஞானியை வசைபாடும் திமுகவினர்: பதிலடி

இங்க நீங்க வச்சது தான் சட்டம். நீங்க சொல்ற ஆளைத்தான் புகழனும். அப்படி இல்லாம உங்களுக்கு பிடிக்காதவங்க யாரையாவது புகழ்ந்து பேசினா அவரைப்பத்தி தப்பா பேசுவீங்க.. இன்றைய கோழைவுட் போல சுயலாபத்துக்காக அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டு காரியம் சாதிப்பவர் அல்ல. சரியான ஆண்மகன் எங்கள் ராஜா. இது பெரியார் மண் என்று கொக்கரித்துக்கொண்டிருந்த பொழுது, ஒவ்வொரு முறையும் “குருர் பிரம்மா குருர் விஷ்ணு” ஸ்லோகம் ஒலிக்க விட்டே மேடையேறிய புனிதன் எங்கள் ராஜா….

View More இசைஞானியை வசைபாடும் திமுகவினர்: பதிலடி

கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1

சென்ற பாராளுமன்ற தேர்தலின் பொழுது பெரும் அளவில் தமிழக நடுத்தரவர்க்க மக்களும், குறிப்பாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கமலஹாசன் கட்சிக்கு வாக்களித்தனர். அதன் காரணமாகவே திமுக கூட்டணி பல தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது… அந்தணர்கள் அடிபட்ட பொழுதெல்லாம் அவமானப் படுத்தப் பட்ட பொழுதெல்லாம் தாக்கப் பட்ட பொழுதெல்லாம் இவர் என்றுமே அதற்காக ஒரு சிறிய கண்டனத்தைத் தெரிவித்தவர் அல்லர். அந்தணர்களில் ஏழைகளுக்குக் கூட மோடி அரசு தரும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர். இவர்…

View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1

‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பரில் சுதேசிய இந்தியவியல் – 3 (Swadeshi Indology – 3) மாநாடு சிறப்பாக நடைபெற்றது.  அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ குறித்த கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ம.வெங்கடேசன், பத்மன், ஜடாயு, தேவப்ரியா ஆகியோர் உரையாற்றினர். ஈ.வெ.ராவின்  சமூக அழிப்புக் கொள்கைகள், தமிழ் ஊடகங்களின் இந்து எதிர்ப்பு மனநிலை, தமிழ் இலக்கியங்களைத் திரித்தும் அவற்றின் இந்துக்கூறுகளை இருட்டடித்தும் திராவிட இயக்கத்தினர் செய்த பிரசாரம், கிறிஸ்தவ மிஷநரிகளின் பொய்கள் ஆகியவை குறித்து இந்த உரைகள் அமைந்தன. பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த நிகழ்வின் முழு வீடியோ பதிவையும் இங்கு காணலாம்…

View More ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ

வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

ஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்..வள்ளல் பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது..

View More வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

இலங்கையில் இந்துக்கோவில் இடிப்பு!

2017ம் ஆண்டு, நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை தங்களது சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு முதலியார்குளம் கிராமத்து இந்துமக்கள் அச்சமுற்றார்கள்.  கடவுளரின் திருவுருவங்கள் அதன் இருப்பிடங்களிலிருந்டு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகில் எறியப்பட்டிருந்தன.  இந்துத் தெய்வீகத்தன்மை மாசுபடுபத்தப்பட்டிருந்தது. இந்துக்களின்பாலுள்ள பகைமை, வெறுப்பை, வன்முறையை வலுப்படுத்துகிறது இது.  கடும்பகையைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சி, சமயப் பகைமையைத் தூண்டி, வெறுப்பிற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும் நயவஞ்சகச் செயல்தான் இது.

View More இலங்கையில் இந்துக்கோவில் இடிப்பு!