இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3


கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர்.  கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.

1983ல் இலங்கை இனக்கலவரம் ஆரம்பித்தது. அதற்கும் முன்பே, இலங்கை வாழ் இந்துத் தமிழர்களை அழிக்க ஆரம்பித்தனர் அமைதி மார்க்க இஸ்லாமியர்.  உள்நாட்டுப் போரில் தமிழர்களின் ஆளுகைக்கு வந்த எந்தப் பகுதியிலும் இஸ்லாமிய, பௌத்த வழிபாட்டுத் தலங்களோ, பாடசாலைகளோ, வீடுகளோ இந்துத் தமிழர்களால் அழிக்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்படவில்லை. மாறாக இலங்கை ராணுவத்திலும், அரசியலிலும் செல்வாக்குப் பெற்ற இஸ்லாமியர்கள் தமிழர் பகுதிகளை அழித்து ஆக்கிரமிக்கத் தயங்கவே இல்லை. அமைதி மார்க்க இஸ்லாமியர் அழித்த ஏனைய கிழக்கு மாகாண தமிழர் கிராமங்கள் பற்றிய இறுதிப் பகுதி.

மீனோடைக்கட்டு கிராமம் மிக நீண்டகாலத் தமிழ் கிராமம்.

ஆனால்,  தற்போது அது ஒரு முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்தன. இக்கிராமத்திற்கு அயற்கிராமங்களாக முஸ்லிம் கிராமங்கள் இருந்தன. ஆனால், 1978 ஆம் ஆண்டு தொடக்கமே இத்தமிழ்க் கிராமம் மீது முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனால் எல்லைப்பகுதியில் இருந்த மக்கள் படிப்படியாகத் தமது இடங்களை  விட்டு வெளியேறத் தொடங்கினர்.

இஸ்லாம் அழிக்கும் இலங்கை இந்துக் கிராமங்களில் ஒன்று

அதன் பின்னர் 1985.07.12 ஆம் திகதி இக்கிராமத்தின் மீது முஸ்லிம்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கோயில்கள்,  வீடுகள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் முற்றாக வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் அக்கிராமம் முழுமையான முஸ்லிம் கிராமமாக மாறியது.

இஸ்லாமியப் பள்ளிவாசல்கள் கட்ட இடிக்கப்படும் இந்துக்களின் பாடசாலைகள்

தற்போது அங்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை உள்ளது. மீனோடைக்கட்டு என்று கூறினால் தற்போது அது எல்லோருக்கும் முஸ்லிம் கிராமமாகவே தெரியும். அவ்வாறு அதன் வரலாறே மாற்றப்பட்டுள்ளது.

மீனோடைக்கட்டைப்போன்றே ஒலுவில், பாலமுனை ஆகிய இரு முஸ்லிம் கிராமங்களை எல்லையாகக் கொண்ட கிராமம் திராய்க்கேணி கிராமம். இக்கிராமத்தையும் அழிக்கும் வகையிலும் அதை முஸ்லிம் கிராமமாக்கும் வகையிலும் பல முயற்சிகள் நடந்தன.

இக்கிராமத்தில் 360 குடும்பங்கள் இருந்தன. இங்கு வாழ்ந்தத் தமிழர்கள் மீது முதல் தடவையாக 1985 இல் தான் தாக்குதல் நடந்தது. இதனால் வழக்கம்போல் மக்கள் இடம் பெயர்ந்தனர். பின்னர் ஒரிரு ஆண்டில் மீண்டும் மீளக்குடியமர்ந்தனர்.

எம். ஹெச்.எம். அஷ்ரஃப் - தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்

ஆனால், திராய்கேணியின் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து குடியேறியிருந்தனர். ஆனால்,  இவர்களை எழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டன. இதற்குக் காரணமாக இருந்தவர் அமைச்சர் அஸ்ரப்.

அவரின் நோக்கமே மீனோடைக்கட்டு கிராமம் போன்று திராய்க்கேணி கிராமத்தையும் முஸ்லிம் கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே.

இதற்குப் பின்னர் 06.08.90 ஆம் ஆண்டில் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் முஸ்லிம் காடையர்கள் இணைந்து  இக்கிராமத்தைத் தாக்கினார்கள். இத்தாக்குதலின்போது 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பெரியதம்பிரான் ஆலயவளவுக்குள் புதைக்கப்பட்டனர்.

வீடுகள், ஆலயம், பாடசாலை என்பன முற்றாக அழிக்கப்பட்டன. தற்போது இக்கிராமத்தின் பெரும் பகுதியில் முஸ்லிம்களே வாழ்கின்றனர்.

கரவாகு கிராமம் மிகவும் தொன்மை மிக்கது. இதைச் சாய்ந்தமருது தமிழ் டிவிசன் என்றும் அழைப்பதுண்டு. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இக்கிராமம் 1965 ஆம் ஆண்டுக்கு முன்னரே பறிபோய்விட்டது.

இக்கிராமத்தில் 660 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இங்கு கரவாகு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கதிரேசபிள்ளையார் ஆலயம், விஸ்ணு ஆலயம் மற்றும் ஐயனார் ஆலயம் என்பனவும் தொன்று தொண்டு இருந்து வந்தன.

தமிழர் வயல்களை வன்முறையால் வயப்படுத்திய இஸ்லாமியத் தலைவர்

அவை  மாத்திரமின்றி இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயிகளாக இருந்ததுடன் கரவாகு வட்டை என்ற பகுதியில் ஆயிரக்காணக்கான பொன்கொழிக்கும் நெல்வயல்கள் இவர்களிடம் இருந்தது. ஆனால், இக்கிராமத்தை 1965 ஆம் ஆண்டு முஸ்லிம் காடையர்கள் தாக்கியதில் அதற்கு ஈடுகொடுக்க முடியாது கிராம மக்கள் வெளியேறினர். அதன் பின்னர் இக்கிராமம் தனி முஸ்லிம் கிராமமாக மாறியது. இதற்கு அப்போது அங்கு அரசியல்வாதியாக இருந்த எம்.எஸ்.காரியப்பர் பின்னணியில்  இருந்தார்.

தமிழ்ப் பாடசாலை 70 ஆம் ஆண்டில் அல்.அமீன் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. கோயில்கள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டன. அவர்களின் வயல்காணிகள் அனைத்தும் முஸ்லிம்களின் உடமையானது.

வீரமுனை கிராமத்தையும் பல தடவைகள் முஸ்லிம்கள் இராணுவத்தினரின் உதவியுடன் அழித்தனர். அக்கிராமத்தின் பெரும் பகுதியில் அத்துமீறிக் குடியேறினார்கள். தற்போதும் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளில் சுதந்திரமாக வாழ்ந்து அனுபவித்து  வருகின்றனர்.

இந்த வீரமுனைக்கிராமம் வரலாற்றைக் கொண்ட கிராமம். இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது முதன் முதலில் 1954 இல் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் 1958 இல் தாக்குதல் நடத்நதது. இவையனைத்தும் முஸ்லிம்களினாலேயே நடத்தப்பட்டன. பின்னர் 12.081990 இல் தாக்கப்பட்டு பின்னர் முழுமையாக அழிக்கப்பட்டது. இத்தாக்குதலை விசேச  அதிரடிப்படையினரும் முஸ்லிம்களுமே செய்தனர்.

850 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வந்தன. ஆரம்பம் முதல் இறுதிவரையான இத்தாக்குதல்களின் போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வீரமுனை கிராமம் தற்போதுவரை அதன் பழைய நிலையை அடையவில்லை.

இக்கிராமம் மாத்திரமின்றி அருகில் இருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களான சம்மாந்துறை தமிழ்ப்  பிரிவு, கோரக்கர்கோயில் கிராமம், மல்வத்தை புதுநகரம், கணபதிபுரம், வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரன்சோலை ஆகிய கிராமங்களும் அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம் குடியேற்றங்கள் செய்யப்பட்டன.

அழிக்கப்பட்ட இந்துக் கோயிலில் அலைபாயும் தமிழ் சிறார்

திருகோணமலை மாவட்டம் 

திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் தலைநகராக உள்ளது. இங்கு பல வளங்களும் உள்ளதுடன் இயற்கைத் துறைமுகமும் அமைந்துள்ளது.

இங்குள்ள வளங்கள் மற்றும் புவிசார் அமைப்பைக் காரணங்களாகக் கொண்டு சிங்களக் குடியேற்றங்கள் மிகவும் துரித கதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன; மாத்திரமின்றி, உலக நாடுகளும் இங்குத் தமது தளங்களை அமைத்துள்ளன. இந்த வகையில் முஸ்லிம்களும் தங்கள் இருப்பைப் பலப்படுத்தும் வகையில் பல அத்துமீறிய குடியேற்றங்களைத் தமிழ் பகுதிகளில் செய்துள்ளன.

பாழாக்கப்பட்ட பாலாலி கோவில்

பள்ளிக்குடியிருப்பு கிராமம் மிகவும் செழிப்பான தமிழர்களின் ஆதிக்கிராமம். இதற்கு அருகில் தோப்பூர் கலப்புக் கிராமம் உள்ளது. ஆனால், 1990 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்குடியிருப்புக் கிராமத்தின் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கிருந்த மக்கள் அச்சம் காரணமாக வெளியேறத் தொடங்கினர். எனினும், பல குடும்பங்கள் அச்சத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இக்பாலநகர் என்ற புதிய கிராமத்தை முஸ்லிம்கள் உருவாக்கியுள்ளனர். இக்கிராமம் தற்போது பரபரப்பான வளமுடைய கிராமமாக மாறியுள்ளது. ஆனால், ஆதிக்கிராமமான பள்ளிக்குடியிருப்பு தற்போது பின்தள்ளப்பட்டுத் தேய்ந்து போய்விட்டது.

அழிக்கப்பட்ட அம்மன் கோவிலில் கதறும் பூஜாரி

உப்பாறு கிராமம் பல தடவைகளில் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்கானது. இக்கிராமம் கிண்ணியாவுக்கு அருகில் உள்ளது. கிண்ணியாவில் இரு இனத்தவரும் இரு வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இங்கும் அடிக்கடி கலவரங்களை முஸ்லிம்கள் ஏற்படுத்தினாலும், தமிழ் மக்கள் அந்நேரத்தில் இடம் பெயர்ந்தாலும், பின்னர் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி விடுவது வழக்கம். ஆதலால் உப்பாறு மக்கள் 1983, 1985 ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களின்போது இடம் பெயர்ந்தபோதிலும் பின்னர் நிலமை சீரானதும் மீளக்குடியேறினர். எனினும், முஸ்லிம் காடையர்களும் ஊர்காவல் படையினரும் தொடர்ந்து இக்கிராம மக்கள் மீது தாக்குதலை நடத்தியே வந்தனர். இறுதியில் 90 ஆம் ஆண்டு இக்கிராமத்தின் மீது பாரிய அளவு தாக்குதல் நடத்தியதால் தமிழர்களின் வீடுகள், பாடசாலை, ஆலயங்கள் சேதமாக்கப்பட்டன.

இந்நடவடிக்கைகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்தௌபீக் மற்றம் அப்துல் மஜீத் போன்றோர் பின்னணியில் இருந்தனர். தற்போது உப்பாறு கிராமம் முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. அங்கிருந்த றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை தற்போது முஸ்லிம் வித்தியாலயமாக மாற்றப்பட்டுள்ளது.

சிவன்கோயில், பிள்ளையார் கோயில்கள் இருந்த இடங்களில் பள்ளிவாசல்களும் பொதுக் கட்டிடங்களும் அமைக்கப்பட்டுச் செறிவான குடியேற்றம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் கற்று வந்த றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலை அயற்கிராமத்திற்கு இடம் பெயர்ந்து இயங்கி வருகின்றது.

குரங்குபாஞ்சான் கிராமமும் அப்பகுதி நிலங்களும் தமிழர்களின் சொத்து. ஆனால், 90 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் இக்கிராமத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்த முஸ்லிம்கள் தற்போது குடியேற்றத்தைச் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இறக்கக்கண்டி கிராமத்தின் பெரும் பகுதியும் தற்போது தமிழர்களிடமிருந்து பறிபோயுள்ளது. இங்கிருந்தும் தமிழர்களை விரட்டியடிப்பதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்தௌபீக் காரணமாக இருந்தார். இவரின் பின்னணியில் முஸ்லிம்கள் மக்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கும் முஸ்லிம் குடியேற்றம் நடைபெற்றுள்ளது. தமிழர்கள் தற்போது சிறுபான்மையாகவே இக்கிராமத்தில் வாழுகின்றனர்.

மூதூர் திருகோணமலை மாவட்டத்தின் ஒரு உபநகரமாகவே இருந்தது. நீண்ட காலமாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். சில முஸ்லிம்களும் வாழ்ந்தனர். நகரின் பெரும் வியாபார நிலையங்கள் அனைத்தும் தமிழர்களுடையதாகவே இருந்தன. ஆனால், இந்த நகரைத் தமது கையில் கொண்டுவர வேண்டுமென முஸ்லிம்கள் திட்டமிட்டனர். இந்த நிலையில் பல தடவைகளில் மூதூர் நகரமும் தமிழர்களின் சொத்துக்களும் எரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டங்களில் மூதூர் மக்கள் அயற்கிராமங்களுக்குப் பாதுகாப்புத்தேடிச் செல்வது வழக்கம். எனினும், தொடர்ந்து இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இடங்களை முழுமையாக விட்டுவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், தற்போது அங்கு முஸ்லிம்களே அதிகம் வாழுகின்றனர். நகரின் பெரும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம்களே உள்ளனர். தற்போது 40 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களே மூதூரில் நிரந்தரமாக வாழுகின்றனர்.

உலகம் முழுவதும் இனப்படுகொலை செய்யப்படும் இந்துக்கள்

இதுபோன்று இன்னும் பல தமிழ் கிராமங்களின் சோக வரலாறும் கறைபடிந்த சம்பவங்களும் உள்ளன. குறிப்பாகப் பார்க்கப்போனால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கிராமங்களே அழிக்கப்பட்டன; அத்துமீறிக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டன. இது பெரும்பான்மை சிங்களவர்களாலும் சிறுபான்மை முஸ்லிம்களினாலுமே இடம் பெற்றன.

இந்தியர் அறியாத இந்துத் தமிழர் துயர்

போர் நடைபெற்ற வேளைகளில் சில சிங்கள முஸ்லிம் கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின என்பது உண்மை. ஆனால், திட்டமிட்ட முறையில் எந்த இனத்தவருடைய கிராமங்களும் தமிழர்களினால் அழிக்கப்படவோ அல்லது ஆக்கிரமிக்கப்படவோ இல்லை. சிங்கள, முஸ்லிம் இனத்தவரின் வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை. ஆனால் தமிழர்களின் பல வணக்கத்தலங்கள், பாடசாலைகள் என்பன முஸ்லிம்களினால் அழிக்கப்பட்டும் பின் தங்களின் இனத்திற்கென மாற்றப்பட்ட சம்பவங்களே வரலாறாக உள்ளன.

(இத்தொடர் முடிவுற்றது.  இஸ்லாமியத் தீவிரவாதம் முடியுமா ?)

8 Replies to “இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3”

 1. அன்புள்ள இந்துசகோதரர்களே

  ராஜ் ஆனந்தன்எழுதிய இந்த கட்டுரை உங்களின் இந்த கண்களை திறந்திருக்கும் என்று நினைக்கிறேன்.இந்து சமூகம் எப்படியெல்லாம் அடக்கி ஒடுக்கப்படுகிறது இலங்கையில். பௌத்த இனவாதம் ஒருபக்கம் இஸ்லாமிய ஒடுக்கு முறை ஒருபக்கம் கிறிஸ்தவ மதமாற்றம் ஒருபக்கம் எப்படியெல்லாம் இந்துத்தமிழ் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நமது பாரத தேசத்தில் எத்தனை இந்து மத பீடங்கள் உள்ளன.
  இவை எத்தனையோ சமூக சேவைகள் செய்கின்றன என்பதை மறுக்க முடியாது.ஆனால் அதே நேரத்தில் ஏனைய நாட்டு இந்து சமூகங்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த இந்து மத பீடங்கள் ஆவன செய்ய வேண்டும்.எந்த நாட்டிலானாலும் சரி இந்துக்கள் பாதிக்கப்பட்டால் கடுமையான கண்டனங்கள் எழுப்பபடவேண்டும்.அத்துடன் அந்தந்த நாட்டுக்கு அழுத்தங்கள் கொடுப்பதில் பின்னிற்க கூடாது. ஒரு இஸ்லாமிய அன்பருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கொதித்தெழுவது போன்று ஒரு இந்துவிற்கு பாதிப்பு ஏற்ப்ப்படும்போது அனைத்து இந்துக்களும் கொதித்தெழவேண்டும். அப்போது தான் எமது பலம் மற்றவர்க்கு புலப்படும் இதற்க்கு ஒரே வழி நமது பாரத நாடு ஒரு இந்து வல்லரசாக வேண்டும்.அதற்காக ஒவ்வொரு இந்து மகனும் பாடுபடவேண்டும்.இதற்கு எல்லாம் வல்ல இறைவன் எமக்கு பலத்தை அருளுவானாக.அனைத்து மகான்களுக்கும் நமஸ்காரம்.நன்றி.

 2. நாம் இந்திய ஹிந்துக்கள் ஈழ விடுதலை போரை இந்துக்கள் போராக கருதி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? ஏதோ தமிழர்களின் போராக இந்தியர்கள் மெத்தனமாக இருந்து விட்டோம், இந்தியாவின் பாதுகாப்பிற்கு நாமே வேட்டும் வைத்து விட்டோம்.

 3. //நாம் இந்திய ஹிந்துக்கள் ஈழ விடுதலை போரை இந்துக்கள் போராக கருதி இருந்தால்//
  இலங்கையை பிரித்து கிறிஸ்தவ நாடு ஒன்றை உருவாக்கும் அழிவு முயற்சிகள் இந்துக்களின் போர் கிடையாது. நரிதந்திரமான முயற்சியில் பாதிக்கபட்டவர்கள் இந்துக்கள். தமிழா நெருப்பாய் இரு தமிழா கவர்ச்சிகளாலும், இலங்கை பற்றி மேற் கொள்ளபடும் பிரசாரங்களினாலும் தென் இந்திய ஹிந்துக்கள் சிலர் கவரப்பட்டாலும் பெரும்பான்மை இந்திய ஹிந்துக்களுக்கு தலைவணங்குகிறேன்.
  தென் இந்தியாவில் தமிழில் வரும் செய்திகளை பார்த்து இலங்கை ஹிந்துக்களுக்கு தாங்கள் எங்கே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சந்தேகமே ஏற்படுகிறது.

 4. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு முஸஂலீம்கள் 100% வாழும் காத்தான்குடி எல்லையில் அமைக்கப்பட்டிருந்த “வணக்கம் மட்டக்களப்பு உங்களை வரவேற்கின்றது” என்ற வரவேற்பு பலகை அகற்றப்பட்டிருந்தது.காரணம் அரபு மதத்தின்படி வணக்கம் என்பது ஹராமாம். என்றாலும் முஸஂலீம்கள் காத்தான்குடி நகரசபைக்கு எழுத்து மூலம் அறிவித்து ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் “வணக்கம் மட்டக்களப்பு உங்களை வரவேற்கின்றது” என்ற பெயர்ப்பலகை மீண்டும் நடப்பட்டது.சில தினங்களுக்கு முன்னர் அந்த பெயர்ப்பலகையில் மை ஊற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதானது .மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் யார் தடுத்தாலும் அவ்விடத்தில் வரவேற்பு பலகை மீண்டும் நிறுவப்படும் என தெரிவித்தார்.காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களின் எல்லையில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தரின் சிலை இந்த வருட ஆரம்பத்தில் சேதமாக்கபட்டது. இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளுமே அரச மொழிகளாகும். ஆனால் காத்தான்குடியில் அரச மொழியல்லாத அரபியிலும் வீதிகள் பெயர்ப் பலகைகள் எழுதபட்டுள்ளது.

 5. இது எல்லாம் இந்தியா என்று ஒரு நாட்டினால் தமிழ் இந்துக்களுக்கு ஏற்பட்டது.இந்தியாவின் பின் பலத்தை வைத்துதான் தமிழர்களை இந்த அளவு கேவலமான நிலைமைக்கு தள்ளியது இலங்கை அரசும் மற்றவர்களும் .

 6. //இது எல்லாம் இந்தியா என்று ஒரு நாட்டினால் தமிழ் இந்துக்களுக்கு ஏற்பட்டது//

  தமிழர்கள் தங்கள் தாய் மதத்தைவிட்டு அரபு மதத்திற்கு மாறியதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புகளில் ஒன்றே தனது மொழியில் உள்ள வணக்கம் என்ற சொல்கூட பிடிக்காமல் போய்விட்டது. இதற்கும் இந்திய அரசு, இலங்கை அரசு க்கும் சம்பந்தமில்லை. இந்திய அரசு தனது நாட்டில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

 7. மஞ்சளாரும் , அவரது குடும்ப கழகத்தின் அடிவருடிகளாம் திருமா, பரிசுத்த ஆவியில் இட்டலி வேகவைக்கும் வீரமணி, சுபவீ ஆகிய கோமாளிகள் நடத்திய டெசோ மாநாடு 12.8.2012- அன்று முடிவடைந்தபின்னர் , அந்த மாநாட்டில் பங்கேற்ற ஒரே சிங்கள இனத்தவரான , இலங்கையில் உள்ள நவ சமாஜ கட்சியின் தலைவர் திரு விக்ரமபாகு கருணாரத்ன குமுதம் ரிப்போர்டர் பத்திரிகையில் அளித்துள்ள பேட்டியில்

  ” இலங்கை பிரச்சினையில் இந்திய அரசின் நிலைப்பாடு தவறாக உள்ளது. இந்திய அரசின் உதவியுடன் தான் இலங்கையில் இனப்படுகொலை நடந்தது. இலங்கையில் நடந்த போரில், காங்கிரசு கட்சியின் தலைமையில் ஆன, இந்திய அரசுதான் போரினை முன்னின்று நடத்தி இனப்படுகொலை செய்தது.இதனை டெசோ மாநாட்டில் பேச வந்தபோது , நேரமில்லை என்பதனை காரணம் காட்டி , என்னை முழுமையாக பேசவிடாமல் தடுத்துவிட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.

  சுமார் ஒன்றரை லட்சம் சிவிலியன் தமிழர்களை கொன்று குவித்த சோனியா காங்கிரசு கட்சிக்கு தன் மானத்தை அடகுவைத்த டெசோ நடிகர்கள் இனியாவது திருந்துவார்களா? மஞ்சள் தன் குடும்ப சுய
  நலனுக்காக இலங்கை தமிழினத்தையே அழித்துவிட்டார். தமிழக வாக்காளர்களும் வரும் தேர்தல்களிலும் , திமுக காங்கிரசு விஷ கூட்டணியை தகர்த்து எறிவர்.

 8. ஆலய உடைப்பு, நில அபகரிப்புகளுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில் பெருமளவான இந்துகள் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் கொலை செய்யப்பட்டனர்.

  அதுமட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் சிங்கள படையால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை விட முஸ்லிம் ஊர்காவல் படையினரே அதிகளவான பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபட்டனர். (கிழக்கு மாகாணத்துக்கு மட்டுமே பொருந்தும் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *