இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்

தமிழாக்கம்:  ஒரு அரிசோனன்

குறிப்புஇலங்கையில் தமிழ்பேசும் இந்துசமயத்தோரைச் சமயமாற்றம்செய்யும் முயற்சி அதிகமாக நடந்துவருவதால், அதைதடுத்து இந்துசமயத்தோரை ஒருமுகப்படுத்தும்வகையிலும், சமயமாற்றத்தைத் தடுக்கும்வகையிலும், முறைப்படி அரசுநடவடிக்கைகள் எடுக்கும்வகையிலும், சிவநேயர்கள் ஒன்றுகூடி சிவனுடைய படையாகத் திரளவேண்டி, “சிவசேனை” என்று ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.  அதைப்பற்றி இலங்கையில் தமிழ்த்தொண்டாற்றிவரும் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமே இது.  கட்டுரையில் ‘நான்’ என்றுவரும் சொல் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களைக் குறிக்கிறது

— ஒரு அரிசோனன்

***

மே 19, 2009ல் போர் முடிந்துவிட்ட சூழ்நிலையில் மரபுசார்ந்த மற்றும் மலைவாழ் தமிழ் இந்துக்களின் உறைவிடங்களில் நாங்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகிறோம் என்று மிகமிகக் கவலையுறுகிறோம்.  அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன.  அவையாவன:Related image

 1. வன்முறையாகவும், வலுக்கட்டாயமாகவும் கிறித்தவ, இஸ்லாமியச் சமயமாற்றல்,
 2. அரசுத் துணையுடன் புத்தசமயத்தோரும், மேற்கத்திய நாடுகளின் பணபலத்துடன் கிறித்தவர்களும், மத்தியகிழக்கு நாடுகளின் பெருத்த பணவுதவியுடன் இஸ்லாமியர்களும் அடுத்தடுத்து ஊடுவித்து எங்கள் தொழுகையிடங்களைத் தகர்ப்பது.

அத்துடன்,

 • சமூக, உள்ளாட்சி, மானில அரசு, மற்றும் பாராளுமன்றத்திற்கான மக்களாட்சித் தேர்தல்களில், எங்கள் இன/சமயத்தைச் சாராத, எங்கள் நலத்தில் விருப்பமில்லாத, எதிராகச் செயல்படும் போட்டியாளர்களிலிருந்து எங்கள் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கவேண்டிய சூழ்நிலையும் உள்ளது.

இது எப்படி உருவாகியது?

இம்மண்ணின் மைந்தர்களின் குமுறிய மனங்களும், கொதிக்கும் குரல்களும் தங்களுடைய ஆற்றொணாத் துயரங்களுக்கு வடிகாலாகவும், அவற்றை வெளிப்படுத்தவும் ஒரு வழியைத் தேடின.  ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு இந்துக்குழுவோ, கூட்டமைப்போ, அமைப்புமுறையோ இருந்தும், நாட்டளவில் சில நிறுவனங்களும் இருப்பினும்,  இவை மரபுசார் நம்பிக்கைகளையும், பண்புகளையும் நிலைபநிறுத்துதலிலேயே கவனம் செலுத்திவந்தன.

ஆயினும், எவையும் தங்கள் நம்பிக்கைகளுக்கும், பண்புகளுக்கும் ஏற்பட்டுவரும்  மேற்சொன்ன ஆபத்தை, தீங்கை உணரவோ, அதில் கவனம் செலுத்தவோ இல்லை.  முப்பதாண்டுகளாக ந்டந்த போர் அவர்கள் மனதில் ஒரு அச்ச உணர்வைத் தோற்றுவித்திருந்தது.  அவர்கள் குரல்கொடுக்கத் தயங்கும் குழுக்களாகவே — மரங்களாகவே — கேலிச்சித்திரங்களாகவே வாழ்ந்துவந்தார்கள்.

குறிப்பிட்ட அளவுக்குத் துணிவோ, திடநம்பிக்கையோ உள்ளவர்களை ஆபத்தானவர்கள், தொல்லைகொடுப்பவர்கள் என்றே எண்ணினார்கள்.  ஒன்றோடொன்று தொடர்பில்லாத சில குழுக்கள் மேற்சொன்ன விஷயங்களைப்பற்றிக் கவனம்செலுத்த யதேச்சையாகச் சந்தித்துவந்தன.

ஆகஸ்ட் 2016வாக்கில் கட்டுரையாளரை இம்மாதிரியான சந்திப்புக்கு அழைத்து, அவரது கருத்து கேட்கப்பட்டது. இந்த ஒன்றிணைந்த குழுவுக்குவைக்க நீளமான, சுருக்கமான பலபெயர்கள் தெரிவிக்கப்பட்டும், நான் உறுதியளிக்கும், கவர்ச்சியான — பண்பாட்டை ஊடுருவும் அன்னியருக்கு — வலிமையான, ஆற்றலுள்ள, பலமான செய்தியத் தரக்கூடிய சிவசேனை என்ற பெயரைத் தெரிவித்தார். கூட்டத்திலிருந்த பலரும் தாமாகவே எழுந்து கரவொலியெழுப்பி இப்பெயரை ஏற்றுக்கொண்டனர்.

இலங்கையின் பதினாறு மாவட்டத்தின் பல்வேறு குழுக்களின் பிரதிநிதிகள் அக்டோபர் 2016ல் வாவுனியாவில் கூடினார்கள்.  கட்டுரையாளரை இலங்கைநாட்டு கூட்டுநராகச் [convenor] செயல்படும்படி கேட்டுக்கொண்டனர்.  நாள்முழுவதும் பலவிஷயங்கள் விவாதிக்கப்பட்டு, மேற்குறித்த மூன்று விஷய்ங்கள்மட்டும் சிவசேனை சமாளிக்கவேண்டிய பிரச்சினைகளாகத் தீர்மானிக்கப்பட்டன.  சிவசேனையின் அமைப்பை ஒழுங்குபடுத்துதல் செயல்பாட்டுக் கட்டமைப்பு தயாராகும் நாள்வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் இலங்கைச் சிவசேனையில் செயலாற்றல்கள்:

அறைகூவலகளை நேரில் சந்தித்துச் செயலாற்றப்பட்டது.   சூழ்நிலைகள் துணிவுடனும் எளிதாகவும் எதிர்கொள்ளப்பட்டன.  சட்ட-ஒழுங்கு விதிமுறைகள் எந்நிலையிலும் மீறப்படாமல் கவனமாக அடியேடுத்து வைக்கப்பட்டன.  நாட்டின் சட்டத்தைப் பின்பற்றியே எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.  இலங்கைச் சிவசேனை சந்தித்த சில முக்கியமான நிகழ்ச்சிகள்:

 1. மூன்றாம்பிட்டி, மன்னார்: இந்துக்கோவிலுக்குச் செல்லும் பொதுச்சாலையை மறித்து வேலியெழுப்பினார் ஒரு கிறிஸ்தவப் பாதிரி.  மூன்று ஆண்டுகளாக இருந்த இந்த வேலியால் இந்துக்கோவிலின் திருவிழாக்கள் குன்றின.  எத்தனைமுறை முறையிட்டும் பயனில்லாது போனது.  நான் அந்த இடத்திற்குச் சென்று வேலியை எடுக்கத் துவங்கினார்.  சமயக்கலவரம் உருவாகும் எனப்பயந்த பக்தர்கள் அதைத் தடுத்தனர்.  எனவே, நான் அங்கிருந்து மாவட்ட/பிரிவு நிர்வாகத்துடன் தொலைபேசித் தொடர்புகொண்டேன்.  என்னுடைய அடிப்படை உரிமையான கோவிலுக்குச் சென்று தொழுவதற்குப் பாதுகாப்பு வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன்.  அவர்களுக்கு இந்நிலை தெரிந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கமலிருந்ததை அறிந்தார்கள். ஆகவே, பிரிவு நிர்வாகி வேலியை எடுக்க அவருக்கு நான்கு நாள்கள் நேரம்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.  நான்காம் நாள் அதிகாரிகள் குழு வேலியை நீக்கியது.  மூன்றாண்டுகளாக உள்ளூர் மன்றங்கள் செய்யமுடியாத ஒன்றை சிவசேனை என்ற பெயர் எப்படிச் செய்தது?  வேலியை எடுக்கமுயற்சிக்கும்போது நான் தனியனாக இருந்தேன் என்பதை நம்யுங்கள்!
 2. வெள்ளங்குளம், மன்னார்: ஜனவரி 14, 2017ல் இரவோடிரவாக எட்டடி உயரமுள்ள சிலுவையொன்று கிறிஸ்தவப் பாதிரியால் அவருடைய அடியாள்களுடன் இந்து கிராமத்தின் நடுவில் நிறுவப்பட்டது.  அதை விரும்பாத நாங்கல் உள்ளூர்/பிரிவு நிர்வாகத்தை அணுகினோம்.  எதுவும் நடக்கவில்லை.  மூன்றுமாதம் காத்திருந்தபின் ஏப்ரல் 23, 2017ல் இந்துக்களால் அந்த சிலுவை அகற்றப்பட்டது[i].   கிறிஸ்தவர்கள் சாலையோரத்திலிருந்த கோவிலுள்ள பிள்ளையார் சிலையை உடைத்ததுடன், அருகாமையிலுள்ள இந்துக்கோவில்களைத் தகர்க்கப்போவதாகவும் பயமுறுத்தினார்கள்.[ii]  போலீஸ் இந்தப் புகாரைப் பதிவுசெய்தது.  நான் அப்பகுதிப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றபோது அங்கிருந்த அதிகாரி இந்துக்களின் பொறுமையை மிகவும் பாராட்டினார்.  இப்பொழுது இந்துக்களின் கிராமத்தில் ஒரு போலீஸ் பணியிடம் உள்ளது.
 3. பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்: கிறிஸ்தவர்களே இல்லாத இடத்தில் ஒரு இந்துக்கோவிலின் நிலத்தை அடுத்து, கிறிஸ்தவசமயத்தைப் பரப்புவதற்கான ஒரு சர்ச் கட்டப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நாங்கள் கோவிலைக் கட்டமுனைந்தோம்.  கிறிஸ்தவப் பாதிரி போலீசிடம் புகார்கொடுத்தார்.  எனக்கு அழைப்பாணை [summons] வரவே, நான் போலீசாரிடம் நிலைமைய விளக்கி, மரபுசார்ந்த தொழுகை உரிமையைப்பற்றிச் சொன்னேன்.  போலீசார் கிறிஸ்தவப் பாதிரியின் புகாரைத் தள்ளுபடி செய்து, நீதிமன்றத்திற்குப் புகாரை எடுத்துச்செல்லுமாறு பணித்தனர்.  நாங்கள் சுதந்திரமாகக் கோவிலை எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டது.
 4. புனித அன்னி பள்ளி, மானிப்பாய், யாழ்ப்பாணம்: இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தப் பள்ளியில் நூறு ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் திருநீறு, திலகமணிய இருந்த தடையை நீக்க, பள்ளிமுதல்வர் சகோதரி டொரொத்தி ஒப்புக்கொண்டார்.
 5. முகத்தாங்குளம், வாவுனியா: ஹனுமான் கோவிலின் புதுப்பிக்கும் வேலையை அக்ரிகல்சுரல் சொசைட்டி தலைவரான ஒரு கிறிஸ்தவர் சட்டத்தைமீறித் தடைசெய்தார்.  இது நடந்து மூன்றாண்டுகள் சென்றபின்னர், விஷயமறிந்து நான் இதில் தலையிட்டபின் புதுப்பிக்கும் வேலை துவங்கியது.  இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள கிராமம் இது.  இங்கிருக்கும் இந்துக்களுக்கு கிறிஸ்தவர்கள் அளவுக்குக் கல்வியறிவு இல்லாமையால் ஒரு கிறிஸ்தவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.   இந்து வேட்பாளர்களையே தேர்ந்தெடுக்கும்படி நாங்கள் சுவரொட்டிகளை ஒட்டினோம்.  இங்குள்ள் 156 இந்துக்களின் வீடுகளிலும் நந்திக் கொடிமரங்களை நாட்டினோம்.  பெரும்பாலோனோர் தங்கள் சுற்றுச்சுவர்களுக்குள் நடப்பட்ட நந்திக் கொடிகளுக்கு வழிபாட்டைத் துவங்கினார்கள்.  தன்னார்வலர்கள் துவக்கத்தில் அவர்களுக்கு வழிபாட்டு உதவி செய்தார்கள்.
 6. தென்மராட்சி, யாழ்ப்பாணம்: இறைச்சிக்காக காளைமாடுகளை அதிக அளவில் திருடுவது தினப்படி நடக்கும் செயலாக இருந்தது.  இத்திருடர்களுக்கு இப்பகுதியிலுள்ள ஒரு முஸ்லிம் கசாப்புக்கடைக்காரர் பண உதவி அளித்துவந்தார்.  ஆனால் அவரது கசாப்புக்களத்தில் லைசென்ஸ்பெறாத, அல்லது திருடப்பட்ட காளைமாடுகளே வெட்டப்பட்டன.  நாங்கள் பசுவதையைத் தடுக்கச் சுவரொட்டிப் போராட்ட த்தை மேற்கொண்டோம்.  நாங்கள் மாவட்டக் காவல்துறை மேலதிகாரியைச் சந்தித்து மனு கொடுத்தோம்[iii].  எங்களுக்கு இம்முயற்சியில் பவுத்தசமய நிறுவங்களின் ஆதரவு இருந்தது.  சில ஊழலான போலீசாருக்கும் கசாப்புக்கடைக்காரருக்கும் இடையேயுள்ள தொடர்பும் அம்பலப்படுத்தப்பட்டது.  இப்பொழுது நிலைமை எப்பொழுதாவது நடக்கும் திருட்டுகளுடன் கட்டுக்குள் இருக்கிறது.  நீதிபதி இந்துமக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதைத் தவிர்க்குமாறு கசாப்புக்கடைக்காரருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
 7. நீராவி, அனுராதபுரம்: நவராத்திரித் திருவிழாவின் கடைசிநாளன்று முஸ்லிம்கள் சக்தி கோவிலின்[iv] கருவறையில் நுழைந்து அங்கிருந்த அடிவர்களைத் தாக்கி, ஒருவரின் தலையில் கத்தியால் குத்தி, கடவுளர்களின் திருவுருவச்சிலைகளை உடைத்தெறிந்து திருவிழாவுக்கு இடையூறு விளைவித்தனர்.  சின்மயா மிஷனிலிருந்து ஒரு சுவாமிகள் அடுத்தநாள் அங்கு எங்களைச் சந்தித்தார்.  அடியவர்களுக்கு ஆறுதல்கூறி, புனிதத்தன்மையை மீட்டெடுக்கும் சடங்குகளை நிறைவேற்றச்செய்தோம்.  தாக்கப்பட்ட அடியவரின் முழு மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டோம்.  மாநில ஆளுநர், மாவட்ட நிர்வாகி, காவல்துறைத் தலைவர், மற்றும் ஒரு பவுத்த மதகுருவையும் சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறினோம்.  இங்குள்ள தலைமைத்திறன் குறைந்த சிறுபான்மை இந்துக்கள் தற்பொழுது எங்களுடன் இணைந்தபின் பாதுகாப்பாக உணர்கிறார்கள்
 8. தாளடி, செம்மன் தீவு, அடம்பன், மன்னார்: சாலையோரத்திலிருந்த மூன்று ஆனைமுகன் திருவுருவங்கள் ஒரேநாளில் உடைக்கப்பட்டன.  காலையில் அதைக்கண்ட நாங்கள் பொழுதுசாய்வதற்குள் புதுத் திருவுருவங்களை நிறுவிக் கொட்டகைகள் அமைத்தோம்.  மரபுப்படி பெண்கள் பால்பொங்கல்வைத்து மகிழ்ந்தார்கள்.  ஒருவாரத்திற்குப்பின்னர் மீண்டும் சேதப்படுத்தப்பட்டன.  மீண்டும் புது ஆனைமுகன் திருவுருவங்கள் எங்களால் நிறுவப்படும்.
 9. கனகபுரம் சக்தி கோவில், கிளிநொச்சி: இக்கோவிலையடுத்து ஒரு இராணுவ முகாம் உள்ளது.  இராணுவம் கோவில் பிரகாரத்தில் எட்டு/ஒன்பதடி உயரமுள்ள ஒரு புத்தர் சிலையை நிறுவியது.  இப்பிரகாரத்தில்தான் ஒவ்வொரு ஆண்டும் இரத ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.  எவ்வளவுதான் புகார்கொடுத்தும் பயனேதுமில்லை.  இவ்விஷயத்தை மிகவும் உயர்மட்டத்திற்கும் எடுத்துச் சென்றோம்.  கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் முறையீடுசெய்ய ஆயிரம் அடியவர்களுடன் ஐந்து மைல் [எட்டு கி.மீ.] போராட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டேன்.  பவுத்த சமயம் நாட்டின் முதன்மையான சமயமாகவும், இராணுவம் பவுத்த இராணுவமாகவும் இருப்பதால், இந்துக்களின் உரிமைக்குரல் புறந்தள்ளப்படுகிரது.  போரில் அடைந்த தோல்வியும் ஒரு காரணம்.  இது பவுத்த ஆட்சி எல்லையை விரிவுபடுத்தும் கொள்கையாகவும், வன்தாக்கமாகவும் அமைகிறது.  இராணுவத்தினரைத்தவிர இங்கு பவுத்தசமயத்தோர் எவருமில்லை.  தமிழ்நாடு இந்து மக்கள் கட்சிச் செயலர் திரு இராம ரவிகுமார் என்னுடன் இங்கு வருகைதந்தார்.  இந்தக் கொடுமையான பவுத்த ஆக்கிரமிப்புக்கு அவரும் ஒரு சாட்சி.
 10. கொக்கிலை, முல்லைத்தீவு: புத்தபிக்குகள் மடவிளாகம் கட்டுவதற்காக முந்நூறு இந்துக்கள் வாழும் கொக்கிலை கிராமத்து விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான ஒரு நிலம் கையகப்படுத்திக்கொள்ளப்பட்டது.  இக்கிராமத்தில் பவுத்தர்கள் எவருமில்லை.  இருந்தபோதிலும், அரசு அமைச்சர் ஒருவர் இந்துக்களுக்கு தொந்தரவு செய்வதற்கென்றே ஒரு புத்தபிக்குவைத் தூண்டியுள்ளார்.   இப்பொழுது விநாயகர் கோவில் அங்கு இல்லை.  கோவிலின் டிரஸ்டி வழிபாடு நடத்த இயலாதுபோனால் உயிரை விட்டுவிடப்போவதாக என்னிடம் கூறிவருகிறார்.  தமிழ்நாடு இந்து மக்கள் கட்சிச் செயலர் திரு இராம ரவிகுமார் என்னுடன் இங்கும் வருகைதந்தார்.  இங்கு நடந்தேறிவரும் இன்னொரு கொடுமையான பவுத்த ஆக்கிரமிப்புக்கு அவரும் ஒரு சாட்சி.
 11. இந்துபுரம், முரிகண்டி, ஒட்டுசுத்தன், முல்லைத்தீவு: சமீபத்தில் கிறிஸ்தவசமயத்திற்கு மாறிய ஒருவர் சிவன் கோவிலின் முகப்புத்தளத்திற்கு எதிரில் ஒரு கொட்டகை எழுப்பியுள்ளார்.  அடியார்கள் கூடுவதைத் தடைசெய்கிறார்.  எனவே, அடியவர்கள் பக்கத்தில் இன்னொரு கோவில் கட்டினார்கள்.  கும்பாபிஷேகம் செய்யும் தருவாயில் இந்த அத்துமீறியவர் ஒலிபெருக்கியில் பெரிதாக கிறித்தவப் பாடல்களை போட்டார்.  பிறகு, மீன்களைக் கழுவிய நீரை சிவலிங்கத்தின்மீது வீசினார்.  போலீசுக்கு எவ்வளவு புகார்கொடுத்தும் இவர் ஓய்வதில்லை.  நிர்வாகிகள் இவரைக் காலிசெய்யச் சொல்லியும் இவர் மறுக்கிறார்.  எனவே நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.  இறுதிவெற்றி எங்களுக்கே கிட்டும்!
 12. சீதாம்பரபுரம், வாவுனியா: சில கோவில்கள் இருக்கும் இங்கு கிறித்தவ சமயமாற்றம் கட்டுக்கடங்காமல் நடக்கிறது.  சமயமாற்றிகள் [மிஷநரிகள்] மிகவும் மும்முரமாக இயங்குகின்றனர்.  தமிழ்நாடு இந்து மக்கள் கட்சிச் செயலர் திரு இராம ரவிகுமார் எங்கள் அழைப்புக்கிணங்க இங்கு வருகைதந்தார்.  சமயம் மாறிவர்களைத் திரும்பத் தாய்ச்சமயத்திற்கு மாற்ற உதவினார்.  குறைந்தபட்சம் ‘ஹாலுலோயா’ பாடிய குடும்பங்கள் இப்பொழுது வீட்டில், ‘அரோகரா’ என்று முழங்குகிறார்கள்.
 13. நீராவி, அனுராதபுரம்: தமிழ்நாடு இந்து மக்கள் கட்சிச் செயலர் திரு இராம ரவிகுமார் இங்கு ஒருநாள் வந்து தாழ்த்தப்பட்ட குழுக்களுக்குப் பாதபூஜை செய்தார்.  அவர் இருக்கும்போது சில குடும்பங்கள் இந்துசமயத்திற்குத் திரும்பினார்கள்.  அவர் தன்னுடை உள்ளூர் சீடனை இங்கு விட்டுச் சென்றார்.  அவர் சென்றபிறகு, அவரது சீடர் மேலும் சிலரைத் தாய்ச்சமயத்திற்கு மீட்டெடுத்தார்.
 14. கடவைப்புலவு, சுன்னாகம், யாழ்ப்பாணம்: ஜெஹோவா விட்னஸ் சமயமாற்றிகள் [மிஷநரிகள்] ஒரு இந்துக் கிராமத்திற்குள் சர்ச்சைக் கட்டத்துவங்கினர்.  முதலில் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை.  இருப்பினும் ஒரு கிறித்தவ அலுவலரின் சிபாரிசைப் பெற்று, கட்டிட அனுமதிபெற்றனர்.  நாங்கள் தடுத்தும் எவரும் கேட்கவில்லை.  அதிகாரவட்டத்தில் அனைத்திடங்களிலும் எங்கள் முயற்சி பயனற்றுப்போனது.  உள்ளாட்சி அமைச்சகத்திற்குப் பொறுப்புள்ள மாநில முதலமைச்சரைச் சந்தித்து மனுக்கொடுத்தோம்.  அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டபின்பு கட்டிட அனுமதி நிராகரிக்கப்பட்டது.   சமயமாற்றிகள் மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.  பங்களூரில் வெளிவரும் சுவராஜ்யா பத்திரிகை ஆசிரியர்குழுவைச்சேர்ந்த திரு மஜும்தார் அவரது யாழ்ப்பாண வருகையின்போது கைவிடப்பட்ட இந்த இடத்தைப் பார்வையிட்டார்.
 15. மெதியாபுரம், செட்டிகுளம், வாவுனியா: மறுவாழ்வுபெற்ற வீரர்களுடன் வேலைசெய்வதற்காக ஒரு பாதிரி மெதியாபுரம் சென்றுவந்துகொண்டிருந்தார்.  ஒருவீராங்கனைக்கு குணப்படுத்தவியலாத மருத்துவ நிலை இருந்தது.  பாதிரி உள்நுழைந்து பிரார்த்தனைசெய்து, உணவு, உடை கொடுத்து, குழந்தைகளின் படிப்புக்கு உதவிசெய்யத்துவங்கினார்.  இதை அவ்வீராங்கனையின் குடும்பம் விரும்பவில்லை.  ஆயினும், வீராங்கனையின் கணவர், தந்தையின் அனுமதியால் இது தொடர்ந்தது.  நாள்சென்றதும், பாதிரி வீட்டுப் பூசையறையில் ஏசுவின்  படமொன்றை மாட்டச்சொன்னார்.  இதை விரும்பாவிடினும்,  பாதிரியின் வேண்டுதலுக்கிணங்க, அவ்வீராங்கனையின் கணவரும், தந்தையும் வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படத்தை மாட்ட இடங்கொடுத்தார்கள்.  பிறகு, பாதிரி இந்துத் தெய்வங்களின் படங்களை அங்கிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அக்குடும்பம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.  நாங்கள் உடனே குறுக்கிட்டோம்.  தற்பொழுது அக்குடும்பம் ஏசுநாதரின் உருவப்படத்தை நீக்கிவிட்டது.  வீட்டின் முன்னாலிருக்கும் கொடிமரத்தில் நந்திக்கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது.  இந்து இந்துக்கொடையாளர் அவர்களின் ஒரேமகனின் கல்விச்செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.  இன்னொரு கொடையாளர் கால்நடைகளுக்கு கொட்டகை அமைத்துக் கொடுத்துள்ளார்.  இப்பாதிரியின் செல்வாக்குக்கு இன்னும் நான்கு குடும்பங்கள் பலியாகியதால், நாங்கள் குறுக்கிடவேண்டியிருந்தது.  அதன்பிறகு பாதிரி இந்தக் கிராமத்திற்கு வருவதேயில்லை.
 16. நாடாளுமன்றமோ, மாநில ஆட்சிக்குழுவோ, கிராமசபையோ, மக்கள் மன்றமோ, கூட்டுறவு சங்கங்களோ, விவசாயக் குழுக்களோ — எதுவானாலும் சரி — இந்து வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள் என்று ஒரு இலட்சம் சுவரொட்டிகளை ஒட்டும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
 17. வரும் ஜனவரி மாத த்திற்குள் நாற்பது இந்து அர்ச்சகர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்கள் வீடுகளுக்குச் சென்று உபதேசிப்பது, சமுதாய வேலைகள், சமுதாய நலப்பணிகளில் ஈடுபடவும், பூசைகள்மட்டுமே செய்வதைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
 18. இந்திய இந்து அமைப்புகளுடன் வைத்திருக்கும் தொடர்பும் உதவியாகவுள்ளது. தமிழக இந்து மக்கள் முன்னணி தனது பிரதிநிதியை இருமுறை அனுப்பியுள்ளது.  கோவாவைச் சேர்ந்த இந்துஜன ஜாகிருதி அமைப்பு இரு பிரதிநிதிகளை ஒருவாரம் சமயமாற்றம் செய்யுமிடங்களுக்கு அனுப்பியுள்ளது.  பங்களூரிலிருந்து வெளியாகும் சுவராஜ்ஜியா பத்திரிகையின் ஆசிரியர்குழுவில் ஒருவரும், இந்துச் செயல்முனைவருமான, மேகாலயாவைச்சேர்ந்த திரு மஜும்தார் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, ஊடகங்களிடம் பேசியுள்ளார்.  மேலும், நான் பிகார், வங்காளம், தெலுங்கானா, தமிழக இந்துச் செயல்முனைவர்களுடன் தொடர்புகொண்டு, அனவர்களை இலங்கையிலிருக்கும் மனச்சோர்வுற்றிருக்கும் இந்துமக்களிடம் ஆறுதலாகப்பேசி, அவர்களை புத்துணர்ச்சியடையச் செய்யுமாறு அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
 19. மார்கழித் திருவெம்பாவைத் திருநாள் சமயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து [காங்கேசன் துறை] சிதம்பரத்திற்கு புனிதப்பயணம்செய்வதற்காகக் கப்பல்விட அனுமதிகொடுக்குமாறு இலங்கைச் சிவசேனை வடமாநில ஆளுநர் வாயிலாகஇலங்கை அரசுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியது.  இலங்கை அரசும் அதன் கடற்படை, குடியேற்றத் துறை, துறைமுக அதிகார அமைப்பு, பாஸ்போர்ட் ஆபீஸ் இவற்றிற்கு புனியப்பயணிகளுக்குத் தேவையான ஆதரவளிக்குமாறு உத்திரவிட்டிருக்கிறது.  இந்திய அரசிடமிருந்து அனுமதிகிடைப்பதுதான் நெரிசலான ஒன்றாக இருக்கிறது. இந்த நெரிசல் நீங்குவதற்காக தில்லியில் நான் இலங்கை உயர் கமிஷனர் தி சித்ராங்கனி, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் செயலர் சதீஷ் ஆகியோரைச் சந்திந்துப்பேசினேன்.   வெளியுறவு அமைச்சகத்தின் இலங்கைப்பிரிவைச் சேர்ந்த தினோய் ஜார்ஜ், சிவகுரு இவர்களுடனும் இதைப்பற்றிப் பேசினேன்.  சென்னையில் தமிழக முதலமைச்சர் ஓ.பி. பன்னீர்செல்வம், உள்ளுரவுச் செயலர் நிரஞ்சன் மார்டி, பொதுத்துறை இணச்செயலர் சமயமூர்த்தி இவர்களையும் சந்தித்தேன்.  இந்திய அரசின் அனுமதி கிட்டினால் ஏழ்மையிலும் ஏழ்மையான, சமயமாற்றிகளால் குறிவைக்கப்படும் இந்துமக்கள் — விமானப் பயணத்தைப்ப்ற்றி நினைத்துப்பார்க்கவே இயலாத ஏழை இந்துமக்கள் — தில்லைச் சிதம்பரத்திற்குப் புனிதப்பயணம் மேற்கொள்ள உதவியாக இருக்கும்.  இலங்கை காங்கேசன் துறையிலிருந்து நூற்றைம்பது மைல் தொலைவிலுள்ள கடலூர் துறைமுகத்திற்கு ஐயாயிரம் இலங்கை ரூபாய்கள் [INR 2095/US$ 32.65] செலவில் சென்றுவந்துவிடலாம்.  இப்புனிதப் பயணம் இலங்கை இந்துமக்களுக்கு மனத்திண்மையும், சமயநம்பிக்கையையும் அளிப்பதுடன், மகேஸ்வரனான சிவபெருமான்பால் எதற்கும் விட்டுக்கொடுக்காமலிருக்கும் பக்தியும், இந்திய இந்துக்களுடன் பழகும் வாய்ப்பும் கிட்டும்.
 20. இந்தியாவிலும், இலங்கையிலும், ஊடக, பத்திரிகை, இணயச் சமுகத் தொடர்புகளால் இலங்கைச் சிவசேனைக்கு ஒரு நல்ல கருத்துரு கிட்டியுள்ளது. நாங்கள் முன்னெடுத்துச்செய்யும் பரப்புரைகளை கிறித்தவக் குருமார் குழு, பவுத்த சங்கங்கள் மற்றும் இஸ்லாமியக்குழுக்கள் அறிந்துள்ளனர்.  எங்களைக் கூர்ந்து கவனித்துவருகிறார்கள்.  நாங்கள் தமிழரைக் கூறுபோடுவதாக இலங்கைத் தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்களைக் குறைகூறுகிறார்கள்.  மேலும், தமிழகத்திலுள்ள இந்துத்துவ எதிரிகள் எங்களைப்பற்றி காழ்ப்புணர்வுடன் பேசுகிறார்கள்.  இணயச் சமுகத் தொடர்புகள் எங்களைப்பற்றி நிறைவாகவும், குறைவாகவும் விமர்சிக்கின்றன.  இந்துபுரம் சிமன்கோவிலில் நாங்கள் பணியாற்றியபோது எங்கள்மீது தனிமனித் தாக்குதல்கள், நடத்தையைப் பழித்தல்,  பழிவாங்கும் பேச்சுகள் எல்லாம் நடந்தேறின.  சிலர் எங்களை மராட்டிய தாக்கரேயின் சிவசேனாவுடன் இணைத்துப் பேசுகிறார்கள்.  இன்னும்பலர் இந்தியாவின் ஆர்.ஏ.டபிள்யு இணப்பின் நிதியுதவியுடன் நாங்கள் செயல்படுகிறோம் என்று அவதூறுசெய்கிறார்கள்.  ஏனைய பலர் எங்களைப் பாராட்டி நங்கொடையளிக்கின்றனர்.  நாங்கள் செலவுசெய்யும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குக் காட்டி, ஒளிவுமறைவின்றிச் செயல்படுகின்றோம்.

எங்களைப்பற்றி எழுப்பப்படும் வினாக்களும், அதற்கான பதில்களும்:

இலங்கைச் சிவசேனை அமைப்பு நாட்டின் சிலபகுதிகளில் மட்டும் செயல்படுகிறதா, அல்லது விரிவுபடுத்த திட்டங்கள் உண்டா?

நாங்கள் இரண்டுவிதமாகவும் செயல்படுகிறோம்.  அலகுநிலை அமைப்பை வலுப்படுத்துதலே எங்கள் தலையாய முயற்சியாகும்.  நாட்டளவில் விரிவுபடுத்த விரும்பினாலும், கவனமாக இருக்கிறோம்.  விரலுக்கேற்ற வீக்கம்தான் இருக்கவேண்டும்.  இலங்கையின் இருபத்தைந்து மாவட்டங்களில் பதினாறில் இந்துக்கள் குறிப்பிடுமளவுக்கு உள்ளனர்.  இலங்கைச் சிவசேனை ஆறு மாவட்டங்களில் வலுவாக உள்ளது.  மற்ற மாவட்டங்களில் எங்களுக்குத் தொடர்புள்ளது.  பாதிக்கப்பட்ட இந்துக்கள் எங்கள் பெயரை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள்.  இந்துப் பண்பாட்டைக் குலைக்க முயலுபவர்களுக்கு எங்கள் பெயர் நடுக்கத்தைத் தருகிறது.  யாரால் அச்சடிக்கப்பட்டு, ஒட்டப்பட்டதென்று நாங்கள் அறியாத,   எங்கள் பெயரைத் தாங்கிய, சுவரொட்டிகளும் இருக்கின்றன. எங்களது கொள்கைகளுக்குள் அடங்கியதாக அவை இருப்பதால், அவற்றைப்பற்றி நாங்கள் கவலையுறுவதில்லை.

இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் [ராஷ்டிரீய சுவயம்சேவக் சங்கம்] அமைப்பால் நீங்கள் எந்த அளவில் ஊக்கமடைகிறீர்கள்?

ஆர்.எஸ்.எஸ்ஸுடன் எனது தொடர்பு 1960லிருந்து துவங்குகிறது.  ஆனாலும், நெருங்கிய தொடர்பு இல்லை.  சமீபகாலம்வரை இலங்கை இந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸைப்பற்றித் தெரியாது. இந்திய முதலமைச்சர் ஆவதற்குமுன்பு அனைத்துப் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள 1975ல் கொழும்புக்கு வாஜ்பேயி அவர்கள் வந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருந்தில்  இலங்கையின் இந்து இளைஞர் குழுவின் தலைமைச் செயலன் என்றமுறையில் அவரைச் சந்தித்தேன்.  1977ல் வாரணாசியில் [காசி] நடந்த விஸ்வஹிந்து பரீட்சத் மாநாட்டுக்கு நான்கு  பேராளர்களை அனுப்பினேன்.  ஜானா கிருஷ்ணமூர்த்தி அவர்களை நான் 1986ல் முதன்முதலில் சந்தித்தேன். அதிலிருந்து நாங்கள் மிகவும் நெருங்கிய நட்புடனிருக்கிறோம்.  மேகாலயா ஆளுநர் ஷண்முகநாதன் அவர்களுடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.  இருவருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வேரூன்றியவர்களே.

தமிழக பி.ஜே.பியின் படிநிலை அமைப்பிலுள்ள அனவரும் எனக்குத் தெரிந்தவர்களே.  தமிழக விஸ்வஹிந்து பரீட்சத்தின் வேதாந்தமும் என் நல்லதொரு நண்பரே.

பவுத்தர்களும் இந்துக்களும் ஒன்றே என்று  ஆர்.எஸ்.எஸ்ஸும், வி.எச்.பியும் காட்டிக்கொள்வதை என்னால் புரிந்துகொள்ளமுடிவதில்லையே?

ஆர்.எஸ்.எஸ்ஸும், வி.எச்.பியும் ஏழாம் நூற்றாண்டில் சைவமும், வைணவும் மறுமலர்ச்சியடைந்தது பவுத்த-சமண மேலாதிக்கத்தில் வேரூன்றியது என்பதைப் புரிந்துகொள்ளவேன்டும்.  சைவர்கள் இந்த இரண்டு மெய்ப்பொருளியல்களிலிருந்து சிறந்தவற்றை ஏற்றுக்கொண்டார்கள், இருந்தபோதிலும் அவர்களின் விரிவுபடுத்தும் கொள்கையைப் புறந்தள்ளினார்கள். எங்களை பவுத்தர்களுடன் இணந்து செயலாற்றச் சொல்வது நடக்காதவொன்று.

1915ம் ஆண்டு இலங்கையில் நடந்த பவுத்த-இஸ்லாமியக் கலவரத்தின்போது சிறையிலடைக்கப்பட்ட நாலாயிரத்திலிருந்து ஐயாயிரம் பவுத்தர்களை ஆங்கிலேயரின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கக் காரணமாக இருந்தவர் ஸர் பி. இராமநாதன் அவர்கள்.  ஆனால் பவுத்தர்கள் அதற்கான நன்றியுணர்வைக் காட்டவேயில்லை.

விடுதலையடைந்த இலங்கையில் இந்து இனம், கோவில்களின்மீது பவுத்தர்களின் தாக்குதல் நடப்பது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது.  அதிலும், 1972ல் இலங்கைச் சட்ட அமைப்பு அமுலுக்கு வந்து, இந்துசமயத்திற்கு மேலாகப் பவுத்தசமயத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டவுடன் இத்தாக்குதல்கள் அதிகமாகின.

இலங்கையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், வி.எச்.பிக்கும் அவர்களது நிறுவப்பட்ட அமைப்புகள் உல்ளன.  அவை பவுத்தர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றன.  இத்துடன் இலங்கைச் சிவசேனைக்கு உடன்பாடு இல்லை.  இலங்கைச் சிவசேனை சைவ இந்துக்களுக்காகப் பணியாற்றினாலும் மற்ற சமயங்களின்பால் அதற்கு முரண்பாடில்லை.

பவுத்தர்களுடன் ஐந்து/ஆறாம் நூற்றாண்டுகளில் எந்த நிலைப்பாடு இருந்ததோ, அதே நிலைப்பாடுதான் சைவர்களுக்கு இப்பொழுதும்.

பதினான்காம் நூற்றாண்டைய மாலிக் காஃபூர் சகாப்தத்தில் இஸ்லாமியர்களுடன் எந்தநிலைப்பாடு இருந்ததோ, அதே நிலைப்பாடுதான் இப்பொழுதும்.

பதினாறாம் நூற்றாண்டில் கிறித்தவர்களுடன் எந்நிலை இருந்ததோ, அதுதான் இப்பொழுதும்.

நாங்கள் விட்டுக்கொடுக்காமலிருப்பதற்கு வரலாற்றுக்காரணங்களும் உள்ளன…

 • பவுத்தர்கள், சமணர்களை எதிர்கொள்ள எங்களுக்கு நாயன்மார் இருந்தனர்.
 • இஸ்லாமியரை எதிர்கொள்ள எங்களுக்கு நாயக்க அரசர்கள் இருந்தனர்.
 • கிறித்தவரை எதிர்கொள்ள எங்களுக்கு ஆறுமுக நாவலர் இருந்தார்.
 • இது இந்திய சிவசேனாவுக்கு மராத்தியும், இந்துசமயமும் போல.
 • இது இலங்கைச் சிவசேனைக்கு [சிவநேயர் திருப்படை] தமிழும், சைவ இந்து சமயமும் போல.

இப்பொழுது இலங்கைச் சிவசேனையைப்பற்றிய தங்கள் வினாக்களுக்கு விடைகிட்டியிருக்கும் என நம்புகிறோம்.

***

[i]   இச்செய்தி நமது நிருபர் மூலம் ‘தமிழ் ஹிந்து’வில் வெளிவந்தது.

[ii]   ஒரு அரிசோனன் அச்சமயம் வெல்லங்குளம் கிராம இந்துமக்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல்கூறினார்.

[iii]   இச்சமயத்தில் ஒரு அரிசோனன் இலங்கைசென்றிருந்தார்.  அப்பொழுது இக்குழுவுடன் மாவட்ட காவல்துறை மேலதிகாரியையும் சந்தித்தார்.

[iv]   ஒரு அரிசோனன் கடந்த ஆண்டில் தனது இலங்கைப் பயணத்தின்போது அனுராதபுரத்திலிருக்கும் இந்த சக்தி கோவிலுக்குச் சென்றிருக்கிறார்.

42 Replies to “இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்”

 1. Modernise Hinduism as taught by Sri Narayana Guru. One temple one Moolavar and one light and one offering -padaiyal.Otherwise We Hindus are dissipating our economic and human resources and become empty pocket to face challenges from foreign religions.

 2. “யாவர்க்கும் இறைவர்க்கும் ஓர் பச்சலை” திருமூலர்.

 3. சிவசேனை என்றதும் இந்திய சிவசேனா ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் நினைவை ஏற்படுத்துவதால் பலர் முகம் சுளிப்பதுவதும் பின்வாங்குவதும் ஈழத்து தமிழர்களிடையே இயல்பாக ஏற்படுகின்றது.இவ் இந்திய இயக்கங்களைப்பற்றி ஈழத்து தமிழர்களிடையே நல் அபிப்பிராயம் இல்லை என்பதை யாவரும் அறிவர்.இதனை திரு சச்சிதானந்தனும் அறிவர்.கூடவே சேனை என்ற சொல் யுத்தத்தை நினைவு படுத்துவதால் ஏற்கனவே நொந்து போயிருக்கும் மக்கள் ஒதுங்கிப் போவதும் இயல்பு.இதனைப் பற்றி திரு சச்சி அவர்கள் யோசிக்கவேண்டும்.

  எப்படியாயினும் ஈழத்து சிவசேனையின் மேற்கூறப்பட்ட முயற்சிகளுக்காக மிகவும் பாராட்டுகின்றேன். தொடர்ந்து விரிவுபடுத்தி செயற்படவேண்டும்.ஈழத்துப் பத்திரிகைகளிலும் இணையத் தளங்களிலும் இக் கட்டுரை பிரசுரிக்கப்பட வேண்டும்.அதன் மூலமே சிவசேனையின் வேலைப்பாடுகளை மக்கள் அறிவர். இதுகாலவரை எந்தப் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவரவில்லை.தயவு செய்து இதில் கவனமெடுக்கவும்.

  நீங்கள் செய்வது மிகவும் அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.இவ் வேலைகளின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பசியினையும் போக்கவேண்டும்.பசி பட்டினியை மூலதனமாக வைத்தே மத மாற்றம் நிகழ்கிறது.எனவே இது பற்றியும் சிந்திக்கவேண்டும். திருப்பதி போன்ற இந்திய கோடீஸ்வரக் கோவில்கள் இவ்வகையில் நிதி உதவி அளிப்பின் ஈழத்து இந்துக்களைக் காப்பாற்ற முடியும்.இந்திய இந்துக்கள் இதுபற்றி முயற்சி செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.

 4. திரு சச்சிதானந்தனுக்கு இன்னும் ஒன்றை கூற விரும்பிகின்றேன். ஈழத்து இந்துக்கள்மீது இந்திய இந்துக்கள் கொண்டுள்ள அக்கறையில் நூறில் ஒரு விகிதம்கூட புலம் பெயர்ந்த ஈழத்து இந்துக்கள் கொண்டிருக்கவில்லை. இதுதான் முற்றிலுமான உண்மை.ஈழத்தில் இடம்பெறும் கோவில்கள் அழிப்பு மதமாற்றம் தமிழர்களின் அரசியலில் கிறிஸ்தவப் பாதிரிமார்களின் முந்நிலையும் இந்துக்களின் பிரதிகள் போன்று உலக நாடுகளின் பிரதிநிதிகளை அவர்கள்சந்திப்பதும் என்பன போன்ற விடயங்களைப் பற்றி இந்த புலம் பெயர்ந்த இந்துக்கள் அக்கறைப்படுவதே இல்லை.இதெல்லாம் அவர்களுக்கு தீண்டத்தகாத வேலை. ஆனால் புலம்பெயர் நாடுகளில் மூலைக்கு மூலை கோவில்களை போட்டிபோட்டு கட்டுவதும் சண்டை பிடிப்பதும் வீதி வழியாய் அங்கப் பிரதிஸ்டை செய்வதும் தேர் இழுப்பதும் இவர்கள் விரும்பி செய்யும் வேலைகளாகும். சில கோவில் தர்மகர்த்தாக்கள் சண்டை பிடித்து நீதி மன்றங்களில் ஏறி இறந்குவதைகூட காணலாம். சமய அறிவு இவர்களுக்கும் இல்லை இவர்களது பிள்ளைகளுக்கும் இல்லை.அதனால் இங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்கள்.இவ் மத மாற்றம்கூட இந்த சைவ எருமைகளின் தோலில் உறைப்பதில்லை.அரோகரா போடுவதைத்தவிர இந்த எருமைகள் ஒரு தேவாரம்கூடப் பாடத் தெரியாதவர்கள். இந்நிலையில் நீங்கள் எமது இந்திய இந்துக்களையே அணுகி தேவையான ஆதரவைப் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

 5. “சைவ எருமைகள்” போன்ற சொற்களைத் தவிர்த்தல் நலம்.அன்பே சிவம்.

 6. why my comment is not published. Even the moderation display is not appeared in my PC. If any wording is wrong and the same can be corrected suitably and then you can publish.

 7. //சிவசேனை என்றதும் இந்திய சிவசேனா ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் நினைவை ஏற்படுத்துவதால் பலர் முகம் சுளிப்பதுவதும் பின்வாங்குவதும் ஈழத்து தமிழர்களிடையே இயல்பாக ஏற்படுகின்றது.//
  இந்திய சிவசேனா என்பது சைமன் செபாஸ்டியன் டானியல் காந்தி போன்றவர்களின் தமிழ் தேசியம் காக்க இயக்கம் என்று மக்களை ஏமாற்றுவது போல் மராட்டிய தேசியம் பேசும் இயக்கமாகும். Rishi என்பவர் எப்படி இந்திய சிவசேனாவுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒப்பிட முடியும்?

 8. உயர்திரு ரிஷி அவர்களுக்கு,
  //ஈழத்தில் இடம்பெறும் கோவில்கள் அழிப்பு மதமாற்றம் தமிழர்களின் அரசியலில் கிறிஸ்தவப் பாதிரிமார்களின் முந்நிலையும் இந்துக்களின் பிரதிகள் போன்று உலக நாடுகளின் பிரதிநிதிகளை அவர்கள்சந்திப்பதும் என்பன போன்ற விடயங்களைப் பற்றி இந்த புலம் பெயர்ந்த இந்துக்கள் அக்கறைப்படுவதே இல்லை.இதெல்லாம் அவர்களுக்கு தீண்டத்தகாத வேலை. //

  ஐயா, நான் ஒரு புலம்பெயர்ந்த இந்துதான். இலங்கைக்குச் சென்று நேரில் அம்மக்கள் பட்ட அவதிக்குச் சாட்சியாகநிற்கும் இடிந்த வீடுகளைக்கண்டு கண்ணீரி வடித்துவிட்டுதான் வந்திருக்கிறேன். அவர்களை நேரிலும், தொலைபேசியிலும் அழைத்து ஆறுதலும் கூறியிருக்கிறேன். இங்கு எனக்கு ஈழத்தமிழர்கள் நண்பர்கள். நீங்கள் குறிப்பிடும் புலம்பெயர்ந்த இந்துக்களில் ஈழத்தமிழர்களும் அடக்கமா என்று தெளிவுபடுத்தாமல் ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள்? புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கும் அக்கறையில்லை என்பதுபோலத்தான் எழுதுகிறீர்கள்.

  //ஆனால் புலம்பெயர் நாடுகளில் மூலைக்கு மூலை கோவில்களை போட்டிபோட்டு கட்டுவதும் சண்டை பிடிப்பதும் வீதி வழியாய் அங்கப் பிரதிஸ்டை செய்வதும் தேர் இழுப்பதும் இவர்கள் விரும்பி செய்யும் வேலைகளாகும். //

  ஏனயய்யா, இந்துக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தங்களுக்காகக் கோவில் கட்டிக்கொள்ளக்கூடாது என்பது உங்கள் கருத்தா? கோவிலில்லாவிட்டால் இந்துசமயத்தோர் எங்குசென்று தொழுவார்கள். பிறந்தமண்ணிலேயே தங்கள் சம்யத்தைக் கைகழுவிவிட்டுவிடவேண்டுமா? மூலைக்குமூலை என்கிறீர்களே, அப்படி எத்தனை கோவில்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரம் தெரியுமா உங்களுக்கு? ஒருகோவிலுக்கு அரை சென்ட்கூட எங்களுக்கு இந்தியாவிலிருந்தோ, இலங்கையிலிருந்தோ வருவதில்லை. எல்லாம் நாங்கள் உழைத்துச் சம்பாதித்துக் கட்டியக் கோவில்கள். எங்கள் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தைக் கட்ட உதவிசெய்த இஞ்சினீயர் ஒரு ஈழத்தமிழர என்பது உங்களுக்குத் தெரியுமா?

  // சமய அறிவு இவர்களுக்கும் இல்லை இவர்களது பிள்ளைகளுக்கும் இல்லை.//

  அறிவூட்டவென்றுதானைய்யா நாங்கள் கோவில்கட்டுகிறோம். கோவிலுக்குச் சென்றால்தானய்யா சமய அறிவு ஏற்படும்.

  //அதனால் இங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்கள்.//

  உங்கள் கணிப்பு தவறு ஐயா. இங்கு சமய உணர்வு பலரிடம் உண்டு. தமிழ்நாட்டில் சமயமாற்றம் ஆகுபவர்களைவிட இங்கு எண்ணிக்கை குறைவுதான்.

  //இவ் மத மாற்றம்கூட இந்த சைவ எருமைகளின் தோலில் உறைப்பதில்லை.அரோகரா போடுவதைத்தவிர இந்த எருமைகள் ஒரு தேவாரம்கூடப் பாடத் தெரியாதவர்கள்.//

  இப்படிப்பட்ட நாலாம்தரமான சொற்களைத் தணிக்கை செய்யாமல் வெளியிடுவது தமிழ் ஹிந்து இணையதளத்திற்கு அவப்பெயரைத் தேடித்தரும் என்று ஆசிரியர் குழுவின் கவனத்திற்குக் கொணரவிரும்புகிறேன்.

  ஐயா, ரிஷி அவர்களே! இங்கு கருத்துப்பதியும் மாற்றுச் சமயத்தோர்கூட இப்படிப்பட்ட கேவலமான சொற்களைக் கையாளுவதில்லை. இப்படிப்பட்ட சொற்களைக் கையாளும் நீங்கள் ஒரு இந்துவா என்று எனக்கு ஐயமாகவிருக்கிறது.

  //இந்நிலையில் நீங்கள் எமது இந்திய இந்துக்களையே அணுகி தேவையான ஆதரவைப் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.//

  இந்திய இந்துக்கள் ஈழ இந்துக்களுக்காக எவ்வளவு நிதியுதவியளித்தார்கள், இந்திய இந்துவான தாங்கள் எவ்வளவு அளித்தீர்கள் என்று நீங்கள் பட்டியலிட்டால் நான் அறிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்.

 9. சிவ நேயர் திருப்பணி படை – மறவன் புலவு க.சுச்சிதானந்தன்
  தமிழ்த் தேசியம் காக்க என்று சுவர் ஒட்டி விளம்பரத்தில் உள்ளது. தமிழ்த் தேசியம் என்றால் தனி தமிழ் ஈழ கோரிக்கையின் தொடர்ச்சியா. அதற்கான சூழலை பெற முடியாமல் தீவிரவாத்தை கையில் தூக்கியதும் – ஹிந்து மதத்துடன் சைவம் ஒட்டாது என்பது போன்ற நிலைப்பாடுகள் இதற்கு உதவாது. அதனால்தான் இந்தப் பதிலா ? .கிருஸ்துவ தீவிரவாத தமிழர் கூட்டு சேர்கையால்தான் இலங்கை தமிழர்களின் கொலை களம்மாக மாறியது.
  (( இலங்கையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், வி.எச்.பிக்கும் அவர்களது நிறுவப்பட்ட அமைப்புகள் உள்ளன. அவை பவுத்தர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றன. இத்துடன் இலங்கைச் சிவசேனைக்கு உடன்பாடு இல்லை. ஆர்.எஸ்.எஸ்ஸும், வி.எச்.பியும் ஏழாம் நூற்றாண்டில் சைவமும், வைணவும் மறுமலர்ச்சியடைந்தது பவுத்த-சமண மேலாதிக்கத்தில் வேரூன்றியது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சைவர்கள் இந்த இரண்டு மெய்ப்பொருளியல்களிலிருந்து சிறந்தவற்றை ஏற்றுக்கொண்டார்கள், இருந்தபோதிலும் அவர்களின் விரிவுபடுத்தும் கொள்கையைப் புறந்தள்ளினார்கள். எங்களைப் பவுத்தர்களுடன் இணைந்து செயலாற்றச் சொல்வது நடக்காதவொன்று.))
  இங்கே தமிழர் சிலர் பௌத்தக் கோவில்களை இடித்துத்தான் ஹிந்து கோவில்களை கட்டினார்கள் என்று கற்பனைகளை அவிழ்துவிடுகிறார்கள். அங்கே ஹிந்து கோவில்களை இடித்து பௌத்த விகாரங்கள் கட்ட முயற்சிக்கிறார்கள் என்கிறீர்கள். இங்கே அதற்குத் தனி ஈழம் பேசும் கூட்டம் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை ? அது ஏன் ?
  தற்போது உள்ள சூழலில் தமிழர்கள் நம்பகதன்மையற்ற கிருஸ்துவ – துலுக்கர்களுடன் எந்தவித ஒட்டுறவையும் வைத்துக்கொள்ளக் கூடாது. பௌத்தர்களுடன் இணக்கமாகச் சென்று அவர்களை அனுசரித்து எல்லா உரிமைகளையும் பெறுதல் வேண்டும். அதற்கு தற்போதைய பாரத அரசு எல்லா விதத்திலும் ஒத்துழைப்பு நல்கும். அதனால் ஆர்.எஸ்.எஸ் வி.எச்.பி இவர்களுடன் சேர்ந்து பணி செய்வதே சிறந்ததாகும்.

 10. இந்தியாவில் உள்ள உபாி வரவாய் உள்ள ஆலயங்கள் இத ோன்ற பிரச்சையில் தாராளமாக உதவலாம்

 11. சிவ சேனை என்று பெயரிருந்தால் பால் தாக்கரேயின் சிவ சேனாவை கண்டிப்பாக நினைவுக்குக் கொண்டுவரும். அதன் கிளையோ இது? என்றுதான் நினைப்பர். இந்து பாதுகாப்பு அல்லது சைவ பாதுகாப்பு பேரவை என்று மாற்றலாம்.

 12. திரு ஒரு அரிசோனன் அவர்களின் கவனத்திற்கு

  உங்களது முதற் பந்தி பற்றி :……….//புலம் பெயர்ந்த இந்துக்களில் ஈழத் தமிழர்களும் அடக்கமா என்று தெளிவு படுத்தாமல் ஏன் குற்றம் சாட்டுகிறிர்கள்……..//

  எனது குறிப்புகள் அனைத்துமேஈழத்தில் வசிக்கும் இந்துக்கள்/சைவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத்து இந்துக்களை/ சைவர்களைப் பற்றியதுதான். ஏனெனில்மேலுள்ள கட்டுரையும் அது சம்பந்தப்பட்டதே .
  எனது இரணடாவது குறிப்பின் முதல் வரியை தயவு செய்து திரும்பவும் வாசித்துப் பாருங்கள்.//புலம் பெயர்ந்த ஈழத்து இந்துக்கள் // என அங்கு குறிப்பிடப் பட்டுள்ளது.இதனது தொடர்ச்சியே மிகுதிக் குறிப்புக்கள். //புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கும் அக்கறையில்லை என்பதுபோலத்தான் எழுதுகிறிர்கள்// அப்படி நான் எழுதவேவில்லை. மேலும்சைவர்கள் அல்லாத ஏனைய புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்களுக்கும் இக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு?

  உங்களது இரண்டாவது பந்தி:

  எனது கவலை இந்தக் கோவில்களினால் சைவ சமய அறிவு வளர்க்கப் படுவதில்லை என்பதே.நீங்கள் உழைத்து சம்பாதித்து கட்டிய கோவில்களில் விளக்கமற்ற கிரியைகள் ஆடம்பர சோடனைகள் ,பல வாளிக்கணக்கில் பால் உற்றல், இந்தியாவிலிருந்து அல்லது இலங்கையிலிருந்து பழவகைகள் வாழை இலைகள் பூக்கள் இறக்குமதி செய்து பூசை செய்தல் என்பனவற்றை தாராளமாக செய்யுங்கள். உங்கள் பணம் உங்கள் விருப்பம்.ஆனால் ஒன்றை மட்டும் உணருங்கள்.கோவில் ஒன்று இருக்க வேண்டிய ஒரு பகுதியில் போட்டி போட்டு ஐந்து கோவில்களைக் கட்டாதீர்கள்.சமய அறிவை வளர்க்கக்கூடிய வகையில் வகுப்புகளை நடாத்துங்கள்.தியானம் யோகாசனம் என்பனவற்றையும் படிப்பியுங்கள்.சைவ தத்துவ நூல்களை வாங்கி இலவசமாகக் கோவிலுக்கு வருவோருக்கு கொடுங்கள்.இவ்வகையில் கிறிஸ்தவ இஸ்லாமிய வழிபாட்டு முறைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.புலம்பெயர்ந்த சைவர்கள், பிராமனர்கள்கூட, என் ஏனைய மதங்களுக்கு மாறுகின்றார்கள் என்பதனைப் பற்றி விவாதியுங்கள். லண்டனில் மாத்திரம் 35 கோவில்கள் உள்ளன.ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவில்களின் நிலைமைகளையும் அங்கு வாழும் சைவ இளைய தலைமுறையினரின் சமய அறிவற்ற நிலைமைகளையும் கவனத்திற்குக் கொண்டு வந்து இதற்குரிய தீர்வை அறிய முயலுங்கள்.சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் சமய அறிவை ஊட்டவும் வானொலி இணையத்தளம் என்பனவற்றை ஆரம்பியுங்கள்.University, studies centre,எனப் பல நிறுவனங்கள் ஏனைய மதத்தினரால் நடாத்தப்படுகின்றன. எமக்கு என்று ஏதாவது புலம்பெயர் நாடுகளில் எம்மால் நடாத்தப்படுகின்றனவா?

  நான் பார்த்தும் அறிந்தும் கேட்டும் கொண்டவரை லண்டனிலோ ஐரோப்பிய நாடுகளிலோ கோவிலுக்கு செல்வதால் சமய அறிவு ஏற்படவில்லை.அறிவு என்பது விக்கிரகங்களை சுற்றி வருவதாலும் விளக்கமற்ற பூசைகளினாலும் கிரியைகளினாலும் வருவதல்ல.சிவாச்சாரியார் பூசை செய்யும்போது என்ன சொல்லுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்களா? இங்கே இடம்பெறும் விளக்கம் அற்ற கிரியைகளினால் அறிவு கூடாது ஐயா.பணமும் நேரமும்தான் வீணாகும்.இன்னுமொன்றையும் புலம்பெயரா மக்களுக்கு கூற விரும்பிகின்றேன்.இலண்டன் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவில்களில் பூசைபுரியும் சிவாச்சாரியார்/ஐயர்/குருக்கள் ( எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள்)மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள்.இவர்களை கோவில் நிர்வாகத்தில் உள்ளவர்கள், ஏனைய மதத்தவர்கள் தமது மத குருமாருக்கு கொடுக்கும் மரியாதையை ஒத்த மரியாதையை கொடுப்பதே இல்லை.கூலிக்கு வேலை செய்பவர்களைப் போலவே கணிப்பார்கள்.

  //சைவ எருமைகள் பற்றி//

  இங்கு எருமை ஓர் குறியீடு.எதுவித எதிர்ப்புணர்வுமற்ற உணர்ச்சியற்ற ( ஜடம் என்றும் குறிப்பிடுவர் ) நிலையைக் குறிப்பிடவே எருமை என்ற சொல்லை பாவித்தேன். அதனது இயற்கையான குணம் அது.எருமை எப்படி நாலாம்தரம் ஆகும்? அது ஓர் மிருகம் .தரவரிசை அற்ற பிராணி.அப்படியானால் 1,2,3ம் தரத்தில் யார் உள்ளனர்? கூறுங்கள். எருமை என்பது கேவலமான சொல் அல்ல.அதனது குணத்தினை குறிப்பிடவே அப்படி கூறினேன்.தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் என்று மகாகவி பாரதி சொன்னதும் நாலாம்தரமா? எருமைக்கும் எருமைகளைப்போல என்பதற்கும் பெரிதும் வித்தியாசம் இல்லை ஐயா.

  நானும் ஓர் புலம் பெயர்ந்த ஈழத்து சைவன்.எனது முன்னைய குறிப்புகளை வாசித்திருப்போருக்கு இது நன்றாகவே தெரியும். கொஞ்சம் முற்போக்காக யதார்த்தமாக சிந்திப்பவன். அவ்வளவுந்தான்.

 13. யுத்தத்தினால் பாதிக்கபட்ட மக்களை பற்றி கவலை கொள்ளாமல் வசதிகள் கொண்ட இலங்கை தமிழர்கள் நடந்து கொள்வதாக Rishi முன்பே இங்கு தனது கவலையை வெளிபடுத்தி உள்ளார். அது ஏற்று கொள்ள தக்கது. இது பற்றி வேறு பலரும் பல பொது தளங்களில் தெரிவித்திருக்கிறார்கள்.
  ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் நினைவை ஏற்படுத்துவதால் பலர் முகம் சுளிப்பதுவதும் பின்வாங்குவதும் ஈழத்து தமிழர்களிடையே இயல்பாக ஏற்படுகின்றது.//
  ஈழத்து விடுதலை புலிகள் இந்துக்களை தர்மகர்த்தாக்கள் புத்த மக்களை, முஸ்லிம்களை பெருமளவில் கொலைகள் செய்தார்கள். அதனால் அவர்கள் முகம் சுளித்தனர் என்பது இயல்பானது நாமும் முகம் சுளித்தோம் வெறுத்தோம்.
  ஆர்எஸ்எஸ் காக அவர்கள் பலர் முகம் சுளிப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லையே!
  //சேனை என்ற சொல் யுத்தத்தை நினைவு படுத்துவதால் ஏற்கனவே நொந்து போயிருக்கும் மக்கள் ஒதுங்கிப் போவதும் இயல்பு.//
  A good move

 14. //அப்படி நான் எழுதவேவில்லை. மேலும்சைவர்கள் அல்லாத ஏனைய புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்களுக்கும் இக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு?//

  தமிழகத்தில் தமிழரைத்துண்டாடும் செயல் நடக்கிறது. தாங்கள் இந்துக்களைத் துண்டாடுகிறீர்கள். இது இந்துக்களைப் பற்றிய இணயம். இங்கு இந்துக்களின் துயர்பற்றித்தான் இக்கட்டுரை குறிக்கிறது.

  //எனது கவலை இந்தக் கோவில்களினால் சைவ சமய அறிவு வளர்க்கப் படுவதில்லை என்பதே.//

  ஐயா, முதலில் கோவிலுக்குச் சென்றால்தான் தாங்கள் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நினைவு வரும். சமய உணர்வு இருந்தால்தான் சமய அறிவு வளரும். இது எச்சமயத்திற்கும் [கடவுள் மறுப்புச் சமயத்திற்கும்கூட] உண்மை. இங்கும் சர்ச்சுக்கு ஒவ்வொரு ஞாயிறுதோறும் சென்றும் எனக்கு இருக்கும் கிறித்துவ சமய அறிவுகூட இல்லாத கிறித்தவர்களை நான் நிறையப்பார்க்கிறேன். எனவே, சமய அறிவு வேறு, சமய உணர்வுவேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

  //கோவில் ஒன்று இருக்க வேண்டிய ஒரு பகுதியில் போட்டி போட்டு ஐந்து கோவில்களைக் கட்டாதீர்கள்.//

  அரிசோனாவில் ஃபீனிக்ஸ் பெருநகரில் 1500க்கும் மேற்பட்ட சர்ச்சுகள் உள்ளன. எனவே இங்கிருக்கும் ஐந்தாறு கோவில்கள் அதிகப்படி அல்ல.

  //சமய அறிவை வளர்க்கக்கூடிய வகையில் வகுப்புகளை நடாத்துங்கள்.தியானம் யோகாசனம் என்பனவற்றையும் படிப்பியுங்கள்.சைவ தத்துவ நூல்களை வாங்கி இலவசமாகக் கோவிலுக்கு வருவோருக்கு கொடுங்கள்.//

  இதெல்லாம் செய்யப்படவில்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறான முடிவுதான்.

  //நான் பார்த்தும் அறிந்தும் கேட்டும் கொண்டவரை லண்டனிலோ ஐரோப்பிய நாடுகளிலோ கோவிலுக்கு செல்வதால் சமய அறிவு ஏற்படவில்லை.அறிவு என்பது விக்கிரகங்களை சுற்றி வருவதாலும் விளக்கமற்ற பூசைகளினாலும் கிரியைகளினாலும் வருவதல்ல.//

  தாங்கள் பக்தியையும், அறிவையும் குழப்பிக்கொள்கிறீர்கள். இறைவன்பால் பக்தி செலுத்தும் அனைவருக்கும் சமய அறிவு இருக்கும் என்று நினப்பது சரியானதல்ல. இது எச்சமயத்திற்கும் பொருந்தும்.

  //சிவாச்சாரியார் பூசை செய்யும்போது என்ன சொல்லுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்களா? இங்கே இடம்பெறும் விளக்கம் அற்ற கிரியைகளினால் அறிவு கூடாது ஐயா.பணமும் நேரமும்தான் வீணாகும்//

  இந்தமாதிரிப் பேசுபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு கிறிஸ்துமஸ் சமயத்தில் இலட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்படுகின்றன. மக்கள் இதில் பணத்தை வீண்செலவு செய்கிறார்கள், இதைவிட கிறித்தவ அறிவை வளர்க்கவேண்டும் என்று எந்தக் கிறித்தவரும் சொல்வதில்லை. போப் ஆண்டவரைத் தரிசிக்கவேண்டும் என்று பலரும் ரோமுக்குப் பயணப்படுகிறார்கள். இஸ்லாமியர்கள் மக்காவுக்கு ஹஜ் புனிதயாத்திரிய மேற்கொள்கிறார்கள். இதைத் தேவையற்ற செலவு என்று எந்தக் கிறித்தவரோ, முகமதியரோ, இந்துவோ, ஏன் — கடவுள் மறுப்புச் சமயத்தாரோ விமர்சிப்பதில்லை. போப்பால் இலத்தீனிலும், மசூதியில் அரபிக்கிலும்தான் தொழுகை நடத்தப்படுகிறது. இதனால் சமய அறிவு வளரவில்லை என்று எவரும் புகார்செய்வதில்லை.

  பக்தியுள்ளவர்கள், உயிர்போகும்நிலையிலும் சமயம் மாறமாட்டார்கள். சமய அறிவு இருந்தால்மட்டும் சமயம் மாறமாட்டார்கள் என்பது ஏற்றுக்கொள்ளவியலாத ஒரு கருத்து.

  //நானும் ஓர் புலம் பெயர்ந்த ஈழத்து சைவன்.எனது முன்னைய குறிப்புகளை வாசித்திருப்போருக்கு இது நன்றாகவே தெரியும். கொஞ்சம் முற்போக்காக யதார்த்தமாக சிந்திப்பவன். அவ்வளவுந்தான்.//

  முற்போக்கு இருக்கிறது என்பதால் சிவனடியாரைத் தூற்றும் உரிமை உங்களுக்கு ஏற்பட்டுவிடவில்லை ஐயா. நீங்கள் சைவர் என்பது உண்மையானால் சைவ உணர்வை முதலில் உங்களுக்குள் கொணர முயற்சிசெய்யுங்கள். கோவிலில் இறைவனின் திருவுருவத்திற்கு முன்பு அமர்ந்து தியானம் செய்யுங்கள். தெளிவு கிட்டும். சைவ உணர்வை மற்றவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

  இதற்குமேல் தங்களுடன் விவாதம்செய்ய எனக்கு விருப்பமில்லை.

 15. திரு ஒரு அரிசோனன்

  உங்களுடன் யார் விவாதம் செய்தது? இது ஓர் கருத்துப் பரிமாற்றமே.ஆனால் நான் கூறுவதை சரியாக விளங்கிக் கொள்ளாது ஆத்திரத்தில் அவசரப்பட்டு தெளிவற்று முன்னுக்குப் பின் முரண்படக் கூறும் உங்களுடன் அதனையும் செய்ய முடியாதிருக்கிறது என்பதனை இப்பொழுது உணர்கின்றேன்.

  கோவிலையும் கட்டுகிறீர்கள் சர்ச்சுக்கும் தவறாது போகிறீர்கள் என்றாலும் இன்னும் தெளிவேட்படவில்லை என்பதனை மன வருத்தத்துடன் கூறாமல் இருக்க முடியவில்லை.

  உங்களது ஆலோசனைகளுக்கு நன்றி.!!!

 16. எனது அன்பான இந்திய இந்துக்களுக்கு

  நான் ஈழத்தை சேர்ந்தவன் என்பதை எனது முன்னைய பல குறிப்புகளில் இருந்து அறிவீர்கள். ஈழத்தில் 99%மானவர்கள் சைவசமயத்தை சேர்ந்தவர்கள்.நானும் அவ்வகையில் ஓர் சைவனே. மேலுள்ள கட்டுரையும் ஈழத்தில் வசிக்கும் சைவர்கள் பற்றியதே. அதனால்தான் மேலுள்ள எனது குறிப்புகளில் இந்து என்ற சொல்லைத் தவிர்த்து சைவ என்ற சொல்லைப் பாவித்தேன். எனவே இது எவ்வகையிலும் இந்துக்களை துண்டாடுவதற்காக பாவிக்கப்பட்டதல்ல என்பதனை இச்சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்பிகின்றேன். ஈழத்து நிலையை உங்களில் சிலர் அறியாது இருக்கக்கூடும். எனவேதான் இச் சிறு பணிவான விளக்கம்.

  அதேவேளையில் உங்களில் எவர்சரி இந்துக்கள் எனக் குறிப்பிட விரும்பினால் தாராளமாகக் குறிப்பிடலாம். அது உங்களது விருப்பம் .சைவர் எனக் குறிப்பிடுவது என்னுடைய நிலை.

  ஈழத்து சைவ மக்கள்மீது நீங்கள் காட்டும் அன்புக்கும் அக்கறைக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

  மீண்டும் சந்திப்போம். அன்பே சிவம்.

 17. ஈழத் தமிழ் இந்துக்களின் அவா நிறைவேறுகிறது. இலங்கைக் காங்கேசன்துறையிலிருந்து கடலூர் துறைமுகம் சென்று, தில்லையில் ஆனந்தநடமிடும் சித்சபேசனைத் தரிசிக்க வழிபிறந்துவிட்டது. மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவின் முயற்சி பயனளித்திருக்கிறது.

  The demand for opening the sea route to pilgrims was spearheaded by Marvanpulavu Sachchithananthan, who heads a collective of Hindus in the island nation known as the Siva Senai.

  Sachchithananthan, who was in Delhi last week to meet officials in the ministry of external affairs and the Sri Lankan embassy to push for setting an early date for the facility, told Hindustan Times that the Siva Senai had negotiated with the Sri Lanka government through the Governor of the Northern Province to permit a pilgrim ship to Chidambaram during Maarkazhi Thiruvembavai festival days.

  Sachchithananthan said the annual pilgrimage will be a “moral booster” for the poor who cannot afford a plane travel.

  https://www.hindustantimes.com/india-news/sri-lankan-tamil-pilgrims-can-travel-to-chidambaram-on-ferry/story-TyJPMgCHEalRFGEwusbVvN.html

 18. //திரு ஒரு அரிசோனன்

  கோவிலையும் கட்டுகிறீர்கள் சர்ச்சுக்கும் தவறாது போகிறீர்கள் என்றாலும் இன்னும் தெளிவேட்படவில்லை என்பதனை மன வருத்தத்துடன் கூறாமல் இருக்க முடியவில்லை.//

  உயர்திரு ரிஷி அவர்களே,
  புரிதலில் தவறு உங்களிடம் இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சர்ச்சுக்குத் தவறாது போகிறேன் என்று எங்கு எழுதியிருக்கிறேன்? சர்ச்சிலும், மசூதியிலும் எப்படித் தொழுகை நடத்துகிறார்கள் என்று எழுதினால் நான் சர்ச்சிலும், மசூதியிலும் சென்று தொழுகிறேன் என்ற பொருளல்ல.

 19. //பக்தியுள்ளவர்கள், உயிர்போகும்நிலையிலும் சமயம் மாறமாட்டார்கள். சமய அறிவு இருந்தால்மட்டும் சமயம் மாறமாட்டார்கள் என்பது ஏற்றுக்கொள்ளவியலாத ஒரு கருத்து.//

  பக்தியுள்ளவர்கள் உணர்ச்சிகளின் வழியாக தமக்குப் பிடித்த கடவுளை வணங்குகிறார்கள். அவ்வுணர்ச்சிகள் பிறரால் ஊட்டப்பட்டது. அதாவது பக்தி ஊட்டப்பட்டு பெருகுகிறது. முதலில் ஊட்ட ஒருவர் வேண்டும். பின்னர் இன்னொருவர் வந்து வேறுவிதமாக ஊட்டினால், பக்தி திசை திரும்பும். அடிக்க அடிக்க அம்மியும் நகரும். இந்துமத வரலாற்றில் சான்றுகள் உண்டு. ஒரு சமயத்தில் இருந்து பெரும்புகழடன் – பக்திக்காக – வாழ்ந்து, பின்னர் இன்னொரு சமயத்தில் சார்ந்தவர்கள் திருநாவுக்கரசரும் திருமழியிசையாழ்வார்களும். இன்றைய வாழ்க்கையிலும் காணலாம்.

  அதேசமயம், தம் அறிவால் தமக்கு எச்சமயம் சரியென்று ஆய்ந்துணர்ந்து அதை எடுத்துக்கொண்டு வாழ்பவர்கள் கண்டிப்பாக அதில் காலூன்றுவர்.

 20. //இஸ்லாமியர்கள் மக்காவுக்கு ஹஜ் புனிதயாத்திரிய மேற்கொள்கிறார்கள். இதைத் தேவையற்ற செலவு என்று எந்தக் கிறித்தவரோ, முகமதியரோ, இந்துவோ, ஏன் — கடவுள் மறுப்புச் சமயத்தாரோ விமர்சிப்பதில்லை.//
  மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது தேவையற்ற செயலே. அவர்கள் சொந்த பணத்தில் விரும்பினால் செல்லலாம்.
  ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்கள் முஸ்லிம்கள் என்கின்றபடியால் யார் விமர்சிக்க போகிறார்கள்?அதற்கு பதிலாக திராவிட கட்சிகளும் செந்தமிழ் சைமன் செபாஸ்டியானும் முஸ்லிம்கள் ஹஜ் பயணத்தைத் தொடர சகலவழிவகைகளை இந்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனவலியுறுத்துகின்றனர்.
  இந்துக்களுக்கு அரசு அயல்நாட்டுக்கு யாத்திரை மேற்கொள் இதே போன்று உதவி செய்தால் என்ன நடைபெறும்! இந்திய மக்களின் வரிபணம் மூடர்களின் நம்பிக்கைக்கு வீணாவதா! விவசாயி தற்கொலை செய்கிறான் புனிதயாத்திரை இந்துக்களுக்கு ஒரு கேடா! இந்திய மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது இப்படி எத்தனை கூச்சல்கள் போடுவார்கள்.

 21. //ஈழத் தமிழ் இந்துக்களின் அவா நிறைவேறுகிறது. இலங்கைக் காங்கேசன்துறையிலிருந்து கடலூர் துறைமுகம் சென்று, தில்லையில் ஆனந்தநடமிடும் சித்சபேசனைத் தரிசிக்க வழிபிறந்துவிட்டது.//

  சிங்களனிடம் அடிமைப்பட்டு கிடைக்கும் ஈழ தமிழர்கள்(இந்துக்கள்) அனைவரும், அதனை மறந்து விட்டு தில்லைநாதனை தரிசிக்க வேண்டியது தான் தங்களின் முதன்மையான அவா என்று உங்களிடம், மறவன்புலவிடமும் வந்து கூறினார்களா..!! பேஷ் .. தில்லை கூத்தனுக்கே அது வெளிச்சம்..

 22. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

  திருச்சிற்றம்பலம்.

  மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் மறந்தும் ஒரு சொல் மாற்றுமொழிகலவாது தூய தமிழில் பேசும் எழுதும் செயற்பட்டுடையவர். ஈழத்தில் வசிக்கும் ஹிந்துத்தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் தம்மை அர்ப்பணித்து செயற்படுபவர். இதற்காக வேண்டி ஹிந்துஸ்தானத்தில் விஸ்வஹிந்து பரிஷத் மற்றும் சங்க பரிவார் இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்.

  சைவத்திருமுறைகளை ஹிந்துஸ்தானத்து பாஷைகளில் மொழியாக்கம் செய்து வருகிறார். தெலெகு, ஹிந்தி, ஸம்ஸ்க்ருத மொழிகளில் பல பகுதிகளை ஏற்கனவே மொழியாக்கம் செய்துள்ளார். சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டதா அறிகிலேன்.

  சிங்களனிடம் தமிழன் அடிமைப்பட்டுக்கிடக்கையில் எது செய்தல் வேண்டும் எது செய்தல் கூடாது?

  தினமும் ஈழத்தமிழர்கள் சொந்தத் தமிழ் சஹோதரர்களையே விடுதலைப்புளிகள் மாதிரி டுப்பாக்கியால் டமால் டுமீல் என்று சுட்டுச்சாவதா? தமிழகத்தில் மீனவர்களை அடிமையாக வைத்து புர்ச்சி பூபாளம் பாடும்…………. பரங்கிய க்றைஸ்தவ கிரிஜா க்ருஹங்களின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு அல்லேலூயா என்று அருந்தமிழில் கூச்சலிடும் …………..பாவாடைப்பாதிரிகளுடன் ஆண்டன்பால அசிங்கம் போல கும்பினி தொடங்கி வ்யாபாரம் செய்வதா?

  த்யாகேசனின் மற்றும் திருவரங்கநாதனின் கோவில்களை பீரங்கி வைத்துப் பிளக்கும் வஜனங்களால் காயடிக்கப்பட்டு அதற்கு விசிலடித்து டம்ப்ளர்களாக கன்வெர்ட் செய்யப்பட்டு விட்ட த்ராவிடவாள்ளூ அடிமைகளாகிய தமிழர்களுக்கு தங்கள் கோவில்கள், குளங்கள், ஆறு, ஏரிகள் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. த்ராவிட வாள்ளு அந்தரு வஹாபி பாயி மற்றும் பரங்கி க்றைஸ்தவனிடம் மாட்லாடி டப்பு இச்சினா மெரீனா பீச்சில் கும்பலாகக் கூடி ஓசிபிரியாணி சாப்பிட்டு கோஷ்டம் போடத் தெரிந்த டம்ப்ளர்களுக்கு தமது கோவில்கள், குளங்கள், ஆறு, ஏரிகள் பற்றி என்ன கவலை? ஆனாக்கா கடல்தாண்டி தில்லைக்கூத்தனை தர்சனம் செய்ய ஈழத் தமிழன் இங்கு வருவதற்கு வசதி வாய்ப்பு செய்யப்பட்டால் விசனப்படுகிறோம்.

  சிங்களனிடம் தமிழன் அடிமைப்பட்டுக்கிடக்கையில்………

  ஈழத்துக் கோவில்களில் பூஜை எதற்கு? ஈழத்தமிழர்கள் எதற்கு பள்ளி கல்லூரிகளில் வீணாகப்படிக்க வேண்டும்? ஈழத்து சர்க்கார் காரியாலயங்களில் உத்யோகம் செய்ய வேண்டும்? எதற்கு லங்கையின் தேசியகீதத்தை தமிழில் பாட வேண்டும்?

  எதற்கு உச்சா கக்கா போக வேண்டும்?

  இன்னிக்கே எல்லாத்தையும் நிப்பாட்டி டுப்பாக்கி எடுத்து கண்டதையெல்லாம் சுட்டு நாளக்கி தமிழ் ஈழத்தை அடைய வேண்டும். மக்கா நாளக்கி கடல்தாண்டி ஈழத்துத் தமிழ் அடலேறுகள் படையெடுத்து தமிழகத்தையும் பிர்ச்சுபோட்டு மேய்ந்து விட வேண்டும். க்ருஷ்ணராஜ சாகரில் குண்டு போட்டு காவிரியை சல்லிசா தமிழ்நாட்டில் கொணர வேண்டும்.

  இதெல்லாம் முடியாட்டி கவலையெல்லாம் பட வேண்டாம். ரொம்ப பவர்ஃபுல்லா தமிழகத்தில் ஞானஸ்னானம் செய்யப்பட்ட மெய்யான தேவனுக்கு வாக்குதத்தம் செய்த பத்தாவது க்ருஹம் ஒன்னு இருக்கு. ஆமை பூந்த வீடும் அமீனா பூந்த வீடும் கூட ஒருக்கால் உருப்படலாம். இந்த பத்தாம் க்ருஹம் பூந்த வீடு உருப்படாது. பிரியலையா. அதாங்க ராம்சாமிநாயக்க தக்ஷிணாமூர்த்திகாரு சிஷ்ய வாள்ளு வை கோப்பால்சாமி காரு,. இப்பத்தான் டிமுக்காவுக்கு திதி செஞ்ச களைப்பில் இருக்காரு. கள்ளத்தோணியில் ஏறி விடுதலைப்புளிகளுடன் போட்டோவெல்லாம் எடுத்து போட்டாரு. கடேசில புளி என்ன கொட்டை கூட மிஞ்சவில்லை.

  இந்த தபா அப்பிடியே யாருகிட்டயாவது சொல்லி இவர கொஞ்சம் சிங்கள ராணுவத்தினரிடம் சென்று சுவிசேஷ ப்ரசங்கம் செய்ய சொல்லுவீராக. சம்சயமேதும் இருந்தால் மோஹன் லாஸரஸ் இவுருக்கு எல்லாம் சொல்லிக்குடுப்பாரு. அப்பறம் பாருங்க சிங்களனுக்கு என்ன கதி என்று. ஒட்டு மொத்த ஒலகத்துல ரொம்ப ராசியான கை பத்தாம் க்ருஹ கோப்பாலின் கை.

  திருச்சிற்றம்பலம். நம்பினார் கெடுவதில்லை இது நான் கு மறைத்தீர்ப்பு.

 23. திரு. கிருஷ்ண குமார்

  முதலில் ஈழ தமிழர்களுக்கு வேண்டியது அரசியல் விடுதலை, அதனை பெற்று கொடுத்து விட்டு பிறகு தில்லை தீட்சித தொப்பைகளுக்கு படியளப்பதை பற்றி பேசலாம். முதலில் அங்கு சுயமரியாதை இல்லாமல் அல்லல்படும் தமிழர்களின் கவுரவத்தை மீட்டு கொடுத்து விட்டு தில்லையை பற்றியோ காசியை பற்றியோ பிறகு பேசலாம். ஒரு உண்மையான சைவன் அதை தான் செய்வான். மறவன்புலவு எப்படி?

  இந்து தமிழர்களை எல்லாம் ஒன்றாக இணைத்து என்ன செய்ய போகிறாராம். ஈழத்திற்காக உயிர் நீத்தவர்களில் எத்தனையோ பேர் கிறித்தவர்களும் இருக்கிறார்கள் என்கிற உண்மை ஆர்.எஸ்.எஸ் கும்பல்களுக்கு தெரியாததா என்ன?

  இலங்கையில் உள்ள தமிழர் நிலங்களை,காணிகளை ஆக்கிரமிப்பு செய்வதில் முஸ்லீம்கள் கிறித்தவர்களை விட பவுத்த சிங்களர்கள் பங்கு தான் அதிகம். இலங்கையில் திட்டமிட்ட சிங்கள பெளத்த குடியேற்றங்களினால் இந்துக் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும், தமிழர் நிலங்கள் பெளத்தமயமாக்கப்படுவதையும் தடுக்க இதுவரை என்னென்ன செய்திருக்கிறார்கள் என்று கூற முடியுமா. மத அடைப்படையில் தமிழர்களை மத ரீதியாக பிளவு படுத்தும் இழி வேலை தான் இங்கிருக்கும் இந்துத்துவ இயக்கங்களுடன் சேர்ந்து மறவன்புலவு அங்கு முன்னெடுத்து கொண்டிருப்பது. ஈழத்தின் பழமையான சிவத்தலங்களாக விளங்குகின்ற கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் போன்ற கோவில்களை குண்டு வீசிய போது, இலங்கை ராணுவம் ஆக்கிரமித்த போது இந்து இயக்கங்களும் இங்கிருக்கும் பார்ப்பனர்களும் வாயை பொத்தி கொண்டிருந்தது ஏன்?

  ஈழத்தில் சிங்கள ராணுவத்தால் அழிக்கப்பட்ட கோவில்களை மறுகடமைப்பதற்க்கே எந்த வழியும் இல்லாமல் இருக்கும் பொழுது, தில்லை தீட்சித தொப்பைகளை நிறைப்பது தான் இப்போது முக்கியமான பணியா?.

  //ஈழத்துக் கோவில்களில் பூஜை எதற்கு? ஈழத்தமிழர்கள் எதற்கு பள்ளி கல்லூரிகளில் வீணாகப்படிக்க வேண்டும்? ஈழத்து சர்க்கார் காரியாலயங்களில் உத்யோகம் செய்ய வேண்டும்? எதற்கு லங்கையின் தேசியகீதத்தை தமிழில் பாட வேண்டும்?//

  பூஜை செய்யட்டும், நன்றாக படிக்கட்டும் .. நாங்கள் சொல்வதெல்லாம் இந்துத்துவ இயக்கங்களின் நச்சு பிடியில் சிக்காமல் இருங்கள் என்றுதான். இந்துத்துவ இயங்கங்களால் இந்தியாவுக்கே எந்த நன்மையையும் கிடையாது என்கிற போது, அப்பாவி ஈழ தமிழர்களுக்கு எதற்காக என்பது தான். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முசுலீம்களோடு உள்ள முரண்பாட்டை வைத்து இந்துத்துவ இயக்கம் அங்கே காலூன்றத் பார்க்கின்றன. அது நிச்சயம் நடக்காது. வேண்டுமானால் பாருங்கள்..

  அப்புறம் முக்க்கியமான ஒன்று, விவாதிக்கும் பொழுது நாகரீகமாக விவாதிக்கவும், நக்கலாக பேசுவதாக நினைத்துக் கொண்டு, உங்களை நீங்களே காமெடி பீஸாக ஆக்கி கொள்ள வேண்டாம். உங்கள் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது, அப்புறம் ஏன் இப்படி எல்லாம்!!!!. சிவகடாட்சம் எப்போதும் இருப்பதாக.

  நற்றுணையாவது நமச்சிவாயவே..

 24. பேரன்புடையீர், தாங்கள் தமிழில் எழுத வேண்டுகின்றேன்.

 25. தாயுமானவன் ஐயா
  // பழமையான சிவதலங்களாக விளங்குகின்ற கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் போன்ற கோவில்களை குண்டு வீசிய போது, இலங்கை ராணுவம் ஆக்கிரமித்த போது இந்து இயக்கங்களும் இங்கிருக்கும் பார்ப்பனர்களும் வாயைப் பொத்தி கொண்டிருந்தது ஏன்? / /
  திராவிடம் பேசுவதும் – ஹிந்து மதம் வேறு சைவம் வேறு என்பதும் – கிருஸ்துவ சகவாசமும் ஒரு நாளும் தமிழனுக்கு உதவாது. இலங்கையில் தமிழர்கள் பலியானதற்கு முக்கிய காரணம் கிருஸ்துவ சோனியாவும் திராவிட கருணாவின் கூட்டுதான் என்பது பாமரனுக்கும் தெரியும். தமிழ் தீவிரவாதம் ஒருபோதும் உதவாது எதை வைத்து நீங்கள் பார்ப்பனர்களும் ஹிந்து இயக்கங்களும் எதிர்க்கவில்லை என்று சொல்கிறீர்கள். ? தனி ஈழம் பேசி தீவிரவாதத்தை வளர்த்து நாசமானது போதாது என்று இன்று தனி சைவம் பேசுவது ஒரு பொழுதும் உதவாது. அது சரி இங்கே தமிழ் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகக் கருணா-சோனியா கூட்டு சதியால் பல கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியுமா ? அதற்கு இந்தச் சைவர்கள் போராட்டம் நடத்தாதது ஏன்? முதலில் சைவன் என்பவன் பட்டை அடித்து கொட்டை போடுகிறானா ? இல்லை பூணூல் தான் போடுகிறானா ? இங்கே ஒரு திராவிட கூட்டம் பன்றிக்கு பூணூல் போடும் விழா நடத்துகிறான். இதற்கு ஒரு சைவனும் வாய் திறப்பதில்லை ? பட்டும் திருந்தாவிட்டால் அதன் பின் விளைவுகளுக்கு பார்ப்பானும் ஹிந்து மதமும் என்ன செய்யும் ? எனவே ஹிந்து இயக்கங்களை எதிர்ப்பது தமிழர்களுக்கு நன்மை தராது.

 26. சென்ற கிழமை திருகோணமலை —சம்பூருக்கு அருகாமையில் உள்ள குன்னித்தீவு என்னும் இடத்தில் உள்ள இந்துக் கோவிலை ஆக்கிரமித்த சின்ஹல பவுத்த குருவும் கிழக்கு மாகாண ஆளுநரின் ( Governor — இவரும் ஓர் சின்ஹல பவுத்தர் )மனைவியும் அக் கோவிலின் கட்டுமான வேலைகளை நிறுத்த சொல்லி மிரட்டி உள்ளனர். கோவிலின் உள்ளே ஆளுநரின் மனைவி சப்பாத்துக் காலுடன் சென்றுள்ளார். இதனை ஆட்சேபித்த கிராமத்து இந்துக்களை அவர் நான்உங்களுக்கு என்ன செய்கிறேன் பார் என ஆக்கிரோஷமாய் மிரட்யுடிள்ளார்.இவர்களுக்கு துணையாக archaelogy department officials முன்வந்து கோவில் உள்ள காணி தமக்கே சொந்தம் எனவும் கோவில் இட்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இப்படி இருக்கின்றது நிலைமை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அகில இலங்கை இந்து மாமன்றமோ ஏனைய சங்கங்களோ பிராமண சங்கமோ அரசாங்கத்தில் ஒட்டியுள்ள இந்து கலாசார அமைச்சர் சுவாமினாதனோ முன்வரவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற அங்கத்தவர்களோ சிவசேனை அமைப்பின் முக்கியஸ்தரான கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேச்வரனோ இதுவரை மூச்சும் விடவில்லை. இந்நிலையில் கப்பல் வருமாம் சிதம்பரம் போவோமாம் அங்கேயே தங்கிவிடுவோமாம் அதனால் ஈழத்தில் இந்துக்களின் தொகை குறையும்போது பவுத்தர்களின் எண்ணம் நிறைவேறுமே.இதற்காகத்தான் பவுத்த வடமாகான ஆளுநர் கப்பல் ஒன்றை தேடித்தர ஓடித் திரிகிறார்.என்னே அக்கறை. ததாஸ்து.

 27. Google ல் Tamilnet எனும் இணையத் தளத்தில் எனது முன்னைய குறிப்பின் மேலதிக விபரங்களையும் ஆளுநர் மனைவியின் அட்டகாச video வையும் பார்க்கலாம்.

 28. //நாங்கள் சொல்வதெல்லாம் இந்துத்துவ இயக்கங்களின் நச்சு பிடியில் சிக்காமல் இருங்கள் என்றுதான். இந்துத்துவ இயங்கங்களால் இந்தியாவுக்கே எந்த நன்மையையும் கிடையாது என்கிற போது, அப்பாவி ஈழ தமிழர்களுக்கு எதற்காக என்பது தான். //

  கிறிஸ்த்துவின் இராஜ்ஜியத்திற்கு இந்தியர்களை அதன் அயல்நாட்டு மக்களையோ அழைத்து செல்வதற்கு இந்து இயக்கங்கள் ஒரு போதுமே உதவிகள் செய்யமாட்டார்கள். அதனால் அவர்கள் நச்சு பிடியில் சிக்காமல் இருங்கள் என்ற எச்சரிக்கை தேவையாக உள்ளது.
  //ஈழத்திற்காக உயிர் நீத்தவர்களில் எத்தனையோ பேர் கிறித்தவர்களும் இருக்கிறார்கள் என்கிற உண்மை ஆர்.எஸ்.எஸ் கும்பல்களுக்கு தெரியாததா என்ன? //
  கிறிஸ்த்தவ சதி திட்டத்திற்கு அவர்கள் உயிர் நீக்காமல் மற்றவர்களும் தங்கள் நல்வாழ்வை அழித்து சிதைத்ததினால் அப்பாவி இந்துக்கள் ஏமாற்றபட்ட இந்துக்கள் என்று அழைக்கலாம்.
  தினமும் இலங்கையில் இந்துக்கள் பவுத்தர்களின் உயிர்கள் பெருமளவில் கொல்லபட்டது தற்போது முற்றாக நிறுத்தபட்டுவிட்டது. இதுவே இவர்களின் மிகுந்த ஏமாற்றமும் கவலையும்.

 29. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

  திருச்சிற்றம்பலம். ஆர்த்ராதர்சன மங்கள நன்னாளில் கனகசபேசன் அருள் நிறைக.

  ஈழத்தமிழர் ப்ரச்சினைக்காக வேண்டி ஈழத்திலிருந்து ஒரு துரும்பை எடுத்துப்போடுபவர்களைக் கூட மிக அதிகமான நான் மதிக்கிறேன். அங்கிருந்தபடிக்கு தங்களுடைய நிலபுலன் களையும் தமது தர்மத்தையும் விட்டுக்கொடுக்காது அதற்காக எப்பாடுபட்டாவது பாடுபடுபவர்களை நான் அதிகமாக மதிக்கிறேன். இங்கு காஷ்மீரத்தில் இன்னமும் தங்கி இருக்கும் காஷ்மீர பண்டிதர்கள் மற்றும் ஸர்தார்களை நான் எந்த அளவு மதிக்கிறேனோ அந்தளவு.

  ஈழத்தில் அனைத்து அடக்கு முறைகளுக்கும் ஆளாபவர்கள் தமிழ் பேசும் ஹிந்துக்கள். அவர்கள் ஹிந்துக்கள் என்பதனாலேயே அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள்.

  \\ இந்து தமிழர்களை எல்லாம் ஒன்றாக இணைத்து என்ன செய்ய போகிறாராம். \\

  தமிழர் தம் தாய்மதமான ஹிந்துமதம் காக்கப்படுவதிலும் தமிழ் ஹிந்துக்கள் ஒன்றிணைவதிலுமேயே ஈழத்துத் தமிழ் ஹிந்துக்களுக்கு விடிவு.

  \\ ஈழத்திற்காக உயிர் நீத்தவர்களில் எத்தனையோ பேர் கிறித்தவர்களும் இருக்கிறார்கள் என்கிற உண்மை ஆர்.எஸ்.எஸ் கும்பல்களுக்கு தெரியாததா என்ன? \\

  ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்கும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பௌத்த இயக்கங்களும் கூட ஈழத்தில் இருக்குமே.

  அப்படியா? ஈழத்தில் சைவசமயத்தை சுவடு இல்லாமல் அழித்தொழித்து விட்டு அங்கே சிலுவையை நிலைநாட்டி அதைத் தமிழ் ஈழம் என்று சொல்லும் ஒரு போராட்டத்துக்கு உயிர் நீத்தவர்களுக்கு ஹிந்துக்கள் எதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ் பேசும் ஈழத்தமிழர் தம் காணிகளை அபகரித்து சிவன் கோவிலை நாசம் செய்து அதை அழித்தொழிப்பவர்கள் தமிழ் பேசும் க்றைஸ்தவர்களாக இருந்தாலும் தமிழ் பேசும் முஸ்லீமாக இருந்தாலும் சிங்களவனாக இருந்தாலும் அவர்கள் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த சம்சயமும் அறவே கிடையாது.

  ஆனால் தமிழ் பேசும் ஹிந்துக்களது காணிகளை அபகரிக்கும் சிவாலயங்களை அழித்தொழித்துத் தகர்க்கும் தமிழ் பேசும் க்றைஸ்தவர்களையும் தமிழ் பேசும் முஸ்லீம்களையும் ஓரே இனமாகக் கருதும் நீங்கள் அதே மாபாதகத்தைச் செய்யும் சிங்களவர்களை எதிர்ப்பது அந்த கனகசபேசனுக்கே ஒப்பாகாது. சிவாலயங்களை இடித்துத் தகர்க்கும் ஒவ்வொரு மனிதனும் அவன் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி …………… அவனை மனித இனத்திலேயே சேர்க்க முடியாது எனும் போது எப்படி தமிழினத்தில் சேர்க்க முடியும் ? ஏன் சேர்க்க வேண்டும்?

  \\ இலங்கையில் உள்ள தமிழர் நிலங்களை,காணிகளை ஆக்கிரமிப்பு செய்வதில் முஸ்லீம்கள் கிறித்தவர்களை விட பவுத்த சிங்களர்கள் பங்கு தான் அதிகம். \\

  தமிழ் பேசும் ஹிந்துக்களை ஹிம்சை செய்யும் அவர்களது காணிகளை அபகரிக்கும் அவர்களது கோவில்களை நாசம் செய்பவர்களில் யார் பங்கு அதிகம் யார் பங்கு குறைவு என்று பேசுவது எந்த அற விழுமியத்திலும் அடங்காது. தமிழ் பேசும் க்றைஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அதே மொழி பேசும் ஹிந்துக்களை ஹிம்சை செய்வதற்கு அவர்கள் மதம் போதனை செய்கிறது என்ற போதிலும் அவர்களை ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக எதற்குக் கருத வேண்டும். அப்படி அவர்களுடன் தமிழ் பேசும் ஹிந்துக்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அதே போன்ற ஒரு சமரஸத்தை அந்த தமிழ் பேசும் ஹிந்துக்களது அதே மதமான ஹிந்து மதத்தில் அடங்கும் பௌத்தர்களுடன் ஏன் செய்து கொள்ளக்கூடாது?

  \\ அப்புறம் முக்க்கியமான ஒன்று, விவாதிக்கும் பொழுது நாகரீகமாக விவாதிக்கவும், நக்கலாக பேசுவதாக நினைத்துக் கொண்டு, உங்களை நீங்களே காமெடி பீஸாக ஆக்கி கொள்ள வேண்டாம். \\\

  அப்படியா? நக்கல் அடிப்பது காமெடி பீஸாக ஆவதற்கு அலகீடு என்று நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள்?

  \\ முதலில் ஈழ தமிழர்களுக்கு வேண்டியது அரசியல் விடுதலை, அதனை பெற்று கொடுத்து விட்டு பிறகு தில்லை தீட்சித தொப்பைகளுக்கு படியளப்பதை பற்றி பேசலாம். \\

  இந்த உங்கள் வாசகத்தில் இருப்பது என்னவென்பதை கனகசபேசன் அறியானோ? அல்லது நக்கல் அடிப்பது உங்களது ஏக போக உரிமை என்று எண்ணுகிறீர்களா? உங்கள் அலகீட்டால் நீங்களும் காமெடி பீஸாக ஆவதை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

  \\ உங்கள் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது, அப்புறம் ஏன் இப்படி எல்லாம்!!!!. \\

  நேரடியாக எந்த கருத்தை முன்வைப்பவர்கள் யார் மீதும் …………… ஏன் மறைமுகமாக பல முகமூடிகளில் மறைந்து கொண்டு கருத்து முன்வைப்பவர்கள் மீதும் கூட எனக்கு மரியாதை எப்போதும் உண்டு. அது எக்காரணம் கொண்டும் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகாது. மேலும் அது எனக்கு யார் எந்தளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை அலகீடாக வைத்தும் இல்லை.

  உங்களது புரிதல்கள் அளவு கடந்த பக்ஷபாதத்தினாலும் எந்த வித புரிதல்கள் அன்றி அதீத வெறுப்பு மற்றும் காழ்ப்புகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். வெறுப்பும் காழ்ப்பும் தரவுகளையும் தர்க்கங்களையும் என்றும் நாடாது. ஒட்டு மொத்தமாக க்றைஸ்தவர்களையோ அல்லது முஸ்லீம்களையோ ….. அவர்கள் தமிழ் பேசுபவர்களாக இருக்கட்டும் அல்லது மாற்று மொழி பேசுபவர்களாக இருக்கட்டும் …………… நான் எதிர்ப்பது கிடையாது. ஆனால் அடுத்தவர்களது சொத்தை அபகரிப்பவர்களையும் அடுத்தவர்களது வழிபாட்டு ஸ்தலங்களை அபகரிப்பவர்களையும் எக்காரணம் கொண்டும் ஒரு மனிதன் ஆதரிப்பது அடிப்படை மனித நாகரிகத்துக்கு எவ்விதத்திலும் ஒத்து வராது.

  திருச்சிற்றம்பலம்.

 30. திரு. ரிஷி…..

  உண்மையில் இலங்கையில் நடப்பது என்னவென்பதையும் அதனை அங்கிருக்கும் இந்து இயக்கங்கள் கண்டுகொள்ளாமல் அஃறிணை ஜென்மங்களாக கடந்து செல்வதையும் எடுத்து கூறிய தங்களுக்கு நன்றி. ஐயா இந்துத்துவாதிகளே முதலில் அங்கிருக்கும் தமிழர்களை கவுரவதோடு வாழவையுங்கள், தமிழையும், சைவத்தையும் அவர்கள் வாழவைப்பார்கள்.

 31. இங்கே சிலர் இலங்கை தமிழர்களுக்கும் , அங்கே நடக்கும் கோவில் இடிப்புகளுக்கும் பார்பனர்களும், ஹிந்து இயக்கங்களும் குரல் கொடுப்பதில்லை என குறைகூறுகிறார்கள். ஆனால் இங்கே 10 ஆண்டுகால சோனியா-கருணா கூட்டு சதியால் தான் பல கோவில்கள் இடிக்கப்பட்டதும், இலங்கை தமிழர் இன அழிப்பு நடந்ததையும் ஏன் கண்முடி பார்த்துக் கொண்டிருந்தார்கள்? விடை தெரியாது ? நான் பிரதம மந்திரி அலுவலகத்திற்கு சமீபத்தில் அனுப்பிய கடிதத்தின் நகல் கீழே கொடுத்துள்ளேன்.

  Dear NAMO (Namo Narayana)

  I am extremely happy about your Governance and pray God to give enough strength and health to lead the country in the right direction for another 20 years. You are aware that once Tamilnadu was in the forefront in the freedom struggle and bakthi margam. Also people call Tamilnadu ” the land of Vedas”. But to-day the situation is upside down due to various anti national forces and almost all the general Tamil masses lost the conscience of Nationhood and indulge in separation activities. Because of this the national parties like BJP and congress were unable to start a landing here. In recent by election the BJP lost deposit. The mentality is being planted in Tamilnadu and Sri Lanka with the Tamil masses long time ago by align forces and ultimately Lankans tamil met the tragedy of genocide lost many valuable lives. Even after the end of war the situation is not improved much and tamilians are even denied their basic human rights. Hindu temples are being vandalized deliberately by Singla outfits. I am sorry that our Government has not done any meaningful dialogue with Sri Lanka to put pressure on them to avoid discriminative attitude towards Tamilians. Hence I request to depute our present Defense Minister Mrs. Nirmala Sitaraman along with a team with draft proposals and also warn them about the deviation of human right and international boundary laws. I hope this will be the first step to get good impression of Indian Tamil masses.
  with regards,
  Vedamgopal

  •cpgrams-darpg@nic.in 2 Jan at 6:51 PM
  To veejee_06@yahoo.co.in

  Dear Sir/Madam,

  Your Communication has been registered vide Registration number PMOPG/E/2018/0002688 . Please logon to : https://pgportal.gov.in/ for any further details.Please quote the same in your future correspondance.

 32. திராவிடம் பேசும் – ஹிந்து ஒழிப்பு-கிருஸ்துவ சதி கூட்டம் கவுரவ நரேந்திர மோடி அவர்களின் மத்திய அரசு எவ்வளவு நல்ல திட்டங்களை கொண்டுவந்தாலும் எதிர்ப்பது என்ற மூடர் கூட்டத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி வருகிறார்கள். அவர்களின் சதிகளில் ஒன்று தான் நான் ஒரு போதும் இந்து இல்லை. சிறு தெய்வங்களை வழிபடுபவன். அது போலவே சைவமும். இங்கே தமிழர்கள் பவுத்தர்களாக இருந்தார்கள் எம்மை ஆரியன் விகாரைகளை அழித்து இந்துவாக மாற்றிவிட்டான் என்று பிரசாரம். இலங்கையை சொல்லும் போது மாற்றி பவுத்தர்கள் இந்து ஆலயங்களை அழிக்கிறார்கள் என்று பிரசாரம். எவ்வளவு பொய்களை சொன்னாலும் நம்பும் மக்கள் இந்துக்களை கொண்டே ஆரம்பகட்டமாக கிழக்க தீமோர் போன்று கிறிஸ்துவின் குட்டி நாடு ஒன்றை இலங்கையில் முதலில் அமைத்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கு கேக் வெட்டி கொண்டாடலாம் என்பது ஆசை.

 33. திரு. கிருஷ்ண குமார்…

  //ஆனால் தமிழ் பேசும் ஹிந்துக்களது காணிகளை அபகரிக்கும் சிவாலயங்களை அழித்தொழித்துத் தகர்க்கும் தமிழ் பேசும் க்றைஸ்தவர்களையும் தமிழ் பேசும் முஸ்லீம்களையும் ஓரே இனமாகக் கருதும் நீங்கள் அதே மாபாதகத்தைச் ………..//

  ஐயா, ஈழத்தில் உள்ள முசுலீம்கள், கிறித்துவர்கள் அனைவரும் அப்பாவிகள், அங்கிருக்கும் இந்துக்களுக்கு எதிராக எந்த பாதகமும் செய்யாதவர்கள் என்று நான் எங்குமே கூறவில்லை. இங்கு பிரச்சனை, யாரால் பிரதான முரண்பாடு என்பதில் தான். அங்குள்ள தமிழர்களுக்கு அதிலும் குறிப்பாக இந்துக்களுக்கு முதன்மையான முரண்பாடாக இருப்பது பவுத்த சிங்கள பேரினவாதம் தானே தவிர கிறித்துவர்களோ இசுலாமியர்களோ அல்ல. அதிலிருந்து அவர்களை காக்க என்ன வழி இருக்கிறது என்பதை தான் நாம் ஆராய வேண்டும். அது தான் இப்போது முன்னெடுக்க படவேண்டிய முறையான அரசியலும் கூட. அதை விட்டு இப்போது நாம் முசுலீம்கள் கிறித்துவர்கள் என்று பேசி கொண்டிருப்பது, சிங்கள பேரினவாதத்திற்கு சாதகமாகத்தான் போய் முடியும்..

  முஸ்லீம்களும் கிறித்துவர்களும் ஈழ இந்துக்களுக்கு எதிராக செய்யும் அடாவடிகளை நாம் முறியடிக்க வேண்டும்தான், அதனை அப்படியே விட்டு விட முடியாது. பவுத்தன் செய்தால் தவறு, தமிழ் பேசுகிறார்கள் என்பதற்க்காக கிறித்துவனும் முசுலீமும் செய்கிறான் என்பதற்க்காக சரி என்றாகி விடாது, அதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது, அதனையும் தடுக்க வேண்டும். அதை பவுத்த பேரினவாதத்தை முறியடிப்பதில் இருந்து தான் நாம் தொடங்க வேண்டும். அதனை செய்தாலே போதும் வாகபிய, கிறித்துவ இவான்ஜெலிச அடிப்படைவாதிகள் தமிழர்களின் பக்கம் தலையை வைத்தே படுக்க மாட்டார்கள்.

  மேலும், இலங்கை முசுலீம்கள் யாரும் தமிழர்கள் கிடையாது. அவர்கள் தங்களை முசுலீம்களாக தான் அடையாள படுத்திக்க கொள்கிறார்களே தவிர தமிழர்களாக அன்று. 1983 ஆம் ஆண்டு நடந்த ஜூலை படுகொலையில், தங்களை காத்துக் கொள்ள அவர்கள் எடுத்த ஆயுதம் தாங்கள் தமிழர் அல்ல என்பது தான். தமிழர்களை கொல்லாதீர்கள் என்று அவர்கள் கூறவில்லை, மாறாக நாங்கள் தமிழர்கள் இல்லை, உங்கள் சண்டையில் எங்களை சேர்க்காதீர்கள் என்று தான் அவர்களின் தலைவர்கள் கூறினார்கள். தமிழ் பேசுகின்றோமே தவிர நாங்கள் முஸ்லீம் என்கிற தனித்த தேசிய இனம் என்று கூறி கழன்று கொண்டவர்கள் தான் இவர்கள். தங்களின் வேர்களை அரேபியாவில் தான் தேடுகிறார்கள். அதனோடு தான் இணைந்துக் கொள்ள விருப்புகிறார்கள். மேலும், தமிழர்களுக்கு எதிரான அனைத்து ஆள்காட்டி வேலைகளையும் சிங்கள அரசிற்கு கச்சிதமாக செய்தவர்களும் இலங்கை முசுலீம்கள் தான் . ஆகவே அவர்களின் மீது எனக்கு பெரிய மதிப்பெல்லாம் ஒன்றும் கிடையாது.

  //இந்த உங்கள் வாசகத்தில் இருப்பது என்னவென்பதை கனகசபேசன் அறியானோ? அல்லது நக்கல் அடிப்பது உங்களது ஏக போக உரிமை என்று எண்ணுகிறீர்களா? …//

  மன்னிக்கவும், நக்கல் தொனியில் பேச தொடங்கியது தாங்களே, உங்கள் பாணியிலேயே உங்களுக்கு பதில் அளிக்க தான் நானும் அவ்வாறு பேச வேண்டியதாயிற்று. உங்களுக்கும் எனக்குமான பழைய விவாதங்களை எடுத்து பாருங்கள், உங்களுக்கு எனக்கும் மாற்று கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் நக்கல் நையாண்டிகள், தரம் தாழ்ந்து பேசுவது போன்றவையெல்லாம் என்னிடம் இருந்து எப்போதுமே வந்திருக்காது . இருந்தாலும், மனம் புண்பட்டிருப்பின் மன்னிக்கவும். நாதனின் நாமமான நமச்சிவாயம் எப்போதும் தங்களுக்கு துணையாகட்டும். நன்றி

 34. திருச்சிற்றம்பலம்.

  \\ இங்கே சிலர் இலங்கை தமிழர்களுக்கும் , அங்கே நடக்கும் கோவில் இடிப்புகளுக்கும் பார்பனர்களும், ஹிந்து இயக்கங்களும் குரல் கொடுப்பதில்லை என குறைகூறுகிறார்கள். \\

  1. ஹிந்துக்களில் என்னென்ன ஜாதிச்சங்கங்கள் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்று கேழ்வியெழுப்பப்பட்டால் ஒருக்கால் முறையாக இருந்திருக்கலாம்.

  ஆனால் ஹிந்து இயக்கங்கள் ஈழத்தில் நடக்கும் கோவில் இடிப்புகளுக்கு என்ன குரல் கொடுத்திருக்கிறார்கள் என்பது மிகுந்த அழிச்சாட்டியத்துடன் எழுப்பப்பட்ட கேழ்வி. தமிழ் ஹிந்து தளம் ஈழத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழும் ஒவ்வொரு நிகழ்விற்கும் எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறது. அவற்றை பதிவு செய்து வருகிறது.

  2. பெருமதிப்பிற்குரிய மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் திருமுறைகளை ஹிந்துஸ்தானத்தின் மற்றைய மொழிகளில் மொழியாக்கம் செய்வது என்ற பணி மட்டும் செய்திடாது ஈழத்திலே தமிழர்களுக்கு எதிராக நிகழும் அடக்குமுறைகள் பலவற்றிலும் புலீஸ் கச்சேரிப்படிகளேறி ந்யாயம் கிடைப்பதற்குப் போராடி வரும் அன்பர். அவர் ஆங்க்லத்தில் எழுதிய வ்யாசத்தை தமிழாக்கம் செய்து தமிழ் ஹிந்துவில் பதிவேற்றியது என்பது…………. தமிழ் ஹிந்து தளம் ஈழத்தமிழ் ஹிந்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு அடக்குமுறைகளையும் பதிவு செய்து ……………….தமிழ் ஹிந்துக்களது குரலை பொதுதளத்தில் முன்வைக்கும் செயற்பாட்டின் ஒரு தொடர்ச்சியே.

  இதற்கு முன்னரும் இது போன்று ………….. தமிழர் தம் காணிகள் சிங்களவர்களால், தமிழ் பேசும் க்றைஸ்தவ மற்றும் இஸ்லாமிய குண்டர்களால் ஆக்ரமிக்கப்பட்டது மற்றும் சிவாலயங்கள் மற்றும் க்ராம தேவதைகளின் ஆலயங்கள் இதே கும்பல்களால் தாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட அவலங்கள் முன்னர் தமிழ் ஹிந்து தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ் ஹிந்து தளத்தை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள் இதை நன்றாக அறிவர். பின்னிட்டும் வாசகர்களுடைய தகவலுக்காக வேண்டி அவ்வாறு பதிவேற்றப்பட்ட முந்தைய **சில** வ்யாசங்களின் தொடுப்புகள் கீழே பகிரப்பட்டுள்ளன.

  https://tamilhindu.com/2012/02/snatched-up-lands-of-eastern-srilanka1/

  https://tamilhindu.com/2012/02/snatched-up-lands-of-eastern-srilanka2/

  https://tamilhindu.com/2012/03/snatched-up-lands-of-eastern-srilanka-3/

 35. மறவன்புலவு ஐயா அவர்கள் ஈழத்திலிருந்து தில்லையம்பலவாணனை தர்சனம் செய்ய வரும் அடியார்களுக்கு கப்பல்போக்குவரத்திற்கு முயற்சி செய்தமையைப் பற்றி வல்லமை தளத்தில் பகிர்ந்த செய்தி :-

  செய்தி அறிக்கை ஊடகத்தாருக்கு
  திருவாதிரைக்குச் சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமான் கோயிலுக்கு ஈழத்துச் சைவர்கள் காங்கேயன்துறைத் துறைமுகத்திலிருந்து அண்மையில் உள்ள தமிழகத் துறைகளுக்குக் கப்பல் வழி செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு 2016 மார்கழியில் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் விழாவில் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

  மிக ஆர்வத்துடன் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்கள் என் வேண்டுகோள ஏற்றார்கள். இலங்கை அரசின் அனைத்து மட்டங்களிலும் அவரது கடும் முயற்சியால் 20.12.2016இல் இலங்கை அரச அநுமதி பெற்றார்கள்.

  பின்னர் இலங்கை அரசு இந்திய அரசுக்கு எழுதி ஒப்புதல் கேட்டது. 21.12.2017இல் இந்திய அரசின் ஒப்புதலை இலங்கை அரசுக்குத் தெரிவிக்க, இலங்கை வெளிவிவகார அமைச்சும் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களுக்கு அறிவித்தது.

  திருவாதிரைக்குச் சிதம்பரத்துக்குக் கப்பல் வழிபோக நான் வேண்டுகோள் விடுத்தேனாயினும் அனைத்து உரிமங்களையும் பெற்று இலங்கை இந்துக்களுக்கு நல்வாய்ப்பாக அமைய முயன்றவர் நல்லுள்ளம் கொண்ட வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களே.

  இலங்கை அரசின் அலுவலகங்களிலும் இந்திய அரச அலுவலகங்களிலும் அநுமதிக்குரிய ஆவணங்கள் அலுலவலர்களின் மேசைகளில் தங்காது விரைந்து பயணிக்க நான் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களுக்கு ஒத்துழைத்தேன்.

  கப்பல் பயண ஒழுங்குகளை ஒருங்கிணைக்கும் பணியில் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். 2.1.2018 திருவாதிரை நாளன்று சிதம்பரத்துக்கு இலங்கை அடியார்கள் போகும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளோம். அருள்மிகு நடராசப் பெருமானை அவனருளாலே அவன்தாள் வணங்கும் வாய்ப்பைப் பெறுவோம்.

  மறவன்புலவு க. சச்சிதானந்தன்

  மார்கழி 9, 2048 (24.12.2017)

 36. ஹிந்துத்வ இயக்கங்களின் மூலாதாரமான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தைப் பற்றி ஹிந்துக்கள் விதந்தோதுவது ஒருபுறம் இருக்கட்டும். தேசபக்தியுள்ள ஒரு க்றைஸ்தவ அன்பர் என்ன கூற வருகிறார் :-

  ஹிந்துஸ்தானத்தின் உச்சந்யாயாலயத்தின் முன்னாள் ந்யாயாதிபதி ஸ்ரீமான் கே டி தாமஸ் அவர்கள் கோட்டயத்தில் நிகழ்ந்த ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பயிற்சியாளர் முகாமில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார். தேசத்தில் அரசியல் சாஸனம் மற்றும் ஜனநாயகம் இவற்றுக்கு அடுத்தபடியாக தேசத்தைக் காப்பாற்ற விழையும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் என்று ந்யாயாதிபதி அவர்கள் பகிர்ந்திருக்கிறார். ஆர் எஸ் எஸ் மைனாரிட்டியினருக்கு எதிரான இயக்கமன்று மாறாக மிக ஆழ்ந்த தேசப்பற்றுள்ள இயக்கம் என்று கூறியிருக்கிறார்.

  அன்னார் பகிர்ந்த உரையின் சாராம்சம் கீழ்க்கண்ட தொடுப்பில்

  https://postcard.news/constitution-army-rss-keeps-indians-safe-retired-supreme-court-judge-k-t-thomas/

 37. திரு.வேதம் கோபால் ………..

  //தமிழ் தீவிரவாதம் ஒருபோதும் உதவாது எதை வைத்து நீங்கள் பார்ப்பனர்களும் ஹிந்து இயக்கங்களும் எதிர்க்கவில்லை என்று சொல்கிறீர்கள். ? தனி ஈழம் பேசி தீவிரவாதத்தை வளர்த்து நாசமானது…//

  இதை பற்றி நான் ஏதும் கூற விரும்பவில்லை, உண்மை எதுவென்று அவரவரின் மனசாட்சிக்கு தெரியும். ஒன்று மட்டும் கூறுகிறேன், தனி ஈழம் என்பது இங்கிருக்கும் திராவிட இயக்கங்கள் பேசி முடிவெடுத்தது அல்ல, அது ஈழ மக்கள் எடுத்த முடிவு. இப்போது விரிவாக இதற்குள் போக விரும்பவில்லை. அது தேவையில்லாத ஒன்று.

  //அது சரி இங்கே தமிழ் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகக் கருணா-சோனியா கூட்டு சதியால் பல கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியுமா ?அதற்கு இந்தச் சைவர்கள் போராட்டம் நடத்தாதது ஏன்? ……//

  தமிழ்நாட்டில் சைவ சமய உணர்வே யாருக்கும் இல்லையே. அவனவன் தன்னுடைய வேண்டுதல்களை தீர்த்துக் கொள்ள, குறைகளை கொட்டுவதற்க்காக மட்டும் தான் கோவில்களுக்கு சென்று வருகிறான். தத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று யாருக்கு இங்கே அக்கறை இருக்கின்றது, இங்கு யாருக்கும் சைவ உணர்வும் கிடையாது சனாதன உணர்வும் கிடையாது. அந்த கடமையை செய்ய வேண்டிய சைவ ஆதீனங்களும், ஆன்மீக மடங்களும் எதுவும் கண்டுகொள்வதில்லை. கார்ப்பரேட் பணக்காரர்களிடம் நன்கொடை பெறுவதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சம் சமூகத்தின் மீது காட்டி இருந்தால் நம்நாடு இன்னும் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.

  அது சரி, எந்த கோவில்களை இடித்து விட்டார்கள் என்று கூறுகிறீர்கள். காஞ்சியிலும், மதுரையிலும் மற்றும் அனைத்து நகரங்களிலும் உள்ள கோவில்களும் நன்றாகத் தானே இருக்கின்றன. ஏதாவது தெருவோர முட்டுச்சந்து கோவில்களை இடித்ததை பற்றியெல்லாம் பேச கூடாது.

  //முதலில் சைவன் என்பவன் பட்டை அடித்து கொட்டை போடுகிறானா ? இல்லை பூணூல் தான் போடுகிறானா ?//

  இதையெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டுமென்று எந்த சைவ இலக்கியங்களிலும் கூறவில்லையே. நாவுக்கரசரோ, ஞானசம்பந்தரோ மாணிக்கவாசகரோ அல்லது சைவ குரவர்களோ அவ்வாறு பாடி இருக்கிறார்களா என்ன? எல்லோரும் இன்பமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணமும், ஆன்ம உருக்கமும் மட்டுமே ஒரு சைவனுக்குள்ள உண்மையான தகுதி. மற்ற வெளிவேஷம் எல்லாம் இதற்க்கு பின்பு தான்.

  //இங்கே ஒரு திராவிட கூட்டம் பன்றிக்கு பூணூல் போடும் விழா நடத்துகிறான். இதற்கு ஒரு சைவனும் வாய் திறப்பதில்லை ?//

  பன்றிக்கு பூணூல் போட்டது தப்பான ஒன்றுதான், மிகவும் கண்டிக்க படவேண்டிய ஒன்று தான். ஆனால், இதனை பற்றி பேசினால் அது கடைசியில் பன்றிக்கு பூணூல் போட்ட கும்பல்களுக்கு விளம்பரம் தேடித் கொடுத்ததை போன்று ஆகி விடும். இதுமட்டுமல்ல, வீரமணி தாலி அகற்றும் போராட்டம் நடத்தியதும் மிகவும் கண்டிக்க படவேண்டிய ஒன்று தான். அதற்காக நாம் கண்டிக்கிறோம் என்கிற பெயரில் இறங்கி இவர்களுக்கு விளம்பரம் தேடி தரும் தவறை செய்ய கூடாது. அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளக் கூடாது. இது போன்ற நபர்களை கண்டுகொள்ளாமல் விடுவது தான் நல்லது. மாறாக, சனாதன தர்மத்தின் பண்பாடுகளை மக்களின் மனங்களில் விதைக்க பாடு பட வேண்டும். அதற்க்கு முதலில் நம்முடைய மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் கூறும் கருத்துக்கள் மக்களிடம் சென்று சேரும் . நமக்கெங்கே, மோடிக்கு ஜால்ரா தட்டுவதற்க்கே 24 மணி நேரம் போதவில்லை. இதில் சனாதனத்தை பரப்ப நேரமேது?. நான் பொதுவாக சொல்கிறேன், உங்களை குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

  //எனவே ஹிந்து இயக்கங்களை எதிர்ப்பது தமிழர்களுக்கு நன்மை தராது.//

  மோடிக்கும், பா.ஜ.கவிற்கும் ஜால்ரா தட்டுவதை நிறுத்தி விட்டு சமூகத்திற்கு தேவையான, உருப்படியான, ஆக்கப் பூர்வமாக பணிகள் எவ்வளவோ இருக்கின்றன அதனை மேற்கொள்ள சொல்லுங்கள், யாரும் அவர்களை எதிர்க்க மாட்டார்கள். எனக்கு தெரிந்ததை கூறி விட்டேன் ஏற்பதும், ஏற்காமல் என்னை ஏசி விட்டு போவதும் அவரவரின் விருப்பம் நன்றி..

  பி.கு:- தாங்கள் பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தை பார்த்தேன், மிக்க மகிழ்ச்சி. அனைத்து மக்களும் குறிப்பாக பிராமணர்களும் தங்களை போன்று சமூக சிரத்தையுடன் இருக்க விழைகிறேன்.. நன்றி..

 38. Mr Vedamgopal

  Thank you very much for your interest and appropriate steps you are taking in the interests of Eelam Tamils. I hope other readers of Tamilhindu will follow you and write to the Prime Minister Hon. Mr Modi and other ministers. Indian Media too should be asked to expose the human rights violations taking place in Srilanka.

  India has failed miserably towards Tamils by accepting over five lakhs Ceylon Tamils under Srimavo Sastri pact and handing over Kachchatheevu to Srilanka. Present government of India must take immediate steps to redress the injustice caused by previous govts, for which kind hearted readers like you should apply pressure on appropriate ministers and departments.

  Mr Thayumanavan

  Thanks for your interest.

  Mr Inthuva

  Did you watch the video I referred to in my previous comment. Police or the government has not taken any steps against Mrs Bogollogama, eastern province governor’s wife, for her threatening violent behaviour. But the Police have arrested four Hindu temple trustees and detained without bail saying they have built the Hindu temple on land belonging to buddhists. This Hindu temple was built and worshiped over seven generations ago, but Sinhala Buddhist Mrs Bogollogama and monks have the final say , ultimate power supported by the govt and armed forces. In Srilanka Buddha and Buddhism have been killed not by Hindus but by violent Buddhists.!! No funeral or cremation.!!

 39. ஐந்தாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு சென்னையில் தருமபுரம் ஆதீனத்தால் அடுத்த மார்ச் மாதம் 8 9 10 11 திகத்திகளில் நடைபெற உள்ளதாக அறிகின்றேன். இதில் சகிக்க முடியாத ஒன்று என்னவெனில் அவர்கள் நடத்தப்போகும் கருத்தரங்கின் தலைப்பு.// வேத ஆகம புராண இதிகாச சங்க இலக்கிய திருமுறை சித்தாந்த சாத்திர இலக்கியங்களில் சைவ சித்தாந்த செம்பொருள்கள் –ஆய்வு//

  இன்றைய கால கட்டத்தில் இந்து சமயத்தினதும் சமூகத்தினதும் தற்போதைய தாழ்வு நிலை, இவற்றை நிவர்த்தி செய்ய எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டியவை, மதமாற்றம், விழிப்புணர்ச்சி இன்மை, உலகம் எங்கும் பரவி உள்ள இந்துக்களின் தாழ்வு நிலை போன்றவைகளே பேசி விவாதித்து கலந்துரையாட வேண்டிய அவசியமானதும் முக்கியமானதும் ஆன விடயங்கள். ஆனால் இம் மாநாட்டின் அமைப்பாளர்களுக்கு இவைகள் எல்லாம் தெரியாதவை அல்லது தேவையற்றவைபோல் அமைந்ததையிட்டு வருத்தமும் வேதனையும் அடைகின்றேன். யாராவது இம் மாநாட்டின் அமைப்பாளர்களை வானத்திலிருந்து பூமிக்கு கொண்டுவர முயலுவார்களா? எமக்கு முதலில் தேவை முற்போக்கான அறிவூட்டல் சார்ந்த சமுகத்தோடு ஈடுபாடு கொண்ட நடைமுறை இந்து சமயம் ,socially engaged hinduism, பற்றிய ஆய்வு விவாதம் கலந்த்துரையாடல். யார் பூனைகளுக்கு மணி கட்டுவது?

 40. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

  திருச்சிற்றம்பலம்

  \\ மன்னிக்கவும், நக்கல் தொனியில் பேச தொடங்கியது தாங்களே, \\

  தங்கள் ஆக்ஷேபம் சரிதான். நான் எகத்தாளம் செய்தது தீராவிடத்தினரை. என்னுடைய சொந்த ஜில்லாவான நீராதாரம் நிறைந்த சேலத்தில் ஒவ்வொரு ஏரி, குளம் என இவர்கள் ஐந்து தசாப்தங்களாக என் கண் முன்னே அழித்தொழித்து நகரை சிமெண்டு ஜல்லிக்காடாக மாற்றியுள்ளமை ஆறாத ரணம். இது இவர்கள் மீது ஒரு ஆக்ஷேபம் தான். இன்னும் பலதும் உண்டு. ஆனால் நான் இகழ வேண்டிய இவர்களை இகழ்ந்தது தங்களுடன் பரிமாறிய உத்தரத்தில் ஒரு பகுதியாக வந்த படிக்கு தங்களுக்கு கசப்பளித்திருக்கிறது என லேட்டாக எனக்குப் புரிகிறது. என்னுடைய கவனக்குறைபாட்டிற்கு ஹ்ருதயபூர்வமாக க்ஷமாயாசனம்.

  ஈழத்தில் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது சிங்களப் பேரினவாதம் என்பதில் எனக்கு சம்சயம் கிடையாது. தமிழ் பேசும் க்றைஸ்தவர்களோ அல்லது இஸ்லாமியர்களோ ……….. இவர்களையும் கூட நான் ஒட்டு மொத்தமாக ஆக்ஷேபிக்கவில்லை. ஈழத்திலும் இவாஞ்சலிசமும் வஹாபியமும் பெருகி வருகிறது என்ற போதிலும் அதனுடன் முழுமையாக ஒட்டாமல் ஈழத்துத் தமிழ் ஹிந்துக்களுடன் ஒன்றிசைந்து வாழும் க்றைஸ்தவர்களை நான் நன்றாக அறிவேன்.

  ஈழத்து சைவ பரிபாலன சபையார் நடத்தியுள்ள சைவநெறி மற்றும் தமிழ்மொழிப் பரீக்ஷைகளில் ஈழத்திலுள்ள தமிழ் பேசும் க்றைஸ்தவர்களும் கூட பங்கேற்றிருப்பதைக் கண்ணுற்றேன். தமிழக முஸ்லீம்களிடையே ஒருகாலத்தில் சீறாப்புராண முற்றோதல் முறைமை இருந்தது. வஹாபியத்தால் அது நசுக்கப்பட்டும் இழிவு செய்யப்பட்டும் வருகிறது. ஈழத்திலும் அப்படியே என அறிகிறேன். ஆயினும் பழைய பண்பாட்டினை போற்றிக்காப்பவர்களும் இன்னும் இருக்கின்றனர் என்றும் அறிகிறேன். அது மட்டும் இல்லை. தமிழர்களுடைய உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் மற்றும் அவர்களுடன் இயைந்து வாழ விரும்பும் பௌத்தர்களும் கூட இருக்கின்றனர் என்றும் அறிகிறேன்.

  எதிர்க்கப்பட வேண்டியது அடுத்தவருடைய அடிப்படை வாழ்வுரிமை அடியோடு நசுக்கப்படுவது. எதிர்க்கப்பட வேண்டியது பௌத்த பேரினவாதமேயன்றி ஒட்டு மொத்த சிங்கள பௌத்தர்களும் அறவே கிடையாது.

  கிஞ்சித்தே அபிப்ராய பேதம் நம் கருத்துக்களினூடே இருக்கிறது என்ற போதிலும் உரத்துப் பேசுவதால் அல்லது மடை மாறிப்பேசுவதால் தேவையற்ற வ்யாகூலம் வந்து சேருகிறது என்றும் கூட மயிலேறும் பெருமான் பாடமளிக்கிறான் என்றே புரிந்து கொள்கிறேன். தேவையான பாடம் தான். வெற்றிவேல்.

 41. உயர் திரு க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு முன்னாள் உச்ச நீதிமன்றத்தின் மிக உயர்ந்த நீதிபதியின் நடுநிலை கருத்து தகவலுக்கும், மற்றும் பதிவேற்றப்பட்ட முந்தைய சில தொடுப்புகளுக்கும் நன்றி. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நல்லோர்கள் பெருமகன் தாமஸ் போன்றே உண்மைகளையே உரைப்பார்கள்.
  ஆனால் விஷம் கொண்ட திட்டங்கள் கொண்டோரும் ஈவேராவின் ஜாதி வெறி தொண்டர்களுமே வேறு முறையில் பிரசாரம் செய்வார்கள்.
  இந்து இயங்கங்களால் இந்தியாவுக்கே எந்த நன்மையையும் கிடையாது. இந்து இயக்கங்களின் நச்சு பிடியில் சிக்காமல் இருங்கள்.
  மற்றும் இந்து தமிழ் பேசும் மக்களை ஜாதி வகையில் பிரித்து பார்த்து மோதவிடுவார்கள். பார்ப்பான் வாயை பொத்தி கொண்டிருக்கிறான் என்பார்கள். இன்னும் சொல்வார்கள் இந்தியாவை ஆளுவதற்கு மத்தியில் மதங்களில் நடுநிலை என்று அறிவித்தல் கொடுக்கும் காங்கிரஸ் வந்தாலும் சரி அல்லது இந்து கட்சி பிஜேபி வந்தாலும் சரி தமிழனை ஒழிப்பற்காகவே இவர்கள் செயல்படுவார்கள் என்பார்கள்.
  எப்படியாவது இந்திய தேசத்தை நாசம் பண்ண வேண்டும் என்பதே இவர்கள் கொள்கை.

  Mr.Rishi நேரம் கிடைக்கும் போது வீடியோவை பார்க்கிறேன்.

 42. தாயுமானவன் on December 26, 2017 at 4:17 pm
  சிங்களனிடம் அடிமைப்பட்டு கிடைக்கும் ஈழ தமிழர்கள்(இந்துக்கள்) அனைவரும்,
  அதனை மறந்து விட்டு தில்லைநாதனை தரிசிக்க வேண்டியது தான் தங்களின்
  முதன்மையான அவா என்று உங்களிடம், மறவன்புலவிடமும் வந்து கூறினார்களா..!! பேஷ்

  மேலதிக தகவல்கள்
  சிங்களனிடம் அடிமைப்பட்டு கிடைக்கும் ஈழ தமிழர்கள்(இந்துக்கள்) அனைவரும்
  அதனை மறந்து விட்டு தை பொங்கல் கொண்டாட போகிறார்கள்!
  சிங்களனிடம் அடிமைப்பட்டு கிடைக்கும் ஈழ தமிழர்கள்(இந்துக்கள்)
  அனைவருக்காகவும் தை பொங்கல் 14 திகதி இலங்கை முழுவதிலும் அரச விடுமுறை தினமாக இஸ்லாமிய மதத்தவர்கள், பௌத்ததர்களுக்கும் வழங்கபட்டு உள்ளது.
  இந்திய நாட்டின் தயாரிக்கபட்ட தமிழ் சினிமா படங்கள் தானா சேர்ந்த கூட்டம்,
  ஸ்கெட்ச், மதுரவீரன், குலேபகாவலி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற 5 படங்களை தை
  பொங்கல் தினத்தன்று சிங்களனிடம் அடிமைப்பட்டு கிடைக்கும் ஈழ தமிழர்கள்
  கண்டு களிக்க போகிறார்கள்.
  இலங்கையில் இருந்து தை பொங்கள் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *