மீனவர் துயரம்: சும்மா இருக்கிறதா மோதி அரசு?

ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை காணவில்லை ; அதை தொடர்ந்து பரவும் புரளிகள் போராட்டங்கள் ? இதை பற்றி உங்கள் கருத்து என்ன மாரிதாஸ்.{கேள்வி : கமல்}

தமிழக மீனவர்கள் 180 பேர் லட்சத்தீவில் மீட்பு.

மலப்பார் கடல் பகுதியில் 3 இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சுமார் 662 மீனவர்கள் மீட்பு (259 மீனவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்).

கிழக்கு கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த 9 கப்பல்கள் தேடும் பணி தீவிரம்.

இவ்வளவும் நடந்து கொண்டு தான் இருக்கு.

ஒரு உயிர் போக – ஒரு குடும்ப தலைவன் சாவினால் அந்த குடும்பம் எந்த அளவு சவாலினை எதிர்கொள்ளும் என்பது எல்லாம் இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதனுக்கும் புரியும். தொடர்ந்து நமது கப்பல் படை தேடுதலை மேற்கொள்ள கொஞ்சமாது பொறுமைகாக்கலாமே? உடனே போராட்டம் தூண்டிவிட்டு என்ன சாதிக்க விரும்புகிறார்கள் இந்த போராளிகள்?

நாட்டில் – முக்கியமாக தமிழ் நாட்டில் ஒரு வியாதி போல இது பரவிவிட்டது. எப்போ பாரு என்ன எது என்று சிந்திக்காமல் போராட்டம். கேட்டால் மத்திய அரசு , மாநில அரசு என்று வெறுப்பை பரப்புவது. இன்று இந்த மீனவர்கள் என்று குரல் கொடுக்கும் அனைவரையும் நான் சில விசயங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்வேன்.

கன்னியாகுமரியில் இணயம் துறைமுகம் (Enayam Port) சுமார் 21,000கோடி செலவில் மத்திய அரசு அறிவித்த திட்டத்தை எதிர்த்து போராடிய அதே மீனவ கிராம மக்கள் – அணுஉலைக்கு எதிராக போராடிய அதே மீனவ கிராம மக்கள் – இன்று ரயில் மறியல் போராட்டம் செய்கிறார்கள். சரிதானே?

அந்த துறைமுகம் வந்தால் இந்திய கப்பல்படை , சரக்கு கப்பல் முதல் ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க தேவையான கட்டுமானமும் கன்னியாகுமரி மீனவர்களுக்கு கிடைக்கும் என்று Indian Ports Association , ocean economist கூற எதற்கு யார் போராட்டத்தை தூண்டியது? அன்று யாராவது, “போராட்டம் நடத்தாதீர் இது உங்களுக்கான திட்டம்” என்று எவராவது அறிவுரை கூறியிருக்கலாமே. பிஜேபி அனுமதி அளித்த ஒரே காரணத்திற்காக பிஜேபி அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முயற்சியை தடுத்து நிறுத்துவோம் என்று வெக்கம் இல்லாமல் பேட்டி கொடுத்தது இதே போராட்டகாரர்கள் தானே.

இடிந்தகரை வேளாங்கண்ணி மாத சர்ச் , கமநரி CSI சர்ச் , All saint’s சர்ச் , St.lgnatius சர்ச் இப்படி இடிந்தகரை முதல் கன்னியாகுமரி வரை – இந்த பக்கம் ராமேஸ்வரம் வரை உள்ள சர்ச்சுகள் எதற்கு எடுத்தாலும் மக்களை போராட்டகளில் தூண்டி தவறாக வழிநடத்துகிறார்கள் என்று அனைவரும் குற்றம்சாட்டுகிறார்கள்.

******

இன்று ராமேஸ்வரம் , கன்னியாகுமரி மீனவர்கள் என்று திடீர் போராளிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் நான் கேட்க விரும்புவது:

அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மீனவர்கள் வருமானம் பலமடங்கு அதிகம் கிடைக்க காரணம் ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க அவர்களிடம் Seiners , fishing vessels என்று நவீன கால மீன்பிடி கப்பல்கள் உண்டு. அதன் விலை 1கோடி வரை இருக்கும். அவை இருந்தால் 22.2 km உள்ளாக மீன்பிடிக்கும் நமது மீனவர்கள் சுமார் 370.4 km வரை சென்று மீன்பிடிக்க முடியும். இதனால் 10மடங்கு அதிகம் வருமானம் கிடைக்கும்.

இந்த வித கப்பல்கள் வாங்க மோடி அரசு கடனுதவி செய்ய தயார் என்றது. பின்னர் மீனவர்கள் கூட்டாக சேர்ந்து கூட இந்த கப்பலை வாங்கிகொள்ளலாம் கடன் உண்டு என்றது, பின்னர் கப்பல் வாங்க எந்த Sureties கொடுக்க முடியாது என்று மீனவர்கள் கூற – அந்த வாங்கும் கப்பலையே Suretiesயாக எடுத்து கொள்கிறோம் என்றது அரசு – பின்னர் அந்த கப்பல்களுக்கு தேவையான அளவு டீசல் மானியம் வேண்டும் என்று கேட்டனர்…(மீனவர்களுக்கு மானிய விலையில் மாதந்தோறும் 4,500 லிட்டர் அரசு வழங்குகிறது அதையும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள். இதை இன்னும் அதிகம் கேட்டால் என்ன அர்த்தம். இதில் மானியமாக வழங்கும் டீசல் கடத்தி விற்பது வேறு காலம் காலமாக நடக்கிறது.)

இந்திய வரலாற்றிலேயே எந்த பிரதமர் இந்த அளவு லோன் தர – அவர்கள் வாழ்வை முன்னேற்ற முன்வந்தார்? இந்த அளவு சலுகை வேறு எந்த துறைக்கு நாட்டில் கொடுத்தார்கள்?

எவனாது இந்த மீனவர்களுக்கு எடுத்து சொல்லி – இதற்கு மேல் சலுகைகள் கூடாது – கொஞ்சம் நாமும் ஒத்துழைக்கவேண்டும் என்று கூறி அவர்களை சரியான வழியில் எவன் நடத்தினான் ?

கொடுமை என்ன தெரியுமோ – மானியம் 12-15 லட்சம் வரை தருவதாகவும் இதை Pradhan Mantri Mudra Yojana திட்டத்தில் தருவதாகவும் கூட அறிவித்தது மோடி அரசு. இதில் தமிழக அரசும் தன் சார்பாக மானியம் அறிவித்தது. ஆனாலும் ஏன் திட்டம் வெகுவாக மக்களை சென்று முழுமையாக சேரவில்லை?

எப்படி வெக்கமே இல்லாமல் எந்த நலத்திட்ட அறிவும் தெரியாமல் மீனவர்களை காப்பாற்றவில்லை என்று குறை பேச வாய்வருகிறது?

காரணம் பிஜேபி, மோடி வெறுப்பு? படித்தவர்கள் இப்படி என்றால், பாவம் படிக்காத மக்கள் என்ன செய்வர்?

மதவெறி பிடித்து திரியும் இந்த கிருஸ்தவ மெசினரிகள் இந்த ஏழைமக்களை தவறாக தூண்டிவிடுவது தான் நோக்கம் என்று கீழ்த்தரமாக எப்போ பார் எதையாது தூண்டிவிட்டு கொண்டே இருப்பது- எவராது தவறு என்று இது வரை பேசியது உண்டா?

இன்று மீனவர்கள் சரியான கணக்கெடுப்பு இல்லை என்று கூறும் நாம் – கொஞ்சம் சிந்தியுங்கள் – 10 குடும்பம் வந்து காணவில்லை என்றால் நம் போலீசிடம் கணக்கு இருக்கும் – தேடுவர். இவர் இவர் வீட்டு ஆண்களை காணவில்லை என்று. ஆனால் இங்கே ஏன் கணக்கு குழப்புகிறது? இலங்கையில் இருந்து வந்த அகதிகளை – இங்கே போலி ரேசன்கார்டு முதல் பான்கார்டு வரை வாங்கி திருட்டுத்தனமாக குடியமர்த்தியது யார்? இதை செய்தால் என்ன கணக்குவழக்கு இருக்கும் முறையாக? இது நடக்கவே இல்லை என்று கூற முடியுமா யாராவது?

இந்த மீனவர்கள் அதிகம் கடத்தலில் ஈடுபடுவது தவிர்க்க – அவர்கள் கடினமாக உழைப்பு வீணாக கூடாது – அதற்கு நல்ல பல நலத்திட்டங்களை அரசு செய்கிறது. நன்கு புரிந்து கொள்ளுங்கள். அந்த நலத்திட்டம் எல்லாம் வரி கட்டும் 1% மக்கள் காசு. அதை வைத்து தான் விவசாய கடன் முதல் இந்த மீனவர் நலன் வரை அரசு செய்கிறது. கொஞ்சமாது நமக்கு பொறுப்பு , மனசாட்சி இருக்கும் என்றால் அரசின் நல்ல முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம் தானே? அதை மீனவர்களுக்கு எடுத்து கூறிய ஒரு போராளி எங்கே காட்டுங்கள் இந்த கூட்டத்தில்?

கிடையாது. கிடையவே கிடையாது- தமிழகத்தில் போராளிகள் உண்மை நோக்கம் மக்கள் நலன் அல்ல ; அப்படி மக்கள் நலன் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பிரதமர் தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission) அளித்த பொது மக்களை தூய்மை , கழிப்பறை என்று மக்கள் இயக்கமாக உருவாக்கி தூய்மை செய்யும் பணியை கையில் எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நம்ம போராளி என்ன செய்தான்? கேலி செய்து மீம்ஸ் போட்டான். பின்னர் டெங்கு பரவிய போது புரளியை கிளப்பி போராட்டம் தூண்டினான். 93 சதவீத கிராமங்களில் கழிவுகள் , குப்பைகள் முறையாக பராமரிக்கவில்லை. 49.8% வீட்டில் கழிப்பறை இல்லை. இந்த கவலை எவனுக்கது எந்த போராளிகாது உண்டா?எது சரி ?? மனசாட்சியை தொடுங்கள் உண்மை புரியும் இந்த போராளிகள் வேஷம்.இதை ஏன் கூறுகிறேன் என்றால் மீனவர்கள் வாழ்வாதாரம் மீது உண்மையில் அக்கரையுள்ளவன் போல் நடிப்பவர்களை அடையாளம் காணுங்கள்.

இந்த விதம் இயற்கை பாதிப்புகள் உருவாகும் காலத்தில் மீட்பு பணியில் உள்ள அரசுடன் ஒத்துழைத்து- மீட்பு பணியை விரைவு செய்வான். ஆனால் தமிழகத்தில் ஆனா ஊனா போய் ரயிலை மறியல் , நெடுஞ்சாலைகளில் உக்காந்து பஸ் மறியல் என்று ஏன் தூண்டிவிடனும்?

அந்த ரயிலில் – தன் தாயிக்கு மருந்து வாங்கி வருபவன் முதல் குழந்தைக்கு மருத்துவம் பார்ப்பவன் வரை – பல பயணங்கள் இருக்கு. அப்படி இருக்க அதை போய் இடஞ்சல் செய்ய ஏன் தூண்டுகிறார்கள் இந்த சர்ச்சு பாதிரியார்கள்? அறிவு இருக்குறவன் எவனாது ரயில் – பஸ் மறியல் செய்வானா? துணிந்து மக்கள் செய்யும் தவறுகளையும் கண்டியுங்கள். சும்மா மக்கள் எல்லாரும் நல்லவன் என்று நடிக்கதீர். சினிமா படம் போல் உன் கற்பனை அல்ல நாடு.

இறுதியாக :

Sagar Mala project – கடல் கரையோரம் மக்கள் வாழ்வும் பொருளாதாரமும் மேம்பட சுமார் 8 லட்சம் கோடி முதலீட்டில் 415 project அனைத்து கப்பல் துறைமுகங்களையும் நவீனமயம் ஆக்குவது – கடற்கரைகளை மட்டும் இணைத்து Port-Linked Industrialisation உருவாகுவது வரை உலக வங்கியின் துணையோட நடந்து கொண்டிருக்கும் இந்த விதமான திட்டங்களையும் கார்ப்பரேட் எதிர்ப்பு என்று – அது போச்சு இது போச்சுன்னு அடுத்து போராட்டம் தூண்ட ஒரு குரூப் காத்துகிடக்கு. அதை ஆதரிக்கும் முன் ocean economics படிச்சுட்டு தயவு கூர்ந்து மற்ற நாடுகள் முன்னேற்றம் எப்படி என்று தேடி தெரிந்து கொண்டு – திட்ட விவரங்கள் அனைத்தும் வெளியிடபட்டுள்ளது அதையும் படுத்துவிட்டு பேசு. ஏன் கூறுகிறேன் என்றால்.

உங்களுக்கு மட்டும் தான் அக்கறை உள்ளது மத்தவன் எல்லாம் எதோ சினிமா வில்லன் போல நினைப்பது ஒருவித வியாதி. நான் போராளி என்று உன் மனதில் தோன்றுவதே கூட ஒரு மனவியாதி தான் (Sagar Mala project எதிர்து எப்படியும் பெரிய போராட்டம் நடக்கும். காத்திருக்கிறேன்).

மாணவர்கள் போராட்டம் என்று லயோலா , மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ், ஸ்டெல்லா மேரிஸ் , women கிறிஸ்டியன் காலேஜ், ymca காலேஜ், st christophe காலேஜ் என்று ஒரு டஜன் கிருஸ்தவ கல்லூரி அதன் மாணவர்கள் முதலில் போராட்டங்களில் குதிப்பது பின்னால் இருக்கும் மத அரசியல் எந்த அளவு உண்மையோ.

அதே அளவு உண்மை மீனவர் போராட்டம் என்று சர்ச்சுகள் குதிப்பது. நமது கப்பல் படை வீரர்கள் தேடும் பணியில் இருக்கும் போது இப்படி போராளிகளை நம்பாமல் கொஞ்சம் உண்மையை உணர்ந்து பேசுங்கள். போராளிகள் தந்திரமாக மறைந்து வேலை செய்கிறார்கள். மக்கள் தவறுதலாக தூண்டபடுகிரார்கள் எம்பது தான் 100% உண்மை.

2016ல் NGO தொண்டு நிறுவனம் என்று வெளிநாடு நன்கொடை வாங்கி கணக்கு காட்டாமல் திரிந்த சுமார் 33,000 நிறுவனங்களை என்று மோடி இழுத்து மூடினாரோ – அவர்களுக்கு மதம் மாற்ற வரும் நன்கொடைகளை தடுத்து நிறுத்தினாரோ அன்று முதல் இந்தியாவில் முக்கியமாக கிருஸ்தவ மிசினரிகள் கூச்சல் போராட்டம் நடந்துகொண்டே தான் இருக்கிறது. இதை புரிந்தால் புரியவில்லை என்றாலும் இதுவே 100% உண்மை. அவர்களுக்கு நோக்கம் பிஜேபி , மோடி விமர்சிக்க வேண்டும்.

எவனை வேண்டுமானாலும் நம்பு திமுக – திக – விசி இந்த கூட்டணியை நம்பவே நம்பாதே.

மிக முக்கியமான ஒன்று: எந்நேரமும் குறை சொல்லி வெறுப்பாக பேசிகிட்டே திரியாதே – அது உன் வீட்டும் நல்லது அல்ல; நாட்டுக்கும் நல்லது அல்ல; அட உனக்கே கூட அது நல்லது அல்ல.

மாரிதாஸ் 

தமிழ்நாட்டு அரசியல், சமூக பொருளாதார பிரசினைகள் மற்றும் பல விஷயங்கள் குறித்து  தேசநலன் சார்ந்த பார்வையுடனும்,  ஆக்கபூர்வமான சமூக அக்கறையுடனும் தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில்   சிறப்பாக எழுதி வருகிறார். 

இது அவரது சமீபத்திய பதிவு.  

4 Replies to “மீனவர் துயரம்: சும்மா இருக்கிறதா மோதி அரசு?”

 1. மாரிதாஸ் போன்று விஷயத்தெளிவுள்ள அன்பர்களின் வ்யாசங்கள் தமிழ் ஹிந்துவில் நிறையப்பதியப்பட வேண்டும்.

  தமிழகத்தில் அடுத்தடுத்து போராட்டங்கள் என்பவை பரங்கிய க்றைஸ்தவ தேவாலயங்களின் என் ஜி ஓ ஏஜெண்டுகள் மற்றும் ஜிஹாதிப்பணத்தால் தமிழகத்தின் சமூஹவிரோதக் கும்பல்களை வைத்து நிகழ்த்தப்படுகிறது.

  எழுத்தாளர்கள், சினிமாக்கூத்தாடிகள், அரசியல்வ்யாதிகள் உதயக்குமார் டேனித்திருமுருக்கன்கேண்டி போன்ற க்ரிப்டோ க்றைஸ்தவர்கள் இவர்கள் எல்லோரும் திடீர் விக்ஞானிகள் ஆகி விடுகிறார்கள். அணுசக்தியிலிருந்து மீத்தேனிலிருந்து ந்யூட்ரினோவரை சகல விதமான வளர்ச்சித்திட்டங்கள் பற்றிய நிறைகள் குறைகள் இவற்றையெல்லாம் வாட்ஸப்பிலும் கூகிளிலும் இருந்து கண்டதையும் காப்பி பேஸ்ட் செய்து தமிழர்களின் பீதியைக் கிளப்பி விடுகிறார்கள். இவற்றால் மூளை மழுங்கடிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களும் ஏதோ தாங்களும் தமிழகத்திற்கு நல்லதே செய்கிறோம் என்று நினைத்து இந்த சமூஹவிரோதக் கும்பல்களுடன் கலந்து கோஷ்டங்கள் இட்டு அறியாமையில் ஐக்யமாகிவிடுகிறார்கள்.

  தமிழகத்தின் பண்பாட்டுச்சின்னங்களான கோவில்களை தீராவிடத்திருட்டு கும்பல்கள் சிறிது சிறிதாக கொள்ளையடிப்பதை வெள்ளந்தியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான் தமிழன். தூண்தூணாகத் தமிழகத்துக் கோவில்கள் பெயர்த்தெடுக்கப்படுகின்றன. கோவில்களிலிருந்து அர்ச்சாமூர்த்திகள் (இதை மூளை மழுங்கிப்போன தமிழன் சிலை என்னுவான்) திருடப்பட்டு பெரும்பணத்துக்கு விக்ரயம் செய்யப்படுகின்றன.

  ஒருபுறம் ஓலைச்சுவடிகளைக் காப்பாற்ற ஆர்வமுள்ள தமிழர்கள் பாடாய்ப்பட்டுக்கொண்டிருக்கையில் தீராவிடத் திருட்டு கும்பல்கள் ஆலயங்களை புனருத்தாரணம் செய்கிறேன் பேர்வழியென்று மணல்வீச்சடித்து ஒவ்வொரு கல்வெட்டையும் நாசம் செய்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு ஆறு குளம் ஏரி கண்மாய் இவற்றை ராமசாமிநாயக்க தக்ஷிணாமூர்த்திகாரு கும்பல்கள் தூர்த்து கட்டிடம் கட்டி கல்விவ்யாபாரக்கூடங்கள் கட்டி பெரும்பணக்காரர்கள் ஆவதை தமிழன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். சர்க்கார் விக்ரயம் செய்யும் மலிவு விலை சரக்கில் போதைக்கு அடிமையாகி நாலில் ஒரு பங்கு தமிழனின் குடும்பம் நாசமாய்ப் போய்க்கொண்டிருப்பதைத் தமிழன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்.

  இப்படித் தெரிந்த விஷயங்களைப் பற்றிப் பாராமுகமாய் இருந்து சோசப்பு விசயின் சினிமாவில் விசிலடித்துக்கொண்டிருக்கும் தமிழன் ஒரு சுக்கும் தெரியாத விஷயத்துக்கு பதாகையேந்தி கோஷ்டம் போடுகிறான் சமூஹவிரோதிகளுடன் சேர்ந்து.

 2. I request readers to analyse why we are not able to counter these poisonous pastors who are fomenting trouble in India with ulterior motives. Even when a government that is symphathetic to Hindus is at the centre we are unable to stop the brainwash of these inimical forces!. Where are the missionaries who perform endless miracles on stupid Hindus and neo converts?. Why can’t they do some miracle now in the name of their jeeeesus and bring back the missing/ dead fishermen. Around new year they will again come with prophecies for 2018 as revealed to them by jeeeesus. People should ask them why Jesus forgot to tell them about cyclone oki.

 3. புதிதாக வந்திருக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர். இளைய தலைமுறைகளில் வலது சாரி எழுத்தாளர்கள் குறைவு. புள்ளிவிவரங்களோடு எழுதும் எழுத்தாளர்கள் குறைவு. இவர் புள்ளிவிவரங்களை வைத்து எழுதுகிறார். ஆனால், எத்தமிழ்நடையில் எழுதவேண்டுமென்பதில் கவனம் செலுத்தவில்லை. தன் கருத்துக்கள் எல்லாராலும் வாசிக்கப்படவேண்டுமென்று விரும்பினால் தினமணியில் வரும் நடுப்பக்க கட்டுரைகள் அல்லது தினமணி கதிர்; தினமணி ஜங்சன் போன்ற இதழ்களில் வரும் கட்டுரைகள் நடையில்தான் எழுதவேண்டும். முகஞ்சுழிக்காமல் படிப்பர் அவர்கள் இடதுசாரிகளாக இருப்பினும்கூட. முகநூலைக்கூட அனைவரும் படிக்க நாகரிக நடையிலேயே எழுதவேண்டும். கொச்சைத்தமிழ், அடாவடித்தனமான தமிழில் என்றால் ”அவர் ஒரு நாலாந்தர எழுத்தாளர்” என்ற வகையில் வைக்கப்படுவார். பாமரத்தமிழ் போதும். தமிழ்ப்பிழைகள் இவரெழுத்தில் மிகை. தமிழ்ப்பிழைகள் ஏன்? என்ற கேள்விக்கு இவரின் பதில் (முகநூலில்) ”என்னோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. தவிர்க்கமுடியவில்லை” என்பது. கொச்சைத்தமிழைத் தவிர்ப்பதற்கும், ஒரு பள்ளி மாணவன் போடும் பிழைகளைத் தவிர்ப்பதற்கும் ரொம்ப மெனக்கிடத் (வினைக்கெடத்) தேவையில்லை. கொஞ்சம் முயன்றால் தமிழ் வரும். வளரவேண்டியவர் பெரிய நிலைக்குப் போகும் வாய்ப்பிருக்கிறவர் என்பதால் முதலிலேயே சொல்லி வைத்தல் நன்றல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *