சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல் (கோ.செங்குட்டுவன்) சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு முக்கியமான சிறு வரலாற்று நூல். விழுப்புரம் மாவட்ட ஊர்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த திராவிட-மார்க்சிய பின்னணி கொண்ட நூலாசிரியர், எண்ணாயிரம் என்ற ஊர்ப்பெயரைக் குறித்த தேடல் மூலமாக இந்த விஷயத்திற்குள் வந்து சேர்ந்திருக்கிறார் என்பது சுவாரஸ்யமானது. இந்த ஆய்வில் அவர் கண்டடைந்து எழுதியுள்ள முடிவான கருத்து எனக்கு முற்றிலும் உடன்பாடானது.
“ஒரு கதைக்கு 12ஆம் நூற்றாண்டில் கால் முளைத்தது. இது, 16ஆம் நூற்றாண்டில் இறக்கை கட்டிப் பறந்தது. இப்போதும் அது பறந்து கொண்டுதான் இருக்கிறது” என்று ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது முற்றிலும் சரி. கதை என்பதற்குப் பதிலாக “ஐதிகம்” என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். “சம்பந்தருடனான வாதத்தில் தோற்று மதுரையில் 8000 சமணர்கள் கழுவேறினர்” என்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. சம்பந்தரின் காலத்திற்கு 5 நூற்றாண்டுகளுப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி முதன்முதலில் தனது சம்பந்தர் புகழ்மாலைப் பாடல்களில் இப்படி ஒரு விஷயத்தைப் பதிவு செய்வது தான் இந்த ஐதிகக்கதையின் தொடக்கம். பிறகு, சேக்கிழார், பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற்புராணம்) ஊடாக, மதுரை உத்சவத்தில் திருவிழாவாகக் கொண்டாடும் அளவுக்கு இந்த ஐதிகம் வளர்ச்சியடைந்தது. இதனைக் கோர்வையாக சான்றுகளுடன் நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். நூலில் குறிப்பிடாவிட்டாலும், இந்த வரிசையில் அருணகிரிநாதரும் உண்டு. முருகப்பெருமானே சம்பந்தராக அவதரித்தவர் என்று பல இடங்களில் கூறும் அருணகிரியார், “மாள அன்றமண் நீசர்கள் கழுவேற – வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா” “சமணரைக் கழுவேற்றிய பெருமாளே” முதலான வரிகளின் மூலம் கழுவேற்றத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இதனை அழுத்தமாக ஆவணப்படுத்தும் முகமாக, பாரம்பரிய ஜைனத் துறவியான மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடாதிபதி ஸ்ரீலட்சுமி சேன பட்டாரகர் அவர்களிடமும் நேர்காணல் செய்து, அவரது புகைப்படத்துடன் நூலில் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. கழுகுமலை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜைன மடாலயங்களும், ஜைனக் கோயில்களும் பொ.பி 10ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரையிலான காலங்களிலேயே அதிகமாக செழித்து வளர்ந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் இந்த நூல் பதிவு செய்கிறது. இக்காலகட்டம் சம்பந்தர் மதுரையில் கூன்பாண்டியனை சைவத்திற்குத் திருப்பி நின்றசீர் நெடுமாறனாக ஆக்கியதற்குப் பிற்பட்டது. சமணக் கோயில்கள் பெருமளவில் எங்கும் இடிக்கப் பட்டு சைவ, வைணவ கோயில்களாக மாற்றப்படவில்லை (மிகச்சில இடங்களில் விதிவிலக்காக அப்படி நடந்திருக்கலாம் என்று கருத இடமுள்ளது). குணபரேச்சரத்திலும், பாண்டி நாட்டிலும் அமணர் பள்ளிகளை அழித்ததாக சைவ நூல்களில் உள்ள ஒன்றிரண்டு குறிப்புகள் மிகைக்கூற்றுகள் அன்றி வேறில்லை என்றும் மிகச் சரியாகவே நூலாசிரியர் கருதுகிறார். கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் மதப் போர்களுடனும், கலாசார அழிப்புகளுடனும் இது எந்த வகையிலும் ஒப்பிடத்தக்கல்ல என்றும் ஆசிரியர் வெளிப்படையாக பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த நூலின் முக்கியமான பகுதியாக நான் கருதுவது, “சமணர் கழுவேற்றக் கதை தொடர்பாக 1867 முதல் 2014 வரை நடந்தேறிய விவாதங்களை, ஓரளவு தொடர்ச்சியாகத் தொகுக்க முயற்சித்துள்ளேன்” என்று முன்னுரையில் கூறியபடி, நூலாசிரியர் செய்துள்ள தொகுப்பினைத் தான். பெரியபுராணம் அச்சிலேறும் வரை இந்தக் கதை தமிழ்நாட்டில் அவ்வளவு பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை. புத்தகமாக வெளிவந்தவுடன் இந்த விவகாரம் 19-20ம் நூற்றாண்டு சைவ மறுமலர்ச்சி பிரசாரகர்கள், தமிழறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், பகுத்தறிவாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த ஐதிகக் கதையை உண்மை என்று ஏற்றும் மறுத்தும் வாதிட்ட தரப்புகள் யார்யார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது.
சைவசமயக் குரவர்களைப் போற்றி வழிபட்டாலும், ஜீவகாருண்ய மானுட நேசரான வள்ளலாரை இச்சம்பவம் உறுத்தியிருக்கிறது. ‘இறகெடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈதென்ன ஞாயம்’ என்று சிவபெருமானிடமே நீதிகேட்டிருக்கிறார். திரு.வி.க “அகச்சான்றுகள் கிடைக்கும் வரை சமணரைக் கழுவேற்றிய வரலாற்றை யான் கொள்ளேன், கொள்ளேன்” என்று மறுத்திருக்கிறார். வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களுமான வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, ரா ராகவையங்கார், கா.சு.பிள்ளை, கலாநிதி கைலாசபதி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியவர்களும், தமிழ்ச் சமண அறிஞர்களான டி.எஸ்.ஸ்ரீபால் முதலானவர்களும், “இது வரலாற்றுச் சம்பவம் அல்ல” என்றும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே” என்றும் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகளான அ.ஈசுவரமூர்த்திப் பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், க.வெள்ளைவாரணர் போன்றோர், கழுவேற்றம் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். “வேதத்திற்கு நிகரான திருமுறைகளில்” நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் கூறியுள்ள விஷயம் சத்தியமே அன்றி எவ்வாறு பொய்யாகும் என்று அவர்கள் சாதிக்கின்றனர். பாண்டிய மன்னன் சமண முனிவர்களைக் கழுவேற்றியது முற்றிலும் நீதிக்கும் நியாயத்திற்கும் உட்பட்ட செயல்தான் என்றும் கருதுகின்றனர். மதப்பாரம்பரியத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த மிகக் கடுமையான இறுக்கமான பற்றே இத்தகைய அடிப்படைவாத மனநிலைக்குக் காரணம். அதேசமயம் சைவநெறியாளரான திரு.வி.க, அறிவாரந்த சமநிலையுடன் இவ்விஷயத்தை அணுகியதையும் கவனிக்க வேண்டும். 2009ம் ஆண்டு சென்னையில் ஒரு சைவசமயக் கருத்தரங்கில் கழுவேற்றம் முற்றிலும் கற்பிதமானதே என்ற கருத்தை முன்வைத்து நான் உரையாற்றினேன். திருநெல்வேலி செங்கோல் ஆதீனம் மற்றும் பல சைவ அறிஞர்கள் அவ்வரங்கில் இருந்தனர். எனது உரைக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. மாறாக, இத்தகைய ஆய்வுபூர்வமான கருத்துக்கள் பரவலாக பேசப்படவேண்டும் என்றே வந்திருந்தவர்கள் கூறினர்.
கழுவேற்றம் உண்மையே என்று வாதிட்ட மற்றொரு தரப்பினர் திராவிட, மார்க்சிய, பகுத்தறிவாளர்கள் மற்றும் மயிலை. சீனி.வெங்கடசாமி போன்ற விதிவிலக்கான வரலாற்றாசிரியர்கள். பெரியபுராணத்தின் மற்ற சம்பவங்களையும் நரிகள் பரிகளான கதை போன்ற திருவிளையாடல்களையும் கட்டுக்கதைகள் என்று நிராகரித்து விட்டு, அதே வீச்சில் கழுவேற்றம் மட்டும் உண்மையான சம்பவம் என்று இவர்கள் கருதுவதற்குக் காரணம், அந்த சம்பவம் இந்துமதத்தை எதிர்மறையாகவும் வன்முறை நிரம்பியதாகவும் சித்தரிக்க அவர்களுக்கு உதவுகிறது என்பது மட்டும் தான். இதன் பின்னுள்ள நேர்மையின்மையையும் இரட்டைவேடத்தையும் நூலாசிரியர் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளார்.
மற்றபடி, இந்த நூலின் மீதான எனது இரண்டு விமர்சனங்கள்:
1) நல்ல சமநிலையுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டாக அமைந்துள்ளது ‘தமிழகத்தில் சமயங்கள் – ஒரு பார்வை’ என்ற முதல் அத்தியாயம். இந்த அத்தியாயத்தை அப்படியே எடுத்துவிட்டால் கூட நூலின் முழுமை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு பீடிகை போல எழுதப்பட்டுள்ள இந்த அத்தியாயத்தில் ஆரிய திராவிட இனவாதம், சம்ஸ்கிருத வெறுப்பு, பிராமண வெறுப்பு ஆகியவற்றில் தோய்ந்த ஆதாரமற்ற கருத்துக்களையும், தமிழ்நாட்டில் வழக்கமாகச் சொல்லப்படும் சிலபல பொய்களையும் அங்கங்கே அள்ளித் தெளித்துச் சென்றிருக்கிறார்
2) வைதீக, சமண, பௌத்த சமயங்களுக்கிடையே நிகழ்ந்த மோதல்களை அவற்றின் சமூக, அரசியல், தத்துவ பின்னணியில் இன்னும் சிறிது விரிவாக ஆசிரியர் விளக்கியிருக்கலாம். ஆசிரியர் ஆய்வின் பகுதியாக வாசித்த நூல்களிலும் அது போதுமான அளவில் விளக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். புத்தகத்தில் கடைசியிலுள்ள “துணைநின்ற நூல்கள்” பட்டியலில் தமிழ் நூல்கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டின் வரலாறு, சமயம், தத்துவம் குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் பல விரிவான நூல்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. எனவே, ஆராய்ச்சியின் விரிவுக்கும் வீச்சுக்கும் ஆங்கில நூல்களை நேரடியாகவோ அல்லது துணையுடனோ வாசித்து அவற்றின் கருத்துக்களையும் அறிவது முக்கியமானதாகிறது. உதாரணமாக, The Kalabhras in the Pandiya Country (M Arunachalam. University of Madras, 1979) என்ற நூல் இப்புத்தகத்தின் பேசுபொருளுக்கான பல முக்கிய தரவுகளை அளித்திருக்கக் கூடும்.
இந்த விஷயம் குறித்து ஜெயமோகன், பி.ஏ.கிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் இணையப் பதிவுகளை அவர் சுட்டிகளுடன் குறிப்பிடுகிறார். இவற்றுடன் “சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்” (2009) என்ற எனது நீள்கட்டுரையையும் அவர் குறிப்பிட்டிருக்கலாம் (இவ்விஷயம் குறித்த கூகிள் தேடல்களில் அதுவும் பிரதானமாக வருகிறது தான்).
“இந்நூலில் புதிய தகவல் எதையும் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டவைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறேன், அவ்வளவுதான். ஆனாலும் நூலின் தலைப்பு பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்குக் காரணம், சமணர் கழுவேற்றம் சொல்லப்பட்டது போல் இதனை மறுக்கக் கூடிய கருத்துக்கள் ஆழமாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதே” என்று முன்னுரையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள நூலாசிரியர், இந்த கச்சிதமான நூலின் மூலம் தானே அத்திறக்கில் ஒரு சிறப்பான பதிவை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல்
கோ.செங்குட்டுவன்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்: 168
விலை: ரூ 150ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/
9789386737243.html
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
சமணப் பள்ளிகள், புத்த மடாலயங்கள் போன்றவை பண்டைய தமிழகத்தில் பரவலாக இருந்தன.பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் பலவற்றை இயற்றியவர்கள் சமண,புத்த மதப் புலவர்கள் ஆவர்.
சமணமும் பவுத்தமும் தமிழகத்தில் நெடுங்காலமாக ஓங்கி இருந்தன என்பது உண்மை. இவை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் உய்ர்ந்தே இருந்தன எனபது அங்கு கிடைக்கும் சான்றுகளால் தெரியவரும்.
ஆனால் தமிழகத்தில் மட்டும் இவ்விருமதங்களும் சைவர்களாலும் வைணவர்களாலும் எதிர்க்கப்பட்டன. சமணர்களின் தலைகளைக் கொய்ய எனக்கு வரம் தா என்பது தொண்டரிப்பொடியாழ்வாரில் வேண்டுகோள். (திருமாலை). சம்பந்தர் சமணர்கள் மேல் வைத்த குண்டர்கள் என்றச் சொல்லாடல் போல பலவற்றிலிருந்து தெரியலாம். குண்டர்கள் நாம் நினைக்கும் பொருளன்று. வேறு பொருள் என்று தெ பொ மீ வாதிட்டாலும் சம்பந்தர் சமணர்களை விமர்சித்தார் என்பது மறுக்க முடியாதபடி அவர் எழுதியவை இருக்கின்றன என்பது உண்மை.
இத்தனைக்கும் சமணர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு சைவர்களினதைப்போல ஈடானது. சைவர்களும் வைணவர்களும் (ஆழ்வார்கள்; நாயன்மார்கள்) வெறும் கடவுள் வணக்கத்தோடு நின்று விட, சமணர்கள் நீதிநூற்கொடையை தமிழுக்கு வழங்கினார்கள். பொதுமக்களிடையே சமணர்களுக்கு எதிர்ப்பு இருந்ததாகவும். அவர்கள் வீதிகளிலோ, பள்ளிகளிலோ தாக்கப்பட்டார்கள் என்பதையும் எங்கும் நாம் படிக்கவில்லை. தமிழ்மக்கள் இவ்விரு துறவிகளையும் மதித்தே வந்திருக்கிறார்கள். இல்லையென்றால் கழுகுமலையிலும் யானைமலையிலும் பள்ளிகள் நடாத்திக்கொண்டிருந்த சமணத்துறவிகளை அடித்தே கொன்றிருப்பார்கள். எவரும் செய்யவில்லை.
ஆக, சைவ வைணவ மதத்தலைவர்களும் அவர்க்ள் தொண்டர்கள் மட்டுமே தமிழகத்திலிருந்து சமணர்களை விரட்ட வேண்டுமென்று செயல்பட்டனர். அரசர்கள் துணைநின்றனர். பின்னர் அது நடந்தது. சமணமும் பவுத்தமும் விரட்டப்பட்டன. இன்று அவர்கள் நல்கிய தமிழ்க்கொடை மட்டுமே நிற்கிறது. அது என்றும் நின்று நிலவும். புத்தவிஹாரங்கள்; சமணப்பள்ளிகள் இன்று கிடையா. பவுத்தத்துக்கு உலகப்புகழ்பெற்ற காஞ்சி இன்று வெறும் சைவ வைணவக் கோயில்களைக்கொண்ட இடம் மட்டுமே. தர்ம சேனர், போதிதர்மன் போன்றோர் காஞ்சிக்காரகளே. நாலந்தா பலகலைக்கழக பெரும்ப்பேராசிரியர் தர்ம சேனர். சீனர்களிடையே பெரும்புகழை வாங்கியவர் போதி தர்மர். சமணத்தையும் பவுத்தத்தையும் விரட்டியதால் தமிழகம் என்ன பலனைப்பெற்றது? ஒன்றுமில்லை.
ஆக, இவர்களை வீழ்த்திவிட்டோம் அதைக்கொண்டாடுவோம் என்ற உணர்வு நீட்சியே சமணர்கள் நம்மிடம் வாதத்தில் தோற்க நாம் அவர்களை – அன்று ஏற்கப்ப்ட்ட சட்டப்பூர்வமான மரணதண்டனையான கழுவிலேற்றி கொன்றோம் என்று எழுதி வைக்க வேண்டுமென்ற அவா சேக்கிழார்; பரஞ்சோதி முனிவர் போன்றோருக்கு என முடிக்கலாம்.
ஒருவேளை உண்மையென்றால், பிற்காலத்தில் வரலாற்றாய்வாளர்கள் கண்டுபிடிக்கலாம். இல்லையென்றால் செங்குட்டுவன் நூலே இறுதிச் சொல். ஆனால் இறுதிச்சொல் இறைவனது. மனிதர்கள் வரலாற்றுக்கு இறுதிச்சொல் இறுக்க முடியாது. இப்போதைக்கு இவை என்று மட்டுமே செங்குட்டுவன் நூலாகும். நாளை என்னவோ?
ஏன் ஜடாயு தன் கருத்துக்களை ஒரு நூலாக எழுதக்கூடாது? ஏன் திராவிடச்சாயவாளர்களிடமிருந்து ஆதரவை எதிர்நோக்கவேண்டும்? இந்தப்பொருளில் ஆழந்த ஆர்வமும் நிறைந்த கல்வியுமுடைய ஜடாயு போன்றோரும் களத்தில் இறங்க வேண்டும். நூல்கள் வெளியிட வேண்டும்.
திரு ஜடாயு அவர்களுக்கு ,
திரு ஜெயமோகன் போன்ற நீங்களும் எழுதி உள்ளீர்கள்.
சேக்கிழர் பெருமான் ஒரு வரலாற்று ஆசிரியர், அது பல இடங்களில் அவர் நிரூபித்து உள்ளார். பல அறிஞர்களும் அவர் ஒரு வரலாற்று ஆசிரியர் என கூறுகின்றனர்.
நீங்கள் இன்றைய சமண சமயத்தை , சமணத்துறவைகளையும் வைத்து கொண்டு எழுதி உள்ளீர்கள். இன்றைய காலத்தில் அவர்கள் மிகவும் நல்லவர்கள்.
ஆனால் கிபி ஏழாம் நூற்றாண்டில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்ன அறியவேண்டும். சமணர் கழுவேற்றம் பற்றி ஏன் (பாரம்பரிய ஜைனத் துறவியான மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடாதிபதி ஸ்ரீலட்சுமி சேன பட்டாரகர் அவர்களிடமும் நேர்காணல் செய்து) நேர்காணல் செய்யவேண்டும்?
அக்பர் பற்றி ஒரு இஸ்லாமிய மத தலைவரிடம் கேட்டால் அவர் என்ன கூறுவார்? அது போலத்தான் இந்த நேர்காணலும்.
நாம் நினைப்பது போல் சமணர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல. கிபி ஏழாம் நூற்றாண்டில் அவர்களில் சிலர் எப்படி இருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்யவும்.
நீங்களும் திரு ஜெயமோகனும் கூறுவது சரியானால், நமது சைவ நால்வர் பெருமக்களும், ஆழ்வார்களும் பாடியது முற்றிலும் தவறு என்றாகிவிடும்.
நான் அறிந்தவரை சைவ அடியார்கள் இந்த சமணர் கழுவேற்றம் பற்றி மிகவும் பெருமையாக பெரிதும் பேசுவதில்லை. குறிப்பாக எந்த சைவ சித்தாந்த மன்றங்களிலும் சமணர் கழுவேற்றம் பற்றி பேசுவதில்லை. பெரியபுராணத்தில் ஆளுடைய பிள்ளை வரலாற்றி கூறும் பொது இதை பற்றி கூறுவார்கள்.
இந்த ஆராய்ச்சி எல்லாம் காலம் கடந்தவை மற்றும் இந்த காலத்திற்கு தேவை அற்றவை.
திரு ஜெயமோகனை போல நீங்களும் உள்ளிருந்து கொண்டே சைவத்தை தாக்குகிறீர்கள்.
சோமசுந்தரம்
அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். ஆா்டா் செய்து விட்டேன்.
ABOUT JAM TEMPLE AT AYODYA
நிலா, on 07/10/2010 at 3:23 பிப said:
ஆங்கிலத்திலேயே முடிந்தால் படித்துகொள்ளுங்கள்.
ரேடியன்ஸ் வீக்லியிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.. இந்த இணையப்பக்கம் மட்டும் புரியவில்லையா?
—
Let us now see what the Muslim writers have said:
1) Abul Fazl (late sixteeth century)
Abul Fazl, the author of Akbar Nama and Ain-i-Akbari is an eminent writer of the Moghul age who describes Ayodhya as the residential place (banga) of Sri Ram Chandra who during the Treta age was the embodiment of both the spiritual sovereign supremacy as well as the mundane kingly office. Abul Fazl also testifies that Awadh (Ayodhya) was esteemed as one of the holiest places of antiquity. He reports that Ram-Navami festival, marking the birthday of Rama continues to be celebrated in a big way.
2) Safiha-i Chahal Nasaih Bahadur Shahi, written by the daughter of Bahadur Shah Alamgir during the early 18th century.
Out of the above Chahal Nasaih (“Forty Advices”), twenty-five instructions were copied and incorporated in the manuscript entitled Nasihat-i Bist-o-Panjam Az Chahal Nisaih Bahadur Shahi in 1816 AD, which is the oldest known account of the destruction of Ram Janmabhoomi for construction of the Babri Mosque, and its author is none other than Aurangzeb’s grand daughter.
Mirza Jan, the author of Hadiqa-i-Shahda, 1856, Lucknow, has reproduced the above text in Persian on pp.4-7 of his book. The text runs as follows:
“… the mosques built on the basis of the king’s orders (ba farman-i Badshahi) have not been exempted from the offering of the namaz and the reading of the Khutba [therein]. The places of worship of the Hindus situated at Mathura, Banaras and Awadh, etc., in which the Hindus (kufar) have great faith – the place of the birthplace of Kanhaiya, the place of Rasoi Sita, the place of Hanuman, who, according to the Hindus, was seated by Ram Chandra over there after the conquest of Lanka – were all demolished for the strength of Islam, and at all these places mosques have been constructed. These mosques have not been exempted from juma and jamiat (Friday prayers). Rather it is obligatory that no idol worship should be performed over there and the sound of the conch shell should not reach the ear of the Muslims …”
3) Hadiqa-i-Shahada by Mirza Jan (1856), pages 4-7.
The author was an eye-witness and an active participant in the jihad led by Amir Ali Amethawi during Wazid Ali Shah’s rule in 1855 for recapture of Hanumangarhi from the Hindus. His book was ready just after the failure of the jihad due to stout Hindu resistance, and was published the following year (1856) in Lucknow. In Chapter IX of his book, entitled Wazid Ali Shah Aur Unka Ahd (“Wazid Ali Ahah and His Regime”), we find his account of construction of the Babri mosque.
Mirza Jan who claims to have gone through various old sources says in his own account as follows:
“The past Sultans encouraged the propagation and glorification of Islam and crushed the forces of the unbelievers (kufar), the Hindus. Similarly, Faizabad and Awadh(Ayodhya) were also purged of this mean practice [of kufr]. This [Awadh] was a great worshipping centre and the capital of [the kingdom of] Rama’s father. Where there was a large temple, a big mosque was constructed and where there was a small mandaf, there a small kanati masjid was constructed. The temple of Janmasthan was the original birthplace (masqat) of Ram, adjacent to which is Sita Ki Rasoi, Sita being the name of his wife. Hence at that site, a lofty (sarbaland) mosque has been built by Babar Badshah under the guidance of Musa Ashikan… That mosque is till date popularly known as Sita Ki Rasoi…”
(see Annexure 3)
4) Fasana-i Ibrat by the Urdu novelist Mirza Rajab Ali Beg Surur.
Dr. Zaki Kakorawi has appended an excerpt from this book by Surur (1787-1867) in his work. The excerpt reads as follows :
“During the reign of Babar Badshah, a magnificent mosque was constructed in Awadh at a place which is associated with Sita ki Rasoi. This was the Babari mosque. As during this period the Hindus could not dare to offer any resistance, the mosque was constructed under the benign guidance of Saiyed Mir Ashikan. Its date of construction could be reckoned from [the words] Khair-Baqi. And in the Ram Darbar, a mosque was constructed by Fidai Khan, the subedar.”
5) Zia-i Akhtar by Haji Muhammed Hasan (Lucknow 1878), p.38-39.
The author states :
“The mosque which had been built by Saiyid Musa Ashikan in 923 AH in compliance with the order of Zahiruddin Badshah, Delhi, after demolishing the private apartments (mahal sarai) of Raja Ram Chander and the kitchen of Sita, as well as the second mosque built by Muiuddin Aurangzeb, Alamgir Badshah, [in fact] both these mosques have developed cracks at various places because of the ageing character. Both these mosques have been gradually mitigated by the Bairagis and this very fact accounts for the riot. The Hindus have great hatred for the Muslims…”
6) Gumgashte Halat-i Ajudhya Awadh (“Forgotten Events of Ayodhya”), i.e. Tarikh-i Parnia Madina Alwaliya (in Persian) (Lucknow 1885), by Maulvi Abdul Karim.
The author, who was then the imam of the Babri Masjid, while giving a description of the dargah of Hazrat Shah Jamal Gojjri states :
“To the east of this dargah is mahalla Akbarpur, whose second name is also Kot Raja Ram Chander Ji. In this Kot, there were few burjs [towery big halls]. Towards the side of the western burj, there was the house of birthplace (makan-i paidaish) and the kitchen (bawarchi khana) of the above-mentioned Raja. And now, this premises is known as Janmasthan and Rasoi Sita Ji. After the demolition and mitigation of these houses [viz. Janmasthan and Rasoi Sita Ji], Babar Badshah got a magnificent mosque constructed thereon.”
7) Tarikh-i Awadh(“History of Ayodhya”) by Alama Muhammad Najamulghani Khan Rampuri (1909).
Dr. Zaki Kakorawi has brought out an abridged edition of this book. An excerpt from vol.II (pp.570-575) of this edition runs as follows :
“Babar built a magnificent mosque at the spot where the temple of Janmasthan of Ramchandra was situated in Ayodhya, under the patronage of Saiyid Ashikan, and Sita ki Rasoi is situated adjacent to it. The date of construction of the mosque is Khair Baqi (923 AH). Till date, it is known as Sita ki Rasoi. By its side stands that temple. It is said that at the time of the conquest of Islam there were still three temples, viz. Janmasthan, which was the birthplace of Ram Chanderji, Swargadwar alias Ram Darbar, and the Treta ka Thakur. Babar built the mosque after having demolished Janmasthan.”
8) Hindustan Islami Ahad Mein (“India is under Islamic rule”) by Maulana Hakim Sayid Abdul Hai.
The book contained a chapter on “The Mosques of Hindusthan” (Hindustan ki Masjidein), giving at least six instances of the construction of the mosques on the very sites of the Hindu temples demolished by the Indian Muslim rulers during the 12th-17th centuries. As regards Babri Masjid, he writes :
“This mosque was constructed by Babar at Ajodhya which the Hindus call the birthplace of Ram Chanderji. There is a famous story about his wife Sita. It is said that Sita had a temple here in which she lived and cooked for her husband. On that very site Babar constructed this mosque…”
It is this Babri mosque, built as a symbol of the subjugation and humiliation of Hindus at a spot they venerated so highly, that was damaged by a crowd of Hindus in 1992 at the height of the nationalist movement to rebuild a temple for Shri Ram at the site which had been venerated as his birthplace by Hindus for millenia.
Islam deliberately destroyed and desecrated what was most sacred to Hindus, and replaced it with a symbol of Islamic victory. The same reason Sultan Mehmet converted the Hagia Sophia into a mosque. The Hindus and the West have been fighting the same foe for centuries.
I end with the lament of Will Durant, from his Story of Civilization
“We can never know from looking at India to-day, what grandeur and beauty she once possessed.”
All of that grandeur and beauty – laid waste by Islam.
SANKAR, on 07/10/2010 at 8:06 பிப said:
) Abul Fazl (late sixteeth century)
Abul Fazl, the author of Akbar Nama and Ain-i-Akbari is an eminent writer of the Moghul age who describes Ayodhya as the residential place (banga) of Sri Ram Chandra who during the Treta age was the embodiment of both the spiritual sovereign supremacy as well as the mundane kingly office. Abul Fazl also testifies that Awadh (Ayodhya) was esteemed as one of the holiest places of antiquity. He reports that Ram-Navami festival, marking the birthday of Rama continues to be celebrated in a big way.
/
————————————————————————–
அபுல் ஃபைசல் கூறியுள்ள விவரங்களாவன
இராமர் திரேதா யுகத்தில்(எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ) பிறந்ததாகவும்
அவர் வாழ்ந்த காலத்தில் (16 ஆம் நூற்றாண்டு) அயோத்தி ஒரு புனித தலமாக விளங்கியதாவும் கூறுகிறார்.
————————————————————————–
1.அபுல் ஃபைசல் எந்த புத்தகத்தில் இந்த தகவலை கூறியுள்ளார்?.(Reference please)
2.நீங்கள் காட்டியுள்ள விஷயங்களில் இது மட்டுமே 16ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இவ்வளவு சொன்ன அபுல் ஃபைசல் அயோத்தி கோயில் பற்றி எதுவுமே சொல்ல வில்லையே?
நிலா, on 07/10/2010 at 8:20 பிப said:
மேலே குறிப்பிட்டவர்கள் எல்லோரும் முஸ்லீம்கள்தான். அவர்கள் கூறினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இந்துக்கள் கூறினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பது என்ன நிலைப்பாடு?
ராம்சரித மானஸ் எழுதிய துளசிதாஸ் ராமர் கோவிலை இடித்து பாபர் கட்டினார் என்று எழுதினால் நீங்கள் ஒப்புக்கொள்ளப்போகிறீர்களா? சொல்லியிர்ந்தால் அவரையும் இந்து வெறியர் என்றுதானே உமிழப்போகிறீர்கள்?
அன்பின் ஸ்ரீ சோமசுந்தரம்.
வைதிக சைவ வைஷ்ணவ சமயங்கள் எவற்றிற்கும் சமண மற்றும் பௌத்த சமயக் கொள்கைகள் ஏற்றுக்கொள்ள இயலாதவை.
சமய ரீதியாக அவரவர் சமய சித்தாந்தம் சார்ந்து சமணமோ பௌத்தமோ நிச்சயம் நிராகரிக்கப்படும். இதில் எந்த சம்சயமும் வேண்டாம்.
ஹிந்துஸ்தானத்தின் சட்ட ரீதியாக சமண மற்றும் பௌத்த சமயத்தவர் ஹிந்து மதத்தவராகவே அங்கீகரிக்கப்படுகின்றனர். விவாஹம் சொத்துப் பங்கீடு வருமான வரி தாக்கீது செய்தல் இத்யாதி அனைத்து விஷயங்களுக்கும் சமண பௌத்த சீக்கியர்கள் ஹிந்துவாகவே அங்கீகரிக்கப்படுகின்றனர். சமண பௌத்த சமயக் கொள்கைகள் நிராகரிக்கப்படும் போதும் இவற்றிற்கும் ஏனைய சமயங்களுக்கும் இடையில் சாம்யதைகளும் பரவலாக உண்டு. இவையெல்லாம் தனித் தனித் தீவுகள் நிச்சயம் கிடையாது.
புராணங்களின் மீது நம்பிக்கை வைத்தல் அவற்றின் அடிப்படையில் சமயப்படி ஒழுகுதல் இவை உயர்வானவை. இதில் சம்சயம் வேண்டாம். ஒவ்வொரு சமயத்தினரும் புராணங்களை ஆழ்ந்து கற்று அதன் பாற்பட்டு தமது சமயப்புரிதல்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால் நம்பிக்கை என்பது வேறு. சமய ஒழுக்கமுறை என்பது வேறு. சரித்ரம் என்பது வேறு.
புராணங்களில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் எழுத்தும் வரிக்கு வரி சரித்ரம் ஆகி விடுமா என்பதற்கு நம்பிக்கை மற்றும் சமய ஒழுக்கமுறை இவற்றினின்று வெளிப்போந்தே சரித்ரத்தை ………….. அதற்கான அலகீடுகள் வாயிலாகவே அணுக வேண்டும்.
உதாரணத்திற்கு வால்மீகி ராமாயணம் என்ற நூல் சார்ந்து எனக்கு பற்பல நம்பிக்கைகள் உண்டு. ஆனால் அதன் படைப்பாய்வு என வரும்போது எனது நம்பிக்கைகளிலிருந்து வெளிப்போந்து தான் படைப்பாய்வினை நான் அணுக விழைகிறேன். ஒரு சில புள்ளிகளில் நம்பிக்கைகளும் படைப்பாய்வுக்கூறுகளும் ஒன்று படலாம். ஆனால் எல்லாப்புள்ளிகளிலும் இவை ஒன்று பட்டாக முடியாது.
புராணங்களில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் சரித்ரத்திலும் நிகழ்ந்தவையாக இருக்கலாம். ஆனால் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை அப்படித்தான் இருக்க வேண்டும் என்றபடிக்கு நாம் நினைப்பதற்கு அவச்யம் இல்லை.
சமண பௌத்த சமயத்தவர்கள் சரித்ரத்தில் நிகழ்த்திய அட்டூழியங்கள் சரித்ரத்தில் நிச்சயம் உண்டு. அவற்றை முற்று முழுதாக சரித்ர ஆதாரங்கள் சார்ந்து விசாரிக்கப்படுவதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.
வலது சாரி (ஸ்ரீ ஜடாயு) இடதுசாரி (ஸ்ரீ பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன்) இவர்களைத்தவிர தீராவிட மற்றும் இடதுசாரிப் பின்னணி கொண்ட அன்பர் ஸ்ரீ செங்குட்டுவன் அவர்களும் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை எட்டுகிறார்கள். இந்த நிகழ்வு சரித்ரத்தில் நடந்துள்ளதா என்பதனை சரித்ரத்தை அறிவதற்கான அலகீடுகளை வைத்து மட்டிலும் விசாரிக்கத் தெளிவு கிட்டும்.
Hindu society absorbed the best and practicable items of Buddhism and Jainism and hence the need for a separate institution became gradually cease to be.So Buddhism and Jainism is not destroyed.It is digested by Hindu society.It is social evolution. parading naked by Jains is highly despicable and the Hindu society could not support.
Buddhistic and Jainistic institutions had failed because of their innate weakness, the rest of HIndu society is no way responsible for that.
அன்பர் அன்புராஜ் அவர்கள் கும்பமேளா சாமியார்கள் மற்றும் அகோரிகள் பற்றியும் தன் கருத்தைக் கூறலாம் அல்லவா?
பேரன்பிற்குரிய அன்பர் பீ எசு அவர்கள் சமூஹத்திற்கு
ஒரே திகிலடைய வைக்கிறீர்கள் 🙂
தேவரீரின் ஐந்தாயிரம் வருஷகால சாஸ்த்ர டுமீலிலிருந்தே இன்னமும் நாங்கள் வெளி வரவில்லை. டுமீல் மேலே டுமீலாக அடித்தால் எப்படிங்காணும் 🙂 🙂 🙂
\\\ சைவர்களும் வைணவர்களும் (ஆழ்வார்கள்; நாயன்மார்கள்) வெறும் கடவுள் வணக்கத்தோடு நின்று விட, சமணர்கள் நீதிநூற்கொடையை தமிழுக்கு வழங்கினார்கள். \\\
சைவர்களும் வைஷ்ணவர்களும் இப்படியெல்லாம் சொல்ல மாட்டார்கள்.
அப்போ எந்த பெந்தகோஸ்த்தே சபையில் இப்படியெல்லாம் சொல்லுகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.
சாது செல்லப்பா ஏஞ்சல் டிவில இப்படியெல்லாம் சுவிசேஷம் சொல்லியிருக்காரா? அல்லது மோஹன் லாசரஸ் வைக்கோவுக்கு ஏஸ்ஸப்பர எப்படி ப்ரார்த்தனை செய்யறதுன்னு சொல்லிக்கொடுத்தமாறிக்கு இப்படியெல்லாம் ஏதாச்சும் சொல்லியிருக்காரா? அல்லது தேவரீருடைய மித்ரவர்யர் ரெவரெண்டு சில்சாம் இப்படி ஏதாச்சும் சொல்லியிருக்காரா? நவில்வீர் ஐயே!!!!
வெஷமமெல்லாம் சைவர்களையும் வைஷ்ணவர்களையும் நீதி சாஸ்த்ரமறியாதவர்களாக காண்பிக்கும் ஆப்ரஹாமியப்பார்வையிலேயே புதைந்துள்ளது 🙂
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்,மூதுரை, நல்வழி இவற்றையருளிய ஔவையார் சைவரில்லையா அல்லது அவர் அருளிய நூற்கள் நீதி சாஸ்த்ரமில்லையா? அதுவும் ஔவைப்பாட்டியின் ஒவ்வொரு நீதிநூலும் கடவுள் வணக்கத்தோடு நிற்காது நீதி சாஸ்த்ரத்தை அள்ளி அள்ளித் தரும்போதே இப்படி எடக்கு மடக்கு!!!!!!!!!! உலகநீதி அருளிய உலகநாதனாரும் கடவுள் வணக்கத்தோடு நின்று விடாமல் நீதி சாஸ்த்ரத்தையும் சேத்தி தானே கொடுக்கறார். அதுவும் ஒவ்வொரு கண்ணியின் ஈற்றிலும் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே என்று வேறு முடிக்கிறார். அதிவீரராமபாண்டியனாரின் வெற்றிவேற்கையெனும் நறுந்தொகை இதுவும் கடவுள் வாழ்த்தையடுத்துச் செல்லும் நீதி சாஸ்த்ரமாயிற்றே. நன்னெறியருளிய சிவப்ரகாச முனிவர் சைவரில்லையா அல்லது நன்னெறி நீதி சாஸ்த்ரமில்லையா?
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
தமிழர்களுக்காகத் தான் ஔவையார் இதை நல்வழியில் நவின்றிருக்கிறார். பெந்தெகொஸ்த்தே சுவிசேஷத்தைக் கேட்டு அட்ச்சுவுடும் டம்ப்ளர்கள் கருத்து வேறாக இருக்கலாம் தான்.
\\\ ஆக, சைவ வைணவ மதத்தலைவர்களும் அவர்க்ள் தொண்டர்கள் மட்டுமே தமிழகத்திலிருந்து சமணர்களை விரட்ட வேண்டுமென்று செயல்பட்டனர். அரசர்கள் துணைநின்றனர். பின்னர் அது நடந்தது. சமணமும் பவுத்தமும் விரட்டப்பட்டன. \\\ \\ புத்தவிஹாரங்கள்; சமணப்பள்ளிகள் இன்று கிடையா. \\
இதுக்கு ஆதாரம் எது ஸ்வாமின்!!!!! ஏழாம் அறிவு சினிமா!!!!! மீரு த்ராவிட வாள்ளு எழுதின பொஸ்தகானி? செப்பண்டி!!!! உங்களை மாதிரியே த்ராவிட வாள்ளு அந்தரு கூசாம பொய் சொல்லுபவர்கள்!!!!!!
சைவ வைஷ்ணவ வைதிக சமயத்தவருக்கும் ஜைன பௌத்த சமயத்தவருக்கும் இடையே சித்தாந்த ரீதியாக கடும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது என்பதும் கடும்பகை இருந்துள்ளது என்பதும் சரி ஆனால் சமணமும் பௌத்தமும் மற்றைய சமயத்தவர்களால் விரட்டப்பட்டன என்பது டுமீல். சமணக்கழுவேற்றம் என்பது போன்ற டுமீல். தேவரீரின் ஐந்தாயிர வருஷ சாஸ்த்ரம் போல ராமசாமிநாயக்க அல்லது பெந்தகோஸ்த்தே டுமீல். பின்பற்றுவோர் இல்லாது அறுகிப்போய்விட்டது என்ற படிக்கு தமிழக பௌத்தசமயத்தைப் பொறுத்தவரைக்கும் மட்டிலும் சொல்லலாம்.
தமிழகத்திலிருந்து சமணர்கள் விரட்டப்பட்டார் ஜினாலயங்கள் இல்லாமற் போய்விட்டது என்பதை உங்களது மித்ரவர்யரான ரெவரெண்டு சில் சாம் கூட ஒத்துக்கொள்ள மாட்டார் ஸ்வாமின் 🙂 🙂 🙂 அட்ச்சுவுடுவது தேவரீரின் உரிமை தான். இல்லைன்னு சொல்லல. ஆனாக்க கொஞ்சம் அளவு வேணாமா ஸ்வாமின் 🙂
சமணப்பள்ளிகள் இன்று கிடையாவா? இது அந்த ஏஸ்ஸப்பருக்கே அடுக்காதுங்காணும் ஸ்வாமின். தமிழகத்தில் உள்ள ஜினாலயப்பட்டியல் விக்கிபீடை கூட கொடுக்கும். ஆனால் ஜினாலயம்னு தடுக்கில் பாய்ந்தால் தேவரீர் சமணப்பள்ளின்னு கோலத்தில் பாய்ந்து விடுவீர் தில்லாலங்கடி கிரிகிரின்னு 🙂 🙂 🙂
தேவ் அவர்களின் ஃபேஸ்புக் பதிவு :-
தமிழ்ப் பவுத்தம் தொலைந்துபோன வரலாறு
நாகப்பட்டினத்தில் பௌத்தமும் அதன்உட்பிரிவான சௌத்ராந்திகமும் 14 ஆம் நூற்றாண்டுவரை சிறப்புடன் நிலவின. (சௌத்ராந்திக பௌத்தத்தில் மீனவர்,வேடர் போன்றோர் அனுமதிக்கப் பட்டிருந்தனர்) இலங்கை அரசகுடும்பத்திற்கு நாகப்பட்டினத்திலிருந்து புத்தபிக்குகள் குலகுருவாகச் சென்றுள்ளனர். 15ம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குள் இஸ்லாமியர் புத்தபிக்குகளைக் கொன்று பௌத்தப்பள்ளிகளை ஆக்கிரமித்தனர்.
சான்று : காளமேகப் புலவரின் பாடல்
உள்ளிநாறு வாயரும், உவட்டெடுத்த தலையரும்,
ஒருவரோடு ஒருவர்சற்றும் உறவிலாத நெஞ்சரும்,
கொள்ளிபோல் முகத்தரும், கொடுக்குவிட்ட உடையரும்,
கோளுநாளு மேபடைத்த குணமிலாத மடையரும்
பள்ளிவாசல் தோறுநம்பவுத்தைரைச் சவுத்தரைப்
பதைத்திடப் புதைத்துவைத்து அகப்படப் படுத்தும்ஊர்
நள்ளிரா அடங்கலும் நடுக்கமுற்று வாழும்ஊர்
நாலுமூலை யும்கடந்து நாய்குலைக்கும் நாகையே!
Ramachandran
பவுத்தப்பள்ளியின் தொடர்ச்சி ‘பள்ளிவாசல்’
\\ சீனர்களிடையே பெரும்புகழை வாங்கியவர் போதி தர்மர். \\
ஆருங்க சாமி? ஏழாம் அறிவுன்னு தேவரீர் மாதிறி டுமீல் டுமீலா அட்ச்சுவுட்ட படத்தில் நடித்த சிவக்குமாரு பயபுள்ள சூரியாவச்சொல்கிறீரா தேவரீர் 🙂
தேவரீர் தமிழ் மெத்தப் படிச்சவராயிற்றே.
பெறப்படுவது புகழ்………….புகழை வாங்குவது என்றால்……. பொடி வெச்சுப் பேசுகிறீர்களா 🙂 🙂 🙂
தேவரீருடைய ராமசாமிநாயக்க கட்சிதனில் தக்ஷிணாமூர்த்திகாரு ஸ்வர்ண மோதரத்த அண்ணாவிடமிருந்து வாங்கினமாதிரிக்கான புகழ் பெறுவதைச் சொல்லுகிறீர்களா?
\\ ஒருவேளை உண்மையென்றால், \\
ஆஹா!!!!!!!!!!!!!!!!! அப்புடிக்கா கொஞ்சம் இப்படிக்கா கொஞ்சம்!!!!!!!!!!!!! தேவரீர் நட்ட நடு செண்டர்லயே இருக்கீர் ஸ்வாமின் 🙂
\\ இந்தப்பொருளில் ஆழந்த ஆர்வமும் நிறைந்த கல்வியுமுடைய ஜடாயு போன்றோரும் களத்தில் இறங்க வேண்டும். \\
அட சொக்கா!!!!!!! இது என்ன சோதனை!!!!!! ஜடாயு களத்தில் இருப்பதாகத் தானே நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன் 🙂 இப்படி களத்தில் இருக்கும்போதே களத்தில் தள்ளிவிடுவோர்களும் தமிழகத்தில் உண்டோ!!!!!
ம்ஹும்…………தமிழ் ஹிந்து தளத்தில் ஹாஸ்ய ரஸக்குறைவினை தீர்த்த தேவரீருக்கு ஸ்தோத்ரம்.
அன்பர் அன்புராஜ் அவர்கள் கும்பமேளா சாமியார்கள் மற்றும் அகோரிகள் பற்றியும் தன் கருத்தைக் கூறலாம் அல்லவா?
Hello Mr Dhanaseharan Thank you for your nice polimics.I have already denounced Ahoris .It is the symtom of critical degradation of Sanniyasam.It is waste of Human resources.Ahoris are mentally insane and may be treated properly.
Nudism must be banned and Sri Ramakrishna Mission must be made the role model for all Monastic Institutions.Individual sanniyasis shall conform to strict rules which are peculiar to Monastic life.All naked Ahoric must be transfered to an unoccupied Island near Andaman and they should be feed by creating a corpus fund contributed by major Devasthanams such as Thirumala and etc.
crores of rupees worth gold is lying waste at Sri Padmanatha swami temple of Thiruvananthapuram. /all safe rooms must be unlicked and the wealth should be handed over to Sri Ramakrishna Mission.
Mr.S Dhanaseharan are you satisfied ?
I you know more, Please enlist your views.Thanking you.
அன்பிற்குரிய ஸ்ரீ அன்புராஜ் மற்றும் தனசேகரன்
\\\ .So Buddhism and Jainism is not destroyed.It is digested by Hindu society.It is social evolution. \\\
மிகவும் சரியான அவதானிப்பு.
\\\\ parading naked by Jains is highly despicable and the Hindu society could not support. \\\
ஐயா, கேழ்வி கேக்கணும்னா யாரு வேணும்னாலும் இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று சொல்லலாம் தான்.
அமணர்களில் திகம்பரர்கள் அம்மணமாகச் செல்பவர்கள். வைதிக சமயத்தவரிலும் கூட அப்படியானோர் உண்டு தான். தனசேகரன் அவர்கள் சொல்லியமாதிரி அகோரி சாதுக்கள் அனைவரும் திகம்பரர்கள் அன்று. அவர்களில் ஒரு சாரார் திகம்பரர்.
வைதிக சைவ வைஷ்ணவர்கள் தரப்பிலிருந்து இன்றைய ஜைன சமயத்தவர்களின் ஒழுங்குமுறைகளைக் குற்றம் சொல்ல விழைந்தால் அவர்களும் கூட குற்றங்களைத் திருப்பி அடுக்கலாம். ஹிந்து மதத்தில் நாட்டார் வழிபாடுகளை அனுசரிக்கும் படிக்கு ஆலயங்களில் ம்ருகபலி கொடுக்கப்படுகிறது. முற்று முழுதாக கொல்லாமையைக் கடைபிடிக்கும் அவர்களுக்கு அது கொடும் பாபம். ஆனால் நாட்டார் வழிபாடுகளை அனுசரிப்பவர்களுக்கு ம்ருகபலிக்கான ந்யாயத்தை நிச்சயமாக முன்வைக்க இயலும்.
ஒவ்வொரு சமயத்திற்கும் அதற்கெனத் தனியான சடங்குகள் ஒழுக்கங்கள் உண்டு. அதற்கான தர்க்க ந்யாயங்கள் உண்டு.
மாற்று சமயத்தவர்களின் சித்தாந்தங்களை சமயம் சார்ந்து தரவுகள் சார்ந்து முழுமையாக எதிர்த்து நிராகரணம் செய்வது என்பது கால காலமாக நடந்து வருவது தான். அது தொடரவும் செய்யும். ஆனால் ஏதோ ஒரு குறிப்பிட்ட சடங்கு அல்லது சமய ஒழுங்குமுறையை சமயம் சாராது மாற்றாக என்றென்றும் மாறிவரும் நாகரிகம் சார்ந்து விமர்சனம் செய்வது முழுமை ஆகாது.
எந்த ஒரு சமயச் சடங்கும் ஒழுங்கு முறையும் நிகழ்கால நாகரிகம் சார்ந்து அல்லாது சமயச் சான்றோர்களின் வழிகாட்டுதல்களின் படியே அனுசரிக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவது நன்று.
Mr.Kirhsnakumar
As long as Non-Vegetariaism exists animal sacrifice is not a sign of backwardness.I belong to Hindu Nadar community, animal sacrifice is very popular in the temples belong to our community.But animal sacrifice is slowly being given send off and a few temples still adhere to this Monolithic practice. All sections of Hindu society is evolving.Nudism could never be justified.Sri Bairava idols in Hindu temples are naked. Let us put dhothi on it.It is good.Sri Narayana Guru is the best light for all Hindus.
crores of rupees worth gold is lying waste at Sri Padmanatha swami temple of ThiruvMrananthapuram. /all safe rooms must be unlicked and the wealth should be handed over to Sri Ramakrishna Mission.
*****
Mr.Krishnakumar Please enlist your comments for the above suggestion.
அன்பிற்குரிய ஸ்ரீ அன்புராஜ்
\\ As long as Non-Vegetariaism exists animal sacrifice is not a sign of backwardness. \\
அஹிம்சை என்பது உயர்ந்த தர்மம். எனக்குத்தெரிந்தவரை மாம்சாஹாரம் சாப்பிடுவதை பாபமென்று எந்தஒரு வைதிக சமயத்து சாஸ்த்ரங்களும் அடையாளப்படுத்துவதாக அறிகிலேன். ஹிந்து மதத்தில் ஜைன சமயம் மட்டிலுமே முற்று முழுதாக மாம்சாஹாரத்தை விலக்குகிறது. ஜீவகாருண்யம் என்ற உயர்ந்த் கொள்கையின் அடிப்படையில் மாம்சாஹாரத்தைத் துறப்பதை உயர்வாகக் கருதலாம். முடிவு செய்ய வேண்டியது தனிப்பட்ட மனிதன்.
\\ But animal sacrifice is slowly being given send off and a few temples still adhere to this Monolithic practice. \\
ஹிந்து மதமோ வைதிக சமயமோ சைவ வைஷ்ணவ சமயங்களோ நாட்டார்வழிபாடுகளோ மோனோலித்திக் கிடையாது. இவற்றில் எல்லாம் பன்மைத்துவம் பாராட்டப்படுகின்றன. ஆப்ரஹாமிய மதங்களான யஹூதியம், க்றைஸ்தவம் இஸ்லாம் ………….. இவற்றை சும்மனாச்சுக்கும் ஒருமைச்சிமிழில் அடைக்க முயலுகிறார்கள். இவற்றின் பன்மைத்துவம் நாளொரு கொலை பொழுதொரு குண்டுவெடுப்பென ஒருவரை ஒருவர் ஆப்ரஹாமியரே அடித்துக்கொண்டு சாவதில் இருந்து உலகத்துக்கு வெளிச்சமாகிறது. பன்மை பொதுவான மானுடத்தின் அடையாளம்.
\\ Nudism could never be justified. \\
அது தான் ………….. எந்த அலகீட்டின் படி????? நவீன நாகரீகத்தின் படியா?
சமயச் சடங்குகள், ஒழுக்கமுறைகள் நவீன நாகரீகத்தின் படி ஒழுகப்படுபவை இல்லை.
கோளாறு அலகீட்டில்.
ம்……………….வ்யாசத்தின் கருப்பொருளை ஒட்டி விவாதங்களை வையுங்கள் ஐயா. நீங்கள் விவாதிக்க விரும்பும் விஷயங்கள் முக்யமானவை. ஆனால் அவற்றை சம்பந்தப்பட்டவொரு வ்யாசத்தை ஒட்டி விவாதிப்பது முறை. நன்றிகள்.
“உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும் இல்லாரே அகவினத்தார் மற்றெல்லாம் புறவினத்தார்” வள்ளலார். புலால் மறுப்பு, சமுதாய பொருளாதார நலிவு காரணமாகப் பலரால் பின்பற்ற முடியாத நிலை உள்ளது. மனிதம் போற்றிடுவோம்.
அன்புள்ள அன்புராஜ் அவர்களே! அருந்தமிழில் எழுதுங்கள்.நன்றி.
திரு அன்புராஜ் தனது கம்யூட்டரில் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை என்றும் ஏதோ குறை உள்ளது என்றும் ஒரு பதிவில் தெரிவித்திருந்தார் என்று எனக்கு ஞாபகம் .
Nudism in Public could never be justified. \\
அது தான் ………….. எந்த அலகீட்டின் படி????? நவீன நாகரீகத்தின் படியா?
சமயச் சடங்குகள், ஒழுக்கமுறைகள் நவீன நாகரீகத்தின் படி ஒழுகப்படுபவை இல்லை.
கோளாறு அலகீட்டில்.
What standard ? You advocating /justifying Judism in public ? sorry you have wrong notions about culture and religious practices.
Swami Vivekananda and Sri Ambedgar has opinioned it is internal corruption among Buddhistic Insitutions( applicable to Jain also ) and Muslim rule which are responsible for the total elimination of Buddhism and Jainism.
Veg.food habit could never be compelled as a rule among our people.vegetarianism and Non-Veg are to be viewed part and parcel of plurality of human society.
your tamil language is ??????
Hello Mr.Krishnakumar please read books authored
by Sri Narayana Guru.
crores of rupees worth gold is lying waste at Sri Padmanatha swami temple of ThiruvMrananthapuram. /all safe rooms must be unlicked and the wealth should be handed over to Sri Ramakrishna Mission.
*****
Mr.Krishnakumar Please enlist your comments for the above suggestion.
சமணர்களையும் பௌத்தர்களையும் ஒவ்வொருபதிகத்தின் பத்தாம் பாட்டிலும் எதிர்த்துப் பாடியிருக்கிறார் சம்பந்தர். “ஆதம்மில்லி அமணொடு தேரரை வாதில் சென்றழிக்கத் திருவுள்ளமே” என்று தெளிவாகவே பாடியிருக்கிறார்.இது நம்பியாண்டார் காலத்தில் எழுந்ததல்ல. சம்பந்தர் சமணர்களுடன் வாதிட்டு வென்றார் என்பதை அருணகிரி நாதரும் பல பாடல்களில் சொல்லியிருக்கிறார். இவர்கள் இல்லாததைச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.
வாதில் தோற்ற சமணர்கள் கழுவேறினார்களா, கழுவேற்றப்பட்டார்களா என்பதுதான் கேள்வி. ஹிந்து வரலாற்றில் இத்தகைய செயல் நடைபெற இடமே இல்லை.
சம்பந்தர், அருணகிரி நாதர் போன்ற அடியார்கள் பொய்யாக ஒன்றைச் சொல்லமாட்டார்கள்.அதே சமயம் 8000 பிற தர்மம் சார்ந்த துறவிகளைக்கொல்ல வைதிக மதம் இடம் தராது. பின் என்ன நடந்திருக்கும்?
ஒரு ஜைன ஆசிரியர் எழுதுகிறார்:
” Historically, however, there is no record of such a massacre, and it seems inconceivable that Indic tradition could condone an en masse massacre of saints. Hence, despite the popularity of the legend, scholars believe it is more likely that state persecution prompted an exodus of Jainas.”
[“Why I Am A Jaina” – article by Sandhya Jain in the anthology “Why I Am A Believer”, edited by Arvind Sharma. Penguin,2009.
அதாவது, வாதில் தோற்ற ஜைனர்களை அரசன் தேசப்ரஷ்டம் செய்திருக்கலாம். அல்லது அவர்களாகவே வெளியேறி இருக்கலாம். ஏதோ அடிப்படை இல்லாமல் இந்த விஷயம் பற்றி அருணகிரி நாதர் போன்றோர் பேசியிருக்க மாட்டார்கள். தமிழ் நாட்டில் பல சரித்திர நிகழ்ச்சிகளுக்கு இலக்கிய ஆதாரம்தான் இருக்கிறது. தமிழ் நாட்டிற்கு கரும்பு எப்படி வந்தது? அதியமானின் முன்னோர்கள் கொண்டுவந்தனர் என்று இலக்கியம் சொல்கிறது. இதற்கு எங்குபோய் சரித்திர ஆதாரம் தேடுவது?
எட்டாயிரம் சமணர்களை கழுவேற்றியது உண்மை
செங்குட்டுவன் சைவ மதம் நல்ல மதம் என்று நிறுபிக்க இந்த புத்தகத்தை எழுதியுள்ளாா்
இது பற்றி பெரியபுராணத்தில் சேக்கிழாாாா்
குறிப்பிட்டுள்ளாா்
மதுரை மீனாட்சி கோயிலின் முக்கிய திருவிழாவாக சித்திரை திருவிழாவின் ஆறாம் நாள் திருவிழாவாக இன்றும் கொண்டாடுகின்றனர்