ஒன்றுபட்ட ஒரே தேசமாக, ஒற்றுமையாக நமது நாடான இந்தியா இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று நானும் எனது நண்பர் பிரவீணும் ஒரு நாள் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தோம். பேசப் பேசத் தான் இது எவ்வளவு பெரிய, மகத்தான விஷயம் என்ற உணர்வு ஏற்பட்டு அதிகரித்து வந்ததது. பின்பு, இந்த உரையாடலையே ஒரு காணொளியாகப் பதிவு செய்தால் என்ன எண்ணம் தோன்றியது. அதன் விளைவே கீழ்க்கண்ட வீடியோ பதிவு. சுவாரஸ்யத்திற்காக இதில் ஆரம்பத்திலும் உரையாடலுக்கு நடுநடுவிலும் சில திரைப்படக் காட்சி, திரைப்பாடல் துணுக்குகளையும் சேர்த்திருக்கிறோம் (சில இடங்களில் பேச்சு மெதுவாக இருப்பதால், வால்யூமை அதிக அளவில் வைத்துக் கொண்டு கேட்கவும்).
வைகோ, சீமான் போன்ற முட்டாள்கள் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்ற ரீதியில் செய்யும் பிரிவினைவாத பிரசாரங்கள், இந்தியா ஏதடா, இந்து ஏதடா என்பது போன்ற உளறல்கள் ஆகியவற்றையும் பற்றி இந்த உரையாடலின் ஊடாக பதிலடி கொடுத்துள்ளோம். தனித் தமிழ் தேசம் சாத்தியமில்லாத ஒன்று என்பதை அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறோம்.
இந்தக் கருத்துக்களைத் தொகுத்து வலம் இதழில் (பிப்ரவரி 2018) ஒன்றுபட்ட இந்தியா என்ற கட்டுரையையும் நான் எழுதியிருக்கிறேன். அதனை இங்கு வாசிக்கலாம்.
இந்திய தேசியத்தில் நம்பிக்கை உடைய நண்பர்கள் இதனை அவசியம் பார்க்கவும், பகிரவும். பரவலாகப் பகிரவும். தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் பொய்ப் பிரசாரங்களுக்கு ஆட்பட்டு தனித் தமிழ் தேசம், பிரிவினைவாதம் பேசும் இளைஞர்களையும், இவற்றை திட்டமிட்டுப் பரப்பும் இந்திய தேசிய விரோதிகளையும் எதிர்கொள்ள இது உதவும்.
நாடு-தேசம் என்னும் கருத்தே அரசியல் அடிப்படையில்[ Nation-state} அண்மைக்காலத்தில் எழுந்த ஒன்றுதான்.[ 18ம் நூற்றாண்டு.] ஆனால் இந்தியா பழங்காலமுதல் ஒன்றுபட்டே இருந்திருக்கிறது. இங்கு மக்களின் அடைப்படைச் சிந்தனை ஒன்றாகவே இருந்திருக்கிறது. இமயம் முதல் குமரிவரை என்ற கருத்து சங்க இலக்கியத்திலேயே இருக்கிறது. 50 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சியிலும். திராவிட சார்புடைய பத்திரிகைகளின் வளர்ச்சியினாலும் உண்மை மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் வருகிறது.
இந்தியாவில் தேசியம் என்பது அரசியல் சார்ந்த கொள்கையாக இருந்ததில்லை. அதற்கு நாம் வேறு அடிப்படையை அமைத்துக்கொண்டோம்.இதை சமீப காலத்தில்
‘India-A Sacred Geography’ [Harmony Books, New York, 2012] என்ற புத்தகத்தில் Diana Eck விளக்கியிருக்கிறார். மேலை நாட்டு செக்யூலர்வாதிகளுக்கே உரிய குறும்புத்தனமும், ஹிந்துக்களுக்கு எதிரான போக்கும் இருந்தாலும், ஒரு அடிப்படை உண்மையை சுட்டிக்காட்டியிருக்கிறார்:
” a particular idea of India that is shaped not by the modern notion of a nation-state but by the extensive and intricate interrelation of geography and mythology….that people of ancient India ..gave a single name to the whole of this diverse subcontinent is itself noteworthy. The name is Bharata…This is an indigenous name…India, like Japan, China and Greece, links its modern identity with an ancient and continuous civilization.
“The resistance to the idea of India’s unity is embedded in colonial thought and often in postcolonial thinking as well.”
“..the unity of India is not simply that of a nation-state, but of geographic belonging, enacted in multiple ways. Hindu pilgrims measure the span of India with their feet.” (page 45-47)
இந்தியாவின் அடைப்படை ஒருமையை மறுக்கும்/எதிர்க்கும் அறிவிலிகள் பழைய காலனிவாதிகளின் முட்டாள் கருத்தையே திருப்பி உளறுகின்றனர். அரசு, நிர்வாகம்,கல்வித்துறை, பத்திரிகைகள், மீடியா போன்றவை அவர்கள்
ஆதிக்கத்தின்கீழ் இருப்பதால் உண்மை அமுக்கப்பட்டுவிடுகிறது. இலக்கியம், கலை, தத்துவம், சமயம், விஞ்ஞானம் போன்ற பல நிலைகளில் ஒன்றுபட்ட இந்தியாவின் உண்மையை விளக்க இயலும்.