ஜனவரி-3 அன்று நடந்த உடையும் இந்தியா? புத்தக வெளியீட்டு விழாவின் போது வருகை புரிந்தவர்களுக்கு ஒரு சிறிய இரண்டு பக்க விளம்பரத் தாளை வழங்கினோம். அதனை மகிழ்ச்சியுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
முதல் பக்கம் – தமிழ்ஹிந்து இணையதளம் குறித்து..
இரண்டாம் பக்கம்: இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் கட்டாயம் வாங்கவேண்டிய புத்தகங்கள் – பரிந்துரை.
தமிழ் ஹிந்து வெளியிட்டிருக்கும் பண்பாட்டைப் பேசுதல், சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் ஆகிய புத்தகங்கள் விஜயபாரதம் அரங்கில் கிடைக்கும். ‘மதச்சார்பின்மை (அடல் பிகாரி வாஜ்பாய்)’ உள்ளிட்ட விஜயபாரதம் பதிப்பகத்தின் மற்ற வெளியீடுகளும் இந்த அரங்கில் கிடைக்கும். SISHRI வெளியீடான தோள்சீலைக் கலகம், ராஷ்டிரீய சேவிகா சமிதி வெளீயீடான நிகரில்லா நிவேதிதா ஆகிய புத்தகங்களும் இதே அரங்கில் கிடைக்கும்.
ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம், நம்பக் கூடாத கடவுள், உடையும் இந்தியா?, கம்யூனிசம்: பஞ்சம் படுகொலை பேரழிவு – அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நான்கு புத்தகங்களும், ஆரிய சமாஜம் (மலர்மன்னன்) புத்தகமும் கிழக்கு பதிப்பகம் அரங்கில் கிடைக்கும்.
உடையும் இந்தியா?, கம்யூனிசம்: பஞ்சம் படுகொலை பேரழிவு – இந்த இரண்டும் தான் இந்த வருடக் கண்காட்சியைக் கலக்கப் போகும் அரசியல்/சமூகவியல் புத்தகங்கள் என்று பல புத்தக நோக்கர்கள் ஒருமனதாக அபிப்பிராயப் படுகின்றனர்.
தமிழக தலித் மக்களின் தன்னிகரற்ற தலைவரும் இந்து சமுதாய சிற்பியுமான எம்.சி.ராஜா கருத்துக்களின் தொகுப்பாக வந்திருக்கும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள் (வே.அலெக்ஸ்) புத்தகம் எழுத்து பிரசுரம் அரங்கில் கிடைக்கும்.
தமிழ் ஹிந்து தளத்தில் தொடராக வந்து வாசகர்களின் பெருமதிப்பைப் பெற்ற திராவிட மாயை (சுப்பு), ஓடிப்போனானா பாரதி? (ஹரி கிருஷ்ணன்) ஆகிய நூல்கள் திரிசக்தி பதிப்பகம் அரங்கில் கிடைக்கும்.
சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:
நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி
நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை.
விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.விஜயபாரதம் : ஸ்டால் எண் 76,77
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்: ஸ்டால் எண் 249
கிழக்கு பதிப்பகம்: ஸ்டால் எண்கள் F007, F020
திரிசக்தி பதிப்பகம்: ஸ்டால் எண் 140
அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம், படுகொலை, பேரழிவு – கம்யூனிசம் ஒரே நாளில் படித்து முடித்தேன்.
படித்து முடித்தவுடன் , உடனடியாக என் நினைவுக்கு வந்தது என்னவென்றால் , இந்தியாவின் வறுமை பற்றி கணக்கன் ஆராய்ச்சி என்ற தலைப்பில் , நோபல் பரிசு பெற்ற “குன்னர் மிர்தல்” என்ற எழுத்தாளரின் , “ஆசிய நாடுகளின் அவல நாடகம்” (ASIAN DRAMA) என்ற புத்தகத்தை தமிழாக்கம் செய்து விமரிசனத்துடன் சேர்த்து , தினமணி நாளிதழில் உயர்திரு A.N. சிவராமன் அவர்கள் தொடர்கட்டுரையாக நீண்டகாலம் எழுதிய கட்டுரை ஆகும்.
அந்த தொடர் தொகுக்கப்பட்டு பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தது.அப்போதைய விலை ரூபாய் இரண்டு. அந்த புத்தகத்தில், கம்யூனிசம் என்ற பெயரில் ரஷ்ய, சீன நாடுகளில் நடக்கும் மற்றும் நடந்த அடக்குமுறைகள், வன்முறை, பயமுறுத்தல், இன்னும் பல கொடுமைகள் குறித்து மேலோட்டமாக A N S அவர்கள் எழுதியிருந்தார். அரவிந்தன் நீலகண்டன் அவர்களோ, உண்மையை அப்பட்டமாக எழுதிவிட்டார். கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்த கம்யூனிசம் விரைவில் சீன நாடு உள்பட , பூமியின் எல்லா நாடுகளில் இருந்தும் துடைத்து எறியப்படும். இது காலத்தின் கட்டாயம்.
ரவிந்தன் நீலகண்டன் ,
உமது பணி மேலும் சிறக்கட்டும். எல்லாம் வல்லான் உமக்கு உள்ளும் , புறமும் சகல நலன்களும் அருள்வான். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
வாக்கிறந்த பூரணம் உம்மூலம் வாக்காக வெளிப்பட்டு , மனித இனத்துக்கு மேலும் இன்பம் பெருக அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
திருப்பெருந்துறை மேய பிரான் அடியான்.
dear tamil hindu, i am living in a small village in tirunelveli district. i like to buy some books like udayum india, communisiom and ect. will u help me to send this books to me(if possible)
வஜ்ரா,
தாங்கள் இந்த புத்தகங்களை கிழக்கு பதிப்பகத்தின் மூலம் பெறலாம்.
https://www.nhm.in/shop/help.php?section=contactus&mode=update
மேலே உள்ள வலை தளத்தில் உள்ள வலது பக்கம் ஓரமாக உள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டு இந்த புத்தகங்களை நீங்கள் பெற்று கொள்ளலாம்