உடையும் இந்தியா? – ஒரு உரையாடல்

அரவிந்தன்  நீலகண்டன் & ராஜீவ் மஹ்லோத்ரா இணைந்து எழுதியிருக்கும் Breaking India என்ற நூலை குறித்து முன்பே வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறோம். நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த இந்த நூலின் தமிழ் மொழியாக்கம் “உடையும் இந்தியா? வெளிவந்து விட்டது. நூலாசிரியர் அரவிந்தன் நீலகண்டனே தமிழ் மொழியாக்கத்தை செய்திருக்கிறார்.

நூல் குறித்து பத்ரி சேஷாத்ரியும் அரவிந்தனும் நிகழ்த்திய உரையாடல்:

பகுதி 1: ஆரிய, திராவிடம் ஆகியவை எவ்வாறு இனவாதச் சிந்தனைகளாக ஆகின மற்றூம் எல்லிஸ், கால்டுவெல், ஜி யு போப், தேவநேயப் பாவாணர், பெரியார், அண்ணா இத்யாதிகள் குறித்து காரசாரமான விவாதம்.

பகுதி 2 – உலகளாவிய கிறிஸ்தவ மதமாற்ற வலை, “திராவிட கிறிஸ்த்வம்” என்ற புரளி ஆகியவை குறித்து.

பகுதி 3 – தலித்களை இந்திய சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் சூழ்ச்சிகள். உலக அரசியலில் இந்தியாவை சீர்குலைக்க முனையும் சக்திகளின் சதிவலைகள்.

உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்
ராஜிவ் மல்ஹோத்ரா & அரவிந்தன் நீலகண்டன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ISBN: 978-81-8493-310-9
பக்கங்கள் : 768
விலை: ரூ. 425.
இணையம் மூலம் இங்கே வாங்கலாம்.

நூல் குறித்த அறிமுகம்:

இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் உலகளாவிய மூன்று பெரும் பகாசுர சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன – 1) பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் 2) சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாவோயிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சிய அமைப்புகள் 3) மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப் படும் திராவிட, தலித் பிரிவினைவாதம். இவற்றில் மூன்றாவதைப் பற்றி விரிவான ஆய்வுகளையும், அலசல்களையும் உள்ளடக்கியது இந்த நூல்.

அமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும் மனித உரிமை அமைப்புகள், கல்வியாளர்கள், சிந்தனை வட்டங்கள், மத அமைப்புகள் ஆகியவை நிழலுருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது. ஆரிய திராவிட இனவாதம் உருவான வரலாறு, புனித தாமஸ் பற்றிய கட்டுக் கதையை மையமாக வைத்து உருவாக்கப் படும் “திராவிட கிறிஸ்தவம்”, ஆகியவை பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. தலித்களை இந்தியாவின் மற்ற அனைத்து சமூகங்களிலிருந்தும் வேறுபட்ட, எதிரிடையான இனமாக சித்தரிக்கும் விஷ வித்துக்களை விதைக்கும் அமைப்புகள் குறித்தும், உலகளவில் தங்களுக்குள் ஒன்றுகொன்று போட்டி போடும் அதிகார சக்திகள் இந்தியாவுக்கு எதிராக எப்படி குயுக்தியுடன் ஒன்றிணைந்து வேலை செய்கிறது என்பது குறித்தும் நூல் அம்பலப் படுத்துகிறது. நூலாசிரியர்கள் இது பற்றி கடந்த ஆறு ஆண்டு காலமாக தீவிர ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.

17 Replies to “உடையும் இந்தியா? – ஒரு உரையாடல்”

 1. ஆங்கில புத்தகம் விலை அதிகமாய் இருப்பதாலும் இந்த ஆங்கிலபிரதி வெளியிடும் தருணம் இது தமிழிலும் வெளியிடப்படும் அப்பொழுது சற்று விலை குறைவாக வெளியிடுவீர்கள் என்று எதிரபார்த்து காத்திருந்த எங்களைபோன்ற வாசகர்களை நிச்சயம் ஏமாற்றிதான் உள்ளீர்கள். நான் எதிர்பார்த்த விலை ரூபாய் 200 தான். யாராவது ஒசியில் கொடுத்தால்தான் என்னால் படிக்கமுடியும்.

 2. முதலில் திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன். ..சிரம் தாழ் நன்றிகள்

  உடைக்கபடுவது இந்திய மட்டும் அல்ல .கிறிஸ்தவம் இன்னும் முழுமையாக கோலோச்ச முடியாத எல்லா நாடுகளிலும் இது தொடர்கதையாக நடந்து கொண்டு வருவது கண்கூடு.இந்து தவிர்ந்த ஏனைய ஆபிரஹமியம் அல்லாத மதங்கள் வீழ்ச்சி அடைந்து செல்லும் அளவு இந்து மதம் வீழ்ச்சி பாதையை அடையவில்லை என்பதற்கு சதுர்த்தி ஊர்வலங்களிலும்,சபரிமலை யாத்திரையிலும் பங்குகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை,அவர்களின் உண்மையான பக்தி என்பதை கொண்டு உறுதி செய்ய முடிகின்றது.ஆயினும் மத மாற்ற சக்திகள் சபரிமலையில் ஏற்படும் விபத்துக்களை காரணம் காட்டி அய்யப்ப சுவாமி சக்தி அற்றவர்,காக்கும் தேவன் “ஆபிரஹமிய ஆசானே” போன்ற பிரசாரங்கள் காடவில்து விடபடுகின்றன..ஆயினும் கேரளாவில் ஆளும் கிறிஸ்தவ சார்பு அரசு ஐயப்பன் மூலமாக கிடைக்கும் ஆண்டு வருமானம் 2500 கோடியை பெறுகின்ற போதும் ஐயனை காண வரும் பக்தர்களக்கு அவசியமான பாதுகாப்பு,இதர அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது கேள்வியே ???? ஸ்டார் விஜய் போன்ற கிறிஸ்தவ பின்புலம் கொண்ட ஊடகங்களில் இந்து மதம் ஒரு விவாத கருப்பொருளாக மரயுள்ளமை வேதனைக்கு உரிய விடயமாகும்.கிறிஸ்தவ சர்ச்களில் நடை பெரும் ஊழல்கள்,கற்பழிப்பு,சம்பவங்கள்,பெந்தகோஸ்தே சபைகளால் வருடாந்தம் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து கடத்திவரப்படும் குழந்தைகள் வெளிநாடுகலக்கு ஏற்று மதி செய்ய படும் அவலம் இவைகளை அமபல படுத்த திராணி அற்ற இவ்வெளிநாட்டு ஊடகங்கள் இருந்தும் என்ன பயன் ..

 3. இலங்கையில் பெற்றுக்கொள்ள முடியுமா? ??அப்படி கிடைக்குமாயின் கட்டுபாட்டு விலையில் கிடைக்குமாயின் நன்று.ஏனெனில் இந்தியாவில் 15 -20 ரூபாய்க்கு விற்கப்படும் ஆனந்த விகடன் ,குமுதம் புத்தகங்கள் இங்கு 110 /- க்கு விட்கபடுகிறது.இந்திய-இலங்கை நாணய மாற்று வீதம் 1 Indian rupee= 2.5 srilankan rupees thaan ..முடிந்த வரை கட்டுபாட்டு விலையில் கிடைக்குமானால் நன்று

 4. நாஞ்சில் மண்ணை சேர்ந்த அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் இந்த அருமையான படைப்பின் மூலம் பல திராவிட, கிறித்தவ புரட்டுக்களும்
  அம்பலம் ஆகியுள்ளது. பாரத தாய் உங்களுக்கு ஆசி வழங்குவதாக… …..

 5. உடையும் இந்தியா ? புத்தகம் வெளியிடப்பட்டது குறித்து மகிழ்ச்சி. இதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் சாதாரண மக்களை சென்று அடைய என்ன ஏற்பாடு. தமிழ்நாடு பாரதத்தை சேர்ந்ததே இல்லை என்று சாதாரண மக்களிடையே தீவிரமாக பிரச்சரம் செய்யப்படுகிறது. இந்த விலை கொடுத்து புத்தகம் வாங்குபவர்கள் வலைதளத்தை தண்டி வெளியே வருவதில்லை. குப்பத்திலிருப்பவனுக்கு தமிழ்நாடு தனி என்பது போதிக்கப்படும்போது இம்தக்கருதும் அங்கு செல்ல வேண்டுமே. தயவு செய்து வெளியே வாருங்கள்

 6. இந்தப் புத்தகத்தை ஆவலுடன் படிக்க விழைந்தேன் . ஆயினும் அதன் விலை!
  யாராவது ஓசி கொடுக்கத் தயாராயுள்ளவர்கள் எனக்கு அனுப்பலாம்.
  தொடர்புக்கு,………..( eswaran15819@gmail.com ) நன்றி!
  ஈஸ்வரன்,பழனி.

 7. itharku en ivlavu kashtapadugirirgal endru theriyavillai arya dravida vaatham oru puzhuthu pona pazhan kanchi.max muller, mortimer wheeler pondravargalai ellam ethuku eduthukatta vendum.indian pondra oru dark skinned with brown and black eyes inam ulagil veru engavathu irukiratha apuram enna vantheri.appadiye ariyar vanthalum avargal satti panai pondatti pullai elarayum kutti kondu mattu vandiyil thiruvizha pakkava vanthargal. avargal angal vanthirupargal ingeye mana uravu kondu kalanthu vittargal. illayendral antha inam oru thalaimuraikulagave azhinthirukkum vaarusugal illamal.logic mattume inge sellum veru entha ularalgalum alla.

 8. ariyargal vanthathaga sollapadum mathiya asiavil irupavan vellaikaran pola irukiran indiavil appadi yaar irukirargal.india oru miga periya koottu kalavai.ingu ulla valathai parthu kalam kalamaga pala inangal negroid Australoid,mongoloid, caucasian,Hittite,elamite,greek,roman,turk, anglo saxon, hispanic pondra pala inangal vantha vannam ullana.avargal ingeye kalanthu vittargal.india oru potpourri. athanal thaan inge karuppargalai pola karupana manithargalayum,vellaiyargalai pondra sivantha tholum pachai matrum neela kangalaiyum, cheenarkalai pongravargalayum parkirom. athanal thaan dna testil kooda ingu oru inathirkana moolakoorugal illa. negroid, mongoloid, caucasian, hispanic, pondra pothu inangal indiavil illai.athanal thaan aathi tamizh inam endru sollapadugira jathigalil kooda sivappu kuzhandai pirakirathu.etho oru thalaimurayil ulla dna moolakooru thaan athu.athu inakalappaal vanthathu.

 9. இந்து வெறுப்பாளர் பத்ரி சேஷாத்ரியால் நடத்தப்படும் இந்து விரோதப் பதிப்பகமான கிழக்கின் மூலமாக இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டிருப்பது ஒரு நகைமுரண் என்றாலும் இந்து இயக்கங்களால் நடத்தப்படும் விஜயபாரதம் போன்ற பதிப்பகங்கள் இதை வெளியிட முன்வராத நிலையில் இம்முயற்சியை ஆதரிக்கத்தான் வேண்டி இருக்கிறது.

 10. ஹிந்து மறுமலர்ச்சிப் பணியில் சளைக்காது பாடுபடும் விஜயபாரதத்தைக் குறை சொல்வது வருந்தத்தக்கது.

 11. விஜயபாரதம் இதுவரை என்ன மறுமலர்ச்சியைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது? ஆர்கனைசர், பாஞ்சஜன்ய, மலையாள கேசரி போன்ற ஏடுகள் இணையத்தில் வந்து பல வருடங்கள் ஆகியும், விஜயபாரதத்தை இணையத்தில் இன்னமும் கொண்டுவராத மர்மம் என்ன? தமிழகத் தலைமை தடுக்கிறதா? அகில பாரதத் தலைமை தடுக்கிறதா? கடந்த வருடம் எத்தனை புதிய புத்தகங்களை விஜயபாரதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது?

 12. Is vijayabharatham still getting published ?

  I am happy to know this news. We used to see that magazine everywhere in Tamilnadu some 20 years back. I thought the magazine is no more in circulation. It was sharp and mind blowing. We still remember the magazine with cartoons criticizing MGR even when he was the chief minister. Such a courage !

  Happy to know that the magazine is still doing the rounds. Is it available in Vaniyambadi ?

  .

 13. ரங்கதுறை அவர்களுக்கு,

  கீழே உள்ள வலைதளம் விஜயபாரத்தின் பெயரால் நடத்தபடும் ஒரு வலைதளம்..

  https://hindusanghaseidhi.net/

  விரைவில் இது பிற சங்க வலைதளங்களை போல சீரமைக்கப்டும் என்று கேள்விபட்டேன்.

 14. பலரும் குறிப்பிட்டுள்ளதைப் போல, இந்த நூலை மலிவு விலையில் கிடைக்கச் செய்ய முயற்சி எடுக்க வேண்டும். இணைய தளத்தில் புத்தகத்தைப் பெற வழி சொல்லி ஒரு இணைப்பைத் தந்திருக்கிறீர்கள். இணைய தளத்திலேயே பதிவிறக்கம் செய்து படிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்த முடியுமா என்று பாருங்கள். செய்திகள் அதிகம் பேரிடம் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் சொல்கிறேன். ஒரு அன்பர், “இருநூறு ரூபாய்க்குத் தன்னால் இந்த நூலை வாங்க முடியும்” என்று எழுதியுள்ளார். அதுவே கூட வெகு ஜனங்களால் முடியாதே! செய்தி வெகுஜனங்களுக்குத் தானே போக வேண்டியுள்ளது?

 15. பா.ரெங்கதுரை அவர்களே புதுப்பொலிவுடன் உலா வந்துகொண்டு இருக்கும் விஜயபாரதம் ஏராளமான விஷயங்களுடன் புரட்சி செய்து கொண்டு உள்ளது. எதையோ நினைத்துக்கொண்டு குறை சொல்வதை விடுத்து ஆக்கபூர்வமான விஷயங்களைபதிவு செய்ய வேண்டுகிறேன்.

 16. I don’t think, Sanga Seithikal is released by Vijaya Bharatham, It is the title used by RSS on its news as Close Circle Circulation and not for public. As above mentioned 20 years back after Mandaikadu episode, it was popular, even today, Hindu Munnani website speak about another magazigen “Pasu Thai”. But I yearly read about Vijaya Bharatham Dipawali Malar in Dinamalar Book Review. But not available in book stalls, especially in Madurai and Chennai.

  Previously i use to get Organizer from Central and Egmore Railway station, that also not available for quite few years.

  Availability also necessary.

  One method i use is ask the book vendors about specific book regularly, “Sri Ramakrishna Vijayam”, also ask my friends to do so, within few months required book will be available. even this technique did’t give result for Vijaya Bharatham. So Sad

  Regards

  GGM.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *